ஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons

வணக்கம் உறவுகளே!

இன்றிலிருந்து “ஆங்கிலம் துணுக்குகள்” எனும் ஒரு பகுதியையும் தொடர்ந்து வழங்கலாம் என்றுள்ளோம். இது எமது வழமையான “ஆங்கில பாடப் பயிற்சி” திட்டத்திலிருந்து வேறுபட்டது. இருப்பினும் இத்துணுக்குகள் ஆங்கிலம் கற்கும் சிலருக்கு, குறிப்பாக ஆரம்ப நிலை ஆங்கிலம் கற்போருக்குப் பயன்படும் என கருதுகிறோம்.

நீங்கள் இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவரானால், எமது வழமையான ஆங்கில பாடப் பயிற்சிகளை தொடர விரும்புவரானால் ஆங்கில பாடப் பயிற்சி 1 இலிருந்தே தொடருங்கள். முக்கியமாக "Grammar Patterns" களை மனப்பாடம் செய்துக்கொள்ளுதல் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு சொல்லை, ஒரு வாக்கியத்தை, ஏன் ஒரு முழு ஆக்கத்தையே வேண்டுமானாலும் கெப்பிட்டல் எழுத்துக்களிலேயே (CAPITAL LETTERS) எழுதலாம். அது உங்கள் விருப்பம்.

ஆனால் ஆங்கில சிற்றெழுத்துக்களில் (Simple Letters) எழுதுவதானால், ஆங்கில மொழிக்கே உரிய சிறப்பியல்புகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியது மிக முக்கியம்.

How To Use Capital Letters

1. ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தின் முதல் எழுத்து எப்பொழுதும் கெப்பிட்டல் எழுத்தாகவே இருக்கவேண்டும். (Capital letters are always used at the beginning of a sentence.)

உதாரணம்:

The car is running
I am looking for a job.
He doesn’t understand.
Do you speak in English?
Where are you going?

2. கிழமை, மாதம், பெயர், ஊர், நாடு, மொழி, மதம், போன்றவற்றை எழுதும் பொழுது அதன் முதல் எழுத்தை கட்டாயம் கெப்பிட்டல் எழுத்திலேயே எழுத வேண்டும். இவை வாக்கியத்தின் மத்தியில் வந்தாலும் அப்படித்தான்.

2. கிழமைகள்: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday

3. மாதங்கள்: January, February, March, April, May, June, July, August, September, October, November, December

4. பெயர்கள்: Ellalan, Iravanan, Sarmilan, Kavitha, Thamilovia, Tamilnenjan, Tamilselvan

5. ஊர்கள், நகரங்கள்: Jaffna, Chennai, Point Pedro, Betticola, Tricomalee, Madurai, Kilinochchi

6. நாடுகள்: Tamileelam, India, America, British, France, Netherland, Norway, Japan

7. மொழிகள்: Tamil, English, Chinese, Latin, French, Indhi

8. மதங்கள்: Hindu, Islam, Christian, Buddhism - God, The Prophet Mohammed, Jesus

9. ஆங்கிலத்தில் "நான்" என்று குறிப்பதற்கு எப்போழுதுமே கெப்பிட்டல் "I" யை மட்டுமே பயன்படுத்த வேண்டும். (சிறிய "i" பயன்படுத்துவதில்லை)

10. "சுருக்கப் பயன்பாடுகள்" அதாவது ஒரு முழுச் சொல் அல்லது வாக்கியத்திற்குப் பதிலாக அதன் முதல் எழுத்துக்களை மட்டும் சுருக்கமாக பயன்படுத்தல். இவற்றை ஆங்கிலத்தில் "Abbreviation" என்றழைப்பர்.

உதாரணம்: தொழில் தகமைகளின் சுருக்கம்: MBBS, LLB

சில நாடுகளின் பெயர்களுக்கான சுருக்கம்: USA, UK, UAE

சிலரது பெயர்களின் சுருக்கம்: MGR, MRR

அதேவேளை ஒரு வாக்கியத்தின் ஒவ்வொரு சொற்களின் முதலெழுத்தையும் கெப்பிட்டல் எழுத்தாக எழுதும் வழக்கம் சிலரிடம் காணப்படுகின்றன. இது இலக்கணப் பிழையானது. (தலைப்புகளை வேண்டுமானால் அப்படி எழுதலாம்.)

