ஆங்கில முற்றுப்புள்ளி (Full Stop or Period)

முற்றுப்புள்ளி என்பதை பிரித்தானிய ஆங்கிலத்தில் "Full stop" என்றும், சில சமயங்களில் "Full point" என்றும் அழைக்கின்றனர். அமெரிக்க ஆங்கிலத்தில் "Period" என்று அழைப்பர்.

முற்றுப்புள்ளியின் பயன்பாடுகள்

01. ஒரு வாக்கியத்தின் முடிவைக் குறிக்க முற்றுப்புள்ளி  பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

I can speak in English.
எனக்கு ஆங்கிலத்தில் பேச முடியும்.

Tamil is a classical language.
தமிழ் ஒரு செம்மொழி.

02. ஆங்கிலச் சொற்களை சுருக்கப்பயன்பாடாக (Abbreviations) எழுத்தில் குறிக்கும் பொழுது இந்த முற்றுப்புள்ளி பயன்படும்.

எடுத்துக்காட்டாக:

Jan.
e.g.
a.m.
p.m.
etc.

03. இணைய முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் திகதி போன்றவற்றை எழுதும் பொழுது இடப்படும் புள்ளியை "முற்றுப்புள்ளி" என்று அழைப்பதில்லை. அதனை "புள்ளி" என்றே அழைக்கவேண்டும். ஆங்கிலத்தில் "dot" என்றழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக:

aangilam.blogspot.com
arunhk.infoATgmail.com
08.07.2010

குறிப்பு

நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாட்டை Aristophanes of Byzantium என்பவரே கிரேக்க மொழியில் அறிமுகப்படுத்தினார். அவரே முற்றுப்புள்ளியை அறிமுகப்படுத்தியவரும் ஆவார். அதனைத்தொடர்ந்து அதன் பயன்பாடு மருவி வெவ்வேறு மொழிகளில் இடம் பெறத்தொடங்கின. அவ்வாறே ஆங்கிலத்திலும், ஆங்கில வழியில் எமது பயன்பாட்டிலும் வந்தடைந்துள்ளது.

இருப்பினும் ஒரு வாக்கியத்தின் முடிவை குறிக்க பயன்படும் முற்றுப்புள்ளிக்கு பதிலாக; யப்பான் சீன மொழிகளில் ஒரு சிறிய வட்டம் "。" இடப்படுகின்றது. (Chinese and Japanese, a small circle is used instead of a solid dot: "。") பாக்கிஸ்தானிய உருது மொழியில் ஒரு சிறிய கிடைக்கோடு இடப்படுகின்றது. (Urdu uses "۔")

ஏனைய நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாடுகள் தொடர்ந்து வரும்.

தொடர்புடைய இடுகை

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

முழுசா ஆங்கிலம் கத்துக்குன்னு நினைக்கிறவங்க உங்கள் தளத்தை பார்த்தாலே போதும்......

HK Arun said...

- DrPKandaswamyPhD

//Good information//

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி

- rk guru

//முழுசா ஆங்கிலம் கத்துக்குன்னு நினைக்கிறவங்க உங்கள் தளத்தை பார்த்தாலே போதும்.....//

மிகைப்படுத்தி கூறுகிறீர்கள். தொடர் பயிற்சி ஒன்றுதான் ஆங்கிலம் கற்பதற்கான வழி. கருத்துப்பகிர்வுக்கு நன்றி நண்பரே

Muthhuswaamy said...

//அமெரிக்க ஆங்கிலத்தில் "Full stop" என்றும், சில சமயங்களில் "Full point" என்றும் அழைக்கின்றனர். பிரித்தானிய ஆங்கிலத்தில் "Period" என்று அழைப்பர்//

I think it's the other way round. Please check.

Great blog! Good going! :) All the best!

HK Arun said...

-Muthhuswaamy

ஆம்! மறுவலத்தில் தான் வரவேண்டும்.

சுட்டிக்காட்டலுக்கு நன்றி.

Post a Comment