ஆங்கில பாடப் பயிற்சி 18 (Polite and More Polite)

நாம் ஆங்கில பாடப் பயிற்சி 16 இல் “can /be able to” என்பதன் இலக்கண விதிமுறைகளைக் கற்றோம். அதில் “can” என்பதன் பயன்பாடும் “am/is/are able to” என்பதன் பயன்பாடும் ஒத்தக்கருத்தாகவே பயன்படுவதைப் பார்த்தோம்.

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை.

17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

அதாவது நிகழ்காலத்தின் ஆற்றலை அல்லது சாத்தியத்தை வெளிப்படுத்துவதற்கு “can” போன்றே “am/is/are able to” என்பதும் பயன்படும் விதத்தைக் கற்றோம்.

ஆங்கில பாடப் பயிற்சி 17 இல் “can” இன் இறந்தக்காலப் பயன்பாடாக “could” மற்றும் “was/were able to” பயன்படுவதனையும் கற்றோம்.

19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய்ய முடிந்தது ஒரு வேலை.

21. I couldn't do a job.
22. I was unable to do a job. (wasn't able to)
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

இன்றையப் பாடத்தில் நிகழ்காலத் துணைவினை “can” உம் இறந்தக்காலத் துணைவினை “could” உம் ஒரே அர்த்தத்தில் நிகழ்காலம், எதிர்காலம் போல் பயன்படும் வாக்கிய அமைப்புக்களை பார்க்கப் போகின்றோம்.

கடந்தப் பாடங்களில் can / could இரண்டும் துணைவினைகள் என்பதையும், (Can and could are modal auxiliary verbs) “+ able to” ஒரு துணை வினையல்ல என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். மீண்டும் ஒரு முறை வேண்டுமானால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வாக்கிய அமைப்புக்களில் “+ able to” பயன்படுவதில்லை.

அப் பாடங்களில் “Can – முடியும், Could – முடிந்தது” எனும் அர்த்தத்திலேயே கற்றோம். ஆனால் இன்றையப் பாடத்தில் இவற்றின் பயன்பாடு அவ்வாறு அல்லாமல் Polite form ஆகவும் More Polite form ஆகவும் பயன்படுவதனைப் பார்ப்போம். அதாவது “. . . லாமா, . . .கிறீர்களா, . . .வீர்களா” என்பதுப் போல் வேண்டுகோள் விடுத்தல், அனுமதி கோரல் (Request, Permission) போன்றவற்றிற்குப் பயன்படுமுறைகளை கற்போம்.

உதாரணம்:

Can you help me, please?
தயவுசெய்து நீங்கள் உதவுவீர்களா எனக்கு? ("தயவுசெய்து" எனும் சொல் இடம் மாறி எழுதப்பட்டுள்ளது.)

இவ்வாக்கியத்தைக் கவனியுங்கள். உதவி கோருதலையும் மரியாதையான முறையில், நாகரீகமாக வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. இது போன்ற பேச்சு முறைகளையே “Polite Form” எனப்படுகின்றது.

இவ்வாக்கிய அமைப்பையும் கவனியுங்கள்.

Can I ask you a question, please?
தயவுசெய்து நான் கேட்கலாமா உங்களிடம் ஒரு கேள்வி?
என கேள்வி கேட்பதற்கும் அனுமதி கோரப்படுகின்றது. இதனை “தயவுசெய்து” எனும் சொற்பதத்தையும் இணைத்து மரியாதையுடன், நாகரீகமான முறையில் இவ்வனுமதி கோரப்படுகின்றது.

சரி! அப்படியானால் “could” இன் பயன்பாடு என்ன? அதனை கீழுள்ள உதாரணங்களூடாகப் பார்க்கவும்.

Could you help me, please?
தயவுசெய்து நீங்கள் உதவுவீர்களா எனக்கு?

Could I ask you a question, please?
தயவுசெய்து நான் கேட்கலாமா உங்களிடம் ஒரு கேள்வி?

