மீள்பதிவிடுவோர் கவனத்திற்கு

இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தில் எழுதுபவை; நாம் மற்றத் தளங்களில் எழுதுவது போலன்றி அதிக நேரத்தை செலவிட்டே ஒவ்வொரு பதிவையும் பதிவிடப்படுகின்றது. இவை ஆங்கில இலக்கணம் சார்ந்த பதிவுகள் என்பதால் கூடுதல் கவனத்துடன் பதிவேற்றப்படுகின்றன. இதன் மூலம் எமக்கு கிடைக்கப் பெறுவது; இன்றைய தொழில் நுட்ப உலகில், ஆங்கில மொழி அத்தியாவசியம் ஆகிவிட்ட நிலையில், அதனை கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் எம்மால் இயன்ற இச்சிறு பணியை செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளது எனும் ஆத்ம திருப்தியும், ஆங்கில மொழி கல்வியின் அவசியம் உணர்ந்து அதிகரித்து வரும் வருகையாளர்களின் எண்ணிக்கை தரும் மனநிறைவும் ஆகும்.

ஆனால் தொடர்ந்து நடைப்பெற்று வரும் சிலரது செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

இத்தளத்தின் பதிவுகள் பதிவுகளாகவே அல்லாமல் பாடங்களாக இருப்பதனால்; இதன் பயன்பாடு பலரையும் சென்றடை வேண்டும் எனும் நன்நோக்கின் அடிப்படையில் சக வலைப்பதிவர்கள், இணையத்தளத்தினர், மன்றத்தினர், குழுமத்தினர் என பலரும் இத்தளத்திற்கு இணைப்பு வழங்கி பலரதும் பயன்பாட்டிற்கு கொண்டுசென்றுள்ளனர். அவற்றில் சில தளங்கள் ஒரு பாடத்தை அல்லது ஒரு பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு எமது தளத்திற்கு இணைப்பு வழங்கியிருப்பவற்றையும் காணக்கிடைக்கின்றன. இவை நியாயமான செயல்பாடுகளாகும். சிலர் தங்கள் தளங்களின் ஊடாக பதிவிட்டு இத்தளத்தை மேலும் பலருக்கு அறிவித்தும் வருகின்றவர்களும் உளர். இவர்கள் அனைவருக்கும் நாம் என்றும் நன்றியுடைவனாக இருக்கின்றோம்.

ஆனால் சிலர் இத்தளத்தின் பதிவுகளை எமது அனுமதியும் இன்றி அப்படியே வெட்டி ஒட்டி மீள்பதிவிடுவதை தொடராகவே செய்து வருகின்றனர். இது முற்றிலும் நியாயமற்ற செயல்பாடுகள் ஆகும்.

நியாயமற்ற செயல்பாடுகள் என நாம் வரையரை செய்வது:

01. வெட்டி ஒட்டுதல் எனும் நோக்கில் பதிவுகள் சீர்குழைக்கப்படல்.

02. முழுப்பதிவையும் மீள்பதிவிடல்.

03. தளத்தின் பெயர் அல்லது இணைப்பு (URL) கொடுக்கப்படாமல் மீள்பதிவிடல்.

04. மீள்பதிவிடுதல் குறித்து அறியத்தராமல் மீள்பதிவிடல்.

05. உள்ளடக்கங்களை திருடி சுயபதிவாக மாற்றியமைத்தல்.

06. தளத்தின் (இணைப்பு வழங்கபட்டிருந்தாலும்) அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து மீள்பதிவிட்டு வருதல்.

இவ்வாறான செயல்பாடுகள் எமது அதிக நேர உழைப்பு; சிலரின் சில நொடிப் பொழுதின் வெட்டி ஒட்டுதலால் சிதைக்கப்படுவதாகவே நாம் கருதுகின்றோம். தவிர பதிவுகள் சீர்குழைக்கப்படும் வகையில் மீள்பதிவிடுதல் என்பது எவருமே பயன்பெற முடியாத ஒன்றாகும். இதனால் எவருக்கும் எந்த பயனும் இல்லை. சில தளங்கள் ஓரிரண்டு பதிவுகள் மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாக அனைத்து பாடப் பயிற்சிகளையுமே மீள்பதிவாக இட்டு வருகின்றன. இவை முற்றிலும் நியாயமற்ற மோசடியான செயல்பாடாகவே நாம் கருதுகிறோம். அன்மையில் அதிர்ச்சி அடைய வைத்த ஒரு நிகழ்வும் உண்டு. எமது தளத்தில் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அப்பதிவு இன்னொரு தளத்தில் வெட்டி ஒட்டுதல் நடந்தேறியிருந்தது. மேலும் அவ்வலைத்தளத்தைப் பார்வையிட்டதில் எமது தளத்தில் இருக்கும் அனைத்து பதிவுகளும் அங்கேயும் காணப்படுகின்றன. இது முற்றிலும் நியாயமற்றதும் நாகரீகமற்றதுமான செயல்பாடாகும். இன்னும் சில தளங்களில் இப்பதிவுகள் தமது பதிவுகளாக தோற்றம் காட்டுவதும் நடைப்பெற்றுள்ளன. குறிப்பிட்டு காட்டுவதற்கு ஒன்றிரண்டு தளங்கள் என்றல்லாமல் எண்ணற்ற தளங்கள் இப்படித்தான் செய்துள்ளன. இதனை ஒரு வகையில் அறிவு திருட்டு என்றும் கூறலாம். இவை எமது தளத்திற்கான வருகையாளர்களை திசைமாற்றும் செயல்பாடாகவும் மாறிவிடுகிறது. மீள்பதிவிடுவோர் ஓர் ஆர்வத்தின் வெளிப்பாடாக செய்திருந்தாலும் கூட.

