ஆங்கிலம்-தமிழ் அகராதிகள் (Tamil-English Dictionaries)

ஆங்கிலம் தமிழ் அகராதிகள் அல்லது ஆங்கிலம் தமிழ் அகரமுதலிகள் என்பன அகர முதல் வரிசைப்படி ஆங்கில சொற்களை இட்டு அவற்றிற்கு இணையான தமிழ் பொருளை விளக்கும் நூல்கள் ஆகும். இந்த நூல்கள் இன்றைய கணனி உலகில், இலவச இணைய அகராதிகளாக எவரும் எளிதாகப் பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்தியுள்ளன. கண்ணிமைக்கும் நேரத்தில் எமக்கு தேவையான ஒரு சொல்லின் பொருளை தெரிந்துக்கொள்ள உதவுகின்றன. அவ்வாறு எமக்கு அடிக்கடி உதவக்கூடிய இணைய தமிழ்-ஆங்கில அகராதிகள் (Online Tamil-English Dictionaries) பல இணையத்தில் காணப்படுகின்றன.

அவற்றை ஆங்கிலம் கற்போரின் நலன் கருதி இங்கே தொகுத்து வைக்கின்றேன்.

விக்சனரி
இது ஒரு விக்கிசார் திறந்த உள்ளடக்க அகராதி. (இதுவரை இரண்டு இலட்சம் சொற்கள் உள்ளடக்கப்பட்டு, உலக விக்சனரிகளின் தரவரிசையில் 10 இடத்தில் வளர்ந்து நிற்கிறது.) தமிழ் ஆங்கிலம் இருமொழிகளில் சொற்களை உள்ளிட்டு தேடல் பெறும் வசதிகளைக் கொண்டுள்ளது.

கூகிள் ஆங்கிலம்-தமிழ் அகராதி
கூகிள் தமிழ்-ஆங்கிலம் அகராதி
கூகிள் நிறுவனம் தமிழ் வழி தேடல், ஆங்கிலம் வழி தேடல் என இரண்டு இணைய அகராதிகளை வழங்குகின்றது. ஆங்கிலச் சொற்களுக்கான ஒலிதக் கோப்புகளும் உள்ளன.

சிங்களம் / தமிழ் இணைய அகராதி
இது ஒரு மும்மொழி இணைய அகராதியாகும். ஆங்கில வழி தேடல் வசதியைக் கொண்டது. ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சிங்களம் இருமொழிகளிலும் பொருள் தருகின்றது. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சிங்கள மொழி சொற்களுக்கான உச்சரிப்புக் கோப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் இணையக் கல்விக்கழக அகராதிகள்
தமிழ் இணையக் கல்விக்கழகம் (முன்னாள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) வழங்கும் பேரகராதிகள். அகரவரிசையில் சொற்களைப் பார்த்தல் வசதியையும் தேடல் வசதியையும் கொண்டுள்ளன. இருப்பினும் அத்தளத்தின் எழுத்துரு தமிழ் ஒருங்குறி (Unicode) அல்லாததாக இருப்பதால் தளத்தைப் பார்வையிடுவதில் சிக்கல் உள்ளது. அதற்கு குறிப்பிட்ட அத்தளத்தின் எழுத்துருவை பதிவிறக்கிக்கொள்ள வேண்டும்.

லிப்கோ தமிழ் பேரகராதி
தமிழரிடையே நன்கு பிரசித்திப்பெற்ற லிப்கோ அகராதி நிறுவனத்தினர் வழங்கும் தமிழ் இணையப் பேரகராதி. தமிழ் வழி தேடல் வசதியைக் கொண்டது.

