இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. இதில் அனைத்து "Grammar Patterns" களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம்
எடுத்துக்காட்டாக, "I do a job" எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்ப்போமானால், "நான் ஒரு வேலை செய்கின்றேன்." என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் "நான் செய்கின்றேன் ஒரு வேலை." என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால்; ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் விளக்கத்தையும் எளிதாக விளங்கிக் கற்கலாம் என்பது எமது கருத்தாகும்.

இங்கே "do a job" எனும் ஒரு வார்த்தையை இன்றையப் பாடமாக எடுத்துக்கொள்வோம். இவ்வார்த்தையின் தமிழ் அர்த்தம் "செய் ஒரு வேலை" என்பதாகும். இதை "நான் செய்கின்றேன் ஒரு வேலை, நான் செய்தேன் ஒரு வேலை, நான் செய்வேன் ஒரு வேலை" என ஒரே வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் அதிவிரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பயிற்சி முறையாகும்.
do a job
1. I do a Job.
நான் செய்கிறேன் ஒரு வேலை.
2. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
3. I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.
4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.
5. I will do a job.
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.
6. I won't do a job.
நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.
7. Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.
8. I am not doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.
9. I was doing a job.
நான் செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.
10. I wasn't doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.
11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.
12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.
13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.
14. I was going to do a job.
நான் செய்யப் போனேன் ஒரு வேலை.
15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை
17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.
19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய்ய முடிந்தது ஒரு வேலை.
21. I couldn't do a job.
22. I was unable to do a job.
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.
23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.
24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.
25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.
26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை
27. I have been able to do a job. (Perfect Tense பார்க்கவும்)
[சற்றுமுன்பிருந்து - தற்போதுவரை] எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.
28. I had been able to do a job.
[அக்காலத்திலிருந்து - ஒரு கட்டம்வரை] எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.
29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.
32. I must do a job.
நான் (கட்டாயம்) செய்ய வேண்டும் ஒரு வேலை.(அழுத்தம்)
33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யக் கூடாது ஒரு வேலை.
34. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)
35. I shouldn't do a job.
நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை.
36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)
37. I don't mind doing a job.
எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை.
38. I have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.
39. I don't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
40. I had to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.
41. I didn't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.
42. I will have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.
43. I won't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.
44. I need to do a job.
எனக்கு அவசியம் செய்ய (வேண்டும்) ஒரு வேலை.
45. I needn't to do a job.
45. I don't need to do a job.
எனக்கு அவசியமில்லை செய்ய ஒரு வேலை.
46. He seems to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.
47. He doesn't seem to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.
48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.
49. He didn't seem to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை
50. Doing a job is useful.
செய்வது(தல்) ஒரு வேலை பிரயோசனமானது.
51. Useless doing a job.
பிரயோசனமில்லை செய்வது ஒரு வேலை.
52. It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.
53. I had better do a job.
எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.
54. I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.
55. I didn't make him do a job.
நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை
56. To do a job, I am going to go to America.
செய்வதற்கு ஒரு வேலை, நான் போகப் போகின்றேன் அமெரிக்காவுக்கு.
57. I used to do a job.
நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.
58. Shall I do a Job?
நான் செய்யவா ஒரு வேலை?
59. Let’s do a job.
செய்வோம் ஒரு வேலை.
60. I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.
61. I don't feel like doing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.
62. I felt like doing a job.
எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.
63. I didn't feel like doing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.
64. I have been doing a job.
நான் [அன்றிலிருந்து - தற்போதுவரை] செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.
65. I had been doing a job.
நான் [அன்றிலிருந்து - ஒரு கட்டம்வரை] செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
66. I see him doing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.
67. I don't see him doing a job.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.
68. I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.
69. I didn't see him doing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.
70. If I do a job, I will get experience.
நான் செய்தால் ஒரு வேலை, எனக்கு கிடைக்கும் அனுபவம்.
71. If I don't do a job, I won't get experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை, எனக்கு கிடைக்காது அனுபவம்.
