ஆங்கில இணைப்புச் சொற்கள் (Conjunctions)

AANGILAM : Types of Conjunctions in English with Tamil Explanation
ஆங்கிலம்: இணைப்புச் சொற்களின் வகைகள் 
ஆங்கில இணைப்புச்சொற்கள் என்றால் என்ன
?

ஆங்கில இணைப்புச் சொற்கள் என்றால், ஆங்கில பேச்சின் கூறுகளில் உள்ளடங்கும் எட்டுக் கூறுகளில் ஒன்றாகும். இவை சொற்கள் (words), சொற்றொடர்கள் (Phrases), மற்றும் வாக்கியக் கூறுகள் (clauses) போன்றவற்றை இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் ஆகும்வாக்கிய கூறுகளை இணைத்து நீண்ட ஒரு வாக்கியமாக அல்லது வாக்கிய தொடராக பொருளை உணர்த்த இந்த இணைப்புச்சொற்கள் ஆங்கில இலக்கணப் பயன்பாட்டில் மிக முக்கியமானவைகளாகும்.

இணைப்புச்சொற்கள் பயன்படு முறைகள்


இணைப்புச்சொற்கள் எவ்வாறு எத்தனை முறைகளில் பயன்படுகின்றன?
இவை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கிய கூறுகளை இணைக்க; தனித்த ஒற்றைச் சொல், கூட்டுச் சொற்கள், இடமாறி பயன்படும் சொற்கள் என மூன்று முறைகளில் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

தனித்த ஒற்றைச் சொல்:
  • and
  • for
  • because
கூட்டுச் சொற்கள்
  • as long as
  • in order that
  • provided that
இடம் மாறி பயன்படும் சொற்கள்
  • so ... that
  • either ... or
  • not only ... but also

இணைப்புச் சொற்களின் வகைகள்


ஆங்கிலத்தில் எத்தனை வகையான இணைப்புச் சொற்கள் உள்ளன?

ஆங்கிலத்தில் நான்கு வகையான இணைப்புச்சொற்கள் உள்ளன. அவைகளாவன:
  • Coordinating Conjunctions
  • Subordinating Conjunctions
  • Correlative Conjunctions
  • Conjunctive Adverbs

குறிப்பு:

ஆங்கில இணைப்புச் சொற்களின் வகைகளை மூன்றாக மட்டுமே  வகைப்படுத்துவோரும் உளர். இருப்பினும் "Conjunctive Adverbs" களும் வாக்கிய கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் அவற்றையும் இணைப்புச் சொற்களாகவே பல ஆங்கில இலக்கணவாதிகள் வகைப்படுத்துகின்றனர். எனவே நாமும் இங்கே நான்காகவே வகைப்படுத்தியுள்ளோம் என்பதைக் கருத்தில் கொள்க.

இனி இவ்விணைப்புச் சொற்களின் பயன்பாட்டை ஒவ்வொன்றாக கீழே பார்ப்போம்.

Coordinating Conjunctions (ஒருங்கிணைப்பு இணைப்புச்சொற்கள்)


ஒருங்கிணைப்பு இணைப்புச் சொற்கள், வாக்கியங்களில் ஒரே சமனிடையான "சொற்கள்”, "சொற்றொடர்கள்”, "வாக்கியக்கூறுகள் " போன்றவற்றை ஒருங்கே இணைக்கப் பயன்படும் சிறிய சொற்கள் ஆகும்.

இதனை "ஒருங்கிணைப்புச் சொற்கள்" என சுருக்கமாகவும் கூறலாம்.

அவையாவன:
  • F = For
  • A = And
  • N = Nor
  • B = But
  • O = Or
  • Y = Yet
  • S = So
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

I like bread and butter.
நான் உரொட்டியும் வெண்ணையும் விரும்புகிறேன்.

I like tea, but I don't like coffee.
நான் தேனீர் விரும்புகிறேன், ஆனால் எனக்கு காப்பி விருப்பமில்லை.

How to speak English and how to write in English are two different things.
எப்படி ஆங்கிலம் பேசுவது (என்பதும்) எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது (என்பதும்) இரண்டு வெவ்வேறு விடயங்கள்.

குறிப்பு: ஆங்கிலத்தில் ஒருங்கிணைப்புச் சொற்கள் 7 மட்டுமே உள்ளன. இவற்றை எளிதாக மனதில் பதித்துக்கொள்வதற்கு இச்சொற்களின் முதலெழுத்துக்களை இணைத்து FANBOYS என ஒரு சுருக்கப்பெயராக (Acronyms) ஆங்கிலேயர் பயன்படுத்துவர். நாமும் இவற்றை அவ்வாறே மனதில் இருத்திக்கொள்ளவோம்.

மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Subordinating Conjunctions (சார்ந்த இணைப்புச்சொற்கள்)


"சார்ந்த இணைப்புச்சொற்கள்" எப்போதும் முதன்மை வாக்கிய கூற்றையும் (Independent Clause) சார்ந்த வாக்கிய கூற்றையும் (Dependent Clause) இணைக்க பயன்படுபவை ஆகும். ஆங்கிலத்தில் இவை நூற்றுக் கணக்க்கில் உள்ளன.
  • after
  • although
  • as long as
  • as soon as
  • even though
  • before
  • if
  • how
  • since
  • than
  • that
  • when
  • where
  • whether
  • while
  • whenever
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

If I do a job, I will get experience.
நான் ஒரு வேலை செய்தால் எனக்கு கிடைக்கும் அனுபவம்.

