Showing posts with label ஆங்கிலம். Show all posts
Showing posts with label ஆங்கிலம். Show all posts

ஆங்கில பாடப் பயிற்சி 11 (Simple Future Tense)

Grammar Patterns -1 றில் ஐந்து மற்றும் ஆறாவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். இன்று அவ்விரண்டு வாக்கியங்களையும் விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சியை எளிதாக தொடர வழிவகுக்கும்.
சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.

5. I will do a job
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் ஒரு வேலை. (சற்றுப் பிறகு)

6. I won’t do a job. (will + not)
நான் செய்ய மாட்டேன் ஒரு வேலை.

மேலுள்ள 5, 6 வரிகளைப் பாருங்கள். இவை சாதாரண எதிர்கால வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Simple Future Tense" என்று கூறுவர். இந்த Form ல் தன்னிலை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will" என்றே பயன்படுத்தப்படுகிறது.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
I /You /He /She /It / We / You /They + will + do a job.

Negative
Subject
+ Auxiliary verb + not + Main verb
I /You /He /She /It /You /We /They + won’t + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Will + I /you /he /she /it /you /we /they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb" துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.

இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் நாமாகவே மிக எளிதாக கேள்வி பதில்களை மாற்றி அமைப்பது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

Will you do a job?
நீ செய்வாயா ஒரு வேலை?
Yes, I will do a job
ஆம், நான் செய்வேன் ஒரு வேலை.
No, I won’t do a job. (will + not)
இல்லை, நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

Will you speak in English?
நீ பேசுவாயா அங்கிலத்தில்?
Yes, I will speak in English.
ஆம், நான் பேசுவேன் ஆங்கிலத்தில்
No, I won’t speak in English. (will + not)
இல்லை, நான் பேசமாட்டேன் ஆங்கிலத்தில்.

Will you go to school?
நீ போவாயா பாடசாலைக்கு?
Yes, I will go to school.
ஆம், நான் போவேன் பாடசாலைக்கு.
No, I won’t go to school. (will + not)
இல்லை, நான் போகமாட்டேன் பாடசாலைக்கு.

இப்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை நீங்களாகவே கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிந்து, உங்களின் வாசிக்கும் ஆற்றலையும், ஆங்கில அறிவையும் எளிதாக மேம்படுத்திக்கொள்ள உதவும். அதேவேளை எழுத்தாற்றலையும் விரைவில் பெற்றுவிடலாம்.

சரி பயிற்சியைத் தொடருங்கள்.

1. I will open a current account.
நான் திறப்பேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

2. I will apply for vacancies.
நான் விண்ணப்பிப்பேன் தொழில்களுக்காக.

3. I will speak in English fluently.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில் சரளமாக.

4. I will ask for an increment.
நான் கேட்பேன் ஓர் (பதவி/சம்பளம்) உயர்வு.

5. I will ask for a transfer.
நான் கேட்பேன் ஒரு இடமாற்றம்.

6. I will celebrate my birthday.
நான் கொண்டாடுவேன் எனது பிறந்தநாளை.

7. I will consult Dr. Sivaram.
நான் (மருத்துவ) ஆலோசனை பெறுவேன் மருத்துவர் சிவராமிடம்.

8. I will control my temper.
நான் கட்டுப்படுத்துவேன் எனது கோபத்தை.

9. I will negotiate my salary.
நான் பேரம் பேசுவேன் எனது சம்பளத்தை.

10. I will stop smoking.
நான் நிறுத்துவேன் புகைப்பிடிப்பதை.

11. I will help others.
நான் உதவுவேன் மற்றவர்களுக்கு.

12. I will open a saving account.
நான் திறப்பேன் ஒரு சேமிப்பு கணக்கு.

13. I will obey the rules and regulations.
நான் கீழ்படிவேன் சட்டத் திட்டங்களுக்கு.

14. I will pick up this work.
நாம் பற்றிக்கொள்வேன் இந்த வேலையை.

15. I will resign from the job.
நான் இராஜினமா செய்வேன் வேலையிலிருந்து.

16. I will correct the mistakes.
நான் சரிப்படுத்துவேன் பிழைகளை.

17. I will play football.
நான் விளையாடுவேன் உதைப்பந்தாட்டம்.

18. I will do my duty.
நான் செய்வேன் எனது கடமையை.

19. I will follow a computer course.
நான் பின்பற்றுவேன் ஒரு கணனி பாடப் பயிற்சி.

20. I will forget her.
நான் மறப்பேன் அவளை.

21. I will solve my problems.
நான் தீர்ப்பேன் எனது பிரச்சினைகளை.

22. I will speak English in the office
நான் பேசுவேன் ஆங்கிலம் பணியகத்தில்.

23. I will go to the university.
நான் போவேன் பல்கலைக்கழத்திற்கு.

24. I will translate English to Tamil.
நான் மொழிமாற்றுவேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

25. I will give up this habit.
நான் விட்டுவிடுவேன் இந்த தீயப்பழக்கத்தை.

26. I will study for the exam.
நான் படிப்பேன் பரீட்சைக்காக.

27. I will do my homework.
நான் செய்வேன் எனது விட்டுப்பாடம்.

28. I will become stronger.
நான் பலசாலியாவேன்.

29. I will become a chief executive in the company.
நான் ஆவேன் தலமை நிறைவேற்று அதிகாரியாக இந்த நிறுவனத்தில்.

30. I will become the Prime Minister of India.
நான் பிரதமராவேன் இந்தியாவின்.

31. I will take a treatment for my hand.
நான் எடுப்பேன் ஒரு சிகிச்சை எனது கைக்கு.

32. I will introduce him to you.
நான் அறிமுகப்படுத்துவேன் அவனை உனக்கு.

33. I will untie this knot.
நான் அவிழ்ப்பேன் இந்த முடிச்சை.

34. I will build my dream house.
நான் கட்டுவேன் எனது கனவு வீட்டை/மாளிகையை.

35. I will co-operate with others.
நான் ஒத்துழைப்பேன் மற்றவர்களுடன்.

36. I will discuss about this problem.
நான் கலந்தாலோசிப்பேன் இந்தப் பிரச்சினையைப் பற்றி.

37. I will drop you in Vavuniya junction.
நான் இறக்குவேன் உன்னை வவுனியா சந்தியில்.

38. I will buy a car.
நான் வாங்குவேன் ஒரு மகிழுந்து.

39. I will bank the money.
நான் வைப்பிடுவேன் வங்கியில்.

40. I will come up in my life.
நான் முன்னேறுவேன் வாழ்க்கையில்.

41. I will draw salary US$ 100,000 monthly.
நான் பெறுவேன் சம்பளம் ஒரு லட்சம் டொலர் மாதாந்தம்.

42. I will fly to America.
நான் (விமானத்தில்) பறப்பேன் அமெரிக்காவிற்கு.

43. I will go to Europe.
நான் போவேன் ஐரோப்பாவிற்கு.

44. I will invite my friends for festival.
நான் அழைப்பேன் எனது நண்பர்களை பண்டிகைக்கு.

45. I will improve my English knowledge.
நான் வளர்ப்பேன் எனது ஆங்கில அறிவை.

46. I will practice English at night.
நான் பயிற்சி செய்வேன் ஆங்கிலம் இரவில்.

47. I will become wealthy.
நான் செல்வந்தனாவேன்.

48. I will get married after few months.
நான் திருமணம் முடிப்பேன் சில மாதங்களில் பிறகு.

49. I will become (CEO) chief executive officer.
நான் ஆவேன் தலமை நிறைவேற்று அதிகாரியாக.

50. I will become famous in the world.
நான் பிரசித்திப்பெறுவேன் இந்த உலகில்.

Homework:

A. மேலே நாம் கற்ற சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களை பார்த்து, இந்த 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. இன்று நாம் கற்ற (Simple Future Tense) சாதாரண எதிர்கால சொற்களை போல், நீங்கள் உங்கள் எதிர்காலத் எண்ணங்களாக, நோக்கங்களாக என்னென்ன செய்ய விரும்புகின்றீர்களோ, அவற்றை ஆங்கிலத்தில் "will" எனும் துணைவினையுடன் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

சிறிய அறிவுரை
உங்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்வி கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். அது கூடிய பயனை உங்களுக்குத் தரும்.

ஆங்கில இலக்கணம் படித்தோர்களில் பலர் கூறும் இன்னுமொரு விடயத்தையும் நாம் அடிக்கடி கேட்கக் கூடியதாக உள்ளது. அது ஆங்கில செய்திகள் மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களை பார்க்கும் போது அதில் பேசுவதை, வாசிப்பதை தம்மால் புரிந்துக்கொள்வதற்கு கடினமாக இருக்கிறது என்பதே. இன்னும் சிலர் இடைக்கிடை ஒரு சிலச் சொற்களைத் தவிர துப்பரவாக விளங்குகிறதே இல்லை என்று கூறுவோரும் உள்ளனர்.

சில ஆங்கில பாடப் புத்தகங்களில், குறிப்பாக "Spoken English" புத்தகங்களில் ஆங்கில உச்சரிப்பிற்காக கீழே கொடுக்கப் பட்டிருக்கும் தமிழை வாசித்து வாசித்து கடினப்பட்டு ஆங்கிலத்தை மனப்பாடம் செய்வதால் மட்டும் முழுமையான ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள முடியாது. சரியான ஆங்கில உச்சரிப்பைப் பெறுவதும் கடினம்.

இதற்கு நாம் கூறும் அறிவுரை என்னவெனில் ஆங்கிலத்தை தமிழில் பேசுவதுப் போன்று அதே தொனியில் ஆங்கிலம் பேசிப் பழகாதீர்கள் என்பதே.
உதாரணமாக "I am speaking in English" என்று கூறும்போது அதை "அயம் ஸ்பீக்கிங் இன் இங்கிலிஸ்" என்று ஒவ்வொரு சொல்லுக்கு சொல் இடைவெளி விட்டு பேசிப் பழகாமல், ஒரு வாக்கியத்தில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒரே சொல்லாக “ஐயம்ஸ்பீக்கிங்கின்ங்கிலீஸ்” என்றுப் பேசிப் பாருங்கள். மிக எளிதாக உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள கூடியதாக இருக்கும். அதேவேளை ஆங்கிலேயர் (திரைப்படம், செய்திகள் உட்பட) பேசுவதையும் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். BBC போன்ற இணையத்தளங்களில் ஆங்கிலச் செய்திகளை காணொளி வடிவாக அல்லது ஒலி வடிவாகத் தொடர்ந்து கேட்டுவருவதும் பயனளிக்கும்.

BBC Business English இக் காணொளி தொடரினையும் பாருங்கள்.

