Showing posts with label ஆங்கில பாடப் பயிற்சி. Show all posts
Showing posts with label ஆங்கில பாடப் பயிற்சி. Show all posts

ஆங்கில பாடப் பயிற்சி 29 (Past Perfect Progressive)

நாம் Grammar Patterns 01 இல் காணப்படும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஒவ்வொரு பாடங்களாக 28 வரை கற்றுள்ளோம். இன்றையப் பாடத்தில் 29 வது வாக்கியத்தை விரிவாக பார்க்கப் போகிறோம். இந்த 29 வது வாக்கியத்தை ஆங்கிலத்தில் "Past perfect Continuous" அல்லது "Past Perfect Progressive" என்று அழைப்பர். தமிழில் “இறந்தக்கால வினை முற்றுத்தொடர்” அல்லது “கடந்தக்கால வினை முற்றுத்தொடர்” என இரண்டு விதமாக அழைக்கப்படுகின்றது.

65. I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

வாக்கிய அமைவுகள்
-------------------------------------------------------------------------------------
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing
I / He/ She/ It/ You/ We/ They + had + been + doing a job

“இறந்தக்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கிய அமைப்புகளில் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" இணைந்தே பயன்படும் என்பதை மறவாதீர்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Auxiliary verb + verb with ing
I / He/ She/ It/ You/ We/ They + had + not + been + doing a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing
Had + I / He/ She/ It/ You/ We/ They + been + doing a job? இவற்றில் துணை வினைகள் பிரிந்து (Auxiliary verbs) இரண்டு இடங்களில் பயன்படுவதை அவதானியுங்கள்.

இன்னொரு விடயத்தையும் கவனியுங்கள். அதாவது இந்த வாக்கிய அமைப்புகள்; முதலாம் நபர், இரண்டாம் நபர், மூன்றாம் நபர் என மூன்று நபர்களும், ஒரே வடிவிலேயே பயன்படும்.

இப்பொழுது இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக அமைப்பது என்று பார்ப்போமா? எமது பாடங்களை தொடர்ந்து பயின்று வருவோருக்கு இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைக்கலாம் என்பதை விளங்கப்படுத்தாமலேயே தெரிந்திருக்கும். இருப்பினும் கீழுள்ளவற்றை கவனியுங்கள்.

கேள்வி பதில் வாக்கியங்கள்
-------------------------------------------------------------------------------------
Had you been doing a job?
நீ அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?
Yes, I had been doing a job. (I’d been)
ஆம், நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
No, I had not been doing a job. (I’d not been, I hadn’t been)
இல்லை, நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

வினை விளக்கம்
-------------------------------------------------------------------------------------
மேலுள்ள வாக்கியங்களின் தமிழ் பொருள் இறந்தக்கால தொடர்வினை வாக்கியங்கள் போன்றே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் வேறுப்பாடு உண்டு. என்ன வேறுப்பாடு? வாக்கியங்கள் இடையே "அன்றிலிருந்து அக்காலத்திலிருந்து” குறிப்பிடப்பட்டுள்ளதை கவனித்தீர்களா? ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன?

09. I was doing a job.
“நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.” என்பதில் “இறந்தக்காலத்தில் ஒரு செயல், குறிப்பிட்ட நேரத்தில் நடந்துக்கொண்டிருந்தது.” என்பதை அவ்வாக்கிய அமைப்புகள் வெளிப்படுத்துகின்றன. அங்கே இறந்தக் காலத்தில் செயல் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் இருக்கின்றது. (எப்பொழுது முடிவடையும் என்பதைப் பற்றி அங்கே பேசப்படவில்லை.)

ஆனால் இன்றையப் பாடத்தில் “இறந்தக்கால தொடர் வினைமுற்று” வாக்கியங்களின் செயல் இறந்தக் காலத்தில் தொடங்கி இன்னுமொரு இறந்தக்காலம் வரை தொடர்ந்து முடிவடைந்துவிடுகிறது. (Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)

இவற்றை இப்படி கற்பனை செய்துக்கொள்ளுங்கள்; நீங்கள் உங்கள் நண்பர் ஒருவரின் வருகைக்காக விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் நண்பர் வந்தடைந்தத உடன் உங்களிடம் கேட்கிறார்:

How long have you been waiting?
எவ்வளவு நேரமாக நீ காத்துக்கொண்டிருக்கின்றாய்?

I have been waiting for two hours.
நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இரண்டு மணித்தியாளங்களாக.

இதனையே அவர் சந்தித்து சில மணித்தியாளங்களின் பின் அல்லது சில நாட்களின் பின் கேட்கிறார் என்றால்; எப்படி கேட்பார்? பதில் கீழே:

How long had you been waiting?
எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருந்தாய்?

அப்பொழுது நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

I had been waiting for two hours.
நான் காத்துக்கொண்டிருந்தேன் இரண்டு மணித்தியாளங்களாக.

அதாவது அவர் வருகைத்தந்த நாளன்று; அவர் வந்தடையும் இரண்டு மணித்தியாளங்களுக்கு முன்பே நீங்கள் விமான நிலையத்திற்கு சென்று அவர் வருவரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்தீர்கள்? இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருந்தீர்கள். எதுவரை காத்துக்கொண்டிருந்தீர்கள்? அவர் வந்தடையும் வரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எனவே இந்த “இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்” வாக்கியம் இறந்தக்காலத்தில் தொடங்கி (இரண்டு மணித்தியாளங்களாக தொடர்ந்து) இன்னுமொரு இறந்தக்காலத்திலேயே நிறைவும் பெற்றுவிடுகிறது. இவ்வாறான வாக்கிய அமைப்புகளையே "இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்" வாக்கியங்கள் எனப்படுகின்றன. இப்பொழுது விளங்குகின்றதா இவ்வாக்கிய அமைப்புகளின் பயன்பாடுகள்?

மேலும் சில வாக்கியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள்.

பாடப் பயிற்சி
-------------------------------------------------------------------------------------
1. I had been waiting there for more than 45 minutes.
நான் காத்துக்கொண்டிருந்தேன் அங்கே 45 நிமிடங்களுக்கும் அதிகமாக.

2. I had been working for over an hour.
நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு மணித்தியாளத்திற்கு மேலாக.

3. I had been standing all day in the school.
நான் நின்றுக்கொண்டிருந்தேன் முழு நாளும் பாடசாலையில்.

4. I had been teaching at that university for three years
நான் கற்பித்துக்கொண்டிருந்தேன் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக.

5. I had been doing the work.
நான் செய்துக்கொண்டிருந்தேன் வேலை.

6. I had been studying English for five years
நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் ஐந்து ஆண்டுகளாக.

7. I had been living there since 1997.
நான் வசித்துக்கொண்டிருந்தேன் அங்கே 1997 இல் இருந்து.

8. I had been talking with Mr. Obama for over half an hour
நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக.

9. I had been driving for 10 years in Japan
நான் ஓட்டிக்கொண்டிருந்தேன் (வாகனம்) 10 ஆண்டுகள் ஜப்பானில்

10. I had been waiting in the Hong Kong airport for two hours
நான் காத்துக்கொண்டிருந்தேன் ஹொங்கொங் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக.

இவ்வாறு நீண்ட வாக்கியங்களாகவும் பயிற்சி செய்துப் பழகலாம்.

I had been waiting in the airport for more than two hours when you arrived.
நான் காத்துக்கொண்டிருந்தேன் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களுக்கும் மேலாக நீ வந்தடையும் பொழுது.

