கணினிக் கலைச்சொற்கள் (Computer Terms in Tamil)

"ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு" என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளாகப் பார்ப்போர் உளர்; ஆனால் அவ்வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையையும் ஒவ்வொரு கலையாகவே பழந்தமிழர் வகைப்படுத்தினர். அந்தவரிசையில் தற்போதைய தொழில்நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணைத்துக்கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொரு கலை சார்ந்த சொற்களும் காலத்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டே வருகின்றன. அவற்றையே கலைச்சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. அவ்வாறே கணினியில் தமிழ் எழுத்துக்கள் தோன்றியக் காலம் முதல், தமிழ் கணினி கலைச்சொற்களின் உருவாக்கமும் தோற்றம் பெறத்தொடங்கி விட்டது. இதில் கணினித் தமிழ் ஆர்வலர்கள், இணையத் தமிழ் சமூக குழுமங்கள், ஊடகத் துறையினர், எழுத்தாளர்கள், அரச திணைக்களங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கணினி பயனர்கள் என பலரதும் பங்கு உள்ளது.

அவ்வாறு உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்து விடுபவையும் உள்ளன. இங்கே பெரும்பாலும் இணையப் பயன்பாட்டில் அதிகம் பயன்படும் 635 ஆங்கில கணினிச் சொற்களையும் அதற்கான தமிழ் கணினிக் கலைச்சொற்களையும் அட்டவணையாக இட்டுள்ளேன்.

ஆங்கிலக் கணினிச் சொற்களின் உச்சரிப்பு பயிற்சி பெற விரும்புவோர் ஒலிதக் கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம். (விரைவில் இணைக்கப்படும்)

