ஆங்கிலம் துணுக்குகள் 26 ( Yes, Yap, Yeah...)

தமிழில் ஆமோதித்தல் எனும் சொல்லை ஒட்டி, "ஆம்" எனும் சொல் வினையெச்சமாகவும், பெயர்ச்சொல்லாகவும் பொதுவான பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் பேச்சு வழக்கில் இச்சொல் திரிந்து தமிழக மற்றும் கொழும்பு தமிழர் பேச்சு வழக்கில் "ஆமா" என்றும், இன்னும் சிலரால் "ஆ" எனும் ஒலியை மட்டுமே எழுப்பும் வழக்காகவும், இலங்கை தமிழ் பேசும்
இஸ்லாமியர் பேச்சு வழக்கில் "ஓ" என்றும், இலங்கை யாழ்ப்பாணத்தமிழர் பேச்சு வழக்கில் "ஓம்" என்றும் புழக்கத்தில் உள்ளது. இவ்வாறு இச்சொல் பேச்சு வழக்கில் பல்வேறு வடிவில் திரிபடைந்து பயன்பட்டப்போதும், சரியானச் சொல் "ஆம்" என்பதே ஆகும்.

இந்த "ஆம்" எனும் சொல்லுக்கு நிகரான ஆங்கிலச் சொல் "Yes" என்பதாகும். ஆனால்...

ஆங்கிலப் பேச்சு வழக்கில்
தமிழில் "ஆம்" எனும் சொல், பேச்சு வழக்கில் ஆமா, ஆ, ஓ, ஓம் என பல்வேறு வடிவில் பயன்படுவதுப் போன்றே, ஆங்கிலத்தில் "yes" எனும் சொல்லும் பேச்சு வழக்கில் பல்வேறு வடிவில் பயன்படுகின்றன. அவைகளாவன:

yeah = ய்யா
yah = யஹ்
ya = யா
yea = யீ
yes = யெஸ்
yep = யெப்
yup = ய்யப்

இவற்றில் "யெப்", "ய்யா" போன்றவை அதிகமாக புழக்கத்தில் உள்ளவை.

இரட்டிப்பு வழக்கு

"ஆம்" என்பதை தமிழில் இரட்டிப்பாக கூறும் வழக்கும் புழக்கத்தில் உள்ளன.

ஆம் + ஆம் = ஆமாம்
ஓம் + ஓம் = ஓமோம்

இவ்வாறே ஆங்கிலத்திலும் இரட்டிப்பாக கூறும் வழக்கும் சில இடங்களில் உள்ளன.

Yah + yah = ய்யாயா
Yeah + yeah = ய்யாயா

போன்ற பயன்பாடுகளே அவை.

இவ்வாறு இரட்டிப்பாக "ய்யாயா" என கூறும் வழக்கு தமிழர்களிடமும் இன்று தோன்றியுள்ளதை அவதானிக்கலாம். இந்த பயன்பாடு அநேகமாக ரஜனிகாந்த் நடித்த திரைப்படங்களில் அவர் மிடுக்குடன் (Style) "ய்யாயா" எனக் கூறுவதைக் கேட்டு, அவர் ரசிகர்களூடாக தோன்றியிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். எப்படியோ இந்த "ய்யாயா" எனும் சொல்லாடலின் வழக்கு "yeah yeah"என்பதன் இரட்டிப்பு வழக்கே ஆகும்.


இது ஒரு துணுக்குப் பாடமாகும். மீண்டும் இன்னொரு பாடத்தில் சந்திப்போம்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

4 comments:

kalyan said...

Arun
I need the lessons by books or cd's. My son is deaf I try to teach the english from your method.

HK Arun said...

இப்போதைக்கு இந்த வலைத்தளத்தில் மட்டும் எழுதிவருகிறேன். நூல் வடிவம் தயாரானதும் உடனடியாக அறியத் தருகிறேன்.

நன்றி நண்பரே!

Unknown said...

sir, kalviyanathu viyabaramaga seiyappattu varum indraiya kalathil ungalin
sevai ennai viyappadaiya seikirathu.

ungalukku nandri solla "NANDRI" enum oru sol pothumanathaga illai, atharku mel oru sol thevai....

Mahi said...

Thanks for this lesson. :)

Post a Comment