Showing posts with label English Grammar Lessons. Show all posts
Showing posts with label English Grammar Lessons. Show all posts

ஆங்கில "வாதங்கள்" (Suffix "isms")

நாம் கடந்தப் பாடத்தில் ஆங்கிலப் பின்னொட்டுகளின் அட்டவணையைப் பார்த்தோம். அதில் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சொற்கள் தொடர்பிலும், ஒவ்வொரு பாடமாக எதிர்வரும் பாடங்களில் எதிர்பார்க்கலாம் என அறியத்தந்திருந்தேன். அதன்படி இன்றையப் பாடத்தில் "ism" என்ற எழுத்துக்கள் பின்னொட்டாக வரும் 50 சொற்களைப் பார்ப்போம். அத்துடன் இச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த "ism" எனும் எழுத்துக்கள் பின்னொட்டாக வரும் சொற்கள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. இச்சொற்கள் அநேகமாக பெயர்ச்சொற்களாகவே இருக்கும்.

புதிதாக இந்த ஆங்கிலம் தளத்திற்கு வருகைத்தந்துள்ளோர் தயவுசெய்து முதலாம் பாடத்தில் இருந்து தொடங்கவும்.

உங்களிடம் யாராவது ஆங்கிலத்தில் "isms" சொற்கள் எத்தனை தெரியும் என்றால், ஆகக்குறைந்தது ஒரு 50 சொற்களாவது அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா!

அப்படியானால் இவற்றைப் பாடமாக்கிக் கொள்ளுங்கள்.
Download As PDF

ஆங்கிலப் பின்னொட்டுக்கள் (List of Suffixes)

பின்னொட்டு (Suffix) என்பது ஒரு மூலச் சொல் அல்லது வேர் சொல்லின் பின் ஒட்டாக இணைந்து பயன்படும் எழுத்துக்கள் ஆகும். அதனாலேயே "பின்னொட்டு" என்று அழைக்கப்படுகிறது; சிலர் "விகுதி" என்றும் அழைப்பர். இந்த பின்னொட்டுக்கள் தனித்து பயன்படுவதில்லை. இவை குறிப்பாக ஒரு மூலச் சொல்லுடன் இணைந்து, மூலச் சொல்லின் பொருளில் இருந்து மாறுபட்டு வேறொரு பொருளைத் தரும் சொற்களாக பயன்படுவன ஆகும். இவ்வாறான பின்னொட்டுக்கள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. பொதுவாக அதிக புழக்கத்தில் இருக்கும் 120 பின்னொட்டுக்கள் இந்த அட்டவணையில் உற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினூடாக பின்னொட்டுக்கள் எவ்வாறு ஒரு மூலச்சொல்லுடன் இணைந்து புதிய சொல்லாக மாறுபடுகின்றன என்பதைக் காணலாம். அத்துடன் ஒரு மூலச் சொல்லின் பொருளில் இருந்து எவ்வாறான பொருள் தரும் சொற்களாக அவை மாற்றமடைகின்றன என்பதையும் உணரலாம்.

இனி அட்டவணையைக் கவனியுங்கள்.

அட்டவணையில் உள்ள பின்னொட்டுகளுடன் தொடர்புடைய
Download As PDF

வினையெச்சங்களின் வகை (Types Of Adverbs)

வினெயெச்சங்கள் என்றால் என்ன? வினையெச்சங்கள் என்றால் ஆங்கிலப் பேச்சின் கூறுகளில் ஒன்று என்பதை நாம் ஏற்கெனவே கற்றுள்ளோம். இவை முக்கியமாக ஒரு வினையின் அல்லது வினைச்சொல்லின் தன்மையை விவரித்துக் கூற பயன்படும் சொற்கள் ஆகும். இவற்றை வினையெச்சங்கள், வினையடைகள், வினையுரிச் சொற்கள் என பல்வேறு பெயர்களில் தமிழில் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் "Adverbs" என்றழைப்பர்.

ஆங்கிலத்தில் இவற்றை ஐந்து பிரிவுகளாக வகை படுத்தப்பட்டுள்ளன. அவற்றையே "வினையெச்சங்களின் வகைகள்" என்றழைக்கப்படுகின்றன.

வினையெச்சங்களின் வகைகள் (Types of adverbs)

Adverbs of manner - மாதிரி வினையெச்சங்கள்
Adverbs of place - இட வினையெச்சங்கள்
Adverbs of time - கால வினையெச்சங்கள்
Adverbs of frequency - நடப்புத்தன்மை வினையெச்சங்கள்
Adverbs of degree - அளவு வினையெச்சங்கள்

இனி இவ்வினையெச்சங்கள் பயன்படும் விதங்களைப் பார்ப்போம்.

Adverbs of manner - மாதிரி வினையெச்சங்கள்

மாதிரி வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் என்ன மாதிரி அல்லது எப்படி நடைப்பெறுகின்றது என விவரிக்கின்றன.

Sarmilan runs quickly.
சர்மிலன் ஓடுகிறான் சீக்கிரமாக.

Sarmilan runs firstly.
சர்மிலன் ஓடுகிறான் முதலாவதாக.

Sarmilan runs lastly.
சர்மிலன் ஓடுகிறான் கடைசியாக.

Sarmilan runs slowly.
சர்மிலன் ஓடுகிறான் மெதுவாக.

He works well.
அவன் வேலை செய்கிறான் நன்றாக.

கவனிக்கவும்:
மாதிரி வினையெச்சங்கள் - சாதாரணமாக ஒரு வாக்கியத்தின் நேர் செயப்படுபொருளை (direct object) அடுத்து பயன்படும். அதேவேளை ஒரு வாக்கியத்தின் நேர் செயப்படுபொருள் பயன்படாத போது வினையை அடுத்து பயன்படும். (Adverbs of manner - Usually come after the object. If there is no direct object, after the verb.)

எடுத்துக்காட்டு:

Sarmilan drove the car carefully. (the car - object)
சர்மிலன் ஓட்டினான் மகிழுந்தை கவனமாக.

Sarmilan ran carefully.
சர்மிலன் ஓடினான் கவனமாக.

குறிப்பு:
மாதிரி வினையெச்சங்கள்; அதிகமானவை "ly" பின்னொட்டை கொண்டவைகளாக இருக்கும். இவற்றை ஒழுங்கமைவு வினையெச்சங்கள் என்றழைக்கப்படும். ஒழுங்கமையா வினையெச்சங்களும் உள்ளன.

Adverbs of place - இட வினையெச்சங்கள்

இட வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் "எங்கே" என்பதை விவரிக்கின்றன.

I saw Sarmilan there.
நான் பார்த்தேன் சர்மிலனை அங்கே.

Sarmilan was sitting here.
சர்மிலன் அமர்ந்துக்கொண்டிருந்தான் இங்கே.

Sarmilan stayed behind me.
சர்மிலன் இருந்தான் எனது பின்னால்.

We looked everywhere.
நாங்கள் பார்த்தோம் எல்லாவிடங்களிலும்.

Did you see his pass port anywhere?
நீ பார்த்தாயா அவனது கடவுச்சீட்டை எங்கேயாவது?

I'm sure he lost it somewhere.
நான் நிச்சயிக்கிறேன் அவன் தொலைத்துவிட்டான் அதனை எங்கேயோ.

இட வினையெச்சங்கள் சாதாரணமாக செயப்படுபொருளை அடுத்தே பயன்படும். செயப்படுபொருள் பயன்படாத போது வினையை அடுத்து பயன்படும். (Adverbs of place - Usually come after the object, otherwise after the verb.)

Adverbs of time - கால வினையெச்சங்கள்

கால வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் "எப்பொழுது" என்பதை விவரிக்கின்றன.

கால வினையெச்சங்கள் சாதாரணமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் பயன்படுபவைகளாகும். (Adverbs of time - Usually come either at the begining of the sentences or at the end.) (சில விதிவிலக்கானவைகள்)

Now we may study adverbs.
இப்பொழுது நாம் கற்கலாம் வினையெச்சங்கள்.

I read that book before.
நான் வாசித்தேன் அந்த நூலை முன்னரே.

I haven’t started preparation for the exams yet.
நான் ஆரம்பித்திருக்கவில்லை பரிட்சைக்கான தயார்படுத்தலை இன்னும்.

I'm going to tidy my room tomorrow.
நான் சுத்தமாக்கப் போகின்றேன் எனது அறையை நாளை.

She is still waiting for you.
அவள் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றாள் உனக்காக.

குறிப்பு:

1. "yet" எப்பொழுதும் வாக்கியங்களின் இறுதியில் பயன்படும்.
2. "still" அநேகமாக ஒரு வாக்கியத்தின் வினைக்கு முன்னால் பயன்படும்.

Adverbs of frequency - நடப்புத்தன்மை வினையெச்சங்கள்

நடப்புத்தன்மை வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் எப்படி அடிக்கடி நடந்தது, நடக்கிறது, நடக்கும் போன்ற தன்மையை விவரிக்கின்றன. அதாவது ஒரு செயல் எத்தனை முறை நடக்கின்றது என்பதை விவரிக்கின்றன.(Adverbs of Frequency answer the question "How often?" or "How frequently?" They tell us how often somebody does something.)

I will always love you.
நான் எப்பொழுதும் காதலிப்பேன் உன்னை.

I usually visit to Aangilam Blog
நான் சாதாரணமாக விஜயம் செய்கிறேன் ஆங்கிலம் வலைப்பதிவிற்கு.

I frequently watch the news before dinner.
நான் அடிக்கடி (தொடர்ந்து) பார்க்கிறேன் செய்திகள் இராச்சாப்பாட்டிற்கு முன்.

I often do my homework in my home.
நான் அடிக்கடி செய்கிறேன் எனது வீட்டுப்பாடங்களை எனது வீட்டில்.

I sometimes speak English.
நான் சிலநேரங்களில் பேசுகிறேன் ஆங்கிலம்.

I seldom go to the theatre.
நான் எப்பொழுதாவது போகிறேன் திரையரங்கிற்கு.

I never had any trouble with my old bike.
எனக்கு எப்பொழுதுமே ஏற்பட்டதில்லை எந்த இடையூறும் எனது பழைய உந்துருளியில்.

இப்பகுதியுடன் தொடர்புடைய ஒரு பாடம் Frequency Adverbs இங்கே இடப்பட்டுள்ளது.

Adverbs of degree - அளவு வினையெச்சங்கள்

அளவு வினையெச்சங்கள் - ஒன்றின் தரத்தை அளவை விவரிக்கப் பயன்படுகின்றன.

இவை சாதாரணமாக ஒரு வினையை விவரிக்கப் பயன்படுகின்றன. அத்துடன் இவை இன்னுமொரு வினையெச்சத்தை விவரிக்கும் வினையெச்சமாகவும், பெயரெச்சத்தை விவரிக்கவும் வினையெச்சமாகவும் கூடப் பயன்படும். (Adverbs of degree - modify an adverb or an adjective.)

They enjoyed the film immensely.
அவர்கள் அளவுக்கதிமாக மகிழ்ந்தார்கள் திரைப்படத்தைப் பார்த்து. (இவ்வாக்கியத்தின் அவர்கள் திரைப்படத்தைப் பார்த்து எந்தளவிற்கு (அளவுக்கதிமாக) மகிழ்ந்தார்கள் என்று விவரிக்கப்படுகிறது.)