No:English Termsகலைச்சொல்லாக்கம்
1.Accessஅணுக்கம்
2.Accuracyதுல்லியம்
3.Actionசெயல்
4.Activateஇயக்கு
5.Active cellஇயங்கு கலன்
6.Active fileநடப்புக் கோப்பு
7.Activityசெயல்பாடு
8.Adapter cardபொருத்து அட்டை
9.Adaptorபொருத்தி
10.Addressமுகவரி
11.Address busமுகவரி பாட்டை
12.Address modificationமுகவரி மாற்றம்
13.Addressingமுகவரியிடல்
14.Administratorநிர்வாகி
15.Albumதொகுப்பு
16.Algorithm languageநெறிப்பாட்டு மொழி
17.Algorithmநெறிமுறை
18.Alignmentஇசைவு
19.Allocationஒதுக்கீடு
20.Alpha testingமுதற்கட்ட சோதனை
21.Alphabetஅகரவரிசை/நெடுங்கணக்கு
22.Alphabeticalஅகர வரிசைப்படி
23.Alphanumericஎண்ணெழுத்து
24.Ambiguationகவர்படுநிலை
25.Amplifiedபெருக்கப்பட்ட
26.Analog representationஒப்புமை மீள்வடிவாக்கம்
27.Analogஒப்புமை
28.Analytical Engineபகுப்பாய்வு பொறி
29.Animationஅசைவூட்டம்
30.Anonymousஅநாமதேய
31.Anti-virusநச்சுநிரற்கொல்லி/நச்சுநிரல் எதிர்ப்பான்
32.Appearanceதோற்றம்
33.Appendபின்சேர்
34.Appletகுறுநிரல்
35.Application levelபயன்பாட்டு நிலை
36.Application programmerபயன்பாட்டு நிரலாளர்
37.Application programmingபயன்பாட்டு நிரலாக்கம்
38.Application programsபயன்பாட்டு நிரல்கள்
39.Application service providerபயன்பாட்டுச் சேவை வழங்குனர்
40.Application softwareபயன்பாட்டு மென்பொருள்
41.Applicationசெயலி
42.Architectureகட்டமைப்பு
43.Archive fileகாப்பகக் கோப்பு
44.Archive gatewayகாப்பக நுழைவாயில்
45.Archiveகாப்பகம்
46.Archivingகாப்பகப்படுத்தல்
47.Area searchபரப்பில் தேடல்
48.Arithmeticஎண் கணிதம்
49.Array processorஅணிச் செயலி
50.Arrayஅணி
51.Arrow keyதிசை விசை/திசை குறி
52.Artificial intelligenceசெயற்கை நுண்ணறிவு
53.Assemblerபொறிமொழியாக்கி
54.Assembly Languageபொறி மொழி
55.Audio blogஒலிதப்பதிவு
56.Audioஒலிதம்
57.Auto blockதானியங்கித் தடை
58.Auto restartதானியக்க மீள்தொடக்கம்
59.Automated data processingதன்னியக்கத் தரவுச் செயலாக்கம்
60.Automaticதன்னியக்க
61.Auxiliary equipmentsதுணைக்கருவிகள்
62.Auxiliary functionதுணைச்செயற்கூறு
63.Auxiliary memoryதுணை நினைவகம்
64.Auxiliary operationதுணை செயல்பாடு
65.Auxiliary storageதுணை தேக்கம்
66.Availabilityகிடைத்தல்
67.Axesஅச்சுகள்
68.Back upகாப்புநகல்/காப்புநகலெடு
69.Backgroundபின்னணி
70.Backspaceபின்நகர்வு
71.Bar chartபட்டை வரைப்படம்
72.Bar codeபட்டைக்குறிமுறை
73.Bar code scannerபட்டைக்குறிமுறை வருடி
74.Bar printerபட்டை அச்சுப்பொறி
75.Basicஅடிப்படை
76.Batch processingதொகுதிச்செயலாக்கம்
77.Betaஅறிமுகப் பதிப்பு
78.Binary Codeஇரும குறிமுறை
79.Binary deviceஇருமக் கருவி
80.Binary digitஇரும இலக்கம்
81.Binary numberஇரும எண்
82.Binary operationஇரும செயற்பாடு
83.Binary systemஇரும கட்டகம்
84.Bit map displayநுண் படக் காட்சி
85.Bit map scanningநுண் பட வருடி
86.Bit mapped screenநுண் பட திரை
87.Bit valuesநுண்மியின் மதிப்புகள்
88.Bitநுண்மி
89.Bitmapநுண் படம்
90.Bit-mapped fontநுண் பட எழுத்துரு
91.Blank characterவெற்றுரு
92.Blank pageவெற்றுப்பக்கம்
93.Blankingவெறுமைப்படுத்தல்
94.Blockதடை
95.Blogவலைப்பதிவு
96.Blog infoவலைப்பதிவு தகவல்கள்
97.Blog toolsவலைப்பதிவுக் கருவிகள்
98.Bloggerவலைப்பதிவர்
99.Blogger circleவலைப்பதிவர் வட்டம்
100.Bloggingவலைப்பதிதல்
101.Bookmarkபுத்தகக் குறி
102.Bootதொடக்கு
103.Borderகரைகள்
104.Branchingகிளைப்பிரிதல்
105.Bridgeஇணைவி
106.Broadbandஅகலப்பட்டை
107.Browserஉலாவி
108.Browsingஉலாவுதல்
109.Buddyநண்பர்
110.Bugவழு
111.Bug reportவழு அறிக்கை
112.Busபாட்டை
113.Cacheதேக்கம்
114.Calculatingகணக்கிடல்
115.Calculationகணக்கீடு
116.Calculator modeகணிப்பான் நிலை
117.Calculatorகணிப்பான்
118.Cancelதவிர்
119.Capacityகொள்திறன்
120.Carriage returnஏந்தி மீளல்
121.Catalogவிவரப்பட்டியல்
122.Categoryபக்கவகை
123.CD burningகுறுவட்டு எரித்தல்
124.CD playerஇறுவட்டு இயக்கி
125.Centerமையம்/நடுவம்
126.Central processing unit (CPU)மையச் செயலகம்
127.Central processorமையச் செயலி
128.Chain printerதொடர்ப்பதிப்பான்
129.Changeமாற்றல்/மாற்று
130.Channelதடம்
131.Characterவரியுரு
132.Character codeவரியுருக் குறி
133.Character mapவரியுரு வரைப்படம்
134.Character recognitionவரியுரு அறிதல்
135.Character setவரியுருக்கணம்
136.Character stringவரியுருச்சரம்
137.Chartவரைப்படம்
138.chatஅரட்டை
139.Checkboxதேர்வுப்பெட்டி
140.Chipsசில்லுகள்
141.Clearதுடை
142.Clickசொடுக்கு
143.Clipboardமறைப்பலகை
144.Closeமூடு
145.Closed fileமூடப்பட்ட கோப்பு
146.Cloud computingமுகிலக் கணிப்பு
147.Collectionதிரட்டல்
148.Color codingவண்ணக் குறிமுறை
149.Color graphicsவண்ன வரைகலை
150.Colorவண்ணம்/நிறம்
151.Column splitநெடுவரிசைப் பிரிப்பு
152.Columnநெடுவரிசை
153.Command keyகட்டளை விசை
154.Commandகட்டளை/ஆணை
155.Commentகருத்துரை/பின்னூட்டம்/முன்னிகை
156.Comments moderationகருத்துரை மட்டுறுத்தல்
157.Common storageபொதுத்தேக்கம்
158.Commonபொது
159.Communication linkதொடர்பு இணைப்பு
160.Communication processorதொடர்பு செயலகம்
