ஆங்கிலம் துணுக்குகள் 18 (Common Mistakes in English - have vs has)

மின்னஞ்சல் ஊடாக ஒருவர் “have, has” பயன்படுத்துதல் தொடர்பான சந்தேகங்களை கேட்டிருந்தார். நாம் ஏற்கெனவே இதுத்தொடர்பான ஒரு பாடத்தைக் கற்றுள்ளோம். இருப்பினும் அவரைப் போன்ற சந்தேகங்கள் வேறு சிலருக்கும் இருக்கலாம் எனும் நோக்கில், அவருக்கு அனுப்பிய பதிலை சற்று விரிவாக "ஆங்கிலம் துணுக்குகள்" பகுதியில் ஒரு குறும்பாடமாக இடுகின்றேன்.

முதலில் (Grammatical Person in English) என நான் ஏற்கெனவே வழங்கியப் பாடத்தை ஒரு முறை பார்த்துக்கொள்ளவும். அவற்றில் முதலாம் நபர், இரண்டாம் நபர், மூன்றாம் நபர் மற்றும் அவற்றின் பன்மை பயன்பாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. அதேப்போன்று தான் இவ்வாக்கிய அமைப்புகளும் அமையும்.

எடுத்துக்காட்டாக:

I have a computer.
எனக்கு இருக்கிறது ஒரு கணினி. (முதலாம் நபர் ஒருமை)

You have a computer.
உனக்கு/உங்களுக்கு இருக்கிறது ஒரு கணினி. (இரண்டாம் நபர் ஒருமை மற்றும் பன்மை)

He has a computer.
அவனுக்கு இருக்கிறது ஒரு கணினி.

She has a computer.
அவளுக்கு இருக்கிறது ஒரு கணினி.

It has a computer.
அதற்கு இருக்கிறது ஒரு கணினி.

இந்த "He, She, and It" போன்றவை மூன்றாம் நபர் ஒருமை சொற்களாகும். அதன் காரணமாகவே "has" பயன்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்ளவும். அதேவேளை "He" எனும் சுட்டுப்பெயருக்கு பதிலாக எந்த ஒரு ஆணின் பெயரையும், "She" எனும் சுட்டுப்பெயருக்கு பதிலாக எந்த ஒரு பெண்ணின் பெயரையும், "It" எனும் சுட்டுப்பெயருக்கு பதிலாக எந்த ஒரு ஒருமை பெயர்சொல்லையும் (ஆண் பெண் தவிர்ந்த) பயன்படுத்தலாம்.

அதேவேளை முதலாம் நபர் பன்மை மற்றும் மூன்றாம் நபர் பன்மை வாக்கியங்களில் "have" பயன்படும்.

We have a computer.
எங்களுக்கு இருக்கிறது ஒரு கணினி. (முதலாம் நபர் பன்மை)

They have a computer.
அவர்களுக்கு இருக்கிறது ஒரு கணினி (மூன்றாம் நபர் பன்மை)

கேள்வி பதில்கள்
----------------------------------------------------------------------------------------
இவற்றை மேலும் சற்று விரிவாக கேள்வி பதில்களாக மாற்றி பார்ப்போமா? கீழே கவனியுங்கள்

Do you have a computer?
Yes, I have a computer.
No, I don’t have a computer.

Do we have a computer?
Yes, we have a computer.
No, we don’t have a computer.

Do they have a computer?
Yes, they have a computer.
No, they don’t have a computer.

இப்பொழுது கீழேயுள்ள மூன்றாம் நபர் ஒருமை கேள்வி பதில்களை சற்று கவனியுங்கள்:

Does he have an iphone?
Yes, he has an iphone.
No, he doesn't have an iphone.

"மூன்றாம் நபர் ஒருமை" வாக்கியங்களில் “has” நேர்மறை வாக்கியங்களின் போது மட்டுமே பயன்படுவதை அவதானியுங்கள். தவிர கேள்வி வாக்கியங்களின் போதோ, எதிர்மறை வாக்கியங்களின் போதோ பயன்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். இதேப்போன்றே மூன்றாம் நபர் ஒருமை “he, she, it” போன்ற சொற்களுடனும் பயன்படும்.