72. If I had done a job, I would have got experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை, எனக்கு கிடைத்திருந்திருக்கும் அனுபவம். (செய்யவும் இல்லை; கிடைக்கவும் இல்லை)
73. It is time I did a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.
கவனத்திற்கு:
எடுத்துக்காட்டாக, மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடத்தில், "do a job" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "doing a job" என வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது அவ்விடங்களிலெல்லாம் பிரதான வினைச்சொல்லுடன் 'ing' யும் இணைத்து பயன்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டிய இலக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். அவ்விலக்கங்களின் போது எப்போதும் பிரதான வினைச் சொல்லுடன் "ing" யையும் இணைத்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.
உதாரணம்:
speak in English
speaking in English. என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.
Homework:
கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 விதமாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது சத்தமாக வாசித்து வாசித்து எழுதிப் பயிற்சி செய்யுங்கள். அதுவே எளிதாக உங்கள் மனதில் பதியக் கூடியதாக இருக்கும்.
1. I speak in English.
நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்.
2. I write a letter.
நான் எழுதுகிறேன் ஒரு கடிதம்.
3. I play cricket.
நான் விளையாடுகிறேன் துடுப்பாட்டம்.
4. I fill up the form.
நான் நிரப்புகிறேன் விண்ணப்பம்.
5. I go to school.
நான் போகிறேன் பாடசாலைக்கு.
6. I do my homework.
நான் செய்கிறேன் எனது வீட்டுப்பாடம்.
7. I read a book.
நான் வாசிக்கிறேன் ஒரு பொத்தகம்.
8. I travel by bus.
நான் பயணம் செய்கிறேன் பேரூந்தில்.
9. I look for a job.
நான் தேடுகிறேன் ஒரு வேலை.
10. I ride a bike.
நான் ஓட்டுகிறேன் ஒரு உந்துருளி.
கவனிக்கவும்
உதாரணமாக "speak in English" எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால், அதை:
I speak in English.
நான் பேசுகிறேன் ஆங்கிலத்தில்.
I am speaking in English.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.
I spoke in English.
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.
I didn't speak in English.
நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.
I will speak in English.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில்.
என (மேலே எடுத்துக்காட்டியுள்ளதைப் போன்று) அதே இலக்க வரிசைக் கிரமத்தில் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.
Long Forms = Short Forms
do + not = don’t
does + not = doesn’t
did + not = didn’t
will + not = won’t
was + not = wasn’t
were + not = weren’t
can + not = can’t
could + not = couldn’t
have + not = haven’t
has + not = hasn’t
had + not = hadn’t
need + not = needn’t
must + not = mustn’t
should + not = shouldn’t
would + not = wouldn't
இப்பாடத்துடன் தொடர்புடைய இரண்டு கிரமர் பெட்டன்களின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.
மற்றும் இப்பாடத்தில் நாம் கற்ற 73 வாக்கியங்களும் (அதே இலக்க வரிசைக் கிரமத்தில்) ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்பொழுது அதனதன் பயன்பாடுகள் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் விரிவாக கற்கலாம். விரிவாக எழுதப்பட்ட பாடங்களுக்கு குறிப்பிட்ட வாக்கியத்துடன் இணைப்பு வழங்கப்படும். அவ்விணைப்பை சொடுக்கி குறிப்பிட்டப் பாடத்திற்கு செல்லலாம். பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு பாடங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிதக்கோப்புகளை சொடுக்கி பயிற்சி பெறுங்கள்.
இந்த கிரமர் பெட்டன்களைத் தவிர, மேலும் சில கிரமர் பெட்டன்கள் உள்ளன. அவை உரிய பாடங்களின் போது வழங்கப்படும்.
மேலுள்ள ஆக்கங்களையும் பார்க்கலாம்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
"ஆங்கில இலக்கணம்" என்றவுடன், அது கடினம் எனக் கருதாமல், மேலே கூறப்பட்டுள்ள விதிமுறைகளின்படி தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். அவை உங்கள் மனதில் பதியும் வண்ணம் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். ஆங்கிலத்தில் "Well Begun is Half Done!" என்பர், அதன் பொருள் "எதனையும் முறையாக ஆரம்பித்து விட்டாலே பாதி வெற்றி" என்பதுதான். எனவே இந்த முதல் பாடமே உங்களுக்கான சிறந்த ஆரம்பமாக இருக்கட்டும்! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முடிந்தவரை அச்சமின்றி சத்தமாகப் பேசி பயிற்சி செய்யுங்கள். அதுவே கூடிய விரைவில் இயல்பாக ஆங்கிலம் பேசும் ஆற்றலை உங்களுக்கு வழங்கும்.