161.Communication satelliteதொடர்பு செயற்கைக்கோள்
162.Communication softwareதொடர்பு மென்பொருள்
163.Communication protocolsதொடர்பு நெறிமுறைகள்
164.Community portalசமுதாய வலைவாசல்
165.Compact disc (CD)குறுவட்டு/இறுவட்டு
166.Comparative operatorஒப்பீட்டு இயக்கி
167.Compareஒப்பிடு
168.Comparisonஒப்பிடுதல்
169.Compilationதொகுப்பு
170.Compilerதொகுப்பி
171.Complier languageதொகுப்பு மொழி
172.Componentஉறுப்புக்கூறு
173.Compressஅழுத்து/அமுக்கு
174.Computer engineerகணிப் பொறியாளர்
175.Computer gameகணினி விளையாட்டு
176.Computer graphicகணினி வரைகலை
177.Computer languageகணினி (நிரல்) மொழி
178.Computer motherboardகணினி தாய்பலகை
179.Computer networkகணினி வலையமைப்பு
180.Computer operationகணினிச் செயல்பாடுகள்
181.Computer programகணனி நிரல்
182.Computer resourcesகணினி வளங்கள்
183.Computer userகணினி பயனர்
184.Computer utilityகணனி பயனமைப்பு
185.Computerகணினி
186.Computerizationகணினிமயமாக்கல்
187.Computerized data baseகணினிமய தரவு தளம்
188.Computerized data processingகணினிமய தரவு செயலாக்கம்
189.Computingகணினிப்பணி
190.Conditionநிபந்தனை/நிலை
191.Configurationஅமைவடிமம்
192.Connectorsஇணைப்பான்கள்
193.Consoleமுனையம்
194.Constantsமாறிலிகள்
195.Content policyஉள்ளடக்கக் கொள்கை
196.Contributionsபங்களிப்புகள்
197.Contributorபங்களிப்பாளர்/பங்களிப்போர்
198.Control keyகட்டுப்பாட்டு விசை
199.Control panelகட்டுபாட்டு பலகை/கட்டுப்பாட்டகம்
200.Control programகட்டுப்பாட்டு நிரல்
201.Control statementகட்டுப்பாட்டுக்கூற்று
202.Control structureகட்டுப்பாட்டு உருவம்
203.Control systemகட்டுப்பாட்டு கட்டகம்
204.Control unitகட்டுப்பாட்டு பிரிவு
205.Conversionமாற்றம்
206.Convertமாற்று
207.Cookieநினைவி
208.Copy protectionநகல் காப்பு
209.Copyபிரதி/நகல்
210.Copyright statusபதிப்புரிமை நிலை
211.Copyrightபதிப்புரிமை
212.Core storageவளையத் தேக்கம்
213.Cost analysisவிலைப் பகுப்பாய்வு
214.Cost benefit analysisவிலை பயன் பகுப்பாய்வு
215.Cost effectivenessவிலை பயன் திறன்
216.Createஉருவாக்கு
217.Cropசெதுக்கு
218.Current eventsநடப்பு நிகழ்வுகள்
219.Cursorசுட்டி
220.Curve fittingவளைக்கோட்டுப் பொருத்தம்
221.Custom softwareதனிப்பயன் மென்பொருள்
222.Customizeவிருப்பமை/தனிப்பயனாக்கு
223.Cutவெட்டு
224.Cyberமின்வெளி
225.Dashboardகட்டுப்பாட்டகம்
226.Dataதரவு
227.Data catalogதரவு விவரப்பட்டியல்
228.Data flowதரவுப் பொழிவு
229.Data processingதரவுச் செயலாக்கம்
230.Databaseதரவுத்தளம்
231.Decimal digitபதின்ம இலக்கம்
232.Decimal numberபதின்ம எண்
233.Decimal pointபதின்ம புள்ளி
234.Decimalபதின்மம்
235.Decodeகுறிமுறை நீக்கு/நீக்கி
236.Decompressவிரிவாக்கு
237.Defaultமுன்னிருப்பு/இயல்பிருப்பு
238.Definiteதிட்டமிட்ட/தெளிவான
239.Deleteஅழி
240.Deletionஅழித்தல்
241.Descriptionவிவரணம்/விளக்கம்
242.Designவடிவமைப்பு
243.Desktop computerமேசை கணினி
244.Desktopமுகத்திரை
245.Destinationஅடையுமிடம்
246.Developerமேம்படுத்துனர்
247.Deviceகருவி
248.Diagramவிளக்கப்படம்
249.Digitalஎண்மின்
250.Disambiguatedதெளிவாக்கிய/தெளிவுப்படுத்திய
251.Disambiguationதெளிவாக்கம்/தெளிவாக்கல்
252.Discoveryகண்டறி/கண்டறிதல்
253.Discussகலந்தாலோசி
254.Disk driveவட்டு இயக்கி
255.Display nameதோற்றப்பெயர்
256.Distributeவினியோகி/வினியோகப்படுத்து
257.DNSகொப்பெகம் [(கொ)ற்ற(ப்பெ)யர்க்(க)ட்டக(ம்)]
258.Documentஆவணம்
259.Documentationஆவணமாக்கம்
260.Domainகொற்றம்/ஆள்களமையம்
261.Domain Name Systemகொற்றப் பெயர்க் கட்டகம்
262.Double clickஇரட்டைச் சொடுக்கு
263.Downloadபதிவிறக்கம்
264.Dragஇழு
265.Driverஇயக்கி
266.Drum plotterஉருளை வரைவு
267.Drum printerஉருளை அச்சுப்பொறி
268.Drum scannerஉருளை வருடி
269.E-bookமென்நூல்
270.Editதொகு/மாற்று
271.Edit profileசுயவிபரத்தை மாற்று
272.Editorதொகுப்பாளர்
273.Educational softwareஅறிவியல் மென்பொருள்
274.Effectiveபயன்விளையத்தக்க
275.Effectsவிளைவுகள்
276.E-governanceமின்-அரசாண்மை
277.Electrical signalமின் சமிக்ஞை
278.Electronicமின்னணு
279.E-mailமின்னஞ்சல்
280.Embeddedபொதிந்துள்ள
281.Emulationபோலச்செய்தல்
282.Encodingகுறியாக்கம்
283.Encyclopediaகலைக்களஞ்சியம்
284.Endமுடிவு
285.Equationசமன்பாடு
286.Eraseஅழி
287.Eraserஅழிப்பான்
288.Expansion slotsவிரிவாக்க செருகுவாய்கள்
289.Expiryகெடுமுடிவு/காலாவதி
290.Extended infoவிரிவாக்கப்பட்ட தகவல்
291.External linksவெளி இணைப்புகள்
292.External search engineவெளித்தேடுபொறி
293.FAQ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
294.Featuresஅம்சங்கள்
295.Fieldபுலம்
296.Fileகோப்பு
297.File managementகோப்பு மேலாண்மை
298.File shareகோப்பு பகிர்வான்
299.File sharingகோப்பு பகிர்தல்
300.Findகண்டறி/தேடு
301.Firewallதீயரண்
302.Firmwareநிலைப்பொருள்
303.Flat monitorதட்டை திரையகம்
304.Floppy driveநெகிழ் வட்டு
305.Flow chartநெறிமுறை விளக்கப்படம்
306.Folderகோப்புறை
307.Fontஎழுத்துரு
308.Font and word processorஎழுத்துருவும் சொல் செயலாக்கியும்
