ஆங்கில ஒலிக்குறிகள் 1 (The 44 Sounds in English)

ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டோர் முதல், இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்போர் வரை எல்லோரிடமும் எழும் பொதுவான ஒரு கேள்வி, பிழையற்ற ஆங்கில உச்சரிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கான சிறந்த வழி என்ன என்பதே ஆகும்.

நாம் தமிழ் எழுத்துக்களில் இல்லாத ஒலிகளை எழுதிக் காட்ட ஆங்கில எழுத்துக்களின் துணையை நாடி நிற்போம்.

எடுத்துக்காட்டாக:

கடல் = kadal
படம் = padam
உலகம் = ulagam

ஆனால் ஆங்கிலத்தில் உள்ள எல்லா ஒலிகளையும், ஆங்கில அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களைக் கொண்டே எழுதிக் காட்ட முடியாது என்பதே உண்மை.

அதற்கான காரணம், ஆங்கில அரிச்சுவடியில் 26 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன; ஆனால் 26 க்கும் அதிகமான ஒலிகள் ஆங்கிலத்தில் உள்ளன. அதாவது 44 க்கும் அதிகமான ஒலிகள் ஆங்கிலத்தில் உள்ளன.

அந்த ஒலிகளை சரியாகக் கற்றுக்கொள்வதற்கு, குறிப்பிட்ட ஒலிப்புகள் உடைய சொற்களை பட்டியலாக இட்டு, தொடர்ந்து முயற்சியுடனும் ஆர்வத்துடனும் பயிற்சி செய்து கற்றுக்கொள்ளுதல் ஒன்றுதான் வழியாகும். இருப்பினும் அவற்றை கற்றல் என்பதும் அவ்வளவு எளிதானதல்ல. ஆங்கில மொழியை இரண்டாம் மொழியாக கற்பவர்களுக்கு மட்டுமன்றி, ஆங்கில மொழியை தாய்மொழியாகக் கொண்டோருக்கும் ஆங்கில மொழிச் சொற்களின் ஒலிகளை சரியாகக் கற்பதில் சிக்கல்கள் உள்ளன; கற்பிப்பதிலும் சிக்கல்கள் உள்ளன.

"put" என்று எழுதிவிட்டு, அதனை எழுத்துக்கூட்டி "p+u+t = புட்" என்று வாசிக்கலாம். ஆனால் "but" என்று எழுதிவிட்டு எழுத்துக்கூட்டி வாசித்தால் "b+u+t = bபுட்" என்று தான் வரும்; ஆனால் ஆங்கிலத்தில் "bபட்" என்றே ஒலிக்க வேண்டும். "cat = கட்" என்று ஒலிக்க வேண்டியச் சொல்லை "கெட்" என்று வாசிக்க வேண்டும். அதேவேளை "cut" என்று எழுதிவிட்டு அதனை "கட்" என்கின்றனர்; சரியாக இச்சொல்லை எழுத்துக்கூட்டி வாசித்தால் c+u+t "குட்" என்று தான் வர வேண்டும்.

no = நோ (இல்லை)
kno(w) + நோ (தெரியும்) இந்தச்சொல்லில் k (w) இரண்டு எழுத்துக்களுமே ஒலிக்கப்படுவதில்லை.

"elephant = யாணை" இதனை ஆங்கிலத்தில் "எலிபfண்ட்" என்று வாசிப்போம். இந்த "elephant" எனும் சொல்லில் முதல் "e" எழுத்து "எ" ஒலிப்பையும், அடுத்துவரும் "e" எழுத்து "இ" ஒலிப்பையும் தரும். "pha" எனும் மூன்று எழுத்துக்களும் இணைந்து "fப" ஒலிப்பைத்தரும். இவ்வாறு ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொற்களினதும் ஒலிப்புகளை நினைவில் இருத்தியே பேசவேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உள்ளது.

அதேவேளை ஆங்கிலேயர் பயன்படுத்துகின்ற, அதே உரோமன் அரிச்சுவடியைப் பயன்படுத்தும் வேற்றுச் சில மொழிகளில், குறிப்பாக எசுப்பானியம் (Spanish Language) போன்ற ஒலிப்பொழுக்கம் மிக்க (Phonetic) மொழியில் எழுத்துக்களின் கூட்டுக்கு அமைவாகவே சொற்களின் ஒலிப்புகள் அமையும். இதனால் எவரும் எசுப்பானியச் சொற்களை எழுத்துக்கூட்டி எளிதாகவும் துல்லியமாகவும் வாசித்துவிடலாம்.

