Showing posts with label Tamil English Glossary. Show all posts
Showing posts with label Tamil English Glossary. Show all posts

மனித உடல் உறுப்புகள் (Parts of the human body)

மனித உடம்பில் இருக்கும் உறுப்புகளுக்கான ஆங்கிலச் சொற்கள் அநேகமாக பலரும் அறிந்தவைகளாகவே இருக்கும். அதில் சில உறுப்புகளின் பெயர்கள் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம், புதிதாக தெரிந்துக்கொள்ள விரும்புகின்றவர்களும் இருக்கலாம். அதனால் இன்றையப் பாடத்தில் மனித உடலின் உறுப்புகளின் பெயர்களை தமிழ் விளக்கத்துடன் கற்போம்.

சரியான உச்சரிப்பு பயிற்சியை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

படங்களை பெரிதாக பார்க்க விரும்புகின்றவர்கள் படங்களின் மேல் சொடுக்கிப் பார்க்கலாம்.


No:Englishதமிழ்
1Headதலை
2Eyesகண்கள்
3Earsகாதுகள்
4Cheekகன்னம்
5Noseமூக்கு
6Mouthவாய்
7Neckகழுத்து
8Nippleமுலைக்காம்பு
8AShoulderதோள்/புயம்
9Chestமார்பு/நெஞ்சு
9ARibவிலா (எலும்பு)
10Breastமார்பு (பெண்)
11Armகை
12Elbowமுழங்கை
13Abdomenவயிறு
14Umblicus/Bellybuttonதொப்புள்/நாபி
15Groinsகவட்டி
16Wristமணிக்கட்டு
17Palmஉள்ளங்கை
18Fingersவிரல்கள்
19Vegina/Vulvaயோனி/புணர்புழை
20Penisஆண்குறி
20ATesticle/scrotumவிரை
21Thighதொடை
22Kneeமுழங்கால்
23Calfகெண்டைக்கால்
24Legகால்
25Ankleகணுக்கால்
26Footபாதம்
27Toesகால் விரல்கள்


No:Englishதமிழ்
28Wristமணிக்கட்டு
29Palmஉள்ளங்கை
30Thumbகட்டைவிரல்
31Little Fingerசுண்டுவிரல்
32Ring Fingerமோதிரவிரல்
33Middle Fingerநடுவிரல்
34Index Fingerசுட்டுவிரல்
35Kneeமுழங்கால்
36Calfகெண்டைக்கால்
37Legகால்
38Lowerlegகீழ்கால்
39Ankleகணுக்கால்
40Toesகால் விரல்கள்
41Toenailsகால்(விரல்) நகங்கள்
42Footபாதம்
43heelகுதிகால்
44Fistகைமுட்டி (மூடிய கை)
45Nailநகம்
46Knuckleவிரல் மூட்டு
47Muscleதசை
48Skinதோல்
49Hairமுடி
50Foreheadநெற்றி
51Eyebrowகண் புருவம்
52Eyelashகண் இரப்பை மயிர்/ கண் மடல் முடி
52AEyelidகண் இரப்பை/கண் மடல்/கண் இமை
53Eyeballகண்மணி
54Noseமூக்கு/நாசி
55Nostrilமூக்குத்துவாரம்/நாசித்துவாரம்
56Faceமுகம்
57Chinமுகவாய்க் கட்டை
58Adam's appleகுரல்வளை முடிச்சு (ஆண்)
59Mustacheமீசை
60Beardதாடி
61Lipஉதடு
62Uvulaஉள்நாக்கு
63Throatதொண்டை
64Molarsகடைவாய் பல்
65Premolarsமுன்கடைவாய் பல்
66Canineகோரை/நொறுக்குப் பல்
67incisorsவெட்டுப் பல்
68Gumபல் ஈறு
69Tongueநாக்கு

மேலே படங்களில் குறிக்கப்படாத சில உடல் உறுப்புகளின் பெயர்கள் கீழே இடப்பட்டுள்ளன.