He is a terribly good cricket player.
அவர் ஒரு பயங்கரமான நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர். (இவ்வாக்கியத்தில், அவர் எப்படியான தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் (பயங்கரமான நல்ல) என விவரிக்கப்படுகிறது.)

The hall is almost full.
இம்மண்டபம் ஏறக்குறைய நிரம்பியிருக்கிறது. (இவ்வாக்கியத்தில் மண்டபம் எவ்வளவு நிரம்பியிருக்கிறது என்பதை (ஏறக்குறைய) விவரிக்கப்படுகிறது.)

The man drove really badly.
அம்மனிதன் ஓட்டினான் மிகவும் மோசமாக. (இவ்வாக்கியத்தில் அம்மனிதன் எவ்வளவு மோசமாக (உண்மையில் மோசமாக) ஓட்டினான் என்பதைக் விவரிக்கப்படுகின்றது.)

He drives incredibly slowly.
அவன் நம்பமுடியாதளவில் மெதுவாக ஓட்டுகிறான். (இவ்வாக்கியத்தில் அவன் எவ்வளவு (நம்பமுடியாத அளவிற்கு மெதுவாக) ஓட்டுகிறான் என்பதை விவரிக்கப்படுகின்றது.)

வினையெச்சங்களை கற்றல்

ஆங்கில மொழியில் வாக்கிய அமைப்புகளை; எங்கே, எப்படி, எந்தளவு, என்ன மாதிரி, எந்தளவு என விவரித்து சுவைப்பட எழுதவும் பேசவும் வினையெச்சங்களின் பயன்பாட்டை அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியம்.

எளிதாக வினையெச்சங்களை கற்பதற்கு அவற்றை இரண்டு பிரிவாக பிரித்து பயிற்சி செய்யலாம்.

1. Regular Adverbs -ஒழுங்கமை வினையெச்சங்கள்
2. Irregular Adverbs - ஒழுங்கமையா வினையெச்சங்கள்

ஒழுங்கமை வினையெச்சங்களின் அட்டவணை  (தமிழ் விளக்கத்துடன்) எதிர்வரும் பாடங்களில் வழங்கப்படும்.

அத்துடன் இப்பாடத்துடன் தொடர்புடையை "வினையெச்சம் பயன்படும் விதங்கள்" பாடத்தையும் விரைவில் பார்ப்போம்.

அதுவரை  இப்பாடப் பயிற்சிகளைத் தொடருங்கள்.

தொடர்புடையப் பாடங்கள்:

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

ஆங்கிலம் செயப்பாட்டுவினை (Passive Voice)

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று நாம் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கிய அமைப்புக்களின் பயன்பாட்டைப் பார்ப்போம்.

சாதாரண செயல்வினை வாக்கியங்களில், எழுவாய் (Subject) எப்பொழுதும் வாக்கியத்தின் ஆரம்பத்திலேயே வரும். ஆனால் செயப்பாட்டுவினை வாக்கியங்களில் அவ்வாறு அல்லாமல் செயப்படுபொருளே (Object) வாக்கியத்தின் ஆரம்பத்தில் தோன்றும். அதேவேளை வாக்கியத்தின் பிரதான வினைசொல் Past Participle சொற்களாகவே இருக்கும்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan is doing a job.
சர்மிலன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை.

(The) Job is done by Sarmilan.
வேலையை செய்யப்படுகிறது சர்மிலனால்.
(சர்மிலனால் வேலை செய்யப்படுகிறது.)

சரி! இந்த செயப்பாட்டுவினை வாக்கியங்களை எளிதாக கற்பதற்கு; அவற்றையும் ஒரு கிரமர் பெட்டன் (Grammar Patterns) ஆக வடிவமைத்து பயிற்சி செய்வோம்.

உச்சரிப்பு பயிற்சி பெறவிரும்புவோர் ஒலி கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.

1. It is done.
இதை செய்யப்படுகிறது.

2. It is being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது.

3. It was done.
இதை செய்யப்பட்டது.

4. It was being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

5. It will be done.
இதை செய்யப்படும்.

6. It will be being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

7. It would be done.
இதை செய்யப்பட்டிருக்கும்.

8. It would be being done.
இதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

9. It is not done.
இதை செய்யப்படுகிறதில்லை.

10. It wasn’t done. (was + not)
இதை செய்யப்படவில்லை

11. It won't be done. (will + not)
இதை செய்யப்பட மாட்டாது.

12. It has been done.
இதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்படுகிறது.

13. It has been being done.
இதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

14. It had been done.
இதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டது.

15. It had been being done.
இதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

16. It will have been done.
இதை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்படும்.

17. It will have been being done.
இதை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.

18. It is to be done.
இதை செய்ய நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

19. It was to be done.
இதை செய்ய நிச்சயிக்கப்பட்டது.

20. It is going to be done.
இதை செய்யப்படப் போகின்றது.

21. It was going to be done.
இதை செய்யப்படப் போனது.

22. It can be done.
இதை செய்ய முடியும்.

23. It can't be done.
இதை செய்ய முடியாது.

24. It could be done.
இதை செய்ய முடிந்தது.

25. It couldn't be done.
இதை செய்ய முடியவில்லை.

26. It must be done.
இதை (நிச்சயமாக) செய்யப்பட வேண்டும்.

27. It must not be done.
இதை (நிச்சயமாக) செய்யப்பட கூடாது.

28. It should be done.
இதை செய்யப்படவே வேண்டும்.

29. It shouldn’t be done.
இதை செய்யப்படவே கூடாது.

30. It ought to be done.
இதை எப்படியும் செய்யப்படவே வேண்டும்.

31. It has to be done.
இதை செய்யப்பட வேண்டும்.

32. It doesn't have to be done.
இதை செய்யப்படவேண்டிய அவசியமில்லை.

33. It had to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்பட்டது/இருக்கும்.

34. It didn't have to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்படவில்லை/இருக்கவில்லை.

35. It will have to be done.
இதை செய்யப்படவேண்டி ஏற்படும்/இருக்கும்.

36. It won’t have to be done.
இதை செய்யப்பட வேண்டி ஏற்படாது/இருக்காது

37. It need be done.
இதை செய்வது அவசியம்.

38. It needn't be done.
இதை செய்யவேண்டிய அவசியமில்லை.

39. It may be done.
இதை செய்யப்படலாம்.

40. It may have been done.
இதை செய்யப்பட்டிருக்கலாம்.

41. It must have been done.
இதை நிச்சயமாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.

42. It would have been done.
இதை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

43. It wouldn't have been done.
இதை செய்யப்பட்டிருக்காது.

44. It could have been done.
இதை செய்திருக்க இருந்தது. (ஆனால் செய்யவில்லை)

45. It should have been done.
இதை செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)

46. It shouldn't have been done.
இதை செய்யாமலிருக்கவே இருந்தது. (அநியாயம் செய்தது)

47. It ought to have been done.
இதை எப்படியும் செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)

செயப்பாட்டுவினை கற்கவேண்டியதன் முக்கியத்துவம்
-------------------------------------------------------------------------------------
1. ஆங்கில பத்திரிகைகளை இலகுவாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.
2. ஆங்கில அரச பதிவேடுகளை, கடிதங்களை எளிதாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.
3. வானொலி, தொலைக்காட்சி செய்திகளை புரிந்துக்கொள்வதற்கு.
4. ஆங்கில மொழியில் (உயர்கல்வி) பாடங்களை இலகுவாக விளங்கிக்கற்பதற்கு (கணிதம், கணினி, தொழில்நுட்பம் போன்றவை...)
5. ஆங்கில செயப்பாட்டுவினை வாக்கியங்களூடாக யாரும் உங்களுடன் உரையாடினால், அவற்றை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும் மறுமொழிவதற்கும்.

செய்திகளில் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கியங்கள்

Hong Kong Island was occupied by British forces in 1841
ஹொங்கொங் தீவை கைப்பற்றப்பட்டது பிரித்தானியப் படைகளால் 1841 இல்.
(ஹொங்கொங் தீவை பிரித்தானியப் படைகளால் 1841 இல் கைப்பற்றப்பட்டது.)

A young female Tamil journalist was arrested by the Police on suspicion.
ஒரு இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை கைதுசெய்யப்பட்டது பொலிஸாரால் சந்தேகத்தில்.
(ஒரு இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை சந்தேகத்தின் பேரில் கைதுச்செய்யப்பட்டுள்ளது.)

Two decomposed bodies of Tamils were discovered on Friday.
இரண்டு சிதைவுற்ற தமிழர்களின் உடலங்களை கண்டுபிடிக்கப்பட்டது வெள்ளிக்கிழமை.

Tamils were abducted by unidentified armed persons.
தமிழர்களை கடத்திச்செல்லப்பட்டது அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால்.
(அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால் தமிழர்களை கடத்திச்செல்லப்பட்டுள்ளது.)

An university Tamil girl was kidnapped on December 31 morning.
ஒரு பல்கலைக் கழக தமிழ் பெண்ணை கடத்தப்பட்டது டிசம்பர் 31 காலையில்.
(பல்கலைக்கழக தமிழ் பெண் ஒருவரை டிசம்பர் 31 ம் நாள் காலையில் கடத்தப்பட்டுள்ளது.)

Navanethem Pillay was appointed as new United Nations High Commissioner for Human Rights.
நவநீதம் பிள்ளையை நியமிக்கப்பட்டது புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக.
(நவநீதம் பிள்ளை அவர்களை புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது.)

Barack Hussein Obama was elected President of the United States on 5 Nov 2008.
பாரக் ஹுசேன் ஒபாமாவை தேர்ந்தெடுக்கப்பட்டது ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக 5 நவம்பர் 2008 இல்.
(2008 நவம்பர் 5 ஆம் நாளன்று ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக பாரக் ஹுசேன் ஒபாமா அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.)

Annathurai is considered an intellectual and a brilliant Tamil scholar.
அண்ணாதுறையை கருதப்படுகின்றது ஒரு புத்திமானாகவும் ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும்.
(அண்ணாத்துறை அவர்களை ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும் புத்திமானாகவும் கருத்தப்படுகின்றது.)

இவற்றை போன்று அநேகமான செய்திகளில் "செயப்பாட்டுவினை" வாக்கியங்களே காணப்படுகின்றன. இச்செயப்பாட்டு வினை வாக்கியங்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்வதன் ஊடாக, எளிதாக அவற்றை புரிந்துக்கொள்ளலாம்.

உங்கள் பயிற்சிக்கு Homework:
-------------------------------------------------------------------------------------
இங்கே உங்கள் பயிற்சிக்காக 10 சிறிய வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் மேலே பயிற்சி செய்த 47 செயப்பாட்டுவினை வாக்கியங்களைப் போன்று; ஒவ்வொரு வாக்கியங்களையும் 47 வாக்கியங்களாக அமைத்து எழுதி பயிற்சி செய்யுங்கள். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதுங்கள். அதுவே உங்கள் பேச்சாற்றலை எளிதாக வளர்த்துக்கொள்வதற்கான இரகசியமாகும். பின் எழுதியவற்றை உங்கள் சக நண்பரிடமோ, உறவினரிடமோ பேசி பயிற்சி செய்யுங்கள்.

