ஆங்கில பாடப் பயிற்சி — 8 (there is)

இன்று "there is" எனும் சொற்றொடரை மையப்படுத்தி, இன்றைய கிரமர் பெட்டனை பார்க்கப் போகின்றோம்

There is + "இருக்கிறது" எனும் சொற்றொடரை மையப்படுத்திய இன்றைய கிரமர் பெட்டனும், ஏனைய எமது ஆங்கிலம் தளத்தின் கிரமர் பெட்டன்களைப் போன்றே, "There is a book." எனும் ஒரு வாக்கியத்தை, 22 வாக்கியங்களாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் நாம் ஏற்கெனவே கற்ற கிரமர் பெட்டன்களைப் போல் மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் "Well begun is half done!" என்பர். அதுபோல் எமது ஆங்கில பாடப் பயிற்சிகளில் வழங்கப்படும் கிரமர் பெட்டன்களை, நீங்கள் மனப்பாடம் செய்துக்கொண்டாலே பாதி வெற்றி பெற்று விட்டதற்கு சமமாகும்.

நீங்கள் புதிதாக இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு வருகை தந்தவரானால் எமது பாடப் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 01 லிருந்து தொடரும் படி கேட்டுக்கொள்கின்றோம். அதுவே எளிதாக இப்பாடப்பயிற்சிகளை தொடர வழிவகுக்கும்.
    There is a book.
    இருக்கிறது ஒரு புத்தகம்.
    There is not a book. (isn’t)
    இல்லை ஒரு புத்தகம்.
    There are books.
    இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There are not books. (aren’t)
    இல்லை புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There can be a book.
    இருக்க முடியும் ஒரு புத்தகம்.
    There can't be a book.
    இருக்க முடியாது ஒரு புத்தகம்.
    There will be a book.
    இருக்கும் ஒரு புத்தகம்.
    There won't be a book.
    இருக்காது ஒரு புத்தகம்.
    There was a book.
    இருந்தது ஒரு புத்தகம்.
    There would have been a book.
    இருந்திருக்கும் ஒரு புத்தகம்.
    There were books
    இருந்தன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There must be a book.
    (நிச்சயமாக) இருக்க வேண்டும் ஒரு புத்தகம்.
    There must have been a book.
    இருந்திருக்க வேண்டும் ஒரு புத்தகம். (நிச்சயமாக)
    There may be a book.
    இருக்கலாம் ஒரு புத்தகம்.
    There may have been a book.
    இருந்திருக்கலாம் ஒரு புத்தகம்.
    There has to a book.
    இருக்கவேண்டும் ஒரு புத்தகம்.

    There have to be books.
    இருக்கவேண்டும் புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There should be a book.
    இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.
    There ought to be a book.
    எப்படியும் இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.

    There has been a book.
    [அன்றிலிருந்து/தற்போது வரை] இருக்கிறது ஒரு புத்தகம்.
    There had been a book.
    [அன்றிலிருந்து/ஒரு கட்டம்வரை] இருந்தது ஒரு புத்தகம்.

    There have been books.
    [அன்றிலிருந்து/தற்போது வரை] இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை)

    Homework:

    There is a book on the table. (3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்.
    (ஒரு புத்தகம் மேசையின் மேல் இருக்கிறது.)
    There is an election in the USA .(3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு தேர்தல் அமெரிக்காவில்.
    (அமெரிக்காவில் ஒரு தேர்தல் இருக்கிறது.
    There are two classical languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன இரண்டு செம்மொழிகள் இந்தியாவில்.
    (இந்தியாவில் இரண்டு செம்மொழிகள் உள்ளன/இருக்கின்றன)
    There are 1652 languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 1652 மொழிகள் இந்தியாவில்.
    (இந்தியாவில் 1652 மொழிகள் உள்ளன)
    There are 6760 languages in the world. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 6760 மொழிகள் உலகத்தில்.
    (உலகத்தில் 6760 மொழிகள் உள்ளன.)
    There are hundreds of vegetable items in the market. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் சந்தையில்.
    (சந்தையில் நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் உள்ளன.)
    கவனிக்கவும்:

    ஒருமையாக ஆரம்பிக்கும் வாக்கியங்களில், 3, 4, 11, 17, 22 போன்ற இடங்களில் பன்மையாக (Plural) மாற்றி எழுதுங்கள்.

    பன்மை வாக்கியங்களை, 1, 2, 9, 16, 20 போன்ற இலக்கங்களின் போது (Singular) ஒருமையாக மாற்றி எழுதுங்கள்.
குறிப்பு:


Hereஇங்கே
Thereஅங்கே
Here and thereஇங்கும் அங்கும்

There is a book. -  இருக்கிறது ஒரு புத்தகம். 

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாகவோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

16 comments:

  1. என்னைபோல ஆங்கிலம் கற்றுகொள்ள ஆவலாக ௨ள்ள அனைவருக்கும் இது மிகவும் பயனனுள்ளபகுதி ரொம்ப ரொம்ப நன்றி........

    ReplyDelete
  2. வனக்கம் திரு அருன் அவர்களே..... அடுத்த பதிவ எப்ப போடுவிங்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன்...

    ReplyDelete
  3. வணக்கம் dawood

    மாதம் இரண்டு அல்லது மூன்று பாடங்கள் வழங்குவதாக உள்ளேன். இவைப் பதிவுகளாக அல்லாமல் பயிற்சிப் பாடங்களாக கொடுக்கப்படுவதால், கற்பவர்களுக்கான கால அவகாசமும் அவசியமல்லவா?

    நன்றி

    ReplyDelete
  4. என்னைபோல ஆங்கிலம் கற்றுகொள்ள ஆவலாக ௨ள்ள அனைவருக்கும் இது மிகவும் பயனனுள்ளபகுதி ரொம்ப ரொம்ப நன்றி

    Mayil

    ReplyDelete
  5. -Mayil

    பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  6. i want more explanation about there. could you plz help me sir.

    ReplyDelete
  7. i want more explanation about there is. could u plz help me sir..

    ReplyDelete
  8. i don't speak much english. can you help me...

    ReplyDelete
  9. I need pdf file for mobile (tenses and verb table)

    ReplyDelete
  10. has been have been enga use panrathunu confuse irukku please clear me sir

    ReplyDelete
  11. have been has been enga use pannanum sollunga sir

    ReplyDelete
  12. I have been reading all those your grammer lessons,very useful to me.can you describe "useage of would"plz

    ReplyDelete
  13. மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது...

    ReplyDelete
  14. Sir,neenga padangalai lesson 1,lesson 2,lesson 3,lesson 4 nu varisaiya pottal nalla irukku sir, lessons ellam oru olungu muraiya illa sir, ethanala saroyan Padilla mudiyala sir.

    ReplyDelete