No:Englishதமிழ்
70Bellyவயிறு (குழிவானப் பகுதி)
71Backமுதுகு
72Backboneமுதுகெலும்பு
73Rib boneவிலாவெலும்பு
74Buttockகுண்டி/ புட்டம்
75Anus/assholeகுதம்
76Skullகபாலம்/மண்டையோடு
77Muscularதசை
78Nerveநரம்பு
79Endocrineசுரப்பி
80Hipஇடுப்பு
81Lungநுரையீரல்
82Heartஇதயம்
83Kidneyசிறுநீரகம்
84Brainமூளை

இப் பெயர்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக் கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் அருண் HK Arun Download As PDF

மரக்கறிகள் (List of Vegetables)

உலகில் விளையும் மரக்கறி வகைகளின் பட்டியல் இங்கே இடப்பட்டுள்ளது. இவற்றில் சகல மரக்கறிகளுக்கான தமிழ் பெயர்கள் இல்லை என்றே நினைக்கின்றேன்.

இருப்பினும் இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை சொடுக்கி அப்பெயருக்குறிய மரக்கறிகளின் நிழல் படங்களைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.


இலஆங்கிலம் தமிழ்
1Alfalfa Sproutsஅல்பல்பா முளைக்கீரை
2Artichokeஆர்றிச்சோக்
3Arugulaஅருகுலாக் கீரை
4Asparagusதண்ணீர்விட்டான் கிழங்கு
5Aubergines/Eggplantகத்தரிக்காய்
6avocadoயாணைக்கொய்யா
7Bamboo Shootsமூங்கில் குருத்து
8Bean Sproutsஅவரை முளை
9Beet Greensஅக்காரக்கீரை
10Beetrootஅக்காரக்கிழங்கு/ சர்க்கரைக் கிழங்கு
11Bell Peppers/ Capsicumகுடைமிளகாய்
12Bitter Gourd பாகற்காய்/ பாவக்காய்
13Bitter Cucumber பாகற்காய் பெரிது
14Bok Choi/ Chinese Cabbageபொக்ச்சோய்
15Borlotti Beansசிகப்பு அவரை
16Bottle Gourd சுரைக்காய்
17bread fruitகொட்டைப்பலா/ ஈரப்பலா
18Brinjalகத்தரிக்காய்/வழுதுணங்காய்
19Brocoli (பச்சை) பூக்கோசு
20Broccoli Rape/ Rapiniகோசுக்கீரை
21Brussels Sproutsகளைக்கோசு
22Butter Head Lettuceஒரு விதக் கோசுக்கீரை
23Cabbageமுட்டைக்கோசு
24Caiguaகைகுவா
25Carrot குருக்கிழங்கு
26Cassava/ Tapiocaமரவள்ளிக் கிழங்கு
27Cauliflowerவெண்பூக்கோசு/ கவிப்பூ
28Celeryசீவரிக்கீரை
29Celtuceஒரு விதத் தண்டுக்கீரை
30Ceylon Spinachசாரணைக்கீரை
31Chayoteசவ்சவுக்காய்
32Cherry Tomatoesகுருந்தக்காளி
33Cilantro/ Coriander கொத்தமல்லி
34Cluster Beans கொத்தவரை
35Collards சீமை பரட்டைக்கீரை
36Cress தளிர்பயறு
37Cucumber வெள்ளிரிக்காய்
38Daikon radishவெண் முள்ளங்கி
39Endive ஒரு வகை கோசு (சலாது)
40Fava bean/ Broad bean அவரை (போஞ்சி)
41Fiddleheadமீனாக்கொழுந்து
42Florence Fennel ஒரு வகைச் சீமைக்கீரை
43Flowering Cabbage(மலர்ப்போன்ற) கோசு
44French beanபிரஞ்சு அவரை (போஞ்சுக்காய்)
45Golden Nuggest Squashஒருவகை சிறியப் பூசணி
46Green Onions/ Spring Onoins வெங்காயத்தாள்(பூ
47Humberg parsley (சிறியவகை) வெண்முள்ளங்கி
48Haricot Beansமெல்லிய அவரை
49Drum stickமுருக்கங்காய்/ முருங்கைக்காய்
50Ironbark Pumpkinகற்பூசணி
Kai-Lan
52Kaleபரட்டைக்கீரை
53Kohlrabiநோக்கோல்
54Kohlrabi Purple நோக்கோல் (ஊதா)
55Kohilaகோகிலத்தண்டு
56Lady's Finger/ Okraவெண்டைக்காய்/ வெண்டிக்காய்
57Leeksலீக்ஸ்
58Lettuceஇலைக்கோசு
59Lettuce Redஇலைக்கோசு (சிகப்பு)
60Lotus rootதாமரைக்கிழங்கு
61Marrow(மிகப்பெரிய வகையான) பூசணி
62Minikin Pumpkinவட்டுப்பூசணி
63Mintபுதினா
64Mizunaமிதுனாக்கீரை
65Pak Choiபச்சோய்
66Parsleyவேர்க்கோசு
67Pasnipsஒரு வகை முள்ளங்கி
68Parwalஒரு வகை சிறியக்காய்
69Plantainகறி வாழை
70Potatoஉருளைக்கிழங்கு
71Pumpkin பூசணிக்காய்/ பறங்கிக்காய்/வட்டக்காய்
72Radicchio/ Red chicoryசெங்கோசு
73Red Carrotசெம்முள்ளங்கி
74Radishமுள்ளங்கி
75Rainbow Chardவானவில் கோசுக்கீரை
76Ridge Gourd/Luffaபிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
77Ribbed Courdபிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
78Rhubarbஒரு வகை பெரிய இலைக்கீரை
79Romanesco Broccoliகடற்சிப்பிக்கோசு
80Samphireஒருவகை தண்டுக்கீரை
81Savoy Cabbageசாவோய் பூக்கோசு
82Shallotசிறிய வெங்காயம்
83Snake bean/ Long beanபயத்தங்காய்
84Snake Gourd புடலங்காய்
85Snow Peaஒரு வகை அவரை
86Solanum/ Tindaவட்டுக்காய்
87Solanum torvom/ Pea auberginesசுண்டைக்காய்
88Squashசுரைக்காய்
89Spaghetti Squash(இசுப்பெகடி) பூசணி
90Spinachகீரை
91Sweet Potato வற்றாளை/ சர்க்கரை வள்ளி
92Banana Flowerவாழைப்பொத்தி/ வாழைப்பூ
93Tatsoiரற்சோய்
94Tomatoதக்காளி
95Tomato Cherryகுருந்தக்காளி
96Tomato Hybridசீமைத்தக்காளி
97Turnipஒரு வகை முள்ளங்கி
98Water Chestnutஒருவகைக் காய்
99Water Spinach/ Kang Kung கங்குங் கீரை
100Wax bean மஞ்சல் அவரை/ மஞ்சல் போஞ்சி)
101West Indian Gherkinஒரு வகை மேற்கிந்தியக் காய்
102White Bitter gourdவெள்ளைப் பாகற்காய்
103White Eggplantவெள்ளைக் கத்தரி
104White globe radishவெண்ணுருண்டை முள்ளங்கி
105Zucchiniசீமைக்கூடாரக்காய்

