Showing posts with label சாதாரண நிகழ்காலம். Show all posts
Showing posts with label சாதாரண நிகழ்காலம். Show all posts

ஆங்கில பாடப் பயிற்சி — 4 (Simple Present Tense)

நாம் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3 ஆகிய மூன்று பாடங்களிலும் ஒரு வாக்கியத்தை எப்படி 73 வாக்கியமைப்பு வடிவங்களாக மாற்றிப் பயிற்சி செய்யலாம் என்பதனைப் பார்த்தோம். அந்த 73 வாக்கியங்களில் ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு பாடமாக விரிவடையும் என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படி Grammar Patterns 1 றின் முதலாவது வாக்கியமான "I do a job" எனும் வாக்கியத்தை இப்பாடத்தில் விரிவாகவும் இலக்கண விதிமுறைகளையும் இன்று பார்க்கப் போகின்றோம்.

  • 1. I do a job
  • நான் செய்கிறேன் ஒரு வேலை.

இந்த "I do a job" எனும் வாக்கியம் ஒரு சாதாரண நிகழ்கால வாக்கியமாகும். இதை ஆங்கிலத்தில் Simple Present Tense அல்லது Present Simple Tense என்றழைப்பர்.

Subject + Auxiliary verb + Main verb +
1. I/ You/ We/ They + __ + do a job.
2. He/ She/ It + __ + does a job.

மேலுள்ள நேர்மறை வாக்கிய அமைப்புகளில் "Auxiliary verb" "அதாவது துணைவினை பயன்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

அடுத்ததாக, சாதாரண நிகழ்கால வாக்கியமைப்பை (Simple Present Tense) எப்படிக் கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதைப் பார்ப்போம்.

Auxiliary verb + Subject + Main verb +
1. Do + I/ you/ we/ they + do a job?
2. Does + he/ she/ it + do a job.

இவற்றில் துணைவினை வாக்கியத்தில் தொடக்கத்திலேயே (Auxiliary verb) பயன்படும். அதாவது சாதாரண நிகழ்கால கேள்வி வாக்கியங்களின் போது Do/ Does போன்ற துணைவினைகள் வாக்கியத்தின் முன்பாகவும், "Subject" அதன் பின்னாலும் பயன்படுவதையும் காணுங்கள். இதனைச் சற்று விளங்கிக்கொண்டோமானால் எந்தவொரு வாக்கியத்தையும் மிக இலகுவாகக் கேள்விப் பதில் வாக்கியங்களாக மாற்றி அமைத்துவிடலாம்.

இப்பாடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து கற்போம்.


பகுதி 1

Do you do a job?
நீ செய்கிறாயா ஒரு வேலை?
Yes, I do a job
ஆம், நான் செய்கிறேன் ஒரு வேலை.
No, I don’t do a job. (do + not)
இல்லை, நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.

Do you speak English?
நீ பேசுகிறாயா அங்கிலம்?
Yes, I speak English.
ஆம், நான் பேசுகிறேன் ஆங்கிலம்
No, I don’t speak English. (do + not)
இல்லை, நான் பேசுகிறேனில்லை ஆங்கிலம்.

Do you go to school?
நீ போகிறாயா பாடசாலைக்கு?
Yes, I go to school.
ஆம், நான் போகிறேன் பாடசாலைக்கு.
No, I don’t go to school. (do + not)
இல்லை, நான் போகிறேனில்லை பாடசாலைக்கு.

Do you love me?
நீ காதலிக்கிறாயா என்னை?
Yes, I love you.
ஆம், நான் காதலிக்கிறேன் உன்னை.
No, I don’t love you. (do + not)
இல்லை, நான் காதலிக்கவில்லை உன்னை.

மேலே I (நான்) என்று பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில் "You, We, They - நீ/ நீங்கள்/ நாங்கள்/ நாம்/ அவர்கள்/அவைகள்" என மாற்றி எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

கீழே 50 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றையும் பயிற்சி செய்யுங்கள். அதன்பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றி கேள்விப் பதில் வாக்கியங்களாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள்.

