Grammar Patterns -1 றில் 26 வதாக அமைந்திருக்கும் வாக்கியத்தை இன்று விரிவாகப் பார்ப்போம். எமது பாடப் பயிற்சிகளை பின் தொடர்ந்து வருவோருக்கு இன்றையப் பாடம் மிகவும் எளிதான ஒன்றாகவே இருக்கும்.
இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்து இலக்க வரிசையில் தொடரும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை.
இந்த வாக்கிய அமைப்பைச் சற்று கவனியுங்கள். இதில் “ should” எனும் சொல் செய்யவே வேண்டும்”, பார்க்கவே வேண்டும்”, வரவே வேண்டும்” போன்று மிகவும் அழுத்தத்தை இச்சொல் (should) வெளிப்படுத்துகின்றது.
அதேவேளை “+ able to” சாத்தியத்தை அல்லது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகின்றது.
இவை இரண்டும் இணைந்து “முடியுமாகவே இருக்கும்” (should be able to) என நம்பிக்கையை, உறுதியை இவ்வாக்கிய அமைப்புக்கள் (அழுத்தமாக) வெளிப்படுத்துகின்றன.
இப்பாடத்துடன் தொடர்புடையப் பாடங்கள்.
am/is/are able to
was/were able to
may be able to
இன்றையப் பாடம் "should be able to" இதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.
Positive (Affirmative)
Subject + be + able + infinitive
I /You /He /She /It / We / You /They + sould + be able + to do a job.
Negative
Subject + be + not + able + infinitive
I /You /He /She /It /You /We /They + should + not + be able + to do a job
Question (Interrogative)
Be + subject + be able + infinitive
Should + I /you /he /she /it /you /we /they + be able + to do a job?
குறிப்பு:
1. இப் பாடத்திலும் தன்னிலை, முன்னிலை, படர்க்கை (First, Second, Third person) மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "should be able to" ஒரே விதமாகவே பயன்படும்.
2. + be able to ஒரு துணைவினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
3. இவ்வாக்கிய அமைப்புக்களில் எப்பொழுதும் பிரதான வினைக்கு முன் “to” எனும் முன்னொட்டு இணைந்தே பயன்படும். (be able to has an infinitive form)
சரி இப்பொழுது வழமைப்போல் இவ்வாக்கிய அமைப்புக்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்வோம்.
Should you be able to do a job?
உனக்கு செய்ய முடியுமாகவே இருக்குமா ஒரு வேலை?
Yes, I should be able to do a job.
ஆம், எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை.
No, I shouldn’t be able to do a job.
இல்லை, எனக்கு செய்ய முடியாமலேயே இருக்கும் ஒரு வேலை.
Should you be able to speak perfect English very soon?
உனக்கு பேசமுடியுமாகவே இருக்குமா முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்?
Yes, I should be able to speak perfect English very soon.
ஆம், எனக்கு பேசமுடியுமாக இருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.
No, I shouldn’t be able to speak perfect English very soon.
இல்லை, எனக்கு பேசமுடியாமலேயே இருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.
மேலும் 10 வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பயிற்சி செய்யுங்கள்.
1. I should be able to go to university.
எனக்கு போக முடியுமாகவே இருக்கும் பல்கலைக் கழகத்திற்கு
2. I should be able to speak perfect English very soon.
எனக்கு பேச முடியுமாகவே இருக்கும் முழுமையான ஆங்கிலம் வெகு விரைவில்.
3. I should be able to improve my English knowledge.
எனக்கு வளர்த்துக்கொள்ள முடியுமாகவே இருக்கும் எனது ஆங்கில அறிவை.
4. I should be able to become a chief executive.
எனக்கு ஆகமுடியுமாகவே இருக்கும் ஒரு பிரதான நிறைவேற்று அதிகாரியாக.
5. I should be able to practice English every day.
எனக்கு பயிற்சிப்பெற முடியுமாகவே இருக்கும் ஆங்கிலம் ஒவ்வொரு நாளும்.
6. I should be able to go tomorrow
எனக்கு போக முடியுமாகவே இருக்கும் நாளை(க்கு)
7. I should be able to change my name.
எனக்கு மாற்ற முடியுமாகவே இருக்கும் எனது பெயரை
8. I should be able to answer.
எனக்கு பதிலளிக்க முடியுமாகவே இருக்கும்.