I will get experience if I do a job.
எனக்கு கிடைக்கும் அனுபவம் நான் செய்தால் ஒரு வேலை.

Although he is small, he is very strong.
அவன் சிறியவனாக இருந்தப்போதிலும், அவன் மிகவும் வலுவானவன்.

I will be able to buy a car when I get older.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஒரு மகிழுந்து நான் வயதானவனாகும் பொழுது.

குறிப்பு: சார்ந்த இணைப்புச்சொற்கள் எப்போதும் சார்ந்த வாக்கிய கூற்றின் (Subordinate Clause) முன்னாலேயே பயன்படும்.

மேலும் விரிவாக இப்பாடத்தை எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Correlative Conjunctions (ஒப்புமை இணைப்புச்சொற்கள்)


ஒப்புமை இணைப்புச்சொற்கள் இரண்டு சமனிடையான வாக்கியங்களை ஒப்புமையுடன் இணைக்கும் சொற்களாகும். இவ்விணைப்புச் சொற்கள் சோடிகளாகவே பயன்படும்.
  • both ... and
  • so ... as
  • not ... but
  • not only ... but also
  • either ... or
  • neither ... nor
  • whether ... or
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:

Neither cats nor dogs are my favorite animals.
பூனைகள் நாய்கள் இரண்டுமே எனது விருப்பு மிருகங்கள் அல்ல.

Today, it is not only warm but also humid.
இன்று சூடாக மட்டுமல்ல ஈரப்பதமாகவும் கூட உள்ளது.

I want both a computer and a iPad.
எனக்கு கணனி மற்றும்  ஐபேட் இரண்டும் வேண்டும்.

Sarmilan is either playing cricket with his friends or studying.
சர்மிலன் இரண்டிலொன்று அவனது நண்பர்களுடன் துடுப்பாட்டம் விளையாடிக்கொண்டிருப்பான் அல்லது படித்துக்கொண்டிருப்பான்.

மேலும் இப்பாடத்தை விரிவாக எதிர்வரும் நாட்களில் பார்ப்போம்.

Conjunctive Adverbs (இணைப்பு வினையெச்சங்கள்)


இணைப்பு வினையெச்சங்கள் இரண்டு முதன்மை வாக்கிய கூறுகளை (Main Clauses) இணைப்பவையாகவே இருக்கும்; அதாவது "ஒருங்கிணைப்புச் சொற்கள்" போன்றேபயன்படும். ஆனாலும் சற்று வேறுபட்டது.

அதாவது தமிழில்  "அதனால்", எப்படியானாலும்", "இதுதொடர்பாக" போன்ற சொற்களைப் பயன்படுத்தி இரண்டு வாக்கியங்களை இணைக்கும் முறைக்கு ஒத்ததாகவே இவை இருக்கும்.
  • accordingly
  • consequently
  • finally
  • furthermore
  • however
  • similarly
  • therefore
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்.

I wanted to buy a shirt; however, It was too expensive.
எனக்கு ஒரு சட்டை வாங்க வேண்டும்; எனினும், அதன் விலை மிகவும் கூடுதலாக இருந்தது.

David went to market; however, he didn't buy anything.
இடேவிட் சந்தைக்கு சென்றார்; இருப்பினும், அவர் எதனையும் வாங்கவில்லை.

Sarmilan was tired. Therefore, he immediately took a nap when he got home.
சர்மிலன் களைப்பானான். அதனால், அவன் வீட்டிற்கு சென்ற உடன் ஒரு சிறுநித்திரை (கொண்டான்) எடுத்தான்.

குறிப்பு: இனைப்பு வினையெச்சங்கள் என்பவை ஒருவகையில் வினையெச்சங்கள் தான். இருப்பினும் அவை வாக்கிய கூறுகளை இணைக்கப் பயன்படுவதால் "இணைப்பு வினையெச்சங்கள்" என்றழைக்கப்படுகின்றன.

மேலும் விரிவாக இப்பாடத்தை விரைவில் பார்ப்போம்.

கவனிக்கவும் 

நாம் ஆங்கில பாடப் பயிற்சி 01ல் வாக்கியங்கள் எவ்வாறு அமைகின்றன, அவற்றை எவ்வாறு அமைத்து பயிற்சி செய்யவேண்டும் என்பதற்கான எளிதான வழிமுறைகளை வழங்கியிருந்தோம். அப்பாடத்தில் நாம் வழங்கிய வீட்டு பாடப் பயிற்சிகளை முறையாக பயின்ற எவருக்கும் ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று நம்புகின்றோம். புதிதாக தளத்திற்கு வந்தோர் ஒரு முறை பார்த்துக்கொள்ளவும். இன்றைய பாடம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட வாக்கிய கூறுகளை இணைத்து பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆங்கில இலக்கணம் கற்போர் இவற்றை முறையாக விளங்கிக் கற்றுக்கொண்டீர்களானால், சரியாகவும் இலக்கணப் பிழையின்றியும் வாக்கிய கூறுகளை எளிதாக இணைத்து பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். 

