ஆங்கில பாடப் பயிற்சி - 3 (Grammar Patterns - 3)

நாம் ஏற்கெனவே கற்ற Grammar Patterns -1, Grammar Patterns -2 போன்றே, இந்த Grammar Petterns -3 லும் ஒரு வாக்கியத்தை 73 ன்று விதமாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம்.

ஆனால் Grammar Patterns -1 றைப் போன்றல்லாமல் Grammar Patterns -2 இல் சில இலக்கங்களின் போது ஏற்பட்டிருந்த இலக்கண மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள். அவ்வாறே இன்றைய "Grammar Patterns 3" லும் சில இலக்கங்களின் போது ஏற்படும் இலக்கண மாற்றங்களை அவதானியுங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கற்பீர்களானால் ஆங்கில இலக்கணம் கற்பது மிகவும் இலகுவானதாக இருக்கும்.

Grammar Patterns -1 இல் I "First Person Singular" உடன் "am" இணைந்து வந்திருந்தது.

Grammar Patterns -2 இல் He, She, It " Third Person Singular" உடன் "is" இணைந்து வந்திருந்தது.

இன்று இந்த Grammar Patterns -3 இல் "You" எனும் "Second Person Singular" உடனும், "We, They, You எனும் "Plural" பன்மையுடனும், "are" இணைந்து வருகின்றது.

அதாவது "You - நீ/உனக்கு" எனும் ஒருமையுடனும், "We - நாம்/ நாங்கள்/ எமக்கு/ எங்களுக்கு, They - அவர்கள் /அவைகள் எனும் பன்மையுடனும் "are" எனும் நிகழ்காலத் துணைவினை சொல் இணைந்து வரும்.

இவ்வாறு "Grammar Patterns 3" இல் இரண்டாவது வாக்கியமான "We are going to school" என்பதில் ஏற்படும் "are" எனும் சொல்லின் மாற்றத்தை தொடர்ந்து 2, 8, 9, 10, 13, 14, 16, 18, 20, 22, 56, போன்ற இலக்கங்களின் போதும் இலக்கண மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றை அவதானித்து பயிற்சிச் செய்யுங்கள்.

இன்றையப் பாடத்தில் "go to school" எனும் வார்த்தையை உதாரணமாக எடுத்து பயிற்சி செய்வோம்.

கீழே சொடுக்கி ஒலிவடிவிலும் பயிற்சி செய்யலாம்.

Aangilam Grammar 3...

