ஆங்கில பாடப் பயிற்சி — 5 (Present Continuous Tense)

நாம் ஏற்கெனவே ஒரு வார்த்தையை எவ்வாறு 73 ன்று வாக்கியங்களாக மாற்றி அமைக்கலாம் என்பதை Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3 போன்ற மூன்று பாடங்களிலும் கற்றோம். அவற்றை வாய்பாடு போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

இவற்றைத் தவிர மேலும் சில கிரமர் பெட்டன்கள் இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் பாடங்களில் பார்ப்போம். இன்று நாம் "கிரமர் பெட்டன் 1" இன் இரண்டாவது வாக்கியத்தை விரிவாகப் பார்க்கப்போகிறோம்.

I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

இவ்வாக்கியம் ஒரு "நிகழ்காலத் தொடர் வினை" (Present Continuous Tense) வாக்கியமாகும். இன்று இந்த நிகழ்காலத் தொடர்வினை பற்றி விரிவாகவும், அதன் இலக்கணப் பயன்பாடுகளையும் பார்ப்போம்.

இதனை மூன்று பகுதிகளாக பிரித்துக் கற்போம்.

கவனிக்கவும்

அதற்கு முன் இலகுவானப் பயிற்சிக்கு சிறிய அறிவுரை!

நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குப் போகும் வரை, உங்கள் அனைத்து செயற்பாடுகளையும் (கீழே வழங்கப்பட்டிருப்பது போன்று) ஆங்கிலத்தில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வினாடியும் உங்களை நீங்களே "இப்பொழுது என்ன செய்துக்கொண்டிருக்கிறாய்?" என கேள்வியெழுப்பிக்கொள்ளுங்கள். உங்கள் கேள்விகளுக்கு நீங்களே தற்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதனை பதிலாகக் கூறுங்கள்.

What are you doing?
நீ என்ன செய்துக்கொண்டிருக்கின்றாய்?
What are you doing now?
நீ என்ன செய்துக்கொண்டிருக்கின்றாய் இப்பொழுது?

இவ்வாறு காலையிலிருந்து இரவு நித்திரைக்கு போகும் வரை, உங்களது அன்றாட வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் பதிலாகக் கூறி பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து ஒரு வாரம் அப்படியே பயிற்சி செய்துப் பாருங்கள்.

ஒரு வாரத்தின் பின் உங்களுக்கே ஆச்சரியமாக எண்ணற்ற ஆங்கில வார்த்தைகள் உங்கள் மனதில் பதிந்திருக்கும். அவ்வாறே ஆங்கிலத்தில் சரளமாக பேசும் பயிற்சியையும் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இது ஒருவித "Practical Training" பயிற்சி முறையாகும்

சரி, பயிற்சியை தொடருங்கள்.

வாக்கிய அமைவுகள்

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Verb with ing +
1. I + am + doing a job
2. He/ She/ It + is + doing a job.
3. You/ We/ They + are + doing a job.

இவ்வாக்கிய அமைப்புகளில், பிரதான வினைச்சொல்லுடன் "ing" யும் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Verb with ing +
1. I + am + not + doing a job
2. He/ She/ It + is + not + doing a job.
3. You/ We/ They + are + not + doing a job.

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Verb with ing +?
1. Am + I + doing a job?
2. Is + he/ she/ It + doing a job?
3. Are + you/ we/ they + doing a job?

கேள்விகளின் போது "Subject" முன்னால் "Auxiliary verb "துணை வினை  வந்துள்ளதை அவதானியுங்கள்.

கேள்வி பதில்

Are you doing a job?
நீ செய்துக்கொண்டிருக்கின்றயா ஒரு வேலை?
Yes, I am doing a job. (I’m)
ஆம், நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
No, I am not doing a job. (I’m not)
இல்லை, நான் செய்துக்கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.

Are you speaking in English?
நீ பேசிக்கொண்டிருக்கின்றாயா ஆங்கிலத்தில்?
Yes, I am speaking in English. (I’m)
ஆம், நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.
No, I am not speaking in English. (I’m not)
இல்லை, நான் பேசிக்கொண்டிருக்கின்றேனில்லை ஆங்கிலத்தில்.