கவனிக்கவும்

இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகள் அனைத்திற்கும் இணையானத் தமிழ் பெயர்கள் இல்லை அல்லது எமக்கு தெரியாது என்பதை அறியத் தருகின்றோம். அதேவேளை அனைத்து மரக்கறிகளுக்குமான தமிழ் பெயர்கள் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்காது என்றே கூறவேண்டும். காரணம் வெவ்வேறு நாடுகளில் விளையும் காய்கறிகளூக்கெல்லாம் தமிழில் பெயரிடப்பட்டிருக்காது எனும் நம்பிக்கைத்தான்.

ஆனால் அன்றாடம் தமிழர் உணவில் பயன்படும் மரக்கறி வகைகளின் பெயர்கள், தமிழில் சூட்டப்பட்டப் பெயர்கள், தமிழரான எமக்கே தெரியவிட்டால் வெட்கப்படவேண்டியவர்களில் நானும் ஒருவன் தான்.

இதுப்போன்ற சமயங்களில் தான் இராம்கி ஐயா போன்றோரின் தமிழ் பணியின் அவசியம் புரிகின்றது. இங்கே இந்த மரக்கறிகள் பட்டியலில் இடப்பட்டிருக்கும் அக்காரக்கிழங்கு, குருக்கிழங்கு போன்ற பெயர்சொற்கள் அவரின் பதிவூடாக அறிந்துக்கொண்டது தான்.

இவற்றையும் பார்க்கலாம்.

