ஆங்கிலப் பின்னொட்டுக்கள் (List of Suffixes)

பின்னொட்டு (Suffix) என்பது ஒரு மூலச் சொல் அல்லது வேர் சொல்லின் பின் ஒட்டாக இணைந்து பயன்படும் எழுத்துக்கள் ஆகும். அதனாலேயே "பின்னொட்டு" என்று அழைக்கப்படுகிறது; சிலர் "விகுதி" என்றும் அழைப்பர். இந்த பின்னொட்டுக்கள் தனித்து பயன்படுவதில்லை. இவை குறிப்பாக ஒரு மூலச் சொல்லுடன் இணைந்து, மூலச் சொல்லின் பொருளில் இருந்து மாறுபட்டு வேறொரு பொருளைத் தரும் சொற்களாக பயன்படுவன ஆகும். இவ்வாறான பின்னொட்டுக்கள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. பொதுவாக அதிக புழக்கத்தில் இருக்கும் 120 பின்னொட்டுக்கள் இந்த அட்டவணையில் உற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினூடாக பின்னொட்டுக்கள் எவ்வாறு ஒரு மூலச்சொல்லுடன் இணைந்து புதிய சொல்லாக மாறுபடுகின்றன என்பதைக் காணலாம். அத்துடன் ஒரு மூலச் சொல்லின் பொருளில் இருந்து எவ்வாறான பொருள் தரும் சொற்களாக அவை மாற்றமடைகின்றன என்பதையும் உணரலாம்.

இனி அட்டவணையைக் கவனியுங்கள்.

அட்டவணையில் உள்ள பின்னொட்டுகளுடன் தொடர்புடைய
சொற்தொகுப்பு எதிர்வரும் பாடங்களில் வழங்கப்படும்.இல:பின்னொட்டுஎடுத்துக்காட்டு
1.–ableLovable
2.–adTriad
3.–adeBlockade
4.–ageGarage
5.–agogyPedagogy
6.–alRefusal
7.–alitySexuality
8.–anUrban
9.–anceAnnoyance
10.–ancyVacancy
11.–antAssistant
12.–arLiar
13.-archMonarch
14.-archyAnarchy
15.–ardWizard
16.-aryMilitary
17.-ateCertificate
18.-athlonDecathlon
19.-ationConcentration
20.-ativeLucrative
21.-atoryLaboratory
22.-boundOutbound
23.-cideSuicide
24.-cityAtrocity
25.-cyDiplomacy
26.-cycleHydro cycle
27.-domFreedom
28.-ectomyVasectomy
29.-edInterviewed
30.-eeInterviewee
31.-eerPrivateer
32.-emeMorpheme
33.-enGolden
34.-enceIndependence
35.-encyFrequency
36.-entResident
37.-eousCourteous
38.-erTrainer
39.-ergyEnergy
40.-ernSouthern
41.-eryMachinery
42.-eseChinese
43.-esquePicturesque
44.-essActress
45.-eticSympathetic
46.-fareWarfare
47.-fulHopeful
48.-gonPentagon
49.-gryAngry
50.-holicAlcoholic
51.-hoodBrotherhood
52.-iaMania
53.-iableSociable
54.-ialSpecial
55.-ianItalian
56.-iantDefiant
57.-iateDeviate
58.-ibleIncredible
59.-iblyResponsibly
60.-icHistoric
61.-icalHistorical
62.-icsEconomics
63.-idCandid
64.-ierCashier
65.–ifyClarify
66.-ileTactile
67.-illionMillion
68.-ingSpeaking
69.-ionAction
70.-iousAmbitious
71.-ishScottish
72.-ismCommunism
73.-istDentist
74.-iteSocialite
75.-itiveSensitive
76.-itudeAttitude
77.-ityFormality
78.-iumCalcium
79.-iveAggressive
80.-izationOrganization
81.-izeOrganize
82.-landFinland
83.-lessEndless
84.-likeChildlike
85.-lingDuckling
86.-lyMonthly
87.-manFireman
88.-mentArgument
89.-meterThermometer
90.-metryGeometry
91.-monyTestimony
92.-mostinnermost
93.-nesiaPolynesia
94.-nessKindness
95.-ocracyDemocracy
96.-ographyPhotography
97.-ologistArchaeologist
98.-ologyBiology
99.-onomyAstronomy
100.-orGovernor
101.-oryHistory
102.-oseGlucose
103.-ousNervous
104.-phoneTelephone
105.-scopeTelescope
106.-shipFriendship
107.-shireOxford shire
108.-sionDecision
109.-someAwesome
110.-sterGangster
111.-tBurnt
112.-thGrowth
113.-tionIntroduction
114.-tyLoyalty
115.-uaryJanuary
116.-ulentFraudulent
117.-wardInward
118.-wiseClockwise
119.-wrightPlaywright
120.-yWindy

இந்த பின்னொட்டுக்களை இரண்டு பிரதானப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. Inflectional Suffixes
2. Derivational suffixes

Inflectional Suffixes (சொல்வடிவ மாற்று பின்னொட்டுக்கள்)

சொல்வடிவ மாற்று பின்னொட்டுக்கள், ஒரு சொல்லின் அடிப்படை பொருள் மாறுபடாமல், இலக்கண அடிப்படையில் காலங்களை மாற்றுபவைகள் ஆகும்.

