அழைப்பேசி ஆங்கிலம் (Asking who is calling)

இப்பாடம் நாம் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆங்கில அழைப்பேசி: பயனுள்ள சொற்றொடர்கள் எனும் பாடத்தினை தமிழ் பொருள் விளக்கத்துடன் (பலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க) பகுதிகளாக வழங்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க. கீழுள்ள தலைப்புகளைச் சொடுக்கிப் பார்வையிடுங்கள்.
 • Answering the phone
 • Introducing yourself
 • Asking who is calling
 • Asking for someone
 • Receiving wrong number
 • Connecting someone
 • Asking the caller to wait
 • Giving negative information
 • Leaving / Taking a message
 • Checking the information
 • Telephone problems
 • Finishing a conversation
அழைப்பை மேற்கொள்பவர் தன்னைப் பற்றிய அறிமுகத்தை தெரிவிக்கத் தவறும் சமயம், அழைத்தவர் யார், யாருக்கான அழைப்பு, அழைத்ததன் காரணம் என்ன என எதிர்முனையில் இருந்து கேள்விகள் எழும். எனவே நீங்கள் யாருக்காவது அழைப்பை மேற்கொள்வீர்கள் என்றால் நாம் ஏற்கெனவே கற்றவாறு தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்டு உரையாடுங்கள். இருப்பினும் சிலநேரம் உங்களுக்கு யாரேனும் அழைப்பை மேற்கொண்டு நீங்கள் "யார், யாருக்கு, ஏன், எதற்கு" எனும் கேள்விகள் கேட்க வேண்டியும் வரலாம், அவ்வாறான சமயங்களில் கீழுள்ள சொற்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கவனிக்கவும்: குறிப்பாக அழைப்பவர் யார் என தெரியாத நிலையிலேயே "அழைப்பவர் யார்?” எனும் கேள்வியை எழுப்ப வேண்டிவரும். எனவே எதிர்முனையில் பேசுபவர் யார் என்பது உங்களுக்கு தெரியாது. ஆகையால் அவ்வாறான சந்தர்ப்பங்களில் முறையுடனான (Formal) உரையாடல் வழக்கில் மட்டுமே பேசுங்கள்.

Who's calling? (informal)
அழைப்பது யார்?

Who's calling please? (Formal)
தயவுசெய்து அழைப்பது யார்?

Who's speaking? (informal)
யார் பேசுவது?

Who's speaking please? (Formal)
தயவுசெய்து பேசுவது யார்?

Excuse me, who is this? (Formal)
என்னை மன்னக்கவும், இது யார்?

Where are you calling from? (informal)
எங்கிருந்து நீங்கள் அழைக்கிறீர்கள்?

Can I ask where are you calling from, please? (Very Formal)
தயவுசெய்து நீங்கள் எங்கிருந்து அழைக்கிறீர்கள் (என) நான் கேட்க முடியுமா? (மிகவும் முறையான வழக்கு)

சிலவேளை வேறொருவருக்கு அழைப்பு வந்து, அவருக்கு பதிலாக நீங்கள் அழைப்பை எடுத்து, குறிப்பிட்ட அவர் எங்கிருக்கிருக்கிறார் எனும் தகவலை வழங்கும் அதே சமயம், "தாங்கள் யார்" என அறிந்துக்கொள்ளுதலும் அவசியமானதாக இருக்கலாம். அவ்வாறான சமயம் கீழுள்ள சொற்றொடர்கள் பயன்படும்.

He's on lunch right now. Who's speaking? (informal)
அவர் இப்பொழுது பகல் உணவில் இருக்கிறார். (அவர் சாப்பிடுகிறார்) யார் பேசுகிறீர்கள்?

He's on lunch right now. Who's speaking please? (Formal)
அவர் இப்பொழுது பகல் உணவில் இருக்கிறார். (அவர் சாப்பிடுகிறார்) தயவுசெய்து யார் பேசுகிறீர்கள்?

He's in a meeting at the moment. Who is calling? (informal)
அவர் இப்பொழுது ஒரு கூட்டத்தில் இருக்கிறார். யார் பேசுகிறீர்கள்?

He's in a meeting at the moment. May I ask who’s calling? (Formal)
அவர் இப்பொழுது ஒரு கூட்டத்தில் இருக்கிறார். நீங்கள் யார் பேசுகிறீர்கள் (என) நான் கேட்கலாமா? (முறையான வழக்கு)

Sarmilan's not in. Who's this? (informal)
சர்மிலன் இங்கில்லை. யார் இது?

I'm sorry, Sarmilan is not here at the moment. Can I ask who's this? (Formal)
வருந்துகிறேன், சர்மிலன் இப்பொழுது இங்கில்லை. யாரிது என்று நான் கேட்க முடியுமா? (முறையான வழக்கு)

குறிப்பு: இவ்வாறான கேள்விகள் கேட்கப்படாமல் இருக்க அழைப்பை விடுக்கும் போதே உங்களைப் பற்றிய அறிமுக உரையாடலுடன் தொலைபேசியில் பேசுதல் சிறந்த தொலைப்பேசி நடத்தை நெறியாகும்.

கவனிக்கவும்: மேலே இரண்டு வகையான உரையாடல் வழக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் முறையான (Formal) வழக்கினை மட்டுமே உங்கள் உரையாடல் வழக்காகக் கொள்வது சிறந்தது.

கவனிக்கவும்: இப்பாடம் நாம் ஏற்கெனவே வழங்கப்பட்ட அழைப்பேசி ஆங்கிலம் பயனுள்ள சொற்றொடர்கள் என்பதனை மீண்டும் தமிழ் பொருள் விளக்கத்துடன் பலரின் வேண்டுகோள்களுக்கு இணங்க பகுதிகளாக வழங்கப்படுகின்றது என்பதை கருத்தில் கொள்க.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun
Download As PDF

12 comments:

Unknown said...

nice

Unknown said...

i like it, more and more useful for everyone.
thanking you

deitydinesh said...

Great.! Mr Arun Sir., Thank You Very Much...

Unknown said...

It's very useful...tq sir!

Unknown said...

very useful thank you sir.

Unknown said...

This useful to speak in english. Thank you sir

Unknown said...

Very usefull

Unknown said...

Very useful thank u sir......

Unknown said...

Useful taught...

Unknown said...

nice and useful to me

Unknown said...

Learn very simple. Speak quick. Tq sir GREAT job

Unknown said...

Super

Post a Comment