மீண்டும் கூறிக்கொள்கின்றோம். இது மிகவும் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான ஓர் பயிற்சி முறையாகும்.
சரி பயிற்சிகளைத் தொடருங்கள்!
மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்!
எமது இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி!
அன்புடன்
அருண் HK Arun
Social Media Links: Facebook | Twitter | Pinterest | Google Plus
337 comments:
«Oldest ‹Older 201 – 337 of 337realy super sir.i need how to use would in simple past future.plz give more example each one sir.this is my mail id sir muralimca42@gmail.com
hi friends.,, please try to comment in English.. this help to learn more for us.....
i really agree your social work for new learning person; but i request you to put a fully subject in one pdf file. which is download & learning.
Super...
Dear Arun,
please send me PDF files because i have not internet connection please send me sir ..
Mail ID:ramesharidass@gmail.com
Hi sir,
I'm RENUKa, Ungalin karuthugalum lessons um naan ethirparthadhu polave ullagdhu mikka nandri sir...
Naan aangilathil pesa mudiyuma endru yengi kondirudhen, idhai padithu parthadhum ungal karuthugalai parthadum enakku pudhu dhairiyam varugiradhu....
Naan nichayamaga idhai paiyirchi seidhu parpen sir... thank you very much Arun sir....
Adhutha comments English la kodupen nu nambugiren sir... Konjam konjam dhan pesuven ipo mulusa pesa dhairiyam vadhurukku
i speak difficult in English grammer. so help me grammer sentence and quickly learn.
Thank u
Kumaravel L
அண்னா உண்னமயீல நல்லா இருக்கு ஆணால் நீங்கல் ஓவ்வரு ஆங்கில எழத்திக்கும் தமிழ் அருத்ம் அடீப்படயில் தந்தால் மிகவூம் இழகுவாக இருக்கு அண்னா plese adippadijeel irunthu pogka anna ennakku ஆங்கில ELUTHTHUKKALUM VILAKKAM THEREYATHU NIGKAL APPADE SEITHAL NAN MADDUM ALLA ELLORUM ஆங்கிலம் KADKALAM
அண்னா உண்னமயீல நல்லா இருக்கு
உங்கள் சேவைக்கு மிக்க நன்றி , உங்கள் உழைப்புக்கு வாழ்துக்கள்
This is very useful for us. Thanks for your effort
Thank you for your help sir :)
good work more student using your web. good
super... thank u sir...
அருண் அவர்களுக்கு நன்றி. வருத்தம் என்னவென்றால் இந்த தளத்தை நான் 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் பார்க்கிறேன். நான் எவ்வளவு பின்தங்கி உள்ளேன் என்பது தெரிகிறது. இனி உங்களது பதிப்பு அனைத்தயும் படிக்க உள்ளேன். நன்றி
Its really useful..
Thank you arun.
i need meaning for this word செய்கிறேனில்லை
This helping fore thank you
Hi sir,
I have a doubt about "can"
can = ennal (or) can = ennaku,
which is exact tamil meaning,
as you said( I can do.=ennaku seiya mudiyum. )
( Can i do?=ennaku seiya mudiyuma? )
as per my understanding
( I can do. = ennal seiya mudiyum. )
( Can i do? = ennal seiya mudiyuma? )
if you have time could you explain me?
thanks for educating TAMIL.
hi arun sir, this is srini..I am getting very useful through this site...Thank you...
Thanks a lot sir. From today on words i will be follow your blog.
very useful and Help full..thankx
very usefull and help full for my study..
thankx.....
your trying is going to zenith
its newest way
thank u sir
hi sir,
I have a doubt,
As i know that "i can do a job"
Ennal seiyamudiyum oru velai
But you tells Ennaku seiyamudiyum oru velai
what is the difference between Ennal and Ennaku
Which is correct format?
It is really useful for any young reader who wants to learn the language
Dr. Raja
ungal sevai thodarattum
very useful
thank u nanba
Hai arun sir, As a english literature student i want to speak in english without tension about the grammar mistake.... sometimes i can't speak in english for nervousness... In this time i type this sentences with so many doubts. how can i improve my english knowledge... pls mail me sir...
Hai sir,
I am Jayanthi. I am newly joined this course, just before one day.
I think this course will be useful so very thanks for you provided this course.
Now i practised Grammer Pattern I
I have some doubts so pls clarify it:
Do you go to job,Is it correct?
