ஆங்கிலம் துணுக்குகள் 09 (Word Stress)

ஆங்கிலம் பேசும் பொழுது, ஆங்கிலச் சொற்களை சரியாகவும் திருத்தமாகவும் பேசுவதற்கு; அதன் ஏற்ற இறக்க ஒலிப்பு முறைமைகளை "சொல்லழுத்தம்" (Word Stress) கற்பது மிகவும் முக்கியமானது. ஒரு தாய்மொழி ஆங்கிலேயரின் ஆங்கில ஒலிப்பிற்கும், பிற மொழியினரின் ஆங்கில ஒலிப்பிற்கும் வேறுப்பாடுகள் இருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

நாம் ஆங்கிலேயர் மாதிரியே ஒலிக்க வேண்டும் என்று இல்லாவிட்டாலும், ஆங்கில செய்தி அறிக்கைகளை கேட்டுணரவும், ஆங்கில திரைப்படங்களை எளிதாக விளங்கிக்கொள்ளவும் இவை மிகவும் முக்கியமானது.

சிலர் ஆங்கிலேயரையும் விட தாமே சரியாக ஆங்கிலச் சொற்களை ஒலிப்பதாக கூறி பெருமிதம் பட்டுக்கொள்வோரும் உள்ளனர். உண்மையில் அது பிழையானது. ஏனெனில் ஆங்கில மொழி பாடசாலைகளில் ஆங்கில சொற்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை syllable கள் உள்ளன, அவற்றை எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாகவே கற்பிக்கின்றனர். இன்று புலம்பெயர் தேசங்களில் எமது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் ஆங்கிலத்தை ஒலிக்கும் விதத்திற்கும், இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கிலம் கற்று பேசுவோருக்கும் இடையில் அதிக வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. அதேவேளை மிகச்சரியாக ஆங்கிலத்தை ஒலிப்போர் எம்மில் இல்லை என்றும் நான் கூறவில்லை. ஆனால் ஒரு சிலர் இருந்தாலும், அதிகமானோரின் ஒலிப்புகளில் இந்த syllable கள் சரியாக ஒலிக்கப்படுவது இல்லை என்பதே உண்மை.

ஏன் எம்மாலும் சரியாக ஆங்கிலச் சிலபல்களை முறையாக ஒலிக்க முடியாதா?

முடியும். நிச்சயமாக முடியும். அதற்கு ஆங்கில ஒலிப்பு முறைகளை அவதானித்து பயிற்சி செய்ய வேண்டும். இங்கே ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்கான சில விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக:

“போட்டோகிராப்” எனும் சொல்லை எடுத்துக்கொண்டால் இதில் “போ” எனும் ஒலியை அழுத்தமாகவும் “டகிராப்” என்பதை மென்மையாகவும் ஒலிக்கப்பட வேண்டும். இவ்வாறு ஒலிக்கும் பொழுது “to” தமிழில் "ட" போன்றே ஒலிக்கும்.

PHOtograph - போfட்டகிராfப்.

இதே போன்ற இன்னொரு சொல்லைப் பாருங்கள்.

phoTOgrapher - பொfடோகிராfபர்.

இதில் “பொ” மென்மையாகவும் “TO” அழுத்தமாகவும், “கிராபர்” மென்மையாகவும் ஒலிக்கப்பட வேண்டும். இதில் “TO” தமிழ் ஒலிப்புக்கு அமைய "டோ" வாகவே ஒலிக்கப்படுகின்றது. ("ட்டு" வாக அல்ல)

இன்னுமொரு சொல்லையும் பார்ப்போம்.

photoGRAPHic - பொfடோகிராfபிக்

இதில் “கிராபி” என்பதை அழுத்தமாகவும் “பொடோ” வும், “க்” கும் மென்மையாக ஒலிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு ஒரு சிலபலைக் கொண்ட சொற்கள், இரண்டு சிலபல்களை கொண்ட சொற்கள், பல syllable களை கொண்ட சொற்கள் என உள்ளன. இவற்றை அறிந்து சரியாக பயிற்சி செய்துக்கொள்ளல் சிறப்பான ஆங்கில உச்சரிப்பை பெற வழிவகுக்கும்.

இங்கே மேலும் சில சொற்கள் எடுத்துக்காட்டாக கொடுக்கப்பட்டுள்ளன. தடித்த எழுத்துக்களில் இருப்பவற்றை அழுத்தமாக ஒலிக்கவும்.