I had been talking with Mr. Obama for over half an hour before you arrived.
நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக நீ வருவதற்கு முன். (நீ வருவதற்கு முன்பு நான் அரை மணித்தியாளத்துக்கும் மேலாக ஒபாமாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.)

I had been learning English for two years before I left for America.
நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் இரண்டு ஆண்டுகளாக நான் அமெரிக்காவுக்கு வெளியேறுவதற்கு முன்பு. (நான் அமெரிக்காவுக்கு போவதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன்.)

Grandma wanted to sit down because she had been standing all day in the hospital.
பாட்டிக்கு அமர வேண்டும் ஏனெனில் அவள் நின்றுக்கொண்டிருந்தால் முழு நாளும் மருத்துவ மனையில். (பாட்டி முழு நாளும் மருத்துவ மனையில் நின்றுக்கொண்டிருந்தால் அவளுக்கு அமர வேண்டும்.)

Sarmilan was tired because he had been exercising so hard.
சர்மிலன் களைப்படைந்து இருந்தான் ஏனெனில் அவன் பயிற்சிசெய்துக்கொண்டிருந்தான் மிக கடுமையாக.

Homework:
-------------------------------------------------------------------------------------
வழமைப்போல் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களை He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி மாற்றி எழுதிப்பாருங்கள். பின் அவற்றை கேள்வி பதில்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள். பேச்சுப் பயிற்சிக்கு, உங்கள் நண்பர்களிடம் கேள்வி கேட்டும் பதில் அளித்தும் பயிற்சி பெறுங்கள்.

குறிச்சொற்கள் (Signal words)
-------------------------------------------------------------------------------------
since
for
all day
the whole day


கேள்விகளின் போது:

How long

எடுத்துக்காட்டுகள்:

How long had you been doing a job in Singapore?
எவ்வளவு காலமாக நீ செய்துக்கொண்டிருந்தாய் ஒரு வேலை சிங்கப்பூரில்?
I had been doing a job for 12 months.
நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை 12 மாதங்களாக. (தற்போது இல்லை)

How long had you been studying English?
நீ எவ்வளவு காலமாக படித்துக் கொண்டிருந்தாய் ஆங்கிலம்?
I had been studying English since 2005. (I’d been)
நான் படித்துக் கொண்டிருந்தேன் ஆங்கிலம் 2005 இல் இருந்து. (தற்போது படிப்பதில்லை)

இவ்வாறு இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கிய கேள்விகளின் பொழுது “How long” எனும் சொற்பதம் அடிக்கடி பயன்படும். அதேபோல் நேர்மறையின் போது “for, since” போன்ற சொற்கள் பயன்படும்.

சுருக்கப் பயன்பாடுகள் (Short Forms)
-------------------------------------------------------------------------------------
Positive Short forms

I had been = I'd been
You had been = You'd been
He had been = He'd been
She had been = She'd been
It had been = It'd been
We had been = We'd been
They had been = They'd been

Negative Short forms

எதிர்மறைகளின் சுருக்கப் பயன்பாடுகள் இரண்டு வகைகளாக உள்ளன

I had not been = I'd not been / I hadn't been
You had not been = You'd not been / You hadn't been
He had not been = He'd not been / He hadn't been
She had not been = She'd not been / She hadn't been
It had not been = It'd not been / It hadn't been
We have not been = We'd not been / We hadn't been
They have not been = They'd not been / They hadn't been

வரைப்படம் (Diagram)
-------------------------------------------------------------------------------------
இறந்தக்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இந்த வரைப்படம் ஊடாக பார்க்கவும். (The diagram explain to you that Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)

இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இன்றையப் பாடம் தெளிவாக விளக்கியிருக்கும் என்று நம்புகின்றேன். இருப்பினும் இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன்
ஆசிரியர் அருண் HK Arun Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி 26 (Present Perfect Tense)

நாம் இதுவரை Grammar Patterns 1 இன் 26 வது இலக்கம் வரையிலான வாக்கியங்களை விரிவாகக் கற்றுள்ளோம். அத்தோடு கடந்தப் பாடத்தில் “Perfect Tense” தொடர்பான Grammar Patterns 7 உம் கற்றோம். அதில் உள்ள ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்றும் கூறியிருந்தோம் அதன்படி இன்று Grammar Patters 7 இன் முதலாவது மற்றும் இரண்டாவது வாக்கியங்களை  விரிவாகப் பார்க்கப் போகின்றோம்.

முதலில் முதல் வாக்கியத்தை கவனியுங்கள்.

1. I have done a job. (Present Perfect Simple)
நான் செய்திருக்கிறேன் ஒரு வேலை.

இவ்வாக்கியம் ஒரு நிகழ்கால வினைமுற்று வாக்கியமாகும். இதனை ஆங்கிலத்தில் “Present Perfect Tense” அல்லது "Present Perfect Simple Tense" என்பர். இவ்வாக்கிய அமைப்புகள் இறந்தக்காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் தொடர்புடையவைகளாகவே பயன்படுகின்றன. இவ்வாக்கிய அமைப்புகளில் பயன்படும் பிரதான வினைச்சொல் எப்பொழுதும் "Past Participle" சொற்களாகவே பயன்படும்.

உண்மையில் இந்த நிகழ்கால வினைமுற்று வாக்கிய அமைப்புகள் ஆங்கில பேச்சு வழக்கில் அதிகம் பயன்படுகின்றவைகளாகும். இவற்றை தெளிவாக விளங்கி கற்றுக்கொள்வது மிகவும் பயனுள்ளதாகும். ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டிராதவர்களுக்கு இவ்வாக்கிய அமைப்புகள் அதிகம் குழப்பமானதாக இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. பல மொழிகளில் இவற்றிற்கான சரியான விளக்கம் கொடுக்க முடியாதுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் தமிழ் மொழியிலோ மிக எளிதாக விளக்கம் கொடுக்கலாம். அதுவே தமிழின் சிறப்பாகும்.

அநேகமாக நிகழ்கால வினைமுற்றின் பயன்பாட்டில் எமது அனுபவத்தை பற்றியே பேசப்படுகின்றது. மிக முக்கியமாக நாம் என்ன செய்திருக்கிறோம், என்ன செய்திருக்கவில்லை என்பதைப் பற்றியே இவ்வாக்கிய அமைப்புகள் விவரிக்கின்றன. இதில் எப்பொழுது செய்தோம் என்பதற்கு இவ்வாக்கிய அமைப்புகள் முக்கியமளிப்பதில்லை. (It is important if we have done it in our lives or not. It is not important when we did it.)

சரி பாடத்திற்கு செல்வோம்.

இவற்றில் I, You, We, You, They போன்றவற்றுடன் “have” துணைவினையாகவும், He, She, It போன்ற மூன்றாம் நபர் (Third Person Singular) உடன் “has” துணைவினையாகவும் பயன்படும்.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb (Past participle)
I/ You/ We/ They + have + done a job.
He/ She/ It + has + done a job.
இவற்றில் துணைவினை (Auxiliary verb) உடன் இணைந்து வரும் பிரதான வினைச்சொல் "Past participle" சொல்லாக பயன்படுவதை அவதானியுங்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb (Past participle)
I/ You/ We/ They + have + not + done a job.
He/ She/ It + has + not + done a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb (Past participle)
Have + I/ you/ we/ they + done a job?
Has + he/ she/ it + done a job?

இவற்றில் Have/ Has துணைவினைகள் முன்பாகவும் "Subject" உடன் இணைந்து வரும் பிரதான வினை “Past participle” வினைமுற்றுச் சொல்லாக பயன்படுவதை அவதானிக்கவும்.

