Showing posts with label English Grammar Patterns. Show all posts
Showing posts with label English Grammar Patterns. Show all posts

முன்னிடைச்சொற்கள் பட்டியல் (List of Prepositions)

ஆங்கில இலக்கணத்தின் பேச்சின் கூறுகளில் முன்னிடைச்சொற்களும் ஒன்றாகும். முன்னிடைச்சொற்கள் ஆங்கில மொழியில் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் அடிக்கடி பயன்படும் 70 முன்னிடைச்சொற்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

முன்னிடைச்சொற்களின் பயன்பாடு குறித்தப் பாடங்களை கீழே பார்க்கவும்.

உச்சரிப்பு பயிற்சிப்பெற விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறலாம்.

No:Englishதமிழ்
1aboardகப்பலில்/கப்பல் தளத்தில்
2about கிட்டத்தட்ட/ சுமார்/ பற்றி/ சுற்றிலும்
3above மேலே/ மேல்
4across குறுக்கே
5after பின்னால்/ பிறகு / பின்
6against எதிராக/
7along நீள்வட்டத்தில்/ நெடுக
8amid மத்தியில்/ இடையில்
9among (பலவற்றின்) நடுவில்/ (பலவற்றிற்கு) இடையே
10anti எதிரான/ எதிர்
11around சுற்றிலும்/ சூழ்ந்து / சுமார் / கிட்டத்தட்ட
12as போல்/ போல / போன்ற / என
13atஇல்/ இன்
14before முன்னர் / முன் / முன்பு / முன்னால்
15behind பின்னால் / பின் / பின்னனியில்
16below கீழே/ கீழ் / அடியில் 
17beneath கீழே/ கீழுருக்கும்
18beside அருகில்/ பக்கத்தில்
19besides மேலும்/...ஐத் தவிர/ தவிர வேறு
20between (இரண்டுக்கு) இடையில்/நடுவே
21beyond அப்பால்/அப்பாற்பட்ட
22but ஆனால் / மாறாக
23byஆல்/ மூலம்/ அருகில்
24concerning அக்கறையுடன்/ தொடர்பான / சம்பந்தமாக / குறித்து
25consideringபரிசீலித்து/ கருத்தில் கொண்டு/ கருதி
26despite ஆனபோதிலும்/ போதிலும் / ஆயினும்/ இருப்பினும்
27down கீழே / குறைத்து
28during... காலத்தில்/...பொழுது / காலக்கட்டத்தில் / சமயத்தில்
29except தவிர / தவிர்த்து
30excepting தவிர/நீங்கலாக
31excluding விலக்குகின்ற/தவிர்க்கின்ற
32following தொடர்ந்து / பின்வரும் 
33for ...க்காக/...கு
34from... லிருந்து / இருந்து
35in ... இல் / ... இன்
36inside உள்பக்கம் / உட்புறம் / உள்ளே
37intoஉள்ளுக்குள்/உள்நோக்கி
38like போன்ற / ஒத்த
39minusகழித்து /குறைய / நீக்கிய
40nearஅருகில் / அருகாமையில்
41of ...இன்/...இல்
42off மூடு/ அணை / அப்பால்
43onமீது / மேல் / ... இல்
44ontoஅதனுள்/ க்குள்
45oppositeஎதிரான / எதிராக / எதிர்
46outside வெளிப்புறம்/ வெளியே/ வெளியில்
47overமேலே / மேல்/ மேலாக
48past கடந்த / கடந்த கால
49per ஆக / ஒன்றிற்கு / வீதம்
50plus...கூட / அத்துடன் / கூடுதலாக / மேலதிகமாக
51regarding குறித்து / சம்பந்தமாக/ தொடர்பான / தொடர்பாக / பற்றி
52roundசுற்றி/ சுற்றிலும்
53since... லிருந்து/ இருந்து / ...முதல்
54than விட / ... விடவும் 
55through ஊடாக / மூலம் / மூலமாக
56to ...க்கு 
57toward ... நோக்கி/ ... க்காக
58towardsநோக்கிய / மீதான
59under அடியில்/... ன் கீழே
60underneath அடியில்/ கீழாக
61unlike போலில்லாத / போலன்றி 
62until வரை / வரைக்கும் / மட்டும்
63up மேலே / மேல்
64uponமீது / மேல் / அடிப்படையில்
65versus எதிராக / எதிர்
66viaவழியாக / மூலமாக
67with உடன்
68within அத்துடன்
69withoutஇல்லாமல் / இன்றி
70throughoutமுழுவதும் / முழுதும் / முழுவதிலும்

