நிச்சயப் பெயர்ச்சொற்குறி: ஒலிப்பு (The vs Thee)

யாரேனும் ஒருவரை அல்லது ஏதேனும் ஒன்றை ஆங்கிலத்தில் சுட்டிக்காட்டி பேசுவதற்கு அல்லது குறிப்பிட்டு பேசுவதற்கு; "The" எனும் நிச்சயப் பெயர்ச்சொற்குறி பயன்படுகின்றது. இந்த "The" எனும் பெயர்ச்சொற்குறியை எழுதும் பொழுது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக எழுதினாலும், ஒலிப்பின் போது ஒரே மாதிரி ஒலிக்கப்படுவதில்லை.

சாதாரணமாக ஆங்கில மெய்யெழுத்துக்களின் ஒலியுடன் தொடங்கும் சொற்களின் முன்பாக “த” என்றும், ஆங்கில உயிரெழுத்துக்களின் ஒலியுடன் தொடங்கும் சொற்களின் முன்பாக தி” என்றும் ஒலிக்க வேண்டும்.

இவ்வேறுப்பாட்டை கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலி கோப்பினை சொடுக்கி, எந்த இடத்தில் "த" வாக ஒலிக்கப்படுகின்றது, எந்த இடத்தில் "தி" யாக ஒலிக்கப்படுகிறது என  கேட்டுப்பாருங்கள்.

The vs Thee.mp3

The apple
The ball
The computer
The dog
The elephant
The fish
The great Tamil scholar
The higher education
The hill
The honest woman
The honorable man
The hours
The house
The independent newspaper
The jam bottle
The kinder garden
The laptop
The map
The national park
The one
The orange
The picture
The Quran
The restaurant
The student
The tournament
The ugly fruit
The umbrella
The United States
The university
The vote
The world map
The x files
The young ones
The zone

எந்தெந்த சொற்களின் முன்னால் "த" என ஒலிக்கப்படுகின்றது, எந்தெந்த சொற்களின் முன்னால் "தி" என ஒலிக்கப்படுகின்றது என்பதை கவனித்தீர்களா? இல்லையெனில் மீண்டும் மீண்டும் கேட்டு உச்சரிப்பு வேறுபாட்டை விளங்கிக்கொள்ளுங்கள்.

விளக்கம்

"The" நிச்சயப் பெயர்ச்சொற்குறிக்கு முன்னால் வரும் சொல்லின் முதலெழுத்து மெய்யெழுத்தாக இருந்தால் "த" என்று ஒலிக்க வேண்டும் என்றும், உயிரெழுத்தாக இருந்தால் "தி" யாக ஒலிக்க வேண்டும் என கூறப்பட்டாலும், மெய்யொலி தரும் சொற்கள் முன்னால் "த" என்றும், உயிரொலி தரும் சொற்கள் முன்பாக "தி" என்றும் உச்சரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

மெய்யெழுத்துக்கள் (Consonants)

b c d f g h j k l m n p q r s t v w x y z = (21)

உயிரெழுத்துக்கள் (Vowels)

a e i o u = (5)

"த" வாக ஒலிக்கும் இடங்கள்

மெய்யொலியுடன் தொடங்கும் சொற்களின் முன்னால் "த" வாக ஒலிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

The ball
The computer
The dog
The fish
The great Tamil scholar
The higher education
The hill
The house
The jam bottle
The kinder garden
The laptop
The map
The national park
The one
The picture
The Quran
The restaurant
The student
The tournament
The united states
The university
The vote
The world map
The young ones
The zone

"தி" யாக ஒலிக்கும் இடங்கள்

உயிரொலியுடன் தொடங்கும் சொற்களின் முன்னால் "தி" யாக ஒலிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக:

The apple.
The elephant.
The honest woman.
The honorable man.
The hours.
The independent news paper.
The orange.
The ugly fruit.
The umbrella.
The x files.

தொடர்புடைய பாடங்கள்:
அறிவிப்பு:
எமது பாடங்களை PDF கோப்புகளாக எப்படி பெறலாம் என கேட்டுவரும் அன்பர்களுக்கு: இன்றிலிருந்து எமது பாடங்களை PDF கோப்புகளாக பதிவிறக்கிக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம். ஒவ்வொரு இடுகையினதும் அடியில் Download as PDF என காணப்படும் சுட்டியை சொடுக்கி பதிவிறக்கி பயன்பெறலாம். (Right Click > Save Target As > Save)

மின்னஞ்சல் ஊடாக ஒருவர் “The” என்பதை “த” என்று ஒலிப்பது சரியா, “தி” என்று ஒலிப்பது சரியா, எனக்கேட்டிருந்தார். அவருக்கும் மற்றும் அவரை போன்றோருக்கும் பதிலாகவே இப்பாடம் வழங்கப்பட்டுள்ளது.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

16 comments:

ரவிஷா said...