கீழே சொடுக்கி ஒலி வடிவாகவும் கேட்கலாம்.

பகுதி 1

Have you done a job?
நீ செய்திருக்கிறாயா ஒரு வேலை?
Yes, I have done a job
ஆம், நான் செய்திருக்கிறேன் ஒரு வேலை.
No, I haven’t done a job. (have + not)
இல்லை, நான் செய்திருக்கவில்லை ஒரு வேலை.

Has he lived here for 20 years?
அவன் வசித்திருக்கிறானா இங்கே 20 ஆண்டுகளாக?
Yes, He has lived here for 20 years.
ஆம், அவன் வசித்திருக்கிறான் இங்கே 20 வருடங்களாக.
No, He hasn’t lived here for 20 years. (has + not)
இல்லை, அவன் வசித்திருக்கவில்லை இங்கே 20 ஆண்டுகளாக.

Have you seen Thesaththin puyalkal movie?
நீ பார்த்திருக்கிறயா தேசத்தின் புயல்கள் திரைப்படம்?
Yes, I have seen Thesaththin puyalkal movie twenty times.
ஆம், நான் பார்த்திருக்கிறேன் தேசத்தின் புயல்கள் திரைப்படம் இருவது தடவைகள்.
No, I haven’t seen Thesaththin puyalkal movie. (have + not)
இல்லை, நான் பார்த்திருக்கவில்லை தேசத்தின் புயல்கள் திரைப்படம்.

கீழே 25 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். அதன் பின்பு மேலுள்ள உதாரணங்களைப் பின்பற்றி கேள்வி பதில் அமைத்து பயிற்சி செய்யுங்கள். பேசியும் பயிற்சி செய்யலாம்.

1. I have seen that movie many times.
நான் பார்த்திருக்கிறேன் அந்த திரைப்படத்தை பல தடவைகள்

2. I have met him once before.
நான் சந்தித்திருக்கிறேன் அவனை ஒருமுறை முன்பு.

3. I have traveled by MTR
நான் பயணித்திருக்கிறேன் எம்.டி.ஆர் இல்.

4. I have done my homework.
நான் செய்திருக்கிறேன் எனது வீட்டுப்பாடம்.

5. I have been to England three times.
நான் போயிருக்கிறேன் இங்கிலாந்திற்கு மூன்று தடவைகள்.

6. I have come here many times
நான் வந்திருக்கிறேன் இங்கே பல தடவைகள்.

7. I have worked here since 2002.
நான் வேலை செய்திருக்கிறேன் இங்கே 2002 இல் இருந்து

8. I have studied two foreign languages
நான் படித்திருக்கிறேன் இரண்டு பிறநாட்டு மொழிகள்.

9. I have cured many deadly diseases.
நான் குணப்படுத்தியிருக்கிறேன் நிறைய கொடிய நோய்கள்.

10. I have cleaned my room.
நான் சுத்தம் செய்திருக்கிறேன் எனது அறையை.

11. I have seen that movie six times in the last month.
நான் பார்த்திருக்கிறேன் அந்த திரைப்படத்தை ஆறு தடவைகள் கடந்த மாதம்.

12. I have  been to Mexico in the last year.
நான் போயிருக்கிறேன் மெக்ஸிகோவிற்கு கடந்த ஆண்டில்.

13. I have lived in Canada for five years
நான் வசித்திருக்கிறேன் கனடாவில் ஐந்து ஆண்டுகளாக.

14. I have worked at the University since 1999
நான் வேலை செய்திருக்கிறேன் பல்கலைக் கழகத்தில் 1999 இல் இருந்து.

15. I have seen that girl before
நான் பார்த்திருக்கிறேன் அந்தப் பெண்ணை முன்பே.

16. I have written some English Grammar lessons.
நான் எழுதியிருக்கிறேன் சில ஆங்கில இலக்கண பாடங்கள்.

17. I have worked here since June.
நான் வேலை செய்திருக்கிறேன் இங்கே யூனிலிருந்து.

18. I have written five letters.
நான் எழுதியிருக்கிறேன் ஐந்து கடிதங்கள்.

19. I have cooked dinner
நான் சமைத்திருக்கிறேன் இரவுச் சாப்பாடு.

20. I have lived with my parents for over 10 years.
நான் வசித்திருக்கிறேன் எனது பெற்றோருடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக.

21. I have played outside for an hour.
நான் விளையாடியிருக்கிறேன் வெளியில் ஒரு மணித்தியாளமாக.

22. I have learned English since 1986.
நான் கற்றிருக்கிறேன் ஆங்கிலம் 1986 இல் இருந்து.

23. I have gone to the supermarket.
நான் போயிருக்கிறேன் அந்த நவீன சந்தைக்கு.

24. I have played football.
நான் விளையாடியிருக்கிறேன் உதைப்பந்தாட்டம்.

25. I have lived in that house for 2 years.
நான் வசித்திருக்கிறேன் இந்த வீட்டில் 2 ஆண்டுகளாக.

மேலே உள்ள 25 வாக்கியங்களையும் You/ we/ they/ He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்யுங்கள்.

நிகழ்கால வினைமுற்று பயன்பாடுகள்

1. Actions which started in the past and are still continuing

He has lived in America for five years.
அவன் வசித்திருக்கிறான் அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளாக.
("அவன் வசித்துக்கொண்டிருக்கிறான் அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளாக." என்பதுப் போன்றும் இதுபோன்ற பயன்பாடுகளின் போது தமிழில் பொருள் கொள்ளலாம்.)

அவன் வசிக்க ஆரம்பித்தான் அமெரிக்காவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, (இறந்தக்காலத்தில்) இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறான் அங்கே. (நிகழ்காலத்தில்) (He started living in America five years ago, and he's still living there now.) எதிர்காலத்திலும் வசிக்கலாம்.

(இவ்வாக்கிய அமைப்புகள் இறந்தக்காலத்தில் தொடங்கி தற்பொழுதும் தொடரும் செயலை அல்லது சம்பவத்தை விவரிப்பவைகள்.)

2. Actions which happened at some unknown time in the past

உங்கள் நண்பர் ஒருவர் உங்களை “நான் கடவுள்” திரைப்படம் பார்ப்பதற்கு அழைக்கின்றார். நீங்கள் அத்திரைப்படத்தை ஏற்கெனவே பார்த்திவிட்டீர்கள். ஆனால் எப்பொழுது பார்த்தேன் என்று திட்டவட்டமாக கூற பார்த்த நாள் நினைவில்லை அல்லது கூறவிரும்பவில்லை. மீண்டும் அப்படத்தை பார்க்க வேண்டிய எண்ணமும் உங்களுக்கு இல்லை. அப்பொழுது தமிழில் எப்படி கூறுவீர்கள்? “நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் அந்த திரைப்படத்தை.”

I have already seen that film.
நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன் அந்த திரைப்படம்.

(செயல் குறிப்பிடப்படாத அல்லது அறியப்படாத நேரத்தில் நிகழ்ந்துள்ளது.)

3. Actions which happened in the past, but have an effect in the present

நீங்கள் காலையில் வேலைக்கு போகும் போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை காற்சட்டை பையினும் போட்டு எடுத்துச்செல்கின்றீர்கள். வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பி வீட்டை திறப்பதற்கு சாவியை எடுக்கிறீர்கள்; ஆனால் சாவியை காணவில்லை. சாவி எங்கோ தொலைந்து விட்டது. ஆனால் எப்பொழுது எங்கே தொலைந்தது என்பது உங்களுக்கு திட்டவட்டமாக தெரியாது. ஆனால் தொலைந்திருக்கிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வாறு தமிழில் கூறுவீர்கள்?