உச்சரிப்பு (Pronunciation) பயிற்சி கருதி, இங்கே எமது வலைத்தளத்திலும் ஒரு ஆங்கிலப் பெண்மணியின் குரலில் ஒலிப்பதிவிட்டுள்ளோம். அவற்றையும் நீங்கள் கேட்டு பயிற்சி பெறலாம்.

ஆங்கில உரையாடல்களின் போது இலகுவாகவும் வேகமாகவும் பேசுவதற்கு ஆங்கில "short form" சுருக்க உச்சரிப்பு பயன்பாடுகள் முக்கியாமானது. எனவே நீங்களும் சிறப்பாக ஆங்கிலம் பேச விரும்புவராயின் இதுப் போன்ற "short form" முறைகளைப் பின்பற்றி ஆங்கிலத் தொனிக்கேற்ப பேசிப் பழகுங்கள்.

Affirmative short form: 

I will - I'll
You will - You'll
He will -
He'll
She will - She'll
It will - It'll
We will - We'll
You will - You'll
They will - They'll


Negative short forms:
இந்த எதிர்கால எதிர்மறையாக பயன்படும் துணைவினைகளின் "Short Forms" களை மூன்று விதமாக வகைப் படுத்தியுள்ளனர்.
I will not - I'll not - I won't
You will not - You'll not - You won't
He will not - He'll not - He won't
She will not - She'll not - She won't
It will not - It'll not - It won't
We will not - We'll not - We won't
You will not - You'll not - You won't

They will not - They'll not - They won't

"won’t" என்பது will + not இன் சுருக்கமாகும். (Short form of will + not)

"want" - "வேண்டும்" எனும் பொருளிலும் ஒரு சொல் இருப்பதால், இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். (இரண்டுக்கும் வேறுப்பாட்டை அவதானிக்கவும்.)

குறிப்பு:

ஆங்கிலத்தில் எதிர்காலச் சொற்பிரயோகங்களாக ஆறு வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது அவை:

1. Future “will”
2. Future “going to”
3. Present continuous used as future
4. Future Continuous
5. Future perfect simple
6. Future perfect continuous

இருப்பினும் நாம் இன்றையப் பாடத்தில் Future “will” சாதாரண எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கற்றோம். ஏனையவை எதிர்வரும் பாடங்களில் வரும்.

சாதாரண எதிர்காலம் Future "will"

இதன் பயன்பாட்டை மூன்று விதமாகப் பிரித்துப்பார்க்கலாம்.

1. எண்ணமிடல், நோக்கம், எதிர்ப்பார்ப்பு போன்றவற்றைக் கூறுதல்.

I will come tomorrow. - நான் வருவேன் நாளை
He will work with us. - அவர் வேலை செய்வார் எங்களுடன்.
I will win. - நான் வெற்றிப்பெறுவேன்.

2. முன்கூட்டியே ஒன்றை யூகத்தின் அடிப்படையில் கூறுதல்.

I think the Indian cricket team will win the match.
நான் நினைக்கிறேன் இந்தியன் கிரிக்கெட் குழு வெற்றி பெரும் ஆட்டத்தில்.

I think you will like her.
நான் நினைக்கிறேன் நீ விரும்புவாய் அவளை.

முதல் வாக்கியத்தைப் பாருங்கள் அதில் இந்தியன் கிரிக்கெட் குழு 100% வீதம் வெற்றிப்பெரும் என்று திட்டவட்டமாக கூறப்படவில்லை. எனவே அக்கூற்று நிச்சயமற்றது. ஆனால் எப்படியோ (யூகத்தின் அடிப்படையில்) வெற்றிப்பெரும் எனக் கூறப்படுகின்றது. இதை ஆங்கிலத்தில் "Future prediction" என்று கூறுவர். அதாவது தாம் நினைப்பதே நடக்கும் எனும் எதிர்ப்பார்ப்புடன் கூறுவதாகவும் கொள்ளலாம்.

இதுப் போன்ற நிச்சயமற்று கூறும் எதிர்கால வினையை வெளிப்படுத்த "will" உடன் அதிகமாக பயன்படும் சொற்கள் probably, possibly, I think, I hope.

3. மற்றும் இந்த "will" உறுதியளித்து அல்லது உறுதியை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

I will be there on time.
நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்தில்.

அதாவது குறித்த நேரத்திற்கு குறித்த இடத்தில் இருப்பேன் என்பதை முன்கூட்டியே உறுதியாகக் (promise) கூறப்படுகின்றது. (ஆனால் இருப்பாரா என்பதைத் தீர்மானிக்க முடியாது)

I promise, I will be there on time, don’t worry.
நான் உறுதியளிக்கிறேன், நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்திற்கு, கவலைப்பட வேண்டாம்.

வரைப்படம்

எமது ஆங்கிலம் வலைத்தளம் குறித்து சில வரிகள்
எமது இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்தச் சில மகிழ்வான வரிகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன். வலைத்தளங்களைப் பொருத்த மட்டில் ஒரு மாதத்திற்கு பலப் பதிவிடும் தளங்களே அதிகம். ஒவ்வொரு நாளும் பதிவிடும் தளங்களும் உள்ளன. ஒரே நாளைக்குப் பல பதிவிடுவோரும் உள்ளனர். ஒரு மாதத்திற்கு நூற்றுக்கணக்கானப் பதிவிடும் தளங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தளங்களிற்கான வருகையாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், பதிவிடும் நாட்களில் மட்டுமே (திரட்டிகளூடாக) அதிகமான வருகைகள் இருக்கும். (சிலத் தளங்கள் அப்படியல்ல.)

ஆனால் இத்தளத்தில் இப்பதிவோடு சேர்த்து இதுவரை 13 பதிவுகள் மட்டுமே இடப்பட்டுள்ளன. கடந்தப் பதிவு (23 மே 2008) இட்டப் பொழுது வாசகர்களின் வருகை எண்ணிக்கை 11,000 அளவிலேயே இருந்தது. (கிட்டத்தட்ட ஒரு மாதம்) 27 நாட்களுக்குப் பின் இன்று இப்பதிவிடும் இடைவெளிக்குள் இதன் எண்ணிக்கை 21,000 யிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கின்றது. 2008 யூன் 6 ம் திகதி இந்த ஆங்கிலம் வலைத்தளம் குறித்து PKP அவர்கள் தனது பதிவில் அறிமுகப்படுத்திய அன்று வருகையாளர்களின் எண்ணிக்கை "1000" த்தை தாண்டியது.

இந்த “ஆங்கிலம்” வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களே ஆகின்றது. இந்த வலைத்தளத்தை மற்ற வலைத்தளங்களோடு ஒப்பிடுகையில் பின்னூட்டங்கள் வருவது மிக மிகக் குறைவு. ஆனால் இத்தளத்திற்கான வருகையாளரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதை Traffic Statistics காட்டுகின்றது.
இக் கால இடைவெளிக்குள் கிட்டத்தட்ட 200 க்கும் அதிகமானோர் Subscribers மின்னஞ்சல் ஊடாக பாடப் பயிற்சிகளை பெற்றுவருகின்றனர். தவிர மின்னஞ்சல் ஊடாக கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதில் ஒரு விடயம் நிதர்சனமாகிறது. இன்றைய காலக்கட்டத்தின் ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை மக்கள் நன்குணர்ந்தே உள்ளனர்.

இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் குறித்து தமது தளத்தில் முதலில் பதிவிட்டு அறிமுகப்படுத்தியவர் சிறில் அலெக்ஸ். இவரைப் போன்று இன்னும் பல சகப் பதிவர்கள் நண்பர்கள் இத்தளத்தை ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் எனது நன்றிகள். வலைத்தளங்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் ஊடாக தொடுப்பு கொடுத்துள்ளோருக்கும் மிக்க நன்றிகள்.

திரட்டிகள் என்று கூறுகையில் அநேகமாக ஒரு பதிவு ஒரு சில மணித்தியாளங்களே நிலைத்து நிற்கின்றது. ஆனால் தமிழ்வெளி திரட்டியில் என்று பார்த்தாலும் இந்த ஆங்கிலப் பாடப் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்து (எமது சமுதாய வளர்ச்சியின் நலனை முன்னிட்டு என நினைக்கின்றேன்) காண்பிக்கப் படுகின்றது. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலும் இங்கே நான் தனித்து பதிவிட்டாலும், இச்சிறு முயற்சிக்கு வருகையாளரான உங்கள் அனைவரது ஆதரவும், சக வலைப்பதிவர்களின் ஊக்குவிப்பும், பாராட்டுக்களுமே என்னை மென்மேலும் ஊக்கத்துடன் எழுதத் தூண்டுகின்றன. மேலும் எனது பணியை சிறப்புடன் செய்ய வேண்டும் எனும் உத்வேகத்தையும் என்னுள் உண்டுப் பன்னுகின்றன.

கிட்டத்தட்ட 8 கோடித் தமிழர்கள் வாழும் இவ்வுலகில், பாதிப் பேராவது ஆங்கிலம் கற்றுச் சிறந்தால் எமது எதிர்காலச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை எவராலும் தடுக்க முடியாது. எமது எதிர்பார்ப்பு இப்பாடத் திட்டம் அனைத்து தமிழர்களையும் சென்றைடைய வேண்டுமென்பதே ஆகும். முடிந்தவரையில் எனது பணியை எனது சிற்றறிவுக்கு எட்டியவகையில் சிறப்புடன் செய்ய விளைக்கின்றேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள்.

"செருப்பு இல்லாதவன் கால் இல்லாதவனைப் பார்த்த ஆறுதல் அடைய வேண்டும்" என்பது இயலாமைக்கு கூறும் ஆறுதல் வார்த்தையாகும். ஆனால் இன்றைய உலகம் ஒரு ஓட்டப் பந்தயம் போன்றது. முன்னே ஒடுபவன் பின்னே வருபவனை திரும்பிப் பார்க்கும் கணப்பொழுதிலும் பின்னே உள்ளவன் முன்னே உள்ளவனை முந்திவிடுவான். எனவே ஓடுங்கள்! ஓடுங்கள்!! பின்னே வருபவனை முந்த விடாது ஓடுங்கள். முன்னே ஒடிக்கொண்டிருப்பவனையும் முந்துவதற்கு ஓடுங்கள். உங்கள் வெற்றியில் தான் எமது சமுதாய வெற்றித் தங்கியுள்ளது. வெற்றிக்கொடியை நாட்டுங்கள். அது தமிழனது கொடியாக இருக்கட்டும்! அவ்வெற்றி கல்வியின் ஊடாக கிட்டட்டும்!

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி - 10 (Simple Past Tense)

Grammar Patterns 1 றின் மூன்று மற்றும் நான்காவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். நான் ஏற்கெனவே, எமது ஆங்கிலம் கிரமர் பெட்டன் 1இன், ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கமைய இன்று 3 மற்றும் 4 ஆவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை விரிவாகக் கற்கப் போகின்றோம்.

