தொலைபேசி ஆங்கிலம் (Asking for Someone)

இப்பாடம் "ஆங்கில அழைப்பேசி: பயனுள்ள சொற்றொடர்கள்" எனும் பாடத்தின், தமிழ் பொருள் விளக்கத்துடன் வழங்கப்படும் பகுதிகளில் ஒன்றாகும். ஏற்கெனவே வழங்கப்பட்டவைகளை கீழுள்ள இணைப்புகள் ஊடாகப் பார்க்கலாம். 
  • Answering the phone
  • Introducing yourself
  • Asking who is calling
  • Asking for someone (இன்றையப் பகுதி)
  • Receiving wrong number
  • Connecting someone
  • Asking the caller to wait
  • Giving negative information
  • Leaving / Taking a message
  • Checking the information
  • Telephone problems
  • Finishing a conversation
Asking for Someone

தற்காலத்தில் நாம் யாருடனாவது தொடர்புகொள்ள வேண்டுமானால், நேரடியாக அந்நபரின் அழைப்பேசிக்கு அழைப்பு விடுக்கலாம். ஆனால் அக்குறிப்பிட்ட நபரின் அழைப்பேசி இலக்கம் எம்மிடம் இல்லாதப் போது அல்லது அழைப்பேசி இலக்கம் செயற்படாத நிலையில், நாம்  அந்நபரின் பணிமனைக்கு, வீட்டிற்கு, அல்லது அவர் இருக்கும் இடத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டியதாக இருக்கும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் யாருடன் தொடர்புகொள்ள வேண்டுமோ அந்நபரே எதிர்முனையில் இருந்து பதிலளிப்பார் எனில் நாம் நேரடியாக உரையாடலைத் தொடரலாம். ஆனால் அவ்வாறின்றி வேறொரு மூன்றாம் நபர் அழைப்பை எடுப்பார் எனில் நாம் அக்குறிப்பிட்ட நபருடன் "அவர் (பெயர்) இருக்கிறாரா?" என்றும் "நான் (பெயர்) உடன் தொடர்புக்கொள்ள முடியுமா?" என்பது போன்ற சொற்றொடர்களை பயன்படுத்த வேண்டியதாக இருக்கும்..

எடுத்துக்காட்டாக:
  • ஒரு நிறுவனத்தின் (தொலைப்பேசியாளினி ஊடாக) குறிப்பிட்ட நபருடன்
  • வணிக தொடர்புகளின் போது
  • வீட்டு தொலைபேசியில் ஒருவருக்கு பதிலாக வேறொருவர் பதிலளிக்கும் போது
அவ்வாறான ஆங்கிலச் சொற்றொடர்கள் சிலவற்றை இப்பகுதியில் பார்ப்போம்.

Is Sarmilan in? (informal)
சர்மிலன் இருகிறானா?

Is David there? (informal)
டேவிட் அங்கேயா?
(டேவிட் அங்கிருக்கிறானா/ரா?)

I want to talk to your sister?
நான் உன் தங்கையுடன் பேச வேண்டும்?

I wanna talk to my wife?
நான் என் மனைவியுடன் பேச வேண்டும்?

குறிப்பு 1:
"want to" என்பதன் சுருக்கப்பயன்பாடே "wanna" ஆகும். அநேகமாக அமெரிக்கப் பேச்சு வழக்கில்.

குறிப்பு 2:
"நான் என் மனைவியுடன் பேச வேண்டும." எனும் வாக்கியத்தைப் பாருங்கள். அது ஒரு நேர்மறை வாக்கியமாகும். இருப்பினும் பேச்சு வழக்கில், ஒருவர் பேசும் தொனியின் அடிப்படையில் அவ்வாக்கியம் கேள்வியாகப் பயன்படுவதும் உண்டு என்பதை கருத்தில் கொள்ளவும். அவ்வாறான வாக்கியத்தின் முடிவில் "?" கேள்விக்குறி இடப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.

கவனிக்கவும்: 

மேலுள்ள சொற்றொடர்கள் நண்பர்கள் உறவினர்கள் போன்ற நெருக்கமானவர்களுடன் சாதாரன வழக்கில் (Informal) பேசுதல் வழக்கம் என்றாலும், அவை முறையான தொலைபேசி உரையாடல் வழக்கு அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.

அதேவேளை இன்று ஆங்கிலம் கற்கும் தாய்மொழி ஆங்கிலேயரும் தம் குழந்தைகளுக்கு நாகரீகமான வழக்கில் பேசவே கற்றுக்கொடுக்கின்றனர். எனவே நெருக்கமானவர்கள் என்றாலும் தொலைபேசி நடத்தை நெறிகளை பின்பற்றிப் பேசுதல் பயன்மிக்கது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே கீழுள்ள முறையில் எப்பொழுதும் பேசி பயிற்சிப் பெறுங்கள்.

Can I speak to your son please?
தயவுசெய்து நான் உங்கள் மகனுடன் பேச முடியுமா?

Can I speak to Mr. David Brain please?
தயவுசெய்து நான் திரு. டேவிட் பிறேன் அவர்களுடன் பேச முடியுமா?

Could I speak to Mr. David Brain please?
தயவுசெய்து நான் திரு. டேவிட் பிறேன் அவர்களுடன் பேச முடியுமா? (More Formal)

Could you put me through to David Brain, please?
தயவுசெய்து என்னை திரு டேவிட் பிறேன் அவர்களுடன் பேசவிட முடியுமா?

May I speak with Mr. David Brain, please?
தயவுசெய்து நான் திரு. டேவிட் பிறேன் அவர்களுடன் பேசலாமா?

Would the doctor be available?
மருத்துவரை (சந்திக்க/ காண) கூடியதாக இருக்குமா/இருப்பாரா?
மருத்துவரிடம் (பரிசோதிக்க/ஆலோசனை பெற/மருந்தெடுக்க) கூடியதாக இருக்குமா/இருப்பாரா?

I'd like to speak to Mr. Sarmilan.
நான் திரு. சர்மிலன் அவர்களுடன் பேச விரும்புகிறேன்.

I'm trying to contact Mr. David Brain, please
தயவுசெய்து, நான் திரு டேவிட் பிறேன் அவர்களுடன் தொடர்புகொள்ள முயற்சி செய்கின்றேன்.

Can I talk to your sister, please?
தயவுசெய்து, நான் உங்கள் சகோதரியுடன் பேச முடியுமா?

Could I talk to your sister, please?
தயவுசெய்து. நான் உங்கள் சகோதரியுடன் பேச முடியுமா?

தொடர்புடையப் பாடம்:

கடைசியாக உள்ள இரண்டு சொற்றொடர்களுக்கும் இடையிலான வேறுபாட்டை கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி பார்க்கவும்.

சில சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்ட நபருடன் எமக்கு அழைப்பேசியில் நேரடியாக தொடர்புக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது, ஆனால் ஏதோ ஒரு தேவைக்காக அந்நபர் பற்றி அறிதல் எமக்குத் தேவைப்படும். குறிப்பாக ஒரு மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்து மருத்துவர் இருக்கிறாரா என்பதை மட்டுமே அறிவதற்கு, ஒரு சட்டவாளரை சந்திப்பதற்கான முன்னனுமதி பெறுவதற்கு, போன்ற தேவைகளின் அடிப்படையில் அப்பணிமனைகளில் உள்ள தொலைப்பேசியாளர் அல்லது உதவியாளர் உடன், குறிப்பிட்ட நபரின் விவரம் அறிதல் அவசியப்படும். அப்போது இவ்வாறான சொற்றொடர்கள் பயன்படும்.

May I ask Doctor Jawhar Ali availabe today?
நான் மருத்துவர் ஜவஹர் அலியை இன்று (சந்திக்க/ காண) கூடியதாக இருக்குமா? (மருத்துவ ஆலோசனை பெற/ மருந்து எடுக்க)

Could I get an appointment with Mr. Mark Daly please?
தயவு செய்து, நான் திரு. மார்க் டேலியுடன் ஒரு நியமனம் (சந்திப்பதற்கான முன்னனுமதி) பெற முடியுமா?

சிலநேரம் எதிர்முனையில் பேசுபவரின் ஆங்கில உரையாடலை உங்களால் சரியாக விளங்கிக்கொள்ள முடியாவிட்டால், “தயவுசெய்து, நான் யாராவது தமிழ் பேசக்கூடிய ஒருவருடன் பேச முடியுமா?” என்று கீழுள்ளவாறு கேட்கலாம்.

Could I speak to someone who speaks Tamil please?
தயவுசெய்து, நான் யாராவது தமிழ் பேசக்கூடிய ஒருவருடன் பேச முடியுமா?

அழைப்பேசி உரையாடல் தொடர்புடைய ஏனைய பாடங்கள் தொடர்ந்து வரும்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

Download As PDF

4 comments:

Anonymous said...

vaazhga valamudan

சிவஹரி said...

இனிய நல்வணக்கங்களுடன் சிவஹரி,

இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய வலைப்பூவினை அறிமுகப்படுத்திடும் வாய்ப்பினை நான் பெற்றிருக்கின்றேன்.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_24.html

நன்றி

Unknown said...

Super. All the best

Unknown said...

Super sir

Post a Comment