எமது பாடத்திட்டம் - மொழிப்பெயர்ப்பு - விளக்கம்

இந்த “ஆங்கிலம்” வலைத்தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றி சற்று தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். நீங்கள் பாடசாலைகளிலோ, பகுதி நேர வகுப்புகளிலோ, புத்தகங்களிலோ ஆங்கிலம் கற்றதைப் போன்றல்லாமல், இந்த "ஆங்கிலம்" தளத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு சற்று வேறுப்பட்டிருப்பதை அவதானிப்பீர்கள்.

என்ன வேறுப்பாடு?

எடுத்துக்காட்டாக "I do a job" எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் இப்பாடத்திட்டத்தில் அவ்வாறு அல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்றே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஏனிந்த வேறுப்பாடு?

எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை என தமிழில் வாக்கியங்கள் அமைகின்றன.

எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள் என ஆங்கிலத்தில் வாக்கியங்கள் அமைகின்றன.

இந்த ஆங்கில நடைக்கும் தமிழ் நடைக்கும் இடையேயான வேறுபாடுதான் பலருக்கு ஆங்கிலத்தை வாசித்து புரிந்துக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த வேறுபாட்டை எளிதாக புரிந்துக்கொண்டு கற்கும் வகையில், "எழுவாய் + பயனிலை + செயப்படுபொருள்என ஆங்கில நடைக்கு ஏற்ப பாடங்களின் வாக்கியங்கள் தமிழாக்கம் செய்யப்படுகின்றது.

ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பதால் பயன் என்ன?

I – நான்
went – போனேன்
to school - பாடசாலை + க்கு

I + went + to school
நான் + போனேன் + பாடசாலைக்கு.

I + went + to school + yesterday
நான் + போனேன் + பாடசாலைக்கு + நேற்று.

I + went + to school + yesterday + with my friends.
நான் + போனேன் + பாடசாலைக்கு + நேற்று + எனது நண்பர்களுடன்

"நான் எனது நண்பர்களுடன் நேற்று பாடசாலைக்கு போனேன்." என தமிழ் நடைக்கு ஏற்ப எழுதி கற்பிப்பதை விட, ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழாக்கம் செய்து கற்பிப்பதில், ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ் சொற்களையும் எளிதாக விளங்கிக்கொள்ளலாம். அத்துடன் ஆங்கில வாக்கியங்களை நீட்டி அமைப்பது எவ்வாறு என்பதனையும் எளிதாகப் புரிந்துக்கொள்ளவும் உதவும்.

தவிர இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. அநேகமாக வேற்று ஒரு மொழியை தமது தாய் மொழிக்கு மொழிமாற்றுவோர், தமது தாய்மொழி நடைக்கேற்பவே மொழி மாற்ற விரும்புவர். அதுவே அம்மொழியின் சிறப்பிற்கும், குறிப்பிட்ட மொழியினரின் புரிதலுக்கும் வழிவகுக்கும் என்பது உண்மை. அத்துடன் தத்தமது மொழியின் தனித்துவத் தன்மையை பேணிக் காக்கவும், மொழியின் பயன்பாட்டிற்கு ஏற்ப பொருள் உணர்த்தவும் உதவும். அதனடிப்படையில் தான் தமிழ் கலைச்சொல்லாக்கப் பணிகளும் நடைப்பெறுகின்றன.

இன்றையத் தமிழ் இணைய உலகில் பரவலாகப் பயன்படும் தமிழ் கலைச்சொற்களை சற்று பாருங்கள்.

Bus - பாட்டை
Home - முகப்பு
Home page - முகப்புப் பக்கம்

இவை நம் எல்லோரதும் மனதில் பதிந்து, இணையப் பயன்பாட்டிற்கு ஏற்ப பொருள் தரும் சொற்களாக நிலைப்பெற்றவைகளாகும். இவை ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிறப்புறக் கற்று தெளிந்தவர்களால் இடம், பொருள், ஏவல் நிலையறிந்து உருவாக்கப்படும் கலைச்சொற்களாகும்.

ஆனால் இவை ஆங்கிலம் கற்க முனையும் ஒரு ஆரம்ப நிலை ஆர்வலருக்கு அல்லது மாணவருக்கு குழப்பத்தைத் தரலாம். அதனால் ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களை கற்க முனையும் முன், சாதாரண ஆங்கிலப் பேச்சு வழக்கில் பயன்படும் சொற்களிற்கு இணையான தமிழ் சொற்களை கற்றுக்கொள்ளல் பயன்மிக்கது.

இவற்றை மனதில் கொண்டே, நாம் ஆங்கில நடைக்கு ஏற்ப மொழி பெயர்ப்பு செய்துவருகின்றோம். எனவே:

Bus - பேருந்து
Home - வீடு, இல்லம், மனை

என முதலில் கற்றுக்கொள்வோம். அதன் பின் தமிழ் கலைச்சொல்லாக்கச் சொற்களை கற்றுக்கொள்ளலாம்.

உலகத் தமிழர் பேச்சு வழக்கு

தவிர உலகத் தமிழர்களான நாம், எமது தமிழ் பேச்சு வழக்கின் சொற்கள் உச்சரிப்புகள் போன்றன இலங்கை இந்தியா என நாடு ரீதியாகவும், நாட்டுக்குள் வட்டார ரீதியாகவும் வேறுப்பாடுகளை கொண்டவை.

உதாரணம்:

Did you go to market?
நீ சந்தைக்கு போனாயா? - எழுத்துத் தமிழ் வழக்கு
நீ சந்தைக்கு போனியா? - தமிழக/ கொழும்பு பேச்சு வழக்கு
சந்தைக்கு போன நீயா? - யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு
நீ மார்க்கெட் போனாயா? - ஆங்கிலம் இடைச்செருகி பேசும் "தமிங்கில" வழக்கு

எனவே ஒவ்வொரு வட்டார வழக்கிற்கும் ஏற்ப, ஆங்கிலம் கற்பிப்பது என்பதும் பொருத்தப்பாடாக இல்லை.