3. I did a job
4. I didn’t do a job.

இவை இரண்டும் இறந்தக்கால வாக்கியங்களாகும். இவற்றை தமிழில் கடந்தக்கால வாக்கியங்கள் என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் "Simple Past Tense" அல்லது "Past Simple Tense" என்றழைப்பர்.

இந்த "Simple Past Tense" சாதாரண இறந்தக்கால சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb +
I
/He/She/It/You/We/They + __ + did a job. இவற்றில் (Auxiliary verb) "துணை வினை" பயன்படாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb +
I/He/She/It/You/We/They + did + not + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb +
Did
+ I/he/she/it/you/we/they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும், துணை வினை (Auxiliary verb வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால், ஆங்கிலத்தில் எளிதாக கேள்வி பதில் வாக்கியங்களை அமைக்கலாம்.

உதாரணம்:

Did you do a job?
நீ செய்தாயா ஒரு வேலை?
Yes, I did a job
ஆம், நான் செய்தேன் ஒரு வேலை.
No, I didn’t do a job. (did + not)
இல்லை, நான் செய்யவில்லை இரு வேலை.

Did you speak in English?
நீ பேசினாயா அங்கிலத்தில்?
Yes, I spoke in English.
ஆம், நான் பேசினேன் ஆங்கிலத்தில்
No, I didn’t speak in English. (did + not)
இல்லை, நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

Did you go to school?
நீ போனாயா பாடசாலைக்கு?
Yes, I went to school.
ஆம், நான் போனேன் பாடசாலைக்கு.
No, I didn’t go to school. (did + not)
இல்லை, நான் போகவில்லை பாடசாலைக்கு.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

1. I answered the phone
நான் பதிலளித்தேன் தொலைப்பேசிக்கு

2. I studied English for ten years.
நான் படித்தேன் ஆங்கிலம் பத்து வருடங்களாக.

3. I applied for a vacancy.
நான் விண்ணப்பித்தேன் ஒரு தொழிலுக்காக.

4. I forgave him.
நான் மன்னித்தேன் அவனை.

5.traveled by MTR.
நான் பயணம் செய்தேன் MTR ல். (நவீன நிலத்தடித் தொடரூந்து வண்டி)

6. I came back last Friday.
நான் திரும்பி வந்தேன் கடந்த வெள்ளிக்கிழமை.

7. I asked for an increment.
நான் கேட்டேன் ஒரு (பதவி/சம்பல)உயர்வு.

8. I bought a car.
நான் வாங்கினேன் ஒரு மகிழூந்து.

9. I wrote an article.
நான் எழுதினேன் ஒரு கட்டுரை.

10. I borrowed money from Sarmilan.
நான் கடன் வாங்கினேன் காசு சர்மிலனிடமிருந்து.

11. I lent a book to Ravi.
நான் இரவல்/கடன் கொடுத்தேன் ஒரு புத்தகம் ரவிக்கு

12. I played the guitar.
நான் வாசித்தேன் கித்தார்.

13. I boiled water.
நான் கொதிக்கவைத்தேன் தண்ணீர்.

14. I got wet.
நான் நனைந்தேன்.

15. I gave priority to my works.
நான் முக்கியத்துவம் கொடுத்தேன் எனது வேலைகளுக்கு.

16. I published a post.
நான் பதிவிட்டேன் ஒரு பதிவு.

17. I got an appointment.
நான் பெற்றேன் ஒரு நியமனம்.

18. I got into the bus.
நான் ஏறினேன் பேரூந்துக்குள்.

19. I got a loan from the bank.
நான் பெற்றேன் ஒரு கடன் வங்கியிலிருந்து.

20. I read Thinakkural News paper.
நான் வாசித்தேன் தினக்குரல் செய்தித் தாள்.

21. I escaped from the danger.
நான் தப்பினேன் அபாயத்திலிருந்து.

22. I studied in Jaffna.
நான் படித்தேன் யாழ்ப்பாணத்தில்.

23. I ironed my clothes.
நான் அயன் செய்தேன் எனது உடைகளை.

24. I invited my friends.
நான் அழைப்புவிடுத்தேன் எனது நண்பர்களுக்கு.

25. I deposited money in the bank.
நான் வைப்பீடு செய்தேன் காசு வங்கியில்.

26. I did a special project in school.
நான் செய்தேன் ஒரு சிறப்பு திட்டம் பாடசாலையில்.

27. I played football.
நான் விளையாடினேன் உதைப்பந்தாட்டம்

28. I introduced her to my family.
நான் அறிமுகப்படுத்தினேன் அவளை எனது குடும்பத்தாருக்கு.

29. I inquired about this.
நான் விசாரித்தேன் இதைப் பற்றி.

30. I informed to police.
நான் தெரிவித்தேன் காவல் துறைக்கு.

31. I learned English through the medium of Tamil.
நான் கற்றேன் ஆங்கிலம் தமிழ்வழி ஊடாக.

32. I met Kavitha yesterday
நான் சந்தித்தேன் கவிதாவை நேற்று.

33. I married in 1995.
நான் மணம்முடித்தேன் 1995 இல்.

34. I played as a hero.
நான் நடித்தேன் ஒரு கதாநாயகனாக.

35. I visited Thailand last year.
நான் சென்றேன் தாய்லாந்து கடந்த வருடம்.

36. I opened a current account.
நான் திறந்தேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

37. I sent a message.
நான் அனுப்பினேன் ஒரு தகவல்.

38. I paid in installments.
நான் செலுத்தினேன் (பணம்) தவணைமுறையில்.

39. I taught English.
நான் படிப்பித்தேன் ஆங்கிலம்.

40. I went to the university.
நான் சென்றேன் பல்கலைக்கழகத்திற்கு.

41. I repaid the loan.
நான் திரும்ப செலுத்தினேன் கடன்.

42. I arrived ten minutes ago.
நான் வந்தேன் பத்து நிமிடங்களுக்கு முன்பு.

43. I lived in Bangkok for two years.
நான் வசித்தேன் பேங்கொக்கில் இரண்டு வருடங்களாக.

44. I worked very hard.
நான் வேலை செய்தேன் மிகவும் கடினமாக.

45. I left from home.
நான் வெளியேறினேன் வீட்டிலிருந்து.

46. I sang a song.
நான் பாடினேன் ஒரு பாடல்.

47. I practiced English last night.
நான் பயிற்சி செய்தேன் ஆங்கிலம் நேற்றிரவு.

48. I forgot my wallet.
நான் மறந்தேன் எனது பணப்பையை.

49. I decorated my house.
நான் அலங்கரித்தேன் எனது வீட்டை.

50. I wrote a letter to my mother.
நான் எழுதினேன் ஒரு கடிதம் என் தாயாருக்கு.

Homework:

பயிற்சி 1:
மேலே I (நான்) என்று எழுதிப் பயிற்சி செய்தோம். அவற்றை அதே ஒழுங்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைப் பின்பற்றி You, He, She, It, We, They எனும் சொற்களுடன் வாக்கியங்களை அமையுங்கள்.

Subject + Main verb +
I spoke in English. - நான் பேசினேன் ஆங்கிலத்தில்.
You spoke in English. - நீ பேசினாய் ஆங்கிலத்தில்.
He spoke in English. - அவன் பேசினான் ஆங்கிலத்தில்.
She spoke in English. - அவள் பேசினாள் ஆங்கிலத்தில்.
It spoke in English. - அது பேசியது ஆங்கிலத்தில்.
We spoke in English. நாங்கள்/நாம் பேசினோம் ஆங்கிலத்தில்.
They spoke in English. - அவர்கள் பேசினார்கள் ஆங்கிலத்தில்.

பயிற்சி 2:
ஏற்கெனவே ஆங்கில பாடப் பயிற்சி 4 ல் சாதாரண நிகழ்கால வாக்கியங்கள் 50 கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் இறந்தக்காலச் சொற்களாக மாற்றி பயிற்சி செய்யலாம். அதில் வினைச்சொல் அதாவது பிரதான "verb" கறுப்பு தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும், அந்த இடங்களில் Irregular verbs அட்டவணையப் பார்த்து இறந்தக் கால வினைச் சொற்களாக மாற்றி அமைக்க வேண்டியது தான் உங்கள் வேலை.

பயிற்சி 3:
இன்று 'நடந்து முடிந்த' அல்லது உங்கள் வாழ்க்கையில் 'நிகழ்ந்த/ முடிந்த' அனைத்து இறந்தக்கால விடயங்களையும் தமிழில் எழுதிக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்று நாம் கற்றது போன்று ஆங்கிலத்தில் மாற்றி எழுதிப் பாருங்கள். அவ்வாறு உங்கள் பயிற்சிகளை தொடர்வீர்களானால், எமது இந்தப் பாடப் பயிற்சிகள் நிறைவுப் பெறும் போது உங்கள் வாழ்க்கை சுயசரிதையை நீங்களே எழுதியிருப்பீர்கள்.

குறிப்பு:

சாதாரண நிகழ்கால சொற்கள், இறந்தக்கால வினைச்சொற்களாக மாறும் போது ஏற்படும் மாற்றங்களை அவதானியுங்கள். இவற்றை இரண்டு விதமாக பிரித்து கற்கலாம்.

1. Regular verbs - with regular verbs + ed
2. Irregular verbs - The past form for irregular verbs is variable. You need to learn it by heart.

1. Regular verbs - எல்லா இறந்தக்கால வினைச்சொற்களின் முடிவிலும் ஒரே ஒழுங்காக – ed இணைந்து வருபவைகள்.
எடுத்துக்காட்டு:

I played cricket
I visited Japan last year
I watched TV last night

Study போன்று "y" எழுத்தில் முடிவடையும் சில சொற்களுடன் மட்டும் - ied இணைந்து வரும்.

I studied English.

Live, Love போன்ற சொற்கள் " e" எழுத்தில் முடிவடைவதால், இவற்றின் இறந்தக்கால சொற்களின் போது - d யை மட்டும் இட்டால் போதும்.
உதாரணம்:

I lived in Australia for two years.

2. Irregular verbs - இந்த இறந்தக்கால Irregular verbs கள் வெவ்வேறு விதமாக ஒரு ஒழுங்கு முறையற்று வரும். இதனால் இவற்றை Irregular verbs அட்டவணையை மனப்பாடம் செய்து தான் கற்றுக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக கீழே உள்ள சொற்களைப் பாருங்கள்.

I fell off a horse yesterday.
I went to school
I taught English
I wrote a letter
I slept yesterday

இறந்தக்கால குறிச்சொற்கள் [Simple Past - Signal words]

yesterday
Last night/ week/ year/century
A month ago
In 2007
In the past


இறந்தக்காலம் என்பது செயல் அல்லது நிகழ்வு ஏற்கெனவே முடிந்து விட்டதைக் குறிக்கின்றது. இது இந்த நொடியில் முடிவுற்ற ஒரு விடயமாகவும் இருக்கலாம். பல மில்லியன் வருடங்களுக்கு முன்னதாகவே முடிவுற்ற ஒன்றாகவும் இருக்கலாம். வரைப்படத்தைப் பாருங்கள்.

