ஆங்கில பாடப் பயிற்சி — 4 (Simple Present Tense)

நாம் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3 ஆகிய மூன்று பாடங்களிலும் ஒரு வாக்கியத்தை எப்படி 73 வாக்கியமைப்பு வடிவங்களாக மாற்றிப் பயிற்சி செய்யலாம் என்பதனைப் பார்த்தோம். அந்த 73 வாக்கியங்களில் ஒவ்வொரு வாக்கியமும் ஒவ்வொரு பாடமாக விரிவடையும் என்று நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படி Grammar Patterns 1 றின் முதலாவது வாக்கியமான "I do a job" எனும் வாக்கியத்தை இப்பாடத்தில் விரிவாகவும் இலக்கண விதிமுறைகளையும் இன்று பார்க்கப் போகின்றோம்.

  • 1. I do a job
  • நான் செய்கிறேன் ஒரு வேலை.

இந்த "I do a job" எனும் வாக்கியம் ஒரு சாதாரண நிகழ்கால வாக்கியமாகும். இதை ஆங்கிலத்தில் Simple Present Tense அல்லது Present Simple Tense என்றழைப்பர்.

Subject + Auxiliary verb + Main verb +
1. I/ You/ We/ They + __ + do a job.
2. He/ She/ It + __ + does a job.

மேலுள்ள நேர்மறை வாக்கிய அமைப்புகளில் "Auxiliary verb" "அதாவது துணைவினை பயன்படுவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

அடுத்ததாக, சாதாரண நிகழ்கால வாக்கியமைப்பை (Simple Present Tense) எப்படிக் கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதைப் பார்ப்போம்.

Auxiliary verb + Subject + Main verb +
1. Do + I/ you/ we/ they + do a job?
2. Does + he/ she/ it + do a job.

இவற்றில் துணைவினை வாக்கியத்தில் தொடக்கத்திலேயே (Auxiliary verb) பயன்படும். அதாவது சாதாரண நிகழ்கால கேள்வி வாக்கியங்களின் போது Do/ Does போன்ற துணைவினைகள் வாக்கியத்தின் முன்பாகவும், "Subject" அதன் பின்னாலும் பயன்படுவதையும் காணுங்கள். இதனைச் சற்று விளங்கிக்கொண்டோமானால் எந்தவொரு வாக்கியத்தையும் மிக இலகுவாகக் கேள்விப் பதில் வாக்கியங்களாக மாற்றி அமைத்துவிடலாம்.

இப்பாடத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து கற்போம்.


பகுதி 1

Do you do a job?
நீ செய்கிறாயா ஒரு வேலை?
Yes, I do a job
ஆம், நான் செய்கிறேன் ஒரு வேலை.
No, I don’t do a job. (do + not)
இல்லை, நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.

Do you speak English?
நீ பேசுகிறாயா அங்கிலம்?
Yes, I speak English.
ஆம், நான் பேசுகிறேன் ஆங்கிலம்
No, I don’t speak English. (do + not)
இல்லை, நான் பேசுகிறேனில்லை ஆங்கிலம்.

Do you go to school?
நீ போகிறாயா பாடசாலைக்கு?
Yes, I go to school.
ஆம், நான் போகிறேன் பாடசாலைக்கு.
No, I don’t go to school. (do + not)
இல்லை, நான் போகிறேனில்லை பாடசாலைக்கு.

Do you love me?
நீ காதலிக்கிறாயா என்னை?
Yes, I love you.
ஆம், நான் காதலிக்கிறேன் உன்னை.
No, I don’t love you. (do + not)
இல்லை, நான் காதலிக்கவில்லை உன்னை.

மேலே I (நான்) என்று பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களில் "You, We, They - நீ/ நீங்கள்/ நாங்கள்/ நாம்/ அவர்கள்/அவைகள்" என மாற்றி எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.

