வணக்கம் உறவுகளே! இன்றைய ஆங்கிலம் துணுக்குகள் பகுதியில் ஒரு சுவையான ஒரு துணுக்குத் தகவலைப் பார்ப்போம்.
கால்நடைகளான மாடுகளின் பெண் இனத்தைக் குறிக்க "பசு" எனும் பெயர்ச்சொல்லும், ஆண் இனத்தை குறிக்க "காளை" எனும் பெயர்ச்சொல்லும் தமிழில் புழக்கத்தில் உள்ளன. அவற்றை பன்மையில் குறிப்பிடுவதாயின் "பசுக்கள்" என்றும் "காளைகள்" என்றும் குறிப்பிடுவோம். ஆங்கிலத்தில் இவற்றிற்கு இணையான பயன்பாடாக "cows" மற்றும் "bulls" எனும் பெயர்ச் சொற்கள் உள்ளன.
அதேவேளை ஆணினம் பெண்ணினம் என பாலினத்தை வேறுபடுத்திக் கூறாமல், பொதுப்படையாக கூறுவதாயின் "மாடு" எனும் பெயர்ச்சொல் தமிழில் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோன்று அதற்கு இணையான ஒரு பெயர்ச்சொல் ஆங்கிலத்தில் இருக்கிறதா, என்றால், பதில் "இல்லை" என்பது தான். அதாவது
பாலினத்தை வேறுபடுத்திக் குறிப்பிடாமல் (Cow or Bull) பொதுபடையாக இருபாலினத்தையும் குறிப்பதற்கான ஒரு பொது பெயர்ச்சொல் ஆங்கிலப் பயன்பாட்டில் இல்லை.
குறிப்பு:
மிருகவியலாளர்களால் "bovine" என பயன்படுத்தும் சொல் துணைக்குடும்ப எருமையினத்தைக் குறிக்கும் பொது சொல்லாகப் பயன்படுகிறதே தவிர, தமிழில் பாலினம் காட்டாமல் பொதுவாக பயன்படும் "மாடு" எனும் பெயர்ச்சொல்லுக்கு இணையான சொல்லாக அதனைக் கொள்ள முடியாது.
இணையத்தில் இதற்கான ஆதாரம்
நன்றி!
அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

Thank you very much for your lessons. I am learning your lessons very interestingly. It is very useful. We expecting your service must countinue.
ReplyDeleteThank you.
Pls send ur CD my mail I'd
ReplyDelete