ஆங்கிலத்தில் “date” என்றால் திகதி என்றும், அது தொடர்பான சொல்லாடல்களையும் நாம் கடந்தப் பதிவில் பார்த்தோம். “date” எனும் சொல்லுடன் “ing” இணைந்து “Dating” என பயன்பட்டால், “திகதியிடல்” என பொருள்படும். ஆனால் இந்த "Dating" எனும் சொல், காதல் மற்றும் உறவு குறித்த பயன்பாடுகளின் போது "பொருத்தம் பார்த்தல்" எனும் பொருளை தரும். அதேவேளை ஏற்கெனவே அறிமுகமான இருவர் அல்லது இல்லற வாழ்வில் இணைந்த இருவரின் உறவு நிலையின் போதான நிகழ்வுகளை அல்லது சந்திப்புகளை "பொருத்தம் வழுப்படுத்தல்" என்றும் பொருற்படும்.
தமிழர் பண்பாட்டில் ஒரு ஆண் ஒரு பெண் துணையையோ அல்லது ஒரு பெண் ஆண் துணையையோ தாமாகவே தேடிக்கொள்வதை பெரும்பாலும் எமது சமுதாயக் கட்டமைப்புகள் அனுமதிப்பதில்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடக்கு மேற்கு ஆசிய நாட்டவர்கள் ஹொங்கொங் உட்பட ஒரு வயது எல்லைக்குப்பின் தமக்கு பொருத்தமான துணையை தாமே தேடிக்கொள்ளும்
முழு உரிமையை அச் சமுதாயக் கட்டமைப்புகள் வழங்குகின்றன. அரச சட்டங்களும் அதற்கு அமைவானதாகவே உள்ளன.
தமிழர் பண்பாட்டை பொருத்தமட்டில் தனகேற்ற துணையை தானே தேடிக்கொள்ளல் என்பதும், தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணை எப்படியானவராக இருக்க வேண்டும் என தனக்கு தானே நேரடி நேர்முகத் தேர்வைப் போன்று பொருத்தம் பார்த்தல் என்பதும் ஏற்புடைய விடயங்கள் அல்ல. அதேவேளை இணைந்து வாழப்போகும் இரண்டு பேருக்குமான பொருத்தத்தை பெற்றோர் அல்லது மூன்றாமவர் ஊடாகவே முடிவெடுக்கப்படுகின்றன. அப்பொருத்தமும் ஒருவருக்கு ஏற்ற குணயியல்புகளை, விருப்பு வெறுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு அல்லாமால், சாதகக் குறிப்புகள் ஊடாகவே "பொருத்தம் பார்த்தல்" நிகழ்கின்றன. சாதகத்தின் பொருத்தம் சரியில்லை என்றால், வேறு சாதகம் தேடத்தொடங்கிவிடுவர். பொருத்தமான சாதகம் கிடைக்கும் வரை இந்த தேடல் தொடரும். இதே போன்றோதோர் செயல்பாடுதான் மேற்கத்தைய நாடுகளில் "dating" என்பதிலும் உள்ளது. இந்த "dating" எனும் சொல், பொருத்தம் பார்த்தலுக்கான சந்திக்கும் திகதியை குறிப்பதால் "பொருத்தம் பார்த்தலுக்கான திகதியிடல்" என்றும் குறிப்பிடலாம்.
இவ்வாறான மேற்கத்தைய பொருத்தம் பார்த்தல் முறை செய்தித்தாள், வானொலி என்று தற்போது (தமிழர் திருமணச் சேவை தளங்கள் போன்றே) இணையப் பயன்பாட்டின் வளர்ச்சியில் Online Dating தளங்களாக வளர்ந்து பெருகியுள்ளன.
சரி! இந்த பொருத்தம் பார்த்தலுக்கும் ஆங்கில இலக்கணம் கற்பதற்கும் இடையில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என பார்க்கிறீர்களா?
இருக்கிறது. முதலில் பாடத்திற்கு செல்வோம்.