இங்கே Can, Could இவை இரண்டுக்குமான வேறுப்பாட்டை எவ்வாறு தமிழ் படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்த்தால், இரண்டு வாக்கிய அமைப்புக்களும் ஒரே அர்தத்தையே வெளிப்படுத்துகிறது என்பது உங்களுக்கு விளங்கும். ஆம்! இவ்விரண்டு விதமானப் பயன்பாட்டின் போதும் வெளிப்படுத்தப்படுவது ஒரே அர்த்தைத் தான். இவ்விரண்டு வாக்கிய அமைப்புக்களிற்குமான வேறுப்பாட்டை எழுத்தில் கூறமுடியாது. ஆனால் ஒருவர் “can” பயன்படுத்தும் இடத்தில் “could” பயன்படுத்தி வேண்டுகோள் விடுக்கிறார் என்றால் அவர் மிகவும் மரியாதையுடன் பேசுகிறார் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்

எனவே “can” இன் பயன்பாடு மரியாதையான, நாகரீகமானப் பேச்சு என்றால், “Could” இன் பயன்பாடு மிகவும் மரியாதையான, மிகவும் நாகரீகமான பேச்சுப்பயன்பாடு என்பதனை உணர்வால் உணர்தல் வேண்டும்.

அதனால் தான் இதனை ஆங்கிலத்தில் "More Polite" என்கின்றனர்.

மேலும் சில Polite and More Polite பேச்சு முறைகளைப் பயிற்சி செய்யுங்கள்.

1. Can you speak in English, please?
Could you speak in English, please?
தயவுசெய்து நீங்கள் பேசுகிறீர்களா/வீர்களா ஆங்கிலத்தில்?

2. Can you make a cup of tea for me, please?
Could you make a cup of tea for me, please?
தயவுசெய்து தயாரிப்பீர்களா ஒரு கோப்பை தேனீர் எனக்கு?

3. Can you help me, please?
Could you help me, please?
தயவுசெய்து நீங்கள் உதவுகிறீர்களா/வீர்களா எனக்கு?

4. Can I ask a question, please?
Could I ask a question, please?
தயவுசெய்து நான் கேட்கலாமா ஒரு கேள்வி?

5. Can you tell me what time it is, please?
Could you tell me what time it is, please?
தயவுசெய்து எனக்கு கூறுவீர்களா எத்தனை மணி என்று?

6. Can I have some advice, please?
Could I have some advice, please?
தயவுசெய்து நான் பெறலாமா சில அறிவுரை?

7. Can you send me a catalogue, please?
Could you send me a catalogue, please?
தயவுசெய்து அனுப்புவீர்களா எனக்கு ஒரு விபரக்கோவை?

8. Can you tell me where the bank is, please?
Could you tell me where the bank is, please?
தயவுசெய்து வைப்பகம் எங்கே என்று எனக்கு கூறிவீர்களா?

9. Can I have your opinion, please?
Could I have your opinion, please?
தயவுசெய்து நான் அறியலாமா உங்களுடைய அபிப்பிராயத்தை?

10. Can you wait a moment, please?
Could you wait a moment, please?
தயவுசெய்து காத்திருப்பீர்களா ஒரு கணப்பொழுது?

11. Can I ask something personal, please?
Could I ask something personal, please?
தயவுசெய்து நான் கேட்கலாமா கொஞ்சம் தனிப்பட்டவிடயங்கள்?

12. Can I have a glass of water, please?
Could I have a glass of water, please?
தயவுசெய்து எனக்கு கிடைக்குமா ஒரு கோப்பை தண்ணீர்?

13. Can I have your name, please?
Could I have your name, please?
தயவுசெய்து நான் தெரிந்துக்கொள்ளலாமா உங்களுடையப் பெயரை?

14. Can you spell your name, please?
Could you spell your name, please?
தயவுசெய்து எழுத்துக்களைக் கூறுவீர்களா உங்களுடையப் பெயரின்?

15. Can I smoke in this room, please?
Could I smoke in this room, please?
தயவுசெய்து நான் புகைப்பிடிக்கலாமா இந்த அறையில்?