'We' described about ourselves, so we ask questions ourselves is it?
Like, Do we wake up too early every day?
Yes, we wake up too early every day
No, we dont wake up too early every day
Do we brush our teeth twice a day?
Yes, we brush our teeth twice a day
No we dont brush our teeth twice a day
Do we have a bath.
Yes, we have a bath
No we dont have a bath.
Do we have breakfast?
Yes we have breakfast
No we dont have breakfast
Do we travel by bus?
Yes, we travel by bus
No we dont travel by bus
Do they brush their teeth twice a day?
Yes they brush their teeth twice a day
No they dont brush their teeth twice a day
Please rectify my doubts and correct above sentence.
Thank you Sir.
Dear sir the sentence
52. It is better to do a job.
53. I had better do a job.
The first one have the conjunction "to" but the second one haven't "to". Why?
Please explain it
Hi Mr.Arun,
Today only i saw ur blog..nice work.I have planned to learn through ur site.Hope it will be useful.
it is useful to basic learners...your homework idea is awesome.. congratulation
நன்றிகள் பல கோடி
HatsOff Bro..:)
மிக்க நன்றி
I have been searching like this site. it is very useful to learn for Tamil people
Sir enakku ENGLISH karka vendum naan eppadi padichalum enaku suthama English varala enakku ethavathu Idia kudunga Sir please...............
Very useful THANKS
This file send. I am. Mail Id
மிகவும் பயனுள்ள வலைதளமாக கருதுகிறேன். ஆங்கிலம் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு சிறந்த வலைதளமாக இருக்கிறது. இவ்வலைதளத்தை அமைத்தவருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் இன்று தான் இந்த வலைத்தளத்தை காண்கின்றேன். ஆங்கிலம் கற்பதற்கு எனக்கு மிகவும் பயனுள்ள தளம் என நம்புகின்றேன்.
As some of the learners said that both the form of tamil sentence is required . if you give both together it will be easy for us.
anbu tholar avargalukku vanakkam.
neengal oru android application ready pannalame....
Its very useful. Thanks
I have doubt below sentence for the details given below.
What a difference between I & Iam .
I am doing a job
I am able to do a Job
I doing a job
Pavithra.
Very Good jobs, but nowadays most of people using android O/S, please do something to use android platform
Thanks again
Shriram, kuwait
I had better do a job enakku nallathu saivathu oru velai itaiye"' I had better play cricket " enpathu sarithane illai better to play cricket enru ezhutha ventuma plz konjam sollunga
dear sir, what is meant by "I will have done a job" in tamil?
superp
It is very very useful for me. Thanks for this.....
Very Nice... i Will speak English Quickly..Thanks
hi sir vanakkam
hi sir ennoda padam partiya santhegangalai nan eppadi ungalidam ketpatu konjam sollunga
Vanakkam Sir, Ungal Muyarchi Migavum Yelimaiyagavum Arumaiyagavum Ulladhu Adharkku Ennudaiya Mudhal Nandri.... Aanal Yenakku Oru Kurai Ulladhu Adhaium Thangalthan Theerka Vendum, Naan Nandraga Aangilam Padipen and Pizhai Illamal Yezhudhuven, Aanal yenakku Yendha Oru Sollinudaiya Arthamum Theriyadhu (Udharanamaga) if, cant, that, they, will idhai pondra yedharkum arththam theriya villai naan ivaigalai nangu therindhu aangilam karkka vendum neengalthan yenakku udhava vendum pls pls pls..........
Sir Vanakkam, thangalin muyarchikku yennudaiya nandri, naan aangilam nandraga ezhudhuven, padippen, aanal yenakku yendha vaarthaikkum arththam theriya villai idhadhan yenadhu periya pirachinaiyaga ulladhu, neengal yenadhu indha pirachanaiku theervu solli naan aangilaththil muzhumaiyaga pesa yenakku udhavumaru thaazhmaiudan kettukkolgiren..... pls help me sir
மிகவும் பயனுள்ளதும் இலகுவனதுமான ஆங்கில கற்கைக்கு உகந்த இணையத்தளம்.
பயனுள்ள உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Dear Mr. Arun. I try to download as PDF. But one PDF as been downloaded PDF name is domain_blocked how can I download to the PDF. Kindly help me.
tank u
thank u
fantastic.very use full website.thanks a lot.