எடுத்துக்காட்டாக:

elefant = இலிfபண்ட் (யாணை)

எசுப்பானிய மொழியில் "இலிfபண்ட்" என்றுதான் ஒலிப்பர். அவ்வாறான மொழிகளில் எழுத்துக்கூட்டி வாசிப்பது மிகச் சாத்தியமானதாகும். ஆனால் ஆங்கிலத்தில் அநேகமான சொற்களின் எழுத்துகளுக்கும் ஒலிப்புக்கும் தொடர்பே இல்லாமல் இருக்கும். காரணம், ஆங்கிலம் ஒரு ஒலிப்பொழுக்கம் அற்ற மொழி என்பது தான். இதனால் தான் ஆங்கில உச்சரிப்புகளை எல்லோரும் எளிதாக கற்பதற்கு கடினமானதாக இருக்கிறது.

இன்னும் கூறுவதானால், ஆங்கிலத்தில் ஒரே ஒலிப்பைத் தரும் சொற்கள், அவற்றின் எழுத்தும் பொருளும் முற்றிலும் மாறுப்பட்டவைகளும் உள்ளன. அவற்றை ஒப்பொலிச் சொற்கள் என்று நாம் கடந்தப் பாடத்தில் பார்த்தோம். அதேபோல் எழுத்தில் ஒரே சொல் போன்று தோற்றம் தருபவை, அதன் பொருளிலும் ஒலிப்பிலும் முற்றிலும் வேறுப்பட்டவைகளும் ஆங்கிலத்தில் ஏராளம்.

எடுத்துக்காட்டாக:

Live = லிவ் (வாழ், வசி)
Live = லைவ் (நேரடி)

Resum(e) = ரிஸ்யும் (மறுபடி தொடங்கு/ மீண்டும் ஆரம்பி/ தொடர்ந்து செய்)
Resume = ரெzஸமே(ய்) (தன்விவரக் குறிப்பு/ சுயவிவர விளக்கம்/ தற்குறிப்பு)

மேலே உள்ள சொற்களை மீண்டும் ஒருமுறைப் பாருங்கள். அச்சொற்களின் எழுத்துக்கள் ஒரே மாதிரியாகவே உள்ளன. ஆனால் அவற்றை ஒலிக்கும் போது ஒரே மாதிரி ஒலிப்பதில்லை. ஒலிப்பதில் ஏற்படும் வேறுபாடே பொருளை உணர்த்துகின்றன. இந்த வேறுப்பாட்டை உணர்ந்து வாசிப்பது அல்லது ஒலிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

இதற்கான தீர்வு என்ன?

இதற்கான தீர்வாகவே ஆங்கில சொற்களின் ஒலிப்புகளை எளிதாக கற்பிப்பதற்கும், கற்பதற்கும் ஆங்கில அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களுக்கு மாற்றீடாக சில அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். அந்த அடையாளக் குறியீடுகளையே "ஆங்கில ஒலிக்குறிகள்" அல்லது "ஆங்கில ஒலிக்குறியீடுகள்" எனப்படுகின்றன. ஆங்கில "ஒலியியல் அரிச்சுவடி" (Phonetic Alphabet) என்றும் அழைக்கப்படுகின்றது.

ஆங்கில ஒலிக்குறிகள்

ஆங்கிலத்தில் உள்ள 44 ஒலிகளுக்கும் 44 ஒலிக்குறியீடுகள் உள்ளன. இவற்றில் சில ஆங்கில அரிச்சுவடியில் காணப்படும் எழுத்துக்கள் போன்றும், ஏனையவை வேற்று குறியீட்டு வடிவிலும் காணப்படும்.


இந்த ஒலிக்குறிகள் ஆங்கில ஒலிப்பு பயிற்சிகளுக்கு மிக முக்கியமானவைகளாகும். நீங்கள் யாருக்காவது ஆங்கிலச் சொற்களின் ஒலிகளை கற்பிப்பதானாலும் சரி, நீங்களாகவே கற்றுக்கொள்வதானாலும் சரி இந்த ஆங்கில ஒலிக்குறியீடுகளின் பயன்பாட்டை பயிற்சி செய்துக்கொள்ளல் மிகவும் அவசியம்.