9. I should be able to build a house
எனக்கு கட்ட முடியுமாகவே இருக்கும் ஒரு வீடு.
10. I should be able to publish an English grammar book.
எனக்கு வெளியிட முடியுமாகவே இருக்கும் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம்.
Homework:
A. மேலே நாம் கற்ற வாக்கியங்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.
B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பின்பற்றி இந்த 10 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.
c. நீங்களாகவே இன்றையப் பாடத்தின் "Should be able to" வாக்கியங்களை அமைத்து கேள்வி கேட்டும், பதிலளித்தும் பயிற்சி செய்யுங்கள்.
கவனிக்கவும்
இவ்வாக்கிய அமைப்புகளின் கேள்விகள் (Question) அநேகமாக செய்ய முடியாதவற்றை அல்லது செய்யக்கூடாதவற்றை கேள்வி கேட்பதுப் போன்றே அமைகின்றது. அதாவது, உனக்கு ஒரு பயனச்சீட்டை தொடரூந்தில் வாங்க முடியுமா? உனக்கு சுடுகலனை வேலைக்கு எடுத்துச்செல்ல முடியுமா? போன்ற (இடக்கு முடக்கான) கேள்விகளாக இவை அமைந்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
செய்யமுடியுமாக இருப்பவற்றை "உன்னால் செய்ய முடியுமாகவே இருக்குமா" போன்று சந்தேகத்துடன் வினவும் வாக்கியங்களாகவும் இவை இருக்கும்.
உதாரணம்:
Should you be able to buy a ticket on the train?
உனக்கு வாங்க முடியுமாகவே இருக்குமா ஒரு பயன அனுமதிச்சீட்டு தொடரூந்தில்?
Should you be able to take your gun to work?
உனக்கு எடுத்துச்செல்ல முடியுமாகவே இருக்குமா உன்னுடைய சுடுகலனை வேலைக்கு?
Should you be able to vote without your ID card?
உனக்கு வாக்களிக்க முடியுமாகவே இருக்குமா உன்னுடைய அடையாள அட்டையின்றி?
Should you be able to sell your kidneys on the open market?
உனக்கு விற்கமுடியுமாகவே இருக்குமா உன்னுடையை சிறு நீரகங்களை திறந்தவெளிச் சந்தையில்?
Should you be able to buy a piece of the moon?
உனக்கு வாங்க முடியுமாகவே இருக்குமா நிலவின் ஒரு துண்டை?
நேர்மறை (Positive) வாக்கிய அமைப்புகளின் போது இவை நம்பிக்கையை, உறுதியை வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
உதாரணம்:
Madonna should be able to adopt a child.
மடோனாவிற்கு தத்தெடுக்க முடியுமாகவே இருக்கும் ஒரு குழந்தை.
Two things a man should be able to do.
இரண்டு விடயங்கள் ஒரு மனிதனுக்கு செய்ய முடியுமாகவே இருக்கும்.
I think I should be able to go tomorrow.
நான் நினைக்கிறேன் எனக்கு போக முடியுமாகவே இருக்கும் நாளை.
Muslims in Britain should be able to live under Sharia law.
முஸ்லிம்களுக்கு பிரித்தானியாவில் வாழ முடியுமாகவே இருக்கும் ஷாரியா சட்டத்தின் கீழ்.
You should be able to post comments anonymously without your ID.
உனக்கு பின்னூட்டமிட முடியுமாகவே இருக்கும் அனானியாக உன்னுடைய அடையாளமின்றி.
எதிர்மறையின் (Negative) போது இவை, திட்டவட்டமாக ஒன்றை (முடியாமலேயே இருக்கும்) என மறுக்கும் அல்லது நம்பிக்கையற்ற வார்த்தைகளின் வெளிப்பாடாகவே இவ்வாக்கிய அமைப்புகள் பயன்படுகின்றது.
உதாரணம்:
5 things you shouldn't be able to buy on eBay.
5 பொருற்களை உனக்கு வாங்க முடியாமலேயே இருக்கும் ஈபேயில்.
Parents shouldn't be able to name kids whatever they want.
பெற்றோருக்கு பெயர் வைக்க முடியாமலேயே இருக்கும் குழந்தைகளுக்கு வேண்டிய (பெயர்களை/குழந்தைகள் விரும்பும் பெயர்களை)
You shouldn’t be able to buy a piece of the moon.
