ஆங்கில பாடப் பயிற்சி - 6 (Grammar Patterns - 4)

நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு வாக்கியத்தை; 73 ன்று வாக்கியங்களாக எவ்வாறு மாற்றி அமைக்கலாம் என்பதனை கற்றோம். இன்று ஒரு "பெயர்ச் சொல்லை" (Noun) அல்லது ஒரு "சுட்டுப்பெயரை" (Pronoun) உதாரணமாக எடுத்துக்கொண்டு, இந்த (இருத்தல் நிலை)  "Be Form" வாக்கிய கட்டமைப்புகளை பார்க்கப் போகின்றோம். இதனையும் 32 வாக்கியங்களாக, ஒரு கிரமர் பெட்டனாக வடிவமைத்துள்ளோம்.

இந்த கிரமர் பெட்டனையும் வாய்பாடு போன்று மனப்பாடம் செய்துக்கொண்டீர்களானால், ஆங்கிலம் கற்பது எளிதாக இருக்கும்.

"பெயர்ச்சொல்" என்பது பொருற்கள், நபர்கள், இடங்கள், மிருகங்கள் போன்றவற்றை குறிப்பிடுவதற்கான பெயர்கள் அல்லது சொற்கள் ஆகும். அவற்றை பல்வேறு வகைகளாக பிரித்து கற்பிக்கப்படுகின்றன. அவற்றை கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி பார்க்கலாம்.


Sarmilan is a manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி.
(சர்மிலன் ஒரு நிர்வாகி[யாக இருக்கிறார்])

மேலுள்ள வாக்கியத்தைப் பாருங்கள். அதில் "சர்மிலன்" என்பது ஒரு நபரின் பெயராகும். அதாவது பெயர்ச்சொல்லாகும். இந்த "சர்மிலன்" எனும் பெயர் சொல்லை கொண்டு "சர்மிலன் ஒரு நிர்வாகி, சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருந்தார், ... இருந்திருப்பார், ... இருக்கலாம், ... இருந்திருக்கலாம், ... இருக்கவேண்டும், ... இருந்திருக்கவேண்டும்". என இந்த கிரமர் பெட்டன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை "சர்மிலன்" எனும் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு பதிலாக, 'He" "அவர்" எனும் சுட்டுப்பெயரை பயன்படுத்தியுள்ளேன். நீங்கள் இரண்டு விதமாகவும் பயிற்சி செய்யுங்கள்.

இது மிகவும் இலகுவான ஒரு பயிற்சி முறையாகும்.

Grammar Patterns 4...

1. He is a manager.
அவர் ஒரு நிர்வாகி.
(அவர் ஒரு நிர்வாகி[யாக இருக்கிறார்].)

2. He can be a manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.

3. He was a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

4. He would have been a manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார்.

5. He may be a manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கலாம்.

6. He may have been a manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கலாம்.

7. He will be a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருப்பார்.

8. He must be a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவேண்டும்.

9. He must have been a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும்.

10. He seems to be a manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றது.

11. He doesn't seem to be a manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றதில்லை.

12. He seemed to be a manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிந்தது.

13. He didn't seem to be a manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரியவில்லை.

14. He has to be a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க வேண்டும்.

15. He should be a manager.
அவர் ஒரு நிர்வாகியாகவே இருக்க வேண்டும்.

16. He ought to be a manager.
அவர் எப்படியும் ஒரு நிர்வாகியாகவே வேண்டும்.

17. He doesn’t have to be a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க வேண்டியதில்லை.

18. He needn’t be a manager.
அவர் ஒரு நிர்வாகியாக வேண்டிய அவசியமில்லை.

19. He has been a manager.
[அன்றிலிருந்து/தற்போது வரை] அவர் ஒரு நிர்வாகியாக இருக்கின்றார்.

20. He had been a manager.
[அன்றிலிருந்து/ஒரு கட்டம்வரை] அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

21. He had to be a manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்பட்டது.

22. He didn’t have to be a manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்படவில்லை.

23. He must not be a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாக கூடாது.

24. He shouldn’t be a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவே வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகவே கூடாது.