TEACHer

JaPAN

CHIna

aBOVE

converSAtion

INteresting

imPOrtant

deMAND

etCETera

இவை எல்லா பாடசாலைகளிலும் முறையாக கற்பிக்கப்படுகின்றதா என்று எனக்கு திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் இன்றைய கணனி உலகில் இந்த "Word Stress" முறைகளை கற்றுக்கொள்வதெல்லாம் சர்வ சாதாரணம் என்றே சொல்ல வேண்டும். முதலில் ஆங்கில சொற்களின் ஒலிப்புகளை சரியாக ஒலிக்க வேண்டும் எனும் எண்ணம் உங்களிடன் இருக்க வேண்டும். இரண்டாவது முயற்சி. அதற்கான வழிகள்; ஆங்கிலேயரின் வானொலி ஒலிப்பரப்புக்களை கேட்டல், ஆங்கில திரைப்படங்களில் பேசுபவற்றை உன்னிப்பாக கவனித்தல், ஆங்கில காணொளிகளைப் பார்த்தல், ஆங்கிலப் பாடல்களை கேட்டல் போன்றன உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

தொடர்புடைய இந்த ஆக்கங்களையும் பார்க்கலாம்.


இன்றைய இப்பாடம் ஆங்கிலம் துணுக்குகள் பகுதியிலேயே வழங்கப்பட்டுள்ளது. மேலும் துணுக்குகள் இங்கே

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

10 comments:

ganapathis.n. said...

அன்புடன் நண்பர் அருணுக்கு வணக்கம்
நேற்று முதல் 73 வரிகளையும் அப்படியே எழுதினேன், இன்று அடுத்த வீட்டு பாடம்
i feel like speeking in english.நானும் ஒரு வலை தளம் உருவாக்கி உள்ளேன் நேரம் இருந்தால் அசிரியர் நீங்களும் உங்கள்55 வயது மாணவனின் உருவாக்கம் எப்படி என்பதை பாருங்களேன்
hamaragana/blogspot.com & hamgana/blogspot.கம
நன்றி .

HK Arun said...

பின்னூட்டத்திற்கு நன்றி.

(உங்கள் வலைத்தளம் பார்த்தேன். எழுத்து பிழையின்றி நன்றாக எழுதும் ஆற்றல் உங்களிடம் இருக்கின்றதே. தொடர்ந்து எழுதுங்கள்)

செல்வா said...

அருண்,

மிகவும் அருமையாக நீங்கள் ஆங்கில ஒலிப்புக்குகளுக்கான பயிற்சிகள் தருகின்றீர்கள். என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். ஆங்கிலத்தில் வழங்கும் ஒலிகளைத் தமிழ் எழுத்துகள் மூலம் சொல்வதற்கு எளிய குறியீடுகள் அமைத்துக்கொள்வது நல்லது. Photograph என்பதற்கு போட்டோகிராப் என்று தமிழில் எழுதினால் தவறல்ல, ஆனால் ஆங்கில ஒலிப்புடன் பழக முற்படும் பொழுது F போன்ற ஒலிகளும், Fat என்னும் பொழுது வரும் ஏகார-ஆகார கூட்டு உயிரொலிகளைக் குறிக்கவும் குறியீடுகள் தேவை. Ba, Ga, Da, Fa, முதலியவற்றை ப' க' ட' வ' என்பது போல வகுத்துக்கொள்ளலாம்.
வோ'ட்டக்'ராவ்' = Photograph என்று எழுதிக்கொண்டு பின்னர் அழுத்தம் எங்கே வரவேண்டும் என்பதெல்லாம் பேசலாம். இதில் வரும் டகரம் கூட ஆங்கில t ஒலிப்பு அல்ல. டகரம் மேலண்ண ஒலிப்பு, ஆங்கில ta, da
நுனிநாக்கால் பல்லுக்குப் பின் புறம் துடிப்பாய்த் தொட்டெழுப்பும் ஒலி.

பொதுவாக ஒலிப்புகளைக் குறிக்க குறியீடுகள் தேவை என்று குறிப்பிடவே இம்மடலை எழுதினேன்.

அன்புடன்
செல்வா
வாட்டர்லூ, கனடா

HK Arun said...

வணக்கம் செல்வா,

வருகைக்கும் உங்கள் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

//Ba, Ga, Da, Fa, முதலியவற்றை ப' க' ட' வ' என்பது போல வகுத்துக்கொள்ளலாம்.
வோ'ட்டக்'ராவ்' = Photograph என்று எழுதிக்கொண்டு பின்னர் அழுத்தம் எங்கே வரவேண்டும் என்பதெல்லாம் பேசலாம்.//

போf = வோ' என்றும்
Gக = க' என்றும் (Apostrophe) குறி இட்டு எழுதினால் எல்லோரும் புரிந்துக்கொள்வார்களா? என்பது சிந்தனைக்குறியது.

