அமெரிக்க ஆங்கிலம் (History of American English)

மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.

பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சி பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.

சில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.

அவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.

(Noah Webster [1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அவை பிரித்தானிய ஆங்கில முறைமையில் இருந்து மாறுபட்டதாக, அதேவேளை அமெரிக்க இலக்கண முறைமைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்கப் புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதுவே காலப்போக்கில் நிலைத்தும் விட்டது.

இவரே 1783ல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவராவர்.

அவரது மொழி சீர்த்திருத்தமைப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.

1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர் நோவா வெப்ஸ்டர்.(First American Dictionary) பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்படியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.

அதன்படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.

பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre
அமெரிக்க ஆங்கிலம்: center, theater

பிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.

பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favourite
அமெரிக்க ஆங்கிலம்: color, honor, favorite

பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.

பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyse
அமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyze

ஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.

நோவா வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும் ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, பிரித்தானிய ஆங்கிலத்தை விட, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும் எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.

ஐரோப்பிய மற்றும் உலகின் பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பல சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இவை அமெரிக்க ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.

ஒப்பீட்டளவில் பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில் இருந்தும் பல சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது.

இன்று அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் பல சொற்கள் இருப்பதனையும் அறியமுடிகின்றது.

உதாரணம் சில சொற்கள்:

பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flat
அமெரிக்க ஆங்கிலம்: Apartment

பிரிட்டிஸ் ஆங்கிலம்: Lift
அமெரிக்க ஆங்கிலம்: Elavator

பிரிட்டிஸ் ஆங்கிலம்: Chips
அமெரிக்க ஆங்கிலம்: Fries

மேலும் அமெரிக்காவின் Hollywood திரைப்படத்துறையின் வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சி, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், தொழில் நுட்பம், இணையம் என இன்னும் பல்வேறு வழிகளில் பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலம் பலரையும் ஈர்த்து வருகிறது. அமெரிக்க நாகரிகமும் இன்று உலகின் பல்வேறு மக்களில் மோகமாக மாறிவருகின்றது என்பதும் ஒரு காரணியாகும். இவை அமெரிக்க ஆங்கிலத்தை உலக அரங்கில் மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.

இன்று ஆங்கிலம் என்பது இன்னொரு மொழியினருடன் பேசும் கருவியாக மட்டுமன்றி, அதிகாரம், அரசியல், சமூக அந்தஸ்து, கலாச்சாரம் என பல்வேறு மட்டங்களில் ஈர்க்கும் இணைக்கும் ஒரு உலகலாவிய ஊடகமாக மாறிவருகிறது.

அமெரிக்க ஆங்கில வரலாற்றிற்கு முற்பட்ட ஆங்கில மொழியின் வரலாறு இங்கே சொடுக்கி பார்க்கலாம்.

பிரிட்டிஸ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் சொற்களில் மட்டுமன்றி, இலக்கணத்திலும், ஒலிப்பிலும் கூட வேறுபாடுகள் உள்ளன. அவற்றை தமிழ் விளக்கத்துடன் எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

Download As PDF

3 comments:

Kamal said...

Dear Mr.HK Arun, Lots and Lots of thanks to you..... It is wonderful service... Small request ... I am not able to download PDF File it the file downloaded file error showing on (There was an error processing a page. There was a problem reading this document (135)) Please tell me how can I download this file without error... Kind regards Kamal

Anonymous said...

There is no word to say Thanks. Its one kind of service. See normally everyone think and do their own job. But you Mr.Arun, you are doing such different. You keep for others also needs to be getting growth and develop. Heartly i am saying,in this attitude one day make and reach you as a wonderful height.I am working in IBM,i am also in average in english. Just now see this site,now i get confident,will speak much frequesntly in future.

Unknown said...

Nandri

Post a Comment