தொடர்புடையப் பாடங்கள்:


இப்பாடம் தொடர்பான ஏதேனும் ஐயங்கள் கேள்விகள் இருந்தால் இப்பாடத்தின் பின்னூட்டத்தின் ஊடாக கேட்கவும். இப்பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளானால் ஆங்கிலம் கேள்வி பதில் பகுதியில் கேட்கவும்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு (HK Arun)

Facebook | Twitter | Pinterest | Google Plus Download As PDF

ஆங்கிலம் துணுக்குகள் (with my eyes closed)

சர்மிலனின் வீட்டடியில் ஒருவரின் மகிழுந்து பழுதடைந்துவிட்டது. பக்கத்தில் வாகனத் திருத்தகங்களும் இல்லை. மகிழுந்தில் வந்தவருக்கோ எங்கோ எதற்கோ அவசரமாக செல்லவேண்டிய நிலை. மகிழுந்து திடீரென பழுதடைந்து விட்டதால் ஒன்றும் செய்வதறியாது தடுமாற்றமடைந்தார். 

அப்போது அவ்வழியே வந்த சர்மிலனின் மாமா அவருக்கு உதவி செய்ய விரும்பி, சர்மிலனை அழைத்து, அந்த மகிழுந்தை அவசரமாக திருத்திக்கொடுக்கும் படிக் கூறினார். 

சர்மிலனைப் பார்த்த அவரோ திகைத்துப் போய், "என்ன உந்தச் சின்னப் பெடியன் உந்த காரை திருத்திடுவானோ?!” என வியப்புடன் கேட்டார்.

சர்மிலனின் மாமா, "உவன் சின்னப் பெடியன் எண்டு நினையாதையுங்கோ; உவனுக்கு உந்த வாகனங்களை கழட்டிப் பூட்டிறது எல்லாம் கைவந்த கலை. உவன் கண்ணை மூடிக்கொண்டு செய்வான்.” ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ, என்றார். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில்.
Download As PDF

தொலைபேசி ஆங்கிலம் (Asking for Someone)

இப்பாடம் "ஆங்கில அழைப்பேசி: பயனுள்ள சொற்றொடர்கள்" எனும் பாடத்தின், தமிழ் பொருள் விளக்கத்துடன் வழங்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும். ஏற்கெனவே வழங்கப்பட்டவைகளை கீழுள்ள இணைப்புகள் ஊடாகப் பார்க்கலாம். 
  • Answering the phone
  • Introducing yourself
  • Asking who is calling
  • Asking for someone (இன்றையப் பகுதி)
  • Receiving wrong number
  • Connecting someone
  • Asking the caller to wait
  • Giving negative information
  • Leaving / Taking a message
  • Checking the information
  • Telephone problems
  • Finishing a conversation
Asking for Someone

Download As PDF

அழைப்பேசி ஆங்கிலம் (Asking who is calling)

இப்பாடம் நாம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆங்கில அழைப்பேசி: பயனுள்ள சொற்றொடர்கள் எனும் பாடத்தினை தமிழ் பொருள் விளக்கத்துடன் (பலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க) பகுதிகளாக வழங்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க. கீழுள்ள தலைப்புகளைச் சொடுக்கிப் பார்வையிடுங்கள்.
  • Answering the phone
  • Introducing yourself
  • Asking who is calling
  • Asking for someone
  • Receiving wrong number
  • Connecting someone
  • Asking the caller to wait
  • Giving negative information
  • Leaving / Taking a message
  • Checking the information
  • Telephone problems
  • Finishing a conversation
Download As PDF

அழைப்பேசி ஆங்கிலம் (Introducing yourself)

இப்பாடம் நாம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆங்கில அழைப்பேசி: பயனுள்ள சொற்றொடர்கள் எனும் பாடத்தினை தமிழ் பொருள் விளக்கத்துடன் (பலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க) பகுதிகளாக வழங்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க. கீழுள்ள தலைப்புகளைச் சொடுக்கிப் பார்வையிடுங்கள்.
  • Answering the phone
  • Introducing yourself
  • Asking who is calling
  • Asking for someone
  • Receiving wrong number
  • Connecting someone
  • Asking the caller to wait
  • Giving negative information
  • Leaving / Taking a message
  • Checking the information
  • Telephone problems
  • Finishing a conversation
Download As PDF

அழைப்பேசி மொழி (Answering the phone)

இப்பாடம் நாம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆங்கில அழைப்பேசி: பயனுள்ள சொற்றொடர்கள் எனும் பாடத்தினை தமிழ் பொருள் விளக்கத்துடன் பகுதிகளாக வழங்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க.

தொலைப்பேசி உரையாடலின் போது இலக்கங்களை சுழட்டி/அழுத்தி அழைப்பை ஒருவர் மேற்கொண்டாலும் அவர் மறுமுனையின் மறுமொழிக்காக காத்திருப்பவராகவே இருப்பார். எனவே அழைப்பேசி அழைப்பொலியை கேட்டு அழைப்பை பெறுபவரே உரையாடலின் ஆரம்பம் ஆவார். முதலில் ஆரம்ப உரையாடல் சொற்றொடர்களைப் பார்ப்போம்.