இப்பட்டியலில் வழங்கப்பட்டுள்ள முன்னிடைச்சொற்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலம் கற்பதற்கு முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளை சரியாக விளங்கிக்கொள்ளல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்த இடத்தில் எந்த முன்னிடைச்சொல்லை பயன்படுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வாக்கியங்களில் பொருத்தமற்ற முன்னிடைச்சொற்களை பயன்படுத்திவிட்டால் முழு வாக்கியத்தின் பொருளே மாறிவிடும்.

குறிப்பு:
மேலே உள்ள பட்டியலில் 70 முன்னிடைச்சொற்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் நூற்றுக் கணக்கான முன்னிடைச் சொற்கள் உள்ளன. உங்கள் ஆங்கில மொழி ஆளுமையை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினால் இப்பட்டியிலில் உள்ளடக்கப்படாத முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.

கவனிக்கவும்:
இங்கே இப்படியலில் உள்ள சொற்கள், முன்னிடைச்சொற்களாக பயன்படும் போதான தமிழ் பொருளே மேலே வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை இச்சொற்கள் முன்னிடைச்சொற்கள் அல்லாத ஏனையப் பயன்பாட்டின் போது அவற்றில் பொருள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

தொடர்புடைய பாடங்கள்:
ஆங்கில வாக்கியங்களில் முன்னிடைச்சொற்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதனை பயில விரும்புவோர் கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி பயிற்சி பெறவும்.


சரி! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி — 3 (Grammar Patterns — 3)

நாம் ஏற்கெனவே கற்ற Grammar Patterns — 1, Grammar Patterns — 2 போன்றே இந்த Grammar Patterns — 3 லும் ஒரு வாக்கியத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு அவ்வாக்கியத்தை 73 ன்று வாக்கியங்களாக மாற்றிப் பயிற்சி செய்யப் போகின்றோம்.

ஆனால் Grammar Patterns — 1 றைப் போன்றல்லாமல் Grammar Patterns — 2 இல் சிற்சில  இலக்கண மாற்றங்கள் உள்ளன. அவ்வாறே இன்றைய "Grammar Patterns 3" லும் சிற்சில இலக்கங்களின் போது ஏற்படும் இலக்கண மாற்றங்களைக் கவனியுங்கள். இவற்றைச் சரியாக விளங்கிக் கற்பீர்களானால் ஆங்கில இலக்கணம் கற்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.

Grammar Patterns — 1 இல் I "First Person Singular" உடன் "am" இணைந்து வந்திருந்தது.

Grammar Patterns — 2 இல் He, She, It " Third Person Singular" உடன் "is" இணைந்து வந்திருந்தது.

இன்று இந்த Grammar Patterns -3 இல் "You" என்னும் "Second Person Singular" உடனும், "We, They, You ஆகிய "Plural" பன்மையுடனும், "are" இணைந்து வருகின்றது.

அதாவது "You — நீ/உனக்கு" எனும் ஒருமையுடனும், "We — நாம்/ நாங்கள்/ எமக்கு/ எங்களுக்கு, They — அவர்கள் /அவைகள் எனும் பன்மையுடனும் "are" என்னும் நிகழ்கால துணைவினை சொல் இணைந்து வரும்.

இவ்வாறு "Grammar Patterns —3" இல் இரண்டாவது வாக்கியமான "We are going to school" என்பதில் ஏற்படும் "are" எனும் சொல்லின் மாற்றத்தை தொடர்ந்து 2, 8, 9, 10, 13, 14, 16, 18, 20, 22, 56, போன்ற இலக்கங்களின் போது ஏற்படும் இலக்கண மாற்றத்தையும் கவனியுங்கள். 

