ஆங்கில இலக்கணத்தின் பேச்சின் கூறுகளில் முன்னிடைச்சொற்களும் ஒன்றாகும். முன்னிடைச்சொற்கள் ஆங்கில மொழியில் நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றில் அடிக்கடி பயன்படும் 70 முன்னிடைச்சொற்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
முன்னிடைச்சொற்களின் பயன்பாடு குறித்தப் பாடங்களை கீழே பார்க்கவும்.
உச்சரிப்பு பயிற்சிப்பெற விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறலாம்.
இப்பட்டியலில் வழங்கப்பட்டுள்ள முன்னிடைச்சொற்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலம் கற்பதற்கு முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளை சரியாக விளங்கிக்கொள்ளல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்த இடத்தில் எந்த முன்னிடைச்சொல்லை பயன்படுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வாக்கியங்களில் பொருத்தமற்ற முன்னிடைச்சொற்களை பயன்படுத்திவிட்டால் முழு வாக்கியத்தின் பொருளே மாறிவிடும்.
குறிப்பு:
மேலே உள்ள பட்டியலில் 70 முன்னிடைச்சொற்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் நூற்றுக் கணக்கான முன்னிடைச் சொற்கள் உள்ளன. உங்கள் ஆங்கில மொழி ஆளுமையை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினால் இப்பட்டியிலில் உள்ளடக்கப்படாத முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.
கவனிக்கவும்:
இங்கே இப்படியலில் உள்ள சொற்கள், முன்னிடைச்சொற்களாக பயன்படும் போதான தமிழ் பொருளே மேலே வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை இச்சொற்கள் முன்னிடைச்சொற்கள் அல்லாத ஏனையப் பயன்பாட்டின் போது அவற்றில் பொருள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
தொடர்புடைய பாடங்கள்:
ஆங்கில வாக்கியங்களில் முன்னிடைச்சொற்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதனை பயில விரும்புவோர் கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி பயிற்சி பெறவும்.
சரி! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
நன்றி!
அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF
முன்னிடைச்சொற்களின் பயன்பாடு குறித்தப் பாடங்களை கீழே பார்க்கவும்.
உச்சரிப்பு பயிற்சிப்பெற விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினைச் சொடுக்கி பயிற்சி பெறலாம்.
List of Prepositio... |
No: | English | தமிழ் | |
1 | aboard | கப்பலில்/கப்பல் தளத்தில் | |
2 | about | கிட்டத்தட்ட/ சுமார்/ பற்றி/ சுற்றிலும் | |
3 | above | மேலே/ மேல் | |
4 | across | குறுக்கே | |
5 | after | பின்னால்/ பிறகு / பின் | |
6 | against | எதிராக/ | |
7 | along | நீள்வட்டத்தில்/ நெடுக | |
8 | amid | மத்தியில்/ இடையில் | |
9 | among | (பலவற்றின்) நடுவில்/ (பலவற்றிற்கு) இடையே | |
10 | anti | எதிரான/ எதிர் | |
11 | around | சுற்றிலும்/ சூழ்ந்து / சுமார் / கிட்டத்தட்ட | |
12 | as | போல்/ போல / போன்ற / என | |
13 | at | இல்/ இன் | |
14 | before | முன்னர் / முன் / முன்பு / முன்னால் | |
15 | behind | பின்னால் / பின் / பின்னனியில் | |
16 | below | கீழே/ கீழ் / அடியில் | |
17 | beneath | கீழே/ கீழுருக்கும் | |
18 | beside | அருகில்/ பக்கத்தில் | |
19 | besides | மேலும்/...ஐத் தவிர/ தவிர வேறு | |
20 | between | (இரண்டுக்கு) இடையில்/நடுவே | |
21 | beyond | அப்பால்/அப்பாற்பட்ட | |
22 | but | ஆனால் / மாறாக | |
23 | by | ஆல்/ மூலம்/ அருகில் | |
24 | concerning | அக்கறையுடன்/ தொடர்பான / சம்பந்தமாக / குறித்து | |
25 | considering | பரிசீலித்து/ கருத்தில் கொண்டு/ கருதி | |
26 | despite | ஆனபோதிலும்/ போதிலும் / ஆயினும்/ இருப்பினும் | |
27 | down | கீழே / குறைத்து | |
28 | during | ... காலத்தில்/...பொழுது / காலக்கட்டத்தில் / சமயத்தில் | |
29 | except | தவிர / தவிர்த்து | |
30 | excepting | தவிர/நீங்கலாக | |
31 | excluding | விலக்குகின்ற/தவிர்க்கின்ற | |
32 | following | தொடர்ந்து / பின்வரும் | |
33 | for | ...க்காக/...கு | |
34 | from | ... லிருந்து / இருந்து | |
35 | in | ... இல் / ... இன் | |
36 | inside | உள்பக்கம் / உட்புறம் / உள்ளே | |
37 | into | உள்ளுக்குள்/உள்நோக்கி | |
38 | like | போன்ற / ஒத்த | |
