- தொலைபேசி உரையாடல் (Telephone Language) எனும் இந்த ஆங்கிலப் பேச்சு பயிற்சியில், சர்மிலன் மற்றும் அவரது நண்பர் டேவிட் என இருவர் சாதாரண பேச்சு வழக்கில் (Informal Situation) உரையாடுவது போன்ற உரையாடலை எடுத்துக்காட்டாக முதல் பகுதியில் பார்த்தோம்.
- இரண்டாம் பகுதியில் சர்மிலன் என்பவருடன் தொடர்புகொள்ள அவரது பணியகத் தொலைபேசியில், டேவிட் மற்றும் தொலைபேசியாளினி இருவருக்கும் இடையிலான ஒரு முறையான (Formal Situation) உரையாடலை எடுத்துக்காட்டாக பார்த்தோம்.
- இன்று எடுத்துக்காட்டாக ஒரு வணிகம் தொடர்பான உரையாடலை (மிகவும் முறையுடனான வழக்கில் (More Formal Situation)) பார்ப்போம். அநேகமாக இவ்வாறான வணிகம் சார்ந்த உரையாடல்கள் மிகவும் முறையுடனான வழக்கிலேயே இடம்பெறுவது வழக்கம். எனவே இவ்வுரையாடலை வணிக ஆங்கிலம் (Business English) எனும் பகுப்புக்குள்ளும் உள்ளடக்கலாம்.
பொதுவாக
தொலைப்பேசி உரையாடல் என்பது
"ஆரம்பம்”,
"உரையாடல்”,
"விடைபெறல்"
எனும் மூன்று முக்கிய
பகுதிகள் உள்ளடங்கியதாக
இருக்கும். அதற்கமைவாகவே
கீழுள்ள உரையாடற் பகுதியை
மூன்று பிரிவாகப் பிரித்து
காண்பிக்கப்பட்டுள்ளது
என்பதை கவனத்தில் கொள்க.
More Formal Business
Situation
Operator:
Hello, Good morning, ABPC Advertising, how can I help you?
ஹலோ,
வணக்கம், ABPC விளம்பர
(நிறுவனம்), நான்
உங்களுக்கு எப்படி உதவ (செய்ய
முடியும்) வேண்டும்?
Sarmilan:
My name is Sarmilan. Could I talk to Mr. David Brain, please?
எனது பெயர்
சர்மிலன். தயவுசெய்து,
எனக்கு டேவிட் பிறேய்ன்
உடன் பேச முடியுமா?
Operator:
Could I ask what company, please?
தயவுசெய்து
நீங்கள் எந்த நிறுவனம் (த்தினர்)
என்று நான் கேட்க
முடியுமா?
Sarmilan:
It's TDT Co.
TDT
கூட்டுத்தாபனம்.
Operator:
Hold on a minute, please. I’ll see if Mr. David is available.
தயவுசெய்து
ஒரு நிமிடம் (இருங்கள்)
பொருங்கள். நான்
டேவிட் அவர்கள் இருக்கிறாரா
என பார்க்கிறேன்.
Sarmilan:
Yes, please
ஆம்,
தயவுசெய்து
Operator:
Oh, I'm sorry. But Mr. David Brain isn't available.
ஒ,
வருந்துகிறேன்.
ஆனால் டேவிட் பிறேன்
அவர்கள் (தொடர்புகொள்ளக்
கூடிய வகையில்) இல்லை.
Sarmilan:
OK, I'll ring back. Does Mr. David Brain has a direct line?
OK, நான்
திரும்ப அழைக்கிறேன்.
டேவிட் பிறேன்
அவர்களு(க்கான)
நேரடி இணைப்பு இருக்கிறதா?
Operator:
I'm afraid, but the number is confidential. Would you like to leave a
message?
வருந்துகிறேன்,
ஆனால் அவ்விலக்கம்
இரகசியமானது. நீங்கள்
ஒரு தகவலை (அவருக்கு வழங்க) விட விரும்புகிறீர்களா?
Sarmilan:
No. Please listen, It's very urgent. I need to talk to him about a
new project.
இல்லை.
தயவுசெய்து செவிமடுக்கவும்,
இது மிக அவசரமானது.
நான் ஒரு புதிய திட்டம்
பற்றி அவருடன் அவசியம் பேச
வேண்டும்.
Operator:
Mm.., if it's urgent, I would like to suggest you that please call
our project manager.
ம்ம்..,
அது அவசரமானதாக
இருந்தால், நான்
எங்கள் திட்ட மேலாளருடன்
தொடர்புகொள்ளும்படி பரிந்துரைக்க
விரும்புகிறேன்.
Sarmilan:OK,
I'll try his mobile. Can I have his number, please?
சரி,
நான் அவரது அழைப்பேசிக்கு
(தொடர்புகொள்ள)
முயற்சிசெய்கிறேன்.
தயவுசெய்து எனக்கு
அவரது (அழைப்பேசி)
இலக்கத்தை கொடுக்க
முடியுமா?
Operator:
Nine-seven-five-three eight-zero-seven-two.
ஒன்பது-ஏழு-ஐந்து-மூன்று
எட்டு-சைபர்-ஏழு-இரண்டு
(9738 8072)
Sarmilan:Just
let me check that. Nine-seven-five-three eight-zero-seven-two, right?
சற்று
என்னை (அவ்விலக்கத்தை)
சரிபார்க்க விடவும்.
9753 8072, சரியா?
Operator:
That's it.
அது
சரியானாது.
Sarmilan:
Thanks for your help.
உங்கள்
உதவிக்கு நன்றி.
Operator:
It's my pleasure, thanks for calling, bye.
(உதவியது) எனக்கு மகிச்சியானது,
அழைப்பிற்கு நன்றி,
விடைபெறுகிறேன்.
Sarmilan:
Bye.
விடைபெறுகிறேன்.
கவனிக்கவும்:
I'm sorry. நான்
வருந்துகிறேன் / வருந்துகிறேன்.
"வருந்து
+ கிறேன்" எனும்
சொல்லின் "கிறேன்"
எனும் பின்னொட்டு
"வருந்துவது + நான்"
என்பதை தமிழில்
இயல்பாகவே உணர்த்திவிடுவதால்
"நான் வருந்துகிறேன்"
என்று பொதுவாகக்
குறிக்கத்தேவையில்லை.
அதேவேளை
“I'm sorry” என்பதும்
“I'm afraid” என்பதும்
"வருந்துகிறேன்"
எனும் ஒரே அர்த்தம் கொண்டவை என்பதை கருத்தில் கொள்க.
சொல்விளக்கம்
ஒரு
எடுத்துக்காட்டாக (நீங்கள்
மிகவும் மதிக்கும் அல்லது
விரும்பும் ஒருவர்), நடிகர்
கமலஹாசன் அல்லது சூர்யா போன்ற
ஒருவர் அழைபேசியில் உங்களிடம்
ஒரு உதவி கேட்கிறார் என
வைப்போம், நீங்களும்
அவருக்கு அவர் கேட்ட உதவியை
செய்துக்கொடுத்தீர்கள் என்று
வைத்துக்கொள்வோம்; அப்போது
அவர் அதற்கு நன்றி கூறுகிறார்
எனில் உங்கள் மனதுக்கு எத்தகைய
மகிழ்ச்சியானதாக இருக்கும்?
நீங்கள் அவருக்கு
உதவிசெய்ததே உங்களுக்கு
மகிழ்ச்சியானதாக இருக்கும்
அல்லவா? அதனைத்தான்
"It is my pleasure” - "அது
(உதவியது)
எனக்கு மகிழ்ச்சியானது"
என ஆங்கிலத்தில்
கூறுகிறோம்.
அதேவேளை
நீங்கள் கவனிக்க வேண்டியது
என்னவென்றால் வணிக ஆங்கிலத்தில்
"It is my pleasure” போன்ற சொற்றொடர்களை வழக்கமாக பயன்படுத்துதல் வாடிக்கையாளர்களை
கவருவதற்காகத்தான்.
அதேபோன்றே
(நீங்கள் மிகவும்
மதிக்கும் அல்லது விரும்பும்
ஒருவர்) ஒரு உதவி
கேட்டு உங்களால் அவ்வுதவியை
செய்துக்கொடுக்க முடியாவிட்டால்
உங்களுக்குள் ஒரு மனவருத்தம்
ஏற்படும் அல்லவா? அதனை
வெளிப்படுத்தும் வகையில்
தான் I'm sorry”, “I'm afraid” போன்ற
சொற்றொடர்கள் "வருந்துகிறேன்"
என பயன்படுத்தப்படுகின்றன.
இவைகளே தற்காலத்தில்
தொலைபேசி நடத்தை நெறியாகவும் பயிற்றப்படுகிறது.
குறிப்பு:
ஒருவர்
உதவிகேட்டு அவருக்கு
செய்துகொடுப்பதால் "மகிழ்ச்சி
அடைதலும்" உதவியை
செய்துகொடுக்க முடியாதப்
போது "வருந்துதலும்"
தமிழர்களிடம் இல்லாத குணயியல்புகள் அல்ல. ஆனால் பெரும்பாலும் அவ்வாறான சொற்றொடர்களை நாம்
பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இதன்
பிறகு நாமும் பயன்படுத்துவோம்.
சரி!
மீண்டும் அடுத்தப்
பாடத்தில் சந்திப்போம்.
தொடர்புடைய பாடங்கள் தொடர்ச்சியாக வரும். இப்பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ள மறவாதீர்கள்.
தொடர்புடைய பாடங்கள் தொடர்ச்சியாக வரும். இப்பாடம் தொடர்பான உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ள மறவாதீர்கள்.
தொடர்புடைய
பாடங்கள்
- அழைப்பேசிஉரையாடல் (Informal Situation)
- அழைப்பேசிஉரையாடல் (Formal Situation)
- அழைப்பேசி உரையாடல் (More Formal Situation) இன்றையப் பாடம்
- அழைப்பேசி:பயனுள்ள சொற்றொடர்கள்
நன்றி!
அன்புடன்
அருண் |
HK Arun
4 comments:
really fantastic blog sir.
Sir, Your notes are very useful to us to grow..
Sir, your notes are useful to us to grow..
sir,உங்கள் வலைபூவை இவ்வளவுநாள் பார்க்காமல் இருந்ததை எண்ணி வருதுகிறேன்.எளிமையாகவும்,அருமையாகவும் உள்ளது நன்றி!! இதை ஆங்கிலத்தில் எழுதமுயற்சி செய்து பார்த்தேன்.வாக்கியங்கள் சரியாக எனக்கு தெரியவில்லை.அதனால் தமிழில்...
Post a Comment