Are you going to school?
நீ போய்க்கொண்டிருக்கின்றாயா பாடசாலைக்கு?
Yes, I am going to school. (I’m)
ஆம், நான் போய்க்கொண்டிருக்கின்றேன் பாடசாலைக்கு.
No, I am not going to school. (I’m not)
இல்லை, நான் போய்க்கொண்டிருக்கின்றேனில்லை பாடசாலைக்கு.

பயிற்சி

கீழே உங்கள் பயிற்சிக்காக 50 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை திரும்பத் திரும்ப வாசித்து பயிற்சி செய்யுங்கள். நான் மேலே கூறியது போல், "What are you doing now?" என நீங்களே உங்களை கேள்வி கேட்டும், அதற்கான பதிலாக கீழுள்ள வாக்கியங்களை பதிலளித்தும் பயிற்சி செய்யலாம். இது ஒரு எளிய பயிற்சி முறையாக இருக்கும். உங்கள் நண்பர் அல்லது சகோதர் உடன் இணைந்து ஒருவர் கேள்வி கேட்டும் மற்றவர் பதிலளித்தும் கூட பயிற்சி செய்யலாம்.


1. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

2. I am going to the bathroom.
நான் போய்க்கொண்டிருக்கின்றேன் குளியலறைக்கு.

3. I am brushing my teeth.
நான் துலக்கிக்கொண்டிருகின்றேன் என் பற்களை.

4. I am having a bath.
நான் குளித்துக்கொண்டிருக்கின்றேன்.

5. I am having some tea.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் கொஞ்சம் தேனீர்.

6. I am dressing up.
நான் உடுத்திக்கொண்டிருக்கின்றேன்.

7. I am watching a movie.
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஒரு திரைப்படம்.

8. I am having breakfast.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் காலை உணவு.

9. I am teaching English at the university.
நான் படிபித்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலம் பல்கலைக்கழகத்தில்.

10. I am writing a story.
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கதை.

11. I am traveling by bus.
நான் பயணித்துக்கொண்டிருக்கின்றேன் பேருந்தில்.

12. I am painting a picture.
நான் வரைந்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு படம்.

13. I am living in California
நான் வசித்துக்கொண்டிருக்கின்றேன் கலிபோனியாவில்.

14. I am working.
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்.

15. I am doing my duty.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது கடமையை.

16. I am operating a computer.
நான் இயக்கிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கணனியை.

17. I am driving a car.
நான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன் ஒரு மகிழுந்து.

18. I am asking some questions with them.
நான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் சில கேள்விகள் அவர்களிடம்.

