ஆங்கில பாடப் பயிற்சி 16 (can /be able to)

இதுவரை நாம் Grammar Patterns -1 றின் பதினான்காவதாக வாக்கியம் வரை விரிவாகக் கற்றுள்ளோம். இன்று நாம் 15, 16, 17, 18 ஆகிய இலக்கங்களின் வாக்கிய அமைப்புக்களை விரிவாகக் கற்கப் போகின்றோம்.

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு நீங்கள் புதிய வருகையாளர் என்றால், எமது ஆங்கில பாடப் பயிற்சிகளைத் தொடர விரும்புவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 -லிருந்து தொடருவதே எளிதானதாக இருக்கும்.

சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை.

17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

இன்றையப் பாடத்தில் 15, 16 இரண்டு வாக்கியங்களுக்குமான தமிழ் அர்த்தம் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டுள்ளது. ஆம் "can" என்பதும் " + able to" என்பதும் ஒத்தக்கருத்தையே வெளிப்படுத்துகின்றன. இவை நிகழ்காலத்தின் (முடியும்/முடியாது) ஆற்றலை அல்லது சாத்தியத்தை வெளிப்படுத்த பயன்படுவனவாகும். அநேகமாக பேசும் போது “can” அதிகளவிலும், எழுதும் போது அல்லது விண்ணப்பங்கள் செய்திகள் போன்றவற்றில் “+ able to” அதிகளவில் பயன்பாட்டில் இருப்பதையும் அவதானிக்கலாம்.

பயன்பாட்டில் இவ்விரண்டு வாக்கிய அமைப்புக்களினதும் பொருள் ஒரே மாதிரியானதாக இருக்கின்றப் போதிலும், இவை இரண்டுக்குமான வேறுப்பாடு, “can” ஒரு துணைவினையாகும். ஆனால் “be able to” ஒரு துணைவினையல்ல.

எனவே இவைகள் இரண்டையும் இரண்டுப் பகுதிகளாகப் பிரித்து விரிவாகப் பார்ப்போம்.

பகுதி - 1
-----------------------------------------------------------------
Can ஒரு துணைவினையாகும். (Can is an auxiliary verb, a modal auxiliary verb) இதன் பயன்பாடுகளாவன.

1. ஆற்றலை வெளிப்படுத்தல், நிகழக்கூடிய/நிகழ்த்தக்கூடிய சாத்தியத்தை (முடியும் முடியாது என) வெளிப்படுத்தல்
2. வேண்டுகோள் விடுத்தல்
3. அனுமதி கோரல்

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
1. I / He/ She/ It/ You/ We/ They + can + do a job.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb
1. I/ He/ She/ It/ You/ We/ They + can + not + do a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
1. Can + I/ he/ she/ it/ you/ we/ they + do a job?

இவ்வாக்கிய அமைப்புக்களை சற்றுக் கவனியுங்கள். இவற்றில் I, He, She, It, You, We, They என சகல வாக்கிய அமைப்புக்களோடும் "Can" மட்டுமே துணை வினையாகப் பயன்படுகின்றது. (Can is invariable. There is only one form of can.)

கீழுள்ள உதாரணங்களைப் பார்க்கவும்.

Can you do a job?
உனக்கு செய்ய முடியுமா ஒரு வேலை?
Yes, I can do a job.
ஆம், எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை.
No, I can’t do a job. (can + not)
இல்லை, எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

Can you speak in English? (வேண்டுகோள்)
உனக்கு பேச முடியுமா ஆங்கிலத்தில்?
Yes, I can speak in English.
ஆம், எனக்கு பேச முடியும் ஆங்கிலத்தில்.
Sorry, I can’t speak in English. (can + not)
மன்னிக்கவும், எனக்கு பேச முடியாது ஆங்கிலத்தில்.

Can I smoke in this room? (அனுமதி கோரல்)
எனக்கு புகைப்பிடிக்க முடியுமா இந்த அறையில்?
Yes, you can smoke in this room.
ஆம், உனக்கு புகைப்பிடிக்க முடியும் இந்த அறையில்.
Sorry, you can’t smoke in this room. (can + not)
மன்னிக்கவும், உனக்கு புகைப்பிடிக்க முடியாது இந்த அறையில். (அனுமதி மறுக்கப்படுகின்றது)

கவனிக்கவும்:

முக்கியமாக இவ்வாக்கிய அமைப்புக்களில் பிரதான வினை எப்போதும் "bare infinitive" வாகவே பயன்படும். அதாவது பிரதான வினைச்சொல்லுடன் வினையெச்சம் "to" இணைந்து வராது. (The main verb is always the bare infinitive. 'infinitive without "to").