Telephone: Useful English Phrases Part 1

Answering the phone
Download As PDF

Telephone Conversation (More Formal Situation)

  1. தொலைபேசி உரையாடல் (Telephone Language) எனும் இந்த ஆங்கிலப் பேச்சு பயிற்சியில், சர்மிலன் மற்றும் அவரது நண்பர் டேவிட் என இருவர் சாதாரண பேச்சு வழக்கில் (Informal Situation) உரையாடுவது போன்ற உரையாடலை எடுத்துக்காட்டாக முதல் பகுதியில் பார்த்தோம்.

  2. இரண்டாம் பகுதியில் சர்மிலன் என்பவருடன் தொடர்புகொள்ள அவரது பணியகத் தொலைபேசியில்,  டேவிட் மற்றும் தொலைபேசியாளினி இருவருக்கும் இடையிலான ஒரு முறையான (Formal Situation) உரையாடலை எடுத்துக்காட்டாக பார்த்தோம்.

  3. இன்று எடுத்துக்காட்டாக ஒரு வணிகம் தொடர்பான உரையாடலை (மிகவும் முறையுடனான வழக்கில் (More Formal Situation)) பார்ப்போம். அநேகமாக இவ்வாறான வணிகம் சார்ந்த உரையாடல்கள் மிகவும் முறையுடனான வழக்கிலேயே இடம்பெறுவது வழக்கம். எனவே இவ்வுரையாடலை வணிக ஆங்கிலம் (Business English) எனும் பகுப்புக்குள்ளும் உள்ளடக்கலாம்.
Download As PDF

தொலைபேசி உரையாடல் (Formal Situation)


தொலைபேசி உரையாடல் பாடத்தில் நாம் கடந்தப் பகுதியில் (Informal Situation)  உரையாடல் வழக்கினைப் பார்த்தோம். இப்பகுதியில் ஒரு முறையான உரையாடல் (Formal Situation) எவ்வாறு அமைகிறது என்பதைப் பார்ப்போம்.

இங்கே டேவிட் என்பவர் தனது நண்பர் சர்மிலனை தொடர்புகொள்ள அவரது பணிமனைக்கு அழைப்புவிடுக்கிறார். அப்போது தொலைபேசியில் தொலைபேசியாளினிக்கும் (Telephonist) டேவிட்டிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் எவ்வாறு அமைகிறது என்பதை கவனியுங்கள்.

இது ஒரு எடுத்துக்காட்டு உடையாடல் மட்டுமே ஆகும்.

Formal Situation

Telephonist: Good morning, ABSC office, how can I help you?
வணக்கம், ABSC பணியகம், நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்?
David: Hello, could I speak with Mr. Sarmilan please?
ஹலோ, தயவுசெய்து எனக்கு சர்மிலன் அவர்களுடன் பேச முடியுமா?
Download As PDF

அழைப்பேசி உரையாடல் (Informal Situation)

How to talk on the phone in English?

இன்று தொலைபேசி இல்லாவிட்டாலும் அழைப்பேசி இல்லாதவர்களே இல்லையெனும் நிலையாகிவிட்டது. இது இன்று நமது வாழ்வில் ஒரு அத்தியாவசியப் பொருள் எனும் இடத்தையும் பிடித்துவிட்டது. இருப்பினும் அழைப்பேசியில் எப்படி பேசுவது எனும் நடத்தை நெறிகளை பொதுவாக எம்மில் அதிகமானோர் கருத்தில் கொள்வதில்லை.

ஆனால் ஆங்கிலத்தில் தொலைப்பேசியில் உரையாடும் போது முறையற்ற (சாதாரண) (Informal ) உரையாடல் வழக்கு, முறையான உரையாடல் வழக்கு (Formal), மிகவும் முறையுடனான உரையாடல் வழக்கு (More Formal) எனும் நடத்தை நெறிகள் (Telephone etiquette) பின்பற்றப்படுகின்றன. சிறந்த தொலைப்பேசி நடத்தை நெறியுடன் பேசுதல் ஒரு தகமையாகவும் பார்க்கப்படுகிறது.

ஆங்கிலம் பேசத் தெரிந்தும் சில முக்கியமான அழைப்பேசி உரையாடலின் போது எவ்வாறு பேசுவது என்பதனை அறியாமல் சிரமப்படும் பலரையும் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கிறது. எனவே இவற்றை நாம் முறையாகவும் முழுமையாகவும் இப்பாடத்தில் பார்ப்போம்.

கவனிக்கவும்: இப்பாடத்தின் நீளம் கருதி இப்பாடம் ஏழு பகுதிகளாக வரும் என்பதை அறியத்தருகின்றோம்.

1. Informal Situation (முறையற்ற (சாதாரண) சூழ்நிலை உரையாடல்)
2. Formal Situation (முறையான சூழ்நிலை உரையாடல்)
3. More Formal Situation (மிகவும் முறையுடனான சூழ்நிலை உரையாடல்)
4. Telephone Language: Useful English Phrases (அழைப்பேசி மொழி: பயன்மிக்கச் சொற்றொடர்கள்)
5. Vocabulary (சொல்வளம்)
6. Telephone Etiquette (தொலைபேசி நடத்தை நெறி)
7. Tips (உதவிக்குறிப்புகள்
Download As PDF

ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time)

கால ஓட்டமும் உலக ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றது. காலவோட்டத்திற்கு ஏற்ப எமது வாழ்க்கை ஓட்டமும் ஓடிக்கொண்டே இருக்கின்றது. காலத்தை கணக்கிட்டு எமது கடமைகளை உரிய நேரத்தில் செய்ய கடிகாரம் எனும் நேரம் காண்பிப்பான் எப்போதும் எமக்கு தேவையாகவே இருக்கின்றது. நேரக் கணிப்பான் இல்லாவிட்டால் எதனையும் உரிய நேரத்தில் செய்ய தவறிவிடுவோம்.