19. I am sharing my lunch.
நான் பகிர்ந்துக்கொண்டிருக்கின்றேன் எனது (பகல்) உணவை.

20. I am working as a team.
நான் வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு குழுவாக.

21. I am talking with my friends.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் எனது நண்பர்களுடன்.

22. I am praying for you.
நான் (கடவுளிடம்) வேண்டிக்கொண்டிருக்கின்றேன் உனக்காக.

23. I am waiting for you.
நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் உனக்காக.

24. I am coming back home.
நான் திரும்பிவந்துக்கொண்டிருக்கின்றேன் வீட்டிற்கு.

25. I am having a body wash.
நான் ஒரு (உடல்) குளியல் எடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

26. I am changing my clothes.
நான் மாற்றிக்கொண்டிருக்கின்றேன் எனது உடைகளை.

27. I am having a cup of coffee.
நான் அருந்திக்கொண்டிருக்கின்றேன் ஒரு கோப்பை கோப்பி.

28. I am reading the newspaper.
நான் .வாசித்துக்கொண்டிருக்கின்றேன் செய்தித்தாள்.

29. I am walking in the street.
நான் நடந்துக்கொண்டிருக்கின்றேன் வீதியில்.

30. I am smoking cigarette.
நான் புகைத்துக்கொண்டிருக்கின்றேன் வெண்சுருட்டு.

31. I am listening to music.
நான் செவிமடுத்துக்கொண்டிருக்கின்றேன் இசைக்கு (பாடலுக்கு).

32. I am cracking jokes with others.
நான் பகிடி விட்டுக்கொண்டிருக்கின்றேன் மற்றவர்களுடன்.

33. I am playing football.
நான் விளையாடிக்கொண்டிருக்கின்றேன் உதைப்பந்தாட்டம்.

34. I am answering the phone.
நான் பதிலளித்துக்கொண்டிருக்கின்றேன் தொலைப்பேசியில்.

35. I am having a rest.
நான் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன்.

36. I am studying for the exam.
நான் படித்துக்கொண்டிருக்கின்றேன் பரீட்சைக்காக.

37. I am reading a book.
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம்.

38. I am watching an English film.
நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு ஆங்கிலத் திரைப்படம்.

39. I am thinking about my future.
நான் நினைத்துக்கொண்டிருக்கின்றேன் எனது எதிர்காலத்தை பற்றி.

40. I am preparing tea.
நான் தாயாரித்துக்கொண்டிருக்கின்றேன் தேனீர்.

41. I am rectifying mistakes.
நான் திருத்திக்கொண்டிருக்கின்றேன் தவறுகளை.

42. I am writing an article.
நான் எழுதிக்கொண்டிருக்கின்றேன் ஒரு கட்டுரை.

43. I am translating English to Tamil.
நான் மொழி பெயர்த்துக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

44. I am improving my English knowledge.
நான் மேம்படுத்திக்கொண்டிருக்கின்றேன் எனது ஆங்கில அறிவை.

45. I am having dinner.
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றேன் (இரவு) சாப்பாடு.

46. I am singing a song.
நான் பாடிக்கொண்டிருக்கின்றேன் ஒரு பாடல்.

47. I am doing my homework.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் எனது வீட்டுப்பாடம்.

48. I am practicing my English.
நான் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன் (எனது) ஆங்கிலம்.

49. I am praying now.
நான் இப்பொழுது பிராத்தனை செய்துக்கொண்டிருக்கின்றேன்.

50. I am sleeping.
நான் நித்திரைசெய்துக்கொண்டிருக்கின்றேன்.

மேலே நாம் கற்ற 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

பகுதி 2

Positive
Subject
+ Auxiliary verb + Verb with ing +
2. He/ She/ It + is + doing a job.

Negative
Subject + Auxiliary verb + not + Verb with ing +
2. He + She/ It/ is + not + doing a job?

Question
Auxiliary verb + Subject + Verb with ing +
2. Is + he/ she/ It + doing a job?

மேலே பகுதி 1 ல் உள்ள 50 வாக்கியங்களை கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யும் படி கூறியிருந்தேன். இப்பொழுது அதே 50 வாக்கியங்களையும் He / She / It போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்துப்பாருங்கள்.

உதாரணம்:

Is he doing a job?
அவன் செய்துக்கொண்டிருக்கின்றானா ஒரு வேலை?
Yes, he is doing a job. (he’s)
ஆம், அவன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை.
No, he is not doing a job. (isn’t)
இல்லை, அவன் செய்துக்கொண்டிருக்கின்றானில்லை ஒரு வேலை.

Is she going to school?
அவள் போய்க்கொண்டிருக்கின்றாளா பாடசாலைக்கு?
Yes, she is going to school. (she’s)
ஆம், அவள் போய்க்கொண்டிருக்கின்றாள் பாடசாலைக்கு.
No, she is not going to school. (isn’t)
இல்லை, அவள் போய்க்கொண்டிருக்கின்றாளில்லை பாடசாலைக்கு.

Is it working?
அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதா?
Yes, it is working. (it’s)
ஆம், அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றது.
No, it is not working. (isn’t)
இல்லை, அது வேலை செய்துக்கொண்டிருக்கின்றதில்லை.

கவனத்திற்கு

It’s
It + is என்பதன் short form காவே It's பயன்படுகின்றது.

It’s
It + was என்பதன் short form ஆகவும் It's பயன்படும்.

It’s been
It + has been என்பதன் short form ஆக It's been என பயன்படும். (இவ்வாறான சந்தர்ப்பங்களில் " It's" உடன் "been" இணைந்து பயன்படுவதை அவதானிக்கலாம்.)

Its
Its  "இதனுடையது" என்று பொருள்படும்.