//பொதுவாக ஒலிப்புகளைக் குறிக்க குறியீடுகள் தேவை என்று குறிப்பிடவே இம்மடலை எழுதினேன்.//

ஆம்! J என்பதற்கு கிரந்த "ஜ" பயன்படுத்துகிறோம்.

H என்பதற்கு ஹ பயன்படுத்துகின்றோம்.

B, G, D, F போன்ற ஒலிகளை எமது தமிழ் எழுத்துக்கள் (சில இடங்களில்) தந்தாலும்; அவற்றிற்கென தனித்துவமான எழுத்துருக்கள் இல்லாமையை நிறைவு செய்யும் பொருட்டு நீங்கள் கூறும் குறியீட்டு முறை வரவேற்கத்தக்கது.

இருப்பினும் இதனை நடமுறைச் சாத்தியமாக்குதல் தமிழ் மொழி வல்லுநர்களின் முயற்சியிலேயே தங்கியுள்ளது. அதேவேளை ஒரு இனத்தின் மொழி தொடர்பில் எத்தகைய திறமான முன்னெடுப்புக்களை யார் செய்யினும்; அது அனைத்து தமிழர் பயன்பாட்டிற்கு செல்ல வேண்டுமாயின், அதனை அரச அங்கீகாரத்துடன் அரச ஆவணங்கள் முதல் அனைத்து ஊடகங்கள் மற்றும் பாடசாலை கல்வி வரை நடைமுறைக்கு கொண்டுவரப்படல் வேண்டும். அப்பொழுதே அது அனைத்து தமிழர் பொது பயன்பாட்டுக்கு வரும் என்பது எனது தாழ்மையான கருத்து.

அன்புடன் அருண் | HK Arun

செல்வா said...

அருண்,

அரசு ஏற்போ பிறர் ஏற்போ ஏதும் வேண்டியதில்லை. Ga = க' (இவ்வொலியைக் குறிக்க க என்னும் எழுத்துக்கு அருகே வலப்புறம் ஒரு கொட்டு இடுகின்றோம்). என்று வரையறை செய்துவிட்டு மேற்கொண்டு செல்லலாமே? ஆங்கிலேயர் உலகில் உள்ள எத்தனையோ மொழிகளைப் பற்றி ஆய்கிறார்கள், அலசுகிறார்கள். அவர்கள் என்ன அரசு ஏற்பு பெற்றதா என்றா எண்ணிக்கொண்டு தயங்கி நிற்கிறார்கள்?

ஒரே ஒரு முறை
Ga = க'
Ja= ச'
Da = ட'
Dha = த'
(Thick = திக், Then = தெ'ன்)
Ba = ப'
Fa, Pha = வ'

என்று கூறிவிட்ட்டால் படிபப்வர்கள் புரிந்துகொண்டு பயன் பெறுவர்.
நீங்கள்பயன்படுத்தும் போf என்பதும்
"அரசு ஏற்பு" எதுவும் பெறாததுதானே?
அதற்கு மாறாக fஓ என்றுகூட எழுதலாம். photo = வோ'ட்டோ என்றால் புரிந்துகொள்வார்கள். நல்ல் எளிய முறைகளை நாம் எடுத்து ஆளத் தயங்குகிறோம். ஏன் என்று விளங்கவில்லை. ஏன் அரசு ஏற்பு வேண்டும் என்றும் விளங்கவில்லை?
இது ஒன்றும் மொழியை மாற்றவில்லையே? பிறமொழியைக் குறிக்க ஒரு எளிய வசதி. புதிய எழுத்துருக்கள் எதுவும்
வேண்டியதில்லை. முதலில் தெளிவாக வரையறை செய்துவிட்டு முயன்று பாருங்கள்.

அன்புடன்
செல்வா
வாட்டர்லூ, கனடா

ganapathi.s.n said...

அன்புடன் நண்பர் அருண் வணக்கம் ,
தங்களின் ஆங்கில வலைத்தளம் இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாவது ஆண்டு நடை பயில்வது குறித்து மிக்க
மகிழ்சி .. இன்னும் என்போன்ர மாணவர்களுக்கு பயனுள்ளாதாக அமைய வாழ்த்துக்கள்
நன்றி

HK Arun said...

வணக்கம் ganapathi.s.n ஐயா,

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

manju said...

thank u sir

Unknown said...

thank u sir .its really useful sir

Unknown said...

how can use chat room in aangilam website I need help

Post a Comment