நிறுத்தக் குறியீடுகள் (Punctuation Marks)

இங்கே இணைக்கப் பட்டிருக்கும் நிழல் படத்தின் ஓலைச் சுவடிகளில் என்ன எழுதப் பட்டிருக்கின்றது என்பதை உங்களால் வாசித்து அறிய முடியுமா?

"நிச்சயம் முடியாது" என்பதுதான் பதிலாக இருக்க முடியும். (நீங்கள் ஒரு பழந்தமிழ் மொழி ஆய்வாளராக இருந்தால் சிலவேளை சாத்தியமாகலாம்.)

ஆம்! செம்மொழியாகிய எம்மொழி சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இப்படித்தான் எழுதப்பட்டுள்ளது.

அதாவது ஒரு வாக்கியம் வினா வாக்கியமா அல்லது வியப்பு வாக்கியமா என்பதையெல்லாம் வாசித்து உணர்ந்துக் கொள்வதற்கான கேள்விக்குறி, வியப்புக்குறி போன்றவை எம்மொழியில் இருக்கவில்லை. வாக்கியத்தின் இடையே பயன்படும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, முற்றுப்புள்ளி, மேற்கோள் குறிகள் போன்றனவும் இருக்கவில்லை. ஆக இன்று நாம் பயன்படுத்தும் நிறுத்தக் குறியீடுகளே எமது மொழியில் இருக்கவில்லை.

இன்னும் சொல்வதானால் சொற்களின் இடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கும் எம்மொழியில் இருந்ததில்லை.

ஆனால் இன்று இவை எல்லாமே எமது பயன்பாட்டில் உள்ளன. இவை எப்படி எமது பயன்பாட்டிற்கு வந்தன என்றால், ஆங்கில மொழியின் ஊடாக எமக்கு கிட்டியவை ஆகும். இன்று நாம் மட்டுமன்றி உலகில் அனைத்து மொழியினரும் இவற்றின் பயன் உணர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

நிறுத்தக் குறியீடுகள் ( . , ; ; ' ? " " ! ' ' - _ / \ & # * ( ) [ ] { } < > ) என்பன; நாம் பேசும் போது எமது பேச்சில் வெளிப்படுத்தும் உணர்வுகளை, எழுத்தில் எழுதி உணர்த்தவும், எழுதியவற்றை வாசிப்போர் உணர்ந்து வாசிக்கவும் உதவும் இன்றியமையாத குறியீட்டு அடையாளங்கள் ஆகும். அத்துடன் இவை ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனியே பிரித்து வாசித்திடவும், வாக்கியத்தின் உற்பிரிவுகளை எளிதாக உணர்த்திடவும், வியப்பு, வினா போன்ற உணர்வுகளை உணர்த்திடவும் உதவுகின்றன. அதாவது நாம் பேசும் பொழுது நம் குரலை சில இடங்களில்உயர்த்தியும், தாழ்த்தியும், இடையிடையே நிதானித்தும், நிறுத்தியும் கேட்போருக்கு விளங்கும் வகையில் பேசுவோம் அல்லவா! அதனை தான் இந்த நிறுத்தக்குறியீடுகள் எழுத்து வடிவில் செய்கின்றன.

இந்த நிறுத்தக் குறியீடுகளை சரியாகப் பயன்படுத்தாது விட்டால் அவை; "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்பது போல் ஆகிவிடும். சிலவேளைகளில் முற்றிலும் தவறான பொருளை தந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே நிறுத்தக் குறியீடுகளின் பயன்பாட்டை சரியாக அறிந்து பயன்படுத்தல் மிகவும் முக்கியமானது. எழுதுவோருக்கு மட்டுமல்ல, எழுதியவற்றை வாசிப்போரும் இவற்றின் பயன்பாட்டை சரியாக அறிந்திராவிட்டால், சரியாக வாசிப்பது என்பதும் சாத்தியம் இல்லை எனலாம்.

நிறுத்தக் குறியீடுகளின் வரலாற்றை இங்கே பார்க்கலாம்.

இனி இந்த நிறுத்தக் குறியீடுகளின் வகைகளின் பட்டியலைக் கீழே பார்ப்போம்.

