ஆங்கிலம் துணுக்குகள் 23 (Day, Date and Dating)

ஆங்கிலத்தில் “Date” என்பதை நான் முன்னர் “திகதி” என்று எழுதிவந்தேன். பின்னர் “திகதி” எனும் சொல் ஒரு கிரந்தச்சொல் என்றும், அதற்கு சரியான தமிழ்ச் சொல் “நாள்” என்றும் தமிழரிஞர்கள் சொல்வதால் நானும் அவ்வாறே எழுதலானேன்.

இப்பொழுது மீண்டும் ஒரு சிக்கல் உருவானது. அதாவது “date” என்பதற்கும் “Day” என்பதற்கும் இடையிலான வேறுப்பாட்டை உணர்த்தப்போனால், “Day” என்பதற்கே “நாள்” எனும் சொல் பொருத்தமாக இருக்கிறது. Date, Day இரண்டுக்கும் "நாள்" எனும் ஒற்றைச்சொல்லை பயன்படுத்துதல் சிக்கலாக உள்ளது. எனவே “Date” என்பதை “திகதி” என்றே மீண்டும் இங்கே இடுகின்றேன்.

முதலில் “Day” என்பதனைப் பார்ப்போம்.

Day (நாள்)
-------------------------------------------------------------------------------------
"Day" எனும் ஆங்கிலச் சொல் 24 மணித்தியாளங்களை உள்ளடக்கிய ஒரு "நாள்" என்பதைக் குறிக்கும் சொல்லாகும். இது ஒரு பெயர்சொல்லாகும். இந்த "நாள்" எனும் சொல்லுடன் தொடர்புடையச் சொற்களை பார்ப்போம்.

Today - இன்றைய நாள் / இன்று
Tomorrow - நாளைய நாள் / நாளை
Day after tomorrow - நாளைக்கு அடுத்த நாள் / நாளைக்கு மறுநாள்
Yesterday - நேற்றைய நாள் / நேற்று
Day before Yesterday - நேற்றைக்கு முந்தைய நாள்
Another day - இன்னொரு நாள்

Midday - நடுநாள்/மதியம் (ஒரு நாளில் பகலின் மதியம்)
Midnight - நள்ளிரவு (ஒரு நாளின் இரவின் மதியம்)
Next day - அடுத்த நாள்

Sunny day - வெய்யில் நாள்
Rainy day - மழை நாள்
Lovely day - பிடித்தமான நாள்/இதமான நாள்

Winter day - குளிர்கால நாள்
Summer day - கோடைக்கால நாள்
Every day - ஒவ்வொரு நாளும்/அன்றாடம்
Someday - எதிர்வரும் ஒரு நாளன்று
One day - ஒரு நாள்
Good day - நல்ல நாள்/நன்னாள்
Holiday - விடுமுறை நாள்
Special day - சிறப்பு நாள்
Wedding day - திருமண நாள்
Birth day - பிறந்த நாள்
Anniversary day - ஆண்டு நிறைவு நாள்
Remembrance day - நினைவு நாள்/நினைவு மீட்டல் நாள்
Full moon day - முழு நிலா நாள்/பௌரனமி
Unforgettable day - மறக்கமுடியாத நாள்

Day to day - ஒவ்வொரு நாளும் நடக்கிற
Day to day work - ஒவ்வொரு நாளும் நடைப்பெறும் வேலை/அன்றாடப்பணி
Day to day activities - அன்றாடக் கடமைகள்
Day by day - ஒவ்வொரு நாளாக /நாளுக்கு நாளாக

"Days" பன்மை பயன்பாடுகள்:

Coming days - வரும் நாட்கள்
Working days - வேலை நாட்கள்
Office days - அலுவலக நாட்கள்
School days - பாடசாலை நாட்கள்
Three days before - மூன்று நாட்களுக்கு முன்பு
Nowadays - இன்றைய நாட்களில்
One of these days - இன்னாட்களில் ஒரு நாள்
One of those days - அன்னாட்களில் ஒரு நாள்

கிழமையில் நாட்கள்

ஆங்கிலத்தில் “week” எனும் சொல் ஏழு நாட்களைக் கொண்ட ஒரு கிழமையைக் குறிக்கிறது. அவ்வாறே அச்சொல்லுக்கு இணையாக “கிழமை” எனும் சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம். அதேவேளை ஒரு கிழமையில் உள்ள ஒவ்வொரு நாட்களையும் திங்கற்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை என கிழமையை பின்னொட்டாக பயன்படுத்தும் வழக்கு தமிழர் வழக்காகும். ஆனால் ஆங்கிலத்தில் கிழமையில் உள்ள ஏழு நாட்களையும் "day" (நாள்) என்றே அழைக்கப்படுகின்றது.

