ஆங்கில "இயல்கள்" (Suffix "ology")

இன்றையப் பாடத்தில் "ology" எனும் எழுத்துக்கள் பின்னொட்டாக இணைந்து பயன்படும் சொற்கள் 80 வழங்கப்பட்டுள்ளன. இந்த "ology" பின்னொட்டு மூலச்சொற்களுடன் இணைந்து புதியச் சொற்களாக மாறும் போது அவற்றின் பொருள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை இன்று பார்க்கலாம். இவை உங்களின் ஆங்கில மொழியின் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ள உதவும். அதேவேளை ஆர்வமுள்ளோர் ஆங்கில வேர்ச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் இணைந்து எவ்வாறு புதியச் சொற்பிறப்பை ஏற்படுத்துக்கின்றன எனும் ஆய்வறிவையும் வளர்த்துக்கொள்ளலாம். அத்துடன் இச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன; இவை ஆங்கில சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்ளூம் அதேவேளை அச்சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்களை அறிந்துக்கொள்ள உதவும்.

இந்த "ology" பின்னொட்டு தொடர்பான விளக்கம், பயன்பாடு மற்றும் குறிப்பு போன்றனவும் கீழே வழங்கப்பட்டுள்ளன.

சரி! இனி அட்டவணையைப் பார்ப்போம்.


No:English Terms கலைச்சொல்லாக்கம்
1.Anthropologyமானுடவியல்/ மானிடவியல்
2.Archaeologyதொல்பொருளியல்
3.Astrologyசோதிடவியல் (சோதிடம்)
4.Astrologyவான்குறியியல்
5.Bacteriologyபற்றுயிரியல்
6.Biologyஉயிரியல்
7.Biotechnologyஉயிரித்தொழில்நுட்பவியல்
6.Climatologyகாலநிலையியல்
7.Cosmologyபிரபஞ்சவியல்
8.Criminologyகுற்றவியல்
9.Cytologyஉயிரணுவியல்/குழியவியல்
10.Dendrologyமரவியல்
11.Desmologyஎன்பிழையவியல்
12.Dermatologyதோலியல்
13.Ecologyஉயிர்ச்சூழலியல்
14.Embryologyமுளையவியல்
15.Entomologyபூச்சியியல்
16.Epistemologyஅறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17.Eschatologyஇறுதியியல்
18.Ethnologyஇனவியல்
19.Ethologyவிலங்கு நடத்தையியல்
20.Etiology/ aetiologyநோயேதியல்
21.Etymologyசொற்பிறப்பியல்
22.Futurologyஎதிர்காலவியல்
23.Geochronologyபுவிக்காலவியல்
24.Glaciologyபனியாற்றியியல்/ பனியியல்
25.Geologyபுவியமைப்பியல்/ நிலவியல்
26.Geomorphologyபுவிப்புறவுருவியல்
27.Graphologyகையெழுத்தியல்
28.Genealogyகுடிமரபியல்
29.Gynaecologyபெண்ணோயியல்
30.Haematologyகுருதியியல்
31.Herpetologyஊர்வனவியல்
32.Hippologyபரியியல்
33.Histrologyஇழையவியல்
34.Hydrologyநீரியல்
35.Ichthyologyமீனியியல்
36.Ideologyகருத்தியல்
37.Information Technologyதகவல் தொழில்நுட்பவியல்
38.Lexicologyசொல்லியல்
39.Linguistic typologyமொழியியற் குறியீட்டியல்
40.Lithologyபாறையுருவியல்
41.Mammologyபாலூட்டியல்
42.Meteorologyவளிமண்டலவியல்
43.Metrologyஅளவியல்
44.Microbiologyநுண்ணுயிரியல்
45.Minerologyகனிமவியல்
46.Morphologyஉருவியல்
47.Mycologyகாளாம்பியியல்
48.Mineralogyதாதியியல்
49.Myrmecologyஎறும்பியல்
50.Mythologyதொன்மவியல்
51.Nephrologyமுகிலியல்
52.Neurologyநரம்பியல்
53.Odontologyபல்லியல்
54.Ontologyஉளமையியல்
55.Ophthalmologyவிழியியல்
56.Ornithologyபறவையியல்
57.Osteologyஎன்பியல்
58.Otologyசெவியியல்
59.Pathologyநொயியல்
60.Pedologyமண்ணியல்
61.Petrologyபாறையியல்
62.Pharmacologyமருந்தியக்கவியல்
63.Penologyதண்டனைவியல்
64.Personality Psychologyஆளுமை உளவியல்
65.Philologyமொழிவரலாற்றியல்
66.Phonologyஒலியியல்
67.Psychologyஉளவியல்
68.Physiologyஉடற்றொழியியல்
69.Radiologyகதிரியல்
70.Seismologyபூகம்பவியல்
71.Semiologyகுறியீட்டியல்
72.Sociologyசமூகவியல்
73.Speleologyகுகையியல்
74.Sciencologyவிஞ்ஞானவியல் (அறிவியல்)
75.Technologyதொழில்நுட்பவியல்
76.Thanatologyஇறப்பியல்
77.Theologyஇறையியல்
78.Toxicologyநஞ்சியல்
79.Virologyநச்சுநுண்மவியல்
80.Volcanologyஎரிமலையியல்
81.Zoologyவிலங்கியல்