இவற்றையும் மனதில் வைக்கவும்

குறிப்பாக "can" இன் பயன்பாடு நிகழ்காலத்தையே குறிக்கும். இருப்பினும் இவ்வாக்கிய அமைப்புக்களோடு எதிர்கால சொற்கள் இணைந்து பயன்படுத்துமிடத்து எதிர்கால வாக்கியங்களாகவும் சில சந்தர்ப்பங்களில் பயன்படும்.

உதாரணம்:

Can you come with me today?
உனக்கு வரமுடியுமா என்னுடன் இன்று?

Yes, I can come with you today.
ஆம், எனக்கு வரமுடியும் உன்னுடன் இன்று. (நிகழ்காலம்)

Sorry. I can’t. But I can come with you tomorrow.
மன்னிக்கவும், எனக்கு முடியாது. ஆனால் எனக்கு வரமுடியும் உன்னுடன் நாளை. (எதிர்காலம்)

அதாவது “tomorrow” எனும் சொற்பதம் இணைந்து வந்துள்ளதால் அது எதிர்கால வாக்கியமாகப் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்க.

பகுதி – 2
-----------------------------------------------------------------
நிகழ்காலத்தின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் “can” போன்றே “+ able to” என்பதும் நிகழ்காலத்தின் (முடியும்/ முடியாது) ஆற்றல்களை அல்லது சாத்தியத்தை வெளிப்படுத்த பயன்படும் விதத்தை இப்பாடத்தில் பார்ப்போம். இருப்பினும் + able to ஒரு துணை வினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த “+ able to” இன் பயன்பாடு நிகழ்காலத்தில் எவ்வாறு பயன்படுகின்றது என்று கீழுள்ள உதாரணங்களைப் பார்க்கவும்.

Positive (Affirmative)
Subject + be + able + infinitive
1. I + am + able + to + do a job
2. He/ She/ It + is + able + to + do a job.
3. You/ We/ They + are + able + to + do a job.

Negative
Subject
+ be + able + infinitive
1. I + am not + able + to + do a job
2. He/ She/ It + is not + able + to + do a job.
3. You/ We/ They + are not + able + to + do a job.

Question (Interrogative)
Be + Subject + able + infinitive
1. Am + I + able + to + do a job?
2. Is + he/ she/ It + able + to + do a job?
3. Are + you/ we/ they + able + to + do a job?

மேலும் சில உதாரணங்கள் கேள்வி பதில்களாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்கவும்.

Are you able to do a job?
உனக்கு முடியுமா செய்ய ஒரு வேலை?
Yes, I am able to do a job.
ஆம், எனக்கு முடியும் செய்ய ஒரு வேலை.
No, I am unable to do a job. (am not able to என்றும் கூறலாம்)
இல்லை, எனக்கு முடியாது செய்ய ஒரு வேலை.

Are you able to speak French?
உனக்கு பேச முடியுமா பிரஞ்சு?
Yes, I am able to speak French.
ஆம், எனக்கு பேச முடியும் பிரஞ்சு.
No, I am unable to speak French. (am not able to என்றும் கூறலாம்)
இல்லை, எனக்கு பேச முடியாது பிரஞ்சு.

Are you able to drive heavy vehicles?
உனக்கு ஓட்ட முடியுமா கனரக வாகனங்கள்?
Yes, I am able to drive heavy vehicles
ஆம், எனக்கு ஓட்ட முடியும் கனரக வாகனங்கள்.
No, I am unable to drive heavy vehicles. (am not able to என்றும் கூறலாம்)
இல்லை, எனக்கு ஓட்ட முடியாது கனரக வாகனங்கள்.

கவனிக்கவும்:

“+ able to” இன் பயன்பாடு ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு பயன்படுவதாயினும் அது நிகழ்காலத்தில் மட்டுமின்றி இறந்தக்காலம், எதிர்காலம் என பல்வேறு வடிவிலும் பயன்படுகின்றது. அதாவது முடியும், முடியுமாக இருந்தது, முடியுமாக இருக்கும், முடியுமாக இருக்கலாம் என இன்னும் பல. அவற்றை எதிர்வரும் பாடங்களில் கற்கலாம். இன்றையப் பாடத்தில் “+ able to” இன் நிகழ்காலப் பயன்பாட்டை மட்டுமே விரிவாகக் கற்றுள்ளோம்.