கீழே 50 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவற்றையும் பயிற்சி செய்யுங்கள். அதன்பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றி கேள்விப் பதில் வாக்கியங்களாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள்.

1. I get up early every day.
நான் எழுகிறேன் காலையில் ஒவ்வொரு நாளும்.

2. I brush my teeth twice a day.
நான் துலக்குகிறேன் என் பற்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை.

3. I have a bath.
நான் குளிக்கிறேன்.

4. I have breakfast.
நான் உண்கிறேன் காலை உணவு.

5. I travel by bus.
நான் பயணம் செய்கிறேன் பேருந்தில்.

6. I go to school.
நான் போகிறேன் பாடசாலைக்கு.

7. I go to Kowloon Park every Sunday.
நான் போகிறேன் கவுலூன் பூங்காவிற்கு ஒவ்வொரு ஞாயிறும்.

8. I read a book.
நான் வாசிக்கிறேன் ஒரு பொத்தகம்.

9. I write articles.
நான் எழுதுகிறேன் கட்டுரைகள்.

10. I like chocolate ice cream.
நான் விரும்புகிறேன் கொக்கோபழ குளிர்களி.

11. I repay the loan.
நான் செலுத்துகிறேன் கடன்.

12. I borrow some books from my friend.
நான் இரவல் வாங்குகிறேன் சில பொத்தகங்கள் எனது நண்பனிடமிருந்து.

13. I leave the class.
நான் வெளியேறுகிறேன் வகுப்பிலிருந்து.

14. I try to go.
நான் முயல்கிறேன் போவதற்கு.

15. I have a rest.
நான் எடுக்கிறேன் ஒரு ஓய்வு.

16. I answer the phone.
நான் பதிலளிக்கிறேன் தொலைப்பேசிக்கு.

17. I watch a movie.
நான் பார்க்கிறேன் ஒரு திரைப்படம்.

18. I worry about that.
நான் கவலைப்படுகிறேன் அதைப் பற்றி.

19. I drive a car.
நான் ஓட்டுகிறேன் ஒரு மகிழுந்து.

20. I read the newspaper.
நான் வாசிக்கிறேன் நாளிதழ்.

21. I play football.
நான் விளையாடுகிறேன் காற்பந்தாட்டம்.

22. I boil water.
நான் கொதிக்கவைக்கிறேன் நீர்.

23. I have some tea.
நான் அருந்துகிறேன் கொஞ்சம் தேநீர்.

24. I do my homework.
நான் செய்கிறேன் எனது வீட்டுப்பாடம்.

25. I deposit money at the bank.
நான் வைப்பீடு செய்கிறேன் காசை வங்கியில்.

26. I wait for you.
நான் காத்திருக்கிறேன் உனக்காக.

27. I use the computer.
நான் பயன்படுத்துகிறேன் கணனியை

28. I take a computer course.
நான் எடுக்கிறேன் ஒரு கணனி பாடப்பயிற்சி.

29. I practice my religion.
நான் பின்பற்றுகிறேன் என் மதத்தை.

30. I listen to the news.
நான் செவிமடுக்கிறேன் செய்திகளுக்கு.

31. I speak English.
நான் பேசுகிறேன் ஆங்கிலம்.

32. I prepare tea.
நான் தயாரிக்கிறேன் தேநீர்.

33. I help my mother.
நான் உதவுகிறேன் எனது தாயாருக்கு.

34. I celebrate my birthday.
நான் கொண்டாடுகிறேன் எனது பிறந்த நாளை.

35. I enjoy Tamil songs.
நான் கேட்டுமகிழ்கிறேன் தமிழ்ப் பாடல்களை.

36. I negotiate my salary.
நான் பேரம்பேசுகிறேன் எனது சம்பளத்தை.

37. I change my clothes.
நான் மாற்றுகிறேன் எனது உடைகளை.

38. I go to the market.
நான் போகிறேன் சந்தைக்கு.

39. I choose a nice shirt.
நான் தெரிவுசெய்கிறேன் ஒரு அழகான மேற்சட்டை.

