நல்வரவு! (Welcome to Aangilam!)

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சிகள்!

நீங்கள் பாடசாலை மாணவரா?

பட்டப் படிப்பிற்காக ஆங்கிலம் கற்பவரா?

தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா?

ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள முயல்பவரா?

பல்லாண்டுகள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றும், ஆங்கிலப் பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்று கவலையடைந்துள்ளவரா?

எதுவானாலும் கவலையை விடுங்கள்; இதோ இது உங்களுக்கான வலைத்தளம்.

எவரும் மிக எளிதாக விளங்கிக்கொள்ளக் கூடிய பாடத்திட்டம்.

விரும்புவோர் எந்த வயதினராயிருந்தாலும் இணைந்து கற்கலாம்.

இது பாடசாலை பாடத்திட்டம் போன்றோ, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன் கூடிய, அனைத்து "Grammar Patterns" களையும் உள்ளடக்கிய, ஆங்கில இலக்கணப் பாடத் திட்டம்.

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.

ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிகளுக்கான ஒலிதக் கோப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அவை பிழையற்ற உச்சரிப்புப் பயிற்சிக்கு உதவியாக இருக்கும்.

Everyone Can Learn English! English Is Easy to Understand!

Learn to write cover letters and resumes to get the job you deserve.

Improve your writing skills.

Learn English grammar for school, college, exams, or whatever the reason.

Discover the most common mistakes made in English, so you can avoid them.

It is always a good idea to learn correct punctuation, in English.

Everyone Can Improve Their Life!

THE FASTEST WAY LEARN TO SPEAK, READ AND WRITE IN ENGLISH

with Tamil Explanation

இப்பாடத்தில் இருந்து தொடருங்கள்: ங்கில பாடப் பயிற்சி 1

குறிப்பு:
தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் "தமிழ் கூறும் நல்லுலகம் நலம்பெறும் வகையில் தன் சமூகம் சார்ந்து தன்னால் இயன்ற ஏதேனும் ஒரு பணியைச் செய்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு." அந்தவகையில் தான் இந்த "ஆங்கிலம்" வலைத்தளம் தோற்றம் பெறுகிறது. இன்றைய தொழில் நுட்ப உலகில் ஆங்கிலம் கற்காமல் எவரும் எந்தவொரு வளர்ச்சிப் படியையும் எளிதாக எட்டிவிட முடியாது. யப்பான், சீனம், பிரஞ்சு மொழிகளில் போன்று உலகின் அனைத்து கற்கை நெறிகளும், கண்டுப்பிடிப்புகளும் எமது மொழியிலேயே கிடைக்கக்கூடிய நிலையும் இல்லை; அதற்கான அரசியல் பின்புலமும் எமக்கில்லை. தமிழர்களைப் பொருத்த மட்டில், ஆங்கிலம் ஒரு தொடர்பாடலுக்கான மொழியாக மட்டுமன்றி, உலகின் அனைத்து உயர் கற்கை நெறிகளுக்குமான ஓர் திறவுகோள் என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் அறிவாளிகள் என்று நம்மை நாமே கூறிக் கொள்வதில் எந்த சாதனைகளும் தோன்றிவிடப்போவதில்லை. வளர்ந்து வரும் அறிவியல் உலகில், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற அறிவியல் முன்னேற்றம் மிகுந்த நாட்டு மாணவர்களுடன், எமது இளையத் தலைமுறையினரும் போட்டியிட்டு வெற்றி ஈட்டவேண்டும். உலக அறிவாளிகள் மத்தியில் தான் நாம் அறிவாளிகளாகத் திகழவேண்டும். "யாதும் ஊரே; யாவரும் கேளீர்!" என புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கூற்றுக்கிணங்க, தரணியில் அனைத்து நாடுகளுக்கும் எம்மவர் சென்று அல்லது சென்ற நாடுகளில் எல்லாம் எம்மவர் தமிழர் எனும் இனத்தின் தனித்துவத்தை தடம் பதிக்க வேண்டும். தமிழர் எனும் இனம் அறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஓர் அறிவார்ந்த இனமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கெல்லாம் அனைத்து நாடுகளுடனான மதிநுட்பத் தொடர்பாடலும் ஆங்கில மொழியின் ஆளுமையும் மிக அவசியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.