எனவே இவ்வாறு செய்த நண்பர்கள், அறியாமல் செய்திருந்தாலோ அல்லது ஆர்வத்தின் வெளிப்பாடாக செய்திருந்தாலோ இதன் பிறகு இவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் இவ்வறிவித்தலும் உங்களுக்காகவே விடுக்கப்படுகின்றது.

அறிவித்தல்

எமது ஆங்கிலம் வலைத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், கருத்துக்களங்கள், மன்றங்கள் போன்றவற்றில் மீள்பதிவிடுவோர் தயவு செய்து எமது வலைத்தளத்தின் பெயரை (aangilam.blogspot.com) கட்டாயம் இட்டே மீள்பதிவிட வேண்டும் என அறியத் தருகின்றோம். அவ்வாறு மீள்பதிவிடுவோர் எமது மின்னஞ்சல் (arunhk.info AT gmail.com) ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தின் பின்னூட்டமாகவோ அறியத் தர வேண்டும். குறிப்பாக இணையத்தில், இப்பாடங்கள் பலருக்கும் பயன்பட வேண்டும் எனும் நன்நோக்குடன் நீங்கள் மீள்பதிவிடுபவராக கருதலாம். அவ்வாறாயின் பாடங்களின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்திற்கு இணைப்பு வழங்குங்கள். தயவு செய்து முழுப் பாடங்களையும் அப்படியே வெட்டி ஒட்டுவதைத் தவிர்க்கவும்.

நன்றி

அன்புடன் அருண் HK Arun Download As PDF

19 comments:

  1. you can install a javascript widjet to disable right mouse click ... or crate a license from here http://creativecommons.org/choose/
    . keep posting.. i am regular reader of ur blog...

    ReplyDelete
  2. என்னைப் பொறுத்த வரை அறிவைத் திருட முடியாது... மற்றது ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும் - மற்றவர் பதிவை களவெடுத்து அவனால் எத்தனை காலம் காலந்தள்ள முடியும்???
    அவனுக்குப் பதிவிட ஆசை அதேவேளை சொந்தமாக எழுதும் அளவுக்கு அறிவோ ஆற்றலோ இல்லை அப்படியிருக்க அவன் என்ன செய்வான்??

    ஜாவா ஸ்கிரிப்ட் போட்டு தடுத்தீர்களானால் ப்ரௌசரில் ஜாவா ஸ்கிரிப்டை டிஸேபிள் செய்துவிட்டு திருடுவான். திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஆகவே கவலைப் படாமல் உங்கள் பணியைத் தொடருங்கள் - உங்கள் அறிவு உங்களுடையது தான் அதனை யாராலும் திருட முடியாது.!

    ReplyDelete
  3. you can report the duplicate content to google by mail not an e-mail.. here is the information

    http://www.google.com/dmca.html

    if any blog having all of ur posting without backlinks you can claim the ownership for that content to google...

    http://googlewebmastercentral.blogspot.com/2006/12/deftly-dealing-with-duplicate-content.html

    google will remove the blogs from search results...

    http://www.copyscape.com/
    is the good way to find ur duplicate blog posts...

    Thanks
    Arul

    ReplyDelete
  4. அன்புடன் அருள்

    வெட்டி ஒட்டுதலை தடைச்செய்தல் சரியான தெரிவல்ல. அவ்வாறு செய்தல் இத்தளத்தில் பாடங்களை வேர்ட் சீட்டில் வெட்டி ஒட்டி பயிற்சி செய்வோருக்கு பாதிப்பாகிவிடும். நாம் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.