பகுதி 3

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் 50 வாக்கியங்களை you, we, they போன்ற சொற்களைப் பயன்படுத்தி கேள்வி பதில் வாக்கியங்கள் அமைத்து பயிற்சி செய்யலாம்.

Positive
Subject + Auxiliary verb + Verb with ing +
3. You/ We/ They + are + doing a job.

Negative
Subject + Auxiliary verb + Verb with ing +
3. You/ We/ They + are + not + doing a job

Question.
Auxiliary verb + Subject + Verb with ing +
3. Are + you/ we/ they + doing a job?

உதாரணம்:

Are they doing any job?
அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களா ஏதேனும் வேலை?
Yes, they are doing a job. (they’re)
ஆம், அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள் ஒரு வேலை.
No, they are not doing a job. (aren’t)
இல்லை, அவர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்களில்லை ஒரு வேலை.

Are they speaking in English?
அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களா ஆங்கிலத்தில்?
Yes, they are speaking in English. (they’re)
ஆம், அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஆங்கிலத்தில்.
No, they are not speaking in English. (aren’t)
இல்லை, அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்களில்லை ஆங்கிலத்தில்.

Are we going to school?
நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோமா பாடசாலைக்கு?
Yes, we are going to school. (We’re)
ஆம், நாங்கள் போய்க்கொண்டிருக்கின்றோம் பாடசாலைக்கு.
No, we are not going to school. (aren’t)
இல்லை, நாங்கள் போய்க்கொண்டிருக்கவில்லை பாடசாலைக்கு.

நிகழ்காலத் தொடர்வினை (Present Continuous) வாக்கியங்கள், ஒரு செயல் அல்லது நிகழ்வு தற்பொழுது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்த பயன்படும் வாக்கியங்களாகும். கீழே உள்ள வரைப்படத்தைப் பாருங்கள்.


இந்த நிகழ்காலத் தொடர்வினையை நான்கு விதமாக வகைப் படுத்தலாம்.

1. At the time of speeches அதாவது மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று, ஒரு செயல் அல்லது நிகழ்வு பேசப்பட்டுக்கொண்டிருக்கும் போது:

எடுத்துக்காட்டாக:

I am reading a book at the moment.
நான் வாசித்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு புத்தகம் இப்பொழுது (இந்த வினாடி). (அதாவது செயல் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது.)

2. Temporary Situations தற்காலிகச் சூழ்நிலைகளின் போது:

எடுத்துக்காட்டாக:

At school, we are studying about the classical languages in the week.
பாடசாலையில், நாங்கள் படித்துக்கொண்டிருக்கின்றோம் செம்மொழிகளை பற்றி இவ்வாரம்.

இதில் "படித்துக்கொண்டிருக்கின்றோம்" என்பது "நிகழ்காலத் தொடர்வினை" என்றபோதும் "இவ்வாரம்" என்பது இவ்வாரம் முழுதும் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கின்றோம் என குறிப்பதை அவதானிக்கவும்.

3. Planned activities (Future Reference) இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையை குறிக்கும்.

எடுத்துக்காட்டக:

I am coming tomorrow.
நான் வருகின்றேன் நாளை.
நான் வந்துக்கொண்டிருக்கின்றேன் நாளை.

இவ்வாக்கியத்தை சற்று கவனியுங்கள். இவ்வாக்கியத்தில் "I am coming" என்பது "நான் வந்துக்கொண்டிருக்கின்றேன்." என "நிகழ்காலத் தொடர்வினை" போல் கூறப்பட்டாலும், இதனுடன் tomorrow "நாளை" எனும் ஒரு சொல்லும் இணைந்து பயன்படுவதால் இவ்வாக்கியம் ஒரு திட்டமிடப்பட்ட செயலை குறிப்பிடப் பயன்படும் எதிர்கால வாக்கியமாகும்.

For Future Reference:

tomorrow
next week

4. To describe repeated action திரும்பத் திரும்ப இடம்பெறும் அல்லது நடைபெறும் ஒரு செயலை விவரித்தலின் போது:

எடுத்துக்காட்டாக:

My brother always interrupting me when I study.
எனது சகோதரன் எப்போதும் இடைஞ்சல் செய்துக்கொண்டேயிருக்கின்றான் நான் படிக்கும் பொழுது.