Summary of Punctuation Mark

Punctuation Marksநிறுத்தக் குறியீடுகள்Symbols
Full stop/Periodமுற்றுப்புள்ளிaangilam.blogspot.
Colonமுக்காற்புள்ளி:
Semicolonஅரைப்புள்ளி;
Commaகாற்புள்ளி,
Apostropheaangilam.blogஉடைமைக்குறி'
Hyphenஇடைக்கோடு-
Dash (Long hyphen)இடைக்கோடு-
Underscoreகிடைக்கோடு_
Underlineஅடிக்கோடுஆங்கிலம்
Question Markகேள்விக்குறி?
Exclamation Markவியப்புக்குறி!
Forward slashமுன்சாய்கோடு/
Backslashபின்சாய்கோடு\
Double quotation marksஇரட்டைமேற்கோள் குறிகள்" "
Single quotation marksஒற்றை மேற்கோள் குறிகள்' '
Pound signநிறை நிறுத்தக்குறி#
Ampersand/andஇணைப்புக்குறி/உம்மைக்குறி&
Asteriskநட்சத்திரக்குறி*
Ellipsisதொக்கிக்குறி. . .
Bracketsஅடைப்புக்குறிகள்( ) { } [ ] < >

கவனிக்கவும்:

"நிறுத்தக்குறியீடுகள்" உலகில் எழுத்து வடிவில் பயன்படும் அனைத்து மொழிகளிலும் பயன்படுகின்றன என்றாலும்; இவற்றின் பயன்பாடு சில மொழிகளிடையே சிற்சில வேறுப்பாடுகளையும் கொண்டுள்ளன. வேறுப்பட்ட நிறுத்தக் குறியீட்டு அடையாளங்களை பயன்படுத்தும் மொழிகளும் உள்ளன.

நாம் இங்கே பார்க்கப் போவது ஆங்கில நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாடுகளை மட்டுமே ஆகும். தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறுத்தக்குறியீடுகளின் பயன்பாடு ஒரே மாதிரியானதாக காணப்பட்ட போதும், சில இடங்களில் சிற்சில வேறுப்பாடுகளும் உள்ளன. அவற்றை குறிப்பிட்ட பாடங்களில் பார்ப்போம்.

இப்பதிவில் நிறுத்தக் குறியீடுகள் பற்றிய விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை எதிர்வரும் பாடங்களில் ஒவ்வொன்றாக விரிவாகப் பார்ப்போம்.

ஆங்கில நிறுத்தக் குறீயீடுகள் வரலாறு

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

10 comments:

  1. dear friend :

    i am anandh from tamilnadu in india, tis evening i saw your website but i am very happy wonderful , marvelas . beautyful , excelent , fantastic, terrific, and any appricate word i dont have from me , if you dont mine i may contact you always ....

    Thanks
    yours truly
    ANANDH.R
    MAIL ;anandhkrr@gmail.com

    ReplyDelete
  2. - SAIANANDH

    தொடர்புகொள்ளலாம் நண்பரே, எனது மின்னஞ்சல் முகவரி தளத்திலேயே உள்ளது.

    ReplyDelete
  3. நல்ல ப்ளாக் உங்களுடையது. வாழ்க.

    ReplyDelete
  4. Respected sir,
    I have given Link to your site in
    http://seasonsali.wordpress.com/
    in LINK 3 Learn english-aangilam
    Please visit:
    http://seasonsali.wordpress.com/

    ReplyDelete
  5. அன்புடையீர் வணக்கம்.
    குறியீடுகளின் பெயர்களைப் பின்வருமாறு குறிக்க வேண்டுகிறேன்.

    ஆறாம் வேற்றுமைக்குறி - உடைமைக் குறி '

    Forward slash முன்வெட்டுக்கோடு / முன் சாய்கோடு
    Backslash பின்வெட்டுக்கோடு \ பின் சாய்கோடு
    Ampersand/and இணைப்புக்குறி & உம்மைக்குறி

    நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    ReplyDelete
  6. - Kannan

    வாழ்த்துக்கு நன்றி கண்ணன்

    - nidurali

    இணைப்பு வழங்கியமைக்கு நன்றி

    ReplyDelete
  7. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    உங்கள் பரிந்துரைக்கு ஏற்ப மாற்றியுள்ளேன். பரிந்துரைக்கு நன்றிகள்

    அன்புடன் அருண் | HK Arun

    ReplyDelete
  8. verymuch useful for me& my friends

    ReplyDelete
  9. ABDUL MANAFF FROM SRI LANKA

    MR.ARUN
    This is an excellent work, very much helpful to me

    THANKS
    manafju2yahoo.com

    ReplyDelete
  10. Excellent work! Really helped me a lot.

    ReplyDelete