இது தான் "have vs has" இன் பயன்படும் இலக்கண விதிமுறைகள்.

கேள்விகளுக்கான விளக்கங்கள்
----------------------------------------------------------------------------------------
அநேகமாக கேள்வி கேட்டிருந்தவர், மேலுள்ள இலக்கண விதிமுறைகளை அறிந்தவர் என்பதை அவரது கேள்விகள் எடுத்துக்காட்டின. அவரது கேள்விகள் இதோ:

//I have a doubt in using Have / Has in some places, could you please clarify me.
I have done / he has done / kumar has done - i am OK with this

now my doubt is how to use have /has in the following situations & why?

who have asked ? - should i use have / has ?
who have the iphone - should i use have/ has ?
School have changed a lot - should i use have/ has?
his poem has selected for the first price - should i use have/ has?
his poems has selected for the first price - should i use have/ has?
students has the power to change the country - should i use have/ has?//


இனி பதில்கள்...

School have changed a lot - should i use have/ has?

இவ்வாக்கியம் பிழையானது. ஏனெனில் "school" எனும் பெயர்ச்சொல், "It" எனும் "மூன்றாம் நபர் ஒருமை" சுட்டுப்பெயருக்கு பதிலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே "has" வரவேண்டும்.

School has changed a lot.
பாடசாலை + மாறியிருக்கிறது + நிறைய.
(பாடசாலை நிறைய மாறியிருக்கிறது.)

his poem has selected for the first prize - should i use have/ has?

இவ்வாக்கியத்தில் "poem" எனும் பெயர் சொல் "it" எனும் மூன்றாம் நபர் ஒருமை சுட்டுப்பெயருக்கு பதிலாகவே இடப்பட்டுள்ளது. எனவே இவ்வாக்கியம் சரியானது.

His poem has selected for the first prize.
அவனுடைய கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது முதல் பரிசுக்காக.

his poems has selected for the first prize - should i use have/ has?

இவ்வாக்கியத்தில் "poems" ஒரு பன்மை சொல்லாகும். எனவே மூன்றாம் நபர் பன்மையுடன் "have" வரவேண்டும்.

His poems have selected for the first prize.
அவனுடைய கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன முதல் பரிசுக்காக.

students has the power to change the country - should i use have/ has?

இவ்வாக்கியமும் அப்படித்தான். "Students" என்பது ஒரு பன்மை சொல் என்பதால் "have" பயன்படுத்த வேண்டும்.

Students have the power to change the country.
மாணவர்களுக்கு + இருக்கிறது + பலம் + மாற்றுவதற்கு நாட்டை.
(நாட்டை மாற்றும் பலம் மாணவர்களுக்கு இருக்கிறது.) தொடர்புடைய பாடம்

கீழுள்ள கேள்விகள் குறித்து ஒரு தனியான பாடம் இட வேண்டும். ஏனெனில் இரண்டு விதமாக எழுதுவதும் சரியாகும். அதெப்படி? விடை:

who have asked ? - should i use have / has ?

who have the iphone - should i use have/ has ?

Who asked?
யார் கேட்டது? என்றே கேள்வி அமைய வேண்டும்.

ஆனால் "who have asked" என்பது ஒரு நீண்ட சொற்றொடரின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். எனவே மேலுள்ள வாக்கியத்தின் முன்னால் உள்ள பகுதி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை பொருத்தே "have" அல்லது "has" பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

There is a user who has asked. (மூன்றாம் நபர் ஒருமை)
There are users who have asked. (மூன்றாம் நபர் பன்மை)

இவ்வாக்கிய அமைப்புகளின் மேலதிக விளக்கங்களை, தொடர்புடைய இடுகைகள் ஊடாகப் பார்க்கவும்.

