ஆங்கில பாடப் பயிற்சி 29 (Past Perfect Progressive)

நாம் Grammar Patterns 01 இல் காணப்படும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஒவ்வொரு பாடங்களாக 28 வரை கற்றுள்ளோம். இன்றையப் பாடத்தில் 29 வது வாக்கியத்தை விரிவாக பார்க்கப் போகிறோம். இந்த 29 வது வாக்கியத்தை ஆங்கிலத்தில் "Past perfect Continuous" அல்லது "Past Perfect Progressive" என்று அழைப்பர். தமிழில் “இறந்தக்கால வினை முற்றுத்தொடர்” அல்லது “கடந்தக்கால வினை முற்றுத்தொடர்” என இரண்டு விதமாக அழைக்கப்படுகின்றது.

65. I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

வாக்கிய அமைவுகள்
-------------------------------------------------------------------------------------
Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Auxiliary verb + Main verb with ing
I / He/ She/ It/ You/ We/ They + had + been + doing a job

“இறந்தக்கால வினைமுற்றுத் தொடர்” வாக்கிய அமைப்புகளில் எப்பொழுதும் பிரதான வினைச்சொல்லுடன் "ing" இணைந்தே பயன்படும் என்பதை மறவாதீர்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Auxiliary verb + verb with ing
I / He/ She/ It/ You/ We/ They + had + not + been + doing a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Auxiliary verb + Main verb with ing
Had + I / He/ She/ It/ You/ We/ They + been + doing a job? இவற்றில் துணை வினைகள் பிரிந்து (Auxiliary verbs) இரண்டு இடங்களில் பயன்படுவதை அவதானியுங்கள்.

இன்னொரு விடயத்தையும் கவனியுங்கள். அதாவது இந்த வாக்கிய அமைப்புகள்; முதலாம் நபர், இரண்டாம் நபர், மூன்றாம் நபர் என மூன்று நபர்களும், ஒரே வடிவிலேயே பயன்படும்.

இப்பொழுது இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக அமைப்பது என்று பார்ப்போமா? எமது பாடங்களை தொடர்ந்து பயின்று வருவோருக்கு இவ்வாக்கிய அமைப்புகளை எவ்வாறு கேள்வி பதிலாக மாற்றி அமைக்கலாம் என்பதை விளங்கப்படுத்தாமலேயே தெரிந்திருக்கும். இருப்பினும் கீழுள்ளவற்றை கவனியுங்கள்.

கேள்வி பதில் வாக்கியங்கள்
-------------------------------------------------------------------------------------
Had you been doing a job?
நீ அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தாயா ஒரு வேலை?
Yes, I had been doing a job. (I’d been)
ஆம், நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.
No, I had not been doing a job. (I’d not been, I hadn’t been)
இல்லை, நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

வினை விளக்கம்
-------------------------------------------------------------------------------------
மேலுள்ள வாக்கியங்களின் தமிழ் பொருள் இறந்தக்கால தொடர்வினை வாக்கியங்கள் போன்றே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் வேறுப்பாடு உண்டு. என்ன வேறுப்பாடு? வாக்கியங்கள் இடையே "அன்றிலிருந்து அக்காலத்திலிருந்து” குறிப்பிடப்பட்டுள்ளதை கவனித்தீர்களா? ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன?

09. I was doing a job.
“நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.” என்பதில் “இறந்தக்காலத்தில் ஒரு செயல், குறிப்பிட்ட நேரத்தில் நடந்துக்கொண்டிருந்தது.” என்பதை அவ்வாக்கிய அமைப்புகள் வெளிப்படுத்துகின்றன. அங்கே இறந்தக் காலத்தில் செயல் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் இருக்கின்றது. (எப்பொழுது முடிவடையும் என்பதைப் பற்றி அங்கே பேசப்படவில்லை.)