309.Font nameஎழுத்துரு பெயர்
310.Footerஅடிப்பாகம்
311.Formal languageவடிவ மொழி
312.Formatவடிவம்/வடிவூட்டம்
313.Formattingவடிவமைத்தல்
314.Formulaசூத்திரம்
315.Free softwareஇலவச மென்பொருள்
316.Functionசெயற்கூறு/செயற்பாடு
317.Galleryகாட்சியகம்
318.Gatewayநுழைவாயில்
319.Global dashboardகோளக் கட்டுப்பாட்டகம்
320.Global Positioning systemகோள இருப்பிடக் கட்டகம்
321.Grammar checkerஇலக்கணத் திருத்தி
322.Graphicவரையியல்/வரைகலை
323.Groupகுழுமம்
324.Guestவிருந்தினர்
325.Hand held devicesகையடக்கக் கருவிகள்
326.Hand held Scannerகையடக்க வருடுபொறி
327.Handwriting recognitionகையெழுத்து அறிதல்
328.Hard discவன்வட்டு
329.Hardwareவன்பொருள்
330.Headerதலைப்பு
331.Help centerஉதவி மையம்
332.Help groupஉதவி குழுமம்
333.High speed computerஅதிவேகக் கணினி
334.Higher level languageஉயர்நிலை மொழி
335.Homeமுகப்பு
336.Homepageமுகப்புப்பக்கம்
337.Horizontal lineகிடைக்கோடு
338.Host computerபுரவலர் கணினி
339.Hyphenationசொல் பிரித்தல்
340.Iconஉருச்சின்னம்/படவுரு
341.Identityஅடையாளம்
342.iDNSவலைக்கொற்றப் பெயர்க் கட்டகம்
343.iDomainவலைக்கொற்றம்
344.Ignoreபுறக்கணி
345.Imageபடிமம்
346.Importஇறக்கம்
347.Incompatibleமுரண்பாடு
348.Indefiniteதிட்டமிடாத
349.Indexசுட்டெண்
350.Index variableசுட்டுமாறி
351.Informationதகவல்
352.Information dataதகவல் தரவு
353.Information super highwaysதகவல் மீப் பெருவழிகள்
354.Information technologyதகவல் தொழில்நுட்பம்
355.Input unitஉள்ளீட்டுப் பகுதி
356.Insertஉள்ளிடு/செருகு
357.Installநிறுவு
358.Installationநிறுவுதல்
359.Integrated chipsசுற்றமைப்புச் சில்லுகள்
360.Integrated circuit chipsஒருங்கிணைப்பு சுற்றமைப்புச் சில்லுகள்
361.Inter languageமொழியிடை
362.Interactive sitesஊடாட்ட தளங்கள்
363.Interestsஆர்வங்கள்
364.Interfaceஇடைமுகம்/இடைமுகப்பு
365.Internalஉள்ளக
366.Internal errorஉள்ளகத் தவறு
367.Internationalபன்னாட்டு
368.International (DNS)பன்னாட்டுக் (கொப்பெகம்)
369.Internetஇணையம்
370.Internet protocol addressஇணைய நெறிமுறை முகவரி
371.Internet protocol (IP)இணைய நெறிமுறை
372.Internet service provider (ISP)இணையச் சேவை வழங்குனர்
373.Interpreterவரிமொழிமாற்றி/இடைமாற்று
374.Invalidசெல்லாத/செல்லுபடியாகாத
375.Inventionகண்டுப்பிடிப்பு
376.Italic textசாய்வெழுத்து
377.Iterationபன்முறைச் செய்தல்
378.Java scriptஜாவா ஆணைத்தொகுதி
379.Keyவிசை
380.Keyboardவிசைப்பலகை/தட்டச்சுப்பலகை
381.Keypadவிசைத்தளம்
382.Keywordகுறிப்புச்சொல்
383.Landscapeஅகலவாக்கி
384.Laptop computerமடிக்கணினி
385.Layoutதளவமைப்பு
386.LCD Monitor (Liquid Crystal Display)திரவ பளிங்குத் திரையகம்
387.Left clickஇடதுச் சொடுக்கு
388.Lexing errorதொகுத்தல் தவறு
389.Licenseஉரிமம்
390.Light penஎழுதுகோல்
391.Lineகோடு/வரி
392.Linkஇணைப்பு/தொடுப்பு
393.Listபட்டியல்
394.Liveநேரடி
395.Log inபுகுபதி/உற்புகு
396.Log outவிடுபதி/வெளியேறு
397.Machine languageபொறிமொழி
398.Machine translationஎந்திர மொழிபெயர்ப்பு
399.Magnetic diskகாந்த வட்டு
400.Magnetic tapeகாந்தா நாடா
401.Main Pageமுகப்புப்பக்கம்/முதற்பக்கம்
402.Maintenance pageமேலாண்மைப் பக்கம்
403.Managementஆளுமை/முகாமைத்துவம்
404.Mechanical calculatorஎந்திர கணிப்பான்
405.Mediaஊடகம்
406.Media playerஊடக இயக்கி
407.Memory unitநினைவகப் பகுதி
408.Memoryநினைவகம்
409.Menuபட்டியல்
410.Metadataதரவு விவரம்
411.Micro processorநுண் செயலி
412.Microphoneஒலிவாங்கி
413.Modemஇணக்கி
414.Moderationமட்டுறுத்தல்
415.Moderatorமட்டுறுத்துனர்
416.Monetizeமதிப்புடைச்செய்
417.Monitorகணித்திரை/திரையகம்
418.More featuresகூடுதல் அம்சங்கள்
419.Motherboardதாய்ப்பலகை
420.Mouseசொடுக்கி
421.Multimediaபல்லூடகம்
422.Multitaskingபல்பணியாக்கம்
423.My accountஎனது கணக்கு
424.Natural languageஇயற்கை மொழி
425.Navigationவழிசெலுத்தல்
426.Negativeஎதிர்வு
427.Networkபிணையம்/வலையமைப்பு
428.Networkingவலைப்பின்னல்
429.Neutral point of viewநடுநிலைநோக்கு
430.New postபுதிய இடுகை
431.Non-terminalsமுடியா முனையங்கள்
432.Notationகுறிமானம்
433.Noteகுறிப்பு
434.Numberஎண்
435.Numeralஎண் முறை
436.Objectபொருள்
437.Offlineஇணைப்பறு/இணைப்பின் வெளியே
438.Onlineஇணைப்பில்
439.Operating systemஇயங்குக் கட்டகம்
440.Optionதேர்வு
441.Orphaned pagesஉறவிலிப் பக்கங்கள்
442.Other languagesபிறமொழிகள்/ஏனைய மொழிகள்
443.Outsourcingஅயலாக்கம்
444.Packageபொதி
445.Packetsபொட்டலங்கள/பொதிகள்
446.Page layoutபக்க வடிவமைப்பு
447.Page viewsபக்கப் பார்வைகள்
448.Pageபக்கம்
449.Panelபலகை
450.Paperless officeதாளில்லா அலுவலகம்
451.Paragraphபந்தி
452.Parallel processing computersஇணைச் செயலாக்க கணினிகள்
453.Parent categoryமுதன்மை பக்கவகை
454.Passwordகடவுச்சொல்
455.Pasteஒட்டு
456.Patchபொருத்து
457.Peripheralsஉபகரணங்கள்
458.Permissionஅனுமதி
459.Personal Computerதனி கணினி
460.Photographபுகைப்படம்
461.Pictureபடம்
462.Piracyகளவுநகலாக்கம்
463.Plug inசொருகு/சொருகி
464.Pointerசுட்டு