நிழலை அளந்து நேரம் அறிந்து வந்த எம்மூதாதையர் காலப் பழக்கம் 19ம் நூற்றாண்டுகளில் கடிகாரம், கைக்கடிகாரம் போன்ற இலத்திரனியல் கண்டுப்பிடிப்புகளால் மெல்ல மறையத்தொடங்கியது. கைக்கடிகாரமும், கடிகாரமும் கூட 20ம் நூற்றாண்டுகளில் மறையத் தொடங்கி அழைப்பேசியிலேயே நேரம் பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. ஆம்! உலக அறிவியல் எத்தனை வேகமாக வளர்ந்து வருகிறது! அறிவியல் உலகம் எல்லாவற்றையுமே அவசரமாக்கி விட்டுள்ளது. பேருந்துக்கு அவசரம், தொடருந்துக்கு அவசரம், பணியகத்திற்கு செல்ல அவசரம், நேர்முகத் தேர்வுக்கு நேரம் பிந்திவிடுமோ என்றும் அவசரம், நேரம் சற்றுப் பிந்திவிட்டால் அதனாலான இழப்புகளும் அதிகம். எனவே எப்போதும் நேரம் பார்த்துப்பார்த்து பணி செய்யப் பழகிவிட்டோம். சில வேளை இந்த நேரம் காண்பிப்பான் நம்மிடம் இல்லை என்றால் என்ன செய்வது? யாராவது முன் பின் தெரியாத ஒருவரிடம் என்றாலும் நேரத்தை கேட்டறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எல்லோருக்குமே ஏற்படக்கூடியது தான்.

சரி! அப்படியானால் ஆங்கிலத்தில் எப்படி நேரம் கேட்டறிவது எனப் பார்ப்போமா?
Download As PDF

ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஒரு சொல் (One-letter English words)

தமிழில் "ஓரெழுத்து ஒரு மொழி" என்று நீங்கள் பாடசாலையில் கற்றிருப்பீர்கள். அதாவது "தீ நெருப்பு, "போ" செல், "தை" தை மாதம் போன்ற சொற்கள் ஒரெழுத்து ஒரு சொற்களாகும். ஆனால் ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஓர் சொல் எத்தனை இருக்கின்றன தெரியுமா?

சரி! இப்பாடத்தில் பார்ப்போம்.

A: ஒரு அல்லது ஒன்று என்பதை குறிக்கப் பயன்கிறது.
I: நான் என பயன்படுகிறது.
O: கவிதையியலில் பயன்படும் ஒரு வியப்பிடைச் சொல்.

குறிப்பு 1: "I" (நான்) எனும் எழுத்தையும், "O" எழுத்தையும் கெப்பிட்டல் எழுத்தில் மட்டுமே எழுதவேண்டும்.

குறிப்பு 2: இலத்தீன் மொழி வழக்கில் "O" எழுத்தை ஒரு வியப்பிடைச் சொல்லாக கவிதையியல் பயன்படுத்தப்படுகின்றது; ஆங்கில மொழி இலத்தின் மொழியையும் தன்னகத்தே கொண்டு உருவான மொழி என்பதால் அப்பயன்பாடே ஆங்கிலத்திலும் காணப்படுகின்றது.

இந்த மூன்று ஓரெழுத்து ஒரு சொல் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால்...
Download As PDF

ஆங்கிலம் துணுக்குகள் 26 ( Yes, Yap, Yeah...)

தமிழில் ஆமோதித்தல் எனும் சொல்லை ஒட்டி, "ஆம்" எனும் சொல் வினையெச்சமாகவும், பெயர்ச்சொல்லாகவும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் பேச்சு வழக்கில் இச்சொல் திரிந்து தமிழக மற்றும் கொழும்பு தமிழர் பேச்சு வழக்கில் "ஆமா" என்றும், இன்னும் சிலரால் "ஆ" எனும் ஒலியை மட்டுமே எழுப்பும் வழக்காகவும், இலங்கை தமிழ் பேசும்
இஸ்லாமியர் பேச்சு வழக்கில் "ஓ" என்றும், இலங்கை யாழ்ப்பாணத்தமிழர் பேச்சு வழக்கில் "ஓம்" என்றும் புழக்கத்தில் உள்ளது. இவ்வாறு இச்சொல் பேச்சு வழக்கில் பல்வேறு வடிவில் திரிபடைந்து பயன்பட்டப்போதும், சரியானச் சொல் "ஆம்" என்பதே ஆகும்.

இந்த "ஆம்" எனும் சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் "Yes" என்பதாகும். ஆனால்...