25. He won't be a manager.
அவர் ஒரு நிர்வாகியாக மாட்டார்.

26. He can't be a manager.
அவர் ஒரு நிர்வாகியாக முடியாது.
அவருக்கு ஒரு நிர்வாகியாக முடியாது.

27. He could have been a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கயிருந்தது.

28. He should have been a manager.
அவர் ஒரு நிர்வாகியாகவே இருக்கயிருந்தது.

29. He ought to have been a manager.
அவர் எப்படியும் ஒரு நிர்வாகியாகவே இருக்கயிருந்தது.

30. He needn't have been a manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியாக இருந்துக்கொண்டிருப்பது.
அவருக்கு தேவையில்லை ஒரு நிர்வாகியாக இருந்துக்கொண்டிருப்பது.

31. He shouldn't have been a manager.
அவருக்கு தேவையேயில்லை ஒரு நிர்வாகியாக இருந்துக்கொண்டிருப்பது.

32. He being a manager, he knows the works.
அவர் ஒரு நிர்வாகியாகும் பட்சத்தில், அவருக்கு தெரியும் அதன் வேலைகள்.

Homework:
மேலே நாம் பயிற்சி செய்ததை போன்று, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 32 விதமாக, எழுதியும் வாசித்தும் பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
அவள் ஒரு தாதி.

He is an oceanographer.
அவர் ஒரு கடலாய்வாளர்.

She is an archaeologist.
அவள் ஒரு தொல்பொருளாய்வாளர்

Karunanithi is a Chief Minister.
கருணாநிதி ஒரு முதலமைச்சர்.

Donald Tsang is a chief executive of Hong Kong.
டொனால்ட் செங் ஒரு தலமை நிறைவேற்று அதிகாரி ஹொங்கொங்கின்.

குறிப்பு:

உதாரணம் "is" என்று சிகப்பு நிறத்தில் வேறுப்படுத்தி காட்டப்பட்டிருக்கும் முதல் வாக்கியத்தை அவதானித்து, சிகப்பு நிறத்தில் கோடிட்டு காட்டியிருக்கும் ஏனைய வாக்கிய கட்டமைப்புகளை பொருத்தமான சொற்களை இட்டு/நிரப்பி எழுதி பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
She _____ a nurse.
She _______ a nurse

கவனிக்கவும்:

He is a manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி.

இவ்வாக்கியத்தின் தமிழ்ப்பெயர்ப்பை சற்று கவனியுங்கள். இதில் "அவர் ஒரு நிர்வாகி." என்றே தமிழில் வழக்கமாக பயன்படுத்துக்கின்றோம். ஆனால் அவ்வாக்கியத்தை சற்று உன்னிப்பாக கவனித்தீர்களானால், அதன் முழு வாக்கியம் "அவர் ஒரு நிர்வாகி[யாக இருக்கிறார்.]" என்பதே சாதாரன நிகழ்கால வாக்கியத்தின் பொருளாகும். அதற்கமைவாகவே "அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார், அவர் ஒரு நிர்வாகியாக இருப்பார், அவர் ஒரு நிர்வாகியாக இருக்கமுடியும், அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார்" எனும் வாக்கியங்கள் அமைகின்றன. இதனை சரியாக விளங்கிக்கொண்டால், இந்த "Be Form" வாக்கிய கட்டமைப்புகளை கற்பது எளிதாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan is a manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி. (சாதாரணமாக தமிழில் எழுதும் வழக்கு)
சர்மிலன் ஒரு நிர்வாகி[யாக இருக்கிறார்]. (முழுமையான வாக்கிய அமைப்பு)

Sarmilan was a manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி[யாக இருந்தார்].

Sarmilan will be a manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி[யாக இருப்பார்].

சரி பயிற்சிகளை தொடருங்கள். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் எண்ணங்களையும் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதேவேளை இப்பாடம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Social Media Links: Facebook | Twitter | Pinterest | Google Plus

Download As PDF

39 comments:

Unknown said...

Keep it your good work

HK Arun said...

Thanks

DAWOOD said...

