ஆங்கிலம் வினைச்சொல் அட்டவணை (Irregular Verbs)

இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று வழங்கப்படுகின்றது.

"Irregular verbs" கள் அட்டவணையை ஆங்கிலம் உதவி பக்கமும் இட்டுள்ளோம். நீங்கள் விரும்பினால் http://aangilam.page.tl/Irregular-verbs.htm பக்கம் சென்றும் பார்க்கலாம். அவற்றை ஸ்க்ரீன் சொட் எடுத்தே இங்கு இட்டுள்ளோம்.

பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு கீழே இணைக்கப் பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.









இந்த "Irregular verbs" களை மனப்பாடம் செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். நாம் பிழையின்றி ஆங்கிலம் பேச, எழுத விரும்பினால் நாம் இவற்றை முறையாகக் கற்பதே சிறந்த வழியாகும். எமது அடுத்த பாடப் பயிற்சியின் போது நாம் இறந்தக்கால (Past Tense) பயிற்சிகளைத் தொடர இருப்பதால் இவற்றை இன்றே மனப்பாடம் செய்துக்கொள்வது எளிதாக இருக்கும்.

மற்றும் எதிர்வரும் "Passive Voice" பாடங்களின் போதும் இந்த "Irregular verbs" அட்டவணை அவசியப்படும்.

எனவே கட்டாயம் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி அத்தியாவசியம் ஆகிவிட்ட இக்காலச் சூழமைவில் நாம் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் கற்பதே இன்றைய உலக கால ஓட்டத்தில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

குறிப்பு:

இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகும். இதன் முறையின் படியே பாடங்கள் வழங்கப்படும்.

கேள்விகள் கேட்போர் இந்த ஆங்கில பாடப் பயிற்சிகள் தொடர்பாக எழும் எந்த விதமான சந்தேகங்கள், கேள்விகளாயினும் கேட்கலாம். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில சொற்கள் இருப்பின் அவற்றையும் கேட்கலாம். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.

ஆனால் ஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கிக் கேட்பது, ஆங்கிலக் கல்விக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம் மொழி தொடர்பில் எந்தவிதமான கேள்விகள் இருப்பினும் தயங்காமல் எழுதுங்கள். உங்கள் கேள்விகளுக்கான பதில் எமது பாடத்திட்டத்திற்குள் உள்ளதொன்றானால், அவற்றை அப்பாடங்களின் போது வழங்கப்படும். எமது ஆங்கிலப் பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகளாக இருப்பின் அவற்றை தொகுத்து பின் "கேள்வி பதில்" பகுதியாக வழங்குவதாக உள்ளோம்.

முடிந்தவரையில் உங்கள் கேள்விகளை தமிழிலேயே எழுதிக் கேளுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டெழுதினாலும், அவற்றுக்கான பதில் தமிழிலேயே வழங்கப்படும்.

சரி பயிற்சிகளை தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி ஆங்கில உச்சரிப்பு பயிற்சி, ஆங்கிலம் பேச்சு பயிற்சி, English listening Practice, through Tamil, in Tamil, with Tamil, English irregular verbs with Tamil Explanation.
அன்புடன்
அருண் | HK Arun English Irregular verbs listening practice in Tamil,
Download As PDF

36 comments:

  1. Mr.Arun

    Thank you very much for your great service I wish you all the best in your success.

    you give more like this lesson it is helpful me and others.

    And I ask one request one who know French [Teach French by Tamil ]plase make like this service to Teach our Tamil people it also helpful one who live in Europ Country or in Canada.

    Thanking you Mr.Arun
    yours
    siva
    Pondicherry.

    ReplyDelete
  2. ஹாய் அருன்.

    சில irreugular verps open ஆகவில்லை என்ன காரணம்?

    ReplyDelete
  3. //சில irreugular verps open ஆகவில்லை என்ன காரணம்?//

    உங்கள் கேள்வி விளக்கமாக இல்லை. (open) திறக்கவில்லை என்று எதைக்கூறுகிறீர்கள்? Irregular verbs க்கான சுட்டியையா? http://aangilam.page.tl/Irregular-verbs.htm இப்போது பாருங்கள்.

    ReplyDelete
  4. ஆம் Irregular verbs க்கான சுட்டிதான் OPEN ஆகவில்லை என்னகாரணம்?

    ReplyDelete
  5. - Dawood

    எனது கணனியில் சுட்டி வேலை செய்கின்றதே!