ஆங்கிலப் பேச்சு வழக்கில்
தமிழில் "ஆம்" எனும் சொல், பேச்சு வழக்கில் ஆமா, ஆ, ஓ, ஓம் என பல்வேறு வடிவில் பயன்படுவதுப் போன்றே, ஆங்கிலத்தில் "yes" எனும் சொல்லும் பேச்சு வழக்கில் பல்வேறு வடிவில் பயன்படுகின்றன. அவைகளாவன:
Download As PDF

ஆங்கிலம் துணுக்குகள் 25 (Cows and Bulls)

வணக்கம் உறவுகளே! இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஒரு சுவையான ஒரு துணுக்குத் தகவலைப் பார்ப்போம்.

கால்நடைகளான மாடுகளின் பெண் இனத்தைக் குறிக்க "பசு" எனும் பெயர்ச்சொல்லும், ஆண் இனத்தை குறிக்க "காளை" எனும் பெயர்ச்சொல்லும் தமிழில் புழக்கத்தில் உள்ளன. அவற்றை பன்மையில் குறிப்பிடுவதாயின் "பசுக்கள்" என்றும் "காளைகள்" என்றும் குறிப்பிடுவோம். ஆங்கிலத்தில் இவற்றிற்கு இணையான பயன்பாடாக "cows" மற்றும் "bulls" எனும் பெயர்ச் சொற்கள் உள்ளன.

அதேவேளை ஆணினம் பெண்ணினம் என பாலினத்தை வேறுபடுத்திக் கூறாமல், பொதுப்படையாக கூறுவதாயின் "மாடு" எனும் பெயர்ச்சொல் தமிழில் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று அதற்கு இணையான ஒரு பெயர்ச்சொல் ஆங்கிலத்தில் இருக்கிறதா, என்றால், பதில் "இல்லை" என்பது தான். அதாவது
Download As PDF

ஆங்கில "இயல்கள்" (Suffix "ology")

இன்றையப் பாடத்தில் "ology" எனும் எழுத்துக்கள் பின்னொட்டாக இணைந்து பயன்படும் சொற்கள் 80 வழங்கப்பட்டுள்ளன. இந்த "ology" பின்னொட்டு மூலச்சொற்களுடன் இணைந்து புதியச் சொற்களாக மாறும் போது அவற்றின் பொருள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை இன்று பார்க்கலாம். இவை உங்களின் ஆங்கில மொழியின் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ள உதவும். அதேவேளை ஆர்வமுள்ளோர் ஆங்கில வேர்ச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் இணைந்து எவ்வாறு புதியச் சொற்பிறப்பை ஏற்படுத்துக்கின்றன எனும் ஆய்வறிவையும் வளர்த்துக்கொள்ளலாம். அத்துடன் இச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன; இவை ஆங்கில சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ளூம் அதேவேளை அச்சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்களை அறிந்துக்கொள்ள உதவும்.

இந்த "ology" பின்னொட்டு தொடர்பான விளக்கம், பயன்பாடு மற்றும் குறிப்பு போன்றனவும் கீழே வழங்கப்பட்டுள்ளன.
Download As PDF

ஆங்கிலம் துணுக்குகள் 24 (1 to 10 letter words)

வணக்கம் உறவுகளே! மிகவும் அதிகமான இடைவெளிக்குப் பின் இந்த துணுக்குப் பாடம் வருகிறது. இது எமது வழமையான ஆங்கில பாடப் பயிற்சிகளில் ஒன்றல்ல. இது ஆங்கிலேயர் மத்தியில் அடிக்கடிப் பயன்படும் அறிவுறுத்தல் சொல்லாடல்களில் ஒன்றாகும். இச்சொல்லாடல்கள் ஒன்றிலிருந்து பத்து வரையிலான எழுத்துக்களை கொண்டு அறிவுறுத்தல்களாகவும் சுவராசியமாகவும் வழங்கப்படுகின்றன. இச்சொற்றொடர்கள் எளிதாக மனதில் இருத்திக்கொள்ளக் கூடியவைகள் என்பதால் இங்கே உங்களுக்காக!


The most selfish 1 letter word "I" Avoid it.
ஆங்கிலத்தில் சுயநலமிக்க ஓரெழுத்துச் சொல் “நான்” அதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

The most satisfying 2-letter word "WE" Use it.
ஆங்கிலத்தில் மிகவும் மனநிறைவைத் தரும் ஈரெழுத்துச் சொல் “நாம்” அதனை பயன்படுத்துங்கள்.

The most poisonous 3-letter word "EGO" Kill it.
Download As PDF

ஆங்கில "வாதங்கள்" (Suffix "isms")

நாம் கடந்தப் பாடத்தில் ஆங்கிலப் பின்னொட்டுகளின் அட்டவணையைப் பார்த்தோம். அதில் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டிருந்த ஒவ்வொரு சொற்கள் தொடர்பிலும், ஒவ்வொரு பாடமாக எதிர்வரும் பாடங்களில் எதிர்பார்க்கலாம் என அறியத்தந்திருந்தேன். அதன்படி இன்றையப் பாடத்தில் "ism" என்ற எழுத்துக்கள் பின்னொட்டாக வரும் 50 சொற்களைப் பார்ப்போம். அத்துடன் இச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த "ism" எனும் எழுத்துக்கள் பின்னொட்டாக வரும் சொற்கள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. இச்சொற்கள் அநேகமாக பெயர்ச்சொற்களாகவே இருக்கும்.

புதிதாக இந்த ஆங்கிலம் தளத்திற்கு வருகைத்தந்துள்ளோர் தயவுசெய்து முதலாம் பாடத்தில் இருந்து தொடங்கவும்.