எடுத்துக்காட்டாக:


மூலச்சொல்பின்னொட்டுமாற்றம்
speak-sspeaksThird Person Singular
work-edworkedPast Simple Tense
speak-ingspeakingPresent Continuous
book-sbooksPlural
eat-eneatenIrregular Verbs
fast-erfasterComparative
quick-estquickestSuperlative

Derivational suffixes (ஆக்க நிலை பின்னொட்டுக்கள்)

ஆக்க நிலை பின்னொட்டுக்கள், ஒரு வேர்ச் சொல் அல்லது மூலச் சொல்லுடன் இணைந்து புதிய பொருள் தரும் சொற்களை உருவாக்குகின்றன. இவை வேர்ச் சொற்களில் இருந்து கிளைத்து பல்வேறு சொற்களாக, பேச்சின் கூறுகளாக பயன்படுபவை ஆகும். அநேகமாக, ஆக்க நிலை பின்னொட்டுக்கள் ஒரு வேர்ச் சொல்லுடன் இணைந்து கிளைச் சொற்களாக கிளைக்கும் போது, மூலச் சொல் குறிக்கும் பொருளை உணர்த்தும் வண்ணம் புதிய சொற்களாக பயன்படுகின்றன. அதாவது ஒரு ஆக்க நிலை பின்னொட்டு இணைந்த ஒரு சொல்லை வைத்து, அதன் மூலச் சொல் என்ன என்பதை சற்று ஆராய்ந்தால் கண்டறியலாம்.

எடுத்துக்காட்டாக:


மூலச்சொல்பின்னொட்டுபுதியச்சொல்
administer-ationadministrationNoun
administer-ativeadministrativeAdjective
administer-ativelyadministrativelyAdverb
administer-atoradministratorCommon Noun
administer-ator-shipadministrator-shipNoun

இந்த அட்டவணையையில் உள்ள "administer" எனும் வினைச் சொல்லுடன் பின்னொட்டுக்கள் இணைந்து எவ்வாறான சொற்களாக உருவெடுக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

Administer = நிர்வகி (வினை)
Administration = நிர்வாகம் (பெயர்)
Administrative = நிர்வாக/நிர்வாகம் தொடர்பான (பெயரெச்சம்)
Administrable = நிர்வகிக்கக் கூடிய/நிர்வகிக்கத் தகுந்த
Administratively = நிர்வாகம் தொடர்பான (வினையெச்சம்)
Administrator = நிர்வாகி (பெயர்)
Administrator-ship = நிர்வாகப் பொறுப்பு

இவ்வாறான ஆக்க நிலை பின்னொட்டுக்களே ஆங்கிலத்தில் அதிகம் உள்ளன. அவற்றின் பயன்பாடுகளை சரியாக உணர்ந்து கற்றால் ஆங்கில மொழியின் சொல்வளத்தை எளிதாகப் பெருக்கிக்கொள்ளலாம்; ஆங்கில மொழியின் ஆளுமையையும் வளர்த்துக்கொள்ளலாம்.

கவனிக்கவும்:

புதிதாக கலைச்சொற்களை உருவாக்குவோர், மூலச் சொல் அல்லது வேர்ச் சொல்லின் பொருளை அறிந்து, அதன் பொருளை உணர்ந்தும் வண்ணம் பின்னொட்டுக்களை இணைத்தே பெரும்பாலும் உருவாக்குவர். எடுத்துக்காட்டாக, "Obama" எனும் பெயர் உலகெங்கும் பிரசித்திப் பெற்றதைத் தொடர்ந்து, "obama" வின் பெயரை மூலச் சொல்லாக கொண்டு பல்வேறு புதியச் சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. அவற்றை நாம் கடந்த ஒரு பாடத்தில் பார்த்தோம். அவை ஆங்கிலப் பின்னொட்டுக்களை இணைத்து உருவாக்கப்பட்டவைகளே ஆகும்.

பின்னொட்டுக்களின் பயன்பாட்டை சரிவர உணர்ந்து கற்கத்தொடங்குவதால் பல நன்மைகள் கிட்டும்.