உச்சரிப்பு (Pronunciation)
குறிப்பாக "regular verbs" களின் முடிவின் போதும் – ed வரும். இருப்பினும் இவற்றின் உச்சரிப்பின் போது சிற்சில மாற்றங்கள் உள்ளன. அவற்றை அவதானித்து பேசிப் பழகுங்கள்.

Agreed - எக்gரீட்d
Loved - லவ்ட்d
Judged - ஜட்ஜ்ட்d
Begged - பெக்ட்d
Cleaned - க்ளீண்ட்d
இவை சொற்களின் முடிவில் (ட்D) எனும் விதமாக ஒலிப்பவைகள்.

Stopped - /t/
Laughed - /t/
Washed - /t/
Watched - /t/
Talked - /t/
இவை முடிவில் (ட்t) போன்று ஒலிப்பவைகள்.

Needed - நீdடட்d
Collected - கலெக்டட்d
இவை முடிவில் (டட்d) போன்று ஒலிப்பவைகள்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

ஆங்கிலம் வினைச்சொல் அட்டவணை (Irregular Verbs)

இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று வழங்கப்படுகின்றது.

"Irregular verbs" கள் அட்டவணையை ஆங்கிலம் உதவி பக்கமும் இட்டுள்ளோம். நீங்கள் விரும்பினால் http://aangilam.page.tl/Irregular-verbs.htm பக்கம் சென்றும் பார்க்கலாம். அவற்றை ஸ்க்ரீன் சொட் எடுத்தே இங்கு இட்டுள்ளோம்.

பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு கீழே இணைக்கப் பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.









இந்த "Irregular verbs" களை மனப்பாடம் செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். நாம் பிழையின்றி ஆங்கிலம் பேச, எழுத விரும்பினால் நாம் இவற்றை முறையாகக் கற்பதே சிறந்த வழியாகும். எமது அடுத்த பாடப் பயிற்சியின் போது நாம் இறந்தக்கால (Past Tense) பயிற்சிகளைத் தொடர இருப்பதால் இவற்றை இன்றே மனப்பாடம் செய்துக்கொள்வது எளிதாக இருக்கும்.

மற்றும் எதிர்வரும் "Passive Voice" பாடங்களின் போதும் இந்த "Irregular verbs" அட்டவணை அவசியப்படும்.

எனவே கட்டாயம் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி அத்தியாவசியம் ஆகிவிட்ட இக்காலச் சூழமைவில் நாம் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் கற்பதே இன்றைய உலக கால ஓட்டத்தில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

குறிப்பு:

இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகும். இதன் முறையின் படியே பாடங்கள் வழங்கப்படும்.

கேள்விகள் கேட்போர் இந்த ஆங்கில பாடப் பயிற்சிகள் தொடர்பாக எழும் எந்த விதமான சந்தேகங்கள், கேள்விகளாயினும் கேட்கலாம். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில சொற்கள் இருப்பின் அவற்றையும் கேட்கலாம். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.

ஆனால் ஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கிக் கேட்பது, ஆங்கிலக் கல்விக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம் மொழி தொடர்பில் எந்தவிதமான கேள்விகள் இருப்பினும் தயங்காமல் எழுதுங்கள். உங்கள் கேள்விகளுக்கான பதில் எமது பாடத்திட்டத்திற்குள் உள்ளதொன்றானால், அவற்றை அப்பாடங்களின் போது வழங்கப்படும். எமது ஆங்கிலப் பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகளாக இருப்பின் அவற்றை தொகுத்து பின் "கேள்வி பதில்" பகுதியாக வழங்குவதாக உள்ளோம்.

முடிந்தவரையில் உங்கள் கேள்விகளை தமிழிலேயே எழுதிக் கேளுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டெழுதினாலும், அவற்றுக்கான பதில் தமிழிலேயே வழங்கப்படும்.

சரி பயிற்சிகளை தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி ஆங்கில உச்சரிப்பு பயிற்சி, ஆங்கிலம் பேச்சு பயிற்சி, English listening Practice, through Tamil, in Tamil, with Tamil, English irregular verbs with Tamil Explanation.
அன்புடன்
அருண் | HK Arun English Irregular verbs listening practice in Tamil,
Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி—7 (have/ have got)

நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு வாக்கியத்தை, 73 வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்தோம். Grammar Patterns 4 கில் ஒரு பெயர்ச்சொல்லை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒரு (இருத்தல் "Be Form") வாக்கியத்தை, 32 வாக்கியங்களாக  மாற்றியும் பயிற்சி செய்தோம்.

இன்றைய "கிரமர் பெட்டன்" சற்று வித்தியாசமானது. அதாவது “இருக்கிறது” (have) எனும் சொல்லை மையமாகக்கொண்டு, இந்த கிரமர் பெட்டனை வடிவமைத்துள்ளோம்.

"Have" எனும் ஆங்கிலச் சொல், வினைச் சொல்லாகவும், துணைவினைச் சொல்லாகவும் பயன்படுகிறது. அதிலும் வினைச்சொல் "have" பல்வேறு பொருற்களில் பல்வேறு விதமாக பயன்படும்.

அவற்றில் நாம் இன்று  “இருக்கிறது” எனும் பொருள் தரும் வாக்கிய அமைப்புகளை மட்டுமே பார்க்கப் போகின்றோம். உதாரணமாக, "I have work." எனும் ஒரு வாக்கியத்தை தமிழில் மொழிப்பெயர்த்தால் “எனக்கு இருக்கிறது வேலை” என்று வரும். இந்த வார்த்தையை “எனக்கு இருக்கிறது வேலை", "எனக்கு இருந்தது வேலை", "எனக்கு இருக்கும் வேலை", "எனக்கு இருக்கலாம் வேலை." என 23 ன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்யவதே இன்றைய பாடமாகும்.

நாம் ஏற்கெனவே பயிற்சி செய்த ஏனைய Grammar Patterns களை போல், இந்த கிரமர் பெட்டனையும் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே எளிதாக ஆங்கிலம் கற்றிட உதவும். நீங்கள் புதிதாக இந்த “ஆங்கிலம்” தளத்திற்கு வருகை தந்தவரானால், Grammar Patterns 1 லிருந்தே உங்கள் பயிற்சிகளை தொடரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

சரி இன்றைய பயிற்சியைத் தொடருவோம்.

1. I have work.
2. I have got work.
எனக்கு இருக்கிறது வேலை.

3. I don’t have work.
4. I haven't got work.
எனக்கு இல்லை வேலை.

5. I had work.
எனக்கு இருந்தது வேலை.

6. I didn't have work.
எனக்கு இருக்கவில்லை வேலை.

7. I may have work.
8. I might have work.
9. I may be having work.
எனக்கு இருக்கலாம் வேலை.

10. I must have work.
எனக்கு இருக்க வேண்டும் வேலை.

11. I should have work.
எனக்கு இருக்கவே வேண்டும் வேலை.

12. I ought to have work.
எனக்கு எப்படியும் இருக்கவே வேண்டும் வேலை.

13. I must be having work.
எனக்கு நிச்சயம் இருக்கவேண்டும் வேலை.

14. I could have had work.
எனக்கு இருக்கயிருந்தது வேலை.

15. I should have had work.
எனக்கு இருக்கவேயிருந்தது வேலை.

16. I may have had work.
எனக்கு இருந்திருக்கலாம் வேலை.

17. I must have had work.
எனக்கு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் வேலை.

18. I would have had work.
எனக்கு இருந்திருக்கும் வேலை.

19. I shouldn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

20. I needn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

21. I will have work.
எனக்கு இருக்கும் வேலை.

22. I won't have work.
எனக்கு இருக்காது வேலை.

23. I wish I had work.
எவ்வளவு நல்லது எனக்கு இருந்தால் வேலை.

Homework:
இன்று நாம் கற்ற இந்த கிரமர் பெட்டனை போன்று, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 23 விதமாக மாற்றி எழுதி, வாசித்து பயிற்சி செய்யுங்கள்.

1. I have an interview
எனக்கு இருக்கிறது ஒரு நேர்முகத்தேர்வு.

2. I have money
என்னிடம் இருக்கிறது பணம்.

3. I have a Tamil dictionary
என்னிடம் இருக்கிறது ஒரு தமிழ் அகராதி.

4. I have a kind heart.
எனக்கு இருக்கிறது ஒரு இரக்கமான இதயம்.

5. I have two brothers and three sisters
எனக்கு இருக்கிறார்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்.

6. I have fever.
எனக்கு இருக்கிறது காய்ச்சல்.

7. I have cough and cold.
எனக்கு இருக்கிறது இருமலும் தடுமலும்.

8. I have a beautiful house
எனக்கு இருக்கிறது ஒரு அழகான வீடு.

9. I have a car
எனக்கு இருக்கிறது ஒரு மகிழூந்து.

10. I have pass port.
எனக்கு இருக்கிறது கடவுச்சீட்டு.

ஒரு என்பதற்கு "a" என்றும் "an" என்றும் இரண்டு விதமாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வேறுப்பாட்டை Use a/an - Vowels and Consonant பாடத்தில் பார்க்கவும்.

குறிப்பு:
நாம் மேலே குறிப்பிடப்பட்டிருப்பது போல், "have" எனும் ஆங்கிலச் சொல்லின் பொருள் பல்வேறு விதமாக பயன்படும். அவற்றை நாம் எதிர்வரும் பாடங்களில் பார்க்கலாம். அதேவேளை, நாம் இங்கே இன்று இந்தப்பாடத்தில் “இருக்கிறது” எனும் பொருளில் அமையும் வாக்கிய கட்டமைப்புகளை மட்டுமே பார்த்துள்ளோம் என்பதை நினைவில் கொள்க. அதிலும், இந்த “have” எனும் சொல் குறிப்பாக (தனக்கு/தன்னிடம்) “இருக்கிறது” எனும் உரிமையைக் குறிக்க பயன்படும் சொல் அமைப்பையே இப்பாடத்தில் பார்த்தோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .

இவற்றையும் நான்கு விதமாக பிரித்து பார்க்கலாம்.

1. "Possession" உரிமை அல்லது உடமை போன்றவற்றை குறிப்பிடுவதற்கு:

Do you have a car?
உனக்கு/உன்னிடம் இருக்கிறதா ஒரு மகிழூந்து?

Do you have any idea?
உன்னிடம் இருக்கிறதா ஏதேனும் (எண்ணம்) திட்டம்?

Do you have a beautiful house?
உனக்கு இருக்கிறதா ஒரு அழகான வீடு?