விளக்கம்

ஆங்கிலத்தில் "ology" எனும் பின்னொட்டு இணைந்து பயன்படும் சொற்கள், மனித அறிவுக்கு எட்டிய அனைத்து துறைகளையும் அறிவுசார் அல்லது கல்விசார் அடிப்படையில் பிரித்து, துறை வாரியாக ஆய்வு செய்தலுக்கும் கற்றலுக்கும் உருவாக்கப் படுபவைகளே ஆகும். இந்த "ology" எனும் பின்னொட்டு குறிக்கும் பொருளுக்கு இணையாக தமிழில் "இயல்" எனும் பின்னொட்டு பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் ஆங்கிலத்தில் "ology" எனும் பின்னொட்டு மற்றுமல்லாமல் வேறு பின்னொட்டுக்கள் இணைந்தச் சொற்களையும் தமிழில் "இயல்" என்று பயன்படுத்தும் வழக்கு இருக்கின்றது என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

அவ்வாறான சொற்களை குறித்தப் பாடங்களின் போது பார்ப்போம்.

கவனிக்கவும்:

அதேவேளை "ology" பின்னொட்டு தமிழில் "இயல்" என்றே பயன்பட்டாலும், அவ்வாறு அல்லாமல் பயன்படுத்துதலும் எம் பயன்பாட்டில் உள்ளன.

எடுத்துக்காட்டாக:

Technology தொழில்நுட்பவியல்/ தொழில்நுட்பம்
Information Technology தகவல் தொழில்நுட்பவியல்/ தகவல் தொழில்நுட்பம்
Bio Technology உயிரித் தொழில்நுட்பவியல்/ உயிரித் தொழில்நுட்பம்

இவ்வாறான சொற்களில் பெரும்பாலும் "இயல்" எனும் சொல் பயன்படுத்தப்படாமல் "தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம்" என்றே பயன்பாட்டில் உள்ளன. "Astrology" எனும் சொல்லும் "சோதிடம்" என்றே பயன்பாட்டில் உள்ளது.

அதேவேளை "Astrology" எனும் ஆங்கிலச் சொல், பழந்தமிழரின் வான்குறியியலை குறிப்பதாக முனைவர் இராம.கி ஐயா எடுத்துரைக்கின்றார்.

இலங்கை இந்திய வேறுபாடு

இந்த "ology" பின்னொட்டு குறிக்கும் தமிழ் சொற்புழக்கம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரே மாதிரி இருந்தாலும், விதிவிலக்கானவைகளும் உள்ளன.

எடுத்துக்காட்டாக, இலங்கையில் விஞ்ஞானம், இரசாயனம், இலத்திரனியல் என பயன்பாட்டில் உள்ள சொற்கள்; தமிழ்நாட்டில் அறிவியல், வேதியியல், மின்னியல் என பயன்பாட்டில் உள்ளன.

இந்த சொற்களைப் பொருத்தமட்டில் இலங்கை சொல்வழக்கையும் விட தமிழ்நாட்டு சொல்வழக்கு சிறப்பானது.