தொடர்புடைய இடுகைகள்:

ஆங்கிலம் செயப்பாட்டுவினை (Passive Voice)
ஆங்கில பாடப் பயிற்சி (Grammar Patterns of Perfect Tense)
ஆங்கில பாடப் பயிற்சி (have/ have got)
ஆங்கிலம் துணுக்குகள் (Grammatical Person in English)

இந்த இடுகை ராஜேந்திரன் என்பவர் மின்னஞ்சல் ஊடாக கேட்டிருந்த கேள்விக்கான பதிலாகும். இப்பாடம் ஆங்கிலம் துணுக்கள் பகுதியிலேயே வழங்கப்படுகின்றது.

மேலும் துணுக்குகள்

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

30 comments:

மதுரை சரவணன் said...

பயனுள்ள தகவல்... வாழ்த்துக்கள். சேவைத் தொடரட்டும்.. பகிர்வுக்கு நன்றி.

HK Arun said...

-மதுரை சரவணன்

கருத்துரைக்கு நன்றி நண்பரே!

ப.கந்தசாமி said...

//His poem has selected for the first prize.//

His poem = noun
has selected = verb
for the first prize = a qualifying clause for the verb (adverb or something)

Where is the object?

His poem selected whom or what?

The correct form of the sentence should be-

His poem has been selected for the first prize.

Subject = Hidden, can be the organisers.

verb = has been selected

object = his poem
It is a passive voice sentence.

ப.கந்தசாமி said...

Pl. give your feedback Mr.Arun

MK said...

//His poem has selected for the first prize.
His poems have selected for the first prize.//

மேலே உள்ள இரு வாக்கியங்களிலும் "been" விடுபட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. தயவு செய்து தெளிவிக்கவும்!

His poem has been selected for the first prize.
His poems have been selected for the first prize.

ஜிஎஸ்ஆர் said...

அருமையான விளக்கங்கள் எளிமையாக புரியும்படியாக இருக்கிறது

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Sukumar said...

உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்...

HK Arun said...

-DrPKandaswamyPhD

முதலில் உங்கள் கருத்துரைக்கு நன்றி!

நீங்கள் பேச்சின் கூறுகளை பிரித்துக்காட்டியுள்ளீர்கள். அவற்றை
பேச்சின் கூறுகளை (Parts of Speech in English) பாடத்தில் பார்க்கவும். இங்கே "Have and Has" எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு மட்டுமே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும்.

மேலதிக விளக்கங்களிற்கு "தொடர்புடைய இடுகைகள்" பார்க்கவும்.

நன்றி

ப.கந்தசாமி said...

திரு.அருண்,

His poem has selected for the first prize.

இந்த ஆங்கில வாக்கியம் சரிதானா?
அதைச் சுட்டிக் காட்டினால் என்னை உங்கள் பதிவிலிருந்து ஆங்கிலம் படிக்கச் சொல்லுகிறீர்கள். என்ன ஒரு புத்தி கூர்மை?

HK Arun said...

-MK

//His poem has selected for the first prize.
His poems have selected for the first prize.

மேலே உள்ள இரு வாக்கியங்களிலும் "been" விடுபட்டுவிட்டதாகத் தோன்றுகிறது. தயவு செய்து தெளிவிக்கவும்!

His poem has been selected for the first prize.
His poems have been selected for the first prize.//

DrPKandaswamyPhD அவருடைய கேள்வியின் அடிப்படையில் தான் உங்கள் எண்ணமும் எழுந்துள்ளது. எனவே இருவருக்குமான பதில்:

“His poem + has selected + for the first prize”
அவனுடைய கவிதை + தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது + முதல் பரிசுக்காக.
(அவனுடைய கவிதை முதல் பரிசுக்காக தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.)

மேலுள்ள வாக்கியம் ஒரு (Present perfect, Active voice) செய்வினை வாக்கியமாகும்.

இதனை (Present perfect, Passive voice) செயப்பாட்டு வினை வாக்கியமாக நினைப்பதே குழப்பமாக தோன்றுவதற்கான காரணம். சரி! அவ்வாறும் உங்களுக்கு விளக்குகிறேன்.

முதலில் (Present perfect, Passive voice) செயப்பாட்டு வினைவாக்கியமாகவே இவ்வாக்கியங்களை பார்ப்போம்.