1. We go to school.
நாங்கள் போகிறோம் பாடசாலைக்கு.

2. We are going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு.

3. We went to school.
நாங்கள் போனோம் பாடசாலைக்கு.

4. We didn't go to school.
நாங்கள் போகவில்லை பாடசாலைக்கு.

5. We will go to school.
நாங்கள் போவோம் பாடசாலைக்கு.

6. We won’t go to school.
நாங்கள் போகமாட்டோம் பாடசாலைக்கு.

7. Usually, we don’t go to school.
சாதாரனமாக, நாங்கள் போகின்றோமில்லை பாடசாலைக்கு.

8. We are not going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமில்லை பாடசாலைக்கு.

9. We were going to school.
நாங்கள் போய்க்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு

10. We weren't going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.

11. We will be going to school.
நாங்கள் போய்க்கொண்டிருப்போம் பாடசாலைக்கு.

12. We won’t be going to school.
நாங்கள் போய்க்கொண்டிருக்க மாட்டோம் பாடசாலைக்கு.

13. We are going to go to school.
நாங்கள் போகப்போகின்றோம் பாடசாலைக்கு.

14. We were going to go to school.
நாங்கள் போகப்போனோம் பாடசாலைக்கு.

15. We can go to school.
16. We are able to go to school.
எங்களுக்கு போக முடியும் பாடசாலைக்கு.

17. We can’t go to school
18. We are unable to go to school.
எங்களுக்கு போகமுடியாது பாடசாலைக்கு.

19. We could go to school.
20. We were able to go to school.
எங்களுக்கு போக முடிந்தது பாடசாலைக்கு.

21. We couldn't go to school.
22. We were unable to go to school.
எங்களுக்கு போக முடியவில்லை பாடசாலைக்கு.

23. We will be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாக இருக்கும் பாடசாலைக்கு.

24. We will be unable to go to school
எங்களுக்கு போக முடியாமலிருக்கும் பாடசாலைக்கு.

25. We may be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாக இருக்கலாம் பாடசாலைக்கு.

26. We should be able to go to school.
எங்களுக்கு போக முடியுமாகவே இருக்கும் பாடசாலைக்கு.

27. We have been able to go to school
எங்களுக்கு [அன்றிலிருந்து - இன்றுவரை] போகமுடியுமாக இருக்கின்றது பாடசாலைக்கு.

28. We had been able to go to school.
எங்களுக்கு [அன்றிலிருந்து - ஒரு கட்டம்வரை] போக முடியுமாக இருந்தது பாடசாலைக்கு.

29. We may go to school.
30. We might go to school.
31. We may be going to school
நாங்கள் போகலாம் பாடசாலைக்கு.

32. We must go to school.
நாங்கள் போக வேண்டும் பாடசாலைக்கு. (கட்டாயம்/அழுத்தம்)

33. We must not go to school.
நாங்கள் போக வேண்டியதில்லை பாடசாலைக்கு.
நாங்கள் போகக்கூடாது பாடசாலைக்கு. (அழுத்தம்)

34. We should go to school.
நாங்கள் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக அழுத்தம்)

35. We shouldn't go to school.
நாங்கள் போகவே வேண்டியதில்லை பாடசாலைக்கு.
நாங்கள் போகவே கூடாது பாடசாலைக்கு (மிக அழுத்தம்)

36. We ought to go to school.
நாங்கள் எப்படியும் போகவே வேண்டும் பாடசாலைக்கு. (மிக மிக அழுத்தம்)

37. We don’t mind going to school.
எங்களுக்கு ஆட்சேபனையில்லை போவதற்கு பாடசாலைக்கு.

38. We have to go to school.
நாங்கள் போக வேண்டும் பாடசாலைக்கு.

39. We don’t have to go to school.
நாங்கள் போகவேண்டியதில்லை பாடசாலைக்கு.

40. We had to go to school.
நாங்கள் / எங்களுக்கு போக வேண்டி ஏற்பட்டது பாடசாலைக்கு.

41. We didn’t have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போக வேண்டி ஏற்படவில்லை பாடசாலைக்கு.

42. We will have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படும் பாடசாலைக்கு.

43. We won’t have to go to school.
நாங்கள் / எங்களுக்கு போகவேண்டி ஏற்படாது பாடசாலைக்கு.

44. We need to go to school.
நாங்கள் / எங்களுக்கு அவசியம் போகவேண்டும் பாடசாலைக்கு.

45. We needn't to go to school.
45. We don't need to go to school.
நாங்கள் / எங்களுக்கு அவசியமில்லை போக பாடசாலைக்கு.

46. He seems to be going to school.
அவன் போகின்றான் போல் தெரிகின்றது பாடசாலைக்கு.

47. He doesn't seem to be going to school.
அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு.

48. He seemed to be going to school.
அவன் போகின்றான் போல் தெரிந்தது பாடசாலைக்கு.

49. He didn't seem to be going to school.
அவன் போகின்றான் போல் தெரியவில்லை பாடசாலைக்கு.

50. Going to school is useful.
போவது (போகுதல்) பாடசாலைக்கு பிரயோசனமானது.

51. Useless going to school.
பிரயோசனமில்லை போவது (போகுதல்) பாடசாலைக்கு.

52. It is better to go to school.
மிக நல்லது போவது பாடசாலைக்கு.

53. We had better go to school.
நாங்கள் / எங்களுக்கு மிக நல்லது போவது பாடசாலைக்கு.

54. We made him go to school.
நாங்கள் அவனை வைப்பித்து போனோம் பாடசாலைக்கு.

55. We didn't make him go to school.
நாங்கள் அவனை வைப்பித்து போகவில்லை பாடசாலைக்கு.

56. To go to school, we are ready.
போவதற்கு பாடசாலைக்கு, நாங்கள் தயார்.

57. We used to go to school
நாங்கள் பழக்கப்பட்டிருந்தோம் போக பாடசாலைக்கு.

58. Shall we go to school?
போவோமா பாடசாலைக்கு?

59. Let’s go to school.
போவோம் பாடசாலைக்கு.

60. We feel like going to school.
எங்களுக்கு நினைக்கின்றது போவதற்கு பாடசாலைக்கு.

