சர்மிலனின் வீட்டடியில் ஒருவரின் மகிழுந்து பழுதடைந்துவிட்டது. பக்கத்தில் வாகனத் திருத்தகங்களும் இல்லை. மகிழுந்தில் வந்தவருக்கோ எங்கோ எதற்கோ அவசரமாக செல்லவேண்டிய நிலை. மகிழுந்து திடீரென பழுதடைந்து விட்டதால் ஒன்றும் செய்வதறியாது தடுமாற்றமடைந்தார்.
அப்போது அவ்வழியே வந்த சர்மிலனின் மாமா அவருக்கு உதவி செய்ய விரும்பி, சர்மிலனை அழைத்து, அந்த மகிழுந்தை அவசரமாக திருத்திக்கொடுக்கும் படிக் கூறினார்.
சர்மிலனைப் பார்த்த அவரோ திகைத்துப் போய், "என்ன உந்தச் சின்னப் பெடியன் உந்த காரை திருத்திடுவானோ?!” என வியப்புடன் கேட்டார்.
சர்மிலனின் மாமா, "உவன் சின்னப் பெடியன் எண்டு நினையாதையுங்கோ; உவனுக்கு உந்த வாகனங்களை கழட்டிப் பூட்டிறது எல்லாம் கைவந்த கலை. உவன் கண்ணை மூடிக்கொண்டு செய்வான்.” ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ, என்றார். யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில்.
இங்கே இந்தச் சொல்லாடலைக் கவனியுங்கள், “கண்ணை மூடிக்கொண்டு செய்வான்" என்பது "கண்ணை மூடிக்கொண்டு செய்வது" என்பதல்ல பொருள். "மகிழுந்தை திருத்துவது என்பது சர்மிலனுக்கு கைவந்தக் கலை, மிகவும் எளிதான ஒரு விடயம்" என்பதே ஆகும்.
இங்கே இந்த சொல்லாடலைக் கவனியுங்கள், “கண்ணை மூடிக்கொண்டு செய்வான்" என்பது முகத்தில் உள்ள கண்களை மூடிக்கொண்டு செய்தல் என்பதல்ல. "மகிழுந்தை திருத்துவது சர்மிலனுக்கு கைவந்தக் கலை என்பதே பொருளாகும். எவ்வித சிரமமும் இன்றி எளிதாக செய்யும் ஆற்றல் கொண்டவன் என்பதற்கான மரபு சொல்லாட்சியாகும்.
ஒருவர் ஏதோ ஒன்றை கைவந்தக் கலையாக, மிக எளிதாக செய்யும் ஆற்றலை ஒரு செயலாக "கண்ணை மூடிக்கொண்டு..." என சொல்லுதல் தமிழர் பேச்சு வழக்கில் அடிக்கடி பயன்படும் மரபு சொல்லாடல்களில் ஒன்றாகும்.
இதே போன்ற மரபுச் சொல்லாட்சிகள் ஆங்கிலத்திலும் உள்ளன. அதில் ஒன்று தான் இச்சொல்லாட்சியும்.
எவ்வாறு என்று பார்ப்போமா?
சர்மிலனால் எப்படி மகிழுந்தை திருத்த முடியும்?
- He can do it with his eyes closed.
- கண்ணை மூடிக்கொண்டு அவனால் செய்ய முடியும்.
- (அவனால் செய்ய முடியும் அவனுடைய கண்களை மூடிக்கொண்டு.)
- I can do it with my eyes closed.
- கண்ணை மூடிக்கொண்டு என்னால் செய்ய முடியும்
- (என்னால் செய்ய முடியும் என் கண்களை மூடிக்கொண்டு.)
- I can repair it with my eyes closed.
- கண்ணை மூடிக்கொண்டு என்னால் பழுதுபார்க்க முடியும்
- (என்னால் பழுதுபார்க்க முடியும் என் கணகளை மூடிக்கொண்டு.)
- I can read it with my eyes closed.
- கண்ணை மூடிக்கொண்டு என்னால் வாசிக்க முடியும்.
- (என்னால் வாசிக்க முடியும் என் கண்களை மூடிக்கொண்டு.)
- I can operate it with my eyes closed.
- கண்ணை மூடிக்கொண்டு என்னால் இயக்க முடியும்.
- (என்னால் இயக்க முடியும் என் கண்களை மூடிக்கொண்டு.)
இனி நீங்கள் என்னென்ன வேலைகளை "கண்ணை மூடிக்கொண்டு" செய்வீர்கள் என்பதை "with my eyes closed" எனும் சொற்றொடரை பயன்படுத்தி ஆங்கிலத்தில் பேசிப் பாருங்கள்.
குறிப்பு:
இது ஒரு பேச்சு வழக்கு சொல்லாடல் மட்டுமே ஆகும். இப்பாடம் ஆங்கிலம் துணுக்குகள் பகுதியிலேயே வழங்கப்படுகிறது.
இதுபோன்ற தகவல்கள் பயனுள்ளதா என்பதனை பின்னூட்டம் ஊடாக அறியத்தாருங்கள். மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கொள்ள தவறாதீர்கள்.
மீண்டும் இன்னுமொரு பாடத்தில் சந்திப்போம்.
நன்றி!
அன்புடன்
அருண் | HK Arun
மிக்க நன்றி ஐயா...
ReplyDeleteநல்ல விளக்கம்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
nandri thodrungal iyya
ReplyDeleteமனதில் மிக நன்றாக பதிந்தது.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
நன்றி தொடருங்கள்...
ReplyDeleteநன்றி தொடருங்கள்
ReplyDeleteTHANKS SIR
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
ReplyDeletevery nice.thanks for sharing
ReplyDeletebest blog for spoken english
ReplyDeletebest blog for spoken english
ReplyDeletevery simple way of learning english.....thank u sir...
ReplyDeletevery good lesson.
ReplyDeleteThank you sir.
thank u sir ....
ReplyDeleteHi angila thunukugal just one topic mattum irukku where cani get all topics like asking time asking direction at all
ReplyDelete