His poem + has been selected + for the first prize.
அவனுடைய கவிதையை + தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது + முதல் பரிசுக்காக.
His poem has been selected for the first prize + by organizer.
அவனுடைய கவிதையை + தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது + முதல் பரிசுக்காக + ஒழுங்கமைப்பினரால்.

இப்பொழுது இவ்வாக்கியங்களை அப்படியே செய்வினை வாக்கியங்களாக மாற்றிப் பாருங்கள்.

The first prize + has selected + for his poem
முதல் பரிசு + தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது + அவனது கவிதைக்காக.
Organizer + has selected + his poem for the first prize.
ஒழுங்கமைப்பினர் + தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது + அவனுடைய கவிதை முதல் பரிசுக்காக.

என எழுதினால் பொருத்தமற்ற வாக்கியங்களாகவே அமையும். இப்பொழுது கீழுள்ள வாக்கியத்தைப் பாருங்கள்.

His poem has selected.
அவனுடைய கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
His poem has selected for the first prize.
அவனுடய கவிதை தேர்ந்தெருக்கப்பட்டிருக்கிறது முதல் பரிச்சுக்காக.

இப்பொழுது விளங்குகின்றதா? மேலும் “தொடர்புடைய இடுகைகள்” பார்க்கவும்.

செய்வினை vs செயப்பாட்டுவினை பாடத்தில் மேலும் விரிவாகப் பார்க்கலாம்.

நன்றி!

HK Arun said...

- ஜிஎஸ்ஆர்

//அருமையான விளக்கங்கள் எளிமையாக புரியும்படியாக இருக்கிறது//

கருத்துரைக்கு நன்றி!

HK Arun said...

அன்புடன் DrPKandaswamyPhD ஐயா!

//இந்த ஆங்கில வாக்கியம் சரிதானா?//

அவ்வாக்கியம் நானாக இட்டதல்ல; அது ஒருவரின் கேள்வி.

//அதைச் சுட்டிக் காட்டினால் என்னை உங்கள் பதிவிலிருந்து ஆங்கிலம் படிக்கச் சொல்லுகிறீர்கள்.//

நான் அவ்வாறு கூறவில்லை. நான் "பேச்சின் கூறுகள் (Parts of Speech in English)" பாடத்தில் பார்க்கும் படி தான் கூறியுள்ளேன். நீங்கள் தவறாக விளங்கிகொண்டுள்ளீர்கள்.

உங்கள் போன்றோரின் கேள்விகள் ஒருவகையில் நன்மையானவைகளே.

நன்றி!

HK Arun said...

-Sukumar Swaminathan

//உங்கள் சேவை நாட்டுக்கு தேவை.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..//

வாழ்த்துக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

priyamudanprabu said...

பயனுள்ள தகவல்... வாழ்த்துக்கள். சேவைத் தொடரட்டும்.. பகிர்வுக்கு நன்றி.

ப.கந்தசாமி said...

திரு. அருண்,

என்னுடைய கமென்ட்டில் ஒரு வார்த்தைப் பிரயோகம் சாப்பிடப்போகும் அவசரத்தில் தவறாகப் போட்டுவிட்டேன். மன்னிக்கவும். "பார்வை" என்பதற்கு "புத்திக்கூர்மை" என்று எழுதிவிட்டேன். மிகமிகத் தவறுதலான வார்த்தை. மன்னிக்கவும்.
இதை நினைத்து சரியாகச் சாப்பிடக்கூட முடியவில்லை.

shanuk2305 said...

கந்தசாமி அய்யாவும்,அருணும் இணைந்தால் மிகவும் தெளிவாக விளக்கம் அளிக்கலாம்

HK Arun said...

- DrPKandaswamyPhD

அன்புடன் ஐயா!

இவ்வாறு கேட்பதுதான் என்னை சங்கடத்தில் ஆழ்த்துகிறது. நான் அவ்வார்த்தையை கணக்கிலும் எடுக்கவில்லை. நான் உங்களை விட வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் மிகச் சிறியவன். நீங்கள் வேண்டுமானால் தலையில் குட்டியும் அறிவுரை வழங்கலாம். உங்கள் போன்றோரின் ஆசிர்வாதம் கிடைத்தாலே அது எனக்கு போதும்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

HK Arun said...