உங்களிடம் யாராவது ஆங்கிலத்தில் "isms" சொற்கள் எத்தனை தெரியும் என்றால், ஆகக்குறைந்தது ஒரு 50 சொற்களாவது அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா!

அப்படியானால் இவற்றைப் பாடமாக்கிக் கொள்ளுங்கள்.
Download As PDF

ஆங்கிலப் பின்னொட்டுக்கள் (List of Suffixes)

பின்னொட்டு (Suffix) என்பது ஒரு மூலச் சொல் அல்லது வேர் சொல்லின் பின் ஒட்டாக இணைந்து பயன்படும் எழுத்துக்கள் ஆகும். அதனாலேயே "பின்னொட்டு" என்று அழைக்கப்படுகிறது; சிலர் "விகுதி" என்றும் அழைப்பர். இந்த பின்னொட்டுக்கள் தனித்து பயன்படுவதில்லை. இவை குறிப்பாக ஒரு மூலச் சொல்லுடன் இணைந்து, மூலச் சொல்லின் பொருளில் இருந்து மாறுபட்டு வேறொரு பொருளைத் தரும் சொற்களாக பயன்படுவன ஆகும். இவ்வாறான பின்னொட்டுக்கள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. பொதுவாக அதிக புழக்கத்தில் இருக்கும் 120 பின்னொட்டுக்கள் இந்த அட்டவணையில் உற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினூடாக பின்னொட்டுக்கள் எவ்வாறு ஒரு மூலச்சொல்லுடன் இணைந்து புதிய சொல்லாக மாறுபடுகின்றன என்பதைக் காணலாம். அத்துடன் ஒரு மூலச் சொல்லின் பொருளில் இருந்து எவ்வாறான பொருள் தரும் சொற்களாக அவை மாற்றமடைகின்றன என்பதையும் உணரலாம்.

இனி அட்டவணையைக் கவனியுங்கள்.

அட்டவணையில் உள்ள பின்னொட்டுகளுடன் தொடர்புடைய
Download As PDF

ஆங்கிலம்-தமிழ் அகராதிகள் (Tamil-English Dictionaries)

ஆங்கிலம் தமிழ் அகராதிகள் அல்லது ஆங்கிலம் தமிழ் அகரமுதலிகள் என்பன அகர முதல் வரிசைப்படி ஆங்கில சொற்களை இட்டு அவற்றிற்கு இணையான தமிழ் பொருளை விளக்கும் நூல்கள் ஆகும். இந்த நூல்கள் இன்றைய கணனி உலகில், இலவச இணைய அகராதிகளாக எவரும் எளிதாகப் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளன. கண்ணிமைக்கும் நேரத்தில் எமக்கு தேவையான ஒரு சொல்லின் பொருளை தெரிந்துக்கொள்ள உதவுகின்றன. அவ்வாறு எமக்கு அடிக்கடி உதவக்கூடிய இணைய தமிழ்-ஆங்கில அகராதிகள் (Online Tamil-English Dictionaries) பல இணையத்தில் காணப்படுகின்றன.

அவற்றை ஆங்கிலம் கற்போரின் நலன் கருதி இங்கே தொகுத்து வைக்கின்றேன்.
Download As PDF

ஆங்கிலம் பேசுவது எப்படி? - 2 (Asking for Directions)

இன்றைய கணனியுலகில் எல்லாமே எளிதாகிவிட்டது. நாம் எங்காவது செல்லவேண்டுமானால், முன்பின் தெரியாத இடமென்றாலும் எவரின் தயவும் இன்றி நாமாகவே கூகிள் ஏர்த், கூகிள் மெப் போன்றவற்றின் உதவியுடன் செல்லக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. வளர்ந்த நாடுகளில் வீதிகள், கட்டடங்கள் மட்டுமன்றி, பொது மலசலக்கூடம், ஒற்றையடிப் பாதை போன்றவற்றைக் கூட எளிதாக கண்டறிந்துக்கொள்ள கூடிய வகையில் வசதிகள் கூடியுள்ளன. இருப்பினும், எவ்வளவு வசதிகள் வந்தப்போதும் எல்லோருக்கும் எதாவது ஓர் சூழ்நிலையில், எவராவது ஒருவரிடம், பாதை கேட்டறிந்துக் கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும். மற்றவரிடம் நாம் பாதை கேட்பதும், மற்றவர் எம்மிடம் பாதை கேட்டு நாம் வழிக்காட்டி உதவுவதும் அடிக்கடி ஏற்படும் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளாகும்.

எனவே இன்றைய பாடத்தில், ஆங்கிலத்தில் எவ்வாறு வழி கேட்பது என்று பார்ப்போம்.

ஆங்கிலம் பேசிப் பழகும் போது; மரியாதைமிக்கதும் தாழ்மையானதுமான பேச்சு வழக்கில் பேசிப்பழகுதல் பயன்மிக்கதாகும். நாம் ஏற்கெனவே வழங்கிய Polite and More Polite பாடத்தில் அவற்றை விளக்கமாக கற்றிருப்பீர்கள். புதிதாக இத்தளத்திற்கு வருகை தந்துள்ளோர் ஒருமுறை பார்த்துக்கொள்ளவும்.

  • Do you know the way to...?
  • Can you tell me the way to...?
  • Can you tell me the easy way to...?
  • Can you tell me the best way to...?

