
நெட்டாண்டில் 366 நாட்கள் இருக்கும்.
மற்றைய ஆண்டுகளில் 365 நாட்களே இருக்கும்.
நெட்டாண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.
பெப்ரவரி மாதம் 28 இல் முடிவடையும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் 29 இல் முடிவடையும்.
இவை எல்லோருக்குமே தெரிந்த விடயங்கள். ஆனால் எந்ததெந்த மாதத்தில் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்பதை நம்மில் அநேகமானோர் மனதில் இருத்திக்கொள்வதில்லை. "இந்த மாதம் எத்தனையாம் திகதியில் முடிகிறது?" என்பதை அறிய நாள்காட்டிகளின் உதவியை நாடுவோரே அதிகமானோர்.
சரி, எந்தெந்த மாதங்கள் 30 நாட்களில் முடிவடையும்? எந்தெந்த மாதங்கள் 31 நாட்களில் முடிவடையும்?
இதனை எளிதாக மனதில் இருத்திக்கொள்ள ஆங்கிலப் பாலர் பாடசாலைகளில் பல்வேறு வடிவங்களில் கற்றுக்கொடுப்பர். சில பாடல்கள் போன்றும் இருக்கும். அதில் ஒன்றையே நான் இங்கு இட்டுள்ளேன். நீங்கள் உங்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டுமாயின் இப்பாடல் வரிகளை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.
"Thirty days has September, April, June and November.
All the rest have thirty-one,
Except February which has twenty-eight, in fine,
Till leap year makes it twenty-nine".
செப்டெம்பர், ஏப்ரல், யூன், நவம்பர் 30 நாட்கள்.
மற்றைய எல்லா மாதங்களிலும் 31 நாட்கள். (பெப்ரவரியைத் தவிர)
பெப்ரவரி 28 நாட்கள். நெட்டாண்டில் மட்டும் 29 நாட்கள்.
நன்றி
அன்புடன்
அருண் HK Arun Download As PDF
hi arun
ReplyDeleteby what formula you are putting have & has in the following sentence
Thirty days "has" September, April, June and November.
All the rest "have" thirty-one,
Very Useful..
ReplyDeleteThanks to giving us..
Regards
Azhaguraj