இங்கே ஒரு பெண் தனக்கு ஏற்ற வாழ்க்கை துணைவர் எப்படியானவராக இருக்க வேண்டும், என்னென்ன குணயியல்புகள் உள்ளவராக இருக்கவேண்டும், என்னென்ன குணயியல்புகள் இருக்கக்கூடாது, எப்படியானவர் தனக்கு வேண்டாம் என அடுக்கடுக்காக கூறிச் செல்கிறாள். மிகவும் சுவாரசியமாகவும் நகைச்சுவையுடன் கூடிய இப்பெண்ணின் கூற்றை ஆங்கிலத்தில் வாசியுங்கள். எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையிலே அப்பெண்ணின் கூற்றுக்கள் உள்ளன. இவ்வாறான சுவாரசியமானவற்றை வாசித்தல் எளிதாக மனதில் பதியக்கூடியவைகளாகும். வாசிக்க கடினமாக இருப்பதாக உணர்ந்தால், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் விளக்கங்களை பார்த்துவிட்டு, வாசிக்கத் தொடருங்கள்.
Have you ever visited a dating website? A website where you look for a man or a woman for life partner. I never have. But if I actually visited a dating website, how will I describe my perfect man?
Sometimes it’s easier to say what we don’t want. For example, I don’t want a man with a big spot on the end of his nose. Or, I don’t want a man who blows his nose on his sleeve. Or, I don’t want a man who reads computer manuals all day and never talks to me, or looks at me.
Also I definitely do not want a drug dealer, an accountant or a psychopath.
Do you know what a psychopath is? If you’ve seen the movie, ‘Psycho,’ you’ll know. A psychopath is a crazy guy who murders women for fun, usually with a very sharp knife or a big axe. Then he chops the woman’s body into little bits and flushes it down the toilet.
So, definitely, no psychopaths.
I like a man who can dance. Sometimes I dance all night and my man, the man of my dreams, he has to love to dance too. All night. But he must use deodorant. A strong deodorant. My man will dance all night and never sweat. I do not like sweaty men. Also I do not like hairy men. Most of all I do not like men who are both sweaty and hairy.
I like a man who can sing. I want a man who will write love songs just for me. And sing them just to me. But he mustn’t sing in a café, in the park or on the street. No, that would be embarrassing, very embarrassing.
My man should send me love letters, in the mail, not email, in pink envelopes, pink perfumed envelopes. And he should send me flowers, red roses, white roses, tulips, or whatever, I don’t mind. He should send me flowers every week. He should buy me presents. Nothing too big, nothing too grand or expensive. Ear rings, bangles, a pair of sandals, or a necklace, maybe.
My ideal man would know how to cook. Because I can’t. I can boil an egg. I can make a cheese sandwich. I can open a yogurt carton. I can grill a sausage. But I can eat. I can eat almost anything.
My man should have blue eyes. Eyes that remind me of the sky on a summer’s day, or the sea in a picture postcard. Of course the sea isn’t really blue. It’s a kind of dirty green or brown. So, I want to look into my man’s clear blue eyes.
My man should be bigger than me but not too much bigger. I don’t want a man who could pick me up with one hand. Have you seen the movie ‘The Terminator’? My man should not be a Terminator. too many muscles. But he should be handsome, good-looking, cute as we girls say. Of course. Who wants an ugly man? Not me. Not anybody. But don’t worry guys. One girl’s ugly guy is another girl’s cute guy. Even guys who fart have girlfriends.
So what do you think? Will I ever find my perfect man? Is he out there, somewhere, looking for me? I think he may be.
என்ன வாசித்துவிட்டீர்களா? சுவாரசியமாக இருந்ததா?
சரி! இனி அப்பெண்ணின் கூற்றுக்கள் ஊடாக, நாம் இன்றைய ஆங்கில இலக்கணப் பாடத்தைத் தொடர்வோம். அதாவது நாம் ஏற்கெனவே கற்ற ஆங்கில பாடப் பயிற்சி 1 மற்றும் ஆங்கில பாடப் பயிற்சி 2 பாடங்களின் ஆங்கில இலக்கண வாக்கிய அமைவுகள் எவ்வாறு மக்களின் சாதாரணப் பேச்சு பயன்பாட்டில் பயன்படுகிறது என்பதை இன்றையப் பாடத்தின் ஊடாக ஒரு மேலாய்வு செய்வோம். புதிதாக இத்தளத்திற்கு வருகைத் தந்தோர் அப்பாடங்களை ஒருமுறை பார்த்துக்கொள்ளவும்.