“ஐய்யய்யோ! நான் தொலைத்திருக்கிறேன் எனது சாவியை.” (எப்பொழுது எங்கே தொலைத்தீர்கள் என்பது தெரியாது)

I have lost my keys 
நான் தொலைத்திருக்கிறேன் எனது சாவிகளை.

(இவ்வாக்கியத்தில் தொலைந்தது (இறந்தக்காலத்தில்), அது தொலைந்தது என்பதை உணரப்படுகின்றது இப்பொழுது. (நிகழ்காலத்தில்))

4. Recently completed action

Grammar Patterns 7 இன் இரண்டாவது வாக்கியத்தைப் பாருங்கள். செயல் தற்பொழுது முடிவடைந்திருக்கிறது. நான் வேலை செய்ய தொடங்கியது, (இறந்தக் காலத்தில்) அதை நிறைவு செய்திருக்கிறேன் இப்பொழுது. (நிகழ்காலத்தில்)

2. I have just done a job.
நான் இப்பொழுது செய்திருக்கிறேன் ஒரு வேலை.

(இவ்வாக்கிய அமைப்புகள் இறந்தக்காலத்தில் ஆரம்பமான ஒரு நிகழ்வு அன்மையில் முற்றுப்பெற்றுள்ளதை விவரிக்கின்றன.)

குறிப்பு:

இந்த Present Perfect” பயன்பாட்டின் பொழுது கேள்விகளுக்கான பதில்கள் அதிகமாக சுருக்கமாகவே பயன்படுத்தப் படுகின்றன.

உதாரணம்:
Have you cooked lunch?
Yes, I have.
No, I haven’t.

குறிச் சொற்கள் (Signal Words of Present Perfect)

Ever
Never
just
Yet
Already
So far
Up to now
Recently,
Since
For
not yet
till now


குறிச்சொற்கள் பயன்படும் வாக்கிய அமைப்புகள்

Ever

Have you ever been to Germany?
நீ எப்பொழுதாவது போயிருக்கிறாயா ஜேர்மனிக்கு?

Have you ever met him?
நீ எப்பொழுதாவது சந்தித்திருக்கிறாயா அவனை?

Have you ever eaten Pizza?
நீ எப்பொழுதாவது சாப்பிட்டிருக்கிறாயா பீZஸா?

Has he ever talked to you about the problem?
அவன் எப்பொழுதாவது பேசியிருக்கிறானா உன்னிடம் இந்த பிரச்சினையைப் பற்றி?

Never

I have never been to Australia.
நான் எப்பொழுதும் போயிருக்கவில்லை அவுஸ்திரேலியாவிற்கு.

I've never seen so many people like this.
நான் எப்பொழுதும் பார்த்திருக்கவில்லை நிறைய மக்கள் இதுப்போன்று.

He has never traveled by train.
அவன் எப்பொழுதும் பிரயானம் செய்திருக்கவில்லை தொடருந்தில்.

(மேலுள்ள Ever, Never இச்சொற்கள் “Present Perfect Tense” இல் அதிகம் பயன்படும் சொற்களாகும்.)

Just

I have just installed AVG anti-virus
நான் தற்பொழுது நிறுவியிருக்கிறேன் ஏ.வி.ஜி நச்சு நிறல் எதிர்ப்பான்.

For

I have been an English teacher for more than five years.
நான் இருந்திருக்கிறேன் ஒரு ஆங்கில ஆசிரியராக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக.

Since

I haven't seen Sarmilan since 2002.
நான் பார்த்திருக்கவில்லை சர்மிலனை 2002 இல் இருந்து. (இப்பொழுது பார்க்கிறேன்.)

Yet

He hasn't done it yet.
அவன் செய்திருக்கவில்லை இதை இன்னும்.

சுருக்கப் பயன்பாடுகள் (Short Forms)

I + have = Ive - (ஐவ்)
You + have = youve - (யூவ்)
We + have = weve - (வீவ்)
They + have = They’ve - (தேவ்)

He + has = He’s - (ஹீஸ்)
She + has = She’s - (சீஸ்)
It + has = It’s - (இட்ஸ்)

He + is = He’s
She + is = She’s
It + is = It’s

மேலுள்ள He has, She has, It has இன் சுருக்கப் பயன்பாடுகளாக He’s, She’s, It’s என்று பயன்படுவதை கவனியுங்கள். இவற்றை பயன்படுத்தும் போது சற்று கவனமாக பயன்படுத்த வேண்டும்.

காரணம் He is, She is, It is போன்றவற்றின் சுருக்கப் பயன்பாடும் He’s, She’s, It’s போன்றே பயன்படுகின்றது. இவற்றை வேறுபடுத்தி அறிந்துக்கொள்வதில் சிலவேளை உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம்.

இவற்றை எவ்வாறு அறிந்துக்கொள்வது? மிகவும் எளிதாக அறிந்துக் கொள்ளலாம்.

நிகழ்காலத் தொடர்வினை வாக்கியங்களில் பிரதான வினையுடன் "+ ing" இணைந்து வரும். ஆனால் "Present Perfect" வாக்கிய அமைப்புகளின் பிரதான வினைச் சொற்கள் எப்பொழுதும் “Past Participle” சொற்களாகவே பயன்படும்.

உதாரணம்:

Present Continuous
He is doing a job. - He’s doing a job.
She is doing a job. - She’s doing a job.
It is doing a job. - It’s doing a job.

Present Perfect
He has done a job. - He’s done a job. (Past participle)
She has done a job. - She’s done a job. (Past participle)
It has done a job. - It’s done a job. (Past participle)

do - did - done இதில் “done” Past participle சொல்லாகும். மேலும் இதுப்போன்ற வினைச் சொற்களின் வேறுப்பாட்டை அட்டவணை Irregular verbs இல் பார்க்கவும்.

சரி! இனி உங்கள் பயிற்சிகளை தொடருங்கள்.

இப்பாடத்தில் உள்ள வாக்கிய அமைப்புகள், அது பயன்படும் முறைகள், அவற்றிற்கான தமிழ் விளக்கங்கள் எதுவானாலும் தயங்காமல் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun
Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி 25 (Grammar Patterns 7)

இதுவரை Grammar Patterns -1 றின் இலக்கவரிசைப் படி ஒவ்வொரு வாக்கியத்தையும் விரிவாகப் பார்த்து வருகின்றோம். அதன்படி கடந்தப் பாடத்தில் 26 வதாக வாக்கியத்தை விரிவாகப் பார்த்தோம். இன்று விரிவாகப் பார்க்க வேண்டியது 27 வது வாக்கியத்தையாகும். ஆனால் இன்று அவ்வாக்கியத்தை விரிவாகப் பார்க்கப்போவதில்லை. காரணம் இந்த 27 வது வாக்கியம் Perfect Tense வாக்கியமாகும்.

அவ்வாக்கியத்தை விரிவாகக் கற்பதற்கு முன்; அவ்வாக்கியத்துடன் தொடர்புடைய கிரமர் பெட்டனை (Grammar Patterns of Perfect Tense) பொருத்தம் கருதி இன்று வழங்குகின்றோம்.

நாம் ஏற்கெனவே கற்ற கிரமர் பெட்டன்களைப் போன்று இதனையும் (வாய்ப்பாடு பாடமாக்குவதைப் போல்) மனனம் செய்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம். மனனம் செய்துக் கொண்டீர்களானால் பயிற்சிகளைத் தொடர்வது மிக எளிதாக இருக்கும். 