    ஆனால் ஒட்டு மொத்தமாக அனைத்து பதிவுகளையுமே சிலர் தமது தளங்களில் வெட்டி ஒட்டி மீள்பதிவிட்டு வருதலே வருத்தமான விடயமாகும். குறைந்த பட்சம் தளத்தின் பெயரையேனும் இட்டு மீள்பதிவிட்டிருந்தால் அதனை சற்று நாகரீகமானதாக கருதலாம்.

    தவிர தமது பயிற்சிகாக எவர் வேண்டுமானாலும் வெட்டி ஒட்டி பயன்பெறலாம். நாம் அவற்றை தடை செய்ய விரும்பவில்லை.

    நட்புடனான உங்கள் கருத்துக்கு நன்றி அருள்.

    ReplyDelete
  5. அன்புடன் என்.கே.அஷோக்பரன்

    இங்கே அறிவு என்பது நாம் கற்பாதாலும் அனுபவத்தாலும் கிடைக்கப்பெறுபவைகளே. நாமும் பல்வேறு தளங்களில் இருந்து பலதையும் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

    நான் இங்கே கூறுவது ஒரு படைப்பாளியில் ஆக குறைந்த உரிமம் ஆன அவரது பதிவு மீள்பதிவிடும் போது தளத்தின் பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பதே.

    அளிப்புரிமையின் (Copyleft) கீழ் தமது ஆக்கங்களை அளிப்பவர்களால் கூட தமது ஆக்கங்கள் வேறு ஒரு நபரின் பெயரில் மீள்பதிவிடப்படுவதையோ, பதிவுகள் சிதைக்கப்படுவதையோ ஏற்க முடிவதில்லை. இங்கே அளிப்புரிமை, பதிப்புரிமை இவைகளுக்கு அப்பால் பதிவுகள் சிதைந்த நிலையில் (எவரும் பயன்பெற முடியாத வகையில்) வெட்டி ஒட்டப் படுதலையும் குறிப்பிட்டுள்ளேன். மற்றும் ஒட்டு மொத்த பதிவுகளும் வேறு தளங்களில் இடம் பெறுவதால் கூகிள் யாஹூ போன்ற தேடுதளங்களின் ஊடாக எமது தளத்தை அனுக முயல்வோருக்கு இம்மீள்பதிவுகள் திசைத்திருப்பிகளாகவும் அமைந்து விடுகின்றன. இது நியாயமற்றது.

    பி.கு: உங்களை இலங்கைப்பதிவர் சந்திப்பில் பார்க்கக்கிடைத்தது. (நிழல்படங்களில் தான்.) வருகைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. அன்புடன் அருள்

    http://www.copyscape.com தளம் அனைத்து மீள் பதிவுகளையுமே கண்டறிந்து காட்டக் கூடியதல்ல. அதேவேளை ஒரு பதிவின் தலைப்பை கூகிள் தேடியில் இட்டு பார்க்கும் போது கொபிஸ்கேப் காட்டித் தராத பல பதிவுகளைக் காணக்கூடியதாக இருக்கும். சிலநேரம் வெட்டி ஒட்டுவோரால் மீள்பதிவுகளின் தலைப்பு மாற்றப்படுவதனால், பதிவின் உள்ளடக்கங்களை இட்டு பார்த்தால் மேலும் பலவற்றை கண்டறியலாம்.

    http://googlewebmastercentral.blogspot.com/2006/12/deftly-dealing-with-duplicate-content.html தளத்திற்கு அறிவித்துள்ளேன்.

    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  7. கண்ணிமைக்கும் நேரத்தில் கண்டுப்பிடிக்க கூடிய இணைய வலை அமைப்பிலேயே இத்தனை வெட்டு ஒட்டுகள் என்றால், வலையுலக செய்திகளை எந்தெந்த பத்திரிக்கைகள் பதிப்பகங்கள் தம்முடையது என காப்புரிமை இட்டு வெளியிட்டுக்கொள்கின்றனவோ?

    ReplyDelete
  8. - Asmath

    தெரியவில்லை. ஆனால் இருக்கலாம்.