உங்கள் வலைப்பக்கத்தை நேற்றுதான் பார்த்தேன்! உங்கள் சேவைக்கு நன்றி! எனக்கு ஆங்கிலம் ஓரளவுக்கு தெரிந்தாலும், நீங்கள் எழுதிய பல பாடங்களையும் துணுக்குகளையும் படிக்கும்போது “ஆஹா! நாம செய்யுறது கரக்ட் தான் போல!” என்று வாய்பிளக்கவும் உதவுகிறது! வாழ்க/வளர்க உங்கள் சேவை!


BTW, நம்மூர் (தமிழ்நாட்டு) மக்களுக்கு திடீரென்று confident-confidence வார்த்தைகளுக்கு மேல் ஒரு மோகம் வந்திருக்கிறது! சினிமாக்களிலும் சீரியல்களிலும் இந்த வார்த்தைகள் நாறடிக்கப்படுகிறன்றன! இதைப் பற்றி “Confidence-Confident" ஒரு துணுக்கு ஏன் நீங்கள் போடக்கூடாது!

எனக்கு இந்த வார்த்தைகளின் usage தெரிந்தாலும் பல பேருக்கு குறிப்பாக Blog எழுதுகிறவர்களுக்கு தெரிவதில்லை! உங்களின் ஒரு posting-இல் ஒருவர் “confident" என்று தவறாக குறிப்பிட்டிருந்தார்! அவருக்காகவாவது நீங்கள் துணுக்கு வெளியிடவேண்டும்!

நன்றி!

தமிழ் said...

வணக்கம்.

நற்றமிழில் மிக அருமையாக ஆங்கிலப் பாடத்தை எழுதிவருகிறீர்கள். அருமையாக உள்ளது. இன்றுதான் தங்களின் வலைப்பதிவைக் கண்டேன். ஆங்கில வரலாற்றைப் படித்தேன். இன்னும் ஆயிரங்கணக்கான தமிழ்சொற்கள் ஆங்கிலத்தில் புலங்குகின்றன என்பதையும் நான் எண்ணிப்பார்க்கிறேன்.

ஆங்கிலேயர்களின் ஆங்கிலத்தைக் கற்பதைக்காட்டிலும் ஆங்கிலேயர்களின் மொழிப்பற்றைச் சிறிதேனும் தமிழர்கள் கற்றல் வேண்டும்.

நன்றி.

HK Arun said...

அன்புடன் ரவிஷா,

உங்கள் நீண்ட கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

//“Confidence-Confident" ஒரு துணுக்கு ஏன் நீங்கள் போடக்கூடாது!//

உங்கள் வேண்டுகோளின் படி எதிர்வரும் பாடங்களில் நிச்சயமாக போடுகிறேன்.

நன்றி

HK Arun said...

வணக்கம் தமிழ்,

//நற்றமிழில் மிக அருமையாக ஆங்கிலப் பாடத்தை எழுதிவருகிறீர்கள். அருமையாக உள்ளது.//

மிக்க நன்றி

//ஆங்கில வரலாற்றைப் படித்தேன். இன்னும் ஆயிரங்கணக்கான தமிழ்சொற்கள் ஆங்கிலத்தில் புலங்குகின்றன என்பதையும் நான் எண்ணிப்பார்க்கிறேன்.

ஆங்கிலேயர்களின் ஆங்கிலத்தைக் கற்பதைக்காட்டிலும் ஆங்கிலேயர்களின் மொழிப்பற்றைச் சிறிதேனும் தமிழர்கள் கற்றல் வேண்டும்.//

உண்மைதான். ஆனால் தமிழ் பற்றாளர்கள் ஒரு சிலர் இன்னும் இருக்கவே செய்கின்றனர். எல்லா தமிழரிடமும் இச்சிந்தனை தோன்றும் போது எம்மொழி உலக அரங்கில் முன்னனி மொழிகளில் ஒன்றாக மிளிரும்.