1.  I have done a job. (Present Perfect)
நான் செய்திருக்கிறேன் ஒரு வேலை.

2. I have just done a job.
நான் (இப்பொழுதுதான்) செய்திருக்கிறேன் ஒரு வேலை.

3. I had done a job. (Past Perfect)
நான் செய்திருந்தேன் ஒரு வேலை.

4. I had done a job long ago.
நான் செய்திருந்தேன் ஒரு வேலை (வெகுக்காலத்திற்கு) முன்பே.

5. I wish I had done a job.
எவ்வளவு நல்லது நான் செய்திருந்தால் ஒரு வேலை.

6. I will have done a job. (Future Perfect)
நான் செய்திருப்பேன் ஒரு வேலை.

7. I have been doing a job. (Present Perfect Continuous)
நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக்கொண்டிருக்கிறேன் ஒரு வேலை.

8. I had been doing a job. (Past Perfect Continuous)
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

9. I will have been doing a job. (Future Perfect Continuous)
(குறிப்பிட்டக் காலம் வரை) நான் செய்துக்கொண்டிருப்பேன் ஒரு வேலை.

10. He may have done a job.
அவன் செய்திருந்திருக்கலாம் ஒரு வேலை.

11. He might have done a job.
அவன் செய்திருந்திருக்கலாம் ஒரு வேலை.

12. He must have done a job.
அவன் நிச்சயம் செய்திருந்திருக்க வேண்டும் ஒரு வேலை.

13. He would have done a job.
அவன் செய்திருந்திருக்க வேண்டும் ஒரு வேலை.

14. He could have done a job.
அவன் செய்திருந்திருக்க இருந்தது ஒரு வேலை.

15. He should have done a job.
அவன் செய்திருந்திருக்கவே இருந்தது ஒரு வேலை.

16. He shouldn’t have done a job. (should + not)
அவன் செய்திருந்திருக்கவே வேண்டியதில்லை ஒரு வேலை.
அவன் அநியாயம் செய்திருந்தது ஒரு வேலை. (போன்றும் பொருள் கொள்ளலாம்/பேசலாம்)

17. He needn’t have done a job. (need + not)
அவன் செய்திருந்திருக்க (அவசியமில்லை) வேண்டியதில்லை ஒரு வேலை.

18. He seems to have done a job.
அவன் செய்திருப்பான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

19. Having done a job I have got experience.
செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை நான் பெற்றிருப்பேன் அனுபவம்.

பயிற்சி

கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியத்தையும், 19 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதவும். வாசித்து வாசித்து எழுதுவதால் அவை கூடிய விரைவில் உங்கள் மனதில் பதிந்து விடும். அதுவே ஆங்கிலம் எளிதாக கற்பதற்கான இரகசியம்.

1. I have done - நான் செய்திருக்கிறேன்.
2. I have written - நான் எழுதியிருக்கிறேன்.
3. I have chosen - நான் தெரிவுசெய்திருக்கிறேன்.
4. I have worked - நான் வேலைசெய்திருக்கிறேன்.
5. I have watched. - நான் பார்த்திருக்கிறேன்.
6. He has spoken - அவன் பேசியிருக்கிறான்.
7. He has started. - அவன் ஆரம்பித்திருக்கிறான்.
8. She has cooked. - அவள் சமைத்திருக்கிறாள்.
9. She has visited - அவள் போயிருக்கிறாள்.
10. She has walked - அவள் நடந்திருக்கிறாள்.

கவனிக்கவும்

இந்த "Perfect Tense" வாக்கியங்களில் பிரதான வினைச்சொல் எப்பொழுதும் "Past Participle" சொல்லாகவே இருக்கும் என்பதை மறவாதீர்கள். மேலும் சொற்களின் வேறுப்பாட்டை "Irregular verbs" அட்டவணையைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.

மின்னஞ்சல் கேள்விகள்

எமக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல் கேள்விகளில் அதிகமானவை “Perfect Tense” தொடர்பானதாகவே இருந்தது. அதனாலேயே இவற்றை பிரத்தியேகமான ஒரு பாடமாக வழங்குகின்றோம்.

உதாரணம்: நீ அமெரிக்காவுக்கு போயிருக்கிறாயா? என ஒருவர் உங்களிடம் கேள்வி கேட்டால் “ஆம்” என்றோ “இல்லை” என்றோ சுருக்கமாக பதிலளிக்கலாம். ஆனால் “ஆம், நான் பலமுறை அமெரிக்காவுக்கு போயிருக்கிறேன்.” என்று கூற வேண்டுமானால் அப்பதிலை “Present Perfect Tense” வாக்கியத்திலேயே பதிலளிக்க வேண்டியதாக இருக்கும்.

எடுத்துக்காட்டு:

I have visited.
நான் போயிருக்கிறேன்.

I have visited America several times.
நான் போயிருக்கிறேன் அமெரிக்காவுக்கு பல தடவைகள்/பல முறை.

(குறிப்பு: இவ்வாக்கியத்தை போகிறேன், போகின்றேன், போனேன் என்பதுப் போல் குழப்பிக்கொள்ள வேண்டாம்)

மேலும் இப்பாடத்தில் உள்ள ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்போது அவ் வாக்கியங்கள் பற்றி மேலும் விரிவாகக் கற்றுக்கொள்ளலாம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்.

நன்றி
 

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun
Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி 24 (should be able to)

Grammar Patterns -1 றில் 26 வதாக அமைந்திருக்கும் வாக்கியத்தை இன்று விரிவாகப் பார்ப்போம். எமது பாடப் பயிற்சிகளை பின் தொடர்ந்து வருவோருக்கு இன்றையப் பாடம் மிகவும் எளிதான ஒன்றாகவே இருக்கும்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து இலக்க வரிசையில் தொடரும் படி கேட்டுக் கொள்கின்றோம்.

26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை.

இந்த வாக்கிய அமைப்பைச் சற்று கவனியுங்கள். இதில் “ should” எனும் சொல் செய்யவே வேண்டும்”, பார்க்கவே வேண்டும்”, வரவே வேண்டும்” போன்று மிகவும் அழுத்தத்தை இச்சொல் (should) வெளிப்படுத்துகின்றது.

அதேவேளை “+ able to” சாத்தியத்தை அல்லது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகின்றது.

இவை இரண்டும் இணைந்து “முடியுமாகவே இருக்கும்” (should be able to) என நம்பிக்கையை, உறுதியை இவ்வாக்கிய அமைப்புக்கள் (அழுத்தமாக) வெளிப்படுத்துகின்றன.

இப்பாடத்துடன் தொடர்புடையப் பாடங்கள்.

am/is/are able to

was/were able to

may be able to

இன்றையப் பாடம் "should be able to" இதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Positive (Affirmative)
Subject + be + able + infinitive
I /You /He /She /It / We / You /They + sould + be able + to do a job.

Negative
Subject + be + not + able + infinitive
I /You /He /She /It /You /We /They + should + not + be able + to do a job

Question (Interrogative)
Be + subject + be able + infinitive
Should
+ I /you /he /she /it /you /we /they + be able + to do a job?

குறிப்பு:

1. இப் பாடத்திலும் தன்னிலை, முன்னிலை, படர்க்கை (First, Second, Third person) மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "should be able to" ஒரே விதமாகவே பயன்படும்.

2. + be able to ஒரு துணைவினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

3. இவ்வாக்கிய அமைப்புக்களில் எப்பொழுதும் பிரதான வினைக்கு முன் “to” எனும் முன்னொட்டு இணைந்தே பயன்படும். (be able to has an infinitive form)

சரி இப்பொழுது வழமைப்போல் இவ்வாக்கிய அமைப்புக்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்வோம்.