உனக்கு வாங்க முடியாமலேயே இருக்கும் நிலவின் ஒரு பகுதியை/துண்டை.
User shouldn't be able to change the metadata file name.
பயனருக்கு மாற்ற முடியாமலேயே இருக்கும் மேனிலைத்தரவுக்கோப்பின் பெயரை.
Some people shouldn't be able to vote in Sri Lanka.
சில மக்களுக்கு வாக்களிக்க முடியாமலேயே இருக்கும் இலங்கையில்
-----------------------------------------------------------------
சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.
மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.
இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.
நன்றி
அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun
Download As PDF
15 comments:
அருமையாண வலைப்பூ
பயனுள்ள பகுதிகள்
Its Good to see and read your Classes, Can you please Teach us about the Pronunciation of words. so that it will help us to read and write the as quick
Thanks
Raja
கம்பன் வீட்டு கட்டுதறியையும் ஆங்கிலம் கற்க வைக்கும் அற்புத முயற்சி தொடரட்டும் உங்கள் பதிவு
அருமையாண வலைப்பூ
thanks.......... Mr.arun
தமிழ் சரவணன்
Anonymous 01
sollarasan
TamilBloggersUnit
Anonymous 02
அனைவருக்கும் நன்றிகள்.
அன்புடன் அருண்
First of all I just thank you for providing precious hide, who are lack in English skill. In fact my schooling was in my mother tongue[Tamil]. After came to my college life i couldnt suddenly adapt the english. Right now i could do litle through like your's help. Once again Thanks a lot.
உங்களைப் போன்ற வலைப்பதிவாளர்கள் !
தமிழுக்கும்,தமிழர்களுக்கும் கட்டாயமாக தேவை. நன்றி!
வாழ்த்துக்கள் ! வெற்றி உண்டாகட்டும் !
அருண் அண்ணா,
ஆங்கில பாடப்பயிற்சி 23 -ஐ சொடுக்கினால் 24-ற்கு செல்கிறதே?
அருண் ஐயா
ஆங்கில பாடப்பயிற்சி 23-ம்,24-ம் ஒரே மாதிரியாக உள்ளதே, சரி செய்யவும்,
நன்றி
Hai am yoga, really u done great job sir
Mohamed
I think this is one of the wonderful learning site. Thank u Mr.Arun
i think its not a teaching....its a useful service for learning peoples......honestly i hats off to u and ur great job...
Thank you Arun
எனக்கு ஒரு சந்தேகம் ...
.
.
என்னால் முடிகிற பட்சத்தில் I can vote அல்லது I am able to vote என அமைக்கலாம்....
அல்லது அந்த விஷயத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றால் I must vote அல்லது I should vote e என்று அமைக்கலாம்
ஆனால் நீங்கள் I should be able to vote என்று அமைப்பது எப்படி??
.
. இரண்டாவதாக yes,I should be able to do a job - ஆம் என்னால் ஒரு வேலை செய்ய முடிவதாக இருக்கிறது....இவ்வாறு வளைத்து சொல்வதற்கு பதிலாக yes I can do-ஆம் என்னால் செய்ய முடியும் (or) I'm Abel to do - என்னால் செய்ய முடிகிறது என்று கூறலாமே??.
.
.மூன்றாவதாக ..ஒரு விசயத்தை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றால் should,must அமைப்போம் ...கட்டாயமாக செய்ய வேண்டுமென்கிற நிலையில் அவரால் முடியுமா ?? முடியாதா??(ability- can,able) என்றெல்லாம் பெரும்பாலும் பார்ப்பதில்லை அதோடு போனாலும் அவரால் செய்ய முடியாது என்று நன்கு தெரிந்தால் கட்டாயமாக கேட்க மாட்டோம் are you able to do? Or can you do? என்று தன் கேட்போம்..
.
.ஆனால் இரண்டையும் (should, able ) சேர்ந்து வாக்கியம் அமைத்துள்ளது சந்தேகமாக உள்ளது ...
தவறாக கேட்டிருந்தால் மன்னியுங்கள்...சந்தேகம் தீர்கும் நோக்கோடு கேட்டுள்ளேன்...
Post a Comment