    நன்றி அஸ்மத்

    ReplyDelete
  9. கூகிள் தேடல்களின் போது, தேடலுக்கு மிகவும் பொருத்தமான பதிவுகளையே கூகிள் காண்பிப்பான். ஒரு பதி்வின் மூலப்பதிவு எது, நகல் பதிவு எது என்பதை கூகிள் நன்றாகவே அறிவான். நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

    தவிர 'ஆங்கிலம்' என கூகிள் தேடினால் பல்லாயிரக்கான ஆங்கிலங்களில் உங்கள் தளமே முதல் தெரிவாக தெரிகின்றது. Results 1 - 10 of about 17,200,000 for ஆங்கிலம். (0.40 seconds)

    ReplyDelete
  10. - Anonymous

    நன்றி அனானி

    ReplyDelete
  11. உங்கள் வலைப்பதிவு மூலம் நான் மட்டுமல்ல எனது நண்பர்கள் குடும்ப உறவினர்கள் என்று எல்லோரும் நன்மை அடைந்து வருகின்றனர். இன்று திருட்டு பதிவு செய்கின்ற பலர் இருக்கின்றனர். அவர்களின் பதிவு சுட்டியையும் குறிப்பிட்டிருக்கலாம்.

    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான்.

    ReplyDelete
  12. வணக்கம் சந்ரு

    //உங்கள் வலைப்பதிவு மூலம் நான் மட்டுமல்ல எனது நண்பர்கள் குடும்ப உறவினர்கள் என்று எல்லோரும் நன்மை அடைந்து வருகின்றனர்.//

    மிக்க மகிழ்ச்சி

    //இன்று திருட்டு பதிவு செய்கின்ற பலர் இருக்கின்றனர். அவர்களின் பதிவு சுட்டியையும் குறிப்பிட்டிருக்கலாம்.//

    பல தளங்கள் காணப்படுகின்றன. அவற்றை இனங்காட்ட விரும்பவில்லை. கூகிளில் பதிவின் தலைப்புகளை இட்டால் காணலாம். சிலநேரம் ஆர்வத்தின் வெளிப்பாடாக செய்தவர்களும் இருக்கலாம். அறியாமல் செய்தவர்களும் இருக்கலாம். எனவே இதன் பிறகு இவ்வாறு நடவாமல் இருக்கவே இவ்வறிவிப்பு. அவசியம் கருதி மீள்பதிவிட விரும்புவோருக்கு எமது கொள்கையினை அறிவிக்கும் முகமான பதிவு.

    நன்றி சந்ரு.

    ReplyDelete
  13. அது எப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அடுத்தவர்களுடையதை தனதாக பாவிக்கிறார்களோ தெரியவில்லை.அசிங்கத்தைப் பார்ப்பதைபோல் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.

    உங்கள் சேவையை தொய்வின்றித் தொடருங்கள். நன்றி...

    ReplyDelete
  14. -கிருஸ்ண பிரபு

    //அது எப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அடுத்தவர்களுடையதை தனதாக பாவிக்கிறார்களோ தெரியவில்லை// இங்கே பாருங்கள்:
    http://www.no1tamilchat.com/no1chat/index.php?PHPSESSID=10aabc3451e7a47ad79b5bc100848f03&topic=6495.0

    இப்படியான வேலையை செய்யும் தளங்கள் நிறைவே உள்ளன.

    இன்னும் சில தளங்கள் "நன்றி இணைய தமிழ் உலகம்" என்று இட்டுக்கொண்டு மீள்பதிவிடுகின்றன.

    கருத்துக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. கார்த்திகேயன்October 1, 2009 at 9:53 AM

    நன்றி இணைய தமிழ் உலகம் என்றோ, நன்றி இணையம் என்றோ இட்டுவிட்டு மீள்பதிவிடுவதும் முறையற்ற செயல்பாடுதான். இதனை இலங்கை தமிழ் வலைப்பதிவர் சந்திப்பில் கலந்துக்கொண்ட ஊடகவியல் கல்லூரி மாணவர்களிடம் முன்வைக்கப்பட்டது. மீள்பதிவிடும் பொழுது சக இணையத் தளத்தினர், ஊடகத்துறையினர் கட்டாயம் குறித்த பதிவு தளத்தின் URL வழங்குவது இன்றியமையாதது மட்டுமல்ல நாகரீகமானதும் ஆகும்.

    ReplyDelete
  16. - கார்த்திகேயன்
    //பதிவு தளத்தின் URL வழங்குவது இன்றியமையாதது மட்டுமல்ல நாகரீகமானதும் ஆகும்.//

    இதனைத்தான் நானும் கூறுகின்றேன். உங்கள் கருத்தே எனது கருத்தும்.

    நன்றி கார்த்திகேயன்

    ReplyDelete
  17. do your service ..... i know you doing hardwork for this blog... all the best brother....

    ReplyDelete
  18. - saisayan

    //do your service ..... i know you doing hardwork for this blog... all the best brother....//

    கருத்துப் பகிர்வுக்கு நன்றி சகோதரரே!

    ReplyDelete
  19. Excellent and worthable job done. Keep it up. Will appreciate to have more lessons on Active vs Passive Voice and Direct vs Indirect speeches.

    Chellappa

    ReplyDelete