40. I buy a pair of trousers.
நான் வாங்குகிறேன் ஒரு காற்சட்டை.

41. I love Tamil.
நான் நேசிக்கிறேன் தமிழை.

42. I still remember this place.
எனக்கு (இன்னும்) நினைவில் இருக்கிறது இந்த இடம்.

43. I take a transfer.
நான் எடுக்கிறேன் ஒரு இடமாற்றம்.

44. I renovate the house.
நான் புதுப்பிக்கிறேன் வீட்டை.

45. I give up this habit.
நான் விட்டுவிடுகிறேன் இந்தத் (தீய)பழக்கத்தை.

46. I fly to America.
நான் பறக்கிறேன் (விமானத்தில்) அமெரிக்காவிற்கு.

47. I solve my problems.
நான் தீர்க்கிறேன் எனது இன்னல்களை.

48. I improve my English skills.
நான் வளர்க்கிறேன் எனது ஆங்கில ஆற்றல்களை.

49. I practice English at night.
நான் பயிற்சி செய்கிறேன் ஆங்கிலம் இரவில்.

50. I dream about my bright future.
நான் கனவு காண்கிறேன் எனது ஒளிமயமான எதிர்காலத்தை (பற்றி).

பகுதி 2

மேலே "பகுதி 1" ல் உள்ள 50 வாக்கியங்களையும் கேள்விப் பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யும்படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்துப்பாருங்கள்.

கவனிக்கவும்:
சாதாரண நிகழ்காலத்தில் He/ She/ It போன்ற மூன்றாமவர் ஒருமை "Third Person Singular" வாக்கியங்களின் போது எப்பொழுதும் முதன்மை வினைச்சொல்லுடன் s, es  போன்ற எழுத்துக்கள் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள். மேலும் He/ She/ It Infinitive + e, es அட்டவணையை ஒருமுறை பார்த்துக்கொள்ளவும்.

Grammar Patterns 2 ல் முதலாவது வார்த்தை எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைப் பார்த்தும் அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

  • He does a job. - அவன் செய்கிறான் ஒரு வேலை.
  • She does a job. - அவள் செய்கிறாள் ஒரு வேலை.
  • It does a job. - அது செய்கிறது ஒரு வேலை.

He speaks English - அவன் பேசுகிறான் ஆங்கிலம்.
She speakEnglish. - அவள் பேசுகிறாள் ஆங்கிலம்.
It speaks English. - அது பேசுகிறது ஆங்கிலம்.

இப்பொழுது "Third Person Singular" வாக்கியங்களை எவ்வாறு கேள்விப் பதிலாக மாற்றி அமைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

Auxiliary verb + Subject + Main verb +?
2. Does + he/ she/ it + do a job?

கேள்வி வாக்கியங்களின் போது "Auxiliary verb" அதாவது துணைவினை 'Does' வாக்கியத்தின் தொடக்கத்திலும் "Subject" அதன் பின்னாலும் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Does he do a job?
அவன் செய்கிறானா ஒரு வேலை?
Yes, he does a job
ஆம், அவன் செய்கிறான் ஒரு வேலை.
No, he doesn’t do a job. (does + not)
இல்லை, அவன் செய்கிறானில்லை இரு வேலை.

Does he speak English?
அவன் பேசுகிறானா அங்கிலம்?
Yes, he speaks English.
ஆம், அவன் பேசுகிறான் ஆங்கிலம்
No, he doesn’t speak English. (does + not)
இல்லை, அவன் பேசுகிறானில்லை ஆங்கிலம்.

Does she go to school?
அவள் போகிறாளா பாடசாலைக்கு?
Yes, she goes to school.
ஆம், அவள் போகிறாள் பாடசாலைக்கு.
No, she doesn’t go to school. (does + not)
இல்லை, அவள் போகிறாளில்லை பாடசாலைக்கு.