16. Can you give some aspirin, please?
Could you give some aspirin, please?
தயவுசெய்து தருவீர்களா கொஞ்சம் எஸ்பிறின் (மாத்திரைகள்)?

17. Can you lend me your news paper, please?
Could you lend me your news paper, please?
தயவுசெய்து எனக்கு இரவல் கொடுப்பாயா உனது செய்தித் தாளை?

18. Can I use your phone, please?
Could I use your phone, please?
தயவுசெய்து நான் பயன்படுத்தலாமா உங்களுடைய அழைப்பேசியை?

19. Can I borrow your dictionary?
Could I borrow your dictionary?
நான் கடனாகப் பெறலாமா உங்களுடைய அகராதியை?

20. Can I see your driving license, please?
Could I see your driving license, please?
தயவுசெய்து நான் பார்க்கலாமா உங்களுடைய வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை?

21. Can I speak to Sarmilan, please?
Could I speak to Sarmilan, please?
தயவுசெய்து நான் பேசலாமா சர்மிலனுடன்/க்கு?

22. Can I have a kilo of apples, please?
Could I have a kilo of apples, please?
தயவுசெய்து எனக்கு கிடைக்குமா ஒரு கிலோ குமளிப்பழங்கள்?

23. Can I help you, Madam?
Could I help you, Madam?
நான் உங்களுக்கு உதவலாமா சீமாட்டி அவர்களே?

24. Can you help me with my homework?
Could you help me with my homework?
எனக்கு நீங்கள் உதவுவீர்களா எனது வீட்டுவேலையில்/பாடத்தில்?

25. Can I have the bill, please?
Could I have the bill, please?
தயவுசெய்து நான் பெறலாமா பற்றுச்சீட்டு?

கவனிக்கவும்:

இன்றைய இப்பாடத்தின் "Polite and More Polite" பேச்சுக்களில் கேள்வி கேட்பதுப் போன்றே, பதில்களும் மரியாதையானதாக நாகரீகமானதாக அமைய வேண்டும்.

உதாரணம்:

Can I have the bill, please?
Could I have the bill, please?
Certainly sir. I’ll just bring it.

Can
you help me, please?
Could you help me, please?
Of course I can.
Sorry, I am just too busy.

மேலும் இவற்றை எதிர்வரும் "கேள்வி பதில்" பாடங்களில் பார்ப்போம்.

வரைப்படம்:

சிறப்பு:

ஆங்கில மொழியில் மரியாதைமிக்க, நாகரீகமான, நற்பண்புகளை காட்டும் இவ்விதமான பேச்சு வழக்கு ஆங்கில உரையாடலிற்கு மிகவும் இன்றியமையாததாகும். எவ்வளவு திறமான ஆங்கில இலக்கண விதிமுறைகளை நாம் கற்றிருந்தாலும், சொற்களஞ்சியங்களை மனனம் செய்து வைத்திருந்தாலும் ஆங்கில மொழியில் உரையாடும் போது இவை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளாகும். கணவன் மனைவியிடமும், தாய் பிள்ளையிடமும் மன்னிப்பு கேட்டல், "தயவுசெய்து" எனும் சொற்பதத்தையும் இணைத்துப் பேசுதல் ஆங்கில மொழியில் குறிப்பாக ஆங்கிலேயரிடம் காணப்படும் சிறப்பான பண்புகளாகும். ஆங்கில மொழியை கற்கும் நாமும் இவ்விதமான நாகரீகமான பேச்சுவழக்கைக் கடைப்பிடித்தல் மிகவும் அவசியம்.

நம்மில் சிலர் (எல்லோரும் அல்ல) பாதையில் ஒருவர் மீது தவறுதலாக மோதி விட்டாலும் “மன்னிக்கவும்” எனும் வார்த்தை தவறியும் அவர்கள் நாவில் இருந்து உதிர்வதில்லை. சிலர் மோதி விட்டு திரும்பிப் பாராமலேயே செல்வோரும் உளர். இதுப்போன்றச் செயல்களை வீரமாக நினைக்கும் அறியாமையும் நம்மில் சிலரிடம் இருக்கவே செய்கின்றது. இன்னும் சிலரோ மன்னிப்புக் கேட்பதையே பெரும் இழுக்காக நினைப்பர்வகளும் உளர். ஆனால் ஆங்கிலேயர் மத்தியிலோ இவ்வாரான குணயியல்புகள் பண்பற்றவன் என்பதனை காட்டி நிற்கும்.