பழங்கள்

மரக்கறிகள்

தாணியங்கள்

கிழங்கு வகைகள்

நன்றி. காய்கறி வகைகள், காய்கறிகள்
அன்புடன் அருண் Tamil Vegetables, Glossary of Vegetables in Tamil Download As PDF

பழங்கள் (List of Fruits)

பழ வகைகளின் பெயர்கள் இங்கே ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பழங்களின் தமிழ் பெயர்கள் தெரியாததால் அல்லது இல்லாததால் ஆங்கில ஒலிப்பெயர்ப்புச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்பெயருக்குரிய பழங்கள் எது என்று தெரியாவிட்டால், குறிப்பிட்ட பெயரைச் சொடுக்கி பழத்தின் நிழல் படத்தைப் பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள்.

இப்பழங்களின் பெயர்களுக்கான சரியான உச்சரிப்புக்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினைச் சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.

இலஆங்கிலம்தமிழ்
1Appleகுமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
2Ambarella அம்பிரலங்காய்
3Annona சீத்தாப்பழம்
4Annona muricata முற்சீத்தாப்பழம்
5Apricot சர்க்கரைப்பாதாமி
6Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
7Banana வாழைப்பழம்
8Batoko Plum லொவிப்பழம்
9Bell fruit பஞ்சலிப்பழம், ஜம்பு
10Bilberry அவுரிநெல்லி
11Blackberry மேற்கத்திய நாவற்பழம்
12Black currant கறுந்திராட்சை
13Blueberry ஒரு வகை நெல்லி
14Bread fruit கொட்டைப்பலா, சீமைப்பலா
15Butter fruitஆனைக்கொய்யா
16Cantaloupe மஞ்சல் நிற முலாம்பழம்
17Cashew fruitமுந்திரிப்பழம், கஜு
18Cherimoya சீத்தாப்பழம்
19Cherry சேலாப்பழம்
20Chickoo சீமையிலுப்பை
21Citron கடார நாரந்தை
22Citrus aurantium கிச்சலிப்பழம்
23Citrus reticulata கமலாப்பழம்
24Citrus sinensis சாத்துக்கொடி
25Clementine நாரந்தை
26Cocoa fruit கொகோப்பழம்
27Cranberry குருதிநெல்லி
28Cucumber வெள்ளரிப்பழம்
29Custard apple சீத்தாப்பழம்
30Damson ஒரு வித நாவல் நிறப்பழம்
31Date fruit பேரீச்சம் பழம்
32Devilfig பேயத்தி
33Dragon fruit ட்றொகன் பழம்
34Duku டுக்கு
35Durian முள்நாரிப்பழம், தூரியன்
36Emblica நெல்லி
37Eugenia rubicunda சிறு நாவற்பழம்
38Feijoi/Pinealle guava புளிக்கொய்யா
39Fig அத்திப்பழம்
40Persimmon fruit சீமை பனிச்சம்பழம்
41Gooseberry கூஸ்பெறி
42Grapefruitபம்பரமாசு
43Grapes கொடி முந்திரி, திராட்சை
44Guava கொய்யாப்பழம்
45Honeydew melon தேன் முழாம்பழம்
46Huckle berry(ஒரு வித) நெல்லி
47Jack fruit பலாப்பழம்
48Jumbu fruit ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
49Jamun fruit நாகப்பழம்
50Kiwi fruit பசலிப்பழம்
51Kumquat (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
52Kundang மஞ்சல் நிற சிறிய பழம்
53Lansium லன்சியம்
54Lemon வர்க்கப்பழம்
55Lime எழுமிச்சை
56Loganberry லோகன் பெறி
57Longan கடுகுடாப் பழம்
58Louvi fruit லொவிப்பழம்
59Lychee லைச்சி
60Mandarin மண்டரின் நாரந்தை
61Mango மாம்பழம்
62Mangosteenமெங்கூஸ் பழம்
63Melon இன்னீர்ப் பழம், முழாம்பழம்
64Morus macroura மசுக்குட்டிப்பழம்
65Mulberry முசுக்கட்டைப் பழம்
66Muscat grape திராட்சை
67Orange தோடம்பழம்
68Palm fruitபனம் பழம்
69Papaya பப்பாப் பழம்
70Passion fruit கொடித்தோடை
71Peach குழிப்பேரி
72Pear பேரி, பெயார்ஸ்
73Pine apple அன்னாசிப் பழம்
74Plum ஆல்பக்கோடா
75Pomegranateமாதுளம் பழம், மாதுளை
76Pomelo பம்பரமாசு
77Pulasan (ஒரு வகை)றம்புட்டான்
78Quinceசீமை மாதுளம்பழம்
79Rambutan றம்புட்டான்
80Rasberry புற்றுப்பழம்
81Red banana செவ்வாழைப் பழம்
82Red Currant ஒரு வித லொவி
83Sapodilla சீமையிலுப்பை
84Satsuma நாரத்தை
85Sour sop/ Guanabana அன்னமுன்னா பழம்
86Strawberry செம்புற்றுப்பழம்
87Syzygium ஜம்புப்பழம்
88Tamarillo குறுந்தக்காளி
89Tamarind புளியம்பழம்
90Tangerine தேன் நாரந்தை
91Tomato தக்காளிப்பழம்
92Ugli fruit முரட்டுத் தோடை
93Water melon வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
94Wax jumbu நீர்குமளிப்பழம்
95Resberry இளஞ்செம்புற்றுப் பழம்
96Woodappleவிளாம்பழம்