இன்றையப் பாடத்தில் "go to school" எனும் வாக்கியத்தை எடுத்துக்காட்டாக எடுத்து பயிற்சி செய்வோம்.

Go to school


1. We go to school.
நாங்கள் போகிறோம் பாடசாலைக்கு.

2. We are going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு.

3. We went to school.
நாங்கள் போனோம் பாடசாலைக்கு.

4. We didn't go to school.
நாங்கள் போகவில்லை பாடசாலைக்கு.

5. We will go to school.
நாங்கள் போவோம் பாடசாலைக்கு.

6. We won’t go to school.
நாங்கள் போகமாட்டோம் பாடசாலைக்கு.

7. Usually, we don’t go to school.
சாதாரணமாக, நாங்கள் போகின்றோமில்லை பாடசாலைக்கு.

8. We are not going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமில்லை பாடசாலைக்கு.

9. We were going to school.
நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு

10. We weren't going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.

11. We will be going to school.
நாங்கள் போய்க்கொண்டிருப்போம் பாடசாலைக்கு.

12. We won’t be going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்க மாட்டோம் பாடசாலைக்கு.

13. We are going to go to school.
நாங்கள் போகப்போகின்றோம் பாடசாலைக்கு.

14. We were going to go to school.
நாங்கள் போகப்போனோம் பாடசாலைக்கு.

15. We can go to school.
16. We are able to go to school.
எங்களுக்கு போக முடியும் பாடசாலைக்கு.

17. We can’t go to school
18. We are unable to go to school.
எங்களுக்கு போகமுடியாது பாடசாலைக்கு.

19. We could go to school.
20. We were able to go to school.
எங்களுக்கு போக முடிந்தது பாடசாலைக்கு.

21. We couldn't go to school.
22. We were unable to go to school.
எங்களுக்கு போக முடியவில்லை பாடசாலைக்கு.

23. We will be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாக இருக்கும் பாடசாலைக்கு.

24. We will be unable to go to school
எங்களுக்கு போக முடியாமலிருக்கும் பாடசாலைக்கு.

25. We may be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாக இருக்கலாம் பாடசாலைக்கு.

26. We should be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாகவே இருக்கும் பாடசாலைக்கு.

27. We have been able to go to school
எங்களுக்கு [ஒரு கட்டத்திலிருந்து — தற்போதுவரை] போகமுடியுமாக இருக்கின்றது பாடசாலைக்கு.

28. We had been able to go to school.
எங்களுக்கு [அக்காலத்திலிருந்து - ஒரு கட்டம்வரை] போக முடியுமாக இருந்தது பாடசாலைக்கு.