ஆனால் இன்றையப் பாடத்தில் “இறந்தக்கால தொடர் வினைமுற்று” வாக்கியங்களின் செயல் இறந்தக் காலத்தில் தொடங்கி இன்னுமொரு இறந்தக்காலம் வரை தொடர்ந்து முடிவடைந்துவிடுகிறது. (Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)

இவற்றை இப்படி கற்பனை செய்துக்கொள்ளுங்கள்; நீங்கள் உங்கள் நண்பர் ஒருவரின் வருகைக்காக விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் நண்பர் வந்தடைந்தத உடன் உங்களிடம் கேட்கிறார்:

How long have you been waiting?
எவ்வளவு நேரமாக நீ காத்துக்கொண்டிருக்கின்றாய்?

I have been waiting for two hours.
நான் காத்துக்கொண்டிருக்கின்றேன் இரண்டு மணித்தியாளங்களாக.

இதனையே அவர் சந்தித்து சில மணித்தியாளங்களின் பின் அல்லது சில நாட்களின் பின் கேட்கிறார் என்றால்; எப்படி கேட்பார்? பதில் கீழே:

How long had you been waiting?
எவ்வளவு நேரமாக காத்துக்கொண்டிருந்தாய்?

அப்பொழுது நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

I had been waiting for two hours.
நான் காத்துக்கொண்டிருந்தேன் இரண்டு மணித்தியாளங்களாக.

அதாவது அவர் வருகைத்தந்த நாளன்று; அவர் வந்தடையும் இரண்டு மணித்தியாளங்களுக்கு முன்பே நீங்கள் விமான நிலையத்திற்கு சென்று அவர் வருவரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்தீர்கள்? இரண்டு மணித்தியாளங்களாக காத்துக்கொண்டிருந்தீர்கள். எதுவரை காத்துக்கொண்டிருந்தீர்கள்? அவர் வந்தடையும் வரை காத்துக்கொண்டிருந்தீர்கள். எனவே இந்த “இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்” வாக்கியம் இறந்தக்காலத்தில் தொடங்கி (இரண்டு மணித்தியாளங்களாக தொடர்ந்து) இன்னுமொரு இறந்தக்காலத்திலேயே நிறைவும் பெற்றுவிடுகிறது. இவ்வாறான வாக்கிய அமைப்புகளையே "இறந்தக்கால வினைமுற்றுத்தொடர்" வாக்கியங்கள் எனப்படுகின்றன. இப்பொழுது விளங்குகின்றதா இவ்வாக்கிய அமைப்புகளின் பயன்பாடுகள்?

மேலும் சில வாக்கியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள்.

பாடப் பயிற்சி
-------------------------------------------------------------------------------------
1. I had been waiting there for more than 45 minutes.
நான் காத்துக்கொண்டிருந்தேன் அங்கே 45 நிமிடங்களுக்கும் அதிகமாக.

2. I had been working for over an hour.
நான் வேலை செய்துக்கொண்டிருந்தேன் ஒரு மணித்தியாளத்திற்கு மேலாக.

3. I had been standing all day in the school.
நான் நின்றுக்கொண்டிருந்தேன் முழு நாளும் பாடசாலையில்.

4. I had been teaching at that university for three years
நான் கற்பித்துக்கொண்டிருந்தேன் அந்த பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகளாக.

5. I had been doing the work.
நான் செய்துக்கொண்டிருந்தேன் வேலை.

6. I had been studying English for five years
நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் ஐந்து ஆண்டுகளாக.

7. I had been living there since 1997.
நான் வசித்துக்கொண்டிருந்தேன் அங்கே 1997 இல் இருந்து.

8. I had been talking with Mr. Obama for over half an hour
நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக.

9. I had been driving for 10 years in Japan
நான் ஓட்டிக்கொண்டிருந்தேன் (வாகனம்) 10 ஆண்டுகள் ஜப்பானில்

10. I had been waiting in the Hong Kong airport for two hours
நான் காத்துக்கொண்டிருந்தேன் ஹொங்கொங் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களாக.