465.Portable Printerகையடக்க அச்சுப்பொறி
466.Portalவலைவாசல்
467.Postஇடுகை
468.Postingஇடுகையிடல்
469.Postsஇடுகைகள்
470.Preferencesவிருப்புத்தேர்வுகள்
471.Presentationஅளிக்கை
472.Pressஅமுக்கு
473.Previewமுன்தோற்றம்
474.Principalsகோட்பாடு
475.Printஅச்சிடு
476.Printerஅச்சுப்பொறி
477.Privacyதனிக்காப்பு/தனிமறைவு
478.Problemசிக்கல்/பிரச்சினை
479.Processorசெயலி
480.Programநிரல்
481.Programmersநிரலர்கள்
482.Programming languageநிரலாக்க மொழி
483.Promptதூண்டி
484.Protectகாப்புச்செய்
485.Protection logதடைப்பதிகை
486.Protocolsநெறிமுறைகள்
487.Proxy Serverபதில் சேவையகம்
488.Public domainபொதுக்கொற்றம்/பொதுக்களம்
489.Publicationsவெளியீடுகள்
490.Publishபதிவிடு/வெளியிடு
491.Publisherபதிப்பாளர்
492.Publishingபதிப்பிடல்
493.Queryவினா/வினவல்
494.RAM (Random access memory)நினைவகம்
495.Random Pageஒழுங்கிலாப் பக்கம்
496.Recent changesஅண்மைய மாற்றங்கள்
497.Recovery toolமீட்சி கருவி
498.Redirectsவழிமாற்றிகள்
499.Redoசெய்தது தவிர்/திரும்பச்செய்
500.Reference deskஎடுகோள் மேடை
501.Referenceஎடுகோள்
502.Refreshபுதுப்பி
503.Reinstallமீள்நிறுவு
504.Releaseவெளியீடு
505.Remember meஎன்னை நினைவில் வை
506.Removalஅகற்றல்
507.Removeஅகற்று
508.Replaceமீள்வை
509.Reprogrammingமறுநிரலாக்கம்
510.Requiredவேண்டப்பட்ட/தேவைப்பட்ட
511.Resetமீட்டமை
512.Restoreமீள வை/ மீள்வி
513.Resultவிளைவு
514.Reviewமீளாய்வு
515.Revisionபுதிபித்தல்/திருத்தம்
516.Right clickவலச்சொடுக்கு
517.Rootமூலம்
518.Root directoryமூல அடைவு
519.Routerவழிச்செயலி
520.Rowகுறுக்கு வரிசை/நிரை
521.Ruleவிதி/விதிமுறை
522.Saveசேமி
523.Save asஎன சேமி
524.Scannerவருடுபொறி
525.Screensaverதிரைக்காப்பு
526.Searchதேடு/தேடல்
527.Search engineதேடு பொறி
528.Search queryதேடல் வினா
529.Searchதேடல்/தேடு
530.Sectionபகுதி
531.See alsoஇவற்றையும் பார்
532.Selectதேர்வுசெய்
533.Sensorஉணரி
534.Serverவழங்கி
535.Sessionsஅமர்வுகள்
536.Settingஅமைப்புகள்
537.Share my profileஎனது சுயவிவரத்தை பகிர்
538.Shared filesபகிரப்பட்ட கோப்புகள்
539.Sharewareபகிர்மானம்
540.Shortcutகுறுவழி/குறுக்குவழி
541.Show allஎல்லாம் காண்பி
542.Shutdownஅணை/மூடு
543.Sign inபுகுபதிகை/புகுபதிவு
544.Sign offவிடுபதிகை/விடுபதி
545.Sign outவெளியேறு
546.Single clickதனிச் சொடுக்கு
547.Sister Projectsபிற திட்டங்கள்
548.Site feedதள ஓடை
549.Socketபொருத்துவாய்
550.Softwareமென்பொருள்
551.Software packageமென்பொருள் பொதி
552.Sorting algorithmsதீர்வு நெறிகள்
553.Sorting and searchingவரிசையாக்கமும் தேடலும்
554.Sound Cardஒலிக்கிரமி
555.Source codeமூலவரைவு
556.Sourceமூலம்
557.Spaceவெளி/இடைவெளி
558.Spacingஇடைவெளியிடல்
559.Spamஎரிதம்
560.Speakerஒலிப்பெருக்கி
561.Special pagesசிறப்பு பக்கங்கள்
562.Specificationவிவர வரையறை
563.Spell checkerசொற்பிழை திருத்தி
564.Splitபிரிப்பு
565.Spoolerசுருளி
566.Spreadsheetவிரித்தாள்
567.Standardநியமம்/தரப்பாடு
568.Standardisationதரப்படுத்துதல்
569.Statsபுள்ளிவிவரங்கள்
570.String literalsசர மதிப்புருக்கள்
571.Structured programmingகட்டுரு நிரலாக்கம்
572.Stubகுறுங்கட்டுரை
573.Subtitleதுணையுரை
574.Suffixபின்னொட்டு
575.Super Computerமிகுவேகக் கணினி/மீக்கணினி
576.Supportஉதவி
577.Syntax errorதொடரமைப்புத் தவறு
578.Sysopமுறைமைச் செயற்படுத்துனர்
579.System operatorகட்டக இயக்குநர்
580.System programmerகட்டக நிரலாளர்
581.Systemகட்டகம்
582.Tabதத்தல்
583.Technologyதொழில் நுட்பம்
584.Templateவார்ப்புரு
585.Terminalமுனையம்
586.Terms of serviceசேவை விதிமுறைகள்
587.Text formattingஉரை வடிவம்
588.Text to speechஉரையை பேச்சாக்குதல்
589.Text to voiceஉரையைக் குரலாக்குதல்
590.Themeதோற்றக்கரு
591.Theoryதேற்றை
592.Thesisதேற்று
593.Time zoneநேரவலையம்
594.Titleதலைப்பு
595.Toolbarகருவிப்பட்டை
596.Top level domainஉயர் மட்டக் கொற்றம்
597.Transistorதிரிதடையம்
598.Trashகுப்பை
599.Uncategorizedவகைப்படுத்தப்படாதவை
600.Undoசெய்தவிர்/செய்ததைத் தவிர்
601.Unitபிரிவு
602.Updateஇற்றைப்படுத்து
603.Upgradeமேம்படுத்து/மேம்படுத்தல்
604.Uploadபதிவேற்று
605.URL(இணைய) முகவரி
606.Userபயனர்
607.User accountபயனர் கணக்கு
608.User’s guideபயனர் வழிக்காட்டி
609.Utilityபயனமைப்பு
610.Vandalismநாசவேலை
611.Variableமாறி/மாறுப்படுகிற
612.Versionபதிப்பு
613.Video blogஒளிதப் பதிவு
614.Videoஒளிதம்/காணொளி
615.View profileசுயவிவரம் காண்பி
616.Viewபார்வை
617.Viewerபார்வையாளர்
618.Virtual serverமெய்நிகர்ச் சேவையகம்
619.Virusநச்சுநிரல்
620.Visitorவருகையாளர்
621.Voice mailகுரலஞ்சல்
622.Voice recognitionகுரலறிதல்/குரல் இணங்காண்பி
623.Volumeஒலியளவு
624.Watch listகவனிப்புப் பட்டியல்
625.Watchகவனி
626.Websiteஇணையத்தளம்
627.Windowசாளரம்
628.Wirelessகம்பியில்லா
629.Wish listவிருப்பப்பட்டியல்
630.Wizardவழிகாட்டி
631.Word processorசொற் செயலி
632.Working environmentபணிச்சூழல்
633.Worksheetபணித்தாள்
634.Workstationபணிநிலையம்
635.World Wide Web (WWW)வைய விரிவு வலை

மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும்

மொழிப்பெயர்ப்பு என்பதற்கும் கலைச்சொல்லாக்கம் என்பதற்கும் இடையில் அதிக வேறுப்பாடு உண்டு. மொழிப்பெயர்ப்பு என்பது ஆங்கிலச் சொல்லுக்கான நேரடி பொருள் பெயர்ப்பாகும். கலைச்சொல்லாக்கம் என்பது ஒவ்வொரு துறையும் சார்ந்தும் அவற்றின் பொருளை எளிதாக உணர்த்தும் வண்ணம் உருவாக்கப்படும் சொற்களாகும்.

நேரடி மொழிப்பெயர்ப்பு சொற்கள்:

Application = விண்ணப்பம்
Architecture = கட்டடக்கலை
Home = வீடு

கணினித் துறைச்சார்ந்து உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள்:

Application = செயலி
Architecture = கட்டமைப்பு
Home = முகப்பு

நிலைக்கும் கலைச்சொற்கள்

ஏனைய துறைகளைப் போலவே, கணினித் துறையிலும் உருவாக்கப்பட்ட கணினிக் கலைச்சொற்களில் நிலைப்பெற்றவையும் நில்லாமல் மறைந்தவையும் உள்ளன. பலரின் விருப்புக்கு அமைய நிலைத்துவிடும் கலைச்சொற்களும் உள்ளன. இருப்பினும் உருவாக்கப்படும் கலைச்சொற்கள் எந்தளவு மக்களின் புழக்கத்திற்கு சென்றடைகிறதோ அந்தளவே அச்சொற்களின் நிலைப்பும் அமைகின்றன. ஏனையவை காலப்போக்கில் மறைந்து விடுகின்றன.

எடுத்துக்காட்டாக:

"Blog = வலைப்பூ, வலைமனை, வலைப்பக்கம், வலைப்பதிவு" போன்ற கலைச்சொற்களில் தற்போது பெரும்பாலும் நிலைத்து நிற்கும் சொல் "வலைப்பதிவு" மட்டுமே ஆகும்.

"Comment = விமர்சனம், கருத்துரை, முன்னிகை, பின்னூட்டம்" என பலசொற்கள் இருந்தாலும், அநேகமானோர் பயன்படுத்தும் சொற்கள் "கருத்துரை, பின்னூட்டம்" போன்றவைகள் மட்டும் தான்.