Be able to வாக்கிய அமைப்புக்களின் வினையுடன் வினையெச்சம் “to” இணைந்து பயன்படும். (be able to has an infinitive form)

I + can என்பதற்குப் பதிலாக I + am able to
He/ She/ It + can என்பவற்றிற்குப் பதிலாக He/ She/ It + is able to
You/ We/ They + can என்பவற்றிற்குப் பதிலாக You/ We/ They + are able to பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு எளிதாக விளங்கியிருக்கும்.

பயிற்சி (Listening Practice)
----------------------------------------------------------------
மேலும் சில வாக்கியங்களை தமிழ் விளக்கத்துடன் பயிற்சி செய்வோம்.

ஒலிவடிவாகவும் பயிற்சி செய்யலாம்.


Aangilam.blog.mp3

1. I can drive a car.
I am able to drive a car.
எனக்கு ஓட்ட முடியும் ஒரு மகிழூந்து

2. I can swim in the sea.
I am able to swim in the sea.
எனக்கு நீந்த முடியும் கடலில்.

3. I can play tennis.
I am able to play tennis.
எனக்கு விளையாட முடியும் டென்னிஸ்.

4. I can speak five languages
I am able to speak five languages
எனக்கு பேச முடியும் ஐந்து மொழிகள்.

5. I can use my credit card.
I am able to use my credit card
எனக்கு பாவிக்க முடியும் எனது கடனட்டை(யை)

6. I can change my email ID.
I am able to change my email ID.
எனக்கு மாற்ற முடியும் எனது மின்னஞ்சல் அடையாளத்தை.

7. I can hear your heartbeat.
I am able to hear your heartbeat.
எனக்கு கேட்க முடியும் உனது இதயத்துடிப்பை.

8. I can get USA citizenship
I am able to get USA citizenship.
எனக்கு பெற முடியும் USA குடியுரிமை.

9. I can upload a game to my ipod.
I am able to upload a game to my ipod.
எனக்கு பதிவேற்ற முடியும் ஒரு ஆட்டத்தை எனது ஐபொட்டிற்கு.

10. I can imagine
I am able to imagine
எனக்கு கற்பனைச்செய்ய முடியும்.

11. I can see clearly now
I am able to see clearly now.
எனக்கு பார்க்க முடியும் தெளிவாக இப்பொழுது.

12. I can save images from the Internet
I am able to save images from the Internet
எனக்கு சேமிக்க முடியும் நிழற்படங்களை இணையத்திலிருந்து.

13. I can download Tamil movies
I am able to download Tamil movies
எனக்கு பதிவிறக்க முடியும் தமிழ் திரைப்படங்கள்.

14. I can practice my religion freely.
I am able to practice my religion freely.
எனக்கு பின்பற்ற முடியும் எனது மதத்தை சுதந்திரமாக. (இடையூறின்றி)

15. I can believe it
I am able to believe it.
எனக்கு நம்ப முடியும் இதை.

16. I can become a pilot
I am able to become a pilot
எனக்கு ஆக முடியும் ஒரு வானோடியாக.

17. I can change my template
I am able to change my template.
எனக்கு மாற்ற முடியும் எனது வார்ப்புருவை.

18. I can become a famous lawyer
I am able to become a famous lawyer
எனக்கு ஆக முடியும் ஒரு பிரசித்திப்பெற்ற சட்டவாளராக.

19. I can become an astronaut
I am able to become an astronaut
எனக்கு ஆக முடியும் ஒரு விண்வெளி பிரயாணியாக.

20. I can buy new products
I am able to buy new products
எனக்கு வாங்க முடியும் புதிய உற்பத்திகளை

21. I can do it alone.
I am able to do it alone.
எனக்கு செய்ய முடியும் இதை தனியாக.

22. I can walk slowly
I am able to walk slowly
எனக்கு நடக்க முடியும் மெதுவாக.

23. I can tolerate it
I am able to tolerate it
எனக்கு தாங்கிக்கொள்ள முடியும் இதை.

24. I can practice English at night
I am able to practice English at night
எனக்கு பயிற்சிசெய்ய முடியும் ஆங்கிலம் இரவில்

25. I can learn English in aangilam.blogspot.com.
I am able to learn English in aangilam.blogspot.com.
எனக்கு கற்க முடியும் ஆங்கிலம் aangilam.blogspot.com இல்.