இனி அப்பெண்ணின் கூற்றுக்களில் இருந்து, ஆங்கில இலக்கண வாக்கியங்களின் பயன்பாட்டை எளிதாகப் புரிந்துக்கொள்ளும் வகையில், சில வாக்கியங்களை கீழே இட்டுள்ளேன். அவ்வாக்கியங்களுக்கான தமிழ் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வாசித்து பார்த்தீர்களானால், நாம் ஏற்கெனவே கற்ற முதலாம் மற்றும் இரண்டாம் பாடங்களில் உள்ள வாக்கிய அமைவுகளின் (கிரமர் பெட்டன்கள்) பயன்பாட்டை எளிதாக புரிந்துக்கொள்ள உதவும்.
அதனை நோக்கமாகக் கொண்டு தான் இன்றையப் பாடம் வழங்கப்படுகிறது. அத்துடன் ஆங்கில இலக்கணம் கற்கும் நாம், ஆங்கிலேயரின் பண்பாட்டுடன் தொடர்புடைய விடயங்களையும் அறிந்து வைத்துக்கொள்வது சில நேரம் பயனுள்ளதாகவும் அமையலாம்.
சரி! இனி தமிழாக்கத்துடன் கீழுள்ள வாக்கியங்களின் இலக்கணப் பயன்பாட்டை அவதானியுங்கள்.
Have you ever visited a dating website?
நீங்கள் எப்பொழுதாவது விஜயம் செய்துள்ளீர்களா ஒரு பொருத்தம் பார்த்தல் தளத்திற்கு?
I don’t want a man with a big spot on the end of his nose.
மூக்கின் நுனியில் புள்ளியுள்ள ஒரு மனிதன் எனக்கு வேண்டாம்.
I don’t want a man who blows his nose on his sleeve.
மூக்கை ஒழுகிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் எனக்கு வேண்டாம்.
I don’t want a man who reads computer manuals all day and never talks to me, or looks at me.
என்னிடம் எப்பொழுதும் பேசாமல், என்னை பார்க்காமல், முழுநாளும் கணினி உரைகளை வாசித்துக்கொண்டிருக்கும் மனிதன் எனக்கு வேண்டாம்.

அத்துடன் போதைப்பொருள் விற்பனையாளர், ஒரு கணக்காளர், ஒரு மனநோயாளி (போன்றோரும்) எனக்கு நிச்சயம் வேண்டாம்.
I like a man who can dance.
நான் நடனம் ஆடக்கூடியவனை விரும்புகிறேன்.
He has to love to dance too.
அவனும் நடனம் ஆடுவதை விரும்புபவனாக இருக்க வேண்டும்.
He must use deodorant.
அவன் (நிச்சயமாக) வியர்வை நாற்றத்தடுப்பி பயன்படுத்த வேண்டும்.
I do not like sweaty men.
நான் வியர்க்கும் ஆண்களுக்கு விருப்பம் இல்லை.
I do not like hairy men.
தலைமயிரடர் (வளர்த்துள்ள) ஆண்களுக்கு விருப்பம் இல்லை.
I like a man who can sing.
நான் பாடல் பாடக்கூடியவனை விரும்புகிறேன்.
I want a man who will write love songs just for me.
எனக்கு வேண்டும் எனக்கு மட்டும் காதல் பாடல்கள் எழுதும் ஒருவன்.
And sing them just to me.
அத்துடன் அவற்றை பாடவேண்டும் எனக்கு மட்டும்.
He mustn’t sing in a café.
அவன் (நிச்சயமாக) விடுதிகளில் பாடக் கூடாது.
My man should send me love letters, in the mail.