தமிழர் எனும் இனம்; உலகில் தொன்மையான ஒரு இனமாகும்.  நாம் நாடற்ற இனமல்ல; நாட்டை நாமே அந்நியரிடம் பறிகொடுத்த இனம். இலங்கையில் மாவட்டமாகவும், இந்தியாவில் மாநிலமாகவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ள ஓர் அப்பாவி இனம். இந்த ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிந்து, இழந்த தமிழர் இறையான்மையை மீட்டெடுக்கும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உண்டு. மாறிவரும் உலக அரசியல் ஒழுங்குகளுக்கு முகம் கொடுக்கவும், அரசியல் சாணக்கியர்களாக எம்மை நாமே வளர்த்துக்கொள்ளவும், அறிவார்ந்த சமூகமாக வளரும் எமது இளஞ்சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பும் கூட ஒவ்வொருவருக்கும் உண்டு. ஐநாவில் தமிழர் கொடி ஏற்றும் பொறுப்பும் கூட வளர்ந்து வரும் இளம் தமிழ் சமுதாயத்தினரிடமே உண்டு. அதற்கு ஆங்கில மொழி ஆளுமை அவசியமானது என்பதை எவரும் மறக்கலாகாது.

உலகில் அனைத்து இனத்திற்கும் தன்னினம் மீதும், தன் இனத்தினர் மீதும் ஒரு பற்று உண்டு. அந்தவகையில் "தமிழர் உயர்ந்தால்; தமிழ் தானாகவே உயரும்" எனும் கொள்கை என்னுடையது. அந்நிய நாடுகளுக்கு சென்றால் தான் அந்தந்த நாட்டவர் அவரவர் மொழி மீது எத்தகைய பற்று கொண்டுள்ளனர் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. எத்தகைய திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என்பதும் தெரியவருகிறது. தமிழனும் கடல்கடந்து பயணிக்கும் போது தான் தன் இனத்தின் தனித்துவத்தை உணர்வான். தன் மொழி மீது பற்றும் கொள்வான். தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களையும் முன்னெடுப்பான். கிணற்றுத் தவலையாய் உள்ளூருக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் பல நாடுகளுக்கும் பயணித்து பாருங்கள்; அதுவே உங்கள் உலக அறிவின் விரிவாக இருக்கும். அக்கடல் கடந்த அறிவுத் தேடலுக்கு ஆங்கிலம் வழி காட்டும்.

எனவே வளரும் தமிழ் இளஞ்சமுதாயத்தினர் அனைவரும் கட்டாயம் ஆங்கிலம் கற்க வேண்டும்; கற்றுயர வேண்டும் என்பதே எனது விருப்பமும், இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தின் உருவாக்க நோக்கமுமாகும்.

உங்களின் பங்களிப்பு:

இவ்வலைத்தளத்திற்கு வருகை தரும் உறவுகளே! உங்களுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு.

இன்றைய உலகில் ஆங்கிலம் எந்தளவுக்கு அவசியமானது என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு, உங்கள் நண்பர்களுக்கு, வளரும் தமிழ் இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துரையுங்கள். அத்துடன் இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தில் வழங்கப்படும் பாடப் பயிற்சிகள் பயனுள்ளவை என நீங்கள் கருதினால் இத்தளத்தை மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்கள் என அனைவருக்கும் அறிமுகப்படுத்துங்கள். இத்தளத்தில் வழங்கப்படும் பாடங்கள் அனைத்தும் பிடிஎப் கோப்புகளாக பதிவிறக்கிப் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பிடிஎப் கோப்புகளாக பதிவிறக்கிக்கொண்டால் இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் உங்கள் கணினியின் ஊடாக பயிற்சிகளை தொடர முடியும். கணினி வசதியில்லாதோர் அச்செடுத்து பயன்படுத்தலாம். வசதியுள்ளோர் வசதியில்லாதோருக்கு அச்செடுத்து உதவிடவும் முடியும்.

அது ஆங்கிலம் கற்க விரும்புவோருக்கு நீங்கள் செய்யும் உதவியாகவும், இத்தளத்திற்கு நீங்கள் செய்யும் பங்களிப்பாகவும் இருக்கும்.

நன்றி!
கடைக்கோடி தமிழனும் கற்க வேண்டும் ஆங்கிலம்!

வேண்டுகோள்:

நீங்கள் ஒரு இணையத்தள உரிமையாளராகவோ, வலைப்பதிவராகவோ, குழும உறுப்பினராகவோ இருந்தால் இத்தளத்தில் காணப்படும் நிரல் துண்டை வெட்டி உங்கள் தள வார்ப்புருவில் (Template) ஒட்டி (Copy - Paste) இத்தளத்திற்கு இணைப்பு வழங்கலாம். கீழுள்ளவாறு தோற்றமளிக்கும். அது ஆங்கிலம் கற்க விரும்பும் மாணவர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் நீங்களும் உதவியதாக இருக்கும்.இணைப்பு நிரல்களின்வடிவங்களும் அளவுகளும்

மின்னஞ்சல் தொடர்புகளுக்கு: arunhk.infoATgmail.com

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

ஆங்கிலம் கற்போம், தேவையெனில் இன்னும் இன்னும் ஆயிரம் மொழிகள் கற்போம், ஆனால் அன்னை தமிழிடமே பற்று வைப்போம். எம்மினமும் எம்மொழியும் மேம்படவே உழைப்போம்.

Find us on FacebookTwitterPinterest and Google Plus Download As PDF

23 comments:

Sumathy said...

very good site for beginners

Tech Shankar said...

http://www.esnips.com/web/LearnEnglishToTamilToEnglish/

have a look @ there....

HK Arun said...

பயனுள்ள இணைப்பு தமிழ்நெஞ்சன். பங்களிப்பிற்கு நன்றி.

HK Arun said...

Thanks for your comment Sumathy.

Anonymous said...

thanks , very good sir.
by oscarbharathi

Anonymous said...

இங்கே பாருங்க

ஆங்கிலம் தெரியாத மாணவர் தற்கொலை இதுவும் தமிழ்நாட்டில் தாங்க. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
http://groups.google.nr/group/muththamiz/browse_thread/thread/4bc7000a3f16d32e/b5a4af337181dc83

vp.selvam said...

very good site for beginners I am Really Thanks to you

vp.selvam said...

very good site for beginners. I am Really thank to you

Tech Shankar said...

ஆரம்பித்தது முதல் உங்களுக்கு அமர்க்களமான வெற்றிதான். வாழ்த்துக்கள்.

நானும் இதே நாளில் 29-11-2007 அன்றுதான் தமிழ்2000 வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன்.

இருவரும் வேறு திசைகளின் பயணித்திருக்கிறோம். ஆனால் ஒரே நாளில் ஆரம்பித்திருக்கிறோம்.

http://tamizh2000.blogspot.com/2007/11/blog-post.html

என்றும் அன்புடன்

தமிழ்நெஞ்சம்

Sudha said...

very good blog, congratulations
And am unable to view the content in tamil, if i copied it in MS-Word. Pls suggest me the font to download.
thank you

Anonymous said...

very good for beginners

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

மிகவும் நன்றி. இந்த மாதிரி பயனுள்ள வெப்சைட் யைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன். எனக்கும் அன் நண்பர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்

HK Arun said...

- oscarbharathi
- விஜய்
- vp.selvam

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள்

HK Arun said...

வாருங்கள் தமிழ்நெஞ்சம்

//நானும் இதே நாளில் 29-11-2007 அன்றுதான் தமிழ்2000 வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன்.

இருவரும் வேறு திசைகளின் பயணித்திருக்கிறோம். ஆனால் ஒரே நாளில் ஆரம்பித்திருக்கிறோம். //

இது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

நன்றி நண்பரே

HK Arun said...

உங்கள் மறுமொழியை இன்றுதான் பார்த்தேன். காலம் கடந்து பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.

உங்கள் கணினியில் தமிழ் யுனிகோட் எழுத்துரு பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

அல்லது பிடிஎப் கோப்புகளாக பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.

நன்றி

HK Arun said...

- Anonymouse

- ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//இந்த மாதிரி பயனுள்ள வெப்சைட் யைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன். எனக்கும் அன் நண்பர்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்//

உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு நன்றிகள்

balaji said...

Nandri nanbare... sevai thodaratthum...

jamalnagoormeeran said...

VERY EXCELLENT WORK
FOR
UAE

Unknown said...

Very Use full sir
thank you sir

krishna murthy

G Krishnamurthi said...

It is very helpful for our life
G.Krishna murthi

jks said...

its nice thanks

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Very useful to beginners

Post a Comment