2. "Relationships" உறவுமுறைகள் தொடர்பாக பேசுவதற்கு:

How many brothers do you have?
எத்தனை சகோதரர்கள் உனக்கு இருக்கிறார்கள்?

3. "Illnesses" நோய்கள் தொடர்பாக பேசுவதற்கு:

Do you have fever?
உனக்கு இருக்கிறதா காய்ச்சல்?
(உனக்கு காய்ச்சலாக இருக்கிறதா?)

Do you have cough and cold?
உனக்கு இருக்கிறதா இருமலும் தடுமலும்?
(உனக்கு இருமலும் தடுமனும் இருக்கிறதா?)

4. "Characteristics" பிரத்தியேகமான, சிறப்பியல்புகள் தொடர்பாகப் பேசுவதற்கு:

Do you have an interview?
உனக்கு இருக்கிறதா ஒரு நேர்முகத்தேர்வு?

Do you have a kind heart?
உனக்கு இருக்கிறதா ஓர் இரக்கமான இதயம்?

உரிமைகள் உடமைகள் பற்றியோ, உறவு, நட்பு குறித்துப் பேசும் போதோ, நோய்கள் தொடர்பாகப் பேசும் போதோ, சிறப்பியல்புகளைப் பற்றி குறிப்பிடும் போதோ "have" அல்லது "have got" எனும் இரண்டில் எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இரண்டும் ஒரே அர்த்தத்தை குறிக்கும் நிகழ்காலச் சொற்களாகும். இருப்பினும் 2, 4 கும் பெரும்பாலும் இங்கிலாந்து ஆங்கிலத்தின் பயன்பாட்டில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க. அவை சிக்கலாக இருப்பதாக உணர்ந்தால், தவிர்த்துக்கொள்ளலாம்.

கவனிக்கவும்:
இந்த have, have got எனும் இரண்டு நிகழ்காலச் சொற்களையும் கேள்வி பதிலாக மாற்றும் போது எவ்வாறான வாக்கியங்களாக அமைகின்றன என்பதனை கீழே கவனியுங்கள்.

Do you have cold?
Have you got cold?

Yes, I have cold.
Yes, I have got cold.

Do you have a house in the country?
Have you got a house in the country?
Yes, I have a house in the country.
Yes, I have got a house in the country.

Do you have any brothers or sisters?
Have you got any brothers or sisters?
No, I don’t have any brothers or sisters.
No, I haven’t got any brothers or sisters.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இது மிக இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம். அதற்கு முன்பாகவே இந்த "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளுங்கள். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

ஆங்கில பாடப் பயிற்சி – 2 (Grammar Patterns – 2)

இன்றைய பாடத்தில், நாம் எமது முதல் பாடத்தில் கற்ற ஆங்கில பாடப் பயிற்சி-1 றைப் போன்றே இருந்தாலும், சிற்சில மாற்றங்கள் இருப்பதைப் பாடத்தில் காணலாம்.

முதலாம் பாடத்தின் வாக்கியமைப்பு வடிவங்களில், I உடன் am இணைந்து வந்திருந்தது.

இப்பாடத்தில், He, She, It போன்ற "Third Person Singular" எழுவாய் சுட்டுப்பெயர்களுடன் "is " இணைந்து வருகின்றது.

அதனைத் தொடர்ந்து 1, 7, 8, 13, 16, 18, 27, 37, 38, 39, 56, 60, 61, 64, 71 போன்ற இலக்கங்களின் போதும் சிற்சில மாற்றங்கள் நிகழும். அவற்றைக் கவனித்து பயிற்சிச் செய்யுங்கள்.

இன்று நாம் "speak in English" எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வோம். முதல் பாடத்தில் "நான்" (I) என்பதற்குப் பதிலாக, இப்பாடத்தில் "அவன்" (He) இட்டுக்கொள்வோம். முறையே "He speaks in English - அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில், He spoke in English - அவன் பேசினான் ஆங்கிலத்தில், He will speak in English - அவன் பேசுவான் ஆங்கிலத்தில்" என ஒரே வாக்கியத்தை 73 மூன்று வாக்கியங்களாக மாற்றிப் பயிற்சி செய்யப் போகின்றோம்.

speak in English


1. He speaks in English.
அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

2. He is speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

3. He spoke in English.
அவன் பேசினான் ஆங்கிலத்தில்.

4. He didn't speak in English.
அவன் பேசவில்லை ஆங்கிலத்தில்.

5. He will speak in English.
அவன் பேசுவான் ஆங்கிலத்தில்.

6. He won’t speak in English.
அவன் பேசமாட்டான் ஆங்கிலத்தில்.

7. Usually, he doesn't speak in English.
சாதாரணமாக, அவன் பேசுகின்றானில்லை ஆங்கிலத்தில்.

8. He is not speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கின்றானில்லை ஆங்கிலத்தில்.

9. He was speaking in English.
அவன் பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

10. He wasn't speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கவில்லை ஆங்கிலத்தில்.

11. He will be speaking in English.
அவன் பேசிக்கொண்டிருப்பான் ஆங்கிலத்தில்.

12. He won’t be speaking in English.
அவன் பேசிக்கொண்டிருக்கமாட்டான் ஆங்கிலத்தில்.

13. He is going to speak in English.
அவன் பேசப்போகின்றான் ஆங்கிலத்தில்.

14. He was going to speak in English.
அவன் பேசப்போனான் ஆங்கிலத்தில்.

15. He can speak in English.
16. He is able to speak in English.
அவனுக்கு பேச முடியும் ஆங்கிலத்தில்.

17. He can’t speak in English.
18. He is unable to speak in English.
அவனுக்கு பேச முடியாது ஆங்கிலத்தில்.

19. He could speak in English.
20. He was able to speak in English.
அவனுக்கு பேச முடிந்தது ஆங்கிலத்தில்.

21. He couldn't speak in English.
22. He was unable to speak in English.
அவனுக்கு பேச முடியவில்லை ஆங்கிலத்தில்.

23. He will be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கும் ஆங்கிலத்தில்.

24. He will be unable to speak in English.
அவனுக்கு பேச முடியாமலிருக்கும் ஆங்கிலத்தில்.

25. He may be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில்.

26. He should be able to speak in English.
அவனுக்கு பேச முடியுமாகவே இருக்கும் ஆங்கிலத்தில்.

27. He has been able to speak in English.
அவனுக்கு [ஒரு கட்டத்திலிருந்து — தற்போதுவரை] பேச முடியுமாக இருக்கின்றது ஆங்கிலத்தில்.

28. He had been able to speak in English.
அவனுக்கு [அக்காலத்திலிருந்து — ஒரு கட்டம்வரை] பேச முடியுமாக இருந்தது ஆங்கிலத்தில்.

29. He may speak in English.
30. He might speak in English.
31. He may be speaking in English.
அவன் பேசலாம் ஆங்கிலத்தில்.

32. He must speak in English.
அவன் பேச வேண்டும் ஆங்கிலத்தில். (கட்டாயம்/அழுத்தம்)

33. He must not speak in English.
அவன் பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில் (அழுத்தம்)
அவன் பேசக் கூடாது ஆங்கிலத்தில்.

34. He should speak in English.
அவன் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)

35. He shouldn't speak in English.
அவன் பேசவே வேண்டியதில்லை ஆங்கிலத்தில். (மிக அழுத்தம்)
அவன் பேசவே கூடாது ஆங்கிலத்தில்.

36. He ought to speak in English.
அவன் எப்படியும் பேசவே வேண்டும் ஆங்கிலத்தில். (மிக மிக அழுத்தம்)

37. He doesn't mind speaking in English.
அவனுக்கு (எந்த) மறுப்புமில்லை பேச ஆங்கிலத்தில்.

38. He has to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

39. He doesn’t have to speak in English.
அவன்/அவனுக்கு பேச வேண்டியதில்லை ஆங்கிலத்தில்.

40. He had to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்பட்டது ஆங்கிலத்தில்.

41. He didn’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படவில்லை ஆங்கிலத்தில்.

42. He will have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படும் ஆங்கிலத்தில்.

43. He won’t have to speak in English.
அவனுக்கு பேச வேண்டி ஏற்படாது ஆங்கிலத்தில்.

44. He needs to speak in English.
அவனுக்கு தேவையிருக்கிறது பேச ஆங்கிலத்தில்.

45. He needn't to speak in English.
45. He doesn't need to speak in English.
அவனுக்கு தேவையில்லை பேச ஆங்கிலத்தில்.

46. He seems to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றது ஆங்கிலத்தில்.

47. He doesn't seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிகின்றதில்லை ஆங்கிலத்தில்.

48. He seemed to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரிந்தது ஆங்கிலத்தில்.

49. He didn't seem to be speaking in English.
அவன் பேசுகின்றான் போல் தெரியவில்லை ஆங்கிலத்தில்.

50. Speaking in English is useful.
பேசுவது ஆங்கிலத்தில் பயன்மிக்கது.

51. Useless speaking in English.
பயனற்றது பேசுவது ஆங்கிலத்தில்.

52. It is better to speak in English.
மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

53. He had better speak in English.
அவனுக்கு மிக நல்லது பேசுவது ஆங்கிலத்தில்.

54. He made her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவித்தான் ஆங்கிலத்தில்.

55. He didn't make her speak in English.
அவன் அவளை வைத்து பேசுவிக்கவில்லை ஆங்கிலத்தில்.

56. To speak in English, he is practicing.
பேசுவதற்கு ஆங்கிலத்தில், அவன் பயிற்சி செய்துக்கொண்டிருக்கின்றான்.

57. He used to speak in English.
அவன் பழக்கப்பட்டிருந்தான் பேச ஆங்கிலத்தில்.

58. Shall I speak in English?
நான் பேசவா ஆங்கிலத்தில்?

59. Let’s speak in English.
பேசுவோம் ஆங்கிலத்தில்.

60. He feels like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

61. He doesn't feel like speaking in English.
அவனுக்கு நினைக்கின்றதில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

62. He felt like speaking in English.
அவனுக்கு நினைத்தது பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

63. He didn't feel like speaking in English.
அவனுக்கு நினைக்கவில்லை பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

64. He has been speaking in English.
அவன் [ஒரு கட்டத்திலிருந்து — தற்போதுவரை] பேசிக்கொண்டிருக்கின்றான் ஆங்கிலத்தில்.

65. He had been speaking in English.
அவன் [அக்காலத்திலிருந்து — ஒரு கட்டம்வரை] பேசிக்கொண்டிருந்தான் ஆங்கிலத்தில்.

66. I see him speak in English.
எனக்கு தெரிகின்றது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

67. I don’t see him speak in English.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

68. I saw him speak in English.
எனக்கு தெரிந்தது அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

69. I didn't see him speak in English.
எனக்கு தெரியவில்லை அவன் பேசுகிறான் ஆங்கிலத்தில்.

70. If he speaks in English, he will get a good job.
அவன் பேசினால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைக்கும் ஒரு நல்ல வேலை.