Sunday - ஞாயிறு நாள்/ஞாயிற்றுக்கிழமை
Monday - திங்கள் நாள்/திங்கற்கிழமை
Tuesday - செவ்வாய் நாள்/செவ்வாய்க்கிழமை
Wednesday - புதன் நாள்/புதன்கிழமை
Thursday - வியாழன் நாள்/வியாழக்கிழமை
Friday - வெள்ளி நாள்/ வெள்ளிக்கிழமை
Saturday - சனி நாள்/ சனிக்கிழமை

Weekdays - கிழமை நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை)
Weekend days - கிழமையிறுதி நாட்கள் /வாரயிறுதி நாட்கள் (சனி, ஞாயிறு)

சிறப்பு நாட்கள் (Special days)

இன்னுமின்னும் எமது வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ சிறப்பு நாட்களும், நினைவு நாட்களும் வந்து போகின்றன. அவற்றில் சில:

April Fool's Day - ஏப்பிரல் முட்டாள்களின் நாள்
Christmas Day - கிறிஸ்மஸ் நாள்
Human Rights Day - மனித உரிமைகள் நாள்
Labor Day - தொழிலாளர் நாள்
Mother’s day - தாயார் நாள்
Valentine's Day - காதலர் நாள்
National hero’s day - தேசிய வீரர்களின் நாள்

மேலும் சிறப்பு நாட்களின் அட்டவணை எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.

இனி திகதி குறித்து சில விடயங்களைப் பார்ப்போமா?

Date (திகதி)
----------------------------------------------------------------------------------------
"Date" என்றால் "திகதி" என்பது எல்லோருக்கும் தெரியும். இச்சொல் ஆங்கிலத்தில் வினைச்சொல்லாகவும், பெயர்சொல்லாகவும் பயன்படும். இந்த "திகதி" எனும் சொல்லுடன் தொடர்புடைய சில சொல்லாடல்களைப் பார்ப்போம்.

Date - திகதி
Dateless - திகதியற்ற
Date seal - திகதி இலச்சினை
Date of birth - பிறந்தத் திகதி
Fix a date - ஒரு திகதியை நிர்னயி
Set a date - ஒரு திகதியை குறி
Date of arrival - வந்தடையும் திகதி
Closing date - முடிவடையும் திகதி
Date of renewal - புதுப்பித்தலுக்குரிய திகதி
After date - (குறிப்பிட்ட) திகதிக்குப் பின்
Base date - அடிப்படை திகதி
Date of departure - புறப்படும் திகதி
Out of date - வழக்கொழிந்த திகதி
Expiry date - காலவதியாகும் திகதி
At a future date - எதிர்வரும் ஒரு திகதியில்

Day என்பதற்கும் Date என்பதற்கும் இடையிலான வேறுப்பாடு என்னவென்றால், யாரவது உங்களிடம் "What day is it today?" என்று வினவினால் இன்றைய நாளை குறிப்பிடுங்கள்.

எடுத்துக்காட்டாக:

What day is it today?
Monday.

யாரவது உங்களிடம் "What is the date today?" என வினவினால் இன்றைய திகதியைக் குறிப்பிடுங்கள்.

எடுத்துக்காட்டாக:

What is the date today?
Today is 27th of December, twenty ten.

கவனிக்கவும்:

ஆங்கிலத்தில் திகதியை எழுதும் வழக்கிற்கும் பேசும் வழக்கிற்கும் இடையில் வேறுப்பாடு உண்டு. அவற்றை கவனத்தில் கொள்ளவும்.

எழுத்து வழக்கில்: 27th December, 2010
பேச்சு வழக்கில்: The twenty seventh of December, twenty ten.

