வினையெச்சங்களின் வகை (Types Of Adverbs)

வினெயெச்சங்கள் என்றால் என்ன? வினையெச்சங்கள் என்றால் ஆங்கிலப் பேச்சின் கூறுகளில் ஒன்று என்பதை நாம் ஏற்கெனவே கற்றுள்ளோம். இவை முக்கியமாக ஒரு வினையின் அல்லது வினைச்சொல்லின் தன்மையை விவரித்துக் கூற பயன்படும் சொற்கள் ஆகும். இவற்றை வினையெச்சங்கள், வினையடைகள், வினையுரிச் சொற்கள் என பல்வேறு பெயர்களில் தமிழில் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் "Adverbs" என்றழைப்பர்.

ஆங்கிலத்தில் இவற்றை ஐந்து பிரிவுகளாக வகை படுத்தப்பட்டுள்ளன. அவற்றையே "வினையெச்சங்களின் வகைகள்" என்றழைக்கப்படுகின்றன.

வினையெச்சங்களின் வகைகள் (Types of adverbs)

Adverbs of manner - மாதிரி வினையெச்சங்கள்
Adverbs of place - இட வினையெச்சங்கள்
Adverbs of time - கால வினையெச்சங்கள்
Adverbs of frequency - நடப்புத்தன்மை வினையெச்சங்கள்
Adverbs of degree - அளவு வினையெச்சங்கள்

இனி இவ்வினையெச்சங்கள் பயன்படும் விதங்களைப் பார்ப்போம்.

Adverbs of manner - மாதிரி வினையெச்சங்கள்

மாதிரி வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் என்ன மாதிரி அல்லது எப்படி நடைப்பெறுகின்றது என விவரிக்கின்றன.

Sarmilan runs quickly.
சர்மிலன் ஓடுகிறான் சீக்கிரமாக.

Sarmilan runs firstly.
சர்மிலன் ஓடுகிறான் முதலாவதாக.

Sarmilan runs lastly.
சர்மிலன் ஓடுகிறான் கடைசியாக.

Sarmilan runs slowly.
சர்மிலன் ஓடுகிறான் மெதுவாக.

He works well.
அவன் வேலை செய்கிறான் நன்றாக.

கவனிக்கவும்:
மாதிரி வினையெச்சங்கள் - சாதாரணமாக ஒரு வாக்கியத்தின் நேர் செயப்படுபொருளை (direct object) அடுத்து பயன்படும். அதேவேளை ஒரு வாக்கியத்தின் நேர் செயப்படுபொருள் பயன்படாத போது வினையை அடுத்து பயன்படும். (Adverbs of manner - Usually come after the object. If there is no direct object, after the verb.)

எடுத்துக்காட்டு:

Sarmilan drove the car carefully. (the car - object)
சர்மிலன் ஓட்டினான் மகிழுந்தை கவனமாக.

Sarmilan ran carefully.
சர்மிலன் ஓடினான் கவனமாக.

குறிப்பு:
மாதிரி வினையெச்சங்கள்; அதிகமானவை "ly" பின்னொட்டை கொண்டவைகளாக இருக்கும். இவற்றை ஒழுங்கமைவு வினையெச்சங்கள் என்றழைக்கப்படும். ஒழுங்கமையா வினையெச்சங்களும் உள்ளன.

Adverbs of place - இட வினையெச்சங்கள்

இட வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் "எங்கே" என்பதை விவரிக்கின்றன.

I saw Sarmilan there.
நான் பார்த்தேன் சர்மிலனை அங்கே.

Sarmilan was sitting here.
சர்மிலன் அமர்ந்துக்கொண்டிருந்தான் இங்கே.

Sarmilan stayed behind me.
சர்மிலன் இருந்தான் எனது பின்னால்.

We looked everywhere.
நாங்கள் பார்த்தோம் எல்லாவிடங்களிலும்.

Did you see his pass port anywhere?
நீ பார்த்தாயா அவனது கடவுச்சீட்டை எங்கேயாவது?

I'm sure he lost it somewhere.
நான் நிச்சயிக்கிறேன் அவன் தொலைத்துவிட்டான் அதனை எங்கேயோ.

இட வினையெச்சங்கள் சாதாரணமாக செயப்படுபொருளை அடுத்தே பயன்படும். செயப்படுபொருள் பயன்படாத போது வினையை அடுத்து பயன்படும். (Adverbs of place - Usually come after the object, otherwise after the verb.)