1. Ravi is investigated by police.
காவல் துறையினாரால் ரவியை விசாரிப்படுகிறது.

2. The Robot is made by Japan
இயந்திரனை ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது.

3. His interview is postponed
அவனுடைய நேர்முகத்தேர்வை தள்ளிப்போடப்படுகிறது.

4. She is appointed as Managing Director.
அவளை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறது

5. My wallet is stolen.
எனது பணப்பையை களவாடப்படுகிறது.

6. It is made
இதை தயாரிக்கப்படுகிறது.

7. Sitha is kidnapped by Iravanan.
சீதையை இராவணனால் கடத்தப்படுகிறது.

8. The letter is sent by post.
இந்த கடிதத்தை அனுப்பப்படுகின்றது தபாலில்.

9. The man is killed by Army.
அந்த மனிதனை கொல்லப்படுகின்றது இராணுவத்தால்.

10. It is done by Government of Sri Lanka
இதை செய்யப்படுகிறது இலங்கையின் அரசால்.

Direct Object - Indirect Object
-------------------------------------------------------------------------------------
செயப்பாட்டுவினை வாக்கியங்கள் ஆங்கிலத்தில் இரண்டு விதமாக பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று நேரடியாக செயப்படுபொருளை விவரிப்பவை. இதனை Direct Object என்பர். மற்றது மறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை. இதனை Indirect Object என்பர்.

Direct Object:

அதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை எவ்வித மறைவும் இன்றி நேரடியாகவே செயலை விவரிப்பவை.

Ravi was investigated by police.
காவல் துறையினாரால் ரவியை விசாரிக்கப்பட்டது.

The Robot was made by Japan
இயந்திரன்/னை ஜப்பானில் தயாரிக்கப்பட்டது.

Sitha was kidnapped by Iravanan.
சீதையை இராவணனால் கடத்தப்பட்டது.

The letter was sent by post.
கடிதத்தை தபாலில் அனுப்பப்பட்டது.

The men was killed by Army.
அம்மனிதர்களை இராணுவத்தால் கொல்லப்பட்டது. (கொல்லப்பாட்டார்கள்)

The window was broken by Sarmilan.
சாளரத்தை சர்மிலனால் உடைக்கப்பட்டது.

Indirect Object: http://aangilam.blogspot.com

மறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை அல்லது செயப்படுபொருளை மறைத்து அல்லது தவிர்த்து விவரிப்பவை (Indirect Object) ஆகும். அதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை தவிர்த்து அல்லது வேண்டுமென்றே மறைத்து, வினையை மட்டும் விவரிப்பவை. இவ்வாறு ஏன் பேசப்படுகின்றது என்பதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடலாம்.

1. ஒரு செயலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாதப்பொழுது செயலை மட்டும் விவரித்து பேசுதல்.
2. செயலுக்கான காரணி அல்லது காரணமானவர் யார் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பேசுதல்.
3. யாரால் எதனால் செய்யப்பட்டது என்பதை வேண்டுமென்றே மறைத்து பேசுதல். (அநேகமான தலைப்புச்செய்திகள் இவ்வாறே காணப்படும்.)

Ravi was investigated.
ரவியை விசாரிப்பட்டது. (யாரால் விசாரிக்கப்பட்டது என்பதை கூறாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.)

The Robot was made.
இயந்திரன் தயாரிக்கப்பட்டது. (யாரால், எந்த நாட்டால், எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதை கூறப்படவில்லை.)

Sitha was kidnapped.
சீதையை கடத்தப்பட்டது. (யாரால் கடத்தப்பட்டது என்பதை கூறப்படவில்லை)

The letter was sent.
கடிதத்தை அனுப்பப்பட்டது. (எப்படி எதனூடாக அனுப்பப்பட்டது என்பது விவரிக்கப்படவில்லை)

The men was killed.
அம்மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். (யாரால் கொல்லப்பட்டது என்பது மறைக்கப்பட்டுள்ளது.)

The window was broken.
சாரளத்தை உடைக்கப்பட்டது. (யாரால் உடைக்கப்பட்டது என்பதை கூறப்படவில்லை அல்லது உடைத்தவர் யார் என்பது தெரியாது.)

குறிப்புகள்: http://aangilam.blogspot.com

1. செயப்பாட்டுவினை (Passive Voice) இன் பயன்பாடுகளை எளிதாகக் கற்பதற்கு, முதலில் அங்கில் சாதாரண பேச்சு பயன்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவர் என்றால் முதலில் எமது Grammar Patterns 01 இல் இருந்து பயிற்சி செய்யுங்கள்.

2. செயப்பாட்டுவினை வாக்கியங்களின் பிரதான வினை (Main Verb) எப்பொழுதும் "Past Participle" சொற்களாகவே பயன்படும் என்பதை மறவாதீர்கள். அவற்றை Irregular verbs அட்டவணையில் பார்க்கலாம்.

3. செயப்பாட்டுவினை - செயல்வினை வேறுப்பாடுகள் அடுத்தப்பாடத்தில் வழங்கப்படும். (செயல்பாட்டுவினை பேச்சு வழக்கிக்கிற்கு பொருந்தாத அல்லது அதிகம் பயன்படுத்தப்படாத வாக்கிய அமைப்புகள் பற்றியும் பார்ப்போம்.)

2010 ஆம் ஆண்டின் முதல் பாடப்பயிற்சி இதுவாகும். இப்பாடம் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இப்பாடப் பயிற்சியை சரியாக பற்றிக்கொண்டீர்களானால், இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறை என்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

அறிவித்தல்:

எமது பாடங்களை தயவுசெய்து அப்படியே வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவும். நன்னோக்கின் அடிப்படையில் மீள்பதிவிட விரும்பினால், ஒரு சிறு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்தின் குறிப்பிட்ட பாடத்திற்கான இணைப்பை (URL) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என அறியத்தருகின்றோம்.

இப்பாடம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன்

அருண் HK Arun Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி 29 (Past Perfect Progressive)

நாம் Grammar Patterns 01 இல் காணப்படும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஒவ்வொரு பாடங்களாக 28 வரை கற்றுள்ளோம். இன்றையப் பாடத்தில் 29 வது வாக்கியத்தை விரிவாக பார்க்கப் போகிறோம். இந்த 29 வது வாக்கியத்தை ஆங்கிலத்தில் "Past perfect Continuous" அல்லது "Past Perfect Progressive" என்று அழைப்பர். தமிழில் “இறந்தக்கால வினை முற்றுத்தொடர்” அல்லது “கடந்தக்கால வினை முற்றுத்தொடர்” என இரண்டு விதமாக அழைக்கப்படுகின்றது.

65. I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

வாக்கிய அமைவுகள்
-------------------------------------------------------------------------------------
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing
I / He/ She/ It/ You/ We/ They + had + been + doing a job

“இறந்தக்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கிய அமைப்புகளில் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" இணைந்தே பயன்படும் என்பதை மறவாதீர்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Auxiliary verb + verb with ing
I / He/ She/ It/ You/ We/ They + had + not + been + doing a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing
Had + I / He/ She/ It/ You/ We/ They + been + doing a job? இவற்றில் துணை வினைகள் பிரிந்து (Auxiliary verbs) இரண்டு இடங்களில் பயன்படுவதை அவதானியுங்கள்.

இன்னொரு விடயத்தையும் கவனியுங்கள். அதாவது இந்த வாக்கிய அமைப்புகள்; முதலாம் நபர், இரண்டாம் நபர், மூன்றாம் நபர் என மூன்று நபர்களும், ஒரே வடிவிலேயே பயன்படும்.

இப்பொழுது இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக அமைப்பது என்று பார்ப்போமா? எமது பாடங்களை தொடர்ந்து பயின்று வருவோருக்கு இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைக்கலாம் என்பதை விளங்கப்படுத்தாமலேயே தெரிந்திருக்கும். இருப்பினும் கீழுள்ளவற்றை கவனியுங்கள்.

கேள்வி பதில் வாக்கியங்கள்
-------------------------------------------------------------------------------------
Had you been doing a job?
நீ அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?
Yes, I had been doing a job. (I’d been)
ஆம், நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
No, I had not been doing a job. (I’d not been, I hadn’t been)
இல்லை, நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

வினை விளக்கம்
-------------------------------------------------------------------------------------
மேலுள்ள வாக்கியங்களின் தமிழ் பொருள் இறந்தக்கால தொடர்வினை வாக்கியங்கள் போன்றே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் வேறுப்பாடு உண்டு. என்ன வேறுப்பாடு? வாக்கியங்கள் இடையே "அன்றிலிருந்து அக்காலத்திலிருந்து” குறிப்பிடப்பட்டுள்ளதை கவனித்தீர்களா? ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன?

09. I was doing a job.
“நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.” என்பதில் “இறந்தக்காலத்தில் ஒரு செயல், குறிப்பிட்ட நேரத்தில் நடந்துக்கொண்டிருந்தது.” என்பதை அவ்வாக்கிய அமைப்புகள் வெளிப்படுத்துகின்றன. அங்கே இறந்தக் காலத்தில் செயல் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் இருக்கின்றது. (எப்பொழுது முடிவடையும் என்பதைப் பற்றி அங்கே பேசப்படவில்லை.)

ஆனால் இன்றையப் பாடத்தில் “இறந்தக்கால தொடர் வினைமுற்று” வாக்கியங்களின் செயல் இறந்தக் காலத்தில் தொடங்கி இன்னுமொரு இறந்தக்காலம் வரை தொடர்ந்து முடிவடைந்துவிடுகிறது. (Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)

இவற்றை இப்படி கற்பனை செய்துக்கொள்ளுங்கள்; நீங்கள் உங்கள் நண்பர் ஒருவரின் வருகைக்காக விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் நண்பர் வந்தடைந்தத உடன் உங்களிடம் கேட்கிறார்:

How long have you been waiting?
எவ்வளவு நேரமாக நீ காத்துக்கொண்டிருக்கின்றாய்?

I have been waiting for two hours.
நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இரண்டு மணித்தியாளங்களாக.

இதனையே அவர் சந்தித்து சில மணித்தியாளங்களின் பின் அல்லது சில நாட்களின் பின் கேட்கிறார் என்றால்; எப்படி கேட்பார்? பதில் கீழே:

How long had you been waiting?
எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருந்தாய்?

அப்பொழுது நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

I had been waiting for two hours.
நான் காத்துக்கொண்டிருந்தேன் இரண்டு மணித்தியாளங்களாக.

அதாவது அவர் வருகைத்தந்த நாளன்று; அவர் வந்தடையும் இரண்டு மணித்தியாளங்களுக்கு முன்பே நீங்கள் விமான நிலையத்திற்கு சென்று அவர் வருவரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்தீர்கள்? இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருந்தீர்கள். எதுவரை காத்துக்கொண்டிருந்தீர்கள்? அவர் வந்தடையும் வரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எனவே இந்த “இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்” வாக்கியம் இறந்தக்காலத்தில் தொடங்கி (இரண்டு மணித்தியாளங்களாக தொடர்ந்து) இன்னுமொரு இறந்தக்காலத்திலேயே நிறைவும் பெற்றுவிடுகிறது. இவ்வாறான வாக்கிய அமைப்புகளையே "இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்" வாக்கியங்கள் எனப்படுகின்றன. இப்பொழுது விளங்குகின்றதா இவ்வாக்கிய அமைப்புகளின் பயன்பாடுகள்?