பிரிட்டிஸ் அமெரிக்க வேறுப்பாடு
----------------------------------------------------------------------------------------
திகதிகளை எழுதும் போதும் பேசும் போதும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் பிரிட்டிஸ் ஆங்கிலத்துக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ளுதல் அவசியம்.

பிரித்தானிய ஆங்கிலத்தில்:

எழுத்து வழக்கில்: 28th December, 2010
பேச்சு வழக்கில்: The twenty eighth of December, twenty ten.

அமெரிக்க ஆங்கிலத்தில்:

எழுத்து வழக்கில்: December, 28th 2010.
பேச்சு வழக்கில்: December, the twenty eighth twenty ten.

குறிப்பு:

பிரித்தானிய ஆங்கிலத்தில் திகதி/மாதம்/ஆண்டு அல்லது ஆண்டு/மாதம்/திகதி என்று பயன்படும். குறிப்பாக "மாதம்" நடுவில் வரும். அதேவேளை அமெரிக்க ஆங்கிலத்தில் மாதம்/திகதி/ஆண்டு என இடம் மாறி பயன்படுகிறது. இந்த சிக்கல் அநேகமாக திகதியை இலக்கங்களில் எழுதும் போது, பிழையான திகதியாக விளங்கிக்கொள்ளும் நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது. எனவே சற்று அவதானத்துடன் கவனிக்கவும்.

எடுத்துக்காட்டாக:

8/12/2010 - (பிரித்தானிய ஆங்கிலத்தில்)
எட்டாம் திகதி டிசம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டு.

8/12/2010 - (அமெரிக்க ஆங்கிலத்தில்)
ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு.

சரி! "Date" என்றால் "திகதி" என்று பார்த்தோம். "Dating" என்றால் என்னவென்று பார்ப்போமா? இணையத்தில் ஏராளமான "Dating" தளங்களும் உள்ளனவே. அடுத்தப் பதிவில் பார்ப்போம். மிகவும் சுவையான பதிவாகவும், வாக்கியங்களை சேர்த்து எழுதும் பயிற்சி முறையை உள்ளடக்கியப் பாடமாகவும் அது அமையும்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

36 comments:

  1. -சிவ சதிஸ்

    வருகைக்கு நன்றி! (நான் மெடமல்ல)

    ReplyDelete
  2. present sir

    thx for ur class, very usful.

    ReplyDelete
  3. மிக அருமையான விளக்கம்.

    ReplyDelete
  4. - Kaja
    - Jaleela Kamal

    உங்கள் பின்னூட்டங்களிற்கு நன்றிகள்

    ReplyDelete
  5. - நிரூஜா
    - N. Siva
    - vaan mohi

    உங்கள் கருத்துரைக்கு நன்றிகள்

    ReplyDelete
  6. // பின்னர் “திகதி” எனும் சொல் ஒரு கிரந்தச்சொல் என்றும், அதற்கு சரியான தமிழ்ச் சொல் “நாள்” என்றும் தமிழரிஞர்கள் சொல்வதால் நானும் அவ்வாறே எழுதலானேன் //

    கிரந்தம் எனப்படுவது மொழியல்ல. அது வரிவடிவம்தான். சங்கதம் (=சமஸ்கிருதம்) மொழியிலுள்ள உரைகளையும் பாக்களையும் எழுத தென்னிந்தியர்கள் (முக்கியமாக தமிழர்கள்) உருவாக்கிய வரிவடிவம்தான் கிரந்தம்.

    எனவே "கிரந்தச்சொல்" எனக்குறிப்பிடுவது தவறே.

    அச் சொல் தமிழிற்கு சங்கதத்தில் வந்ததா எனவெழும் வினாவிற்கு விடை யாது என நோக்குவோம்.

    "திகதி" எனவுள்ள சொல் "திகழி" எனவிருந்த சொல்லின் மறுவல்தான் என இராம்.கி அவர்கள் பல தடவைகள் எடுத்துக்கூறியுள்ளார்.

    கூகிள் தேடல் : http://www.google.lk/search?hl=en&q=+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+site://http://valavu.blogspot.com&btnG=Search&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=

    காட்டாக: http://valavu.blogspot.com/2003_09_01_archive.html

    திகதியின் திரிபுதான் வடமொழியில் உள்ள திதி.