Did you go to market?
நீ போனாயா சந்தைக்கு?

என ஆங்கில நடைக்கேற்ப தமிழ்ச் சொற்களை அமைத்து, வாக்கியங்களாக பயிற்றுவிப்பதே இலகுவாக ஆங்கிலம் கற்க உதவும் என நாம் நம்புகின்றோம். மேலும் முடிந்தவரையில் ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தை சரியாக விளங்கிக் கற்றால், காலப்போக்கில் அவரவர் தத்தமது பேச்சு வழக்கிற்கு ஏற்ப தாமாகவே விளங்கிக் கொள்வர்.

எமது ஆங்கில வகுப்பில்

எமது ஆங்கில வகுப்பிற்கு வருகைத் தரும் மாணவர்கள் சிலரிடமும் இவ்வாறானதொரு குழப்பம் ஆரம்பத்தில் இருந்தது. சிலர் தமிழை பிழையாக எழுதி கற்பிப்பதாகவும், செயற்கையான மொழிமாற்றமாக இருப்பதாகவும் கூறினர். ஆனால் காலப்போக்கில் அவர்களாலேயே ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களை விளங்கிக் கற்பதற்கு இப்பாடத்திட்டம் மிக இலகுவாக இருப்பதாக ஏற்றுக்கொண்டனர்.

எனவே அதே முறைமையையே இந்த "ஆங்கிலம்" வலைப்பதிவிலும் தொடர்கின்றோம். இது எந்தளவிற்கு ஏற்புடையது என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்.

தாய்மொழி தமிழும் ஆங்கிலமும்

இன்றைய காலக் கட்டத்தில் பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று அறியாமல் ஆங்கிலம் கலந்து பேசுவோரே அதிகம். இந்த ஆங்கில மோகம் தாய் மொழி தமிழை சிதைத்து விடுமோ என்று பலர் அச்சம் கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதனால் சிலர் ஆங்கில மொழி எதிர்ப்பாளர்களாகவும் எழுந்துள்ளனர்.

"பாய்ந்தோடும் நதிக்கு பள்ளம் மேடு தடையாக இருப்பதில்லை." என்பது போல் எத்தனை அணை கட்டினாலும் நதி நீர் நிரம்பி பள்ளம் நோக்கி பாய்ந்தோடவே செய்யும். அதேப்போல் இன்றைய தொழில்நுட்ப உலகின் தொழில் தகமைகளுக்காகவும், அவை சார்ந்த கற்கை நெறிகளுக்காகவும், பன்னாட்டு வணிகத் தொடர்பாடல்களுக்காகவும் வளர்ந்து வரும் இளைய சமுதாயம் ஆங்கிலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதை எவரும் நிறுத்திவிட முடியாது. ஆங்கில மொழி அறிவியல் மொழியாக வளர்ந்துள்ள இக்காலக் கட்டத்தில் அதன் அவசியம் உணர்ந்தவர்கள் எப்படியாயினும் கற்க முனைவர். அதனை எவரும் தடுக்க முடியாது. தடுக்க முனைவதும் எமது சமுதாயத்தை நாமே வளரவிடாமல் தடுக்கும் முட்டுக்கட்டையாகவே அமையும். உலகின் ஏனைய மொழிகள் போன்றல்லாமல் ஆங்கில மொழிக்கென்று ஒரு மதிப்பும் காலத்தின் அவசியத் தேவையும் இருக்கின்றது என்பதை எவரும் மறுத்திட முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் இன்றைய உலகின் தமிழினத்தின் தலை நிமிர்விற்கு ஆங்கில மொழியறிவு முதன்மையானது என்பதில் இருவேறு கருத்து என்னிடமில்லை.

அதேவேளை ஆங்கிலம் கற்று நிமிரும் எம்மினத்தோர்,  தாய்மொழியாம் நம் தமிழ்மொழி வளர்ப்பிற்கும் தம்மால் இயன்ற பணியை ஒவ்வொருவரும் செய்ய முன் வரவேண்டும். ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் குவிந்து கிடக்கும் அனைத்து அறிவியல் வளங்களையும் தமிழில் படைக்கவேண்டும். அதுவே தமிழின் வளர்ச்சிக்கான வழியுமாக இருக்கும்.

தமிழ் வழி ஆங்கிலம்

"முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கணம்" கற்பதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் என்ன?

கூடுமான வரையில் ஒவ்வொரு ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ் அர்த்தங்களை விளங்கிக்கொள்ள முடியும்.

பேசுவது தமிழா? ஆங்கிலமா? என்று தெரியாமல் பேசுவதை விட, தாம் பேசுவது தமிழ் அல்லது ஆங்கிலம் என்றாவது விளங்கிக்கொள்ள உதவும்.

இன்றைய புலம் பெயர் நாடுகளில் ஆங்கில-வழி கல்வி கற்போரும், உள்ளூரில் ஆங்கில-வழி கல்வி கற்போரும், ஆங்கில மொழியில் ஆளுமையுள்ளவர்களானாலும் அவர்களிடம் இருந்து தமிழ் மொழிக்கான பங்களிப்பை எந்தளவுக்கு எதிர்ப்பார்க்க முடியும் என்பதில் பல கேள்விகள் உள்ளன. (விதிவிலக்காக ஒரு சிலர் உதயமாகலாம்) தமிழ் மட்டுமே கற்றவரிடம் இருந்தும் பெரிதாக எதனையும் எதிர்ப்பார்க்க முடியாது. அவரோ தனது சொந்த-அறிவு வளர்ச்சிக்கும் வேற்றுமொழி கற்றோரின் மொழி பெயர்ப்புகளை நம்பி இருப்பவராகவே இருப்பார்.

அதேவேளை, தமிழும் ஆங்கிலமும் கற்று தெளிந்தோரால் எளிதாக பல பணிகளை தமிழுக்கு செய்திட முடியும். ஆங்கிலத்தில் குவிந்து கிடக்கும் எண்ணற்ற தொழில் நுட்பத் தகவல்களை தமிழாக்கம் செய்தாலே மாபெரும் புரட்சியை ஏற்படுத்திடலாம். இதனை தமிழ் வழி ஆங்கிலம் கற்போர் எளிதாக செய்திடலாம்.

அதேபோன்றே, தமிழ் மொழி இலக்கிய படைப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்ப்பு செய்யலாம். அது எமது தமிழின் சிறப்புகளை பன்னாட்டளவில் கொண்டுச்செல்லும்.

ஆங்கிலம் கற்பித்தலுக்கான முதன்மை தகமை

தமிழ் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான முதன்மை தகமை எதுவாக இருக்க வேண்டும் என்றால், ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் இலக்கணத்திலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது முதன்மை அல்லது சிறப்பு தகமையாக கொள்ளபடவேண்டும். கவலைக்குறிய விடயம் என்னவென்றால் தமிழ் வழி ஆங்கிலம் கற்பிக்கும் பல ஆசிரியர்களுக்கு தாய் மொழி தமிழ் இலக்கணம் சரியாகத் தெரியாது என்பதே. பிறகு எப்படி ஆங்கில மொழியின் இலக்கணக் கூறுகளை தமிழ் இலக்கணக் கூறுகளுடன் ஒப்பிட்டு விளங்கப்படுத்த முடியும்? மாணவர்கள் எப்படி எளிதாக கற்றுக்கொள்ள முடியும்? அநேகமாக ஆங்கில மொழியை தாய்மொழியாக கொண்டிராத ஆங்கில ஆசிரியர்கள் இருமொழி கற்கை வழியூடாகவே (Bilingual) ஆங்கிலம் கற்பிக்கின்றனர். அவ்வாறு கற்பிப்போரின் பிரதான தகமை குறிப்பிட்ட இருமொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது பொதுவாக உலகின் பலநாடுகளிலும் கோரப்படும் தகமையாகும். அதாவது இருமொழி வழியில் ஆங்கில இலக்கணம் கற்பிக்கும் ஒரு ஆசிரியர் குறிப்பிட்ட இரண்டு மொழி இலக்கணத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால் தமிழ் வழி ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களிடம்  மட்டும் ஏனோ தமிழ் இலக்கண அறிவை காணமுடிவதில்லை. இது வரவேற்கத்தக்க ஒரு விடயம் அல்ல.

ஒரு மொழி இலக்கணத்தை இன்னொரு மொழியில் கற்பிக்க, குறிப்பிட்ட இரண்டு மொழிகளின் இலக்கண அறிவையும், இரண்டு மொழிகளுக்கிடையேயான இலக்கண வேறுபாடுகளை கற்றவராகவும், அவற்றை எளிதாக மாணவர்களுக்கு எடுத்துரைப்பவராகவும் கற்பிப்பவர் இருக்க வேண்டும். அப்போது தான் கற்கும் மாணவர்களால் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.

ஆங்கில வழி கல்வி கற்கும் தமிழ் மாணவர்கள் என்றாலும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறியாதிருக்கும் வரை அறியாமையே மேலோங்கி நிற்கும். உள்ளூரில் ஆங்கில வழிக் கல்வியில் உயர் தரம் கற்றோரும், ஆங்கிலம் பேசுவதில் சிரமப்படுகின்றனர் என்றால் இதுவே பிரதானக் காரணமாகும். இதற்கான ஒரே தீர்வு முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்பது தான்.

ஆங்கிலம் கற்பிப்போர் இருமொழியிலும் சிறப்புற்றவர்களாக இருக்க வேண்டும் எனும் சட்டம் இயற்றப்படவேண்டும். அப்போதுதான் ஆங்கிலம் கற்கும் தமிழ் மாணவர்கள் ஆங்கில மொழியில் ஆளுமையையும் தமிழ் மொழியின் சிறப்பையும் கற்றுப் பெறுவர். அவ்வாறானவர்களிடமே தமிழ்ச் சார்ந்து பணி புரியும் ஆர்வமும் ஏற்படும்.

ஆங்கில உச்சரிப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு வேண்டுமானால் தாய் மொழி ஆங்கிலேயரைப் பின்பற்றலாம்.

தமிங்கிலம் தவிர்ப்பதற்கு

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்பதனால், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அறிந்துக்கொள்வது மட்டுமன்றி, தமிங்கிலத்தை தவிர்ப்பதற்கும் உதவும். இதுவே பரந்துப்பட்ட அளவில் அரசக் கல்வித்திட்டமாக பரிணமிக்குமானால் தமிங்கில வழக்கை காலப்போக்கில் ஒழித்துக்கட்டவும் வாய்ப்பாக ஆகலாம்.

பாதித் தமிழை மென்று, மீதித் தமிழை விழுங்கி, சொதப்பித் துப்பி, ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் பேசுவதை விட, முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழை தமிழாகவும் பேசலாம்.

ஆங்கிலக் கல்வி

இன்றைய உலக அறிவியல் வளர்ச்சிக்கு, தொழில் நுட்பத் தகவல்களுக்கு என்று மட்டுமல்லாமல் உலகமயமாக்கலின் தொடர்பாடல்கள் மிக வேகமாக வளர்ந்து, நாடுகளுக்குள் பல்தேசிய நிறுவனங்களின் முதலீடுகள் பாரியளவில் பெருகிவரும் நிலையில், உலக மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக ஆங்கிலமொழி வளர்ந்து நிற்கிறது. அதனைக் கற்காமல் எந்தவொரு வளர்ச்சி படியையும் நாம் எவரும் எளிதாக எட்டிவிட முடியாது என்பதை எம்தமிழர் அனைவரும் உணர்தல் வேண்டும். ஆங்கிலம் கற்காவிட்டால் எமது சமுதாயம் பல்வேறு மட்டங்களில் பின்தள்ளப்பட்டுவிடும் என்பதை மறவாதீர்கள்.

இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டுத் தமிழ் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தமிழகப் பேராசிரியர்களில் ஒருவரான சரசுவதி அவர்கள் கூறியதில் சிலப் பகுதிகளை ஆங்கிலம் உதவி பக்கம் இட்டுள்ளோம். நீங்களும் பார்க்கலாம்.

ஆங்கில மொழி, இலத்தீன் கிரேக்க மொழிகளில் இருந்து மட்டுமன்றி; உலகின் பல்வேறு மொழி சொற்களையும் உள்வாங்கிக்கொண்டு உருவான மொழியாகும். ஆனாலும் அது இன்று உலக மொழி தகுதியை பெற்றள்ளது. ஒரு சிறிய இனக்குழுமத்தினரால் பேசப்பட்ட ஒரு மொழி இன்று உலகின் அனைத்து திசைகளிலும் உள்ளோர் கற்கும் விருப்பு மொழியாக எவ்வாறு வளர்ந்தது என்பதை தமிழர்களான நாம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். கீழுள்ள கட்டுரைகளை வாசியுங்கள்.

ஆங்கில மொழி வரலாறு

அமெரிக்க ஆங்கில வரலாறு

தமிழும் தமிழரும் தன்னார்வப் பணிகளும்

தமிழ் ஒரு செம்மொழி. தமிழ் மொழியின் வேர் சொற்களில் இருந்து எக்காலத்திற்கும் எந்நுட்பத்திற்கும் தேவையான கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ளும் தனிச்சிறப்பு இம்மொழிக்கு உண்டு. இருப்பினும் ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் சொல்வளத்தைப் பொருத்தும் நிலைபெறுகின்றது. ஆங்கிலம் இன்று உலகளவில் சிறப்புறுவதற்கு அம்மொழியின் சொல்வளமும் ஒரு முக்கிய காரணமாகும். ஆம்! உலகில் எந்த ஒரு மொழியையும் விட அதிகமான சொல்வளத்தைக் கொண்ட மொழியாக ஆங்கிலம் இன்று வளர்ந்து நிற்கிறது. இதனை கருத்தில் கொண்டு நாமும் எமது மொழியின் சொல்வளத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். மேலும் உலகின் அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியம், அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த நூல்களில் சிறந்தவற்றையெல்லாம் உடனுக்குடன் தமிழாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறான செயல் திட்டங்களில் நாம் இறங்கினால் தான் நாம் எமது மொழியை கால வெள்ளத்தில் அல்லுண்டு போகாமல் தடுக்கலாம்.

இதனை உணர்ந்த தமிழ் பற்றாளர்கள், தன்னார்வக் குழுக்களாக இணைந்து கலைச் சொல்லாக்க முயற்சிகளில் ஆங்காங்கே ஈடுபட்டு வருவதனை இணையத்தில் காணலாம். இவை உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியை தருக்கின்றது என்றாலும் அதனை முழுவீச்சுடனும் முனைப்புடனும் செயற்படுத்த தமிழ் வளர்ச்சி திட்டங்களை தமிழரே எவரினதும் குறுக்கீடின்றி உருவாக்கி செயல்படுத்தும் நிலை தோன்ற வேண்டும். தரவுகளின் அடிப்படையில் இன்றளவில் 77 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகவும், உலகில் அதிகம் பேசும் மொழி வரிசையில் 17வது இடத்திலும் எமது மொழி உள்ளது. இருப்பினும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் சிறுபான்மையினராக வாழ்வதால் எதையும் ஒரு வரையறைக்கு மேல் செய்யமுடியாத  நிலையை கவலையுடன் நோக்கவேண்டியுள்ளது. ஒரு இனத்தின் வளர்ச்சி என்பதும், அவர்தம் பேசும் மொழியின் வளர்ச்சி என்பதும், அவ்வினம் சுதந்திரமான இனமாக, தம்மை தாமே ஆளும் இறைமையுடைய இனமாக மாற்றிக்கொள்வதில் மட்டுமே சாத்தியம். ஒரு இனம் இறைமையுள்ள இனமாக மாறும் போது, அவ்வினத்தில் வளர்ச்சி தொடர்பான, அவ்வினத்தின் மொழி வளர்ச்சி தொடர்பான பாரிய செயற்திட்டங்களை குறிப்பிட்ட மொழியின் ஆர்வலர்களையும், அறிஞர்களையும்,  மொழிப்புலமையாளர்களையும் உள்வாங்கிக்கொண்டு மேற்கொள்ள முடியும். ஆங்காங்கே தன்னார்வப் பணியாக தனித்தும், சிற்சிறு குழுமங்களாகவும் முன்னெடுக்கும் முயற்சிகள் மட்டுமன்றி / போலன்றி, தன்னாட்சி உரிமையுள்ள இனமாக ஓரினம் மாற்றம் பெறும் போது அவ்வினத்தின் மொழியின் வளர்ச்சிக்கான பாரியத் திட்டங்களை முன்னெடுக்க முடியும். அதுவே ஒரு இனத்தின் வளர்ச்சியும் ஆகும். அதற்கு தமிழர் இழந்த இறைமையை மீட்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் தமிழர் இழந்த இறைமையையும், இறைமையின் அவசியத்தையும் வளரும் இளம் தமிழ் சமுதாயம் உணர்ந்திட வேண்டும்.

இல்லையேல் "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று மகாகவி பாரதி பாடியதை மெய்பிப்பவர்களாக ஆகிவிடுவோம்.

இங்கே இந்த "ஆங்கிலம்" வளைத்தளமும், தமிழ் தமிழர் நலன் சார்ந்த நோக்கினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்றதுதான் என்பதை கருத்தில் கொள்க.

சரி! இனி எமது பாடத்திட்டத்திற்கு போவோம்.

எமது பாடத்திட்டம்

"நான் கடைக்குப் போகிறேன், நான் சாப்பிடுகிறேன், நான் படிக்கிறேன்" என நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் ஒன்றை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக "நான் படிக்கிறேன்." எனும் ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டால், இந்த ஒரு வார்த்தையை எத்தனையெத்தனை விதமாக தமிழில் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிப் பேசுகின்றோம் என பாருங்கள், எடுத்துக்காட்டாக:

நான் படிக்கிறேன்.
நான் படித்துக்கொண்டிருக்கின்றேன்.
நான் படித்தேன்.
நான் படிப்பேன்.
நான் படிக்க வேண்டும்.
நான் படிக்கவே வேண்டும்.
எனக்கு படிக்க முடியும்.

என இன்னுமின்னும் எத்தனையோ விதமாக மாற்றி பேச, எழுத முடியும் அல்லவா? அவ்வாறு நாம் தினமும் பேசும் மொழியைத்தான், எல்லோரும்  எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையிலும், எளிதாக கற்கும் வகையிலும், இலக்கண விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக நாம் அன்றாடம் பேசும் ஒரு தமிழ் வார்த்தையை, எவ்வாறு இடத்திற்கு ஏற்ப மாற்றிப் பேசுகின்றோமோ, அதேப்போன்றே ஆங்கிலத்திலும் ஒரு வார்த்தையை உதாரணமாக எடுத்து, 73 வார்த்தைகளாக மாற்றி, இந்த ஆங்கில பாடப் பயிற்சி திட்டத்தின் முதல் பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை இங்கே "Grammar Patterns" களாக வழங்கப்பட்டுள்ளன. பொருள் சிதைவற்ற ஆங்கிலப் பேச்சிற்கு, ஆங்கில இலக்கணம் கற்பது மிக மிக அவசியம். ஆங்கில இலக்கண விதிமுறைகளை எளிதாக விளங்கிக் கற்பதற்கு முதலில் "Grammar Patterns" களைப் பயிற்சி  செய்துக்கொள்ளல் பயன்மிக்கது. இந்த "கிரமர் பெட்டன்களை" நன்கு பயிற்சி செய்துக் கொண்டீர்களானால், ஆங்கில இலக்கணப் பாடங்களை எளிதாக தொடர முடியும். இது மிகவும் எளிதான ஒரு பாடப் பயிற்சித் திட்டம். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த மொழியானாலும் "பேசும் மொழியைத்தான் இலக்கண விதிகளாக வகுக்கப் பட்டுள்ளதே தவிர, இலக்கண விதிகளை வகுத்துவிட்டு எந்த ஒரு மொழியும் பேச்சுப் புழக்கத்திற்கு வரவில்லை." எனவே தொடர்ந்து இந்த கிரமர் பெட்டன்களை பயிற்சி செய்துக்கொள்ளுங்கள். சரியோ பிழையோ  நீங்கள் பயிற்சி செய்தவற்றை உங்கள் நண்பர்கள், சகோதரர்கள், உறவினரக்ள் என எல்லோருடனும் பேசி பயிற்சி செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்களே ஆச்சரியப் படும் வகையில், சரளமாக ஆங்கிலம் பேசும் ஆற்றலை நீங்கள் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். உச்சரிப்பு பயிற்சிக்கு பாடங்களுடன் வழங்கப்பட்டிருக்கும் ஒலிக்கோப்பினை சொடுக்கி "கேட்டல்" பயிற்சியையும் பெறலாம். உங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள; எமது ஒவ்வொரு பாடங்களின் போதும் வழங்கப்படும் வீட்டுப்பாட பயிற்சிகளை முறையாகப் பயின்றாலே போதுமானது.

முதலில் Grammar Patterns 1, Grammar Patterns 2, Grammar Patterns 3, Grammar Patterns 4, Grammar Patterns 5, Grammar Patterns 6 இவற்றைப் பயிற்சி செய்துக் கொள்ளுங்கள். இவற்றைத் தவிர வேறு சில கிரமர் பெட்டன்களும் உள்ளன. அவற்றை உரிய பாடங்களின் போது வழங்கப்படும். "கிரமர் பெட்டன்" களில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் பின் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்போது அதனதன் இலக்கண விதிமுறைகளையும் பயன்பாட்டையும் விரிவாகக் கற்றுக் கொள்ளலாம். பாடங்கள் இலக்க வரிசையில் வழங்கப்படுவதால், அவற்றை நீங்கள் இலக்க வரிசையிலேயே தொடரலாம்.

இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் எந்தளவிற்கு ஏற்புடையது என்பதை நீங்கள் தான் கூறவேண்டும். மாற்று கருத்து இருந்தால் அதனையும் கூற மறவாதீர்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களே இத்தளத்தை மேலும் மேம்படுத்த உதவும்.

இத்தளம் பயனுள்ளது என கருதினால், இத்தளத்தை ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும் மேலும் உங்கள் உறவினர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள்.