மேலும் சில வாக்கியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள்.

பாடப் பயிற்சி
-------------------------------------------------------------------------------------
1. I had been waiting there for more than 45 minutes.
நான் காத்துக்கொண்டிருந்தேன் அங்கே 45 நிமிடங்களுக்கும் அதிகமாக.

2. I had been working for over an hour.
நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு மணித்தியாளத்திற்கு மேலாக.

3. I had been standing all day in the school.
நான் நின்றுக்கொண்டிருந்தேன் முழு நாளும் பாடசாலையில்.

4. I had been teaching at that university for three years
நான் கற்பித்துக்கொண்டிருந்தேன் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக.

5. I had been doing the work.
நான் செய்துக்கொண்டிருந்தேன் வேலை.

6. I had been studying English for five years
நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் ஐந்து ஆண்டுகளாக.

7. I had been living there since 1997.
நான் வசித்துக்கொண்டிருந்தேன் அங்கே 1997 இல் இருந்து.

8. I had been talking with Mr. Obama for over half an hour
நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக.

9. I had been driving for 10 years in Japan
நான் ஓட்டிக்கொண்டிருந்தேன் (வாகனம்) 10 ஆண்டுகள் ஜப்பானில்

10. I had been waiting in the Hong Kong airport for two hours
நான் காத்துக்கொண்டிருந்தேன் ஹொங்கொங் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக.

இவ்வாறு நீண்ட வாக்கியங்களாகவும் பயிற்சி செய்துப் பழகலாம்.

I had been waiting in the airport for more than two hours when you arrived.
நான் காத்துக்கொண்டிருந்தேன் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களுக்கும் மேலாக நீ வந்தடையும் பொழுது.

I had been talking with Mr. Obama for over half an hour before you arrived.
நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக நீ வருவதற்கு முன். (நீ வருவதற்கு முன்பு நான் அரை மணித்தியாளத்துக்கும் மேலாக ஒபாமாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.)

I had been learning English for two years before I left for America.
நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் இரண்டு ஆண்டுகளாக நான் அமெரிக்காவுக்கு வெளியேறுவதற்கு முன்பு. (நான் அமெரிக்காவுக்கு போவதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன்.)

Grandma wanted to sit down because she had been standing all day in the hospital.
பாட்டிக்கு அமர வேண்டும் ஏனெனில் அவள் நின்றுக்கொண்டிருந்தால் முழு நாளும் மருத்துவ மனையில். (பாட்டி முழு நாளும் மருத்துவ மனையில் நின்றுக்கொண்டிருந்தால் அவளுக்கு அமர வேண்டும்.)

Sarmilan was tired because he had been exercising so hard.
சர்மிலன் களைப்படைந்து இருந்தான் ஏனெனில் அவன் பயிற்சிசெய்துக்கொண்டிருந்தான் மிக கடுமையாக.

Homework:
-------------------------------------------------------------------------------------
வழமைப்போல் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களை He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி மாற்றி எழுதிப்பாருங்கள். பின் அவற்றை கேள்வி பதில்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள். பேச்சுப் பயிற்சிக்கு, உங்கள் நண்பர்களிடம் கேள்வி கேட்டும் பதில் அளித்தும் பயிற்சி பெறுங்கள்.

குறிச்சொற்கள் (Signal words)
-------------------------------------------------------------------------------------
since
for
all day
the whole day


கேள்விகளின் போது:

How long

எடுத்துக்காட்டுகள்:

How long had you been doing a job in Singapore?
எவ்வளவு காலமாக நீ செய்துக்கொண்டிருந்தாய் ஒரு வேலை சிங்கப்பூரில்?
I had been doing a job for 12 months.
நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை 12 மாதங்களாக. (தற்போது இல்லை)

How long had you been studying English?
நீ எவ்வளவு காலமாக படித்துக் கொண்டிருந்தாய் ஆங்கிலம்?
I had been studying English since 2005. (I’d been)
நான் படித்துக் கொண்டிருந்தேன் ஆங்கிலம் 2005 இல் இருந்து. (தற்போது படிப்பதில்லை)

இவ்வாறு இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கிய கேள்விகளின் பொழுது “How long” எனும் சொற்பதம் அடிக்கடி பயன்படும். அதேபோல் நேர்மறையின் போது “for, since” போன்ற சொற்கள் பயன்படும்.

சுருக்கப் பயன்பாடுகள் (Short Forms)
-------------------------------------------------------------------------------------
Positive Short forms

I had been = I'd been
You had been = You'd been
He had been = He'd been
She had been = She'd been
It had been = It'd been
We had been = We'd been
They had been = They'd been

Negative Short forms

எதிர்மறைகளின் சுருக்கப் பயன்பாடுகள் இரண்டு வகைகளாக உள்ளன

I had not been = I'd not been / I hadn't been
You had not been = You'd not been / You hadn't been
He had not been = He'd not been / He hadn't been
She had not been = She'd not been / She hadn't been
It had not been = It'd not been / It hadn't been
We have not been = We'd not been / We hadn't been
They have not been = They'd not been / They hadn't been

வரைப்படம் (Diagram)
-------------------------------------------------------------------------------------
இறந்தக்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இந்த வரைப்படம் ஊடாக பார்க்கவும். (The diagram explain to you that Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)

இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இன்றையப் பாடம் தெளிவாக விளக்கியிருக்கும் என்று நம்புகின்றேன். இருப்பினும் இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன்
ஆசிரியர் அருண் HK Arun Download As PDF

முன்னிடைச்சொற்கள் பட்டியல் (List of Prepositions)

ஆங்கில இலக்கணத்தின் பேச்சின் கூறுகளில் முன்னிடைச்சொற்களும் ஒன்றாகும். முன்னிடைச்சொற்கள் ஆங்கில மொழியில் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் அடிக்கடி பயன்படும் 70 முன்னிடைச்சொற்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

முன்னிடைச்சொற்களின் பயன்பாடு குறித்தப் பாடங்களை கீழே பார்க்கவும்.

உச்சரிப்பு பயிற்சிப்பெற விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறலாம்.

No:Englishதமிழ்
1aboardகப்பலில்/கப்பல் தளத்தில்
2about கிட்டத்தட்ட/ சுமார்/ பற்றி/ சுற்றிலும்
3above மேலே/ மேல்
4across குறுக்கே
5after பின்னால்/ பிறகு / பின்
6against எதிராக/
7along நீள்வட்டத்தில்/ நெடுக
8amid மத்தியில்/ இடையில்
9among (பலவற்றின்) நடுவில்/ (பலவற்றிற்கு) இடையே
10anti எதிரான/ எதிர்
11around சுற்றிலும்/ சூழ்ந்து / சுமார் / கிட்டத்தட்ட
12as போல்/ போல / போன்ற / என
13atஇல்/ இன்
14before முன்னர் / முன் / முன்பு / முன்னால்
15behind பின்னால் / பின் / பின்னனியில்
16below கீழே/ கீழ் / அடியில் 
17beneath கீழே/ கீழுருக்கும்
18beside அருகில்/ பக்கத்தில்
19besides மேலும்/...ஐத் தவிர/ தவிர வேறு
20between (இரண்டுக்கு) இடையில்/நடுவே
21beyond அப்பால்/அப்பாற்பட்ட
22but ஆனால் / மாறாக
23byஆல்/ மூலம்/ அருகில்
24concerning அக்கறையுடன்/ தொடர்பான / சம்பந்தமாக / குறித்து
25consideringபரிசீலித்து/ கருத்தில் கொண்டு/ கருதி
26despite ஆனபோதிலும்/ போதிலும் / ஆயினும்/ இருப்பினும்
27down கீழே / குறைத்து
28during... காலத்தில்/...பொழுது / காலக்கட்டத்தில் / சமயத்தில்
29except தவிர / தவிர்த்து
30excepting தவிர/நீங்கலாக
31excluding விலக்குகின்ற/தவிர்க்கின்ற
32following தொடர்ந்து / பின்வரும் 
33for ...க்காக/...கு
34from... லிருந்து / இருந்து
35in ... இல் / ... இன்
36inside உள்பக்கம் / உட்புறம் / உள்ளே
37intoஉள்ளுக்குள்/உள்நோக்கி
38like போன்ற / ஒத்த
39minusகழித்து /குறைய / நீக்கிய
40nearஅருகில் / அருகாமையில்
41of ...இன்/...இல்
42off மூடு/ அணை / அப்பால்
43onமீது / மேல் / ... இல்
44ontoஅதனுள்/ க்குள்
45oppositeஎதிரான / எதிராக / எதிர்
46outside வெளிப்புறம்/ வெளியே/ வெளியில்
47overமேலே / மேல்/ மேலாக
48past கடந்த / கடந்த கால
49per ஆக / ஒன்றிற்கு / வீதம்
50plus...கூட / அத்துடன் / கூடுதலாக / மேலதிகமாக
51regarding குறித்து / சம்பந்தமாக/ தொடர்பான / தொடர்பாக / பற்றி
52roundசுற்றி/ சுற்றிலும்
53since... லிருந்து/ இருந்து / ...முதல்
54than விட / ... விடவும் 
55through ஊடாக / மூலம் / மூலமாக
56to ...க்கு 
57toward ... நோக்கி/ ... க்காக
58towardsநோக்கிய / மீதான
59under அடியில்/... ன் கீழே
60underneath அடியில்/ கீழாக
61unlike போலில்லாத / போலன்றி 
62until வரை / வரைக்கும் / மட்டும்
63up மேலே / மேல்
64uponமீது / மேல் / அடிப்படையில்
65versus எதிராக / எதிர்
66viaவழியாக / மூலமாக
67with உடன்
68within அத்துடன்
69withoutஇல்லாமல் / இன்றி
70throughoutமுழுவதும் / முழுதும் / முழுவதிலும்

இப்பட்டியலில் வழங்கப்பட்டுள்ள முன்னிடைச்சொற்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலம் கற்பதற்கு முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளை சரியாக விளங்கிக்கொள்ளல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்த இடத்தில் எந்த முன்னிடைச்சொல்லை பயன்படுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வாக்கியங்களில் பொருத்தமற்ற முன்னிடைச்சொற்களை பயன்படுத்திவிட்டால் முழு வாக்கியத்தின் பொருளே மாறிவிடும்.

குறிப்பு:
மேலே உள்ள பட்டியலில் 70 முன்னிடைச்சொற்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் நூற்றுக் கணக்கான முன்னிடைச் சொற்கள் உள்ளன. உங்கள் ஆங்கில மொழி ஆளுமையை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினால் இப்பட்டியிலில் உள்ளடக்கப்படாத முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.

கவனிக்கவும்:
இங்கே இப்படியலில் உள்ள சொற்கள், முன்னிடைச்சொற்களாக பயன்படும் போதான தமிழ் பொருளே மேலே வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை இச்சொற்கள் முன்னிடைச்சொற்கள் அல்லாத ஏனையப் பயன்பாட்டின் போது அவற்றில் பொருள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

தொடர்புடைய பாடங்கள்:
ஆங்கில வாக்கியங்களில் முன்னிடைச்சொற்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதனை பயில விரும்புவோர் கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி பயிற்சி பெறவும்.