1. I get up early every day.
நான் எழுகிறேன் காலையில் ஒவ்வொரு நாளும்.

2. I brush my teeth twice a day.
நான் துலக்குகிறேன் என் பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை.

3. I have a bath.
நான் குளிக்கிறேன்.

4. I have breakfast.
நான் உண்கிறேன் காலை உணவு.

5. I travel by bus.
நான் பயணம் செய்கிறேன் பேருந்தில்.

6. I go to school.
நான் போகிறேன் பாடசாலைக்கு.

7. I go to Kowloon Park every Sunday.
நான் போகிறேன் கவுலூன் பூங்காவிற்கு ஒவ்வொரு ஞாயிறும்.

8. I read a book.
நான் வாசிக்கிறேன் ஒரு பொத்தகம்.

9. I write articles.
நான் எழுதுகிறேன் கட்டுரைகள்.

10. I like chocolate ice cream.
நான் விரும்புகிறேன் கொக்கோபழ குளிர்களி.

11. I repay the loan.
நான் செலுத்துகிறேன் கடன்.

12. I borrow some books from my friend.
நான் இரவல் வாங்குகிறேன் சில பொத்தகங்கள் எனது நண்பனிடமிருந்து.

13. I leave the class.
நான் வெளியேறுகிறேன் வகுப்பிலிருந்து.

14. I try to go.
நான் முயல்கிறேன் போவதற்கு.

15. I have a rest.
நான் எடுக்கிறேன் ஒரு ஓய்வு.

16. I answer the phone.
நான் பதிலளிக்கிறேன் தொலைப்பேசிக்கு.

17. I watch a movie.
நான் பார்க்கிறேன் ஒரு திரைப்படம்.

18. I worry about that.
நான் கவலைப்படுகிறேன் அதைப் பற்றி.

19. I drive a car.
நான் ஓட்டுகிறேன் ஒரு மகிழுந்து.

20. I read the newspaper.
நான் வாசிக்கிறேன் நாளிதழ்.

21. I play football.
நான் விளையாடுகிறேன் காற்பந்தாட்டம்.

22. I boil water.
நான் கொதிக்கவைக்கிறேன் நீர்.

23. I have some tea.
நான் அருந்துகிறேன் கொஞ்சம் தேநீர்.

24. I do my homework.
நான் செய்கிறேன் எனது வீட்டுப்பாடம்.

25. I deposit money at the bank.
நான் வைப்பீடு செய்கிறேன் காசை வங்கியில்.

26. I wait for you.
நான் காத்திருக்கிறேன் உனக்காக.

27. I use the computer.
நான் பயன்படுத்துகிறேன் கணனியை

28. I take a computer course.
நான் எடுக்கிறேன் ஒரு கணனி பாடப்பயிற்சி.

29. I practice my religion.
நான் பின்பற்றுகிறேன் என் மதத்தை.

30. I listen to the news.
நான் செவிமடுக்கிறேன் செய்திகளுக்கு.

31. I speak English.
நான் பேசுகிறேன் ஆங்கிலம்.

32. I prepare tea.
நான் தயாரிக்கிறேன் தேநீர்.

33. I help my mother.
நான் உதவுகிறேன் எனது தாயாருக்கு.

34. I celebrate my birthday.
நான் கொண்டாடுகிறேன் எனது பிறந்த நாளை.

35. I enjoy Tamil songs.
நான் கேட்டுமகிழ்கிறேன் தமிழ்ப் பாடல்களை.

36. I negotiate my salary.
நான் பேரம்பேசுகிறேன் எனது சம்பளத்தை.

37. I change my clothes.
நான் மாற்றுகிறேன் எனது உடைகளை.

38. I go to the market.
நான் போகிறேன் சந்தைக்கு.

39. I choose a nice shirt.
நான் தெரிவுசெய்கிறேன் ஒரு அழகான மேற்சட்டை.

40. I buy a pair of trousers.
நான் வாங்குகிறேன் ஒரு காற்சட்டை.

41. I love Tamil.
நான் நேசிக்கிறேன் தமிழை.

42. I still remember this place.
எனக்கு (இன்னும்) நினைவில் இருக்கிறது இந்த இடம்.

43. I take a transfer.
நான் எடுக்கிறேன் ஒரு இடமாற்றம்.

44. I renovate the house.
நான் புதுப்பிக்கிறேன் வீட்டை.

45. I give up this habit.
நான் விட்டுவிடுகிறேன் இந்தத் (தீய)பழக்கத்தை.

46. I fly to America.
நான் பறக்கிறேன் (விமானத்தில்) அமெரிக்காவிற்கு.

47. I solve my problems.
நான் தீர்க்கிறேன் எனது இன்னல்களை.

48. I improve my English skills.
நான் வளர்க்கிறேன் எனது ஆங்கில ஆற்றல்களை.

49. I practice English at night.
நான் பயிற்சி செய்கிறேன் ஆங்கிலம் இரவில்.

50. I dream about my bright future.
நான் கனவு காண்கிறேன் எனது ஒளிமயமான எதிர்காலத்தை (பற்றி).

பகுதி 2

மேலே "பகுதி 1" ல் உள்ள 50 வாக்கியங்களையும் கேள்விப் பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யும்படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்துப்பாருங்கள்.

கவனிக்கவும்:
சாதாரண நிகழ்காலத்தில் He/ She/ It போன்ற மூன்றாமவர் ஒருமை "Third Person Singular" வாக்கியங்களின் போது எப்பொழுதும் முதன்மை வினைச்சொல்லுடன் s, es  போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள். மேலும் He/ She/ It Infinitive + e, es அட்டவணையை ஒருமுறை பார்த்துக்கொள்ளவும்.

Grammar Patterns 2 ல் முதலாவது வார்த்தை எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைப் பார்த்தும் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

  • He does a job. - அவன் செய்கிறான் ஒரு வேலை.
  • She does a job. - அவள் செய்கிறாள் ஒரு வேலை.
  • It does a job. - அது செய்கிறது ஒரு வேலை.