71. If he doesn't speak in English, he won’t get a good job.
அவன் பேசாவிட்டால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைக்காது ஒரு நல்ல வேலை.

72. If he had spoken in English, he would have gotten a good job.
அவன் பேசியிருந்திருந்தால் ஆங்கிலத்தில், அவனுக்கு கிடைத்திருந்திருக்கும் ஒரு நல்ல வேலை. (பேசவும் இல்லை; கிடைக்கவும் இல்லை)

73. It is time he spoke in English.
இது தான் நேரம் அவன் பேசுவதற்கு ஆங்கிலத்தில்.

கவனத்திற்கு:


1. எடுத்துக்காட்டாக மேலே இன்று நாம் கற்ற பாடத்தில் முதலாவது வாக்கியத்தைக் கவனியுங்கள். அதில் "He speaks in English" "என்றிருப்பதில் "speak" எனும் சொல்லுடன் "s" எழுத்தும் சேர்ந்து வந்துள்ளதைப் பாருங்கள். அதாவது "Third Person Singular" சாதாரண நிகழ் காலத்தில் He, She, It உடன் வரும் முதன்மை வினைச் சொல்லுடன் s, es எனும் எழுத்துகள் சேர்ந்தே வரும் என்பதை மறவாதீர்கள்.

Third Person Singular "He, She, It: Infinitive + e, es" அட்டவணையைப் பார்க்கவும்.

2. மற்றது "speak in English" எனும் வாக்கியம் சில இலக்கங்களின் போது "speaking in English" என்று வந்துள்ளதைக் கவனிக்கவும். அவ்விலக்கங்களின் போது எப்பொழுதும் முதன்மை வினைச்சொல்லுடன் "ing" என்னும் எழுத்துகளும் இணைந்தே பயன்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

எடுத்துக்காட்டாக:

  • speak in English
  • speaking in English. என்று "ing" யும் இணைந்து வந்துள்ளது.
3. இப்பாடத்திலுள்ள வாக்கியமைப்பைச் சற்று கவனியுங்கள். இதில் "in" இடப்பட்டிருப்பதால் இவ்வாக்கியத்தை "ஆங்கிலத்தில்" என்று வாசிக்க வேண்டும்.
  • He speaks in English. — அவன் ஆங்கிலத்தில் பேசுகிறான்.
  • He speaks English. — அவன் ஆங்கிலம் பேசுகிறான். 

Homework:


He drives a car.
அவன் ஓட்டுகின்றான் மகிழுந்து.

She goes to school.
அவள் போகின்றாள் பாடசாலைக்கு.

இவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியத்தையும் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

இப்பாடத்திட்டம் பாடசாலை ஆங்கில பாடத்திட்டம் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல் மிக மிக இலகுவான ஒரு பாடப்பயிற்சி முறையாகும்.

மற்றும் மேலே பாடத்திலுள்ள ஒவ்வொரு இலக்கமும், ஒவ்வொரு பாடமாக எதிர்வரும் நாட்களில் விரிவடையும். அப்போது அதனதன் பயன்பாடுகள், இலக்கண விதிமுறைகள் பற்றி விரிவாக கற்கலாம்.

சரி, பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். இப்பாடம் தொடர்பாக ஏதேனும் ஐயங்கள் விளக்கங்கள் தேவைப்படின் கீழுள்ள முன்னிகைப் பெட்டியில் கேட்கலாம்.

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
Download As PDF

எமது பாடத்திட்டம் — மொழிபெயர்ப்பு — விளக்கம்

இந்த “ஆங்கிலம்” வலைத்தளத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றி சற்று தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். நீங்கள் பாடசாலைகளிலோ, பகுதி நேர வகுப்புகளிலோ, பொத்தகங்களிலோ ஆங்கிலம் கற்றதைப் போன்றல்லாமல், இந்த "ஆங்கிலம்" தளத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு சற்று வேறுபட்டிருப்பதைக் காண்பீர்கள்.

என்ன வேறுப்பாடு?

எடுத்துக்காட்டாக "I do a job" என்னும் வாக்கியத்தைத் தமிழில் மொழி பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்." என்று தான் மொழிபெயர்க்க வேண்டும். ஆனால் இப்பாடத்திட்டத்தில் அவ்வாறு அல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை." என்றே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏனிந்த வேறுப்பாடு?

எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என்றே தமிழ் வாக்கியமைப்புகள் அமையும்.

எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள் என ஆங்கில வாக்கியமைப்புகள் அமையும்.

இந்த ஆங்கில நடைக்கும் தமிழ் நடைக்கும் இடையேயான வேறுபாடுதான் பலருக்கு ஆங்கில வாக்கியங்களை வாசித்தாலும் விளங்கிக்கொள்வதில் கடினமாகத் தோன்ற காரணமாகிறது. எனவே இந்த வேறுபாட்டை எளிதாகப் விளங்கிக்கொண்டு கற்கும் வகையில், "எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள்என ஆங்கில நடைக்கு ஏற்ப எமது பாடங்களின் வாக்கியமைப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பதால் என்ன பயன்?

  • I – நான்
  • went – போனேன்
  • to school - பாடசாலை + க்கு
  • I + went + to school
  • நான் + போனேன் + பாடசாலைக்கு.
  • I + went + to school + yesterday
  • நான் + போனேன் + பாடசாலைக்கு + நேற்று.
  • I + went + to school + yesterday + with my friends.
  • நான் + போனேன் + பாடசாலைக்கு + நேற்று + எனது நண்பர்களுடன்

"நான் எனது நண்பர்களுடன் நேற்று பாடசாலைக்கு போனேன்." எனத் தமிழ் நடைக்கு ஏற்ப எழுதிக் கற்பிப்பதை விட, ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பிப்பதில், ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்களையும் எளிதாக விளங்கிக்கொள்ளலாம். அத்துடன் ஆங்கில வாக்கியங்களை நீட்டி அமைப்பது எவ்வாறு என்பதனையும் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம்.

தவிர இவ்வாறுதான் ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. பொதுவாக வேற்றொரு மொழியைத் தமது தாய் மொழிக்கு மொழிமாற்றுவோர், தமது தாய்மொழி நடைக்கேற்பவே மொழி மாற்ற விரும்புவர். அதுவே அம்மொழியின் சிறப்பிற்கும், குறிப்பிட்ட மொழியினரின் புரிதலுக்கும் வழிவகுக்கும் என்பது உண்மை. அத்துடன் தத்தமது மொழியின் தனித்துவத் தன்மையைப் பேணிக் காக்கவும், மொழியின் பயன்பாட்டிற்கு ஏற்ப பொருள் உணர்த்தவும் உதவும். அதனடிப்படையில் தான் தமிழ் கலைச்சொல்லாக்கப் பணிகளும் நடைப்பெறுகின்றன என்பதனை யாம் அறிவோம்

இன்றையத் தமிழ் இணைய உலகில் பரவலாகப் பயன்படும் தமிழ்க் கலைச்சொற்களைச் சற்று பாருங்கள்.
  • Bus - பாட்டை
  • Home - முகப்பு
  • Home page - முகப்புப் பக்கம்
மேலுள்ள சொற்கள் நம் எல்லோரதும் மனதில் பதிந்து, இணையப் பயன்பாட்டிற்கு ஏற்ப பொருள் தரும் சொற்களாக நிலைப்பெற்றவையாகும். இவை ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிறப்புறக் கற்று தெளிந்தோரால் இடம், பொருள், ஏவல் நிலையறிந்து உருவாக்கப்படும் கலைச்சொற்களாகும்.

ஆனால் ஆங்கிலம் கற்க முயலும் ஒரு ஆரம்ப நிலை ஆர்வலருக்கு அல்லது மாணவருக்கு இக்கலைச்சொற்கள் குழப்பத்தைத் தரலாம். அதனால் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொற்களைக் கற்க முனையும் முன், பொதுவான ஆங்கிலப் பேச்சு வழக்கில் பயன்படும் சொற்களிற்கு இணையான தமிழ் சொற்களைக் கற்றுக்கொள்ளல் முதன்மையானது.

இவற்றை மனதில் கொண்டே, நாம் ஆங்கில நடைக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு செய்துவருகின்றோம். எனவே:
  • Bus - பேருந்து
  • Home - வீடு, இல்லம், மனை
என முதலில் கற்றுக்கொள்வோம். அதன்பின் தமிழ்க் கலைச்சொல்லாக்கச் சொற்களைக் கற்றுக்கொள்ளலாம்.

உலகத் தமிழர் பேச்சு வழக்கு

உலகத் தமிழரான நாம், எமது தமிழ்ப் பேச்சு வழக்கின் சொற்கள் உச்சரிப்புகள் போன்றன இலங்கைத் தீவு, தமிழர்-பெருநிலப்பரப்பு (Tamil-mainland) என இருவேறு நாட்டு வழக்காகவும், நாட்டுக்குள்ளும் பல்வேறு வட்டார வழக்குகளையும் கொண்டவையாகவே உள்ளன என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

எடுத்துக்காட்டாக:
  • Did you go to market?
  • நீ சந்தைக்குப் போனாயா? - எழுத்துத் தமிழ் வழக்கு
  • நீ சந்தைக்குப் போனியா? - தமிழக/ கொழும்பு பேச்சு வழக்கு
  • சந்தைக்குப் போன நீயா? - யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு
  • நீ மார்க்கெட் போனாயா? - ஆங்கிலம் இடைச்செருகி பேசும் "தமிங்கில" வழக்கு
எனவே ஒவ்வொரு வட்டார வழக்கிற்கும் ஏற்ப, ஆங்கிலம் கற்பிப்பது என்பது இங்கே இந்த வலைத்தளத்திற்கு ஏற்றதல்ல.
  • Did you go to market?
  • நீ போனாயா சந்தைக்கு?
என ஆங்கில நடைக்கேற்ப தமிழ்ச் சொற்களை அமைத்து, வாக்கியங்களாகப் பயிற்றுவிப்பதே ஆங்கிலம் கற்க விரும்புவோர் எளிதாகக் கற்றுக்கொள்ள உதவும் என நாம் நம்புகின்றோம். மேலும் தொடக்கத்தில் ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்குமான தமிழ்ப் பொருளைச் சரியாக விளங்கிக் கற்றுக்கொண்டால், காலப்போக்கில் அவரவர் தத்தமது வட்டார வழக்கிற்கு ஏற்ப தாமாகவே விளங்கிக் கொள்வர்.