சரி! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

ஆங்கில சுட்டுப்பெயர்கள் (English Pronouns)

ஆங்கிலத்தில் பெயர்சொற்கள் என்றால் என்ன என்பதை நாம் கடந்தப் பாடங்களில் கற்றோம். இன்று சுட்டுபெயர் சொற்கள் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

சுட்டுப்பெயர் சொல் என்பது ஒரு பெயரை அல்லது பெயர் சொல்லை குறிப்பிடாமல், அதற்குப் பதிலாக சுட்டிக்காட்டுவதற்கு பயன்படும் சொற்களே "சுட்டுப்பெயர்" என்றழைக்கப்படுகின்றன. இவற்றை தமிழில் "பிரதிப்பெயர்கள்", "பதிலிடுச்சொற்கள்" என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் "Pronouns" என அழைக்கப்படும்.

உதாரணம்:

Sarmilan will come to the class.
சர்மிலன் வருவான் வகுப்பிற்கு

He will come to the class
அவன் வருவான் வகுப்பிற்கு.

முதல் வாக்கியத்தில் “சர்மிலன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெயருக்கு (பெயர்ச்சொல்லுக்கு) பதிலாக, இரண்டாம் வாக்கியத்தில் “அவன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கவும். அதாவது “சர்மிலன்” எனும் பெயரைக் குறிப்பிடாமல் “அவன்” எனும் சொல் சுட்டிக்காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனாலேயே “அவன்” எனும் சொல் ஒரு சுட்டுப்பெயர்ச் சொல்லாகும்.

இச் சுட்டுப்பெயர்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். அவைகளாவன:

Subject Pronouns
Object Pronouns
Reflexive Pronouns
Possessive Pronouns
Demonstrative Pronouns
Relative Pronouns
Interrogative Pronouns
Indefinite Pronouns

இப்பிரிவுகள் ஒவ்வொன்றினதும் சுட்டுப்பெயர்கள் அதே நிறங்களில் கீழே வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் எடுத்துக்காட்டாக அச்சுட்டுப்பெயர்கள் பயன்படும் வாக்கிய அமைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

Subject Pronouns – எழுவாய் சுட்டுப்பெயர்கள்

ஒரு வாக்கியத்தின் எழுவாயாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

I - நான்
You – நீ (ஒருமை)
He - அவன்
She - அவள்
It - அது
We – நாம், நாங்கள்
You - நீங்கள் (பன்மை)
They - அவர்கள், அவைகள்

உதாரணம்:

Kennedy spoke about genocide war in Sri Lanka.
கென்னடி பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.

He spoke about genocide war in Sri Lanka.
அவர் பேசினார் இலங்கையின் இனவழிப்பு போரைப் பற்றி.

(“Kennedy” எனும் பெயர்சொல்லுக்குப் பதிலாக “He” எனும் சுட்டுப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.)

Object Pronouns – செயப்படுபொருள் சுட்டுப்பெயர்கள்

ஒரு வாக்கியத்தின் செயப்படுபொருளாகப் பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

me – என்னை
you - உன்னை (பன்மை)
him - அவனை
her – அவளை
it - அதை
us – எங்களை, நம்மை
you - உங்களை (பன்மை)
them - அவர்களை, அவைகளை

உதாரணம்:

I love her
நான் காதலிக்கிறேன் அவளை

Reflexive Pronouns – அனிச்சைச் செயல் சுட்டுப்பெயர்கள்

ஒரு வாக்கியத்தின் எழுவாய் சொல்லை மீண்டும் அனிச்சையாக குறிப்பிடுவதற்கு பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

myself - நானாகவே
yourself - நீயாகவே
himself - அவனாகவே
herself - அவளாகவே
itself - அதுவாகவே
ourselves – நாங்களாகவே, நாமாகவே
yourselves - நீங்களாகவே
themselves – அவர்களாகவே, அவைகளாகவே

உதாரணம்:

I cut my hair myself.
நான் வெட்டினேன் எனது தலைமயிரை நானாகவே
(நான் எனது தலைமயிரை நானே/நானாகவே வெட்டிக்கொண்டேன்.)

Possessive Pronouns – ஆறாம் வேற்றுமை (உரிமையைக் குறிக்கும்)

இவை உரிமையைக் குறிக்க அல்லது உரிமையை வெளிப்படுத்தப் பயன்படுபவை. இவற்றை சுட்டுப்பெயராக பயன்படுபவைகள் பெயரெச்சமாக பயன்படுபவைகள் என இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

mine - என்னுடையது
yours - உன்னுடையது
his - அவனுடையது
hers - அவளுடையது
its - அதனுடையது
ours - எங்களுடையது
yours - உங்களுடையது
theirs – அவர்களுடையது, அவைகளுடையது

உதாரணம்:

This house is ours.
இந்த வீடு எங்களுடையது

Adjective – பெயரெச்சம்

பெயரெச்சமாகப் பயன்படுபவைகள்

my – என்னுடைய
your – உன்னுடைய
his – அவனுடைய
her - அவளுடைய
its - அதனுடைய
our – எங்களுடைய
your – உங்களுடைய
their - அவர்களுடைய, அவைகளுடைய

உதாரணம்:

This is our house.
இது எங்களுடைய வீடு.

வேறுப்பாடு (Possessive - Adjective)

This is our house. (Adjective)
இது எங்களுடைய வீடு.

This house is ours. (Possessive)
இந்த வீடு எங்களுடையது.

Demonstrative Pronouns – குறிப்பிடுச் சுட்டுப்பெயர்கள்

ஒன்றை அல்லது பலவற்றை குறித்துக்காட்டுவதற்கு அல்லது அடையாளப்படுத்தி பேசுவதற்கு இச்சுட்டுப் பெயர்கள் பயன்படுகின்றன.

This – இது, இந்த (ஒருமை)
That – அது, அந்த (ஒருமை)
These – இவை, இவைகள் (பன்மை)
Those – அவை, அவைகள் (பன்மை)

உதாரணம்:

This book is new but those books are old.
இந்த பொத்தகம் புதியது ஆனால் அப்பொத்தகங்கள் பழையது.

(இவற்றில் book books எனும் பெயர் சொற்களை தவிர்த்து சுட்டுப்பெயர்களை மட்டுமே பயன்படுத்தியும் பேசலாம்.)

This is new but those are old.
இது புதியது ஆனால் அவைகள் பழையது.

Relative Pronouns – உரிச் சுட்டுப்பெயர்கள்

ஒரு வாக்கியத்தின் உற்பிரிவாகவோ அல்லது இரண்டு வாக்கியங்களின் இணைப்புச் சொல்லாகவோ பயன்படுபவைகள்.

who
whom
that
which
whoever
whomever
whichever

உதாரணம்:

I told you about a woman who lives next door.
நான் கூறினேன் ஒரு பெண்ணைப் பற்றி அவள் வசிக்கிறாள் அடுத்த வீட்டில்.

மேலும் இதுப்போன்ற இணைப்புச் சொற்களின் பயன்பாடு பற்றி எதிர்வரும் பாடத்தில் விரிவாகப் பார்ப்போம்.

Interrogative Pronouns – கேள்வி சுட்டுப்பெயர்கள்

இவை கேள்வி கேட்பதற்கு பயன்படுபவைகளாகும்.

Who - யார்
What - என்ன
Where - எங்கே
When - எப்பொழுது
Whom - யாரை
Which - எது
Whoever – யாரெவர்
Whomever - யாரெவரை
Whichever - எதுவாயினும்

உதாரணம்:

Where did you go?
நீ எங்கே போனாய்?

Indefinite Pronouns

ஒரு நபரையோ ஒரு பொருளையோ குறிப்பிட்டு கூறாமல் நிச்சயமற்ற நிலையில் பேசுவதற்கு இச் சுட்டுப்பெயர்கள் பயன்படுகின்றன.

all – எல்லா, முழு
another - இன்னொன்று, இன்னொருவர்
every - எல்லா
any – ஏதாவது ஒன்று
some – சில, கொஞ்சம்
nothing – ஒன்றும் இல்லை (ஒன்றும் இல்லாத நிலை)
several – பல
each – ஒவ்வொரு
many – பலர், பல
few - சில

உதாரணம்:

Each of the members has one vote
ஒவ்வொரு உருப்பினர்களுக்கும் இருக்கிறது ஒரு வாக்கு.

Homework:

இச்சுட்டுப்பெயர்கள் எவ்வாறு, ஏன் பயன்படுத்தப் படுகின்றன என்பது இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்பாடத்தில் அனைத்து சுட்டுப்பெயர்களுக்குமான வாக்கியங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒவ்வொரு வாக்கியங்கள் உதாரணமாக வழங்கியுள்ளோம். அவற்றை பின்பற்றி ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அனைத்து சுட்டுப்பெயர்களுக்கும் வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்யுங்கள்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்.

நன்றி

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

ஆங்கிலப் பெயர்ச்சொற்கள் (Types of Nouns)

நீங்கள் உங்கள் நண்பர், சகோதரர், உறவினர் எவருடன் என்றாலும் பரவாயில்லை "அனைத்திற்கும் அவசியமானது என்ன?” எனும் கேள்வியை கேளுங்கள். அவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்பதையும் பாருங்கள்.

எமக்கும் எமது பாடசாலை காலத்தில் எமது ஆசிரியர் ஒருவர் இக்கேள்வியை கேட்டிருந்தார். மாணவர்கள் பலவாறு பதிலளித்தனர்.

ஒரு மாணவர் உடனே பதிலளித்தார், “உயிர்".  "உயிருக்கும் அவசியமானது." இன்னொருவர் "உலகம்" என்றார். "அதற்கும் அவசியமானது." ஒரு அறிவியல் மாணவர் "ஒக்சிசன்" என்றார். "அதற்கும் அவசியமானது." சமய நம்பிக்கைக் கொண்ட ஒரு மாணவர் "கடவுள்" என்றார். "கடவுளுக்கும் அவசியமானது."

மாணவர்கள் பலவாறு சிந்திக்கத் தொடங்கினர். ஒவ்வொருவரும் "சூரியன்", “வின்வெளி", “அண்டம்", “பால்வெளி", "உடுமண்டலம்" என கூறிக்கொண்டே போயினர். ஆனால் ஆசிரியரோ அனைத்து பதில்களுக்கும் "அதற்கும் தேவை, அதற்கும் தேவை" என்றே கூறிக்கொண்டு இருந்தார்.

கடைசியில் அவரே விடையளித்தார்; விடை "பெயர்".

ஆம்! அனைத்திற்கும் பெயர் அவசியமல்லாவா? பெயரின்றி ஒன்றை உணர்த்தவோ கூறவோ முடியாது. பெயரைத்தான் பெயர்ச்சொல் என்றும் கூறப்படுகிறது. புதிது புதிதாக கண்டுப்பிடுக்கும் பொருற்களுக்கும் புதுப்புதுபெயர்கள் இடப்படுவதும் "பெயர்" அவசியம் உணரப்படுவதால் தானே? இந்த பெயர்களை அல்லது பெயர்ச்சொற்களை பற்றிதான் இன்று நாம் கற்கப்போகின்றோம்.

பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் "nouns” என அழைக்கப்படுகிறது. இச்சொல் இலத்தீன் மொழியில் "nōmen" (பெயர்) என்ற சொல்லில் இருந்து மருவி ஆங்கிலத்தில் பயன்படும் சொல்லாகும்.

ஆங்கிலப் பெயர்சொற்கள் (Nouns) என்பன மனிதர்கள், இடங்கள், பொருற்கள், உயிரினங்கள், உணர்வுகள் போன்றவற்றை குறிப்பதற்கான "பெயர்கள்" அல்லது "பெயர்ச்சொற்கள்" ஆகும்.

இப்பெயர்சொற்களை ஆங்கிலத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவைகளாவன:
    Common Nouns
    Proper Nouns
    Countable Nouns
    Uncountable Nouns
    Collective Nouns
    Concrete Nouns 
    Abstract Nouns
    Compound Nouns
மேலும் இப்பெயர்ச்சொற்கள் பற்றி பார்ப்போம்.

Common Nouns - பொதுவான பெயர்சொற்கள்

பொதுவான பெயர்சொற்கள் எனும் போது மக்கள், இடங்கள், பொருட்கள், உயிரினங்கள் அனைத்தினதும் பெயர்கள், பொதுவான பெயர்ச்சொற்கள் தான். தமிழில் இதனை "பொதுப் பெயர்ச்சொற்கள்" என அழைப்பதும் உண்டு.

இடங்கள்:
  • bank = வங்கி
  • school = பாடசாலை
  • city = பட்டணம்
  • shop = கடை
  • park = பூங்கா
பொருட்கள்:
  • pencil = பென்சில்
  • book = பொத்தகம்
  • chair = கதிரை
  • table = மேசை
  • bag = பை
உயிரினங்கள்:
  • tiger = புலி
  • bear = கரடி
  • fish = மீன்
  • snake = பாம்பு
  • dog = நாய்
மேலும் பொதுவானப் பெயர்ச்சொற்கள் அட்டவணையில் பார்க்கவும்.

Proper Nouns - உரித்தானப் பெயர்சொற்கள்

குறிப்பிட்ட ஒரு பொருள், இடம், மனிதன், மதம், மொழி, மாதம், ஊர், நாடு போன்றவற்றின் உரித்தான பெயர்களையே "உரித்தானப் பெயர்ச்சொற்கள்" என அழைக்கப்படுகின்றன. உரித்தானச்சொற்கள் ஒரு வாக்கியத்தில் எவ்விடத்தில் வந்தாலும் அதன் முதலெழுத்து கெப்பிட்டல் எழுத்திலேயே வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இடங்கள்:
  • London = இலண்டன்
  • Jaffna = யாழ்ப்பாணம்
  • California = கலிபோனியா
  • Kilinochchi = கிளிநொச்சி
  • Madurai = மதுரை
மனிதர்கள்:
  • Sarmilan = சர்மிலன்
  • Surya = சூர்யா
  • Tamilvaanan = தமிழ்வாணன்
  • Kavitha = கவிதா
  • David = டேவிட்
மொழிகள்:
  • Tamil = தமிழ்
  • English = ஆங்கிலம்
  • French = பிரஞ்சு
  • Chinese = சீனம்
  • Cantonese = கந்தோனிஸ்
மதங்கள்:
  • Hindu = இந்து
  • Christian = கிறிஸ்தவம்
  • Islam = இஸ்லாம்
  • Buddhist = பௌத்தம்
  • Taoism = டாவோயிசம்
மேலும் உரித்தானப் பெயர்ச்சொற்கள் அட்டவணையில் பார்க்கவும்.

Countable Nouns - கணக்கிடுப் பெயர்சொற்கள்

கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் என்பன எண்ணிக்கையால் எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் ஆகும். அதாவது ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணி கணக்கிடக்கூடிய சொற்கள் எல்லாம் கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் தான்.

எடுத்துக்காட்டாக:
  • apple = குமழிப்பழம்
  • dollar = டொலர்
  • book = பொத்தகம்
  • spoon = கரண்டி
  • computer = கணனி
மேலும் கணக்கிடுப் பெயர்ச்சொற்கள் பாடத்தைப் பார்க்கவும்.

Uncountable Nouns - கணக்கிடமுடியாப் பெயர்சொற்கள்

எண்ணிக்கையால் எண்ணி கணக்கிட முடியாதச் சொற்கள் எல்லாமே "கணக்கிடாமுடியாப் பெயர்சொற்கள்"  ஆகும்.

எடுத்துக்காட்டாக:
  • love = அன்பு / காதல்
  • water = தண்ணீர்
  • happiness = மகிழ்ச்சி
  • smoke = புகை
  • milk = பால்
மேலும் கணக்கிடாமுடியாப் பெயர்ச்சொற்கள் பாடத்தைப் பார்க்கவும்.

Collective Nouns - கூட்டுப் பெயர்சொற்கள்

கூட்டம்  அல்லது குழுக்களின் (பலரின் அல்லது பலதின்) கூட்டினை குறிக்கும் பெயர்களை "கூட்டுப் பெயர்சொற்கள்" என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:
  • army = இராணுவம் (பல வீரர்களை குறிக்கும் சொல்)
  • class = வகுப்பு (பலர் கற்கும் இடம்)
  • gang = கும்பல் (பலரை குறிக்கும்)
  • colony = குடியேற்றப் பகுதி/ குடியேற்ற நாடு
  • school = பாடசாலை 
மேலும் கூட்டுப்பெயர்ச்சொற்கள் பாடத்தைப்  பார்க்கவும்.

Concrete Nouns - திடப் பெயர்சொற்கள்

கண்ணால் பார்க்கவும், கையால் தொடவும் கூடியவற்றை "திடப் பெயர்சொற்கள்" எனலாம். இவை பொதுவானப் பெயர்சொற்களாகவோ உரித்தானப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம். கணகிடுப் பெயர்சொற்களாகவோ கணக்கிடமுடியாப் பெயர்சொற்களாகவோ இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக:
  • tree = மரம்
  • ball = பந்து
  • nose = மூக்கு
  • face = முகம்
  • book = பொத்தகம்
மேலும் திடப் பெயர்ச்சொற்கள் பாடத்த்தினைப் பார்க்கவும்.

Abstract Nouns - நுண் பெயர்ச்சொற்கள்

நுண் பெயர்ச்சொற்கள் என்பன கண்ணால் பார்க்கவோ, தொட்டுணரவோ முடியாத நுண்மையானவைகளாகும். அதனாலேயே அவற்றை "நுண் பெயர்ச்சொற்கள்" எனப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:
  • skill = திறமை
  • opinion = கருத்து
  • law = சட்டம்
  • ego = தன்முனைப்பு
  • peace  = அமைதி
மேலும் நுண் பெயர்ச்சொற்கள் அட்டவணை பார்க்கவும்.

Compound Nouns - கலவைப் பெயர்சொற்கள்

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் கலந்து இன்னுமொரு தனிச்சொல்லாக பயன்படும் சொற்களை அல்லது பெயர்களை "கலவைப் பெயர்ச்சொற்கள் என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:
  • blackboard = கரும்பலகை
  • homeland = தாய்நிலம்
  • swimming pool  = நீச்சல் தடாகம்
  • brother-in-law = மைத்துனர்
  • haircut = தலைமயிர் வெட்டுதல்
ஆங்கிலத்தில் பெயர்ச்சொற்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்திருப்பதன் காரணம்; அவற்றை மாணவர்கள் எளிதாக கற்பதற்காகவே. மேலே வழங்கப்பட்டுள்ள பெயர்ச்சொற்கள் வகையில் இல்லாத "Gerund Nouns", "Predicate Nouns", "Noun as Adjective" போன்றவைகளும் உள்ளன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் பார்ப்போம்.

இன்றைய பெயர்ச்சொற்கள் பாடத்துடன் தொடர்புடைய பாடங்களை கீழே பார்க்கவும்.

பெயர்ச்சொற்கள் தொடர்புடையப் பாடங்கள்:

தொடர்புடையப் பாடங்கள்:

இப்பாடம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தின் ஊடாகக் கேட்கவும்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் (Use a/an - Vowels and Consonant)

ஆங்கில பெயர்ச்சொற்குறிகளில், பொதுவாக "ஒரு", "ஓர்" என்பதைக் குறிக்க " a", "an" எனும் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் பயன்படுகின்றன. இவற்றில் "a" பயன்படும் இடங்கள் எவை, "an" பயன்படும் இடங்கள் எவை என்பதை இன்று பார்ப்போம்.

பொதுவாக மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொல்லுக்கு முன்னால் "a" பயன்படுத்தப்படுகின்றது.

ஆங்கில மெய்யெழுத்துக்கள் (consonants) 21 ஆகும்.

b c d f g h j k l m n p q r s t v w x y z = 21

உதாரணமாக:

I am a Sri Lankan
நான் ஒரு இலங்கையன்.

I am a student.
நான் ஒரு மாணவன்.

This is a car
இது ஒரு மகிழுந்து.

This is a book.
இது ஒரு புத்தகம்.

He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.

பொதுவாக உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு முன்னால் "ஓர்", "ஒரு" என்பதைக் குறிக்க "an" பயன்படுகின்றது.

ஆங்கில உயிரெழுத்துக்கள் (Vowels) 5 ஆகும். இவ்வெழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு முன்னால் பொதுவாக "an" பயன்படும்.

a e i o u = 5

உதாரணமாக:

This is an animal - (animal begins with a vowel sound)
இது ஒரு மிருகம்.

I am an Indian
நான் ஒரு இந்தியன்.

I am an English teacher
நான் ஒரு ஆங்கில அசிரியர்.

He is an old man
அவர் ஒரு வயதான(வர்) மனிதர்.

ஒலிப்பு வேறுபாட்டை விளங்கிக்கொள்ளல்

மேற் கூறிய விதிமுறைகள் மாறுப்படும் இடங்களும் உள்ளன. ஏன் மாறுபடுகின்றன என்பதனை கீழே வழங்கப்பட்டுள்ள விளக்கங்கள் ஊடாகப் பாருங்கள்.