39 | minus | கழித்து /குறைய / நீக்கிய | |
40 | near | அருகில் / அருகாமையில் | |
41 | of | ...இன்/...இல் | |
42 | off | மூடு/ அணை / அப்பால் | |
43 | on | மீது / மேல் / ... இல் | |
44 | onto | அதனுள்/ க்குள் | |
45 | opposite | எதிரான / எதிராக / எதிர் | |
46 | outside | வெளிப்புறம்/ வெளியே/ வெளியில் | |
47 | over | மேலே / மேல்/ மேலாக | |
48 | past | கடந்த / கடந்த கால | |
49 | per | ஆக / ஒன்றிற்கு / வீதம் | |
50 | plus | ...கூட / அத்துடன் / கூடுதலாக / மேலதிகமாக | |
51 | regarding | குறித்து / சம்பந்தமாக/ தொடர்பான / தொடர்பாக / பற்றி | |
52 | round | சுற்றி/ சுற்றிலும் | |
53 | since | ... லிருந்து/ இருந்து / ...முதல் | |
54 | than | விட / ... விடவும் | |
55 | through | ஊடாக / மூலம் / மூலமாக | |
56 | to | ...க்கு | |
57 | toward | ... நோக்கி/ ... க்காக | |
58 | towards | நோக்கிய / மீதான | |
59 | under | அடியில்/... ன் கீழே | |
60 | underneath | அடியில்/ கீழாக | |
61 | unlike | போலில்லாத / போலன்றி | |
62 | until | வரை / வரைக்கும் / மட்டும் | |
63 | up | மேலே / மேல் | |
64 | upon | மீது / மேல் / அடிப்படையில் | |
65 | versus | எதிராக / எதிர் | |
66 | via | வழியாக / மூலமாக | |
67 | with | உடன் | |
68 | within | அத்துடன் | |
69 | without | இல்லாமல் / இன்றி | |
70 | throughout | முழுவதும் / முழுதும் / முழுவதிலும் |
இப்பட்டியலில் வழங்கப்பட்டுள்ள முன்னிடைச்சொற்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலம் கற்பதற்கு முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளை சரியாக விளங்கிக்கொள்ளல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எந்த இடத்தில் எந்த முன்னிடைச்சொல்லை பயன்படுத்தவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் வாக்கியங்களில் பொருத்தமற்ற முன்னிடைச்சொற்களை பயன்படுத்திவிட்டால் முழு வாக்கியத்தின் பொருளே மாறிவிடும்.
குறிப்பு:
மேலே உள்ள பட்டியலில் 70 முன்னிடைச்சொற்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் நூற்றுக் கணக்கான முன்னிடைச் சொற்கள் உள்ளன. உங்கள் ஆங்கில மொழி ஆளுமையை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்பினால் இப்பட்டியிலில் உள்ளடக்கப்படாத முன்னிடைச்சொற்களின் பயன்பாடுகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.
கவனிக்கவும்:
இங்கே இப்படியலில் உள்ள சொற்கள், முன்னிடைச்சொற்களாக பயன்படும் போதான தமிழ் பொருளே மேலே வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை இச்சொற்கள் முன்னிடைச்சொற்கள் அல்லாத ஏனையப் பயன்பாட்டின் போது அவற்றில் பொருள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
தொடர்புடைய பாடங்கள்:
ஆங்கில வாக்கியங்களில் முன்னிடைச்சொற்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதனை பயில விரும்புவோர் கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி பயிற்சி பெறவும்.
- Prepositions Of Time (நேர முன்னிடைச்சொற்கள்)
- Prepositions Of Place (இட முன்னிடைச்சொற்கள்)
- Prepositions Of Direction ((திசை முன்னிடைச்சொற்கள்)
சரி! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
நன்றி!
அன்புடன்
அருண் | HK Arun
10 comments:
Could you explain me how and where to use 'for,to' ?
இங்கே பார்க்கவும்.
http://aangilam.blogspot.com/2009/09/prepositions-of-place.html
Hi Arun,
This is wonderful site to learn English through Tamil. I like this site very much and am going share to my friends also.
One more thing I wish to bring to your attention i.e I was unable to download the lesson in PDF form using the link "Download As PDF".
Could you look into this and do the needful?
Thanks,
Raja. S

when use could, would, should, this is my un clearable doubt
Nice Work Bro :)
Mubarak....
"Download Pdf" is not downloading the right file. I think there might be some problem transferring the file. Sir, could you please look out what the problem is ?
Super site.
favorite site for me
differnce between in and at
Thanks Arun
Post a Comment