எமது ஆங்கில வகுப்பில்

எமது ஆங்கில வகுப்பிற்கு வருகைத் தரும் மாணவர்கள் சிலரிடமும் இவ்வாறானதொரு குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது. சிலர் தமிழைப் பிழையாக எழுதிக் கற்பிப்பதாகவும், செயற்கையான மொழிமாற்றமாக இருப்பதாகவும் கூறினர். ஆனால் காலப்போக்கில் அவர்களாலேயே ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் விளக்கத்தை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும் கற்பதற்கும் இப்பாடத்திட்டம் மிக இலகுவாக இருப்பதாக ஏற்றுக்கொண்டனர்.

எனவே அதே முறைமையையே இந்த "ஆங்கிலம்" வலைப்பதிவிலும் தொடர்கின்றோம். இது எந்தளவிற்கு ஏற்புடையது என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்.

தாய்மொழி தமிழும் ஆங்கிலமும்

இன்றைய காலக் கட்டத்தில் பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று அறியாமல் ஆங்கிலம் கலந்து பேசுவோரே மிகையோராக உள்ளனர். இந்த ஆங்கில மோகம் தாய் மொழி தமிழைச் சிதைத்து விடுமோ எனத் தமிழறிஞரும் தமிழார்வளரும் ஐயங்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதனால் சிலர் ஆங்கில மொழி எதிர்ப்பாளர்களாகவும் எழுந்துள்ளனர்.

"பாய்ந்தோடும் நதிக்கு பள்ளம் மேடு தடையாக இருப்பதில்லை." என்பது போல் எத்தனை அணை கட்டினாலும் ஆற்று நீர் நிரம்பி பள்ளம் நோக்கி பாய்ந்தோடவே செய்யும். அதேபோல் இன்றைய தொழில்நுட்ப உலகின் தொழில் தகமைகளுக்காகவும், அவை சார்ந்த கற்கை நெறிகளுக்காகவும், பன்னாட்டு வணிகத் தொடர்பாடல்களுக்காகவும் வளர்ந்து வரும் இளைய சமுதாயம் ஆங்கிலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதை எவரும் நிறுத்திவிட முடியாது. ஆங்கில மொழி அறிவியல் மொழியாக வளர்ந்துள்ள இக்காலக் கட்டத்தில் அதன் தேவை உணர்ந்தோர் எப்படியாயினும் ஆங்கிலம் கற்க முயல்வர். அதனை எவரும் தடுக்க முடியாது. தடுக்க முனைவதும் எமது சமுதாயத்தை நாமே வளரவிடாமல் தடுக்கும் முட்டுக்கட்டையாகவே அமையும். உலகின் ஏனைய மொழிகள் போன்றல்லாமல் ஆங்கில மொழிக்கென்று ஒரு மதிப்பும் காலத்தின் கட்டாயத் தேவையும் இருக்கின்றது என்பதை எவரும் மறுத்திட முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் இன்றைய உலகின் தமிழினத்தின் தலை நிமிர்விற்கு ஆங்கில மொழியறிவு முதன்மையானது என்பதில் இருவேறு கருத்தில்லை.

அதேவேளை தாய்மொழிக் கல்வி என்பது இன்றியமையாதது என்பதை நான் எப்போதும் மறுக்கவில்லை. எப்போதும் எம்மொழிக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். எம் கல்வியும் தாய்மொழி வழிக் கல்வியாகவே இருக்க வேண்டும். 

அத்துடன் ஆங்கிலம் கற்று நிமிரும் எம்மினத்தோர்,  தாய்மொழியாம் நம் தமிழ்மொழி வளர்ப்பிற்கும் தம்மால் இயன்ற பணியை ஒவ்வொருவரும் செய்ய முன் வரவேண்டும். ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் குவிந்து கிடக்கும் அனைத்து அறிவியல் வளங்களையும் தமிழில் படைக்கவேண்டும். அதுவே தமிழின் வளர்ச்சிக்கான வழியுமாக இருக்கும்.

தமிழ் வழி ஆங்கிலம்

"முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம்" கற்பதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் என்ன?

கூடுமான வரையில் ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் இணையான தமிழ்ப் பொருளை விளங்கிக்கொள்ள முடியும்.

பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று தெரியாமல் பேசுவதைவிட, தாம் பேசுவது தமிழ் அல்லது ஆங்கிலம் என்றாவது விளங்கிக்கொள்ள உதவும்.

இன்றைய புலம்பெயர் நாடுகளில் ஆங்கிலவழி கல்வி கற்போரும், உள்ளூரில் ஆங்கிலவழி கல்வி கற்போரும், ஆங்கில மொழியில் ஆளுமையுள்ளவரானாலும் அவர்களிடம் இருந்து தமிழ் மொழிக்கான பங்களிப்பை எந்தளவுக்கு எதிர்ப்பார்க்க முடியும் என்பதில் பல கேள்விகள் உள்ளன. (விதிவிலக்காக ஒரு சிலர் இருக்கலாம்) தமிழ் மட்டுமே கற்றவரிடம் இருந்தும் பெரிதாக எதனையும் எதிர்ப்பார்க்க முடியாது. அவரோ தனது சொந்த-அறிவு வளர்ச்சிக்கும் வேற்றுமொழி கற்றோரின் மொழி பெயர்ப்புகளை நம்பி இருப்போராகவே இருப்பர்.

அதேவேளை, தமிழும் ஆங்கிலமும் கற்றுத் தெளிந்தோரால் எளிதாகப் பல பணிகளைத் தமிழுக்குச் செய்திட முடியும். ஆங்கிலத்தில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற தொழில் நுட்பத் தகவல்களைத் தமிழாக்கம் செய்தாலே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தலாம். இதனைத் தமிழ் வழி ஆங்கிலம் கற்போர் எளிதாகச் செய்திடலாம்.

அதேபோன்றே, தமிழ் மொழியின் இலக்கிய வளங்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யலாம். அது எமது தமிழின் சிறப்புகளைப் பன்னாட்டளவில் கொண்டுச்செல்லும்.

ஆங்கிலம் கற்பித்தலுக்கான முதன்மை தகமை

தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான முதன்மை தகமை எதுவாக இருக்க வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் இலக்கணத்திலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது சிறப்பு தகமையாகக் கொள்ளப்படவேண்டும். கவலைக்குறிய விதயம் என்னவென்றால் தமிழ் வழி ஆங்கிலம் கற்பிக்கும் பல ஆசிரியர்களுக்குத் தாய் மொழி தமிழ் இலக்கணம் சரியாகத் தெரியாது என்பதே. பிறகெப்படி ஆங்கில மொழியின் இலக்கணக் கூறுகளைத் தமிழ் இலக்கணக் கூறுகளுடன் ஒப்பிட்டுக் கற்பிக்க முடியும்? மாணவர்கள் எப்படி எளிதாக கற்றுக்கொள்ள முடியும்? பொதுவாக ஆங்கில மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஆங்கில ஆசிரியர்கள் இருமொழிக் கற்கை வழியூடாகவே (Bilingual) ஆங்கிலம் கற்பிக்கின்றனர். அவ்வாறு கற்பிப்போரின் முதன்மை தகமை குறிப்பிட்ட இருமொழிகளிலும் தேர்ச்சிப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக உலகின் பலநாடுகளிலும் எதிர்பார்க்கப்படும் தகமையாகும். அதாவது இருமொழி வழி ஆங்கில இலக்கணம் கற்பிக்கும் ஒரு ஆசிரியர் குறிப்பிட்ட இரண்டு மொழி இலக்கணத்திலும் தேர்ச்சிப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால் தமிழ் வழி ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களிடம்  மட்டும் ஏனோ தமிழ் இலக்கண அறிவைக் காணமுடிவதில்லை. இது வரவேற்கத்தக்க ஒரு விடயமன்று.

ஒரு மொழி இலக்கணத்தை இன்னொரு மொழியில் கற்பிப்பதற்கு, குறிப்பிட்ட இரண்டு மொழிகளின் இலக்கண அறிவையும், இரண்டு மொழிகளுக்கிடையேயான இலக்கணக் கூறுகளை வேறுபடுத்தித் தெளிவுபடுத்தவும் ஆற்றலுள்ளோராய்க் கற்பிப்போர் இருக்க வேண்டும். அப்போது தான் கற்கும் மாணவர்களால் எளிதாக விளங்கிக்கொள்ள முடியும்.

ஆங்கில வழி கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் என்றாலும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறியாதிருக்கும் வரை அறியாமையே மேலோங்கி நிற்கும். உள்ளூரில் ஆங்கில வழிக் கல்வியில் உயர் தரம் கற்றோரும், ஆங்கிலம் பேசுவதில் கடினப்படுகின்றனர் என்றால் அதுவே முதன்மை காரணமாகும். இதற்கான ஒரே தீர்வு முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்பது தான்.

ஆங்கிலம் கற்பிப்போர் இருமொழிகளிலும் சிறப்புற்றவர்களாக இருக்க வேண்டும் எனும் சட்டம் இயற்றப்படவேண்டும். அப்போதுதான் ஆங்கிலம் கற்கும் தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழியாளுமையையும் தமிழ் மொழியின் சிறப்பையும் கற்றுச் சிறப்படைவர். அவ்வாறானோரிடமே தாய்மொழியான தமிழ்சார் பங்களிப்புகள் பெருகும்.

ஆங்கில உச்சரிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு வேண்டுமானால் தாய் மொழி ஆங்கிலேயரைப் பின்பற்றலாம்.

தமிங்கிலம் தவிர்ப்பதற்கு

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்பதனால், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அறிந்துக்கொள்வது மட்டுமன்றி, தமிங்கிலத்தைத் தவிர்ப்பதற்கும் உதவும். இதுவே பரந்துப்பட்ட அளவில் அரசக் கல்வித்திட்டமாக முன்னெடுக்கப்படும் போது தமிங்கில வழக்கைக் காலப்போக்கில் ஒழித்துக்கட்ட வழிவகுக்கும்.

பாதித் தமிழை மென்று, மீதித் தமிழை விழுங்கி, சொதப்பித் துப்பி, ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் பேசுவதை விட, முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழைத் தமிழாகவும் பேசலாம்.

ஆங்கிலக் கல்வி

இன்றைய உலக அறிவியல் வளர்ச்சிக்கு, தொழில் நுட்பச் செய்திகளுக்கென்று மட்டுமல்லாமல் உலகமயமாக்கலின் தொடர்பாடல்கள் மிக வேகமாக வளர்ந்து நாடுகளுக்குள் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் பாரியளவில் பெருகிவரும் நிலையில், உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக ஆங்கிலமொழி வளர்ந்து நிற்கிறது. அதனைக் கற்காமல் எந்தவொரு வளர்ச்சிப் படியையும் நாம் எளிதாக எட்டிவிட முடியாது என்பதைத் தமிழர் அனைவரும் உணர்தல் வேண்டும். ஆங்கிலம் கற்காவிட்டால் எமது சமுதாயம் பல்வேறு மட்டங்களில் பின்தள்ளப்பட்டுவிடுவோம் என்பதையும் மறவாதிருப்போமாக.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டுத் தமிழ்ப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது என்பதைத் தமிழகப் பேராசிரியர்களில் ஒருவரான சரசுவதி அவர்கள் கூறியதில் சிலப் பகுதிகளை ஆங்கிலம் உதவி பக்கம் இட்டுள்ளோம். நீங்களும் பார்க்கலாம்.