Should you be able to do a job?
உனக்கு செய்ய முடியுமாகவே இருக்குமா ஒரு வேலை?
Yes, I should be able to do a job.
ஆம், எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை.
No, I shouldn’t be able to do a job.
இல்லை, எனக்கு செய்ய முடியாமலேயே இருக்கும் ஒரு வேலை.

Should you be able to speak perfect English very soon?
உனக்கு பேசமுடியுமாகவே இருக்குமா முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்?
Yes, I should be able to speak perfect English very soon.
ஆம், எனக்கு பேசமுடியுமாக இருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.
No, I shouldn’t be able to speak perfect English very soon.
இல்லை, எனக்கு பேசமுடியாமலேயே இருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.

மேலும் 10 வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பயிற்சி செய்யுங்கள்.

1. I should be able to go to university.
எனக்கு போக முடியுமாகவே இருக்கும் பல்கலைக் கழகத்திற்கு

2. I should be able to speak perfect English very soon.
எனக்கு பேச முடியுமாகவே இருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.

3. I should be able to improve my English knowledge.
எனக்கு வளர்த்துக்கொள்ள முடியுமாகவே இருக்கும் எனது ஆங்கில அறிவை.

4. I should be able to become a chief executive.
எனக்கு ஆகமுடியுமாகவே இருக்கும் ஒரு பிரதான நிறைவேற்று அதிகாரியாக.

5. I should be able to practice English every day.
எனக்கு பயிற்சிப்பெற முடியுமாகவே இருக்கும் ஆங்கிலம் ஒவ்வொரு நாளும்.

6. I should be able to go tomorrow
எனக்கு போக முடியுமாகவே இருக்கும் நாளை(க்கு)

7. I should be able to change my name.
எனக்கு மாற்ற முடியுமாகவே இருக்கும் எனது பெயரை

8. I should be able to answer.
எனக்கு பதிலளிக்க முடியுமாகவே இருக்கும்.

9. I should be able to build a house
எனக்கு கட்ட முடியுமாகவே இருக்கும் ஒரு வீடு.

10. I should be able to publish an English grammar book.
எனக்கு வெளியிட முடியுமாகவே இருக்கும் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம்.

Homework:

A. மேலே நாம் கற்ற வாக்கியங்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பின்பற்றி இந்த 10 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

c. நீங்களாகவே இன்றையப் பாடத்தின் "Should be able to" வாக்கியங்களை அமைத்து கேள்வி கேட்டும், பதிலளித்தும் பயிற்சி செய்யுங்கள்.

கவனிக்கவும்

இவ்வாக்கிய அமைப்புகளின் கேள்விகள் (Question) அநேகமாக செய்ய முடியாதவற்றை அல்லது செய்யக்கூடாதவற்றை கேள்வி கேட்பதுப் போன்றே அமைகின்றது. அதாவது, உனக்கு ஒரு பயனச்சீட்டை தொடரூந்தில் வாங்க முடியுமா? உனக்கு சுடுகலனை வேலைக்கு எடுத்துச்செல்ல முடியுமா? போன்ற (இடக்கு முடக்கான) கேள்விகளாக இவை அமைந்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

செய்யமுடியுமாக இருப்பவற்றை "உன்னால் செய்ய முடியுமாகவே இருக்குமா" போன்று சந்தேகத்துடன் வினவும் வாக்கியங்களாகவும் இவை இருக்கும்.

உதாரணம்:

Should you be able to buy a ticket on the train?
உனக்கு வாங்க முடியுமாகவே இருக்குமா ஒரு பயன அனுமதிச்சீட்டு தொடரூந்தில்?

Should you be able to take your gun to work?
உனக்கு எடுத்துச்செல்ல முடியுமாகவே இருக்குமா உன்னுடைய சுடுகலனை வேலைக்கு?

Should you be able to vote without your ID card?
உனக்கு வாக்களிக்க முடியுமாகவே இருக்குமா உன்னுடைய அடையாள அட்டையின்றி?

Should you be able to sell your kidneys on the open market?
உனக்கு விற்கமுடியுமாகவே இருக்குமா உன்னுடையை சிறு நீரகங்களை திறந்தவெளிச் சந்தையில்?

Should you be able to buy a piece of the moon?
உனக்கு வாங்க முடியுமாகவே இருக்குமா நிலவின் ஒரு துண்டை?

நேர்மறை (Positive) வாக்கிய அமைப்புகளின் போது இவை நம்பிக்கையை, உறுதியை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.

உதாரணம்:

Madonna should be able to adopt a child.
மடோனாவிற்கு தத்தெடுக்க முடியுமாகவே இருக்கும் ஒரு குழந்தை.

Two things a man should be able to do.
இரண்டு விடயங்கள் ஒரு மனிதனுக்கு செய்ய முடியுமாகவே இருக்கும்.

I think I should be able to go tomorrow.
நான் நினைக்கிறேன் எனக்கு போக முடியுமாகவே இருக்கும் நாளை.

Muslims in Britain should be able to live under Sharia law.
முஸ்லிம்களுக்கு பிரித்தானியாவில் வாழ முடியுமாகவே இருக்கும் ஷாரியா சட்டத்தின் கீழ்.

You should be able to post comments anonymously without your ID.
உனக்கு பின்னூட்டமிட முடியுமாகவே இருக்கும் அனானியாக உன்னுடைய அடையாளமின்றி.

எதிர்மறையின் (Negative) போது இவை, திட்டவட்டமாக ஒன்றை (முடியாமலேயே இருக்கும்) என மறுக்கும் அல்லது நம்பிக்கையற்ற வார்த்தைகளின் வெளிப்பாடாகவே இவ்வாக்கிய அமைப்புகள் பயன்படுகின்றது.

உதாரணம்:

5 things you shouldn't be able to buy on eBay.
5 பொருற்களை உனக்கு வாங்க முடியாமலேயே இருக்கும் ஈபேயில்.

Parents shouldn't be able to name kids whatever they want.
பெற்றோருக்கு பெயர் வைக்க முடியாமலேயே இருக்கும் குழந்தைகளுக்கு வேண்டிய (பெயர்களை/குழந்தைகள் விரும்பும் பெயர்களை)

You shouldn’t be able to buy a piece of the moon.
உனக்கு வாங்க முடியாமலேயே இருக்கும் நிலவின் ஒரு பகுதியை/துண்டை.

User shouldn't be able to change the metadata file name.
பயனருக்கு மாற்ற முடியாமலேயே இருக்கும் மேனிலைத்தரவுக்கோப்பின் பெயரை.

Some people shouldn't be able to vote in Sri Lanka.
சில மக்களுக்கு வாக்களிக்க முடியாமலேயே இருக்கும் இலங்கையில்
-----------------------------------------------------------------
சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி 22 (may be able to)

இன்றையப் பாடம் Grammar Patterns 01 இன் இலக்க வரிசைப்படி 25 வது வாக்கியமாகும்.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

இந்த வாக்கிய அமைப்பைச் சற்று கவனியுங்கள். இதில் “may be” என்பது செய்ய”லாம்”, பார்க்க”லாம்”, வர”லாம்” போன்ற நிச்சயமற்றத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.