Adverbs of time - கால வினையெச்சங்கள்

கால வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் "எப்பொழுது" என்பதை விவரிக்கின்றன.

கால வினையெச்சங்கள் சாதாரணமாக ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தில் அல்லது இறுதியில் பயன்படுபவைகளாகும். (Adverbs of time - Usually come either at the begining of the sentences or at the end.) (சில விதிவிலக்கானவைகள்)

Now we may study adverbs.
இப்பொழுது நாம் கற்கலாம் வினையெச்சங்கள்.

I read that book before.
நான் வாசித்தேன் அந்த நூலை முன்னரே.

I haven’t started preparation for the exams yet.
நான் ஆரம்பித்திருக்கவில்லை பரிட்சைக்கான தயார்படுத்தலை இன்னும்.

I'm going to tidy my room tomorrow.
நான் சுத்தமாக்கப் போகின்றேன் எனது அறையை நாளை.

She is still waiting for you.
அவள் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றாள் உனக்காக.

குறிப்பு:

1. "yet" எப்பொழுதும் வாக்கியங்களின் இறுதியில் பயன்படும்.
2. "still" அநேகமாக ஒரு வாக்கியத்தின் வினைக்கு முன்னால் பயன்படும்.

Adverbs of frequency - நடப்புத்தன்மை வினையெச்சங்கள்

நடப்புத்தன்மை வினையெச்சங்கள் - ஒரு வினை அல்லது செயல் எப்படி அடிக்கடி நடந்தது, நடக்கிறது, நடக்கும் போன்ற தன்மையை விவரிக்கின்றன. அதாவது ஒரு செயல் எத்தனை முறை நடக்கின்றது என்பதை விவரிக்கின்றன.(Adverbs of Frequency answer the question "How often?" or "How frequently?" They tell us how often somebody does something.)

I will always love you.
நான் எப்பொழுதும் காதலிப்பேன் உன்னை.

I usually visit to Aangilam Blog
நான் சாதாரணமாக விஜயம் செய்கிறேன் ஆங்கிலம் வலைப்பதிவிற்கு.

I frequently watch the news before dinner.
நான் அடிக்கடி (தொடர்ந்து) பார்க்கிறேன் செய்திகள் இராச்சாப்பாட்டிற்கு முன்.

I often do my homework in my home.
நான் அடிக்கடி செய்கிறேன் எனது வீட்டுப்பாடங்களை எனது வீட்டில்.

I sometimes speak English.
நான் சிலநேரங்களில் பேசுகிறேன் ஆங்கிலம்.

I seldom go to the theatre.
நான் எப்பொழுதாவது போகிறேன் திரையரங்கிற்கு.

I never had any trouble with my old bike.
எனக்கு எப்பொழுதுமே ஏற்பட்டதில்லை எந்த இடையூறும் எனது பழைய உந்துருளியில்.

இப்பகுதியுடன் தொடர்புடைய ஒரு பாடம் Frequency Adverbs இங்கே இடப்பட்டுள்ளது.

Adverbs of degree - அளவு வினையெச்சங்கள்

அளவு வினையெச்சங்கள் - ஒன்றின் தரத்தை அளவை விவரிக்கப் பயன்படுகின்றன.

இவை சாதாரணமாக ஒரு வினையை விவரிக்கப் பயன்படுகின்றன. அத்துடன் இவை இன்னுமொரு வினையெச்சத்தை விவரிக்கும் வினையெச்சமாகவும், பெயரெச்சத்தை விவரிக்கவும் வினையெச்சமாகவும் கூடப் பயன்படும். (Adverbs of degree - modify an adverb or an adjective.)

They enjoyed the film immensely.
அவர்கள் அளவுக்கதிமாக மகிழ்ந்தார்கள் திரைப்படத்தைப் பார்த்து. (இவ்வாக்கியத்தின் அவர்கள் திரைப்படத்தைப் பார்த்து எந்தளவிற்கு (அளவுக்கதிமாக) மகிழ்ந்தார்கள் என்று விவரிக்கப்படுகிறது.)

He is a terribly good cricket player.
அவர் ஒரு பயங்கரமான நல்ல கிரிக்கெட் விளையாட்டு வீரர். (இவ்வாக்கியத்தில், அவர் எப்படியான தரம் வாய்ந்த விளையாட்டு வீரர் (பயங்கரமான நல்ல) என விவரிக்கப்படுகிறது.)