எனவே மரியாதையுடன் கூடிய, நாகரீகமான ஆங்கிலப் பேச்சு வழக்கிற்கு நாம் "Polite and More Polite" வாக்கிய விதிமுறைகளின் படி பேசிப்பழகுவது பல பின்னடைவுகளை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.

கீழே இணைக்கப்பட்டிருக்கும் வலைக்காட்சியைப் பாருங்கள்.Good Morning!
Thanks
Thank you
Can I help you?
Excellent! Thank you
How are you?
I am fine, Thank you
Excuse me
Please sit down.
Pleased to meet you.
Welcome
Let me show you the department
Let me take your coat?
Would you like cup of coffee?
No, Thanks.

இவை அனைத்தும் இவ்வலைக்காட்சியில் இடம்பெறும் வார்த்தைகள். இவை அநேகமாக எல்லோருக்கும் தெரிந்த சொற்களாகத்தான் இருக்கும். இருப்பினும் இச்சொற்கள் பயன்படும் பாங்கினையும், பயன்படுத்தும் விதத்தையும் பாருங்கள். வரவேற்பாளினி, நிர்வாகி, உரிமையாளர் சகப் பணியாளர்கள் என்று எல்லோரும் நாகரீகமாகவும் மரியாதையாகவும் உரையாடுவதனைக் காணலாம். புதிதாக இணையும் ஒரு நிர்வாகி அவரை நாகரீகமாக வரவேற்கும் சகப்பணியாளர்கள், அவர் அறிமுகமாகும் விதம், அவரை சகப்பணியாளர்கள் வரவேற்கும் விதம், புதிதாக அறிமுகமான ஒருவருக்கான பணிகளை விவரிக்கும் ஒழுங்கு, அவருடனான பண்பான பேச்சு முறை, அவரது பண்பான பதில்கள், என பல “Polite language” சொற்கள் இவ்வலைக்காட்சியில் உள்ளன. இவற்றை முறையாக பயில்வது சிறப்பான ஆங்கில பேச்சுப் பயிற்சிக்கு இன்றியமையாதவைகளாகும். மேலும் இவை பிழையற்ற ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கும் உதவும்.

இன்னும் கூறுவதானால் இவ்வித நாகரிகமான Polite and More Polite இன் பயன்பாடுகளைச் சரியாகப் பயன்படுத்துவோமானால் செல்லும் நாடுகளில் நற்பண்புகளை வெளிப்படுத்தும் இவ்வார்த்தைப் பிரயோகங்களினால் பலரின் மனங்களை இலகுவாக வென்று எமது இலக்கையும் எளிதாக எட்டிவிடலாம்.

அதானாலேயே இப்பாடத்தை நாம் சிறப்புப் பாடம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

மேலும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Polite Language வார்த்தைகளைப் பாருங்கள்.

May I have . . .
May I know . . .

Might . . .
Would you like . . .
If you don’t mind . . .
Do you mind if . . .
Excuse me, Please . . .
இவ்வித வார்த்தைகள் எவ்வாறு "Polite Forms" களாக பயன்படுகின்றன என்பதனை எமது பாடத் திட்டத்திற்கமைய Grammar Patterns 1 இன் இலக்க வரிசையின் படி தொடர்புடையப் பாடங்களூடாகக் கற்பிக்கப்படும்.

சரி! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

வழமைப்போல் இப்பாடம் தொடர்பான சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் ஊடாகவோ, எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக் கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் ஆசிரியர் அருண். Polite and More Polite Forms in Tamil, Request Forms in Tamil

Download As PDF

26 comments:

Anonymous said...

Raviii:

This article is very much useful to me. Now only i got a complete meaning of can / could usage. I appreciate ur postings. Thanks a lot.

Anonymous said...