இவ்வாறு நீண்ட வாக்கியங்களாகவும் பயிற்சி செய்துப் பழகலாம்.

I had been waiting in the airport for more than two hours when you arrived.
நான் காத்துக்கொண்டிருந்தேன் விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாளங்களுக்கும் மேலாக நீ வந்தடையும் பொழுது.

I had been talking with Mr. Obama for over half an hour before you arrived.
நான் பேசிக்கொண்டிருந்தேன் ஒபாமாவுடன் அரை மணித்தியாளத்திற்கு மேலாக நீ வருவதற்கு முன். (நீ வருவதற்கு முன்பு நான் அரை மணித்தியாளத்துக்கும் மேலாக ஒபாமாவுடன் பேசிக்கொண்டிருந்தேன்.)

I had been learning English for two years before I left for America.
நான் படித்துக்கொண்டிருந்தேன் ஆங்கிலம் இரண்டு ஆண்டுகளாக நான் அமெரிக்காவுக்கு வெளியேறுவதற்கு முன்பு. (நான் அமெரிக்காவுக்கு போவதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன்.)

Grandma wanted to sit down because she had been standing all day in the hospital.
பாட்டிக்கு அமர வேண்டும் ஏனெனில் அவள் நின்றுக்கொண்டிருந்தால் முழு நாளும் மருத்துவ மனையில். (பாட்டி முழு நாளும் மருத்துவ மனையில் நின்றுக்கொண்டிருந்தால் அவளுக்கு அமர வேண்டும்.)

Sarmilan was tired because he had been exercising so hard.
சர்மிலன் களைப்படைந்து இருந்தான் ஏனெனில் அவன் பயிற்சிசெய்துக்கொண்டிருந்தான் மிக கடுமையாக.

Homework:
-------------------------------------------------------------------------------------
வழமைப்போல் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களை He, She, It, You, We, They போன்ற சொற்களை பயன்படுத்தி மாற்றி எழுதிப்பாருங்கள். பின் அவற்றை கேள்வி பதில்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யுங்கள். பேச்சுப் பயிற்சிக்கு, உங்கள் நண்பர்களிடம் கேள்வி கேட்டும் பதில் அளித்தும் பயிற்சி பெறுங்கள்.

குறிச்சொற்கள் (Signal words)
-------------------------------------------------------------------------------------
since
for
all day
the whole day


கேள்விகளின் போது:

How long

எடுத்துக்காட்டுகள்:

How long had you been doing a job in Singapore?
எவ்வளவு காலமாக நீ செய்துக்கொண்டிருந்தாய் ஒரு வேலை சிங்கப்பூரில்?
I had been doing a job for 12 months.
நான் செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை 12 மாதங்களாக. (தற்போது இல்லை)

How long had you been studying English?
நீ எவ்வளவு காலமாக படித்துக் கொண்டிருந்தாய் ஆங்கிலம்?
I had been studying English since 2005. (I’d been)
நான் படித்துக் கொண்டிருந்தேன் ஆங்கிலம் 2005 இல் இருந்து. (தற்போது படிப்பதில்லை)

இவ்வாறு இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கிய கேள்விகளின் பொழுது “How long” எனும் சொற்பதம் அடிக்கடி பயன்படும். அதேபோல் நேர்மறையின் போது “for, since” போன்ற சொற்கள் பயன்படும்.

சுருக்கப் பயன்பாடுகள் (Short Forms)
-------------------------------------------------------------------------------------
Positive Short forms

I had been = I'd been
You had been = You'd been
He had been = He'd been
She had been = She'd been
It had been = It'd been
We had been = We'd been
They had been = They'd been

Negative Short forms

எதிர்மறைகளின் சுருக்கப் பயன்பாடுகள் இரண்டு வகைகளாக உள்ளன

I had not been = I'd not been / I hadn't been
You had not been = You'd not been / You hadn't been
He had not been = He'd not been / He hadn't been
She had not been = She'd not been / She hadn't been
It had not been = It'd not been / It hadn't been
We have not been = We'd not been / We hadn't been
They have not been = They'd not been / They hadn't been

வரைப்படம் (Diagram)
-------------------------------------------------------------------------------------
இறந்தக்கால வினைமுற்றுத் தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இந்த வரைப்படம் ஊடாக பார்க்கவும். (The diagram explain to you that Past Perfect Continuous to show that action started in the past and continued up until another time in the past.)