குறிச்சொற்கள் (Signal words)

now
at the moment
today

this week

சரி! பயிற்சிகளை தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

நன்றி!

அன்புடன்

Download As PDF

35 comments:

  1. மிக‌வும் இல‌குவான‌ முறையில் விளக்க‌ம் அழித்துள்ளீர்க‌ள். ந‌ன்றி .உங்க‌ள் ப‌ணி தொட‌ரட்டும்

    ReplyDelete
  2. - Anonymous

    மிக்க நன்றி அனானி நண்பரே!

    ReplyDelete
  3. Dear Sir,
    Thanks a lot for this very essay and simple FREE English course. Many many thanks for your generous heart.
    cq;fs; kdpjneag;gzpj; bjhlu thH;j;Jf;fs;!

    jebasudar

    ReplyDelete
  4. IN THIS CHAPTER 5 I HAVE I CONFUSE PLEASE EXPLAIN TO ME
    I AM HAVING SOME TEA.WHY I CAN'T WRITE I AM DRINKING SOME TEA? WHATS THE DIFFERNT?

    ReplyDelete
  5. Hi Arun anna,
    Present continuous Tense or Present Prefect continuous erandukum vithiyaasam kulappamaaka ullathu. eppadi ilakuvaana muraijil pirithu arivathu.?

    ReplyDelete
  6. I am having dinner. this sentence
    I am eating dinner i thing caret can you explain please ?

    ReplyDelete
  7. Good work Mr.Arun. I recommend everybody to read your blog

    ReplyDelete
  8. this is my first time visiting your site it is good

    ReplyDelete
  9. Im Bhuvaneswari
    from Salem,T.Nadu, India.

    Recently I saw your blog.
    It is very useful to me.
    You R done a great job Sir.
    Vaalkha Valamudan!

    ReplyDelete
  10. முஹம்மது நபி (ஸல்)சொன்னார்கள், உங்களில் சிறந்தவர் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே, சகோ.அருண் அதை நீங்கள் செய்கிறீர்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மிகவும் ஒரு இலகுவானபயிற்சி முறையாகும் Serve the most best

    ReplyDelete
  13. best useful. serve the most best

    ReplyDelete
  14. sir
    I want to say" i am fasting this whole month " in present continous
    shall we say "I am fasting this month"
    pls correct me if i am wrong

    ReplyDelete
  15. my brother is always interrupting ena varatha? arun avarkale please answer it.

    ReplyDelete
  16. I can't Download as a PDF file...What should i do?

    ReplyDelete
  17. i am first time saw ur website... really good site for english learners..

    ReplyDelete
  18. I Got Your Materials ..Thank u for this . :) .. it ll be use for me to learn eng .. i ll Learn English fully and then i ll cme back and ll say to thank u Once again ...

    ReplyDelete
  19. I Got Your Materials .. Thank You for this . :) . i ll Learn Eng and then i ll cme back and say to Thank You ...

    ReplyDelete
  20. thanks very simply and useful

    ReplyDelete
  21. I really thank you sir , because the wonderful opportunity to others , so always you great a done a job.

    ReplyDelete
  22. Arun you done a great job thank you, thank you, thank you so much

    ReplyDelete
  23. . I am asking some questions with them.
    நான் சில கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அவர்களிடம்.with them இற்கு பதிலாக from them பாவிக்கலாமா?

    ReplyDelete
  24. I have got this concepts. Thanks Arun. I am going to proceed exercise tomorrow.

    ReplyDelete
  25. 11. I am traveling by bus.
    நான் பயணித்துக்கொண்டிருக்கின்றேன் பேருந்தில்.

    நான் பயணித்துக்கொண்டிருக்கின்றேன் பேருந்தால்.

    இவற்றுள் எது சரியானது?????

    ReplyDelete
  26. Hi sir one small doubt .what kind of different in I want and I need pls tell me

    ReplyDelete
  27. நான் பயணித்துக்கொண்டிருக்கின்றேன் பேருந்தில் - This is correct.

    ReplyDelete