ஆங்கிலம் துணுக்குகள் 21 (Like vs Like)

இப்பாடமும் மின்னஞ்சல் வழியாக ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கான பதிலாகவே இடப்படுகின்றது.

ஆங்கிலத்தில் “like” எனும் சொல் தமிழில் இரண்டு பொருளைத் தருகின்றது. இது அநேகமாக பலரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அறிய விரும்புவோரை மனதில் கொண்டே எழுதப்படுகின்றது.

Like விரும்பு
Like போன்ற / மாதிரி

Do you like Hong Kong?
நீ விரும்புகிறாயா ஹொங்கொங்கை?

Yes, I like Hong Kong. / Yes, I do.
ஆம், விரும்புகிறேன் ஹொங்கொங்கை.

இக்கேள்விகளுக்கான பதிலை சுருக்கமாக, "Yes, I do." எனக்கூறலாம்; ஆனால் "Yes, I like." என கூறுதல் சரியானதல்ல.

இப்போது கீழுள்ள எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்.

What’s the weather like? (நிகழ்காலம்)
காலநிலை என்ன மாதிரி இருக்கின்றது?
It’s cold and cloudy.
அது குளிரும் மேகமூட்டமாகவும் இருக்கிறது.
It’s awful.
அது பயங்கரமானதாக இருக்கிறது.

What are the people like?
மக்கள் என்ன மாதிரியானவர்களாக இருக்கிறார்கள்?
They’re friendly.
அவர்கள் நற்புடன் (நண்பர்களாக) பழகுபவர்களாக இருக்கிறார்கள்.

What was the weather like? (கடந்தக்காலம்)
காலநிலை என்ன மாதிரி இருந்தது?
It was freezing.
உறைந்து போவதைப் போன்று இருந்தது.

What were the people like?
மக்கள் என்ன மாதிரியானவர்களாக இருந்தார்கள்?
They were very nice.
அவர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள்.

வேறுப்பாடு:
What + (be) + noun + like? என்ன மாதிரி என வினவ பயன்படும். அதாவது ஒரு வாக்கியத்தில் "be" வடிவத்துடன் பெயர்சொல் இடம்பெற்று, அதனைத்தொடர்ந்து "like" பயன்படுத்தப்படிருந்தால், அதன் பொருள் "மாதிரி" அல்லது "போன்று" என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக கீழுள்ள கேள்வியையும் பதிலையும் பாருங்கள்

What’s your flat like?
உனது மாடிவீடு என்ன மாதிரியானது?
It’s old and cheap.
அது பழையதும் மளிவானதும் ஆகும்.

இப்பொழுது இதன் கீழுள்ள கேள்வியைப் பாருங்கள். அதில் like "விரும்பு" எனும் வினைச்சொல்லாகப் பயன்படுகிறது. அதாவது "like" வினைச்சொல்லாக பயன்படும் இடங்களில் "விரும்பு" என பொருள் தருவதை எளிதாக உணரலாம்.

Do you like your flat?
நீ விரும்புகிறாயா உனது மாடிவீட்டை?
Yes, very much.
ஆம், மிகவும் (விரும்புகிறேன்)

குறிப்பு:
மின்னஞ்சல் வழியாக நிறைய கேள்விகள் வந்துள்ளன. நேரமின்மையால் எல்லா கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்க முடியாதுள்ளமைக்கு வருந்துகிறோம். இருப்பினும் கேள்விகள் கேட்போர், கேட்கப்படும் கேள்விகளுக்கான விடை ஏற்கெனவே எமது பாடங்களில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துக்கொண்டு கேளுங்கள். பாடங்கள் தொடர்பான கேள்விகளை குறிப்பிட்ட பாடத்திலேயே கேட்கலாம். பாடத்துடன் தொடர்பில்லாத கேள்விகளாயின் நேரம் கிடைக்கும் போதுதான் தனி பதிவாக வழங்க முடியும்.

இப்பாடம் ஆங்கிலம் துணுக்கள் பகுதியிலேயே வழங்கப்படுகின்றது.

மேலும் துணுக்குகள்

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

15 comments:

puduvaisiva said...

நன்றி அருண்

HK Arun said...

நன்றி நண்பரே!

மாணவன் said...

இன்றைய காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு மிகவும் அவசியமானது அதை
அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி தெளிவாக எழுதிவரும் உங்களின் பணி மகத்தானது சார்...
உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்.மாணவன்

Anonymous said...

Mikavum arumai, waiting for your reply on my doubts.

Nandri
Rajendran

HK Arun said...

-மாணவன்

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே!

HK Arun said...

-Rajendran

//waiting for your reply on my doubts.//

நிச்சயமாக!

நன்றி!

selvam said...

I have a doubt.
What is the difference between
He is late.
He is being late.
He has been late.
When we have to use these??

hi friend
iam also esl leaner

he come to late - avan thamathamaka vanthan

he is being late - avan thamatham seikiraan

he has been late - avan sila kalamaka thamathamaka vanthan
ethu sariya ???

era.thangapandian said...

மிக்க நன்றி அருண்சார். என்னால் தமிழில் நன்றாக எழுத முடிகிறது.... ஆனால் ஆங்கிலத்தில் உள்ளதை வாசிக்கவும், அதன் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளவும் மிகச் சிரமமாக உள்ளது.ஆங்கில வாக்கியங்கள் அமைக்கவும், கடிதம் எழுதவும் மிகவும் சிரமப்படுகிறேன். எனக்கான வழிகாட்டி எது?
-இரா. தங்கப்பாண்டியன்
www.vaigai.wordpress.com

thillaisthanam said...

it is more useful for me.
thank you very much.

thillaisthanam said...

thanks arun.

thillaisthanam said...

it is more useful for me.
thanks arun.

nataraj said...

hello sir,

I would like to know the following words with
meaning and how to use in sentence because all words same meaning in Tamil. So, kindly help us as we beginner.

1. because of
2. due to
3. on account of
4. owing to
5. by virtue of
6. thanks to
7. in the light of
8. by dint of

Thanking your service for Tamil peoples.

மருது said...

first of all thanks to you there is very easy to learn

Unknown said...

now i joned ur website.it is very useful for me.i have to learn diff btw on ,at ... so plz teach clearly

Unknown said...

thank you very much!

Post a Comment