1. பின்னொட்டுக்கள் ஏற்படுத்தும் பொருள் மாற்றங்களை எளிதாக உணர்ந்துகொள்ளல்.
2. ஆங்கில மொழியின் சொல்வளத்தை எளிதாகப் பெருக்கிக்கொள்ளல்.
3. மூலச் சொல்லை அல்லது வேர்ச் சொல்லை எளிதாக வேறுபடுத்தி அறிந்துகொள்ளல்.
4. ஆங்கில மொழியின் சொல்வளம் எவ்வாறு பெருகுகின்றது என்பதை அவதானித்தல்.
5. வேர்ச் சொல்லில் இருந்து புதிய சொற்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன, எவ்வாறு உருவாக்கப்படுகின்றன எனும் தெளிவைப்பெறல்.

மேற்கூறிய ஐந்து விடயங்களும் கிடைக்கும் நன்மைகளாகும்.

மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பின்னொட்டுக்கள் தொடர்பிலான சொற்களை திரட்டி, அச்சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்களுடன் சொற்கோவையாக எதிர்வரும் பாடங்களில் வழங்கப்படும். அவை உங்கள் ஆங்கிலச் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ள உதவும். அதேவேளை ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் கலைசொற்களையும் அறிந்துக்கொள்ள வழிவகுக்கும்.

குறிப்பு:

இன்று ஆங்கிலச் சொற்கள் என நாம் கற்கும் சொற்களில் அதிகமானவை கிரேக்கம், இலத்தீன், பிரஞ்சு போன்ற மொழிகளின் வாயிலாக அல்லது அம்மொழிகளில் இருந்து கடன்பெற்று ஆங்கிலத்தில் பயன்படும் சொற்களே ஆகும். சொல்லப்போனால் ஆங்கிலம் கிட்டத்தட்ட 140 மொழிகளில் இருந்து (தமிழ் உற்பட) சொற்களை கடன்பெற்றே அதன் சொல்வளத்தைப் பெருக்கிக்கொண்டுள்ளது. ஆனால் தமிழ் மொழி எந்தவொரு பிறமொழியில் இருந்தும் சொற்களை கடன்பெறமலே தேவையான சொற்களை உருவாக்கிக்கொள்ளும் தனிச்சிறப்பு வாய்ந்தது. தமிழில் உள்ள பழம்பெரும் நூல்களில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற வேர்ச் சொற்களின் வழி, எந்தவொரு காலச்சூழலுக்கும், எந்தவொரு நுட்பத்திற்கும் ஏற்றவகையில் கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ள முடியும். (இடையில் புகுந்த வடமொழி சொற்களையும் களைந்திடவும் முடியும்.) குறிப்பாக வளரும் இளம் தமிழ் சமுதாயத்தினரிடம் இவ்வெண்ணம் தோற்றம் பெற வேண்டும் என கூறி விடைப்பெறுகிறேன்.

மீண்டும் அடுத்த பாடத்தில் சந்திப்போம்!

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

8 comments:

stalin wesley said...

நல்லது ...

தெளிவாக விளக்கினிர்கள் ...

நன்றி தொடருங்கள் நண்பரே .....

Organic Farmer said...

Your lessons are really helpful and also informative . Many thanks to all those who are behind this work. GIRI

ADMIN said...

ஆங்கிலம் கற்க எளிமையாக உங்களின் தளம் இருக்கிறது. வாழ்த்துக்கள்...!!

என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய தீபாவளி பதிவு: இதையும் ஒரு முறை பார்க்கவும்: http://thangampalani.blogspot.com/2011/10/happy-diwali-for-all.html

HK Arun said...

-stalin

//தெளிவாக விளக்கினிர்கள் ...// நன்றி இசுடாலின்.

HK Arun said...

-Girikumar S

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

HK Arun said...

அன்புடன் தங்கம்பழனி

கருத்துரைக்கும் தீபாவளி வாழ்த்துக்களுக்கும் நன்றி! உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகுக!

Anonymous said...

தங்களது வலைப்பூ ஆங்கிலம் பேச தயங்குபவர்களையும், அதைக்கண்டு பயப்படுபவர்களையும், தட்டி எழுப்பி அவர்களுக்கு ஆங்கிலம் மீதான பயம் மற்றும் தயக்க‍த்தினை போக்கி, அவர்களை ஆங்கிலம் பேசுவதற்கும், எழுதுவதற்கும், வாசிப்ப‍தற்கும் தூண்டுகோலாக இருக்கிறது. தங்களது வலைப்பூவின் முகவரியினையும், தங்களது வலைப்பூவின் சிறப்பினையும் நான் எனது www.vidhai2virutcham.wordpress.com-ல் ஒர் இடுகையாக வெளியிட்டுள்ளேன். தங்களது பணி மென்மேலும் சிறக்க‍ வாழ்த்துகிறேன்.

HK Arun said...

@vidhai2virutcham

உங்கள் தளத்தில் இடுகையாக இட்டு இத்தளத்தின் ஆங்கிலப் பாடங்களை மேலும் பலர் பார்வைக்கு கொண்டு செல்லும் நல்லுள்ளத்திற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே!

Post a Comment