Homework:

1. மேலே நாம் கற்ற 25 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி எழுதி பயிற்சிப் பெறுங்கள்.

2. கேள்வி பதிலுமாக மாற்றியவற்றைப் பேசி பயிற்சி செய்யுங்கள்.

3. மேலும் He, She, It, You, They, We போன்றச் சொற்களை இணைத்து வாக்கியங்கள் அமைத்தும் பயிற்சிச் செய்யலாம்.

4. உங்களால் "முடியும்" என்று நீங்கள் நினைக்கும் உங்களது ஆற்றல்களைப் பட்டியல் இட்டுக்கொள்ளுங்கள். உங்களால் "முடியாது" என்று நீங்கள் நினைப்பவற்றையும் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்று நாம் எமது பாடத்தில் கற்றவாறு எழுதிப் பயிற்சி செய்துப் பாருங்கள் எவ்வளவு எளிதாக ஆங்கிலம் பயிலக் கூடியதாக இருக்கும் என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

தமிழில் போன்று ஆங்கிலத்தில் பேசும் ஆங்கிலம் எழுதும் ஆங்கிலம் என இரண்டு விதமான பயன்பாடுகள் இல்லை. எனவே எழுதியவற்றையே பேசிப் பழகுங்கள்; உங்களாலும் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச முடியும்.
Engliah Grammar Explanation through Tamil. Free Tamil - English
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

"உலகில் எந்த மொழியானாலும் பேசும் மொழியைத் தான் இலக்கண விதிகளாக வகுக்கப் பட்டுள்ளதே தவிர, எந்த ஒரு மொழியும் இலக்கண விதிகளை வகுத்து விட்டு மக்களின் பேச்சுப் புழக்கத்திற்கு வரவில்லை."

குறிப்பு:

மரியாதைமிக்க நாகரீகமான ஆங்கிலப் பேச்சு வழக்கிற்கும் (Polite Form) இந்த “can” பயன்படுகின்றது. அவற்றை “Polite and More Polite” சிறப்பு பாடத்தில் பார்க்கவும்.


மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இன்றையப் பாடம் தொடர்பான சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் வழமைப்போல் பின்னூட்டம் இட்டோ மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி - Spoken English in Tamil, Free Spoken English Through Tamil, Spoken English with Tamil Explanation ஆங்கிலம் பேசுவது எப்படி?
அன்புடன் ஆசிரியர் அருண் HK Arun Download As PDF

13 comments:

Anonymous said...

நன்றி அருண்.

tamilnadunews said...

அன்பு அருண் வணக்கம்!
தமிழ் கொஞ்சம் முன் பின்இருந்தாலும்
எளிமையாக விளக்குகிறீர்கள்!
அருமை!
வாழ்த்துக்கள்!

Rose said...

hi.........
thank u so much ur blog very use full.....:) daily 2 hrs ur blog visiting and daily night speech in 30 mins

Rose said...

hi.........
thank u so much ur blog very use full.....:) daily 2 hrs ur blog visiting and daily night speech in 30 mins

ganesh said...

அன்பு அருண் வணக்கம்!
தமிழ் கொஞ்சம் முன் பின்இருந்தாலும்
எளிமையாக விளக்குகிறீர்கள்!
அருமை!
வாழ்த்துக்கள்!

deep said...

rombo thanks frds/......

Anonymous said...

Please post three lesson in a week

Unknown said...

very useful for me. Very Thanks to You Arun

Unknown said...

I heart full thank you Arun sir. First time i look the website very intersted and useful website sir. Defenetlly i will speak to fluency english in ur website sir. i hope in ur website sir.

Unknown said...

hello sir nan ippa than aangilam katka aarambiththullen murayaaga entha paadaththil aarambikka vendum

Unknown said...

thank you arun very useful for me

Yan said...

Thanks! Arun,
Very easy to conveying for English grammar to me. Because my knowledge is very low.
I am very afraid at my office, But seen your article now can bog in confidence and positive energy in my body.
One more Thank you.

Regards,
Nithyanantham.S

Unknown said...

I would like to inform that regarding this topic very useful to me.

Post a Comment