உயிர் எழுத்துக்களான a, e, i, o, u போன்ற சொற்கள் முன்னால் வந்தாலும் ‘a’ பயன்படும் இடங்களும் உள்ளன.

a user - "யூசர்" எனும் சொல்லின் முதலெழுத்து (u) உயிரெழுத்தாக இருந்தாலும், அது "உ” எனும் உயிரொலியாக அல்லாமல் “யு” எனும் மெய்யொலியாகவே ஒலிக்கப்படும். அதனாலேயே  ‘a’ பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். (sounds like 'yoo-zer,' i.e. begins with a consonant 'y' sound, so 'a' is used)

a university - இதன் ஒலிப்பும் "உ” எனும் உயிரொலியாக அல்லாமல் “யு” எனும் மெய்யொலியாக ஒலிப்பதனாலேயே  ‘a’ பயன்படுத்தப்படுகிறது

a European country – இதிலும் ‘இ’ எனும் உயிரொலியாக அல்லாமல் "யு’ எனும் மெய்யொலியாக ஒலிப்பதே "a" இடப்பட்டுள்ளதற்கான காரணம். (sounds like 'yer-o-pi-an,' i.e. begins with consonant 'y' sound)

மெய் எழுத்து முன்னால் வந்தாலும் ‘an’ பயன்படும் இடங்கள். 

an hour - என்பதில் “hour” என்பது “our” போல் “அ” உயிரொலியாக ஒலிப்பதால் “an” பயன்படுத்தப்படுகிறது. (sounds like 'a-our,' begins with vowels 'a' sound)

an honor - இதுவும் “honor” என்பது “onor” போல் “அ” உயிரொலியாக ஒலிப்பதால் “an” பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை சரியாக கவனித்தீர்களானால், உயிர் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்கள் மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் சொற்கள் என்று பார்க்காமல், உயிரொலி ஒலிப்புச் சொற்கள், மெய்யொலசொலிப்புச் சொற்கள் எனும் அடிப்படையில், சொற்களின் ஒலிப்புக்கு அமைவாகவே, நிச்சயற்ற பெயர்ச்சொற்குறிகள் இடம்பெறுகின்றன என்பதை எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

இந்த நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகளின் பயன்பாடுகளின் பொழுது ஆங்கிலேயர்களும் பிழை விட்டுவிடும் சந்தர்ப்பங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் இவற்றை நாம் முறையாக விளங்கிக் கற்பது எமக்கே பயனுள்ளதாக இருக்கும்.

தொடர்புடைய பாடங்கள்:

நீங்கள் இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு புதிதாக வருகை தந்தவரானால், உங்கள் ஆங்கிலப் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். பின் இலக்க வரிசை கிரமத்தில் ஏனையப் பாடங்களை தொடரலாம். அதுவே இந்த ஆங்கிலப் பயிற்சி நெறியை தொடர எளிதானதாக இருக்கும்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி 11 (Simple Future Tense)

Grammar Patterns -1 றில் ஐந்து மற்றும் ஆறாவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். இன்று அவ்விரண்டு வாக்கியங்களையும் விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சியை எளிதாக தொடர வழிவகுக்கும்.
சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.

5. I will do a job
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் ஒரு வேலை. (சற்றுப் பிறகு)

6. I won’t do a job. (will + not)
நான் செய்ய மாட்டேன் ஒரு வேலை.

மேலுள்ள 5, 6 வரிகளைப் பாருங்கள். இவை சாதாரண எதிர்கால வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Simple Future Tense" என்று கூறுவர். இந்த Form ல் தன்னிலை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will" என்றே பயன்படுத்தப்படுகிறது.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
I /You /He /She /It / We / You /They + will + do a job.

Negative
Subject
+ Auxiliary verb + not + Main verb
I /You /He /She /It /You /We /They + won’t + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Will + I /you /he /she /it /you /we /they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb" துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.

இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் நாமாகவே மிக எளிதாக கேள்வி பதில்களை மாற்றி அமைப்பது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

Will you do a job?
நீ செய்வாயா ஒரு வேலை?
Yes, I will do a job
ஆம், நான் செய்வேன் ஒரு வேலை.
No, I won’t do a job. (will + not)
இல்லை, நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

Will you speak in English?
நீ பேசுவாயா அங்கிலத்தில்?
Yes, I will speak in English.
ஆம், நான் பேசுவேன் ஆங்கிலத்தில்
No, I won’t speak in English. (will + not)
இல்லை, நான் பேசமாட்டேன் ஆங்கிலத்தில்.

Will you go to school?
நீ போவாயா பாடசாலைக்கு?
Yes, I will go to school.
ஆம், நான் போவேன் பாடசாலைக்கு.
No, I won’t go to school. (will + not)
இல்லை, நான் போகமாட்டேன் பாடசாலைக்கு.

இப்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை நீங்களாகவே கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிந்து, உங்களின் வாசிக்கும் ஆற்றலையும், ஆங்கில அறிவையும் எளிதாக மேம்படுத்திக்கொள்ள உதவும். அதேவேளை எழுத்தாற்றலையும் விரைவில் பெற்றுவிடலாம்.

சரி பயிற்சியைத் தொடருங்கள்.

1. I will open a current account.
நான் திறப்பேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

2. I will apply for vacancies.
நான் விண்ணப்பிப்பேன் தொழில்களுக்காக.

3. I will speak in English fluently.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில் சரளமாக.

4. I will ask for an increment.
நான் கேட்பேன் ஓர் (பதவி/சம்பளம்) உயர்வு.

5. I will ask for a transfer.
நான் கேட்பேன் ஒரு இடமாற்றம்.

6. I will celebrate my birthday.
நான் கொண்டாடுவேன் எனது பிறந்தநாளை.

7. I will consult Dr. Sivaram.
நான் (மருத்துவ) ஆலோசனை பெறுவேன் மருத்துவர் சிவராமிடம்.

8. I will control my temper.
நான் கட்டுப்படுத்துவேன் எனது கோபத்தை.

9. I will negotiate my salary.
நான் பேரம் பேசுவேன் எனது சம்பளத்தை.

10. I will stop smoking.
நான் நிறுத்துவேன் புகைப்பிடிப்பதை.

11. I will help others.
நான் உதவுவேன் மற்றவர்களுக்கு.

12. I will open a saving account.
நான் திறப்பேன் ஒரு சேமிப்பு கணக்கு.

13. I will obey the rules and regulations.
நான் கீழ்படிவேன் சட்டத் திட்டங்களுக்கு.

14. I will pick up this work.
நாம் பற்றிக்கொள்வேன் இந்த வேலையை.

15. I will resign from the job.
நான் இராஜினமா செய்வேன் வேலையிலிருந்து.

16. I will correct the mistakes.
நான் சரிப்படுத்துவேன் பிழைகளை.

17. I will play football.
நான் விளையாடுவேன் உதைப்பந்தாட்டம்.

18. I will do my duty.
நான் செய்வேன் எனது கடமையை.

19. I will follow a computer course.
நான் பின்பற்றுவேன் ஒரு கணனி பாடப் பயிற்சி.

20. I will forget her.
நான் மறப்பேன் அவளை.

21. I will solve my problems.
நான் தீர்ப்பேன் எனது பிரச்சினைகளை.

22. I will speak English in the office
நான் பேசுவேன் ஆங்கிலம் பணியகத்தில்.

23. I will go to the university.
நான் போவேன் பல்கலைக்கழத்திற்கு.

24. I will translate English to Tamil.
நான் மொழிமாற்றுவேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

25. I will give up this habit.
நான் விட்டுவிடுவேன் இந்த தீயப்பழக்கத்தை.

26. I will study for the exam.
நான் படிப்பேன் பரீட்சைக்காக.

27. I will do my homework.
நான் செய்வேன் எனது விட்டுப்பாடம்.

28. I will become stronger.
நான் பலசாலியாவேன்.

29. I will become a chief executive in the company.
நான் ஆவேன் தலமை நிறைவேற்று அதிகாரியாக இந்த நிறுவனத்தில்.

30. I will become the Prime Minister of India.
நான் பிரதமராவேன் இந்தியாவின்.

31. I will take a treatment for my hand.
நான் எடுப்பேன் ஒரு சிகிச்சை எனது கைக்கு.

32. I will introduce him to you.
நான் அறிமுகப்படுத்துவேன் அவனை உனக்கு.

33. I will untie this knot.
நான் அவிழ்ப்பேன் இந்த முடிச்சை.

34. I will build my dream house.
நான் கட்டுவேன் எனது கனவு வீட்டை/மாளிகையை.

35. I will co-operate with others.
நான் ஒத்துழைப்பேன் மற்றவர்களுடன்.

36. I will discuss about this problem.
நான் கலந்தாலோசிப்பேன் இந்தப் பிரச்சினையைப் பற்றி.

37. I will drop you in Vavuniya junction.
நான் இறக்குவேன் உன்னை வவுனியா சந்தியில்.

38. I will buy a car.
நான் வாங்குவேன் ஒரு மகிழுந்து.

39. I will bank the money.
நான் வைப்பிடுவேன் வங்கியில்.

40. I will come up in my life.
நான் முன்னேறுவேன் வாழ்க்கையில்.

41. I will draw salary US$ 100,000 monthly.
நான் பெறுவேன் சம்பளம் ஒரு லட்சம் டொலர் மாதாந்தம்.

42. I will fly to America.
நான் (விமானத்தில்) பறப்பேன் அமெரிக்காவிற்கு.

43. I will go to Europe.
நான் போவேன் ஐரோப்பாவிற்கு.

44. I will invite my friends for festival.
நான் அழைப்பேன் எனது நண்பர்களை பண்டிகைக்கு.

45. I will improve my English knowledge.
நான் வளர்ப்பேன் எனது ஆங்கில அறிவை.

46. I will practice English at night.
நான் பயிற்சி செய்வேன் ஆங்கிலம் இரவில்.

47. I will become wealthy.
நான் செல்வந்தனாவேன்.

48. I will get married after few months.
நான் திருமணம் முடிப்பேன் சில மாதங்களில் பிறகு.

49. I will become (CEO) chief executive officer.
நான் ஆவேன் தலமை நிறைவேற்று அதிகாரியாக.

50. I will become famous in the world.
நான் பிரசித்திப்பெறுவேன் இந்த உலகில்.

Homework:

A. மேலே நாம் கற்ற சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களை பார்த்து, இந்த 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. இன்று நாம் கற்ற (Simple Future Tense) சாதாரண எதிர்கால சொற்களை போல், நீங்கள் உங்கள் எதிர்காலத் எண்ணங்களாக, நோக்கங்களாக என்னென்ன செய்ய விரும்புகின்றீர்களோ, அவற்றை ஆங்கிலத்தில் "will" எனும் துணைவினையுடன் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

சிறிய அறிவுரை
உங்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்வி கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். அது கூடிய பயனை உங்களுக்குத் தரும்.

ஆங்கில இலக்கணம் படித்தோர்களில் பலர் கூறும் இன்னுமொரு விடயத்தையும் நாம் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது. அது ஆங்கில செய்திகள் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களை பார்க்கும் போது அதில் பேசுவதை, வாசிப்பதை தம்மால் புரிந்துக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது என்பதே. இன்னும் சிலர் இடைக்கிடை ஒரு சிலச் சொற்களைத் தவிர துப்பரவாக விளங்குகிறதே இல்லை என்று கூறுவோரும் உள்ளனர்.

சில ஆங்கில பாடப் புத்தகங்களில், குறிப்பாக "Spoken English" புத்தகங்களில் ஆங்கில உச்சரிப்பிற்காக கீழே கொடுக்கப் பட்டிருக்கும் தமிழை வாசித்து வாசித்து கடினப்பட்டு ஆங்கிலத்தை மனப்பாடம் செய்வதால் மட்டும் முழுமையான ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள முடியாது. சரியான ஆங்கில உச்சரிப்பைப் பெறுவதும் கடினம்.