30. He needn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

31. He shouldn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.
இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தானா?needn't என்பதற்கு ”தேவையில்லை” என்பதும் பொருள்தானே?

HK Arun said...

//needn't என்பதற்கு ”தேவையில்லை” என்பதும் பொருள்தானே? //

ஆம் 44, 45 ம் form களில் பார்க்கவும். தேவை/அவசியம் இரண்டும் கிட்டத்தட்ட ஒத்தக்கருத்துச்சொற்கள்.

44. He need speak in English.
அவனுக்கு அவசியம் பேச வேண்டும் ஆங்கிலத்தில்.

45. He needn’t speak in English.
அவனுக்கு அவசியமில்லை பேசவதற்கு ஆங்கிலத்தில்.

ஆனால் 30 வது form மின் செயல்பாடு (அவசியம்/தேவை) என்பதுப்போன்று பொருள்படாது. காரணம்

இங்கே needn't have been என்று வருவதால் அதன் பொருள் மாறுப்படுகின்றது.

அங்கிலத்தில் ஒருச் சொல் தனித்து வரும் போது ஒரு அர்த்தமும், இணைந்து வரும் போது வேறு அர்த்தமாகவும் வரும். இவைப் பற்றி எதிர்வரும் பாடங்களில் கற்பிக்கப்படும்.

எடுத்துக்காட்டுக்கு 60 வது form மைப் பாருங்கள்.

feel - உணர்வு/உணர்ச்சி
like - விருப்பம்

60. I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.

இவை இரண்டும் இணைந்து வருவதால் "நினைக்கின்றது" என்று பொருள் மாறுப்பட்டுள்ளதை அவதானிக்கவும்.

30, 31 இவைகளும் ஒத்தக்கருத்துகள் போலவே பயன்படுகின்றன.

இந்த 30, 31 ம் form களின் போது இவை பாடங்களாக விரிவடையும் போது மேலும் விரிவாக கற்க முடியும்.

Anonymous said...

hai arun,
22. He didn’t have to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்படவில்லை
whats the meanning in tamil soorry i don't understsnd this sentence.please explain

HK Arun said...

பெயர் இல்லாத நண்பரே!

இவ்வாக்கியத்தைப் பாருங்கள்.

21. He had to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்பட்டது.

தன் விருப்பத்திற்கு மாறான/எதிர்பார்த்திராத ஒன்று ஏற்படுவதனையே இவ்வாக்கிய அமைப்பு விவரிக்கிறது.

எடுத்துக்காட்டாக: அவர் மருத்துவர் ஆகவேண்டும் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார். (நிர்வாகியாக வேண்டும் எனும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை.) ஆனால் அவரது எண்ணத்திற்கு மாறாக "நிர்வாகியாக வேண்டி ஏற்பட்டது" என்பதையே இவ்வாக்கியம் வெளிப்படுத்துகிறது. இதன் எதிர்பதமே கிழுள்ள வாக்கியம்.

22. He didn’t have to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்படவில்லை.

அதாவது அவர் நிர்வாகியாக வேண்டும் என எதிர்ப்பார்த்திருந்தார்/விரும்பியிருந்தார். ஆனால் அதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. இதனை விவரிக்கும் விதமானதே இவ்வாக்கியம். "அவருக்கு நிர்வாகியாக வேண்டி ஏற்படவில்லை.

இன்னுமொரு விளக்கம்.

நீங்கள் ஒரு பேரூந்தில் ஏற முற்பட்டு, ஏறமுடியாமல் போய்விட்டது என்று வைப்போம். அப்போது நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். அந்த பேருந்து விபத்துக்குள்ளாகிவிட்டது என்று.

அப்போது எப்படி கூறுவீர்கள்.

நல்லவேளை, எனக்கு அந்த பேரூந்தில் ஏறவேண்டி ஏற்படவில்லை.

இப்பொழுது விளங்குகின்றதா?

நன்றி

Thulasingam said...

Hi,
My name is Thulasingam as a snior graphic Artist in chennai.

My friend given this sit, it's very importent site.

I Have improved my communication and writting skill also.

this site realy more powerful for me.

I have given this sit in my friends
everyone will get knowledgs

HK Arun said...