இருப்பினும் இவ்வாறு ஒரே சொல்லுக்கான பல கலைச்சொற்கள் இருப்பதில் எவ்விதக் குறையும் இருப்பதாகக் கொள்ளமுடியவில்லை. அவை குறித்த சொல்லின் சரியான பொருளைத் தருமாயின் அவற்றை ஒத்தக்கருத்துச் சொற்களாகப் பயன்படுத்தலாம். அவை தமிழ் மொழியின் சொல்வளத்தை பெருக்கிக்கொள்ள உதவும்.

ஒலிப்பெயர்ப்பு சொற்கள்

ஆங்கிலத்திலிருந்து கலைச்சொற்களாக மாற்றக்கூடாத, மொழிப்பெயர்க்கக் கூடாத சொற்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக இலங்கையில் உள்ள "மகாராஜா நிறுவனம்" எனும் பெயரில் உள்ள "மகாராஜா" என்பதனை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை "The great King" என்றோ "Emperor" என்றோ ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுதுதல் முற்றிலும் தவறானது ஆகும். ஏனெனில் அது ஒரு பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயராகும்; அதனாலேயே மகாராஜா என்பதனை ஆங்கிலத்தில் எழுதினாலும் அப்படியே ஒலிப்பெயர்ப்பு செய்யப்பட்டு "Maharaja" என்று எழுதப்படுகின்றது. அவ்வாறே கணினித் துறையிலும் இணையத்திலும் காணப்படும் பதிவுசெய்யப்பட்ட வணிகப் பெயர்களை எம்மொழியில் எழுதினாலும், அவற்றை ஒலிப்பெயர்த்து பயன்படுத்துதலே சரியானதாகும்.

Google = கூகிள்
Yahoo = யாஹு
மகாராஜா = Maharaja (Organization Limited)

கலைச்சொல் உருவாக்குனர்கள்

இந்த அட்டவணையில் காணப்படும் தமிழ் கணினிக் கலைச்சொற்களில் அதிகமானவை இணையத்தில் பரவலாக பயன்படும் சொற்களின் தொகுப்பே ஆகும். என்னால் உருவாக்கப்பட்டவை "Branching = கிளைப்பிரிதல், Customize = விருப்பமை (தனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்தல்)" போன்ற ஒரு சில சொற்கள் மட்டுமே ஆகும். கணிசமானவை விக்சனரி குழுமத்தில் கலந்தாய்வு செய்து பெறப்படும் சொற்களில் பொருத்தமானவைகளாக நான் கருதும் சொற்கள், குறிப்பாக இராம.கி ஐயாவினால் அறிமுகப்படுத்தும் அருமையான கலைச்சொற்கள் இவ்வட்டணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக:

Moderation = மட்டுறுத்தல்
Post = இடுகை
Comment = பின்னூட்டம்/முன்னிகை
System = கட்டகம்
Domain = கொற்றம்

போன்ற கலைச்சொற்கள் இராம.கி ஐயா உருவாக்கியவை ஆகும். தமிழ் மொழிக்கும், தமிழ் கலைச்சொல்லாக்கத்திற்கும் இராம.கி ஐயாவின் பங்களிப்பு காலத்தால் போற்றத்தக்கவை. இவரது வலைப்பதிவை எல்லோரும் கட்டாயம் பார்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கலைச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்பதனையும் இவரது இடுகைகள் ஊடாக அறிந்துக்கொள்ளலாம்.

இராம்.கி ஐயாவின் வலைப்பதிவு: http://valavu.blogspot.com/
அண்ணா பல்கலைக்கழகத்தின்: கணிப்பொறிக் கலைச்சொல் அகராதி பதிவிறக்கம்

குறிப்பு: கணினி கலைச்சொற்களை தொகுத்து வழங்குவதன் நோக்கம், இன்றைய கணினி உலகில் பயன்படும் ஆங்கில கணினிச்சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்பதே ஆகும். அத்துடன் இத்தொகுப்பு மின்னஞ்சல் ஊடாக கோரப்படும் பலரது வேண்டுகோளுக்கு இணங்கவே இன்று இடப்பட்டுள்ளது. இவை மேலும் தமிழ் கணினி உலகில் பலருக்கும், குறிப்பாக புதிதாக கணினி உலகிற்குள் நுழையும் இளையோருக்கு பயன்படக் கூடியதாக இருக்கும் என கருதுகிறோம்.

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி!
Tamil Technical Computer Terms, கணினி சொல்லடைவுகள்
அன்புடன் கணினி அருஞ்சொற்கள், Tamil Computing Words
அருண் HK Arun
Glossary of Computer - Related Technical Words in Tamil Download As PDF

37 comments:

மாணவன் said...

அருமை சார்,

அழகாகவும் தெளிவாகவும் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்...

உங்கள் உழைப்பிற்கு ஒரு சல்யூட் சார்...

என்னைப்போன்ற கணினி அறிவை கற்றுவரும் மாணவர்களுக்கு மிக மிக முக்கியமான அவசியமான பயனுள்ள ஒரு பதிவு சார்...

இன்றைய காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு மிக அவசியமான ஒன்று இதை சிறப்பாகவும் எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி எழுதிவரும் உங்களின் பணி போற்றுதலுக்குரியது...

என் நண்பர்கள் யாராவது இனையத்தில் தமிழின் மூலம் ஆங்கிலம் கற்க தளம் கேட்டால் நான் பட்டென்று சொல்வது உங்கள் தளத்தைதான்....

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

இன்னும் நிறைய எதிர்பார்ப்புகளுடன்...

உங்கள். மாணவன்

Anonymous said...

thank you for your valuable post

Sivakumar

Anonymous said...

thank you for your valuable post

Sivakumar

HK Arun said...

-மாணவன்

உங்கள் கருத்துரை மிக்க மகிழ்ச்சியை தருகின்றது.

மிக்க நன்றி நண்பரே!

HK Arun said...

- Sivakumar

//thank you for your valuable post//

மிக்க நன்றி நண்பரே!

Ilakkuvanar Thiruvalluvan said...