எமது பின்னைடைவுக்கு இன்னொரு பிரதானக் காரணம்; நாம் அரசியல் பின்னனி பலம் அற்ற சமுதாயமாக இருப்பதாகும். ஆங்கில மொழி உலகெங்கும் பரவியதற்கான முதன்மை காரணி; அவனது ஆட்சி அதிகாரத்தில் பல நாடுகள் இருந்தது தான்.

ஆனால், ஆட்சி அதிகாரங்களுடன் வாழ்ந்த தமிழ் இனம், இன்று அடிமைகளாகவும், அகதிகளாகவுமே உலகெங்கும் சிதைந்து வாழ்கின்றது. இது என்ன சாபமோ!

Mani said...

Mani,

You are Job is Really Great Mr.Arun...

Thank you so Much and I wish you Your Dream come True...

HK Arun said...

- Mani

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி நண்பரே

//Thank you so Much and I wish you Your Dream come True...//

?!

prabhakaran9130 said...

அருண் அவர்களே!!!ஆங்கிலத்திற்கு அருமையான வலைப்பதிவு இது ...

கீழ்க்காணும் உங்களுடைய கருத்துக்கு பதில் கருத்து கூற விழைகிறேன்...

// ஆட்சி அதிகாரங்களுடன் வாழ்ந்த தமிழ் இனம், இன்று அடிமைகளாகவும், அகதிகளாகவுமே உலகெங்கும் சிதைந்து வாழ்கின்றது. இது என்ன சாபமோ! //உலகில்,தமிழர்கள் எந்த நாட்டில் பாதிக்கப்பட்டாலும் அதை கேட்பதற்கு நாடொன்று வேண்டும்.. உண்மை என்னவெனில்,அப்படி ஒரு நாடு அமைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகின்றது... தேவை சர்வதேச அங்கீகாரம் மட்டுமே....

அதற்கு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ்ச்சொந்தங்கள் முயல வேண்டும்..

prabhakaran9130 said...

அருண் அவர்களே! வாழ்த்துகள்!!!!
ஆங்கிலம் கற்க அருமையானதொரு வலைப்பதிவு இது..

கீழ்க்காணும் உங்கள் கருத்துக்கு பதில் கூற விழைகிறேன்...

// ஆட்சி அதிகாரங்களுடன் வாழ்ந்த தமிழ் இனம், இன்று அடிமைகளாகவும், அகதிகளாகவுமே உலகெங்கும் சிதைந்து வாழ்கின்றது. இது என்ன சாபமோ! //

உலகின் எந்த ஒரு மூலையிலும் தமிழன் தாக்கப்பட்டாலும்,அவர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுக்க ஒரு நாடு அவசியம்தான்.. ஆனால்,அந்நாடு(தமிழீழம்) அமைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகின்றது...
தேவை சர்வதேச அங்கீகாரம் மட்டுமே... அந்த அங்கீகாரத்திற்கு நம்மால் இயன்றதை செய்வோம்...அந்த அங்கீகாரம் கிடைத்த பத்து ஆண்டுகளுக்குள்,அந்நாடு வல்லரசு ஆகிவிடும்...... தமிழர்கள் அப்போது உலகரங்கில் தலைநிமிர்வார்கள்... நாங்கள் வாழ்ந்து வரும் நாட்டில்(இந்தியா) உள்ள மீனவர்களும் கொல்லப்படாமல் மீட்கப்படுவர்,கோழைத்தனமாக போர்புரிந்த,கோழை இராணுவத்தின் கைகளிலிருந்து,தமிழீழ இராணுவத்தின் மூலமாக...எப்போதுமே தமிழீழ ராணுவத்திற்கு,நாங்கள் வாழ்ந்துவரும் நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் ஆதரவளிப்பார்கள்..

-தமிழ்நாட்டிலிருந்து பிரபாகரன்...

Buvaneswaran.S said...

i am realy very like this side

Andro Richard said...

very nice sir i have one doubt sir noodles means in tamil

Ranjith kumar said...

Thank U sir..

Mohamed Ali Jinnah said...

Arun sir, Really a great effort, Thank U very much and I often confuse with definite article and zero article so you pls clear my doubts where we have to use definite article 'the' and zero article.

Siddeek M. Rasheed said...

really you are doing great job,how would i say my gratitude .........any how i wounder why not available the dictionary facilities and translate facilities ?

gman said...

very usefull

Karthik Boomi said...

Great work. it is very very helpful to us, Thanks a lot

nathiya gokul said...

Hi sir,realy this website is very useful to improve english knowledge, but i can not undestand perfect tense,so pls explain it.

Post a Comment