குறிப்பு:

He - அவன்
'அவன்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக எந்தவொரு ஆண் பெயரையும் பயன்படுத்தலாம்.

She - அவள்
'அவள்' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக எந்தவொரு பெண் பெயரையும் பயன்படுத்தலாம்.

It - அது
'அது' எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக எந்தவொரு (ஆண்பால் பெண்பாலற்ற) பொதுப் பெயரையும் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக:

  • He/ She/ It - makes a coffee - (make)
  • He/ She/ It - thinks about that (think)
  • He/ She/ It - loves ice-cream. (love)
  • Suvethine makes a coffee. - சுவேதினி தயாரிக்கிறாள் ஒரு கோப்பி.
  • Sarmilan loves his motherland. - சர்மிலன் நேசிக்கின்றான் அவனது தாயகத்தை.

விதிமுறைகள்:

வினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (விதி விலக்கானவையும் உள்ளன)

எடுத்துக்காட்டாக:

  • try - tries
  • worry - worries

அதேப்போன்று “s”, x”, z”, ch”, sh”, o" போன்ற எழுத்துக்கள் வினைச்சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

  • do - does
  • go - goes
  • have - has

('have' என்னும் சொல் 'has' என மாறும்.)

குறிச்சொற்கள் (Signal Words)

நிகழ்கால வினைச்சொற்களுடன் பயன்படும் குறிச்சொற்கள்:

  • always
  • often
  • usually
  • sometimes
  • seldom
  • never
  • every day
  • every week
  • every year
  • on Monday
  • after school

எடுத்துக்காட்டாக ஒரு நண்பர் அல்லது உறவினர் உங்களிடம் " நீ எங்கே வசிக்கிறாய்?" எனக் கேட்டால், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்.

Where do you live?
எங்கே நீ வசிகிறாய்?

I live in Hong Kong.
நான் வசிக்கிறேன் கொங்கொங்கில்.

இந்தப் பதிலைச் சற்று கவனியுங்கள்,  "நான் வசிக்கிறேன் ஹொங்கொங்கில்" என்று நீங்கள் சாதாரண நிகழ்காலத்தில் பதிலளித்துள்ளீர்கள். இப்பதில் ஒரு வரையரைக்குள் உட்படாமல் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது நேற்றும் கொங்கொங்கில் வசித்துள்ளீர்கள். இன்றும் வசிக்கின்றீர்கள். நாளையும்,  வசிக்கலாம். எனவே உங்கள் பதில் பொதுப்படையான பதிலாகவே அமைகின்றது என்பதைக் கருத்தில் கொள்க.

இதுப்போன்ற சூழ்நிலைகளில் "செயல்" முக்காலத்தையும் குறிக்கும் பொது நிகழ்வாகவே பயன்படும். கீழேயுள்ள விளக்கப்படம் 1 றை கவனியுங்கள்.

விளக்கப்படங்கள் (diagrams)

விளக்கப்படம் 1

விளக்கப்படம் - 2 ல் காட்டப்பட்டுள்ளவாறு, ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் நிகழும் நிகழ்காலத்தைக் குறிக்கும் விதமாகவும் சில வாக்கியங்கள் அமையும்.

விளக்கப்படம் 2


சரி! இனி உங்கள் பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் ஐயங்கள் கேள்விகள் இருப்பின் முன்னிகைப் பெட்டியில் கேளுங்கள்.

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
Download As PDF

74 comments:

  1. நல்ல தொடர் என் தம்பிக்கு ரெக்கமன்ட் பண்ணியிருக்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி

    கருப்பன் அவர்களுக்கு

    ReplyDelete
  3. It is realy excelent you are so helpfull us

    Thanks
    Syed
    Dubai

    ReplyDelete
  4. I am new to learn the English. Can u guide me for the learning of English.
    I am having the following doubts,
    You are mentioning the Question
    1. Do you speak in English?
    Yes i speak in English
    Same way how i do a framing a questions for we/i/he/she/it/they.