இறந்தக்கால வினைமுற்றுத்தொடர் வாக்கியங்களின் பயன்பாட்டை இன்றையப் பாடம் தெளிவாக விளக்கியிருக்கும் என்று நம்புகின்றேன். இருப்பினும் இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன்
ஆசிரியர் அருண் HK Arun Download As PDF

12 comments:

செல்வா said...

அருண்,

ஆங்கிலச் சொற்றொடரில் வரும் சொல் வரியை ஒட்டித் தமிழில் எழுதுகின்றீர்கள்.அது ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்களை அறிய உதவும் என
எனைக்கின்றீர்கள். அது தவறு இல்லை. ஆனால் சரியான தமிழ்த் தொடரையும் எழுதுவது கட்டாயம் தேவை. இதனால் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் சொல் வரிசை எவ்வாறு மாறுபடுகின்றது என்றும் பயிலுவோர் உணர்வர்.

எ.கா:
65. I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

மேலே உள்ளதை நீங்கள் கீழ்க்காணுமாறு எழுதலாம்:

நான்- (அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து)-செய்துக் கொண்டிருந்தேன் - ஒரு வேலை(யை).
[தமிழ் சொற்றொடர்:
நான் ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்தேன்]

அல்லது

நான் (I) ஒரு வேலையை (a job)
செய்து-கொண்டிருந்தேன் (had been doing)

என்றும் எழுதிக்காட்டலாம்.

அன்புடன்
செல்வா

HK Arun said...

//தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் சொல் வரிசை எவ்வாறு மாறுபடுகின்றது என்றும் பயிலுவோர் உணர்வர்.//

ஆம் செல்வா, அது அத்தியாவசியமும் ஆகும்.

இரண்டு வடிவிலும் எழுதும் படி கேட்பவர்களும் உளர். இனிவரும் பாடங்களில் இரண்டு விதமாகவும் எழுதுகின்றேன்.

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

அன்புடன் அருண்

AgNi said...

வணக்கம். உங்கள் முயற்சி மிக சிறந்தது.எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதுவரை நான் கற்ற முறையிலிருந்து வேறுபட்டு தனித்துவமானதாகவும் சிறப்பாகவும் இலகுவில் விளங்கி கற்கும் வகையிலும் அமைத்துள்ளது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் அத்துடன் உங்களின் சேவை தொடர வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
நன்றி.

HK Arun said...

- Satheez

உங்கள் கருத்துப் பகிர்வு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. பாடங்கள் தொடர்ந்து வரும்.

நன்றி

hari said...

hi Arun..
i had been looking for this kind of website to make clear my dough's about learning englis finally i got it but the thing is it's better if you use simple tamil words than using the fluent tamil words.because it's difficult to understand the words which u use to explain..anyway thanks for ur efforts ..
Hari..

Unknown said...

hai sir
i want the diffrence between past continous tense and past perfect continous tense with example

Unknown said...

very good jop

ganesg said...

Please explain the meaning and grammar for the below sentence.
I have been studied the lesson.

Unknown said...

how to use' having' word in different way please specify

Unknown said...

Hi Arun, Thank you.

Unknown said...

Migavum sirappaga irundhathu
En palli paruvathil ungalai POL oru aasaan irundhiruthal nan aangila pulamai petru irupen

Unknown said...

Hi Arun,

Can i say 'i was waiting for two hours.' instead of

'I have been waiting for two hours.'

Post a Comment