அதேவேளை “+ able to” சாத்தியத்தை அல்லது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகின்றது. இதில் ஆங்கில பாடப் பயிற்சி 16 இல் “முடியும்” எனும் நிகழ்காலப் பயன்பாட்டினையும், ஆங்கில பாடப் பயிற்சி 17 இல் “முடிந்தது” எனும் இறந்தக் காலப் பயன்பாட்டினையும் கடந்தப் பாடங்களில் கற்றோம். இன்றைய இப்பாடத்தில் “may” உடன் “be able to” இணைந்து “முடியுமாக இருக்கலாம்” என நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

இந்த வாக்கிய அமைப்புகளில் தன்னிலை, முன்னிலை, படர்க்கை (First, Second, Third person) மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "may be able to" மட்டுமே பயன்படுகின்றது. கீழே கவனியுங்கள்.

Positive (Affirmative)
Subject + be + able + infinitive
I /You /He /She /It / We / You /They + may be + able + to do a job.

Negative
Subject + be + not + able + infinitive
I /You /He /She /It /You /We /They + may + not + be + able + to do a job

Question (Interrogative)
Be + subject + be + able + infinitive
May + I /you /he /she /it /you /we /they + be able + to do a job?

+ be able to ஒரு துணைவினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாக்கிய அமைப்புக்களில் எப்பொழுதும் பிரதான வினைக்கு முன் “to” எனும் முன்னொட்டு இணைந்தே பயன்படும். (be able to has an infinitive form)

சரி இப்பொழுது வழமைப்போல் இவ்வாக்கிய அமைப்புக்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்வோம்.

May you be able to do a job?
உன்னால் செய்ய முடியுமாக இருக்குமா (லாமா) ஒரு வேலை?
I may be able to do a job.
என்னால்/எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.
I may not be able to do a job.
என்னால்/எனக்கு செய்ய முடியாமலிருக்கலாம் ஒரு வேலை.

May you be able to speak in English very soon?
உன்னால் பேசமுடியுமாக இருக்குமா (லாமா) ஆங்கிலத்தில் வெகு விரைவில்?
I may be able to speak in English very soon.
என்னால்/எனக்கு பேசமுடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில் வெகு விரைவில்.
I may not be able to speak in English very soon.
என்னால்/எனக்கு பேசமுடியாமலிருக்கலாம் ஆங்கிலத்தில் வெகு விரைவில்.

May you be able to go to university?
உன்னால் போகமுடியுமாக இருக்குமா (லாமா) பல்கலைக் கழகத்திற்கு?
I may be able to go to university.
என்னால்/எனக்கு போக முடியுமாக இருக்கலாம் பல்கலைக்கழகத்திற்கு.
I may not be able to go to university.
என்னால்/எனக்கு போக முடியாமலிருக்கலாம் பலகலைக்கழகத்திற்கு.

மேலும் 10 வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். பிழையற்ற உச்சரிப்புப் பயிற்சிக்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

1. I may be able to go to Australia.
எனக்கு போக முடியுமாக இருக்கலாம் அவுஸ்திரேலியாவிற்கு.

2. I may be able to read novels in the hostel.
எனக்கு வாசிக்க முடியுமாக இருக்கலாம் நாவல்கள் விடுதியில்.

3. I may be able to sing in the concert.
எனக்கு பாட முடியுமாக இருக்கலாம் சங்கீதக் கச்சேரியில்.

4. I may be able to vote next year.
எனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கலாம் அடுத்த வருடம்.

5. I may be able to go to China.
எனக்கு போகமுடியுமாக இருக்கலாம் சீனாவிற்கு.

6. I may be able to return back home tomorrow.
எனக்கு திரும்பி வர முடியுமாக இருக்கலாம் வீட்டிற்கு நாளை.

7. I may be able to buy an iPhone.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கலாம் ஓர் ஐபோன்.

8. I may be able to submit to the court.
எனக்கு ஒப்படைக்க முடியுமாக இருக்கலாம் நீதிமன்றில்.

9. I may be able to demonstrate that.
எனக்கு மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கலாம் அதை.

10. I may be able to marry next year.
எனக்கு திருமணம் செய்யமுடியுமாக இருக்கலாம் அடுத்த வருடம்.

Homework:

A. மேலே நாம் கற்ற வாக்கியங்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பின்பற்றி இந்த 10 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. ஒரு சம்பவம் அல்லது செயலின் ஆற்றலை, சாத்தியத்தின் நிச்சயமற்றத் தன்மையை வெளிப்படுத்தும் வாக்கியங்களாக “முடியுமாக இருக்கலாம், முடியாமல் இருக்கலாம்” என இரண்டு பட்டியல்களாக இட்டு எழுதிப் பயிற்சி பெறுங்கள்.

D. வழமையாகக் கூறுவதையே இன்றும் கூறுகின்றோம். உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்விக் கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யுங்கள். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். இதுவே எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கான வழி. ஆரம்பத்தில் விடப்படும் சிறுப் பிழைகளும் காலப்போக்கில் மறைந்து நம்மலாலும் வெகு விரைவில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசமுடியும்.

குறிப்பு

கேட்கப்படும் கேள்விகளுக்கு உறுதியான, சரியான பதில்களாக அல்லாமல், நிச்சயமற்ற பதில்களுக்காகவே இவ்வாக்கிய அமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. எனவே இவ்வாக்கிய அமைப்புகள் பதில்களாகவே அதிகம் பயன்படுகின்றன. கேள்விகளாகப் பயன்படுவது மிகக் குறைவு.

சிறு விளக்கம் (இப்பாடத்துடன் தொடர்புடையது)

இந்த “able” எனும் சொல் ஒரு (Adjective) பெயரெச்சமாகும். இது ஆற்றலை, சாத்தியத்தை வெளிப்படுத்தப் பயன்படுகின்றது. அதாவது “முடியும்/ முடியுமாக” எனும் அர்த்தத்தில் பயன்படுகின்றது என்பதை நாம் இப்பாடத்திலும் கடந்தப் பாடங்களிலும் கற்றுள்ளோம்.

இந்த “able” பிற்சேர்க்கையாகவும் பயன்படுகின்றது. அப்பொழுது இதன் அர்த்தம் முடியுமான/ கூடிய/ தகுந்த என்பதுப் போன்று பயன்படுகின்றது. கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.

Eat – சாப்பிடு
Able – முடியுமான/கூடிய
Eatable – சாப்பிடக் கூடிய/முடியுமான

Love – நேசி
Able – முடியுமான/கூடிய
Loveable – நேசிக்கக் கூடிய/முடியுமான

Use - பயன்படுத்து
Able – முடியுமான/கூடிய
Usable – பயன்படுத்தக் கூடிய/முடியுமான

Sale – விற்பனைச் செய்
Able – முடியுமான/ கூடிய
Salable – விற்பனைச்செய்யக் கூடிய/முடியுமான

மேலும் இது போன்ற சொற்களை அறிய விரும்புவோர் சொற்களஞ்சியத்தில் பார்க்கலாம். (அடுத்தப் பதிவில் தருகின்றோம்.)

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun
Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி 19 (will be able to)

Grammar Patterns -1 றில் 23 மற்றும் 24 வதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். அவ்விரண்டு வாக்கியங்களையே இன்று விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து இலக்க வரிசையில் தொடரும் படி கேட்டுக் கொள்கின்றோம். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சியைத் தொடர எளிதாக இருக்கும்.

