அழைப்பேசி ஆங்கிலம் (Introducing yourself)

இப்பாடம் நாம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆங்கில அழைப்பேசி: பயனுள்ள சொற்றொடர்கள் எனும் பாடத்தினை தமிழ் பொருள் விளக்கத்துடன் (பலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க) பகுதிகளாக வழங்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க. கீழுள்ள தலைப்புகளைச் சொடுக்கிப் பார்வையிடுங்கள்.
 • Answering the phone
 • Introducing yourself
 • Asking who is calling
 • Asking for someone
 • Receiving wrong number
 • Connecting someone
 • Asking the caller to wait
 • Giving negative information
 • Leaving / Taking a message
 • Checking the information
 • Telephone problems
 • Finishing a conversation
நாம் பகுதி ஒன்றில் பார்த்ததைப் போன்று, சாதாரணப் பயன்பாடுகளின் (informal)போது அழைப்பின் நோக்கம் அறிய எதிர் முனையிலும் Hello? எனும் ஒற்றைச்சொல்லுடன் செவிமடுத்தலும் இடம்பெறுவது உண்டு. அவ்வாறான சமயங்களில் அழைப்பை மேற்கொண்டவரே தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். இங்கே அறிமுகப்படுத்திக்கொள்ளல் என்பது:
 • தான் யார் என்பதை தெரிவித்தல்.
 • தான் யார், எங்கிருந்து அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தல்
 • தான் யார், எங்கிருந்து, எதற்காக அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தல்
என மூன்று பிரிவுகளாகக் கூறலாம்.

Introducing yourself

Good morning. This is Sarmilan speaking
காலை வணக்கம். இது (இங்கிவர்) சர்மிலன் பேசுகிறேன்.

Good morning. I'm calling from Hong Kong …
காலை வணக்கம், நான் ஹொங்கொங்கில் இருந்து அழைக்கிறேன்.

Good morning. My name is Sarmilan, calling from Hong Kong.
காலை வணக்கம். எனது பெயர் சர்மிலன், ஹொங்கொங்கில் இருந்து அழைக்கிறேன்.

Hello, I'm calling on behalf of Mr. David Brian.
ஹலோ, நான் டேவிட் பிறேன் அவர்கள் சார்பாகப் பேசுகிறேன். (ஒருவருக்கு சார்பாக அல்லது உதவியாகப் பேசுதல்)

Hello, I am your customer. I am calling about...
ஹலோ, நான் உங்கள் வாடிக்கையாளர். நான் அழைக்கின்றேன் ... பற்றி ....

Hello, it's Sarmilan from the dentist's clinic here.
ஹலோ, இது சர்மிலன் இங்கு பல்வைத்தியப் பணியகத்தில் இருந்து.

Hello, this is David Brain from ABSC Brothers Ltd.
ஹலோ, இது டேவிட் பிறேன் ABSC சகோதரர்கள் (வரையறுக்கப்பட்ட) நிறுவனத்தில் இருந்து.

Hello, this is TDK company, my name is Sarmilan. I am calling about...
ஹலோ, இது TDK நிறுவனம், எனது பெயர் சர்மிலன். நான் அழைக்கின்றேன் ... பற்றி ....

Hello, I am CEO of the TDK company, I am calling about...
ஹலோ, நான் TDK நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று பணிப்பாளர் (chief executive officer), நான் அழைக்கின்றேன் ... பற்றி...

கவனிக்கவும்: நன்கு அறிமுகமான இருவருக்கு இடையிலான உரையாடலாக இருந்தால் Hello எனும் போதே ஒருவருகொருவர் குரலை மட்டுக்கட்டிக்கொள்ளலாம். ஆனால் சிலவேளை அறிமுகமானவருக்கு இடையே என்றாலும் எதிர்முனையில் உள்ளவருக்கு சரியாக கேட்காவிட்டால், அழைப்பவர் தன்னை யார் என்பதை உணர்த்தவேண்டி ஏற்படும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் கீழுள்ள சொற்றொடர்கள் பயன்படும்.

Hello, this is Sarmilan.
ஹலோ, இது சர்மிலன்.

Hello, Sarmilan speaking
ஹலோ, சர்மிலன் பேசுகின்றேன்.

Hello, this is Sarmilan calling.
ஹலோ, இது சர்மிலன் அழைக்கின்றென்.

Yes, it's Sarmilan.
ஆம், இது சர்மிலன்.

Yes, it's Sarmilan from Aangilam Inc. here.
ஆம், இது இங்கு சர்மிலன் ஆங்கிலம் கூட்டுத்தாபனத்திலிருந்து.

Hey, this is Sarmilan, your friend. (Informal)
ஹேய், இது சர்மிலன், உனது நண்பன். (சாதாரண வழக்கு) நண்பர்களுக்கிடையில்

Hey, it's Sarmilan. (Very informal)
ஹேய், இது சர்மிலன். (மிகச் சாதாரண வழக்கு) நண்பர்களுக்கிடையில்

Hey, you can't hear me? I am Sarmilan. (very informal)
ஹேய், நான் பேசுவது உனக்கு கேட்கிறதில்லையா? நான் சர்மிலன். (மிகச் சாதாரண வழக்கு)

மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கிடையில் இவ்வாறான உரையாடல் இடம்பெறுதலை நீங்கள் காணலாம். இருப்பினும் நெருங்கிய நட்பு மற்றும் உறவினர் அல்லாதோருடன் இவ்வாறு பேசுதல் கூடாது என்பதை கருத்தில் கொள்க.

கவனிக்கவும்: இப்பாடம் நாம் ஏற்கெனவே வழங்கப்பட்ட அழைப்பேசி ஆங்கிலம் பயனுள்ள சொற்றொடர்கள் என்பதனை மீண்டும் தமிழ் பொருள் விளக்கத்துடன் பலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க பகுதிகளாக வழங்கப்படுகின்றது என்பதை கருத்தில் கொள்க.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

10 comments:

Unknown said...

super work mr.ARUN

Unknown said...

super work mr.Arun

Punithavathi said...

Hello sir,
English with tamil meaning very wonderful. Thank you sir.

Unknown said...

அருமை

zameer said...

great

Unknown said...

Thank you...


Unknown said...

sir thank you serveries
i have one small request
ply add how to read the English word in Tamil
Ex:
Hey How are you?

ஹேய் ஹவ் ஆர் யு

kindly send like this feature

Anandhi said...

this is very useful website. thank u. please let me know how to download the entire content to my computer.

siraj said...

hi,
these are highly worthy statements.everyone must practice
thanks

Unknown said...

How to divde sylabel. Please explain

Post a Comment