மேலும் இதுப் போன்ற சுருக்கங்களை "ஆங்கிலம் துணுக்குகள் Abbreviation" பக்கத்தில் பாருங்கள்.

மேலும் துணுக்குகள்>>>

Download As PDF

62 comments:

meha said...

நல்ல முயற்சி அருண்..பயனுள்ள பக்கம்.. வாழ்த்துகள்!

HK Arun said...

நன்றி மேகா

dessa said...

நன்றி, அருண் அவர்களே,
நான் உங்கள் தளத்தின் ஊடாகவே ஆங்கிலம் பயில்கிறேன்.
மிக்க நன்றி.

dessa said...

நன்றி, அருண் அவர்களே,
நான் உங்கள் தளத்தின் ஊடாகவே ஆங்கிலம் பயில்கிறேன்.
மிக்க நன்றி.

Vasu said...

உங்கள் ஆங்கில பாடப் பயிற்சி அவசியமானது..பயனுள்ள பக்கம்..
உங்கள் தளத்தின் ஊடாகவே ஆங்கிலம் பயில்கிறேன்.
மிக்க நன்றி.

nandhu said...

different style of easy english couse I feel it

திருமுர்தி said...

நான். திருமூர்த்தி. தமிழ் நாடு, திருப்பூரிலிருந்து எழுதுகிறேன்.

Blog க்கு நான் புதியவன்.

உங்கள் இந்தமுயற்சி மிக்வும் அருமை.

தொடரட்டும் உங்கள் பனி.

Anonymous said...

good English

veera said...

Dear Friend,

I'm finding this Blog as very useful. I already suggested website through SMS to my friends - who are looking for a good website to teach english through tamil.

Veera Senthil Kumar

HK Arun said...

-dessa
-Vasu
-Nnndhu
-திருமூர்தி

அனைவரது கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

HK Arun said...

-Veera Senthil Kumar

நன்றி வீரா.

Anonymous said...

hai sir how r u
u r great sir first thanks to u
i want how to form the sentence
and enemanu sola englishla ena sir

HK Arun said...

அனானி நண்பரே!

பாராட்டுக்கு நன்றி!

ஏதோ ஒரு தமிழ் சொல்லுக்கு ஆங்கிலத்தில் என்ன பொருள் என்று கேட்டெழுதியிருப்பது புரிகின்றது. ஆனால் நீங்கள் கேட்டிருக்கும் //enemanu sola// எனும் சொல் தெளிவில்லாமல் இருக்கின்றது. தமிழிலேயே எழுதி கேட்கலாம். கட்டாயம் பதிலளிக்கிறேன்.

நன்றி

periaiya said...

Dear mr. HK Arun, noted your dedication to the tamil community through this web. its venerated & noble. you are a distinguished man in the earth. great!!
Ramesh/Singapore

HK Arun said...

- Ramesh Singapore

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி ரமேஸ்

Gopi Lsi said...

I have seen many leaning site but, totaly diff., and easy for your site bol.,

sivaperiyar said...

Verry Use Ful Web side Iam Learn your Study One request Please attatch spoken English Vedio
By
SIVA
Erode
Tamil Nadu

sivaperiyar said...

Thanks Verry Use ful Webside

sivaperiyar said...

Thanks Verry use ful Web side
Iam Learn ur study
By
SIVA

Abumubeen said...

Verry Use Ful Web side Iam Learn your Study Please attatch spoken English Vedio it will be very use ful all

ஜஜீவன் said...

உங்கள் ஆங்கில பாடப் பயிற்சி பயனுள்ள பக்கம்.
உங்கள் தளத்தின் ஊடாகவே ஆங்கிலம் பயிலப்போகிறேன். நண்பர்களுக்கும் பரிந்துரைக்கபோகிறேன்
மிக்க நன்றி.

Magazine said...

best best ..................

Anonymous said...

Hi,
When i was goggling, i read your blog name in the first list of goggle search (this is the search word :learn english through Tamil). Thanks you very for your wonderful job

With warm regards
Thangaraj

nalini said...

indha madhiri oru muyarchikku mikka nandri. naan kooda idhilirunthu neram kidaikum pothellaam katru kondullen.

Anonymous said...

Ovoru english varthaikkum kila ulla tamil meaninge alingh panni padiika mudile so ithu puthusa padikiravangalukku piriyojanam illa

Anonymous said...

shall-m simple future tense thane adhai endha edathil painpaduthavendu

base Pandian said...

Thank you arun for your contribution

sona said...

thank u arun.keep it up.

subash krish said...

hi , best way learning English ,, you add more vocabulary is use to lean peoples.
subash Krish

afzal said...

அருமையான தளம்!நன்றி.மதம் என்ற எடுத்துக்காட்டில் Muslim என்று உள்ளது,
Islam என்பதே சரியானது.

afzal said...

அருமையான தளம்!நன்றி.மதம் என்ற எடுத்துக்காட்டில் Muslim என்று உள்ளது,
Islam என்பதே சரியானது.

kumar said...

Dear Arun sir,

I found about your website through the Google search engine. I am very happy about your website. you have Letters conversion from Tamil to English language type of lessons? if you have pls tell me about.

VijiParthiban said...

உங்கள் ஆங்கில பாடப் பயிற்சி அவசியமானது..பயனுள்ள பக்கம்..

manikrish said...

நன்றி, அருண் அவர்களே,
நான் உங்கள் தளத்தின் ஊடாகவே ஆங்கிலம் பயில்கிறேன்.

sethu raman said...

sir innikku tha unga websie parthen ennala mulumaiya aangilam kathuka mudiuma,, eena nan type pandra english la irunthe neenga therinchukalam

Sridhar Ganesan said...

super Arun very useful website

vira muthu kumaran r said...

வணக்கம் அருன் Sir, I 'm V.Nisanjra

உங்கள் ஆங்கிலப்பாடத்திற்க்கான வளைத்தளம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Your Website of English lesson very useful to me.

இது போல நாங்கள் பேச நினைக்கும் வார்த்தைகள் ஆங்கிலத்தில் எழுதிப்பார்க்கும் பொழுது அது சரி அல்லது தவறு என திருத்தி காட்டும் வளைத்தளமும் அமைத்தால் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.Note: Please reply as soon.


With Thanks & Regards

V.Nisanjra

Anonymous said...

very nice

Pappu's Blogs said...

கிழமைகள் ENPATHAI AANGILATHIL EPPADI SOLVATHU WEEKDAYS ENRA..?

Jeyashree S said...

nice work

parani tharan said...

this is very helpful for tamil medium students...

Dominic v.k.dominic said...

நன்றி, அருண் அவர்களே,
நான் உங்கள் தளத்தின் ஊடாகவே ஆங்கிலம் பயில்கிறேன்.

oshan said...

Thank you very much dear

Natarajan M said...

thanks mr.arun

Muthu Selvam said...

உங்கள் ஆங்கில பாடப் பயிற்சி பயனுள்ள பக்கம்.
உங்கள் தளத்தின் ஊடாகவே ஆங்கிலம் பயிலப்போகிறேன். நண்பர்களுக்கும் பரிந்துரைக்கபோகிறேன்
மிக்க நன்றி.

Jana said...

Why we must learn english

Navartnam said...

Thank you very much for giving such a wonderful opportunity to learn English through Tamil in very simple steps. I am really appreciate your great help to the people who wants to learn English from the home. Thank you very much Arun.I will recommend this page to my circle. .

muhamed irsath said...

thank u sir.i like u

Manoj Narayanan said...

hi it is very useful for me.... thank you very much

GD said...

Hi Arun,
It's such a wonderful blog. And its really easy and simple to beginners. Thanks alot for ur service.

rajesh 007 said...

I really enjoyed, its super

Victor Seelan said...

உங்கள் தளத்தின் ஊடாகவே ஆங்கிலம் பயில்கிறேன்........

kalidas m said...

வாழ்க வளமுடன்.............. வளர்க உமது பெரும் பணி.................

ragu nath said...

it is very helpful to learn English
Thank

v murugan said...

oh! good! very good work! very useful!

gnana murthy said...

hello sir im gnanamurthy, whenever i speak eng my friends are laughing.
i know i dont know how to speak eng but i wnt to know speak eng properly,
for that ungalala ethachum enaku help panna mudiyuma?

kannan said...

thanks arun all chapter is well

Muthu Surya said...

sir,This website very useful,really easy way to learn beginners!!....thank you sir....

Unknown said...

good

Gracy Bala said...

hello sir,very useful for me
Thank you.

sundarraj453 said...

சிறப்பு, மிகச் சிறப்பு நண்பரே

Mariya Raj said...

Sir send your number plz lot of doubt in my mind

Post a Comment