    திகழி என எழுதினால் பெறும்பான்மையினருக்குப் புரியாது. புழக்கதில் அச் சொற் பாவனை இல்லை.

    எனவே திகதி என்றே எழுதாலாம். அது தமிழ் சொல்தான்.

    ~சேது

    ReplyDelete
  7. கா. சேது ஐயா

    உங்கள் விளக்கத்திற்கும், இராமகி ஐயாவின் பக்கத்தை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  8. Day - நாள் என்பது ஆங்கிலத்தில் day (முழு நாள்) என்றும் day and night (பகலும் இரவும்) என்றும் கூறுவர். அதாவது, day என்பதற்கு முழு நாள் அல்லது (முழு) பகல் என்று பொருள் கொள்ளலாம்.

    ReplyDelete
  9. Sunny day - வெயில் நாள் என்பதே சரி. உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமை; பயனுள்ளவை. செவ்வனே தங்களது ஆக்கங்களைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்; தமிழர்கள் பயன்பெறட்டும்.

    ReplyDelete
  10. -okeys

    //Day - நாள் என்பது ஆங்கிலத்தில் day (முழு நாள்) என்றும் day and night (பகலும் இரவும்) என்றும் கூறுவர்.//

    "24 மணித்தியாளங்களை உள்ளடக்கிய ஒரு நாள்" என தெளிவாகவே இடப்பட்டுள்ளதே!

    //Sunny day - வெயில் நாள் என்பதே சரி.//

    நீங்கள் கூறுவது சரிதான்; "வெயில்" என்று தான் அதிகமானோர் கூறுகின்றனர். ஆனால் எமக்கு "வெய்யில்" என்றே பழகிவிட்டது.

    உங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. நல்ல பதிவு ; தொடர வாழ்த்துக்கள் தோழரே !
    day என்பதை நாள் என்றும்
    date என்பதை தேதி என்றும் கூட குறிப்பிடலாம் !
    நட்புடன் ரவி

    ReplyDelete
  12. நல்ல முயற்சி. குறிப்பிட்ட கருப்பொருளை மட்டும் கொண்டு பதிவிடும் வலைப்பதிவர்கள் தகவல் ஏடு ஒன்றினைத் தயாரித்து அச்சேற்ற ஆசை. முதலில் தங்கள் பெயரே இடம்பெறும். rssairam.blogspot.com -ல் தங்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் skype address thara iyalumaa? rssairam99@gmail.com

    ReplyDelete
  13. நல்ல பதிவு - தொடர வாழ்த்துக்கள்!!!
    day என்பதை நாள் என்றும்
    date என்பதை தேதி என்றும் கூட குறிப்பிடலாம் !

    ReplyDelete
  14. "தேதி" என்பது தமிழக வழக்கு;
    "திகதி" என்பது இலங்கை வழக்கு.

    ReplyDelete
  15. The whole things are very useful and continue your service

    ReplyDelete
  16. dateநாள்
    week.வாரம்
    day.கிழைமை

    என்பது சரியானதாக உள்ளது.

    ReplyDelete
  17. thanx.migavum payanullathaga irunthathu.thodara valthukkal.

    ReplyDelete
  18. நன்றாக உள்ளது

    ReplyDelete
  19. ஆங்கிலம் துணுக்குகள் 24 எங்கே ... உங்கள் அடுத்த பதிவிற்கு காத்துகொண்டு இருக்கிறோம் . PLEASE send the link your next portion

    ReplyDelete
  20. This is a boon to be flown with proper knowledge

    ReplyDelete
  21. sir naan engineerukku padikkuren but engish pesa mudiyaama kastappaduren basicaa naan enna therinjikkanum please help me sir

    ReplyDelete
  22. மிகச் சிறந்த பணி.

    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. எவ்வளவு நாள் தேடினாலும் கிடைக்காது how to translate

    ReplyDelete
  24. இந்தப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. I don't mind how to say thanks for your teaching .....

    regards
    lakshmi

    ReplyDelete
  26. The grammer pattern is easily understanding of all peoples

    ReplyDelete