    இப்பொழுதும் சுட்டி வேலை செய்யவில்லையென்றால், நேரடியாக உலாவியில் aangilam.page.tl/Irregular-verbs.htm என்று தட்டச்சு செய்து தளத்திற்குச் சென்றுப் பாருங்கள்.

    நன்றி

    ReplyDelete
  6. அன்புள்ள அருண் தங்களின் இந்த ஆங்கில இலக்கணம் பற்றி தமிழில் அறித்து கொள்ள உதவும் இணைய தளம் மிகவும் அருமை,நானும் எனக்கு தெரிந்த தமிழ் நண்பர்கள் அனைவரிடமும் இத் தளம் சென்று ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள பரிந்துரைகிறேன்,தங்களின் இந்த அறிய முயற்ச்சிக்கு உலக தமிழ் நண்பர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்,இப்படிக்கு,
    பாசமிகு,மகுடம் மோகன்

    ReplyDelete
  7. மிக்க நன்றி மகுடம் மோகன்.

    இது ஒரு சிறிய முயற்சி மட்டுமே! இன்னும் பல்வேறு துறைகளில் தன்னார்வ முயற்சியாக பங்காற்றும் பலர் உள்ளனர்.

    நான் இங்கே வழங்குவது எமது "HE English Institute" காக நான் உருவாக்கிய ஆங்கில பயிற்சி முறையைத் தான்.

    கடல் கடந்த தேசத்தில் தமிழ் பேசுவதே எமது வாழ்க்கையில் அரிதாகி வருகின்றது. இங்கே தமிழ் பேசுபவர்களைக் கண்டாலே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

    எனவே ஆங்கிலம் அத்தியாவசியமாகி விட்ட நிலையில், எமது தமிழையும் காக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் "முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம்" கற்பிக்கும் முயற்சியை ஆரம்பித்தோம்.

    இது எந்தளவிற்கு ஏற்புடையதாய் இருக்கிறது என்பதை எம் தமிழர் தான் கூற வேண்டும்.

    உங்கள் கருத்து ஊக்கத்தைத் தருகின்றது.

    நன்றி!

    ReplyDelete
  8. மிக நன்றி Sir.
    நான் கடந்த ஒரு வருடமாக ஆங்கிலம் கற்க முயன்று வருகிறேன். தற்செயலாக google மூலம் உங்களுடைய இந்த தளத்தை பார்த்தேன். இப்போதான் எனக்கு ஒரு confident வந்திருக்கிறது .என்னோட friends எல்லோருக்கும் இந்த blog-id கொடுத்திருக்கிறேன். உங்களுடைய இந்த சேவையை மனமார பாராட்டுகிறேன்.

    Thank You Very Much Sir.

    ReplyDelete
  9. -dhani
    //நான் கடந்த ஒரு வருடமாக ஆங்கிலம் கற்க முயன்று வருகிறேன். தற்செயலாக google மூலம் உங்களுடைய இந்த தளத்தை பார்த்தேன். இப்போதான் எனக்கு ஒரு confident வந்திருக்கிறது .என்னோட friends எல்லோருக்கும் இந்த blog-id கொடுத்திருக்கிறேன். உங்களுடைய இந்த சேவையை மனமார பாராட்டுகிறேன்.//

    எமது பாடப் பயிற்சி 01 இலிருந்து பயிற்சி செய்வீர்களானால் மிகவும் எளிதாக இருக்கும். முக்கியமாக கிரமர் பெட்டன்களை பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.

    நன்றி

    ReplyDelete
  10. Dear Arun,

    My name is ponmani i cant speak to english in correctly pls help me work in telecome dept. but i dont speak to u. how to improved in my english knowlege. i very interest wait for ur reply sir.


    Regards,

    Ponmani
    Bangalore

    ReplyDelete
  11. அன்புடன் PONMANI A

    ஆங்கிலத்தில் தொலைத்தொடர்பகத்தில் உரையாடும் முறையை கேட்கிறீர்களா? அல்லது உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வதற்கான அறிவுரை கேட்கிறீர்களா?

    கூறுங்கள் உதவ தயாராக இருக்கின்றேன்.

    நன்றி

    ReplyDelete
  12. அன்புடன் வணக்கம், மிக்க நன்றி நன்றி நன்றி.. 1.12.2009 முதல் ஒன்றாவது பாடம் படிக்க ஆரம்பித்தேன் இப்போது ஒன்பதாவது பாடம் வந்துள்ளேன் . எதாவது பரீட்சை போன்று கேள்வி பதில் இருந்தால் நன்றாக இருக்கும் சிரமம் கொடுப்பது பொருத்துக்கொள்ளவும்
    நன்றி

    ReplyDelete
  13. - hamaragana

    உங்கள் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    நீங்கள் கேட்டதுப்போன்று கேள்வி பதில் பகுதியும் இடையிடையே இருந்தால் ஆங்கிலம் கற்போர் தம்மை பரீட்சித்துப் பார்க்க வசதியாக இருக்கும் தான். எதிர்வரும் பாடங்களில் முயற்சிக்கின்றேன்.

    //சிரமம் கொடுப்பது பொருத்துக்கொள்ளவும்//

    ஐயா பெரியவரே உங்கள் கருத்தை தெரிவித்தமையை நான் ஒருபோதும் சிரமமாக நினைக்கமாட்டேன். அவைகளே எமக்கான உந்து சக்திகள். உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

    அன்புடன்
    அருண் HK Arun

    ReplyDelete
  14. சேர்.
    நான் எனது gmail adderss (muthasseer@gmail.com)ஐ பதிவு செய்து உள்ளேன் எனது முகவரிக்கு உங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விடையங்களையும் அனுப்ப முடியுமா ?

    ReplyDelete
  15. சேர்.
    நான் எனது gmail adderss (muthasseer@gmail.com)ஐ பதிவு செய்து உள்ளேன் எனது முகவரிக்கு உங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விடையங்களையும் அனுப்ப முடியுமா ?

    ReplyDelete
  16. @ Muthasseer

    மின்னஞ்சல் வழி பாடங்களைப் பெற பதிவு செய்தால், இதன் பிறகு புதிதாக பதிவிடும் பாடங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வந்தடையும். அது Feedblitz, Feedburner தரும் வசதி.


    ஏனைய பாடங்களை PDF கோப்புகளாக பதிவிறக்கிக்கொள்ளலாம். அல்லது அச்சுப்பதித்தும் பெறலாம்.

    ReplyDelete
  17. migavum nandri Ayya... thangaludaya seavai mullam nan Migavum payam perugiren....Thank you....by jaikumar
    from coimbatore

    ReplyDelete
  18. migavum nandri Ayya... thangaludaya seavai mullam nan Migavum payam perugiren....Thank you....by jaikumar
    from coimbatore

    ReplyDelete
  19. இத்தகைய வலைதளத்தை ஏற்கனவே பார்க்க நேர்ந்திருந்தால் என்னுடைய ஆங்கில அறிவை ஏற்கனவே வளர்த்திருப்பேன். காலதாமதமாக பார்க்க நேர்ந்தது.இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி அருண்...............
    by
    JOTHIKUMAR

    ReplyDelete
  20. மிக்க மகிம்ச்சி இத்துடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ஐய்யா !

    ReplyDelete
  21. மிக்க நன்றி ஐய்யா!

    ReplyDelete
  22. சார் Present என்பது நிகழ் காலத்தை குறிக்கும் Past என்பது இறந்த காலத்தை குறிக்கும் Past Participle என்பது எதை குறிக்கும் சார்

    ReplyDelete
  23. வணக்கம் மதிப்பிற்குறிய அ௫ண் அவர்களே உங்களுக்ககு நேரம் இ௫ந்தால் கேள்வி வாக்கியங்களை பட்டியல் இட முடியுமா முடிந்தால் உதவுங்கள்.

    ReplyDelete
  24. hello sir,

    I want Tamil to English Vocabulary words..

    ReplyDelete
  25. Arun, Thanks for great services.

    ReplyDelete
  26. How can I get this as a PDF file? Plz help me

    ReplyDelete
  27. How can I get this as a PDF file? Plz help me

    ReplyDelete
  28. வணக்கம் நண்பரே,
    நான் ஒரு கணினியியல் பட்டதாரி எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும் தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் நான் பள்ளி பருவத்திலிருந்து ஆங்கிலம் மீது எனக்கு ஆர்வம் இல்லை, நான் இப்பொழுது வேலை தேடி வெளிநாடு வந்துள்ளேன் இங்கு அங்கிலத்துக்கு மட்டுமே இங்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர், என்னால் ஆங்கிலம் எழுத முடிகிறது பிறர் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் பேச முடியவில்லை. நான் எப்படி இந்த சூழ்நிலையில் இருந்து மீள்வது எப்படி நான் ஆங்கிலம் பயில என்ன வழி என்பதை என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் பதில் தரவும். உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பன்.

    Faizal

    மின்னஞ்சல்:faishal675@gmail.com

    ReplyDelete
  29. Thank you very much for your great help.

    ReplyDelete