குறிப்பு:

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாப் பழங்களின் பெயர்களுக்கும் தமிழில் பெயர் இல்லை. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதும் இல்லை என்றே நினைக்கின்றேன். காரணம் உலகில் வெவ்வேறு தேசங்களில் அந்தந்த நாட்டு தற்ப வெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உற்பத்தியாகும் பழங்களின் பெயர்கள் அநேகமானவை, அவை உற்பத்தியாகும் நாடுகளில் வழங்கப்பட்டப் பெயர்களாலேயே எல்லோராலும் அறியப்படுகின்றது/அழைக்கப்படுகின்றது.

உதாரணமாக:

Lychee - லைச்சி (இது சீனாவில் அதிகமாகக் காணப்படும் ஒரு விதப்பழம். சீன மொழியிலான " Lychee" எனும் பெயரே இன்று உலகளாவிய ரீதியாகப் புழக்கத்தில் உள்ளது. இன்னுமொரு பழம் "Mandarin" இது ஒரு சில அடிகள் மட்டுமே வளரும் சிறிய மரத்தில் தோன்றும் ஒரு வித நாரந்தம் பழம். சீன மண்டரின் மக்களின் பெருநாள் காலத்தில் (இம்மரத்தின் காய்கள் பழுக்கும் காலம்) அப் பழங்களோடு மரத்தை வீடுகளில், கட்டிடங்களில் அழகுக்கு வைப்பது அவர்கள் மரபு. இதனால் இப்பழத்தின் பெயர் "Mandarin" என்றே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுகின்றது.

தமிழில் எமது மொழிப் பெயரான "மாங்காய்" என்பதையல்லோ "Mango" என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.

எனவே உலகில் உள்ள எல்லா வகையானப் பழங்களது பெயர்களையும் தமிழ் படுத்துதல் அவசியமான ஒன்றாகத் தோன்றவில்லை. அப்படியே தமிழ் படுத்தினாலும் அது அனைத்து தமிழ் சமுகத்தையும் சென்றடையுமா? என்பது இன்னுமொரு கேள்வியாகும். "Apple" எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம் தமிழ் படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான் அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.

இருப்பினும் புழக்கத்தில் வேற்று மொழி சொற்களை நாம் பயன்படுத்தினாலும், அவற்றிற்கான தமிழ் கலைச்சொற்கள் இருக்குமாயின் அவற்றை தமிழர்களான நாம் அறிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும். இவ்வலைத்தளத்தில் எழுதப்பட்டிருக்கும் பழங்களின் பெயர்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் அல்லது வேறு ஒத்தக்கருத்துச் சொற்கள் அறிந்திருப்பீர்களானால் அவற்றைப் பின்னூட்டத்தில் குறித்து வைத்துவிட்டுச் செல்லும் படிக்கேட்டுக்கொள்கின்றேன். அவை யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம் அல்லவா?
பழம் தமிழ் -ஆங்கிலம் அருஞ்சொற்கள், அருஞ் சொற்கள், அருஞ் சொல், பழங்கள் தமிழ் கலைச் Fruits
நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF