ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஒரு சொல் (One-letter English words)

தமிழில் "ஓரெழுத்து ஒரு மொழி" என்று நீங்கள் பாடசாலையில் கற்றிருப்பீர்கள். அதாவது "தீ நெருப்பு, "போ" செல், "தை" தை மாதம் போன்ற சொற்கள் ஒரெழுத்து ஒரு சொற்களாகும். ஆனால் ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஓர் சொல் எத்தனை இருக்கின்றன தெரியுமா?

சரி! இப்பாடத்தில் பார்ப்போம்.

A: ஒரு அல்லது ஒன்று என்பதை குறிக்கப் பயன்கிறது.
I: நான் என பயன்படுகிறது.
O: கவிதையியலில் பயன்படும் ஒரு வியப்பிடைச் சொல்.

குறிப்பு 1: "I" (நான்) எனும் எழுத்தையும், "O" எழுத்தையும் கெப்பிட்டல் எழுத்தில் மட்டுமே எழுதவேண்டும்.

குறிப்பு 2: இலத்தீன் மொழி வழக்கில் "O" எழுத்தை ஒரு வியப்பிடைச் சொல்லாக கவிதையியல் பயன்படுத்தப்படுகின்றது; ஆங்கில மொழி இலத்தின் மொழியையும் தன்னகத்தே கொண்டு உருவான மொழி என்பதால் அப்பயன்பாடே ஆங்கிலத்திலும் காணப்படுகின்றது.

இந்த மூன்று ஓரெழுத்து ஒரு சொல் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளன. ஆனால்...


தொழில்நுட்ப பயன்பாட்டில்

இன்றைய தொழில்நுட்ப உலகில் அழைப்பேசி, கணனி, இணையம் போன்றவற்றின் வருகை பல ஓரெழுத்து ஒரு சொற்களை இளம் தலைமுறையினரிடம் தோற்றுவித்துள்ளன. குறிப்பாக குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கும், இணைய அரட்டையடிப்பதற்கும் பல ஆங்கிலச் சொற்களின் ஒலிப்பை உணர்த்தும் வண்ணம், சொற்களை சுருக்கி ஓரேழுத்து ஒரு சொல் போன்று பயன்படுத்துகின்றனர். இதனை "ஓரெழுத்து ஒரு சொல்" என்று கருதிவிட வேண்டாம். ஆனால் இப்பயன்பாடு இன்று பரவலாக பயன்பாட்டில் தோன்றியுள்ளது. குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடையே இப்பபயன்பாடு மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இவற்றில் சில உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இணையப் பயன்பாட்டில் பொதுவாக அதிகம் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் அந்த எழுத்துக்கள் குறிக்கும் சொற்கள் இரண்டையும் கீழே பார்ப்போம்.
எடுத்துக்காட்டாக:

T: "take"
C: "care"
C: "see"

"E" எனும் எழுத்து "he" என்று குறிக்கவும் சிலநேரங்களில் "she" என்று குறிக்கவும் புதியச்சொல்லாக்கமாக பயன்படுத்தப்படுகிறது. "G" எனும் எழுத்து “gangster” என்றும் பயன்படுகிறது. இவற்றைத் தவிர மேலும் பல எழுத்துக்கள் பல சொற்களுக்கு பதிலாக சுருக்கப் பயன்பாடாக புதியச்சொல்லாக்கமாக பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

b: “be” or “bee”
c: “sea” or “see”
f: “fat”
g: “Gee”
I: “eye”
j: “jay”
k: “okay”
n: “and”
o: “oh”
p: “pea” (தாணியம்) or “pee” (to urinate)
q: “cue” or “queue”
r: “are”
t: “tea”
u: “you”
v: “very”
x: (ஒரு சொற்றொடரின் பகுதியாக பயன்படுகிறது) “x out”
y: “why”

சொற்களை சுருக்கி இலக்கங்களையும் ஓரிலக்கம் ஒரு சொல் போன்று பயன்படுத்தலும் பயன்பாட்டில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக:

1: “won”
2: “to”, “too”. நாளை என்பதை சுருக்கமாக இரண்டுடன் "2moro" (tomorrow) என எழுதும் வழக்கும் உள்ளது.
4: “for” – வாக்கியங்களை சுருக்கி "for" ஒலிப்பை தரும் வகையில் a4d, 4cast, 4m, 4mer, 4milk, 4most, 4t, 4ty நான்கு (4) இலக்கத்தை இட்டு எழுதும் வழக்கும் உள்ளது.