    Do he speak in english?
    Yes he speak in english

    Do we speak in english?
    Yes we speak in english.

    Do they speak in english?
    Yes they speak in english.

    Do it speak in english?
    Yes it speak in englsh.

    Do she speak in english?
    Yes she speak in english.

    ReplyDelete
  5. அன்புடன் ஆதிநாரயணன்.

    I
    You
    We
    they
    இவற்றின் கேள்வி வாக்கியங்களின் போது “Do” பயன்படுத்த வேண்டும்.

    He
    She
    It
    இவற்றின் பொழுது “Does” பயன்படுத்த வேண்டும்.

    பாடத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளதே! திரும்பவும் பாருங்கள் விளங்கிக்கொள்ளலாம்.

    நன்றி

    ReplyDelete
  6. Dear Sir
    pl give me all lesson in one Book format
    Thanks
    K.Chandran

    ReplyDelete
  7. -Kumaresan

    விரைவில்

    ReplyDelete
  8. எனது நண்பர்களுக்கு அனைவருக்கு உங்களது வலைத்தளம் தெரிந்து இருக்கு.நல்லதோர் முயற்சி.ஆங்கில இலக்கணம் கற்றுக் கொள்ள இங்கு வருபவர்கள் அனைவரும் உங்களை மனதார பாரட்டுவார்கள்

    ReplyDelete
  9. -mkr

    //எனது நண்பர்களுக்கு அனைவருக்கு உங்களது வலைத்தளம் தெரிந்து இருக்கு.//

    மிக்க மகிழ்ச்சி. தற்போது PDF கோப்புகளாக பதிவிறக்கி பயன்படுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இணைய அணுக்கம் இல்லாத இடங்களில் இருப்போருக்கு நிச்சயம் உதவும் என நினைக்கிறோம். நன்றி

    ReplyDelete
  10. Do I do a job ?
    Yes,You do a job
    No, You don't do a job




    Do I speak in English?
    Yes,You speak in english.
    No,You don't speak in english.

    ReplyDelete
  11. - sathish
    Do I do a job ?
    நான் செய்கிறேனா ஒரு வேலை?
    Yes,You do a job
    ஆம், நீ செய்கிறாய் ஒரு வேலை
    No, You don't do a job
    இல்லை, நீ செய்யவில்லை ஒரு வேலை

    தன்னை தானே கேள்வி கேட்பதுப் போலவும் எழுதலாம்.

    ReplyDelete
  12. Do We speak in English?
    Yes,We speak in English.
    No,We don't speak in English

    Do We love me?
    Yes,We love you.
    No,We don't love you.

    This is correct please tell me.

    ReplyDelete
  13. Do they love me?
    Yes,They love you.
    No,They don't love you.

    Do they speak in English?
    Yes,They speak in English.
    No,They don't speak in English.

    This is correct please tell me arun sir.

    ReplyDelete
  14. Do we speak in English?
    நாங்கள் பேசுகிறோமா ஆங்கிலத்தில்?
    Yes, we speak in English.
    No, we don't speak in English

    Do we love me? (பிழையான கேள்வி)
    நாங்கள் காதலிக்கிறோமா என்னை? என்று எப்பொழுதாவது கேள்வி கேட்பீர்களா? கேள்விகளை கேட்கும் முன்பு, தமிழில் எப்படி கேள்வி கேட்பீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

    Do you love me?
    Do you love me?
    நீ என்னை காதலிக்கிறாயா?
    நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா?
    (You ஒருமையாகவும் பன்மையாகவும் பயன்படும்)

    Yes, we love you.
    ஆம், நாங்கள் உன்னை/உங்களை காதலிக்கிறேன். காதலிக்கிறோம்
    No, we don't love you.
    இல்லை நாங்கள் உன்னை/உங்களை காதலிக்கவில்லை.