He speaks English - அவன் பேசுகிறான் ஆங்கிலம்.
She speakEnglish. - அவள் பேசுகிறாள் ஆங்கிலம்.
It speaks English. - அது பேசுகிறது ஆங்கிலம்.

இப்பொழுது "Third Person Singular" வாக்கியங்களை எவ்வாறு கேள்விப் பதிலாக மாற்றி அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

Auxiliary verb + Subject + Main verb +?
2. Does + he/ she/ it + do a job?

கேள்வி வாக்கியங்களின் போது "Auxiliary verb" அதாவது துணைவினை 'Does' வாக்கியத்தின் தொடக்கத்திலும் "Subject" அதன் பின்னாலும் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Does he do a job?
அவன் செய்கிறானா ஒரு வேலை?
Yes, he does a job
ஆம், அவன் செய்கிறான் ஒரு வேலை.
No, he doesn’t do a job. (does + not)
இல்லை, அவன் செய்கிறானில்லை இரு வேலை.

Does he speak English?
அவன் பேசுகிறானா அங்கிலம்?
Yes, he speaks English.
ஆம், அவன் பேசுகிறான் ஆங்கிலம்
No, he doesn’t speak English. (does + not)
இல்லை, அவன் பேசுகிறானில்லை ஆங்கிலம்.

Does she go to school?
அவள் போகிறாளா பாடசாலைக்கு?
Yes, she goes to school.
ஆம், அவள் போகிறாள் பாடசாலைக்கு.
No, she doesn’t go to school. (does + not)
இல்லை, அவள் போகிறாளில்லை பாடசாலைக்கு.

குறிப்பு:

He - அவன்
'அவன்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக எந்தவொரு ஆண் பெயரையும் பயன்படுத்தலாம்.

She - அவள்
'அவள்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக எந்தவொரு பெண் பெயரையும் பயன்படுத்தலாம்.

It - அது
'அது' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக எந்தவொரு (ஆண்பால் பெண்பாலற்ற) பொதுப் பெயரையும் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக:

  • He/ She/ It - makes a coffee - (make)
  • He/ She/ It - thinks about that (think)
  • He/ She/ It - loves ice-cream. (love)
  • Suvethine makes a coffee. - சுவேதினி தயாரிக்கிறாள் ஒரு கோப்பி.
  • Sarmilan loves his motherland. - சர்மிலன் நேசிக்கின்றான் அவனது தாயகத்தை.

விதிமுறைகள்:

வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (விதி விலக்கானவையும் உள்ளன)

எடுத்துக்காட்டாக:

  • try - tries
  • worry - worries

அதேப்போன்று “s”, x”, z”, ch”, sh”, o" போன்ற எழுத்துக்கள் வினைச்சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

  • do - does
  • go - goes
  • have - has

('have' என்னும் சொல் 'has' என மாறும்.)

குறிச்சொற்கள் (Signal Words)

நிகழ்கால வினைச்சொற்களுடன் பயன்படும் குறிச்சொற்கள்:

  • always
  • often
  • usually
  • sometimes
  • seldom
  • never
  • every day
  • every week
  • every year
  • on Monday
  • after school

எடுத்துக்காட்டாக ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களிடம் " நீ எங்கே வசிக்கிறாய்?" எனக் கேட்டால், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்.

Where do you live?
எங்கே நீ வசிகிறாய்?

I live in Hong Kong.
நான் வசிக்கிறேன் கொங்கொங்கில்.

இந்தப் பதிலைச் சற்று கவனியுங்கள்,  "நான் வசிக்கிறேன் ஹொங்கொங்கில்" என்று நீங்கள் சாதாரண நிகழ்காலத்தில் பதிலளித்துள்ளீர்கள். இப்பதில் ஒரு வரையரைக்குள் உட்படாமல் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது நேற்றும் கொங்கொங்கில் வசித்துள்ளீர்கள். இன்றும் வசிக்கின்றீர்கள். நாளையும்,  வசிக்கலாம். எனவே உங்கள் பதில் பொதுப்படையான பதிலாகவே அமைகின்றது என்பதைக் கருத்தில் கொள்க.

இதுப்போன்ற சூழ்நிலைகளில் "செயல்" முக்காலத்தையும் குறிக்கும் பொது நிகழ்வாகவே பயன்படும். கீழேயுள்ள விளக்கப்படம் 1 றை கவனியுங்கள்.

விளக்கப்படங்கள் (diagrams)

விளக்கப்படம் 1

விளக்கப்படம் - 2 ல் காட்டப்பட்டுள்ளவாறு, ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் நிகழும் நிகழ்காலத்தைக் குறிக்கும் விதமாகவும் சில வாக்கியங்கள் அமையும்.

விளக்கப்படம் 2


சரி! இனி உங்கள் பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் ஐயங்கள் கேள்விகள் இருப்பின் முன்னிகைப் பெட்டியில் கேளுங்கள்.

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
Download As PDF