- Thulasingam

உங்கள் கருத்து மகிழ்வைத் தருகின்றது.

நன்றி நண்பரே!

venki said...

venki from abudhabi
hai arun i am really appriciate to you because now i am learning english through your easy english coach this is most helpful for me and all

venki said...

venki from abudhabi
hai arun i am really appriciate to you because now i am learning english through your easy english coach this is most helpful for me and all

HK Arun said...

- venki

உங்கள் கருத்துரைக்கு நன்றி வெங்கி

Murali Karthik said...

can u explain me what is the difference between will and would

Murali Karthik said...

hi arun,

i had a doubt, can u explain me what is the difference between will and would, where we can use will and would

HK Arun said...

- Murali Karthik

விரைவில் ஒரு பாடமாக வழங்குகிறேன்.

Anonymous said...

வணக்கம் அருண் சார். இந்த படத்தில் 27 ,28,29 ஆகிய வாக்கியங்களின் சரியான அர்த்தத்தை கூறமுடியமா?
27; he could have been a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க இருந்தது என்றால் என்ன?
இதுபோல் வாக்கியங்களின் வரிசை எண் 28,29. வாக்கியங்களின் அர்த்தத்தை எனக்கு விளக்கி கூறுங்கள்.
thank you sir

C.Ayothiraman said...

வணக்கம் அருண் சார். இந்த படத்தில் 27 ,28,29 ஆகிய வாக்கியங்களின் சரியான அர்த்தத்தை கூறமுடியமா?
27; he could have been a manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க இருந்தது என்றால் என்ன?
இதுபோல் வாக்கியங்களின் வரிசை எண் 28,29. வாக்கியங்களின் அர்த்தத்தை எனக்கு விளக்கி கூறுங்கள்.
thank you sir

Anonymous said...

hi sir,
this is gopalsamy its very good. because I've been improving my knowledge writing also.this is very use full for all.

Regards
S.Gopalsamy

Hariharan said...

இரண்டு வாக்கியங்களை எவ்வாறு இணைத்து சொல்வது?

For ex: The Pen I am using is good.

இவ்வாறு எழுதுவதை எங்க கற்பது?

Ramachandiran Kandaswamy said...

Hi, In Question 32, Tamil translation conveys that this sentence is the future tense but the english equivalent is in the present tense.

Please clarify.

Thanks
Ram

Riswaan nafeela said...

Thanks

Riswaan nafeela said...

Keep it your good work

Unknown said...

Dear Arun, excellent work of this website. Realy great & meaningfull for improving English knowledge.

regards
janakiraman

Unknown said...

hai Arun I DOnt Know English Knowledge But Now I Leson Of The Your Website

Unknown said...

Hai Arun,
your lessons are really great.Now a days i'm learning English online and your site is fantastic.I have a doubt,could you please clarify me.Is there any difference in these following sentences."It's half past seven" and "At half pasts seven".Both the sentences mean 7:30 only.Thanks in advance.

Unknown said...

Thankyou friend

Naveenkumar.C said...

Naveenkumar

Hai Arun,

I don't know english. but now learn english in your website. Thank you

Naveenkumar.C said...

Naveenkumar

Hai Arun,

I don't know english. but now learn english in your website. Thank you

Naveenkumar.C said...

Hai Arun

I don't know English.But now learn English in your website.

Thank you

Gowthaman said...

Hai, Arun

I am Gowtham from chennai
I want to know about the usage of "let "

Thanks in advance

Rani said...

Thank you sir...

Unknown said...

Have, had, has, has been, had been, should, should been, .. Could you please explain these with examples?

anandhi said...

hello sir u didn`t reply me

RAMESH said...

Nice Exercise.. Well Done!!!

RAMESH said...

Thanks Arun.

Unknown said...

Hello sir I am new joint your world i am working in Dubai did not came English me before but now learning your English so Little English coming so thank you sir

Unknown said...

"TO" WHERE WHERE WILL COME

shankar said...

can you pls tell me what is the meaning of could be

Kuttiraja said...

I've been learning english through your website for last 2weeks.
Thanks a lot sir..

Unknown said...

great teach

Post a Comment