"கடைக்கோடி தமிழனும் கற்க வேண்டும் ஆங்கிலம்!"

ஆங்கிலம் கற்போம், தேவையெனில் இன்னும் இன்னும் ஆயிரம் மொழிகள் கற்போம், ஆனால் அன்னை தமிழிடமே பற்று வைப்போம். எம்மினமும் எம்மொழியும் மேம்படவே உழைப்போம்!

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Social Media Links: Facebook | Twitter | Pinterest | Google Plus

குறிச்சொற்கள்: புதிய ஆங்கில கல்வித் திட்டம், பாடசாலை ஆங்கிலக் கல்வி, நவீன ஆங்கிலம், தமிழ் வழி ஆங்கில கல்வி திட்டம், மாற்று ஆங்கிலக் கல்வி, ஆங்கில செலபஸ் / சிலபஸ், தமிழீழ ஆங்கிலம், தனியார் ஆங்கிலக் கல்லூரி, HE English Institute's English Syllabus, Tamil - English Syllabus, Arun's English Syllabus, Aangilam Syllabus, Arun Aangilam Syllabus
Download As PDF

69 comments:

Jafar ali said...

ஆஹா அருமையான முயற்சி! தமிழ் சமூகம் குறித்தான உங்கள் அக்கரை பாரட்டத்தக்கது. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

HK Arun said...

Jafar Safamarve அவர்களுக்கு

உங்களது பாராட்டுக்களும் வாழ்த்துக்களுமே எமக்கு மேலும் ஊக்கத்தைத் தருகின்றது.

நன்றி.

Anonymous said...

//எடுத்துக்காட்டாக "I do a job" என்பதை தமிழில் மொழிப் பெயர்த்துக் கூறுவோமானால் "நான் ஒரு வேலை செய்கின்றேன்" என்று தான் கூறுவோம். ஆனால் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் அவ்வாறு இல்லாமல் "நான் செய்கின்றேன் ஒரு வேலை" என்று ஆங்கில நடைக்கு ஏற்பவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.//

ஆங்கில நடைக்கு ஏற்பவே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது beginners களுக்கு எளிதாக இருக்கும் என்பது உண்மை.

ஆனால், ரெபிடெக்ஸ் இங்கிலீஸ் ஸ்பீகிங் கோர்ஸ் புத்தகத்தில் இருக்கும் தமிழ் மொழிப்பெயர்ப்புக்கும், உங்கள் மொழிப்பெயர்ப்புக்கும் நிறைய வித்தியாசமாக இருக்கிறது.

நீ ராதாவுக்கு ஏதேனும் கடிதம் எழுதினாயா? have you written any letter to radha? இப்படி இருக்கிறது.
உங்கள் மொழி பெயர்ப்பு படி Did you write a letter to your mother? நீ எழுதினாயா ஒரு கடிதம் உன்னுடைய அம்மாவுக்கு? என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள். இது எனக்கு புரியவில்லை. இதுபோல நிறைய வித்தியாசம் இருக்கின்றது எது சரியென்று புரியவில்லை.ப்ளீஸ் கொஞ்சம் புரியபடுத்துங்கள். நன்றி

HK Arun said...

- நந்தகுமாருக்கு

சாதாரண நிகழ்காலம்
Do you write any letter to Radha?
நீ எழுதுகிறாயா ஏதேனும் கடிதம் ராதாவுக்கு?

சாதாரண எதிர்காலம்
Will you write any letter to Radha?
நீ எழுதுவாயா ஏதேனும் கடிதம் ராதாவுக்கு?

அதே வடிவில் சாதாரண இறந்தக்காலத்தையும் பாருங்கள்.
Did you write any letter to Radha?
நீ எழுதினாயா ஏதேனும் கடிதம் ராதாவுக்கு?

இதனை பேச்சு நடைக்கு ஏற்ப "நீ ராதாவுக்கு ஏதேனும் கடிதம் எழுதினாயா?" என்று வேண்டுமானால் கேட்கலாம். தவிர, எமது மொழிமாற்றத்தில் பொருள் சிதைவு இன்றியே மொழிமாற்றியுள்ளோம்.

//இதுபோல நிறைய வித்தியாசம் இருக்கின்றது // என்று கூறுகிறீர்கள். நீங்கள் கூறிய புத்தகம் இங்கே ஹொங்கொங்கில் இருக்குமானால் அதனைப் பார்த்து விட்டு விளக்கம் தருகின்றேன்.

ஆனால்,

//நீ ராதாவுக்கு ஏதேனும் கடிதம் எழுதினாயா?
have you written any letter to radha?//

என்று அப்புத்தகத்தில் தமிழாக்கப்பட்டிருப்பின் அது சரியானதல்ல. ஏனெனில்

"Have you written any letter to Radha?" என்பது "Present Perfect" கேள்வியாகும்.

"நீ ராதாவுக்கு ஏதேனும் கடிதம் எழுதினாயா?" என்றால் அது "Simple Past" கேள்வியாகும்.

எனவெ நீங்கள் கூறிய புத்தகத்தின் மொழிமாற்றம் சரியானதா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

நன்றி

Anonymous said...

Hi ARUN,

Just now i seen this website, really u r doing a great job, i don't know how to type in tamil and thats y i'm typing in english.
I'm from tamil nadu, nowadays in chennai or tamil nadu most of the people r looking for this type of website to read abt english grammar through tamil, hope that u r the only person who made this website free for access n helping most of the tamilians in the world. Thank you very much behalf of all the persons who read this website.

HK Arun said...

மிக்க நன்றி சுரேஸ்

உங்கள் கருத்து ஊக்கத்தைத் தருகின்றது.

Balasubramani said...

Hi.....
Very nice work..... Arun Sir!
Now I daily read this website.It's really fantastic.Before I'm also search for tamil through learn english websites.

