About Me

ச. தங்கவடிவேல்
வணக்கம், உறவுகளே!

எனது பெயர் ச. தங்கவடிவேல் (அருண்). நான் இந்த வலைத்தளத்தை கார்த்திகை 27ம் நாள் 2007ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் இருக்கும் போது தொடங்கினேன். 

வலைத்தள விபரத்தை இங்கே பார்க்கலாம்.

ஆனால் பல்வேறு காரணங்களால், என்னால் தொடர்ச்சியாக பாடங்களை வழங்க முடியாமல் போய்விட்டது. அதற்கான முதன்மை காரணங்களில் ஒன்று புலம்பெயர்தல் ஆகும். தற்போது பிரான்சில் குடியேறியுள்ளேன். இனி, இங்கிருந்து ஆங்கில பாடங்களைத் தொடர்ச்சியாக வழங்குவதாக உள்ளேன். 

பிரெஞ்சு மொழி கற்க விரும்புவோர், எனது "பிரெஞ்சுமொழி" வலைத்தளத்தில் கற்கலாம்: https://www.frenchmoli.com/

குறிப்பு: நான் ஹொங்கொங்கில் வசித்தப்பொழுது எனது பெயரை HK Arun என்று (ஹொங்கொங் என்பதன் சுருக்கமாக "HK" எனும் எழுத்துகளையும் எனது அருண் எனும் பெயரின் முன்னால் இட்டுவந்தேன். தற்போது நான் பிரான்சில் வசிப்பதால் "HK" எனும் முன்னொட்டு இடுவது முறையல்ல; அதனால் அவ்வாறு இடுவதை நிறுத்தியுள்ளேன். எனவே எனது இயற்பெயரையே இனிவரும் பதிவுகள் இடுவேன். (பெயர் குழப்பம் தவிர்க்கவே இக்குறிப்பு). 

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தின் பாடத்திட்டம் பற்றிய விபரங்களை கீழுள்ள இடுகைகள் ஊடாகப் பார்க்கலாம்.

நல்வரவு

எமது பாடத்திட்டம் - மொழிப்பெயர்ப்பு - விளக்கம் - நோக்கம்

My Quotes

"எமது இனம் வெறுமனே அறிவாளிகள் என கூறிக்கொள்வதை விட, 
அறிவாளிகள் மத்தியில் அறிவாளிகளாகத் திகழ வேண்டும்.”

"மாறிவரும் உலக ஒழுங்குகளை எதிர்கொள்ள 
கல்வியையே ஆயுதமாகக் கொண்டு...
எம்மினம் எழவேண்டும் - அதில்
ஆங்கிலம் பேராயுதம்."

நன்றி!

அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு (அருண்)
Download As PDF