ஆங்கில மொழி, இலத்தீன் கிரேக்க மொழிகளில் இருந்து மட்டுமன்றி; உலகின் பல்வேறு மொழி சொற்களையும் உள்வாங்கிக்கொண்டு உருவான மொழியாகும். ஆனாலும் அது இன்று உலக மொழி தகுதியைப் பெற்றள்ளது. ஒரு சிறிய இனக்குழுமத்தினரால் பேசப்பட்ட மொழி இன்று உலகின் திக்கெட்டுமுள்ளோர் கற்கும் விருப்பு மொழியாக எவ்வாறு வளர்ந்தது என்பதைத் தமிழர்களான நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். கீழுள்ள கட்டுரைகளை வாசியுங்கள்.
  • ஆங்கில மொழி வரலாறு
  • அமெரிக்க ஆங்கில வரலாறு
தமிழும் தமிழரும் தன்னார்வப் பணிகளும்

தமிழ் ஒரு செம்மொழி. தமிழ் மொழியின் வேர்ச் சொற்களில் இருந்து எக்காலத்திற்கும் எந்நுட்பத்திற்கும் தேவையான கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ளும் தனிச்சிறப்பு எம்மொழிக்குண்டு. இருப்பினும் ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் சொல்வளத்தைப் பொறுத்தும் நிலைபெறுகின்றது. ஆங்கிலம் இன்று உலகளவில் சிறப்புறுவதற்கு அம்மொழியின் சொல்வளமும் ஒரு முக்கிய காரணமாகும். ஆம், உலகில் எந்த ஒரு மொழியையும் விட சொல்வளம் மிகுந்த ஒரு மொழியாக ஆங்கிலம் இன்று வளர்ந்து நிற்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு நாமும் எமது மொழியின் சொல்வளத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். மேலும் உலகின் அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியம், அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த நூல்களில் சிறந்தவற்றையெல்லாம் உடனுக்குடன் தமிழாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறான செயல் திட்டங்களில் நாம் இறங்கினால் தான் நாம் எமது மொழியைக் கால வெள்ளத்தில் அள்ளுண்டு போகாமல் தடுக்கலாம்.

இதனை உணர்ந்த தமிழ் பற்றாளர்கள், தன்னார்வக் குழுக்களாக இணைந்து கலைச் சொல்லாக்க முயற்சிகளில் ஆங்காங்கே ஈடுபட்டு வருவதனை இணையத்தில் காணலாம். இவை உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தருக்கின்றது என்றாலும் அதனை முழுவீச்சுடனும் முனைப்புடனும் செயற்படுத்த தமிழ் வளர்ச்சித் திட்டங்களைத் தமிழரே எவரினதும் குறுக்கீடின்றி உருவாக்கி செயல்படுத்தும் நிலை தோன்ற வேண்டும். தரவுகளின் அடிப்படையில் இன்றளவில் 77 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகவும், உலகில் அதிகம் பேசும் மொழிகளின் வரிசையில் 17வது இடத்திலும் எமது மொழி உள்ளது. இருப்பினும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் சிறுபான்மையினராக வாழ்வதால் எதையும் ஒரு வரையறைக்கு மேல் செய்யமுடியாத  நிலையைக் கவலையுடன் நோக்கவேண்டியுள்ளது. ஒரு இனத்தின் வளர்ச்சி என்பதும், அவர்தம் பேசும் மொழியின் வளர்ச்சி என்பதும், அவ்வினம் எவரது அடக்குமுறைக்கும் உட்படாத இனமாக, தம்மைத் தாமே ஆளும் இறையாண்மையுடைய இனமாக மாற்றிக்கொள்வதில் மட்டுமே சாத்தியம். ஓரினம் இறைமையுள்ள இனமாக மாறும் போது, அவ்வினத்தில் வளர்ச்சித் தொடர்பான, மொழி வளர்ச்சி தொடர்பான பாரிய செயற்திட்டங்களைக் குறிப்பிட்ட மொழியின் ஆர்வலர்களையும், அறிஞர்களையும்,  மொழிப்புலமையாளர்களையும் உள்வாங்கிக்கொண்டு மேற்கொள்ள முடியும். ஆங்காங்கே தன்னார்வப் பணியாகத் தனித்தும், சிற்சிறு குழுமங்களாகவும் முன்னெடுக்கும் முயற்சிகள் போலன்றி, பாரிய திட்டங்களை முன்னெடுக்க முடியும். அதுவே ஒரு இனத்தின் வளர்ச்சியும் ஆகும். அதற்கு தமிழர் இழந்த இறைமையை மீட்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் தமிழர் இழந்த இறைமையையும், இறைமையின் தேவையையும் வளரும் இளம் தமிழ்ச் சமூகத்தினரிடம் பெரியோர் கடத்திட வேண்டும்.

இங்கே இந்த ஆங்கிலம் வளைத்தளமும், தமிழ், தமிழர் நலன் சார்ந்த நோக்கினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்றதுதான்.

சரி, இனி எமது பாடத்திட்டத்திற்குப் போவோம்.

எமது பாடத்திட்டம்

"நான் கடைக்குப் போகிறேன்", "நான் சாப்பிடுகிறேன்", "நான் படிக்கிறேன்" என நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாக்கியங்களில் ஒன்றை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக "நான் படிக்கிறேன்." எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக்கொண்டால், இந்த ஒரு வாக்கியத்தை எத்தனையெத்தனை வாக்கியமைப்புகளாகத் தமிழில் மாற்றிப் பேசுகின்றோம் எனப் பாருங்கள், எடுத்துக்காட்டாக:
  • நான் படிக்கிறேன்.
  • நான் படித்துக்கொண்டிருக்கின்றேன்.
  • நான் படித்தேன்.
  • நான் படிப்பேன்.
  • நான் படிக்க வேண்டும்.
  • நான் படிக்கவே வேண்டும்.
  • நான் . . . 
  • எனக்கு படிக்க முடியும்.
  • எனக்கு . . .
என இன்னுமின்னும் எத்தனையோ வடிவில் மாற்றிப் பேச, எழுத முடியும் அல்லவா? அவ்வாறு நாம் அன்றாடம் பேசும் மொழியைத்தான், எல்லோரும்  எளிதாகப் புரிந்துக்கொள்ளும் வகையிலும், எளிதாகக் கற்கும் வகையிலும், இலக்கண விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக நாம் அன்றாடம் பேசும் ஒரு தமிழ் வார்த்தையை எவ்வாறு இடத்திற்கேற்ப மாற்றிப் பேசுகின்றோமோ, அதேபோன்றே ஆங்கிலத்திலும் ஒரு வாக்கியத்தை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு, 73 வாக்கியங்களாக மாற்றி, இந்த ஆங்கிலப் பாடத் திட்டத்தின் முதல் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனை இங்கே  இலக்கண வாக்கியமைப்புகளாக (Grammar Patterns) வடிவமைக்கப்பட்டுள்ளன. பொருள் சிதைவற்ற ஆங்கிலப் பேச்சிற்கு, ஆங்கில இலக்கணம் கற்பது மிகவும் இன்றியமையாததாகும். ஆங்கில இலக்கண விதிமுறைகளை எளிதாக விளங்கிக் கற்பதற்கு முதலில் "Grammar Patterns" களைப் பயிற்சி செய்துக்கொள்ளல் பயன்மிக்கது. இவற்றை முழுமையாகப் பயிற்சி செய்துகொண்டீர்களானால், ஆங்கில இலக்கணப் பாடங்களை மிகவும் எளிதாகத் தொடர முடியும். இது மிகவும் இலகுவான ஒரு பாடப் பயிற்சித் திட்டம். எந்த மொழியானாலும் "பேசும் மொழியைத்தான் இலக்கண கூறுகளாக வகுக்கப் பட்டுள்ளதே தவிர, இலக்கண விதிகளை வகுத்துவிட்டு எந்தவொரு மொழியும் பேச்சுப் புழக்கத்திற்கு வரவில்லை." எனவே தொடர்ந்து இந்த வாக்கியமைப்புகளைப் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். சரியோ பிழையோ  நீங்கள் பயிற்சி செய்தவற்றை உங்கள் நண்பர்கள், உடன்பிறப்புகள், உறவினர்கள் என எல்லோருடனும் பேசிப் பேசி பயிற்சி செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்களே வியக்கும் வகையில், சரளமாக ஆங்கிலம் பேசும் ஆற்றலை நீங்களே பெற்றுக்கொள்ளலாம். உச்சரிப்பு பயிற்சிக்குப் பாடங்களுடன் வழங்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி "கேட்டல்" பயிற்சியையும் பெறலாம். உங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள எமது ஒவ்வொரு பாடங்களின் போதும் வழங்கப்படும் வீட்டுப்பாட பயிற்சிகளை முறையாகப் பயின்றாலே போதுமானது.

முதலில் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3, Grammar Patterns 4, Grammar Patterns 5, Grammar Patterns 6 இவற்றைப் பயிற்சி செய்துக் கொள்ளுங்கள். இவற்றைத் தவிர வேறு சில கிரமர் பெட்டன்களும் உள்ளன. அவற்றை உரிய பாடங்களின் போது வழங்கப்படும். "கிரமர் பெட்டன்" களில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்போது அதனதன் இலக்கண விதிமுறைகளையும் பயன்பாட்டையும் விரிவாகக் கற்றுக் கொள்ளலாம். பாடங்கள் இலக்க வரிசையில் வழங்கப்படுவதால், அவற்றை நீங்கள் இலக்க வரிசையிலேயே தொடரலாம்.

இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் எந்தளவிற்கு ஏற்புடையது என்பதை நீங்கள் தான் கூறவேண்டும். மாற்று கருத்து இருந்தால் அதனையும் கூற மறவாதீர்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களே இத்தளத்தை மேலும் மேம்படுத்த உதவும்.

இத்தளம் பயனுள்ளது எனக் கருதினால், இத்தளத்தை ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

"கடைக்கோடித் தமிழனும் கற்க வேண்டும் ஆங்கிலம்!"

ஆங்கிலம் கற்போம், தேவையெனில் இன்னும் இன்னும் ஆயிரம் மொழிகள் கற்போம், ஆனால் அன்னை தமிழிடமே பற்று வைப்போம். எம்மினமும் எம்மொழியும் மேம்படவே உழைப்போம்!

நன்றி!

அன்புடன்
ச, தங்கவடிவேல், பிரான்சு

Download As PDF