இருப்பினும் "Science" எனும் சொல்லை தமிழ்நாட்டில் "விஞ்ஞானம்" என்று ஒருகாலக்கட்டத்தில் பயன்படுத்தினர் என்றாலும், தற்போது "அறிவியல்" எனும் சொல் வழக்கில் காணப்படுகின்றது. அதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் "விஞ்ஞானம்" எனும் சொல்லே பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும் "Science" எனும் சொல்லை "விஞ்ஞானம்" என குறிக்கும் அதேநேரம் "Sciencology" எனும் சொல்லை எளிதாக "விஞ்ஞானவியல்" என "இயல்" எனும் பின்னொட்டை இணைத்து பயன்படுத்துவது போன்று; "அறிவியல்" என்று பயன்படுத்தியப்பின் "Sciencology" (அறிவியலியல்???) என்பதை எவ்வாறு பயன்படுத்துதல் எனும் குழப்பமும் எழுகிறது. இன்றைய ஐரோப்பிய தொழில்நுட்ப முறையில் உலகெங்கும் வியாபித்திருக்கும் “Science” காலத்திற்கு முன்பு, உலக மாந்தரிடையே “அறிவு” என்று ஒன்று இருக்கவில்லையா? மனிதனல்லாத ஐந்தறிவு உயிரினத்திற்கும் "அறிவு" என்பது இருக்கும் போது, அந்த அறிவின் இயலை ஆய்வு செய்தல்தானே அறிவியலாக இருக்க முடியும்! இந்த சொல் தொடர்பில் தமிழ் விஞ்ஞானியான சி. ஜெயபாரதன் ஐயா அவர்களும் மாற்றுக் கருத்து கொண்டவராவார். அத்துடன் "தமிழ்மன்றம்" குழுமத்திலும் இச்சொல் தொடர்பான வாதங்கள் அடிக்கடி சூட்டை கிளப்புவதும் உண்டு. அதேவேளை "விஞ்ஞானம்" எனும் சொல் வடமொழி வேர்கொண்டது என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இதே சொல்தொடர்பில் விக்கியில் நடந்த ஒரு உரையாடலையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சரியாகச் சொல்வதானால் "Science" குறிக்கும் பொருளுக்கான சரியான தமிழ் சொல் இதுவரை உருவாக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.

குறிப்பு

மனித அறிவுக்கு எட்டிய அனைத்து விடயங்களையும் பல்வேறு துறைகளாகவும் கிளைத்துறைகளாகவும் பகுத்து அறிவியல் அடிப்படையில் அதனதன் இயலை ஆய்வு செய்தல் அல்லது கற்றலே “இயல்” எனப்படும். அவ்வாறே தமிழின் இயலை ஆய்வு செய்தலை "தமிழியல்" என்பர்; ஆங்கிலத்தில் "Tamilology" என்றழைக்கப்படும். இன்னும் Indiology = இந்தியயியல், Obamalogy = ஒபாமாவியல் என சொற்கள் அமைவதையும் கவனிக்கவும். ஏன் நீங்கள் நாளை புதிதாக ஒன்றை அல்லது ஒரு விடயத ஆய்வை மேற்கொள்ளப்போகிறீர்கள் என்றால் குறிப்பிட்ட அச்சொல்லுடன் "ology" (இயல்) எனும் பின்னொட்டை இணைத்து நீங்களாகவே பயன்படுத்தவும் முடியும். சிலவேளை அச்சொல் நாளை பிரசித்திப்பெற்றதாக மாறவும் கூடும்!

சரி! உறவுகளே! மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

இப்பதிவில் அதிகமாக கனடா தமிழ்ச் சொற்கோவைக் குழாமினரால் உருவாக்கப்பட்ட கலைச்சொற்கள் பலவற்றை நன்றியுடன் பயன்படுத்தியுள்ளோம் என்பதையும் அறியத்தருகின்றோம். இப்பதிவு மற்றும் இப்பதிவில் இடம்பெற்றுள்ள சொற்கள் தொடர்பான ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பகிர்ந்துக்கொள்ள மறவாதீர்கள்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

Download As PDF

4 comments:

amul said...

Arun sir, your a God of in my life yes, this is true. I no English so I training to your word English to Tamil.

ahamedjuna said...

Dear Sir,
it is great job that you did and are doing.you have filled up the shortcoming of english in tamil.those who have interest to learn englsih as second language you website is truly helpfull
thank you sir and god bless you
Ahamed junaid
From Sri lanka
ahamedjuna@yahoo.com

Ur's Prasanaa said...

Superb sir... really getting interest in ur blog.. sorry now only i'm trying in english, thats why i started here.. :)

Ur's Prasanaa said...

Really getting interest in your blog sir.. happy to read.. thanks..

Post a Comment