    ஆனால் “Love” எனும் சொல்லுக்கு “காதல்” எனும் பொருளைத்தவிர வெவ்வேறு பொருள்கள் உள்ளன. இங்கே பார்க்கவும்.

    ReplyDelete
  15. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  16. It is really Marvellous , I never seen any grammar book as your lesson.It is so clear explanation and any one can study easily. Thanks a lot for you effort .... BY SURESH BABU,MALDIVES

    ReplyDelete
  17. how to write - I borrow some books from my friend in simple present tense by using she/he/it.

    ReplyDelete
  18. - India

    He borrows some books from his friend.

    She borrows some books from her friend.

    It borrows some books from its friend.

    என எழுதுங்கள்.

    ReplyDelete
  19. அண்ணா நான் புதியவன் இந்த முக பக்கத்திற்கு . என்னுடைய வாக்கிய அமைப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து சரி செய்யுங்கள் .
    This morning i did call my Company electrician do for servicing those air-con machine's when the free. but they dose replayed to me they will come to do repair those machine's after lunch as soon as possible .

    please re-correct me

    thanks
    http://sowmiyaselvan.blogspot.com/

    அண்ணன் அருண் வழி அங்கிலம் அறிவோம்

    ReplyDelete
  20. வணக்கம், வாழ்க வளமுடன் அருண் சார்,
    ஒரு சந்தேகம், DO எனும் துணைவினைசொல்லை பயன்படுத்தி எல்லா கேள்வி வாக்கியங்களையும் சாதாரண நிகழ் காலத்தில் அமைக்கலாம? உதாரணம் ; do you like coffee? இதுபோல் do you are in hotel ? தயவுசெய்து தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  21. Hi Arun,

    I have one doubt. The following sentences are right.

    Does he have a bath?
    Yes, He has a bath.
    No, He doesn't have a bath.

    Thanks,
    jeeva

    ReplyDelete
  22. - C.Ayothiraman

    //do you are in hotel?//

    இப்படி கேள்விகள் அமையாது.

    Do you ...
    Are you ...

    Simple Present
    Present Continuous பாடங்களைப் பாருங்கள். விரிவான விளங்கள் உள்ளன.

    ReplyDelete
  23. - jeeva

    //I have one doubt. The following sentences are right.//

    ஆம்!

    மூன்றாம் நபர் ஒருமை (affirmative) வாக்கியங்களின் போது "has" பயன்படும்.

    கேள்வியின் போதும், எதிர்மறையின் போதும் "have" பயன்படும்.

    ReplyDelete
  24. dear sir,


    i am looking this site is very useful

    first thanks for you

    i am improving the english knowledge

    thank you sir,

    ReplyDelete
  25. THANK YOU FOR YOUR SERVICE

    THIS SITE IS VERY USEFUL

    ReplyDelete
  26. could you explain about complex, compound sentance? and difference about will, would and can, could

    ReplyDelete
  27. Hi Arun What is the differents between didnt and doesnt..say for Eg: she didnt do that and she doesnt do...can you explain me please?


    Rajesh.Kalai

    ReplyDelete
  28. Hi Arun i have one question..where we used didnt and where we used doesnt? bocz he she it this three we may use both doesnt and didnt..can u explain me the differences between the didnt and doesnt?

    Tnx

    Rajesh

    ReplyDelete
  29. this site very useful...thank u continue your job

    ReplyDelete
  30. Hi,
    I am new to this valuable website.I have a doubt .You mentioned.
    I have a bath.
    நான் குளிக்கின்றேன்.
    But I say. I have a car
    என்னிடம் ஒரு கார் உள்ளது.
    What should i do to get clear idea about this?
    Thanks
    Noorul

    ReplyDelete
  31. whata wonderful teacher.