HK Arun said...

நன்றி பாலசுப்ரமணி

தொடர்ந்து பயிற்சித்தல் கூடிய பயனை விரைவில் கிட்ட வழி வகுக்கும்.

நன்றி

Senthil said...

I am Senthil.

This is the first time i visit you website. This is very useful to all. But i think you will give two example in tamil For example: I do a job for this sentence "நான் ஒரு வேலை செய்கின்றேன்" & "நான் செய்கின்றேன் ஒரு வேலை" this is very useful. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

HK Arun said...

- செந்தில்

1. நான் செய்கின்றேன் ஒரு வேலை
2 .நான் ஒரு வேலை செய்கின்றேன்.

இவ்வாறு எழுதும் படி கூறுகின்றீர்கள். இது அவசியமற்றது என்று நான் நினைக்கின்றேன். இருப்பினும் மற்றவர்களின் கருத்தையும் பார்த்து முடிவெடுப்போம்.

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி செந்தில்.

deen said...

Dear Arun!
For 2 weeks i see the website. Infact that is a great work. Isee the website every day and lern so many things from your website. Lot of thanks Arun
GUNARATNAM KANDEEPAN
Germany

HK Arun said...

-GUNARATNAM KANDEEPAN

உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி

நன்றி

Anonymous said...

Thank-you very much, it's help to my study.I am from Srilanka I did A/L, but i didn't study English well, now I am studying in American College,So now I need English very well, and Next year august I need to do TOEFL.I got fear about English, but now from your English learning website,I feel I can study English, Please could you tell me an idea for study English to TOEFL level...!, but i haven't time to got class so.. Please....!I need your help.Without English I am facing so many probs//If I did any grammatical wrong in my comment,pls tell me

HK Arun said...

- Krishanthan

ஆங்கிலம் எனும் மொழிக்கு அவ்வளவு அச்சம் கொள்ளத்தேவையில்லை. எமது எண்ணத்தில் உள்ளவற்றை, நாம் நமது மொழியில் சொல்ல விரும்புபவற்றை வேறோர் மொழியூடாக சொல்கின்றோம் அவ்வளவு தான்.

எமது அடிப்படை அறிவும் தகுதிப்பாடுகளும் மொழிக்கு அப்பாற்பட்டவை என்பதே எனது கருத்து.

//I am studying in American College.// பிறகு என்ன பயம்?

TOEFL ஆங்கிலப் பயிற்சிகள் தொடர்போவதாகக் கூறியுள்ளீர்கள். அதற்கு சற்று அதிகப் பயிற்சி அவசியம் தான் ஆனால் பயப்படத் தேவையில்லை. அதற்கான சிலக் குறிப்புகளை எமது பாடத்தில் இணைத்துவிடுகின்றோம்.

நன்றி

Unknown said...

sir,

i am just see the website. i don't no english iam studing in tamil medium only so i want tranning the speaking in english

Unknown said...

sir,

i am just see the website. i don't no english iam studing in tamil medium only so i want tranning the speaking in english

SR Chartered Accountants said...

hi this is nice steps towards the victory...

like me the people who are coming from tamil medium, it is gifted site.. today (9th mar 09) i take the lesson 1...

may i know your qualification and if you wish about you..

my mail id is sen2chennai@gmail.com

tomyfriends said...

hai..Arun,i am very happy to see like this type of English learning websites..I am thanking you for your good service...And we are expecting more and more service from you..

Anonymous said...

It is really good to improve the English Grammer to all Tamil people. Please share the knowledge to all our Tamil school childrens. 10,000 times thanks to the Author.
Vaalga Valamudan

sivakumar said...

i really thanks to your website, bcz i'm searching this kind of website only

thinking you

HK Arun said...

- சிறிதர்

//i am just see the website. i don't no english iam studing in tamil medium only so i want tranning the speaking in english//

தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். விரைவில் பயன் கிட்டும். கேள்விகள் இருப்பின் கேட்டெழுதுங்கள்

நன்றி

HK Arun said...

அன்புடன் சென் (sen)

//hi this is nice steps towards the victory...

like me the people who are coming from tamil medium, it is gifted site.. today (9th mar 09) i take the lesson 1...//

மிக்க மகிழ்ச்சி

நன்றி

HK Arun said...

- Riyaz

//i am very happy to see like this type of English learning websites..I am thanking you for your good service...And we are expecting more and more service from you..//

நன்றி றியாஸ் எமது பாடங்கள் தொடர்ந்து வரும்.

நன்றி

HK Arun said...

அனானி நண்பரே!

//It is really good to improve the English Grammer to all Tamil people. Please share the knowledge to all our Tamil school childrens. 10,000 times thanks to the Author.
Vaalga Valamudan//

உங்கள் கருத்துக்கு நன்றி! மகிழ்ச்சி!

- sivakumar

//i really thanks to your website, bcz i'm searching this kind of website only//

நன்றி சிவகுமார்.

sundar said...

Dear sir.,
really u r doing a great job sir.....

RAJA said...

Thanks A lot.

yuvaraj said...

i saw your blog few days ago only great effort sir.you have to continue your writing forever. i also a tamilan

yuvaraj said...

i saw your blog few days ago only great effort sir.you have to continue your writing forever. i also a tamilan

HK Arun said...

- sundar

//really u r doing a great job sir.....//

நன்றி சுந்தர்

HK Arun said...

- RAJARAJAN

//Thanks A lot//

நன்றி ராஜராஜன்

HK Arun said...

- Yuvaraj

//i saw your blog few days ago only great effort sir.you have to continue your writing forever. i also a tamilan//

நன்றி யுவராஜ்

Ashokan S said...

This is a real service to any community. You will be blessed with wishes from millions of Tamil speaking people. I wish you all thesuccess. Dr.Ashokan, Siddha Consultant, Rohini Global (www.rohiniherbalaya.com) India.

HK Arun said...

- Asokan Siddha உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

Anonymous said...

VERU GOOD WEBSITE

Unknown said...

i am new to this site sir.really it is very effective and i am going to inform about this site to my friends.i want to know the tamil meaning of the following with an example.PERFECT PARTICIPLE:ACTIVE VOICE=to have loved AND PASSIVE VOICE:to have been loved.

Anonymous said...

Hi arun,

I would like to thank you . You are doing wonderful job to all tamil people who are willing to learn english. please continoue your work !!! No words to express your great job!!

sankari said...

Hello sir,

This site is encourage the English learner at the Begining stage.I share with my friends..

sankari said...

Hello sir,

This site is encourage the English learner at the Begining stage.I share with my friends..

Rajesh said...

Dear Mr.Arun,
Just now seen your blogsopt, its wonderful Job, My best wishes.
Please guide me i want to learn english ( proper grammer ). where i need to start to reading your lessions.(for grammer )

Thanks & regards,
Rajesh

Rajesh said...

Dear Mr.Arun,
Just now seen your blogsopt, its wonderful Job, My best wishes.
Please guide me i want to learn english ( proper grammer ). where i need to start to reading your lessions.(for grammer )

Thanks & regards,
Rajesh

kumar said...

Your effort is a boon to tamil community to learn english through tamil. Your sacrifice in spending your time to teach the subject is incredible. Thank you for your efforts and let it continue to help all seekers who desire to learn english through tamil at FREE of cost.

s.ponmozhi said...

its very use in tamil to english teaching

thara said...

Dear Arun...
kalvi nilayangal panam parikkum thalamaki vita entha tharunathil nengal thodangi ulla entha thalam anaivarukum payanullatha erukum enpathil ayam illai....
thangalin muyarchikku valthukkal...



by Thara

thara said...

Dear Arun...
kalvi nilayangal panam parikkum thalamaki vita entha tharunathil nengal thodangi ulla entha thalam anaivarukum payanullatha erukum enpathil ayam illai....
thangalin muyarchikku valthukkal...



by Thara

mechmani said...

ஆஹா அருமையான முயற்சி! தமிழ் சமூகம் குறித்தான உங்கள் அக்கரை பாரட்டத்தக்கது. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

mechmani said...

ஆஹா அருமையான முயற்சி! தமிழ் சமூகம் குறித்தான உங்கள் அக்கரை பாரட்டத்தக்கது. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!!

najeem arsath said...

உண்மையாகவே இலகுவான ஆங்கிலம் "thanks" இந்த கல்வியைத் இணையதலமுலம் தந்ததற்கு

Anonymous said...

sir i didn't see this site ever before this. you have been doing a very good job sir. Because english plays an important key role in every one's life. Already i have learned spoken english course at veta that is not sufficient to me eventhough i have several doubts during speaking but your site shows that clearly to me.

thank you very much sir

Unknown said...

என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள்....

DEEPIKA J said...

nalla muyarchi.......... valarga umadu pani....

sabari ss said...

its really good....thakns

Anonymous said...

என்னுடைய இத்தனை காலதேடல்களில் முகவும் முக்கியமா ஓர் இணையதளம் மிகவும் பயனுள்ள தளம் என்னை வெகுவாக கவர்ந்த தளம் அருண் அவர்களுக்கு கோடி நன்றிகள் நீங்கள் அருகில் இருந்திருந்தால் உங்களை வணங்கி இருப்பேன் .....நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன் ... நன்றி

Unknown said...

suppar idia

TAMILANELECTRICALTECHLIBRARY said...

best way to learing in english thank you for yr valuable websites

Unknown said...

நல்ல ஒரு வலைத்தளம் .BUT எனக்கு english suthama theriyathu nan enna panrathu sir

Unknown said...

Thanks with congratulation........

Unknown said...

hi arun,
i am a beginner. so i need your help sir.. now i want beginning materials sir.. plz send to my mail..
mail id : senthilkumarp.palanisamy@gmail.com

Unknown said...

Hi Arun.I m ravi.I m a beginner.I saw ur website..its very usefull to everyone.I need ur help sir.

Mahi said...

Me too Seeing this website first time. I hope I can develop my Tamil Grammar too with these lessons. Thanks and Congrats Arun... :)

Unknown said...

I AM JOTHI . THIS IS INSPIRATION TO ME. THIS IS VERY USEFUL TO LEARN ENGLISH I NEED UR HELP SIR .

saravanavel said...

hi arun,
i am a beginner. so i need your help sir.. now i want beginning materials sir.. plz send to my mail..

rbsvel@gmail.com

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

hai arun sir how r u
its really good , iam also beginner so i want beginning materials plz sir send to email sir

thank u sir

Unknown said...

super bro

Raviraj said...

திரு அருண், மிகவும் பயனுள்ளது உங்களது இணையதளம்
உங்கள் கடின உழைப்புக்கு தமிழினமே தலை வணங்கட்டும்.
நீங்கள் என்றும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
தமிழன் என்று சொல், தலை நிமிர்ந்து நில்.

Unknown said...

Hi...arun sir....
I am very happy to read you website grammar area...I want to speak in english without grammatical mistake..so that can I get material from yourside..I cannot learn this through online..thats why I am asking...I hope you..please help me sir....
Thank you arun sir

Unknown said...

Sir please sent me soon...what I have to do sir...

Unknown said...

Its really a great effort..all the tamil community is indebted to you Arun. For the beginners its very useful and to understand ENGLISH in their mother tongue is somthing special...congratulations

Unknown said...

Nice Work Ji ....Continue ........

Post a Comment