Sir I am working in pvt. company. I have finished in B.Com. (Correspondence). I steadied upto twelth std only tamil medium. So, I know English very little bit only. but i eagerly to learn english. today only i saw your site. so i started to read today. I think it is turning point in my life. I hope in future i am also very good speaking english. thank you sir,
very informative and useful system
dear arun sir,
37. I don't mind doing a job. idhil "be" verb illai. apadi iruka "ing" varuvadharkana kaaranam enna. please ennudaiya doubt clear panna mudiyuma?
ungaluku neram irundhal enaku idhan badhilai "ggrs5882@gmail.com" ku anupa mudiyuma. nan house wife. my son L.K.G padikkiran. school meeting la pesa doubts keka spoken english kathukiren.
so many more thanks for your kind job.
neengal en guru . adhanal thalai vanangugiren , ungal pani sirakka.
nandrigal pala
ittanai naal idhai paarkaama vittome enra varuttam mikka magilchi ..... idhai payan paduttu kolven nanri anbudan NArendra
thanks i cleared my doubts
உங்களுடைய சேவைக்கும் நன்றி. மென்மேலும் சேவை தொடர வாழ்த்துக்கள்.
Thank you
இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.
hello mr arun . i want to download this lesson. pls help me
I Have One Doubt........ What meaning of "MY DO".............
It is really fantastic. It will be helpful to everyone. Once again, Thanks a lot
How to use comma and full stop in a sentence and to start with capital letters forment. Please explain
Hi Sir,
You have done a very good job I really appreciate as i like people learn English Easy after came your website only Please continue your wonderful job All the best
Very Big thanks to you sir
By Pradeep
hi! arun i had a huge trouble with make correct sentence. it was really use full for me, i have to really thanks to you
Sir , I have no words to thank you and Explain about the Blog. It's wonderful and Marvelous.
May God Bless you Abundantly.
Pastor: J.Devaraj
Coimbatore.
என்போன்ற ஆங்கலம் கற்க விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ள பாடமாக அமைந்துள்ளது பாடம் தமிழர்களுக்கு சேவை செய்யும் தங்களுக்கு எனது மனமார்ந்த மிக்க நன்றி வணக்கம்....
Super sir
மிக்க பயனுள்ள பதிவு , ரெம்ப கால தமதமாக் வந்துள்லேன்
இதை டவுன்லோட் செய்தால் இவ்வாறு வருகிறதுDomain blocked!
We're sorry, you can't convert pages on this domain with our service, as it has been blocked for free
wow very important site continue .
sir,
60. //i feel like doing a job// i don't understand tamil meaning
Thalaiva you are the great aasirvathampannungga......
Good work Arun , I really liked your lessons , i do often check this blog for any clarification,
But i have a small concern over here, but it’s left up to you for taking it to consideration.
please check the below sentence.
68. I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை
As you say that you are exactly translating word to word from English then this below line should be the right word for the English word ”I saw him doing a Job”
நான் பார்த்தேன் அவன் செய்துகொந்டிருப்பதை ஒரு வேலை
அவன் வேலை செய்துகொந்டிருப்பதை நான் பார்த்தேன்(perfect when we understands it in tamil)
so in some of the places you are giving wrong meaning for the words which will be very much confusing for beginners, please try changing it if you likes to do so.
Thank you,
David
Thank you very much brother.. It should be very useful to people who are interested to learn english.
thank you sir
ஆங்கில மொழியிலிருந்து தமிழுக்கு மாறும்போது அதன் வாக்கியம் மாறும். example 52. It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.
It should be ஒரு வேலை செய்வது நல்லது.
மிக்க நன்றி , மிகவும் எளிமையாக உள்ளது, முதலில் ஆங்கிலம், பிறகு ஆங்கிலம் வழி தமிழ் மொழியாக்கம் கொடுதுள்ளிர்கள் இதில் கடைசியாக ஆங்கிலம் வழி சரியான தமிழ் மொழியாக்கம் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
நன்றி!
sir unga lessons romba easy ya erukku nalla puriuthu ana close pnnathum yellam maranthu poguthu sir yenna pannatum avlo words apdi niyabagam vachu use pandrathu pls sollunga
super sir thank you
very useful site to learn english.Thank you
Dear Mr. Arun...!!!
Very Thanks For Your Easy English Course...!!! So Many, My Kind of Our People [ Eating ] Your Sweet Easy English Course. Really We Are All Proud. One More Time Thanks & Respect You Sir.