The hall is almost full.
இம்மண்டபம் ஏறக்குறைய நிரம்பியிருக்கிறது. (இவ்வாக்கியத்தில் மண்டபம் எவ்வளவு நிரம்பியிருக்கிறது என்பதை (ஏறக்குறைய) விவரிக்கப்படுகிறது.)

The man drove really badly.
அம்மனிதன் ஓட்டினான் மிகவும் மோசமாக. (இவ்வாக்கியத்தில் அம்மனிதன் எவ்வளவு மோசமாக (உண்மையில் மோசமாக) ஓட்டினான் என்பதைக் விவரிக்கப்படுகின்றது.)

He drives incredibly slowly.
அவன் நம்பமுடியாதளவில் மெதுவாக ஓட்டுகிறான். (இவ்வாக்கியத்தில் அவன் எவ்வளவு (நம்பமுடியாத அளவிற்கு மெதுவாக) ஓட்டுகிறான் என்பதை விவரிக்கப்படுகின்றது.)

வினையெச்சங்களை கற்றல்

ஆங்கில மொழியில் வாக்கிய அமைப்புகளை; எங்கே, எப்படி, எந்தளவு, என்ன மாதிரி, எந்தளவு என விவரித்து சுவைப்பட எழுதவும் பேசவும் வினையெச்சங்களின் பயன்பாட்டை அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியம்.

எளிதாக வினையெச்சங்களை கற்பதற்கு அவற்றை இரண்டு பிரிவாக பிரித்து பயிற்சி செய்யலாம்.

1. Regular Adverbs -ஒழுங்கமை வினையெச்சங்கள்
2. Irregular Adverbs - ஒழுங்கமையா வினையெச்சங்கள்

ஒழுங்கமை வினையெச்சங்களின் அட்டவணை  (தமிழ் விளக்கத்துடன்) எதிர்வரும் பாடங்களில் வழங்கப்படும்.

அத்துடன் இப்பாடத்துடன் தொடர்புடையை "வினையெச்சம் பயன்படும் விதங்கள்" பாடத்தையும் விரைவில் பார்ப்போம்.

அதுவரை  இப்பாடப் பயிற்சிகளைத் தொடருங்கள்.

தொடர்புடையப் பாடங்கள்:

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun
Adverb in Tamil, Adverbs in Thamil, வினையெச்சம், வினை உரிச்சொல், உரிச்சொற்கள்
Download As PDF

9 comments:

யாழினி said...

ஆங்கிலம் பயில மிகச் சிறந்த வலைத்தளம். நாங்கள் தொடர்ந்து இத்தளத்திலேயே பயிற்சி செய்கிறோம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

PRAKASAM K said...

Hi Arun Sir! We recd our lessons.I'm very glad and finished reading. waiting for next lessons

Anonymous said...

Thanks for your Good Work. I would like to get the entire posting (Till this post) as a signle PDF file.

Bala

Anonymous said...

Thanks for your Good Work. I would like to get the entire posting (Till this post) as a signle PDF file.

Bala

afrine said...

அருண் உங்களைப் போன்ற தமிழனை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கு. உங்களால் எத்தனை தமிழர்கள் பயன்பெற்று இருப்பார்கள். இன்னும் எத்தனையோ பேர் பெறவும் போகிறார்கள். எதிர்பார்ப்பிலா உதவும் உங்களைப் போன்று அன்பு நெஞ்சங்கள் இருக்கும் வரை நம் நாட்டில் என்றும் மழை பொய்க்காது.

உங்களுடைய பாடங்களை படிக்க்கும் போது என்னாலும் சரளமாக ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கை எழுகிறது. நான் ரெபிடக்ஸ் வைத்து சில நாள் படித்தேன் அதனால் எனக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உங்களுடைய தெளிவான தமிழ் விளக்கத்தால் எனக்கு நன்கு புரிகிறது. நன்றி அருண். தங்கள் பணி சிறக்கட்டும்.

afrine said...

Past participle என்றால் என்ன அருண்? அதன் தமிழ் அர்த்தம் என்ன? எனக்கு விளக்கி கூறுவீர்களா?

HK Arun said...

- தமிழினி

- Yaalini

- PRAKASAM

- Bala

- afrin

அனைவருக்கும் நன்றிகள்

HK Arun said...

- afrin

இவ்வட்டவணையில் பாருங்கள்

http://aangilam.blogspot.com/2008/05/irregular-verbs.html

ramesh said...

Thanks for this post we are lrearned adverbs and we have confident speak English fluently thanks for posting

Post a Comment