29. We may go to school.
30. We might go to school.
31. We may be going to school
நாங்கள் போகலாம் பாடசாலைக்கு.

32. We must go to school.
நாங்கள் போகவேண்டும் பாடசாலைக்கு. (கட்டாயம்/அழுத்தம்)

33. We must not go to school.
நாங்கள் போக வேண்டியதில்லை பாடசாலைக்கு.
நாங்கள் போகக்கூடாது பாடசாலைக்கு. (அழுத்தம்)

34. We should go to school.
நாங்கள் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக அழுத்தம்)

35. We shouldn't go to school.
நாங்கள் போகவே வேண்டியதில்லை பாடசாலைக்கு.
நாங்கள் போகவே கூடாது பாடசாலைக்கு (மிக அழுத்தம்)

36. We ought to go to school.
நாங்கள் எப்படியும் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக மிக அழுத்தம்)

37. We don’t mind going to school.
எங்களுக்கு (எந்த) மறுப்புமில்லை போவதற்கு பாடசாலைக்கு.

38. We have to go to school.
நாங்கள் போகவேண்டும் பாடசாலைக்கு.

39. We don’t have to go to school.
நாங்கள் போகவேண்டியதில்லை பாடசாலைக்கு.

40. We had to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்பட்டது பாடசாலைக்கு.

41. We didn’t have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படவில்லை பாடசாலைக்கு.

42. We will have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படும் பாடசாலைக்கு.

43. We won’t have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படாது பாடசாலைக்கு.

44. We need to go to school.
நாங்கள் / எங்களுக்கு தேவையிருக்கிறது போக பாடசாலைக்கு.

45. We needn't to go to school.
45. We don't need to go to school.
நாங்கள் / எங்களுக்கு தேவையில்லை போக பாடசாலைக்கு.

46. He seems to be going to school.
அவன் போகின்றான் போல் தெரிகின்றது பாடசாலைக்கு.

47. He doesn't seem to be going to school.
அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு.

48. He seemed to be going to school.
அவன் போகின்றான் போல் தெரிந்தது பாடசாலைக்கு.

49. He didn't seem to be going to school.
அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு.

50. Going to school is useful.
போவது பாடசாலைக்குப் பயன்மிக்கது.

51. Useless going to school.
பயனில்லை போவது பாடசாலைக்கு.

52. It is better to go to school.
மிக நல்லது போவது பாடசாலைக்கு.

53. We had better go to school.
நாங்கள் / எங்களுக்கு மிக நல்லது போவது பாடசாலைக்கு.

54. We made him go to school.
நாங்கள் அவனைப் போகவைத்தோம் பாடசாலைக்கு.

55. We didn't make him go to school.
நாங்கள் அவனைப் போகவைக்கவில்லை பாடசாலைக்கு.

56. To go to school, we are ready.
போவதற்கு பாடசாலைக்கு, நாங்கள் தயார்.

57. We used to go to school
நாங்கள் பழக்கப்பட்டிருந்தோம் போக பாடசாலைக்கு.

58. Shall we go to school?
போவோமா பாடசாலைக்கு?

59. Let’s go to school.
போவோம் பாடசாலைக்கு.

60. We feel like going to school.
எங்களுக்கு நினைக்கின்றது போவதற்குப் பாடசாலைக்கு.

61. We don’t feel like going to school.
எங்களுக்கு நினைக்கின்றதில்லை போவதற்குப் பாடசாலைக்கு.

62. We felt like going to school.
எங்களுக்கு நினைத்தது போவதற்குப் பாடசாலைக்கு.

63. We didn't feel like going to school.
எங்களுக்கு நினைக்கவில்லை போவதற்குப் பாடசாலைக்கு.

64. We have been going to school.
நாங்கள் [ஒரு கட்டத்திலிருந்து — தற்போதுவரை] போய்க்கொண்டிருக்கிறோம் பாடசாலைக்கு.

65. We had been going to school.
நங்கள் [அக்காலத்திலிருந்து — ஒரு கட்டம்வரை] போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு.

66. We see him going to school.
எங்களுக்கு தெரிகின்றது அவன் போகின்றான் பாடசாலைக்கு.

67. We don’t see him going to school.
எங்களுக்கு தெரிகின்றதில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு.

68. We saw him going to school.
எங்களுக்கு தெரிந்தது அவன் போகின்றான் பாடசாலைக்கு.

69. We didn't see him going to school.
எங்களுக்கு தெரியவில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு.

70. If we go to school, we will get good results.
நாங்கள் போனால் பாடசாலைக்கு, நாங்கள் பெறுவோம் நல்ல பெறுபேறுகள்.

71. If we don’t go to school, we won’t get good results.
நாங்கள் போகாவிட்டால் பாடசாலைக்கு, நாங்கள் பெறமாட்டோம் நல்ல பெறுபேறுகள்.

72. If we had gone to school, we would have got good results.
நாங்கள் போயிருந்திருந்தால் பாடசாலைக்கு, நாங்கள் பெற்றிருந்திருந்திருப்போம் நல்ல பெறுபேறுகள். (போகவுமில்லை; பெறவுமில்லை)

73. It is time we went to school.
இது தான் நேரம் நாங்கள் போவதற்கு பாடசாலைக்கு.

Homework:


1. We pray.
நாங்கள் வணங்குகின்றோம்.
2. We learn English.
நாங்கள் கற்கின்றோம் ஆங்கிலம்.
3. We watch a movie.
நாங்கள் பார்க்கின்றோம்  ஒரு திரைப்படம்.
4. We listen to songs.
நாங்கள் செவிமடுக்கின்றோம் பாடல்களுக்கு.
5. We have lunch.
நாங்கள் உண்கின்றோம் பகலுணவு.