61. We don’t feel like going to school.
எங்களுக்கு நினைக்கின்றதில்லை போவதற்கு பாடசாலைக்கு.

62. We felt like going to school.
எங்களுக்கு நினைத்தது போவதற்கு பாடசாலைக்கு.

63. We didn't feel like going to school.
எங்களுக்கு நினைக்கவில்லை போவதற்கு பாடசாலைக்கு.

64. We have been going to school.
நாங்கள் [அன்றிலிருந்து - இன்றுவரை] போயிக்கொண்டிருக்கிறோம் பாடசாலைக்கு.

65. We had been going to school.
நங்கள் [அன்றிருந்து - ஒரு கட்டம்வரை] போயிக்கொண்டிருந்தோம் பாடசாலைக்கு.

66. We see him going to school.
எங்களுக்கு தெரிகின்றது அவன் போகின்றான் பாடசாலைக்கு.

67. We don’t see him going to school.
எங்களுக்கு தெரிகின்றதில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு.

68. We saw him going to school.
எங்களுக்கு தெரிந்தது அவன் போகின்றான் பாடசாலைக்கு.

69. We didn't see him going to school.
எங்களுக்கு தெரியவில்லை அவன் போகின்றான் பாடசாலைக்கு.

70. If we go to school, we will get good results.
நாங்கள் போனால் பாடசாலைக்கு, நாங்கள் பெறுவோம் நல்ல பெறுபேறுகள்.

71. If we don’t go to school, we won’t get good results.
நாங்கள் போகாவிட்டால் பாடசாலைக்கு, நாங்கள் பெறமாட்டோம் நல்ல பெறுபேறுகள்.

72. If we had gone to school, we would have got good results.
நாங்கள் போயிருந்திருந்தால் பாடசாலைக்கு, நாங்கள் பெற்றிருந்திருந்திருப்போம் நல்ல பெறுபேறுகள். (போகவுமில்லை; பெறவுமில்லை)

73. It is time we went to school.
இது தான் நேரம் நாங்கள் போவதற்கு பாடசாலைக்கு.

Homework:

1. We pray.
நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.
2. We learn English.
நாங்கள் கற்கின்றோம் ஆங்கிலம்.
3. We watch a movie.
நாங்கள் பார்க்கின்றோம்  ஒரு திரைப்படம்.
4. We listen to songs.
நாங்கள் செவிமடுக்கின்றோம் பாடல்களுக்கு.
5. We have lunch.
நாங்கள் உண்கின்றோம் பகலுணவு.

இவ்வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் முறையே 73 விதமாக மாற்றி பயிற்சி செய்யுங்கள். அவ்வாறு பயிற்சி செய்தால் தான் இப்பாடத்திட்டத்தின் முழுமையான பயனை நீங்கள் பெற முடியும்.

எதிர்வரும் பாடங்களில் நாம் கற்ற 73 வார்த்தைகளும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்போது அதனதன் பயன்பாடுகள் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் மேலும் விரிவாக பார்க்கலாம்.
aangilam.blogspot.com
கீழுள்ள இலக்கங்களின் போது எப்பொழுதும் பிரதான விணையுடன் "ing" யும் இணைந்து வரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

Example:

We pray
We are praying.

சரி பயிற்சிகளைத் தொடருங்கள்.

மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்.

இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்பாடம் தொடர்பான மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் மூலமாகவோ மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டுக்கொள்ளலாம்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Social Media Links: Facebook | Twitter | Pinterest | Google Pluse

Download As PDF

49 comments:

Iravanan said...

Anbin Aasiriyarukku!

Thangalin aakam miga payanulladaaga erundadu..Thangalin padangalai naan Katru varugirean ..enivarum kaalangalil naan English il comments poduvean. dayai koordu thangal adil pizaigal erundal (erukkum) enakku chuttik kaatavum..

Nandri
Ijith

HK Arun said...

//enivarum kaalangalil naan English il comments poduvean.//

மகிழ்ச்சி!

//adil pizaigal erundal (erukkum) enakku chuttik kaatavum..//

நிச்சயமாக

நன்றி இராவணன்.

kanimozhi said...

Thank you sir.this is very useful for me

HK Arun said...

நன்றி Kanimozhi

Dinesh said...

you are teaching way of english is really great. like using a sentence with multiple examples .

HK Arun said...

பாராட்டுக்கு நன்றி Sanjay

naushad said...

ungkal payitchi murai english katpathatku ilakuvaka irukkirathu.

HK Arun said...

-Nowsath

உங்கள் கருத்துரைக்கு நன்றி நவ்சாத்.

Gnana said...

Hi Arun,
This tutorial is very useful to me, but kindly change the english to tamil conversion in normal tamil sentence bez it is very difficult to understand what your trying to say, please change it.

Anonymous said...

dear sir,

i know little english..am asked my friend he is say to me go on this web site very useful english knowledge..am entered first time this web site very nicely..

Unknown said...

Arun Sir,

Thank you very much for your effort.Today I saw this blog and start to learn.I read (grammer pattern lesson 1 to 3)lessons.I took my homework.But, how do i check my homework?please help me sir.I want speak in english fluently.I want to learn english by your site.At the same time if you find any error in this my comment messge, please tell that error for me sir.
please reply me.

Thank You sir.

durai said...

Dear Sir,

this site is very useful sir,

i am daily read this listen

continue the grammar patterns 3.

thanks & regards

durai.v

சிவம் (பெயர் அற்றது) said...