Excellent & Congratulation Sir....!!!
Regards.
Asan Hakkim
Kilakarai - Ramnad Dist.
Hello sir i need not um i do not need um onda sir
அருமை
How to say ? I don't know ? Lot of thanks
மிகப்பெரிய பணி. உங்கள் தொண்டுணர்ச்சிக்குத் தலைவணங்குகிறேன்.
அன்புடன்
ச.ஆறுமுகம்
thank you for your great work
aangilam katru kollum aarvalarkalukku sirantha aakkam
mikka nandri
thank u sir i am a tamil medium student bt i have chosen bachelor of technology of bio technology .........i was seeking for learn english i could not find nothing ....that the time i did find your website very thank u sir
Very helpful in English Speak
Very helpful in English speak
Its really good sir. Thanks for your help. THANKS A LOT.
very use full website. thank you very much.
Sir,It is very helpful to the Tamil people to know English easily.I am preying Lord MURUGAN for long living to you since more & more help to others like this.Thanking you Sir!
I ask one doubt? Is it correct "I did not done a job".
Sir,It is very helpful to the Tamil people to know English easily.I am preying Lord MURUGAN for long living to you since more & more help to others like this.Thanking you Sir!
I ask one doubt? Is it correct "I did not done a job".
Sir, I have one doubt.Is it correct " I did not done a job"
nice this is very good useful site
It is very good job, very useful this site, please continue sir,
3. I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.
4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.
I Have Confusion for this sentences ... Do is present , Did is Past ..May I Know ,Why do u Mention '' I didn't do a Job "
Nan kittadiyilirundhu seidhu kondirukiraen oru velai..I have been doing a working...kittadiyilirundhu na yenna artham sir..pls konjam sollunga
Hi ... ovovoru english wordkum tamil meaning poturukinga.
ex: I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.
ipadi translate panathum engaluku usefulla iruku. exact tamil meaningum understand panikirom. but sometimes pesum pothu ipadi pesamatom. apo nama think panamudiyathu ithuku ipadi than pesavendum endru. so athukum translation enanu podalamea .
for ex: I did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.
நான் ஒரு வேலை செய்தேன்.
ivaru potal engaluku wordukum meaning purium, sentenceskum meaning purium.
Can you do this for us please.
Thank you so much for your blog. Its very useful for us .
Raja
Thank you arun sir.I am very poor of the talking English but still now trying to improve my English knowledge.very helpful of your notes arun sir. please continue this job sir .
Really thank you sir
மிக்க நன்றி.... தாய் மொழி அடிப்படை இல்லாமல் எந்த மொழியும் கற்க இயலாது என்பதை உங்கள் மூலம் புரிந்து கொண்டேன்.
உங்களால் பலர் பயன்பெற்று இருகிறார்கள்.
உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி .
Hats off to you
AL-HAMDULILLAH THANKS BROTHER IT'S TOO USEFULL TO IMPROVE MY AND OUR FAMILY ENGLISH KNOWLEDGE
SAY AGAIN THANK YOU SO MUCH...............
good wrk bro,,,carry on
Good job, Keep it up.
very nice sir
SIR SUPER BUT SOME TAMIL TRANSLATE MISTAKE IS HERE
super sir... i have no internet facility sir.. i want hard copy..
sir pls can u send me the document in pdf format or other format to my mail id.... poongodi.kandhasamy@gmail.com
thank youu sirr......
really super
THANKS
Thank u Sir
Superb teaching method there is no need of dictionary............thnk u very much sir......
really supper sir, thanks your teaching, well sir usefull for me sir,,,,,
Wonderful
great. be blessed
Sir,I have this doubt for long time.
While speaking about possibility of some one come in the future.
ex.If he come what we will do.(Here my question is whether we should use come or came.)
amazing sir....super
அற்புதமான பயிற்சிகள். comments களுக்கு பதில் சொல்லும் உன்னதம்....... it's worth and wealth on the Earth.
thankyou for this explanation
It's useful good learning..thank u sir
vakiyangalai korvaiyaga ezhuthuvathil nan siramapadukiren
therintha varthaikale thirumba thirumba ninaivil varukirathu
pl advice me.
Beula said, I'm very happy. Because, your grammar patterns is very useful for peoples. So, thank you sir
Post a Comment