இதற்கு நாம் கூறும் அறிவுரை என்னவெனில் ஆங்கிலத்தை தமிழில் பேசுவதுப் போன்று அதே தொனியில் ஆங்கிலம் பேசிப் பழகாதீர்கள் என்பதே.
உதாரணமாக "I am speaking in English" என்று கூறும்போது அதை "அயம் ஸ்பீக்கிங் இன் இங்கிலிஸ்" என்று ஒவ்வொரு சொல்லுக்கு சொல் இடைவெளி விட்டு பேசிப் பழகாமல், ஒரு வாக்கியத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒரே சொல்லாக “ஐயம்ஸ்பீக்கிங்கின்ங்கிலீஸ்” என்றுப் பேசிப் பாருங்கள். மிக எளிதாக உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள கூடியதாக இருக்கும். அதேவேளை ஆங்கிலேயர் (திரைப்படம், செய்திகள் உட்பட) பேசுவதையும் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். BBC போன்ற இணையத்தளங்களில் ஆங்கிலச் செய்திகளை காணொளி வடிவாக அல்லது ஒலி வடிவாகத் தொடர்ந்து கேட்டுவருவதும் பயனளிக்கும்.

BBC Business English இக் காணொளி தொடரினையும் பாருங்கள்.

உச்சரிப்பு (Pronunciation) பயிற்சி கருதி, இங்கே எமது வலைத்தளத்திலும் ஒரு ஆங்கிலப் பெண்மணியின் குரலில் ஒலிப்பதிவிட்டுள்ளோம். அவற்றையும் நீங்கள் கேட்டு பயிற்சி பெறலாம்.

ஆங்கில உரையாடல்களின் போது இலகுவாகவும் வேகமாகவும் பேசுவதற்கு ஆங்கில "short form" சுருக்க உச்சரிப்பு பயன்பாடுகள் முக்கியாமானது. எனவே நீங்களும் சிறப்பாக ஆங்கிலம் பேச விரும்புவராயின் இதுப் போன்ற "short form" முறைகளைப் பின்பற்றி ஆங்கிலத் தொனிக்கேற்ப பேசிப் பழகுங்கள்.

Affirmative short form: 

I will - I'll
You will - You'll
He will -
He'll
She will - She'll
It will - It'll
We will - We'll
You will - You'll
They will - They'll


Negative short forms:
இந்த எதிர்கால எதிர்மறையாக பயன்படும் துணைவினைகளின் "Short Forms" களை மூன்று விதமாக வகைப் படுத்தியுள்ளனர்.
I will not - I'll not - I won't
You will not - You'll not - You won't
He will not - He'll not - He won't
She will not - She'll not - She won't
It will not - It'll not - It won't
We will not - We'll not - We won't
You will not - You'll not - You won't

They will not - They'll not - They won't

"won’t" என்பது will + not இன் சுருக்கமாகும். (Short form of will + not)

"want" - "வேண்டும்" எனும் பொருளிலும் ஒரு சொல் இருப்பதால், இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். (இரண்டுக்கும் வேறுப்பாட்டை அவதானிக்கவும்.)

குறிப்பு:

ஆங்கிலத்தில் எதிர்காலச் சொற்பிரயோகங்களாக ஆறு வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது அவை:

1. Future “will”
2. Future “going to”
3. Present continuous used as future
4. Future Continuous
5. Future perfect simple
6. Future perfect continuous

இருப்பினும் நாம் இன்றையப் பாடத்தில் Future “will” சாதாரண எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கற்றோம். ஏனையவை எதிர்வரும் பாடங்களில் வரும்.

சாதாரண எதிர்காலம் Future "will"

இதன் பயன்பாட்டை மூன்று விதமாகப் பிரித்துப்பார்க்கலாம்.

1. எண்ணமிடல், நோக்கம், எதிர்ப்பார்ப்பு போன்றவற்றைக் கூறுதல்.

I will come tomorrow. - நான் வருவேன் நாளை
He will work with us. - அவர் வேலை செய்வார் எங்களுடன்.
I will win. - நான் வெற்றிப்பெறுவேன்.

2. முன்கூட்டியே ஒன்றை யூகத்தின் அடிப்படையில் கூறுதல்.

I think the Indian cricket team will win the match.
நான் நினைக்கிறேன் இந்தியன் கிரிக்கெட் குழு வெற்றி பெரும் ஆட்டத்தில்.

I think you will like her.
நான் நினைக்கிறேன் நீ விரும்புவாய் அவளை.

முதல் வாக்கியத்தைப் பாருங்கள் அதில் இந்தியன் கிரிக்கெட் குழு 100% வீதம் வெற்றிப்பெரும் என்று திட்டவட்டமாக கூறப்படவில்லை. எனவே அக்கூற்று நிச்சயமற்றது. ஆனால் எப்படியோ (யூகத்தின் அடிப்படையில்) வெற்றிப்பெரும் எனக் கூறப்படுகின்றது. இதை ஆங்கிலத்தில் "Future prediction" என்று கூறுவர். அதாவது தாம் நினைப்பதே நடக்கும் எனும் எதிர்ப்பார்ப்புடன் கூறுவதாகவும் கொள்ளலாம்.

இதுப் போன்ற நிச்சயமற்று கூறும் எதிர்கால வினையை வெளிப்படுத்த "will" உடன் அதிகமாக பயன்படும் சொற்கள் probably, possibly, I think, I hope.

3. மற்றும் இந்த "will" உறுதியளித்து அல்லது உறுதியை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

I will be there on time.
நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்தில்.

அதாவது குறித்த நேரத்திற்கு குறித்த இடத்தில் இருப்பேன் என்பதை முன்கூட்டியே உறுதியாகக் (promise) கூறப்படுகின்றது. (ஆனால் இருப்பாரா என்பதைத் தீர்மானிக்க முடியாது)

I promise, I will be there on time, don’t worry.
நான் உறுதியளிக்கிறேன், நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்திற்கு, கவலைப்பட வேண்டாம்.

வரைப்படம்

எமது ஆங்கிலம் வலைத்தளம் குறித்து சில வரிகள்
எமது இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்தச் சில மகிழ்வான வரிகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன். வலைத்தளங்களைப் பொருத்த மட்டில் ஒரு மாதத்திற்கு பலப் பதிவிடும் தளங்களே அதிகம். ஒவ்வொரு நாளும் பதிவிடும் தளங்களும் உள்ளன. ஒரே நாளைக்குப் பல பதிவிடுவோரும் உள்ளனர். ஒரு மாதத்திற்கு நூற்றுக்கணக்கானப் பதிவிடும் தளங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தளங்களிற்கான வருகையாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், பதிவிடும் நாட்களில் மட்டுமே (திரட்டிகளூடாக) அதிகமான வருகைகள் இருக்கும். (சிலத் தளங்கள் அப்படியல்ல.)

ஆனால் இத்தளத்தில் இப்பதிவோடு சேர்த்து இதுவரை 13 பதிவுகள் மட்டுமே இடப்பட்டுள்ளன. கடந்தப் பதிவு (23 மே 2008) இட்டப் பொழுது வாசகர்களின் வருகை எண்ணிக்கை 11,000 அளவிலேயே இருந்தது. (கிட்டத்தட்ட ஒரு மாதம்) 27 நாட்களுக்குப் பின் இன்று இப்பதிவிடும் இடைவெளிக்குள் இதன் எண்ணிக்கை 21,000 யிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கின்றது. 2008 யூன் 6 ம் திகதி இந்த ஆங்கிலம் வலைத்தளம் குறித்து PKP அவர்கள் தனது பதிவில் அறிமுகப்படுத்திய அன்று வருகையாளர்களின் எண்ணிக்கை "1000" த்தை தாண்டியது.

இந்த “ஆங்கிலம்” வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களே ஆகின்றது. இந்த வலைத்தளத்தை மற்ற வலைத்தளங்களோடு ஒப்பிடுகையில் பின்னூட்டங்கள் வருவது மிக மிகக் குறைவு. ஆனால் இத்தளத்திற்கான வருகையாளரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதை Traffic Statistics காட்டுகின்றது.
இக் கால இடைவெளிக்குள் கிட்டத்தட்ட 200 க்கும் அதிகமானோர் Subscribers மின்னஞ்சல் ஊடாக பாடப் பயிற்சிகளை பெற்றுவருகின்றனர். தவிர மின்னஞ்சல் ஊடாக கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதில் ஒரு விடயம் நிதர்சனமாகிறது. இன்றைய காலக்கட்டத்தின் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை மக்கள் நன்குணர்ந்தே உள்ளனர்.

இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்து தமது தளத்தில் முதலில் பதிவிட்டு அறிமுகப்படுத்தியவர் சிறில் அலெக்ஸ். இவரைப் போன்று இன்னும் பல சகப் பதிவர்கள் நண்பர்கள் இத்தளத்தை ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் எனது நன்றிகள். வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக தொடுப்பு கொடுத்துள்ளோருக்கும் மிக்க நன்றிகள்.

திரட்டிகள் என்று கூறுகையில் அநேகமாக ஒரு பதிவு ஒரு சில மணித்தியாளங்களே நிலைத்து நிற்கின்றது. ஆனால் தமிழ்வெளி திரட்டியில் என்று பார்த்தாலும் இந்த ஆங்கிலப் பாடப் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்து (எமது சமுதாய வளர்ச்சியின் நலனை முன்னிட்டு என நினைக்கின்றேன்) காண்பிக்கப் படுகின்றது. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலும் இங்கே நான் தனித்து பதிவிட்டாலும், இச்சிறு முயற்சிக்கு வருகையாளரான உங்கள் அனைவரது ஆதரவும், சக வலைப்பதிவர்களின் ஊக்குவிப்பும், பாராட்டுக்களுமே என்னை மென்மேலும் ஊக்கத்துடன் எழுதத் தூண்டுகின்றன. மேலும் எனது பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் எனும் உத்வேகத்தையும் என்னுள் உண்டுப் பன்னுகின்றன.

கிட்டத்தட்ட 8 கோடித் தமிழர்கள் வாழும் இவ்வுலகில், பாதிப் பேராவது ஆங்கிலம் கற்றுச் சிறந்தால் எமது எதிர்காலச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை எவராலும் தடுக்க முடியாது. எமது எதிர்பார்ப்பு இப்பாடத் திட்டம் அனைத்து தமிழர்களையும் சென்றைடைய வேண்டுமென்பதே ஆகும். முடிந்தவரையில் எனது பணியை எனது சிற்றறிவுக்கு எட்டியவகையில் சிறப்புடன் செய்ய விளைக்கின்றேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்.

"செருப்பு இல்லாதவன் கால் இல்லாதவனைப் பார்த்த ஆறுதல் அடைய வேண்டும்" என்பது இயலாமைக்கு கூறும் ஆறுதல் வார்த்தையாகும். ஆனால் இன்றைய உலகம் ஒரு ஓட்டப் பந்தயம் போன்றது. முன்னே ஒடுபவன் பின்னே வருபவனை திரும்பிப் பார்க்கும் கணப்பொழுதிலும் பின்னே உள்ளவன் முன்னே உள்ளவனை முந்திவிடுவான். எனவே ஓடுங்கள்! ஓடுங்கள்!! பின்னே வருபவனை முந்த விடாது ஓடுங்கள். முன்னே ஒடிக்கொண்டிருப்பவனையும் முந்துவதற்கு ஓடுங்கள். உங்கள் வெற்றியில் தான் எமது சமுதாய வெற்றித் தங்கியுள்ளது. வெற்றிக்கொடியை நாட்டுங்கள். அது தமிழனது கொடியாக இருக்கட்டும்! அவ்வெற்றி கல்வியின் ஊடாக கிட்டட்டும்!

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF