How to talk on the phone in English?
Download As PDF
இன்று
தொலைபேசி இல்லாவிட்டாலும்
அழைப்பேசி இல்லாதவர்களே
இல்லையெனும் நிலையாகிவிட்டது. இது இன்று நமது
வாழ்வில் ஒரு அத்தியாவசியப்
பொருள் எனும் இடத்தையும் பிடித்துவிட்டது.
இருப்பினும் அழைப்பேசியில்
எப்படி பேசுவது எனும் நடத்தை
நெறிகளை பொதுவாக எம்மில் அதிகமானோர் கருத்தில்
கொள்வதில்லை.
ஆனால்
ஆங்கிலத்தில் தொலைப்பேசியில்
உரையாடும் போது முறையற்ற (சாதாரண) (Informal ) உரையாடல் வழக்கு, முறையான உரையாடல் வழக்கு (Formal), மிகவும் முறையுடனான உரையாடல் வழக்கு (More Formal) எனும் நடத்தை
நெறிகள் (Telephone etiquette) பின்பற்றப்படுகின்றன. சிறந்த தொலைப்பேசி நடத்தை நெறியுடன் பேசுதல் ஒரு தகமையாகவும் பார்க்கப்படுகிறது.
ஆங்கிலம் பேசத் தெரிந்தும் சில முக்கியமான அழைப்பேசி உரையாடலின் போது எவ்வாறு பேசுவது என்பதனை அறியாமல் சிரமப்படும் பலரையும் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கிறது. எனவே இவற்றை நாம் முறையாகவும் முழுமையாகவும் இப்பாடத்தில் பார்ப்போம்.
கவனிக்கவும்: இப்பாடத்தின் நீளம் கருதி இப்பாடம் ஏழு பகுதிகளாக வரும் என்பதை அறியத்தருகின்றோம்.
1. Informal Situation (முறையற்ற (சாதாரண) சூழ்நிலை உரையாடல்)
2. Formal Situation (முறையான சூழ்நிலை உரையாடல்)
3. More Formal Situation (மிகவும் முறையுடனான சூழ்நிலை உரையாடல்)
4. Telephone Language: Useful English Phrases (அழைப்பேசி மொழி: பயன்மிக்கச் சொற்றொடர்கள்)
5. Vocabulary (சொல்வளம்)
6. Telephone Etiquette (தொலைபேசி நடத்தை நெறி)
7. Tips (உதவிக்குறிப்புகள்

நாம் நமது நண்பர்கள்,
சக பணியாளர்கள்,
உறவினர்கள் போன்ற நெருக்கமானவர்களிடம் உரையாடும்
போது எந்த முறையான தொலைபேசி உரையாடல் வழக்குகளையும் கடைப்பிடிப்பது இல்லை அல்லது பெரிதாக கருத்தில் கொள்வதில்லை. அதனாலேயே அதனை "முறையற்ற" (சாதாரண) வழக்கு எனப்படுகிறது என்பதை கருத்தில் கொள்க. ஆங்கிலத்தில் அதனைத் தான் (Informal Situation) எனப்படுகின்றது.
அவ்வாறான ஒரு சாதாரண அழைபேசி உரையாடல் ஒன்றை (இரண்டு நண்பர்கள் பேசுவது போன்று) இப்பகுதியில் கீழே வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறான ஒரு சாதாரண அழைபேசி உரையாடல் ஒன்றை (இரண்டு நண்பர்கள் பேசுவது போன்று) இப்பகுதியில் கீழே வழங்கப்பட்டுள்ளது.
பார்க்கவும்.
Informal Situation
- Sarmilan: Hello, this is Sarmilan.ஹலோ, நான் (இது) சர்மிலன்.
- David: Hi Sarmilan, this is David.ஹாய் சர்மிலன், நான் (இது) டேவிட்
- Sarmilan: Hey! David. How are you?ஹேய்..! டேவிட் எப்படி சுகம்?
- David: I'm Fine, thanks. Can we meet on Sunday. We have a barbecue party on the Gold Coast beach.நான் நலம், நன்றி. நாங்கள் ஞாயிறன்று சந்திக்க முடியுமா? நாங்கள் கோல்ட் கோசுட் கடற்கரையில் ஒரு பார்பிக்கூ* விருந்து வைத்திருக்கிறோம்.
- Sarmilan: Wow! This sounds good. What time can we meet?வாவ்! இது கேட்க நன்றாக (இருக்கின்றது). நாம் எத்தனை மணிக்கு சந்திக்க முடியும்?
- David: How about at 5:00 pm?எப்படி ஐந்து மணியளவில்?
- Sarmilan: that's fine. I'll see you then, bye.அது நல்லது. நான் உன்னை அப்பொழுது சந்திக்கிறேன். விடைபெறுகிறேன்
- David: bye.
- விடைப்பெறுகிறேன்.
குறிப்பு:
இது ஒரு
சிறியப் பகுதி மட்டுமே என்றாலும்
உங்கள் நண்பர்களிடையேயான உரையாடல்
பயிற்சிகளுக்கு இப்பகுதியில்
இடம்பெற்றுள்ள சொற்றொடர்களை
எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
இப்பாடத்தின் மிகுதி ஆறு பகுதிகளும் தொடர்ச்சியாக
வரும்.
நன்றி!
அன்புடன்
அருண்
| HK Arun
You can join our Facebook page and follow us on Twitter. We are on Google Plus as well.
11 comments:
good!!!!!!!!!
thank u so much sir
jeni
it is very useful
Sir, very good morning. Your service is very useful.Please continue........
உங்கள் சேவையை உலக தமிழ் இனமே மறக்காது, தமிழ்த்தாயின் தலைமகனே தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்
த.மணி
சென்னை.
Really nice sir. thank u!
Really nice sir. thank u!
most usfull this this,
thanks to lovable Arun sir
Really nice sir. thank u!
Really nice sir. thank u!
thank u Arun sir...very nice blog..after seeing this site immediately forward to my friends.thank u so much sir.
Post a Comment