-பிரியமுடன் பிரபு

//பயனுள்ள தகவல்... வாழ்த்துக்கள். சேவைத் தொடரட்டும்.. பகிர்வுக்கு நன்றி.//

நன்றி நண்பரே!

HK Arun said...

-shanuk2305

//கந்தசாமி அய்யாவும்,அருணும் இணைந்தால் மிகவும் தெளிவாக விளக்கம் அளிக்கலாம்//

உண்மை நண்பரே, கேள்விகளே பதில்களை பெற வழிவகுக்கின்றன.

கருத்துரைக்கு நன்றி!

Anonymous said...

அய்யா

அந்த பிழையான வாக்கியத்தை எழுதிய முட்டாள் நான் தான் , மன்னிக்கவும்.

அருண் ,மிக்க நன்றி , நான் இதுபோல் சந்தேககளை கேட்டு கொண்டே இருப்பேன் , மன்னிக்கவம்

ராஜேந்திரன்

Ilakkuvanar Thiruvalluvan said...

தொண்டரே! வணக்கம். நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன். தமிழில் குறிப்பிடுகையில் தமிழ் மரபிற்கேற்பவே குறிக்க வேண்டும் என. நீங்களோ தொடர்ந்து ஆங்கில முறையிலேயே தமிழில் குறிக்கும் தவறான வழக்கத்தைப் பின்பற்றுகிறீர்கள். நான் இதனைப் படித்தேன் என்பதை அவ்வாறே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதாகக் கூறி I this read என்று சொல்லும் அறியாமையை அரங்கேற்றுவீர்களா? தமிழில் தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழ் உலகத்தை மேலும் தடுமாறி விழச் செய்ய முயல்கிறீர்களே! சொற்களைப் புரிந்து கொள்ள அவ்வாறு குறிப்பதாகக் கருதினால் பின்வருமாறு எழுதுங்கள்.
I have a computer. (என்னிடம்/இருக்கிறது /ஒரு/ கணிணி) நான் ஒரு கணிணி வைத்துள்ளேன். I என்றால் நான் எனப பொருள்; என்றாலும் I have என்றால் இங்கு என்னிடம் என்னும் பொருளில் வருகிறது.
have கொண்டிருத்தலைக் குறிக்கும். உடைமையைக் குறிக்கும் இச் சொல் சேருவதால் நான் கணிணியை உடையவனாக உள்ளேன் என்னும் பொருள் வ்ருகிறது. எனினும் என்னிடம் கணிணி உள்ளது என்று சொல்வதே தமிழ் வழக்கு - என விளக்கலாம் அல்லவா? மேலும்,
கணிணி என்று எழுதுவதுதான் சரி. எனவே, கணினி எனத் தவறாகக் குறிக்க வேண்டா. ஆங்கிலத்தைக் கற்பிப்பதன் மூலம் தமிழையும் கற்பிப்பதாக உங்கள் பயிற்சி அமைய வேண்டுமே தவிர தமிழைச் சிதைப்பதாக இருக்கக் கூடாது. செய்வனத் திருந்தச் செய்ய வேண்டும் அல்லவா? உங்களின் தொண்டு நல்வழியில் தொடர வாழ்த்துகிறேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

HK Arun said...

-ராஜேந்திரன்

அவ்வாக்கியம் பிழையானதல்ல; சற்று குழப்பமானது.

கருத்துரைக்கு நன்றி நண்பரே!

KANNAN.R said...

Thank you so much Arun....

You are doing great service,because lot of educated peoples had a problem to communicate in english and lot of doubts.But dont know how to know and whom to ask.Now a days everyone money minded.I am lucky to have ur site.

Once again thank you..

HK Arun said...

- KANNAN.R

நன்றி நண்பரே உங்கள் கருத்துரை மகிழ்வை தருகின்றது.

நன்றி!

HK Arun said...

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ஐயா!

வணக்கம்!