இந்த ஒலிக்குறிகள் பிரசித்திப்பெற்ற ஆங்கிலம்-ஆங்கிலம் (Oxford Dictionary, Longman Dictionary, Cambridge Dictionary, etc.,) போன்ற அகரமுதலிகள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றன.

உங்கள் ஆங்கிலம்-ஆங்கிலம் அகரமுதலியை ஒரு முறை எடுத்துப் பாருங்கள். அதில் ஒரு சொல்லுக்கு அடுத்து, இரண்டு முன்சாய்கோடுகளுக்கு (/ /) இடையில், குறிப்பிட்ட சொல்லுக்கான ஒலிப்பை, ஒலிக்குறிகள் மூலம் இட்டுக் காட்டப்பட்டிருக்கும். (சில அகர முதலிகளில் இரண்டு முன்சாய்கோடுகளுக்குப் பதிலாக, இரண்டு சதுர ([ ]) அடைப்புக்குறிக்குள் இடப்பட்டிருக்கும்.)

எடுத்துக்காட்டாக:

gram·mar /grámmər/

"grammar" எனும் சொல்லை நாம் எழுத்துக்கூட்டி வாசிப்பதானால் அதன் ஒலிப்பு "கிரமர்" அல்லது "கிராமர்" என்றே எழுத்துக்கூட்டுக்கு அமைவாக ஒலிப்பு வரும். எம்மில் சிலர் அவ்வாறே கூறி பழக்கப்பட்டவர்களும் இருக்கலாம். இருப்பினும் இவ்வார்த்தையை மிகச் சரியாக ஒலிப்பதென்றால் /grámmər/ என்றே (இரண்டு முன்சாய்கோடுகளுக்கு இடையில் எழுதிக்காட்டப்பட்டிப்பதைப் போல்) ஒலிக்க வேண்டும்.

இச்சொற்களையும் பாருங்கள்:

national /ˈna-shə-nəl/
but /ˈbət/

இங்கே எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த ஆங்கில ஒலிகுறிகளின் பயன்பாட்டை சரியாக உணர்ந்து நீங்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டீர்களானால், எந்த ஆசிரியரின் உதவியும் இன்றி நீங்களாகவே அகர முதலிகளின் உதவியுடன் ஆங்கில சொற்களின் ஒலிப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதே ஆகும். நீங்கள் ஒருபோதும் ஆங்கில எழுத்துக்களை கூட்டி வாசிக்க வரும் ஒலிப்பை சரியானது எனக் கருதிவிட வேண்டாம். இரண்டு முன்சாய்கோடுகளுக்கு இடையில் உச்சரிப்பு பயிற்சிக்காக இடப்பட்டிருக்கும் ஒலிக்குறியீடுகளை கூட்டி வாசித்தே சரியான ஒலிப்பை பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். தொடர்ந்து இந்த ஒலிக்குறியீடுகள் ஊடாக ஆங்கிலச் சொற்களின் ஒலிப்புகளை நீங்கள் பயிற்சி செய்து வந்தால், கூடிய சீக்கரமே ஆங்கில சொற்களின் சரியான ஒலிப்புகளை அறிந்துக்கொள்வதுடன், ஆங்கிலத்தில் பேசும் பொழுது நாம் சரியாகத்தான் பேசுகிறோமா எனும் அச்சமும் தயக்கமும் இன்றி, ஆங்கிலச் சொற்களை மிகச் சரியாக ஒலிக்கவும், ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் சரளமாக பேசவும் முடியும்.

இந்த 44 ஆங்கில ஒலிக்குறியீடுகளின் ஒலிகளை இங்கே சென்று பயிற்சி பெறலாம்.

கீழுள்ள இணைப்பை (Right Click > Save Target As) பயன்படுத்தி நேரடியாக உங்கள் கணனிகளில் பதிவிறக்கி பயிற்சிப் பெறவும் முடியும்.

312. MB: pron_chart_vector.hqx
1.64 MB: PC_pron_chart_vector.exe

இப்பதிவுடன் தொடர்புடைய "ஆங்கில ஒலிப்புகள்" தொடர்பான பாடங்களை எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.

இந்தப் பதிவு ஆங்கிலம் கற்கும் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமன்றி, ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

21 comments:

puduvaisiva said...

நன்றி அருண்

dualplanet said...

