Showing posts with label ஆங்கில அட்டவணைகள். Show all posts
Showing posts with label ஆங்கில அட்டவணைகள். Show all posts

அட்டவணை Third Person Singular (He, She, It: infinitive + e/ es)

He, She, It “மூன்றாம் நபர் ஒருமை” (Third Person Singular) சாதாரண நிகழ்கால வாக்கியங்களின் பொழுது பிரதான வினைச் சொற்களுடன் எப்பொழுதும் s, es எனும் எழுத்துக்கள் இணைந்தே பயன்படும்.

கீழுள்ள அட்டவணையைப் பாருங்கள்.

Third Person Singular (He, She, It: infinitive + e/ es)

I/We/TheyHe/She/It தமிழ் விளக்கம்
applyapplies விண்ணப்பி
comecomes நிறுவனம்
bringbrings கொண்டு வா
beginbegins ஆரம்பி
drivedrivesஓட்டு
dodoes செய்
drawdraws (படம்) வரை,பெறு
drinkdrinks குடி
eateats சாப்பிடு
forgetforgets மற
feelfeels உணர்
fightfights சண்டையிடு
flyflies பற
givegivesகொடு
getgets பெறு/அடை
gogoes போ
havehas இரு
keepkeeps வை
knowknows தெரிந்துக்கொள்
lielies பொய் பேசு
looklooks பார்
makemakes தயாரி/தயார் செய்
meetmeets சந்தி
riderides ஓட்டு
playplays விளையாடு
putputsவை
saysays சொல்
sellsells விற்பனைச் செய்
sendsendsஅனுப்பு
shakeshakes குலுக்கு
singsings பாடு
speakspeaksபேசு
spitspits துப்பு
stealstealsதிருடு
taketakes எடு
telltells சொல்
thinkthinks நினை
understandunderstandsவிளங்கிக்கொள்
wearwearsஉடுத்து/உடையணி
writewrites எழுது
watchwatchesகவனி

உதாரணம்:

He speaks in English.
அவன் பேசுகின்றான் ஆங்கிலத்தில்.
She speaks in English.
அவள் பேசுகின்றாள் ஆங்கிலத்தில்.
It speaks in English.
அது பேசுகின்றது ஆங்கிலத்தில்.

இப்பாடத்துடன் தொடர்புடைய Grammar Patterns 2 யும் பார்க்கவும்.

விதிமுறைகள்

வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (சில சொற்கள் விதிவிலக்கானவை)

உதாரணம்:

Try - tries
Worry - worries

அதேப்போன்று “s,  x,  z,  ch,  sh, o" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணம்:

do - does
go - goes

'have' என்பதற்கு 'has' என மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.

have - has

குறிப்பு:

He எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக ஆண்களின் பெயருடனும், She எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பெண்களின் பெயருடனும், It எனும் சுட்டுப் பெயருக்குப் பதிலாக (மனிதரல்லாத) உயிருள்ள உயிரற்ற பொருற்களுடனும் s, es சாதாரண நிகழ்கால வாக்கியங்களில் பிரதான வினைச் சொல்லுடன் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண்

Download As PDF

ஆங்கிலம் வினைச்சொல் அட்டவணை (Irregular Verbs)

இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று வழங்கப்படுகின்றது.

"Irregular verbs" கள் அட்டவணையை ஆங்கிலம் உதவி பக்கமும் இட்டுள்ளோம். நீங்கள் விரும்பினால் http://aangilam.page.tl/Irregular-verbs.htm பக்கம் சென்றும் பார்க்கலாம். அவற்றை ஸ்க்ரீன் சொட் எடுத்தே இங்கு இட்டுள்ளோம்.

பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு கீழே இணைக்கப் பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.









இந்த "Irregular verbs" களை மனப்பாடம் செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். நாம் பிழையின்றி ஆங்கிலம் பேச, எழுத விரும்பினால் நாம் இவற்றை முறையாகக் கற்பதே சிறந்த வழியாகும். எமது அடுத்த பாடப் பயிற்சியின் போது நாம் இறந்தக்கால (Past Tense) பயிற்சிகளைத் தொடர இருப்பதால் இவற்றை இன்றே மனப்பாடம் செய்துக்கொள்வது எளிதாக இருக்கும்.

மற்றும் எதிர்வரும் "Passive Voice" பாடங்களின் போதும் இந்த "Irregular verbs" அட்டவணை அவசியப்படும்.

எனவே கட்டாயம் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி அத்தியாவசியம் ஆகிவிட்ட இக்காலச் சூழமைவில் நாம் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் கற்பதே இன்றைய உலக கால ஓட்டத்தில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

குறிப்பு:

இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகும். இதன் முறையின் படியே பாடங்கள் வழங்கப்படும்.

கேள்விகள் கேட்போர் இந்த ஆங்கில பாடப் பயிற்சிகள் தொடர்பாக எழும் எந்த விதமான சந்தேகங்கள், கேள்விகளாயினும் கேட்கலாம். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில சொற்கள் இருப்பின் அவற்றையும் கேட்கலாம். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.

ஆனால் ஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கிக் கேட்பது, ஆங்கிலக் கல்விக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம் மொழி தொடர்பில் எந்தவிதமான கேள்விகள் இருப்பினும் தயங்காமல் எழுதுங்கள். உங்கள் கேள்விகளுக்கான பதில் எமது பாடத்திட்டத்திற்குள் உள்ளதொன்றானால், அவற்றை அப்பாடங்களின் போது வழங்கப்படும். எமது ஆங்கிலப் பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகளாக இருப்பின் அவற்றை தொகுத்து பின் "கேள்வி பதில்" பகுதியாக வழங்குவதாக உள்ளோம்.

முடிந்தவரையில் உங்கள் கேள்விகளை தமிழிலேயே எழுதிக் கேளுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டெழுதினாலும், அவற்றுக்கான பதில் தமிழிலேயே வழங்கப்படும்.

சரி பயிற்சிகளை தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி ஆங்கில உச்சரிப்பு பயிற்சி, ஆங்கிலம் பேச்சு பயிற்சி, English listening Practice, through Tamil, in Tamil, with Tamil, English irregular verbs with Tamil Explanation.
அன்புடன்
அருண் | HK Arun English Irregular verbs listening practice in Tamil,
Download As PDF