ஆற்றலை அல்லது சாத்தியத்தை வெளிப்படுத்தும் நிகழ்கால வாக்கிய அமைப்புக்களை (can, am/is/are able to +) ஆங்கில பாடப் பயிற்சி 16 இல் கற்றோம். அவற்றின் இறந்தக்காலப் பயன்பாடுகளாக (could, was/were able to +) ஆங்கில பாடப் பயிற்சி 17 இல் கற்றோம். இன்று இவற்றின் எதிர்காலப் பயன்பாடுகளை பார்ப்போம்.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.
24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

இவை சாதாரண எதிர்கால வாக்கியங்களாகும். அதாவது ஆற்றலை அல்லது சாத்தியத்தை வெளிப்படுத்துவதற்கான சாதாரண எதிர்கால (Simple Future Tense)வாக்கியங்கள். இந்த வாக்கிய அமைப்புகளில் தன்னிலை, முன்னிலை, படர்க்கை (First, Second, Third person) மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will be able to" மட்டுமே பயன்படுகின்றது. கீழே கவனியுங்கள்.

Positive (Affirmative)
Subject + be + able + infinitive
I /You /He /She /It / We / You /They + will be + able + to do a job.

Negative
Subject + be + not + able + infinitive
I /You /He /She /It /You /We /They + won’t be + able + to do a job

Question (Interrogative)
Be + subject + be able + infinitive
Will
+ I /you /he /she /it /you /we /they + be able + to do a job?

+ be able to ஒரு துணைவினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாக்கிய அமைப்புக்களில் எப்பொழுதும் பிரதான விணைக்கு முன் “to” எனும் முன்னொட்டு இணைந்தே பயன்படும். (be able to has an infinitive form)

சரி இப்பொழுது வழமைப்போல் இவ்வாக்கிய அமைப்புக்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்வோம்.

Will you be able to do a job?
உனக்கு செய்ய முடியுமாக இருக்குமா ஒரு வேலை?
Yes, I will be able to do a job.
ஆம், எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.
No, I won’t be able to do a job. (will + not)
இல்லை, எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

Will you be able to speak perfect English very soon?
உனக்கு பேசமுடியுமாக இருக்குமா முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்?
Yes, I will be able to speak perfect English very soon.
ஆம், எனக்கு பேசமுடியுமாக இருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.
No, I won’t be able to speak perfect English very soon.
இல்லை, எனக்கு பேசமுடியாமலிருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.

Will you be able to go to university next year?
உனக்கு போகமுடியுமாக இருக்குமா பல்கலைக் கழகத்திற்கு அடுத்த வருடம்?
Yes, I will be able to go to university next year.
ஆம், எனக்கு போகமுடியுமாக இருக்கும் பல்கலைக் கழகத்திற்கு அடுத்த வருடம்.
No, I won’t be able to go to university next year. (will + not)
இல்லை, எனக்கு போகமுடியாமலிருக்கும் பலகலைக்கழகத்திற்கு அடுத்த வருடம்.

மேலும் 25 வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். பிழையற்ற உச்சரிப்புப் பயிற்சிக்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

1. I will be able to study.
எனக்கு கற்க முடியுமாக இருக்கும்.

2. I will be able to study both arts and sciences.
எனக்கு இரண்டையும் கற்க முடியுமாக இருக்கும் கலையையும் விஞ்ஞானத்தையும்.

3. I will be able to dance.
எனக்கு நடனமாட முடியுமாக இருக்கும்.

4. I will be able to vote.
எனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கும்.

5. I will be able to go to China.
எனக்கு போகமுடியுமாக இருக்கும் சீனாவிற்கு.

6. I will be able to improve my English knowledge.
எனக்கு வளர்த்துக்கொள்ள முடியுமாக இருக்கும் ஆங்கில அறிவை.

7. I will be able to speak in English.
எனக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில்.

8. I will be able to become a chief executive.
எனக்கு ஆகமுடியுமாக இருக்கும் பிரதான நிறைவேற்று அதிகாரியாக.

9. I will be able to pass the exam.
எனக்கு தேர்வடைய முடியுமாக இருக்கும் பரீட்சையில்.

10. I will be able to fly to Canada
எனக்கு பறக்க முடியுமாக இருக்கும் கனடாவிற்கு.

11. I will be able to vote via internet.
எனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கும் இணையத்தின் ஊடாக.

12. I will be able to solve problems
எனக்கு தீர்க்க முடியுமாக இருக்கும் பிரச்சினைகளை.

13. I will be able to become an IPS officer.
எனக்கு ஆகமுடியுமாக இருக்கும் ஓர் IPS பணியாளராக.

14. I will be able to receive voice-mail.
எனக்கு பெறமுடியுமாக இருக்கும் குரலஞ்சல்.

15. I will be able to come to New York.
எனக்கு வரமுடியுமாக இருக்கும் நியூ யோர்கிற்கு.

16. I will be able to get my land.
எனக்கு பெற முடியுமாக இருக்கும் எனது நிலத்தை.

17. I will be able to become famous in the world.
எனக்கு பிரசித்திப்பெற முடியுமாக இருக்கும் உலகில்.

18. I will be able to buy a submarine.
எனக்கு வாங்க முடியுமாக இருக்கும் ஓர் நீர்மூழ்கிக்கப்பல்.

19. I will be able to do my duty accurately.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் எனது கடமையை மிகச்சரியாக.

20. I will be able to marry next year.
எனக்கு திருமணம் செய்யமுடியுமாக இருக்கும் அடுத்த வருடம்.

21. I will be able to swim in the sea.
நான் நீந்த முடியுமாக இருக்கும் கடலில்.

22. I will be able to solve problems.
எனக்கு தீர்க்க முடியுமாக இருக்கும் பிரச்சினைகளை.

23. I will be able to submit to the court.
எனக்கு ஒப்படைக்க முடியுமாக இருக்கும் நீதிமன்றில்.

24. I will be able to demonstrate that.
எனக்கு மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கும் அதை.

25. I will be able to win the world
எனக்கு வெல்ல முடியுமாக இருக்கும் உலகை.

Homework:

A. மேலே நாம் கற்றச் சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பின்பற்றி இந்த 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. இன்று நாம் கற்ற (will be able to) ஆற்றல் மற்றும் சாத்தியத்தை வெளிப்படுத்தும் எதிர்கால வாக்கியங்களை உதாரணமாக எடுத்து உங்கள் எதிர்கால வாழ்க்கையில் உங்களால் என்னென்ன செய்ய முடியுமாக இருக்கும், என்னென்ன செய்ய முடியாமலிருக்கும் என நீங்கள் நினைக்கின்றீர்களோ அவற்றை இரண்டுப் பட்டியல்களாக எழுதுங்கள். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிந்து, உங்களின் வாசிக்கும் ஆற்றலையும், ஆங்கில அறிவையும் அதிவேகமாக வளர்த்துக்கொள்ள உதவும். அதேவேளை எழுத்தாற்றலையும் எளிதாக பெற்றுவிடலாம்.

D. உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்விக் கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். அது கூடிய பயனை உங்களுக்குத் தரும்.

குறிப்பு:

ஆங்கில உரையாடல்களின் போது இலகுவாகவும் வேகமாகவும் பேசுவதற்கு ஆங்கில "short form" சுருக்க உச்சரிப்பு பயன்பாடுகள் முக்கியமானது. எனவே இதுப் போன்ற "short form" முறைகளைப் பின்பற்றி ஆங்கிலத் தொனிக்கேற்ப பேசிப் பழகுங்கள்.

இப்பாடத்தின் I will be able to என்பதன் சுருக்கப்பயன்பாடு I’ll be able to ஆகும்.

இதன் எதிர்மறை வாக்கிய அமைப்புகளில் (won’t be able to) என்பதில் காணப்படும் “won’t” என்பது will + not இன் சுருக்கப்பயன்பாடாகும்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun Download As PDF