மிகவும் பயனுள்ள தகவலைத் தந்து இருக்கிறீர்கள்..... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...... நான் இதைத் தான் ஆங்கிலத் தளங்களில் தேடித் தேடி புரியமால் குழம்பினேன்..... இன்றிலிருந்து அதற்கும் தீர்வை நீங்களே தந்து விட்டீர்கள்..... மீண்டும் ஒரு முறை நன்றி.....

HK Arun said...

- புதுவை சிவா

நன்றிக்கு நன்றி நண்பரே!

HK Arun said...

-Saravana Perumal

உங்கள் கருத்துரை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

மிக்க நன்றி நண்பரே!

மைக் முனுசாமி said...

மதிப்புமிக்க தகவல்கள் தொடர்ந்து வழங்குவதற்கு நன்றி. எனது குழந்தைகளுக்கு கற்பிக்க சிறந்த பாடங்கள்...

HK Arun said...

-மைக் முனுசாமி

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

Supa said...

கடல் = kadal
படம் = padam
உலகம் = ulagam

தமிழில் da-ga-ja-ba சத்தம் இல்லாதாதது ஒரு குறைதானே?

HK Arun said...

Supa

//தமிழில் da-ga-ja-ba சத்தம் இல்லாதாதது ஒரு குறைதானே?//

இது ஒரு நல்ல கேள்வி, இவ்வாறான கேள்விகள் பலரிடமும் உள்ளது.

தமிழில் da, ga, ba ஒலிகளுக்கான தனித்துவமான எழுத்துருக்கள் இல்லை தான். தனித்துவமான எழுத்துருக்கள் தேவையில்லை என்றும் கூறலாம். ஆனால் தமிழ் மொழிப் பயன்பாட்டில் இவைகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக:

"காகம்" எனும் சொல்லில் முதல் "கா = kA" ஆகவும், அடுத்து வரும் "க = ha" ஆகவும் ஒலிக்கும். இவ்வாறு "க" எனும் ஒலி "ka, ga, ha," எனும் மூன்று ஒலிகளைக் கொண்டவைகளாக தமிழில் பயன்படும்.

இவ்வாறான பயன்பாட்டை "மாற்றொலிகள்" அல்லது "வகையொலிகள்" (Allophone) என்றழைக்கப்படுகின்றது.

இப்பயன்பாடு எமது மொழியில் மட்டுமல்ல, அனைத்து மொழிகளிலும் உண்டு; ஆங்கிலத்திலும் உண்டு.

இது குறைப்பாடானது அல்ல. நாம் ஆங்கில இலக்கணத்தில் உள்ள வேறுப்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து கற்கும் அதேவேளை, எம்மொழியாகிய தமிழ் மொழியின் பயன்பாடுகளை நாம் சரியாகக் கவனித்து கற்காமையின் விளைவு என்றே கொள்ள வேண்டும்.

உண்மையில் ஆங்கிலத்தையும் விட தமிழ் ஒலிப்பொழுக்கம் மிக்க ஒரு மொழி.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

Unknown said...

Thank you very much for this articls.

Unknown said...

Thank you very much for this articls.

Unknown said...

Thank you very much for this article because till now i didn't get phonetic sound.thank you lot..

HK Arun said...

- itechsasi

உங்கள் கருத்துரைக்கு நன்றி

Supa said...

விரிவான விளக்கத்திற்கு நன்றி

ராஜகோபால் said...

Sir:

i am really Thank you for you.,
This is one of the good and very use full blog for all.,

Sir if you don mind explain HOW TO CORRECT SPELLING MISTAKE in english.

by
rajagopal.s

HK Arun said...

-ராஜகோபால்

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே!

//Sir if you don mind explain HOW TO CORRECT SPELLING MISTAKE in english.//

எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.

நன்றி!

Satchithananthan said...

Dear Mr. HK Arun

I really congratulate with you afford because of this wonderful service. It's really full of informations! if anyone interested to learn English grammar, it's the right place.

Best regards
Dr. M.N. Satchithananthan
Nagaland, India

HK Arun said...

-Dr. M.N. Satchithananthan

உங்கள் கருத்து ஊக்கத்தைத் தருகின்றது.

நன்றி நண்பரே!

sakthi said...

arumai aga irukkirathu nanba

Unknown said...

But I have a problem in letters

prabha said...

thanks

Unknown said...

use full

Post a Comment