மேலுள்ள கேள்விகளை மிகவும் தாழ்மையாக அல்லது மரியாதைமிக்க வகையில் (More Polite) கேட்பதனால் "Could", "Would", போன்ற சொற்களை முன்னொட்டாக பயன்படுத்த வேண்டும்.

  • Could you tell me the way to...please?
  • Could you tell me the easy way to...please?
  • Could you tell me the best way to...please?
  • Would you tell me the way to...please?
  • Could you please tell me the way to...?
  • Would you mind telling me...please?

சிலர் தாம் செல்லவேண்டிய இடத்திற்கான வழியை இவ்வாறு கேட்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

  • Where is the nearest HSBC bank?

  • What is the best way to get there?

  • What is the easiest way?

  • What is the quickest way to Discovery bay?

  • How can I get there?

  • How to get to Stanley beach?

  • How to find the nearest Welcome Shop?

  • What is an easy way to the post office?

மேலுள்ளவாறு வழி கேட்பது பிழையானதல்ல என்றாலும், அவை மரியாதையான பேச்சு வழக்கல்ல. எனவே அவற்றை நாம் எவ்வாறு "Polite Form" வாக்கியங்களாக பயன்படுத்தலாம் என்பதனை கீழே பாருங்கள்.

  • Could you tell me where the nearest HSBC bank is?
  • Could you tell me the best way to get there?
  • Could you tell me what the easy way is?
  • Could you tell me what is the quickest way to Discovery bay?
  • Could you tell me how can I get there?
  • Could you tell me how to get to Stanley beach?
  • Could you tell me how to find the nearest Welcome Shop?
  • Could you tell me the easy way to post office please?
  • Would you mind telling me what is an easy way to post office please?

யாராவது ஒருவர் உங்களிடம் ஓரிடத்திற்கு செல்ல வழிகேட்டால், அதற்கு பதிலளித்தல் "நேராக சென்று, வலப்பக்கம் திரும்பி, இடப்பக்கம் திரும்பி, முதலாம்/இரண்டாம்/மூன்றாம் சந்தியில் திரும்பி, எதிரே உங்கள் வலப்பக்கத்தில், உங்கள் இடப்பக்கத்தில்" போன்ற சொற்களே பயன்படும்.

அதனையே ஆங்கிலத்தில் இவ்வாறு கூறலாம்.

எடுத்துக்காட்டாக:
  • Excuse me, could you tell me the way to HSBC bank please?
  • Certainly, go straight along this road, take the first/second/third turning on the right, HSBC bank is on your left/right/front.

ஒரு இடத்திற்கு செல்ல வழி கேட்டு, அதற்கு ஒருவர் பதிலளித்தால், கட்டாயம் மறக்காமல் நன்றி கூற வேண்டும். சிலவேளை நீங்கள் ஒருவருக்கு வழிக்காட்டி அதற்கு அந்நபர் நன்றி கூறினால், நன்றிக்கும் பதிலளிக்கும் வழக்கு ஆங்கிலப் பேச்சு வழக்கில் இருப்பதனை மறவாதீர்கள். கீழே கவனிக்கவும்.

  • Excuse me, could you tell me the way to...please?
  • Go straight along this road/take the first turn on the right/...is on your left.
  • Thanks, you've been very helpful. 
  • Don't mention it. Good luck.

ஒருவரின் கவனத்தை திசை திருப்பி உதவி/ வழி கேட்பதானால் "Excuse me", "Sorry to interrupt" போன்ற சொற்றொடர்களை பயன்படுத்த மறவாதீர்கள்.

  • Excuse me, could you tell me the way to...please?
  • Sorry to interrupt, could you tell me the way to...please?
  • I'm sorry to interrupt you, could you tell me the way to...please?

இப்பாடத்துடன் தொடர்புடைய "Giving Direction" அடுத்தப்பாடத்தில் பார்ப்போம்.

கவனிக்கவும்:
இப்பாடம் ஆங்கில பேச்சுப் பயிற்சி பகுதியிலே வழங்கப்படுகின்றது. ஆங்கில இலக்கணம் தொடர்புடையை பாடங்களை இங்கு பார்க்கவும்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

ஆங்கிலம் துணுக்குகள் 25 (Keep)

கடந்த பாடத்தில் நாம் Dating எனும் சொல்லுக்கான தமிழ் விளக்கம் பார்த்தோம். சாதாரணப் பயன்பாட்டில் என்றால் "திகதியிடல்" என்றும் காதல் மற்றும் உறவு நிலைகளின் போது "பொருத்தம் பார்த்தல்" மற்றும் "பொருத்தம் வழுப்படுத்தல்" போன்ற பொருள்களை தருவதாகவும் அறிந்தோம். இன்று பார்க்கப்போகும் சொல் "Keep" என்பதாகும்.

இந்த "Keep" எனும் ஆங்கிலச் சொல், பெயர் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Keep this chair here.
வை இந்த கதிரையை இங்கே
(இந்த கதிரையை இங்கே வை.)

I keep a mobile phone on the table.
நான் வைக்கிறேன் ஒரு அழைப்பேசியை மேசையின் மேல்.
(நான் ஒரு அழைப்பேசியை மேசையின் மேல் வைக்கிறேன்.)

Download As PDF