இவ்வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் முறையே 73 வாக்கியங்களாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள். அவ்வாறு பயிற்சி செய்தால் தான் இப்பாடத்திட்டத்தின் முழுமையான பயனை நீங்கள் பெற முடியும்.

அடுத்தப் பாடங்களில் நாம் கற்ற 73 வாக்கியங்களும் ஒவ்வொரு பாடமாக விரிவடையும். அப்போது அதனதன் பயன்பாடுகள் பற்றியும் இலக்கண விதிமுறைகள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

கீழுள்ள இலக்கங்களின் போது எப்போதும் முதன்மை வினையுடன் "ing" யும் இணைந்து வரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

Example:

  • We pray
  • We are praying.

சரி பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

இந்த இலக்கண வாக்கியமைப்பு வடிவங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்பாடம் தொடர்பான ஏதேனும் ஐயம் அல்லது விளக்கம் தேவைப்படின் கீழுள்ள முன்னிகைப் பெட்டியினூடாக கேளுங்கள்.

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு

Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி – 1 (Grammar Patterns – 1)

ஆங்கிலம் வாக்கியமைப்பு வடிவங்கள் - Aangilam's Grammar Patterns
Aangilam Grammar Patterns in Tamil
முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணப் பாடப் பயிற்சி!


இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் வழங்கப்படும் ஆங்கில இலக்கணப் பாடத்திட்டமாகும். இதில் அனைத்து ஆங்கில வாக்கியமைப்பு வடிவங்களும் (Grammar Patterns) உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய விளக்கம்


எடுத்துக்காட்டாக, "I do a job" எனும் வாக்கியத்தைத் தமிழில் மொழி பெயர்ப்போமானால், "நான் ஒரு வேலை செய்கின்றேன்." என்று தான் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் "நான் செய்கின்றேன் ஒரு வேலை." என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்பதல்ல. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால்; ஆங்கில வாக்கியங்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் விளக்கத்தையும் எளிதாக விளங்கிக் கற்கலாம் என்பது எமது கருத்தாகும்.

சரி, பாடத்திற்குச் செல்வோம்.

இங்கே "do a job" எனும் ஒரு சொற்றொடரை இன்றைய பாடமாக எடுத்துக்கொள்வோம். இச்சொற்றொடரின் தமிழ்ப் பொருள் "செய் ஒரு வேலை" என்பதாகும். இதை "நான் செய்கின்றேன் ஒரு வேலை.", "நான் செய்தேன் ஒரு வேலை.", "நான் செய்வேன் ஒரு வேலை." என ஒரே வாக்கியத்தை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் விரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடியதோர் பயிற்சி முறையாகும்.

do a job


1. I do a Job.
நான் செய்கிறேன் ஒரு வேலை.

2. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

3. I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.

4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.

5. I will do a job.
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.

6. I won't do a job.
நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

7. Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.

8. I am not doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.

9. I was doing a job.
நான் செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

10. I wasn't doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.

12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.

13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.

14. I was going to do a job.
நான் செய்யப் போனேன் ஒரு வேலை.

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை

17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய்ய முடிந்தது ஒரு வேலை.

21. I couldn't do a job.
22. I was unable to do a job.
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.

24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை

27. I have been able to do a job. (Perfect Tenses பார்க்கவும்)
[ஒரு கட்டத்திலிருந்து — தற்போதுவரை] எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.

28. I had been able to do a job.
[அக்காலத்திலிருந்து — ஒரு கட்டம்வரை] எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.

29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.

32. I must do a job.
நான் (கட்டாயம்) செய்ய வேண்டும் ஒரு வேலை.(அழுத்தம்)

33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யக் கூடாது ஒரு வேலை.

34. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)

35. I shouldn't do a job.
நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை.

36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)

37. I don't mind doing a job.
எனக்கு (எந்த) மறுப்புமில்லை செய்ய ஒரு வேலை.

38. I have to do a job.
எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.

39. I don't have to do a job.
எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.

40. I had to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.

41. I didn't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.

42. I will have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.

43. I won't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.

44. I need to do a job.
எனக்கு தேவை செய்வதற்கு ஒரு வேலை.

45. I needn't to do a job.
45. I don't need to do a job.
எனக்கு தேவையில்லை செய்வதற்கு ஒரு வேலை.

46. He seems to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

47. He doesn't seem to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.

48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.