கவனிக்கவும்:

இவை ஓரெழுத்து ஒரு சொற்கள் அல்ல; ஆனால் ஓரெழுத்து ஒரு சொல் போன்று சொற்களை சுருக்கமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் இணைய அரட்டைகளில் எளிதாக தட்டச்சுவதற்காகவும் பயன்படும் ஒரு தற்கால முறையே ஆகும். இவை காலத்திற்கு ஏற்ப இளம் தலைமுறையினரால் தோற்றமெடுக்கும் புதுச்சொல்லாக்கங்கள் என்றே கூற வேண்டும். நாளை இவை மேலும் பெருகவும் கூடும். வேறு புதிய வடிவில் தோற்றமெடுக்கவும் கூடும்.

தமிழில்

சரி! ஆங்கிலத்தில் ஓரெழுத்து ஒரு சொற்கள் எத்தனை உள்ளன என்பதை இன்றையப் பாடத்தில் பார்த்தோம். ஆனால் தமிழர்களான நாம் நம் தமிழில் எத்தனை ஓரெழுத்து ஒரு சொற்கள் புழக்கத்தில் உள்ளன என்பதை அறிவோமா? தமிழில் 42 சொற்கள் உள்ளன. விரும்புவோர் அவற்றை இங்கே பார்க்கலாம். வேண்டுமானால் உங்கள் கணினியில் பதிவிறக்கிக் கொள்ளவும் முடியும்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF

11 comments:

HVL said...

பயனுள்ள தகவல்!

ADMIN said...

நீங்கள் சொல்வது உண்மைதான்.. y-why, tomorrow - 2moro.. இப்படி வரும் தலைமுறையில் மாறிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமே..பகிர்வுக்கு நன்றி..!!

சாய் said...

உங்களின் ஆங்கிலம் தளத்தில் பாடம் எண் 23 மற்றும் 24 இரண்டிலும் ஒரே பாடம் உள்ளது. சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

நன்றி

பா.பூபதி

HK Arun said...

@HVL
@தங்கம் பழனி

உங்கள் கருத்துரைக்கு நன்றிகள்!

@சாய்

//பாடம் எண் 23 மற்றும் 24 இரண்டிலும் ஒரே பாடம் உள்ளது.//

சரிசெய்துள்ளேன்.

நன்றி!

சாய் said...

உங்களின் e-mail முகவரியை கொடுக்க முடியுமா?

saireader@gmail.com

பா.பூபதி

சாய் said...

he/she/it இவைகளுக்கு has போட வேண்டும். இது புரிகிறது ஆனால்

worker have/has work
Ramu have/has இப்படி ஏதாவது ஒரு பெயரில் ஆரம்பிக்கும் வாக்கியத்திற்கு have போடுவதா has போடுவதா! என குழப்பமாக இருக்கிறது

நன்றி
பா.பூபதி

சாய் said...

சின்ன சின்ன வாக்கியங்களை உங்களின் மொழிபெயர்பின் அடிப்படையில் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. சிறிய வாக்கியங்களை உருவாக்கவும் முடிகிறது. ஆனால் கொஞ்சம் பெரிய வாக்கியங்களை உங்களின் மொழிபெயர்பின் அடிப்படையில் புரிந்துகொள்ள முடியவில்லை
உதாரணமாக கீழே உள்ள வாக்கியத்தை புரிந்துகொள்ள முடியவில்லை - இதை மொழிபெயர்த்து எப்படி புரிந்துகொள்வது என்பதை விளக்குங்களேன்!

Lest readers should treat the problem casually, without
knowing what the final doctrine of the Gita is, mixing up
the necessary character of action with the contingent
character of wisdom, to which confusion the reference to
karma (action) in the previous chapter might have
contributed, Arjuna here, in verse 1, is made to put the
question in a very pointed manner, even going to the extent
of suggesting that Krishna was purposely trying to confuse
him regarding the relative superiority of action or wisdom.

இப்படி கமா (,) போட்டு எழுதப்படும் வாக்கியங்களை புரிந்துகொள்ள முடியவில்லை நண்பரே

நன்றி

Learn said...

பயனுள்ள நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Franklin said...

பயனுள்ள தகவல்கள் நண்பரே.

Franklin said...

பயனுள்ள தகவல்கள் நண்பரே.

Krishnaveni said...

Nandri sir

Post a Comment