    Thank you sir,

    Regards
    suresh.s

    ReplyDelete
  32. sir tell me did and didnot not used for present tense please tell me the example

    ReplyDelete
  33. sir
    I have one doubt .
    Does he get up early at 6.30?
    yes, he gets up early at 6.30.

    ReplyDelete
  34. thanks to all over lessons, iam really celebrate this. thank you so much.

    ReplyDelete
  35. dear sir
    in present simple, if i write like - he "eats" rice is it correct sir?

    ReplyDelete
  36. Dear Mr. Arun,
    Thanks lot! This is fantastic site to learn English , This will referred to my friends...

    Sir, This coming month i'm going to South Africa. I have got selected for job. So, How can i improve more in English Fluency ? I have been learning English Everyday . Although, i have no more sanctification in English fluency.
    Please, Guide me , How will i speak English fluently? If we speaking in Office , Is this learning is perfect to me?

    ReplyDelete
  37. Dear HK Arun,

    Hats off for your effort!
    It eliminates my Inferiority complex about speaking in english.
    Its better if you make hard copy of this and we can distribute to the tamil medium students

    Thanks

    R.Vishnu

    ReplyDelete
  38. . I wake up too early every day/// இதை எப்படி பயிற்சி செய்வது.... தயவு செய்து விளக்க இயலுமா?

    ReplyDelete
  39. I wake up too early every day// இது போன்ற வார்த்தைகளை எப்படி பயிற்சி செய்வது..... தயவு செய்து சிறுது விளக்குங்களேன்.

    ReplyDelete
  40. this blog more help with me,thanks.

    ReplyDelete
  41. thankyou
    by jahangeer
    i want full book format

    ReplyDelete
  42. dear friend,i want to still more lession........please improve it......

    ReplyDelete
  43. Hello sir,
    very Thanks for giving this much information...
    This is very usefule for me and my friends...
    sir is there any book with this full information..if is there please inform me sir..

    ReplyDelete
  44. Hello Sir,
    Thanks For Giving More Inforamtion For Us,
    This Is Very Useful For Me and My Friends..
    I also Faced More Communication Pblms in My Company..
    Now after seeing this blog i have the confident ...
    keep this good service sir..
    this is my request..
    more peoples have good confident ..bcoz that much is useful for tamil medium peoples..

    ReplyDelete
  45. it is really a worthy work done by Mr.HK Arun for the sake of people who don't have English knowledge and working in abroad.

    ReplyDelete
  46. hello sir
    really u r great. thank u very much, tamil to english grammer madiri hindi to english grammer katrukkolla mudiuma? pls

    ReplyDelete
  47. Very Nice. I am always referring this site.


    I have one doubt in simple present tense. When should we use HAVE in simple present tense and in which situation we need to use. Could you please clarify my doubts.


    Regards
    Santhosh


    ReplyDelete
  48. i want to know the the verb ending difference in tamil between past tense and present tense...especially for plural persons i.e., they, we... also i need present perfect tense verb ending in tamil

    ReplyDelete
  49. Great service for society Sir, I have already introduced this site to some of my friends and colleagues.. I have been learning this site from last week. Thanks again sir. When i have free times in the office i used to study your site,,

    ReplyDelete
  50. Where use do does did of as us done may might these their them they those sir

    ReplyDelete
  51. THANK YOU MR. ARUN U DID GREAT JOB

    ReplyDelete
  52. I WANT BOOK FORMAT ,,MOHAN .MOB ,8213476233

    ReplyDelete
  53. Hello Arun sir,
    How to make a sentences of wh question.
    Could you tell us, please.

    ReplyDelete
  54. this site is very useful to me to teach my kids who are studying 5th and 4th in PSBBM . i have a request from my side sir. kindly consider. can you post some worksheets to practice . it will be very useful for me and to teach my kids too. thank you

    ReplyDelete
  55. Thanks sir
    It turned out to be useful for me

    ReplyDelete