நன்முயற்சிக்குப் பாராட்டுகள். thiru-padiappugal.blogspot.com வலைப்பூவில் கணிணி கலைச் சொற்கள் குறித்து உள்ள கட்டுரைகளைக் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

s. nagarajan said...

thank you for your valuable post

Very useful

thanks again

இரா.கதிர்வேல் said...

என்னைப் போன்று கணினி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் தமிழில் தர வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக அமையும்.

HK Arun said...

-s. nagarajan

//thank you for your valuable post

Very useful//

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே!

HK Arun said...

-இரா.கதிர்வேல்

//என்னைப் போன்று கணினி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் தமிழில் தர வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக அமையும்.//

உங்கள் கருத்துரை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனெனில் கணினி நுட்பத்தகவல்களை சிறப்புடன் வழங்கிவரும் பல வலைப்பதிவுகள், தமிங்கிலிஸ் வழியே எழுதிவரும் போது, தமிழிலேயே எழுத வேண்டும் எனும் உங்கள் எண்ணம் பாராட்டுக்குறியது.

நன்றி நண்பரே!

HK Arun said...

-இலக்குவனார் திருவள்ளுவன்

வணக்கம் ஐயா!

//வலைப்பூவில் கணிணி கலைச் சொற்கள் குறித்து உள்ள கட்டுரைகளைக் காண வேண்டுகின்றேன்.//

கணிணிச் சொற்கள் பகுதிகள் நான்கையும் பார்த்தேன். கலைச்சொல்லாக்கம் குறித்த உங்கள் பார்வையையும், நீங்கள் பரிந்துரைக்கும் கலைச்சொற்களையும் பார்த்தேன்.

தமிழ் தமிழர் குறித்த உங்கள் எண்ணங்களையும் எதிர்ப்பார்ப்புகளும் சிந்தனைக்குறியன. அங்கேயே எனது கருத்துரைகளை இட்டுள்ளேன்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

Anonymous said...

Cursor சுட்டி =
Mouse சொடுக்கி சுட்டி = எது சரி?

ராகவன்

HK Arun said...

"Mouse" என்பதற்கு "சொடுக்கி" என்றும்
Mouse சை சொடுக்குவதால் "Click = சொடுக்கி" என்றும் பயன்படுத்துவது சரியாகப் படுகின்றது.

Cursor என்பதற்கு "சுட்டி" எனலாம். நான் அவ்வாறே பயன்படுத்தியுள்ளேன். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான சொற்கள் பயன்படுத்துதல், பயனரிகளிடையே குழப்பத்தையும் சில நேரம் தவறான பொருள் கொள்ளவும் வாய்ப்புள்ளது.

இதற்கான தீர்வு:

கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபடுவோர் ஒருங்கிணைந்து சொற்களை உருவாக்கி பயனர் பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் வேண்டும்.

Unknown said...

sir i have an doubt. what's the explanation of usb?

HK Arun said...

-pprogresssathish

USB என்பது Universal Serial Bus எனும் சொற்றொடருக்கான சுருக்கப் பெயராகும்.

நன்றி!

அணில் said...

முதல் முறையாக தங்கள் தளத்திற்கு வந்துள்ளேன். இது கிராமப்புற மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ள தளம். இத்தளத்திற்கு இணைப்பு தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி

அணில் said...

கிராமப்புற மாணவர்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும் வலைப்பூ. நன்றி

HK Arun said...

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ந.ர.செ. ராஜ்குமார்

deena said...

thank u you sir

dayalan.g

Anonymous said...

Muthalil yen nandrigal!!! Nanunum evalavo valai pakanagalai pathulaen annal mudalill thigaithu poi nindradu intha vaalai pakathi than

bu77lightyear said...

Excellent .I learnt a lotof new words here .Thanks.
Please can you help me with the appropriate,tamil words for :

Social networking
Facebook
Twitter
Tweets

bu77lightyear said...

Excellent .I learnt a lotof new words here .Thanks.
Please can you help me with the appropriate,tamil words for :

Social networking
Facebook
Twitter
Tweets

அணில் said...

Social networking சமூக வலையகம் / வலைதளம் / வலை
Facebook முகநூல்
Tweets கிரீச்சல்கள்

Unknown said...

What is Tablet Pc in Tamil ?

Unknown said...

I know lot of tamil meanings of computer words, from this dictionary.vey useful and i appriciate you.thanks.

Ur's Prasanaa said...

superb ji

PSS SJK(T) LDG CHERSONESE said...

அருமை. வாழ்துகள். மிகப் பயனான தகவல்

Unknown said...

very thanks for this website

mahesh said...

thank you sir

great works

Unknown said...

PLEASE somebody translate "simulation"

A2ZNETCOLLECTION said...

GOOD YOUR JOB SIR
THANK YOU VERY MUCH!!!!!!!!!!!!!!!!

tamilandenglish said...

'undo'என்பதை 'செயல் தவிர்' என்று தந்துள்ளீர்கள்.'செயல் தவிர்' என்றால்'avoid action' என்றுதான் பொருள் அமையும். 'undo' என்பது ஒரு செயலைத் திருப்பி அதை இல்லாமல் ஆக்குவது ஆகும். எனவே,'undo' என்பதைச் 'செயல் திருப்பு' என்று ஆக்கினால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
-த.ரா.சுரேஷ், மனநல மருத்துவர்

change the universe said...

3d பயன்பாட்டில் XYZ என்பதற்கு நிகராக அஇஉ என்பதை பயன் படுத்தலாம்

பிறேம்குமார் said...

What are the Tamil words for SLIDE and SLIDE SHOW?

Unknown said...

தமிழ் உலகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது நன்றி சொல்ல வார்தைகள் இல்லை...

Unknown said...

Super

Unknown said...

arumai ayya. valka thamizh..

Post a Comment