49. He didn't seem to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை

50. Doing a job is useful.
செய்வது ஒரு வேலை பயன்மிக்கது

51.
Useless doing a job.
பயனற்றது செய்வது ஒரு வேலை.

52.
It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.

53.
I had better do a job.
எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.

54.
I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.

55.
I didn't make him do a job.
நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை

56.
To do a job, I am going to go to America.
செய்வதற்கு ஒரு வேலை, நான் போகப் போகின்றேன் அமெரிக்காவுக்கு.


57. I used to do a job.
நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.

58.
Shall I do a Job?
நான் செய்யவா ஒரு வேலை?

59.
Let’s do a job.
செய்வோம் ஒரு வேலை!

60.
I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.

61.
I don't feel like doing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.

62.
I felt like doing a job.
எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.

63.
I didn't feel like doing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.

64.
I have been doing a job.
நான் [ஒரு கட்டத்திலிருந்து 
— தற்போதுவரை] செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

65.
I had been doing a job.
நான் [அக்காலத்திலிருந்து 
— ஒரு கட்டம்வரை] செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

66.
I see him doing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.

67.
I don't see him doing a job.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.

68.
I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.

69.
I didn't see him doing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.

70.
If I do a job, I will get experience.
நான் செய்தால் ஒரு வேலை, எனக்கு கிடைக்கும் பட்டறிவு.

71.
If I don't do a job, I won't get experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை, எனக்கு கிடைக்காது பட்டறிவு.

72.
If I had done a job, I would have got experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை, எனக்கு கிடைத்திருந்திருக்கும் பட்டறிவு. (செய்யவும் இல்லை; கிடைக்கவும் இல்லை)

73.
It is time I did a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.

கவனத்திற்கு:


எடுத்துக்காட்டாக, இப்பாடத்தில், "do a job" எனும் வாக்கியம் சில இலக்கங்களின் போது "doing a job" என வந்துள்ளதைப் பாருங்கள்.  அவ்விடங்களிலெல்லாம் முதன்மை வினைச்சொல்லுடன் 'ing' யும் இணைந்து பயன்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டிய இலக்கங்களைக் கீழே கொடுத்துள்ளோம். அவ்விலக்கங்களின் போது எப்போதும் முதன்மை வினைச்சொல்லுடன் "ing" யையும் சேர்த்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

  • Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

எடுத்துக்காட்டு:

  • speak in English
  • speaking in English. என்று வந்துள்ளதைக் கவனிக்கவும்.

Homework (வீட்டுப் பயிற்சி):


கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை, மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியத்தையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதிப் பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது சத்தமாக வாசித்து வாசித்து பயிற்சி செய்யுங்கள். அதுவே உங்கள் மனதில் எளிதாகப் பதியக் கூடியதாக இருக்கும்.

I speak English.
நான் பேசுகிறேன் ஆங்கிலம்.

I write a letter.
நான் எழுதுகிறேன் ஒரு கடிதம்.

I play cricket.
நான் விளையாடுகிறேன் துடுப்பாட்டம்.

I fill up the form.
நான் நிரப்புகிறேன் படிமம்.

I go to school.
நான் போகிறேன் பாடசாலைக்கு.

I do my homework.
நான் செய்கிறேன் எனது வீட்டுப்பாடம்.

I read a book.
நான் வாசிக்கிறேன் ஒரு பொத்தகம்.

I travel by bus.
நான் பயணம் செய்கிறேன் பேருந்தில்.

I ride a bike.
நான் ஓட்டுகிறேன் ஒரு உந்துருளி.

கவனிக்கவும்


எடுத்துக்காட்டாக "speak in English" எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால், அதனை:

I speak in English.
நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்.

I am speaking in English.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.

I spoke in English.
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.

I didn't speak in English.
நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

I will speak in English.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில்.