அன்பு சகோதரர் அருண் அவர்களுக்கு,

நமது தமிழ் மக்களுக்கு மிகச்சிறந்த தொண்டு உங்களது ஆங்கில பயிற்சி. உங்களது சேவை நமது தமிழர்கள் அனைவருக்கும் போய் சேர்ந்தால் குறிப்பாக கிராமபுற மாணவர்களுக்கு போய் சேர்ந்தால் மிகப்பயனுள்ளதாக அமையும்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்

bharathi said...

this is very very..... useful for me because i am a it student thank you sir...

Kumar said...

i can't able to understand 54 and 55
explain briefly

Anonymous said...

Thanks a lot sir..your teaching is very useful to me..defintly i'll say about this site to my friends...keep it up sir..

santhi said...

very good site to learn english correctly good job done by youreally appreciate you and your associate by
santhi

Unknown said...

thanks

Anonymous said...

Hi arun, i am searching this much of site for long time, i saw your blog before a week. This is very useful to me. Thank you very much.

Ravi

Etho uthavi said...

very useful sir,
one more help daily use some dialogue model exercise ( one or two persons discuss some question model ) daily work model exercises
ella pukalum erivanuke antha god nigathan sir unium extra development pannuka

Etho uthavi said...

very useful sir,
one more help daily use some dialogue model exercise ( one or two persons discuss some question model ) daily work model exercises
ella pukalum erivanuke antha god nigathan sir unium extra development pannuka

Etho uthavi said...

very useful sir,
one more help daily use some dialogue model exercise ( one or two persons discuss some question model ) daily work model exercises
ella pukalum erivanuke antha god nigathan sir unium extra development pannuka

Nehru Saravanan said...

இது தமிழில் பயிலும் மாணவர்களுக்கு மிக சரியான வெப் சைட் . ஆங்கிலத்தை அப்படியே மொழியாக்கம் செய்வது தான் இதன் சிறப்பு. இதனால் இரு மொழியின் வேறுபாடுகள் மிக அழகாக புரிகிறது. தாங்களுக்கு எங்கள் மனம் திறந்த பாராட்டுக்கள்.

At the outset we would like to extend our heartfelt gratitude to your best services.

Unknown said...

தாங்களுக்கு எங்கள் மனம் திறந்த பாராட்டுக்கள்.

Unknown said...

This is verrygood teaching method, thanks arun sir.

Unknown said...

arun sir,
whole subject very useful & and also good example all understand,
thank you very much sir, you work going on well don't untill 100 years

facebook profile said...

thanks. bestwishes

thilak said...

Today only I saw your blog on English learning through Tamil. I feel my long search ends here.How don't know how to express my gratitude?. THANKS.

Unknown said...

hi sir ur site is very useful!.... 1 doubt. WE HAVE LUNCH ku - nankal unavu unkinrom enpathu sariya?

Unknown said...

WE HAVE LUNCH ku artham?

Unknown said...

This spoken class were very usefull to us...thanks

Unknown said...

Hari Prakash Chandran:
Sir,You are doing a great job.Now a days we ought to learn English Grammar.Your servicing which will be help full for growing students like me sir.I thanks a lot for value able service to us.

Unknown said...

It is very excellent and i have been learning lot of for English grammar guidance.

Unknown said...

First i want to thank you sir,,,,, and u doing a grate job & i am also really happy to be a student of yours,, exactly i don't have the time to follow an English class,, but this is very useful to me,,, my heart felt wishes to you and thank u again,,,, i'm not fluent in English, if have any mistake excuse me sir.

Unknown said...

thanks for your lessons

Unknown said...

Very very useful to all new comers

Unknown said...

Thank you very much sir.I want to speak in English fluently but how can I improve my speak?

Unknown said...

Very very useful sir

Unknown said...

Sir Thank you

Unknown said...

sir,what r going to madras and we r going to go to madras.should we use another go to for the verb go.

Unknown said...

I have one doubt.
Give the exact Tamil meaning for "it is a time we went to school".

Unknown said...

I have one doubt.Please give the exact Tamil meaning for"It is a time we went to school". thank you sir.

Jimikky said...

Good keep it up

Unknown said...

This website very usefull in my english knowledge . But tamil translation uderstanding was slovely .but all the peoples can be likes that website .if you dont mind please tamil translation can change easy way

Unknown said...

its better to speak in English for all peoples thank you arun

Unknown said...

Naan ipothu than ungal website parthen arumaiyaga ullathu ..arumaiyana velai...unagal pani thodara valthukkal...enaku ethulirunthu padika arambipathu yendru koorugirigala...
thanks arun....

Unknown said...

please send your number sir

Unknown said...

Sir

It is very useful like me a bignner. Ï know only tamil but learning english thr tamil is à great chance.

Unknown said...

THANKYOU BRO

Post a Comment