எமது மொழிப்பெயர்ப்பு விளக்கம் பாருங்கள்.

//I have a computer.
(என்னிடம்/இருக்கிறது /ஒரு/ கணிணி)
நான் ஒரு கணிணி வைத்துள்ளேன்.
I என்றால் நான் எனப பொருள்; என்றாலும் I have என்றால் இங்கு என்னிடம் என்னும் பொருளில் வருகிறது.//

I have cough and cold.
எனக்கு இருக்கிறது இருமலும் தடுமலும்.

I have an interview
எனக்கு இருக்கிறது ஒரு நேர்முகத்தேர்வு.

I have two brothers and three sisters
எனக்கு இருக்கிறார்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்.

மேலுள்ள வாக்கியங்களை...
"என்னிடம் இருக்கிறது இருமலும் தடுமலும்.
என்னிடம் இருக்கிறது ஒரு நேர்முகத்தேர்வு.
என்னிடம் இருக்கிறார்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்." என எழுதமுடியுமா?

//have கொண்டிருத்தலைக் குறிக்கும்.// எல்லா சந்தர்ப்பங்களிலும் அப்படி பயன்படாது.

//கணிணி என்று எழுதுவதுதான் சரி. எனவே, கணினி எனத் தவறாகக் குறிக்க வேண்டா.// கணினி கலைச்சொல்லாக்கச் சொற்கள் ஒவ்வொன்றும் பயனர் பலரும் கலந்தாய்வு செய்தே பெறப்படுகின்றன. அவ்வாறன கலந்துரையாடல்களில் பங்குபற்றி தவறு என்பதற்கான விளக்கத்தையும், சரி என்பதற்கான எடுத்துக்காட்டையும் முன்வையுங்கள். நீங்கள் முன்வைக்கும் விளக்கம் சரியானதெனில் அதனை நிச்சயம் என்னால் ஏற்கமுடியும்; இணையப் பயனர்களும் ஏற்பர்.

மேலும் தமிழ் மொழி குறித்த உங்கள் கருத்துக்களுக்கு ஒரு தனி பதிவே இடலாம் என்றுள்ளேன்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

NSK said...

நண்பர் H .K .Arun அவர்களூக்கு,

உங்கள் நேரத்தை சமூக அக்கறையோடு செலவிடுவதற்கு நன்றிகள் கோடி
அதை தாண்டி உங்களுக்கு நேரம் இருக்குமாயின் எனது பதிவில் உள்ள பிழைகளை
சுட்டிகாட்டவும். நான் தமிழ் கதையை ஆங்கிலத்திற்கு மொழி மாற்றியுள்ளேன் அதில் பிளைகள் இருக்கும் என ஐயம் கொள்கிறேன்
உங்களுக்கு நேரம் இருக்குமாயின் சுட்டிகாட்டவும் http://kathivakkam.blogspot.com/2010/08/2.html

DOSS said...

DOSS SAID
Dear arun sir,
well explained that, but one thing I can't able to translate u put the following sentence by tamil. becoz i don't understand this what is the exact tamil meaning.
thats why i've asked this.

1.There is a user who has asked. (மூன்றாம் நபர் ஒருமை)
2.There are users who have asked. (மூன்றாம் நபர் பன்மை)

HK Arun said...

-NSK

நண்பரே! உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன் சிறப்பாக செய்து வருகின்றீர்கள். ஆரம்பத்தில் வரும் சிறுச்சிறு பிழைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதி வாருங்கள் காலப்போக்கில் தானாகவே சிறப்பான நிலையை எட்டிவிடலாம். முயற்சி ஒன்று மட்டும் தான் முன்னேற்றத்துக்கான வழி.

நன்றி!

HK Arun said...

-BOSS

//1.There is a user who has asked. (மூன்றாம் நபர் ஒருமை)
2.There are users who have asked. (மூன்றாம் நபர் பன்மை)//

இவற்றை ஒரு பாடமாக விரைவில் பதிவிடுகின்றேன்.

கேள்விக்கு நன்றி!

Unknown said...

Useful articles sir

Post a Comment