என மேலே காட்டியுள்ளதைப் போன்று, அதே வரிசையில் ஒவ்வொரு வாக்கியத்தையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதிப் பயிற்சி செய்யவும். இது மிகவும் இலகுவானதோர் பயிற்சி முறையாகும்.

Long Forms = Short Forms

  • do + not = don’t
  • does + not = doesn’t
  • did + not = didn’t
  • will + not = won’t
  • was + not = wasn’t
  • were + not = weren’t
  • can + not = can’t
  • could + not = couldn’t
  • have + not = haven’t
  • has + not = hasn’t
  • had + not = hadn’t
  • need + not = needn’t
  • must + not = mustn’t
  • should + not = shouldn’t
  • would + not = wouldn't

இப்பாடத்துடன் தொடர்புடைய இரண்டு ஆங்கில வாக்கியமைப்பு வடிவங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.


இப்பாடத்தில் நாம் கற்ற 73 வாக்கியங்களும் (அதே இலக்க வரிசையில்) ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்பொழுது அதனதன் பயன்பாடுகள் பற்றியும் இலக்கண விதிமுறைகள் பற்றியும் விரிவாகக் கற்கலாம். விரிவாக எழுதப்பட்ட பாடங்களுக்குக் குறிப்பிட்ட வாக்கியத்துடன் இணைப்பு வழங்கப்படும். அவ்விணைப்பைச் சொடுக்கி குறிப்பிட்ட பாடத்திற்குச் செல்லலாம். 

இந்த வாக்கிய வடிவமைப்புகள் தவிர, மேலும் பல வாக்கிய வடிவமைப்புகள் உள்ளன. அவை உரிய பாடங்களின் போது வழங்கப்படும்.


மேலுள்ள ஆக்கங்களையும் பார்க்கலாம்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்


"ஆங்கில இலக்கணம்" என்றவுடன், கடினமானதாகக் கருதாமல், மேலே கூறப்பட்டுள்ள முறைகளின்படி தொடர்ந்து பயிற்சி செய்யதால், ஆங்கிலம் எளிதாக உங்கள் மனதில் பதிந்து விடும். ஆங்கிலத்தில் "Well Begun is Half Done!" என்பர், அதன் பொருள் எதனையும் முறையாக ஆரம்பித்து விட்டாலே, பாதி வெற்றி" என்பதுதான். எனவே இந்த முதல் பாடம் உங்கள் ஆங்கில மொழியறிவுக்கான சிறந்த தொடக்கமாக இருக்கட்டும்! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முடிந்தவரை ஐயமின்றி சத்தமாக பேசிப் பேசி பயிற்சி செய்யுங்கள். அதுவே கூடிய விரைவில் இயல்பாக ஆங்கிலம் பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கான வழிமுறையாகும்.

மீண்டும் கூறிக்கொள்கின்றோம். இது மிகவும் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கானதோர் பயிற்சி முறையாகும்.

சரி, பயிற்சிகளைத் தொடருங்கள்!

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்!

எமது இப்பாடம் பற்றிய உங்கள் பெருமதிப்புமிக்க கருத்துக்களையும்  எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ள மறவாதீர்கள்.

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு

பி.கு.: ஆங்கிலம் கற்கும் உறவுகளே! எமது பாடங்கள் தனிநபர்கள் மட்டுமன்றி, கல்விசார் நிறுவனங்கள், அரச அமைப்புகள் எனப் பலரும் பயனடைவது மகிழ்ச்சியாக உள்ளது, இருப்பினும் எமது பாடங்களைச் சிலர் தமது வலைத்தளங்களில் வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவது மட்டுமன்றி தங்கள் பெயரையிட்டுக் கொள்ளலையும் காணமுடிகிறது. அது உள்ளடக்கத் திருட்டாகும். இப்பாடத்திட்டம் குறிப்பாக ஆங்கில வாக்கியமைப்பு வடிவங்கள் ச. தங்கவடிவேல் (HK Arun) என்பவரின் உருவாக்கமாகும். இந்த அறிவுசார் உருவாக்கத்துக்கு மதிப்பளித்து பதிவுத் திருட்டு செய்வோரைக் கண்டால் எமக்கறிவித்து பதிவுத் திருட்டை தடுக்க உதவுங்கள். நன்றி. 

Download As PDF