என்னவன் அனுப்பவே வேண்டும் காதல் கடிதங்கள், தபால் அஞ்சலில்.
And he should send me flowers.
அத்துடன் அவன் எனக்கு அனுப்பவே வேண்டும் மலர்கள் (மலர்கொத்துகள்)
He should send me flowers every week.
அவன் அனுப்பவே வேண்டும் மலர்கள் (மலர்கொத்துகள்) ஒவ்வொரு வாரமும்.
He should buy me presents.
அவன் வாங்கவே வேண்டும் அன்பளிப்புகள் எனக்கு.
My ideal man would know how to cook.
எனது கனவுக் கண்ணன் தெரிந்திருக்கவேண்டும் எப்படி சமைப்பதென்று.
Because I can’t.
ஏனேனில் எனக்கு முடியாது.
I can boil an egg.
எனக்கு முட்டை அவிக்க முடியும்.
But I can eat.
ஆனால் எனக்கு சாப்பிட முடியும்.
I can eat almost anything.
ஆக எனக்கு எதுவென்றாலும் சாப்பிட முடியும்.
My man should have blue eyes.
என்னவனுக்கு இருக்கவே வேண்டும் நீலக்கண்கள்
My man should be bigger than me but not too much bigger.
என்னவன் என்னைவிட (தோற்றத்தில்) பெரிதானவனாக இருக்கவே வேண்டும். ஆனால் மிகவும் பெரிதானவனாக (தோற்றத்தில்) அல்ல.
I don’t want a man who could pick me up with one hand.
என்னை ஒரு கையால் தூக்ககூடியவன் எனக்கு வேண்டாம்.
Have you seen the movie ‘The Terminator’?
பார்த்திருக்கிறாயா "த டேர்மினேட்டர்" (முடிப்பவன்) திரைப்படம்?
My man should not be a Terminator.
என்னவன் ஒரு "டேர்மினேட்டர்" மாதிரி இருக்கவே கூடாது.
So what do you think?
அதாவது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Will I ever find my perfect man?
நான் எப்பொழுதாவது கண்டுக்கொள்வேனா எனது முழுமையானவனை?
அப்பெண் தனக்கேற்ற ஆடவனை தேடிக்கொள்ள நாமும் பிராத்திப்போமாக!
சரி! கீழுள்ள குறிப்புகளைப் பாருங்கள்.
குறிப்பு:
1. இந்த உரையாடலில் நான் தமிழாக்கம் செய்யாதப் பகுதிகளை நீங்களாகவே தமிழாக்கம் செய்து, அவ்வாக்கியங்களின் இடையே பயன்படுத்தப்பட்டிருக்கும் முன்னிடைச் சொற்கள், இடையிணைப்புச் சொற்கள் போன்றவற்றையும் இணைத்து தமிழாக்கம் செய்து பாருங்கள். அப்போது ஆங்கில வாக்கியங்களை இணைத்து எவ்வாறு ஒரு முழுமையான ஆக்கத்தை எழுதலாம் என்பதை எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம்.
2. இவ்வாறான பயிற்சிகளே ஆங்கில மொழியில் ஆளுமை பெற்றவராக ஒருவரை ஆக்கக்கூடியன. சரியாக கவனித்து பயிற்சி செய்வீர்களானால், கூடிய சீக்கிரம் ஆங்கிலத்தில் சிறப்பாக ஆக்கங்களையே எழுதும் நிலைக்கு நீங்கள் உயர்ந்து விடலாம்.
நன்றி!
அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

7 comments:
nice, thanks sir, and god bless you.
-kaja
நன்றி காஜா!
THANKS SIR, இனிய புத்தாண்டு 2011 நல் வாழ்த்துக்கள்....
- N.SIVA
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிவா!
Hi arun,
I like your way of teaching .. I have been learning english from your website.. please add more like this ..
valga valamudan !!!
தேதி என்றே எழுதலாமே .... syed ahamed.. riyadh
தேதி என்றே எழுதலாமே .... - syed ahamed -riyadh
Post a Comment