Hi,
This is an important topic. its very useful to me and hope the same for all.
i would like to appriciate your effort to do these.
excellent work..... keep going

thank you

Venkat

HK Arun said...

- Raviii

- Venkat

உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி

நன்றிகள் இருவருக்கும்

Anonymous said...

நன்றி அருண்.

Anonymous said...

ஏதோ சில வருடங்களுக்கு பிறகு இந்த பாடம் (18) வந்ததைப்போல் இருக்கின்றது,

Anonymous said...

நண்பரே, இன்றுதான் உங்களின் வலைப்பூவைப் பார்க்க நேர்ந்தது. உண்மையாலுமே மிகவும் அருமை நண்பரே. உடல் சிலிர்க்கின்றது. மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி தரும் உங்களின் தன்னலமற்ற பதிவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.. உங்கள் வலைப்பக்கத்தை நான் எனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த போக்கிறேன்.

நான் முதலில் இருந்து படிக்க வேண்டும். நிச்சயம் அதற்க்கு சில நாட்கள் வேண்டும். உங்கள் முதல் பதிவு எந்த மாதம் அல்லது எந்த வருடம் தொடங்கியது நண்பரே..

நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்
சுதாகர்.
முயலும் வெல்லும், முயலாமை வெல்லாது.

HK Arun said...

நண்பர் சு. சுதாகர்

//மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி தரும் உங்களின் தன்னலமற்ற பதிவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்//

பாடங்கள் எளிமையாக இருக்கிறது என்பது மிகவும் மகிழ்வாக இருக்கின்றது.

அதேவேளை தனனலமற்ற சக படைப்பாளிகளுடன் ஒப்பிடும் போது எமது பணி மிகவும் சிறியதே. உங்கள் "இந்திய பங்கு சந்தை" அறிக்கைகளும் பயனுள்ள சேவைதான்.

நன்றி.

HK Arun said...

அபூ சமீர்

//ஏதோ சில வருடங்களுக்கு பிறகு இந்த பாடம் (18) வந்ததைப்போல் இருக்கின்றது,//

பாடங்களுக்கான கால இடைவெளி அதிகம் என்பது புரிகின்றது. இனிவரும் மாதங்களில் பாடங்களின் என்னிக்கையை அதிகரிப்போம்.

நன்றி

Unknown said...

Hello Arun

Could I Request

Tamil Meaning is not Understand Please Original Sentence

Unknown said...

Hello Arun

I Could Request

Tamil Meaning is not understand

Please Oringinal Tamil

HK Arun said...

muruga

உங்களுக்கு விளங்காத வார்த்தைகளைக் குறிப்பிட்டுக்காட்டினீர்கள் என்றால் தெளிவுப்படுத்துதல் இலகுவாக இருக்கும்.

நன்றி

Anonymous said...

Thanks Arun:)

by hema...

Unknown said...

Hai Arun,
Plz be a Clarity, oru paragraph full ah read paniduren without pronounsation mistakes, But antha paragraph la ena matter irukunu ennala purinjuka mudiyala, plz give me a idea, Spoken english center poganuma or Dictionary vaichu padichaley pothuma...... Plz help me.....

Anfas said...

I will give u an idea . Be earger in english then you will understand them by
reading it many times

megala said...

sir Goodmorning. Realy this blog is very nice.veryuesful to working people (me Also) iam done in PG. but idon'tknow how to speak in english.past years iam lern to urblogs only.nowadays iam very improved.thanku very much sir
Megala(pvt ltd)
Bangalore

Unknown said...

Would should how to use plese

Jagadesh said...

No words to praise for creating such a useful blog. god bless you

vishnusankar said...

i want to know about being could please help me

sheikfarith said...

Thank you sir

sheikfarith said...

Thank you sir

RAMESH said...

Hi Arun, Thanks!!!

Unknown said...

Thank you soo much

Unknown said...

Thank you soo much

Unknown said...

I want when use is it would for tamil pavithran0427@gmail.com this my email address

Jane Jebarson said...

Great work Bro

Unknown said...

SIR, where you are living?

Post a Comment