PALS e-Tamil Dictionary
இது தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி ஆகும். இந்த அகராதியில் 49000கும் அதிகமான சொற்கள் உள்ளன. உலாவும் மற்றும் ஒரு தேடும் முறைமையைக் கொண்டது. கணணியில் பதிவிறக்கி பயன்படுத்தக்கூடியது. (மேலதிக விபரங்களை தளத்தில் பார்க்கவும்)

சென்னை பல்கலைக்கழக தமிழ்-ஆங்கில அகராதி
சென்னை பல்கலைக்கழகத் தமிழ் பேரகராதி
நா. கதிர்வேலுபிள்ளை தமிழ்மொழி அகராதி
மேலுள்ள மூன்று அகராதிகளும் தமிழ் களஞ்சியம் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளவைகளாகும்.

DSAL அகராதி (J. P. Fabricius 1972)
DSAL அகராதி (Na Kadirvelu Pillai 1928)
DSAL அகராதி (David W McAlpin 1981)
DSAL அகராதி (University of Madras 1924-1936)
DSAL அகராதி (Miron Winslow 1862)
மேலே உள்ளவை ஐக்கிய அமெரிக்காவில் உள்ள சிக்காகோ பல்கலைக்கழகம் வழங்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொழிகளுக்கான அகராதிகள் வரிசையில், இணைக்கப்பட்டுள்ள பழமையான தமிழ்-ஆங்கில அகராதிகள் ஆகும்.

தமிழ்கியூப் அகராதி
தமிழ், ஆங்கிலம் இருவழி தேடல் வசதியைக் கொண்டுள்ளது. அகரவரிசையில் சொற்களைப் பார்வையிடவும் முடியும்.

ஆங்கிலம்-தமிழ்-யேர்மன் மும்மொழி அகராதி
ஆங்கிலம்> தமிழ், தமிழ்>ஆங்கிலம், யேர்மன்>தமிழ், தமிழ் யேர்மன் என நான்கு வழி தேடல் வசதிகளைக் கொண்டது. அகரவரிசையில் சொற்பட்டியல்களாகவும் காணலாம்.

தமிழ்ப் படி அகராதி (ஆங்கில வழி தேடல்)

Tamil English Online Dictionary (இருமொழி விளக்கம்)

அகரமுதலி Tamil Lexicon (தமிழ் வழி தேடல்)

அகராதி (இருமொழி தேடல் அகராதி)

புதிய அகராதி (தமிழ் வழி தேடல்)

தமிழ் சங்கதி (பட்டியல் வழி காணல் மற்றும் தேடல் வசதிகள் கொண்டவை.)

My Tamil Dictionary (இரு வழி தேடல்)

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (புதிய முயற்சி)

சர்ச்கோ (தமிழ் வழி தேடல்)

TamilEnglishOrg (தமிழ்- தமிழிஷ் வழி தேடல்)

UD English (ஆங்கில வழி தேடல்)

வெப்துனியா (ஆங்கில வழி தேடல்)

LEXILOGOS English-Tamil Dictionaries (அகராதிகளின் தொகுப்பு)

ஆங்கிலோ-தமிழ் அகராதி (1876 நூல்)
1876ல் Rev. P. Percival என்பவரால், அக்காலச் சென்னை ஆளுநரின் தலமையில் வெளியிடப்பட்ட (Anglo-Tamil Dictionary) அகராதி. மின்னூல் வடிவம்.

English-Tamil Dictionary 1852 (மின்னூல் வடிவம்)

பதிவிறக்கிப் பயன்படுத்தக்கூடிய அகராதிகள்(Free Downloadable Dictionaries)


தமிழ்நெட் ஆங்கிலம்-தமிழ் சொற் பட்டியல் PDF
4700 அதிகமான சொற்கள் அகரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. PDF வடிவில் பதிவிறக்கிப் பயன்படுத்தவும் முடியும்.

ஆங்கிலம்-தமிழ் சொற் பட்டியல் PDF
3500 அதிகமான சொற்கள் அகரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. PDF வடிவில் பதிவிறக்கிப் பயன்படுத்தவும் முடியும்.

Scribd Tamil-English Words PDF
ஆங்கிம் - தமிழ் சொற்கள் அகரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. PDF வடிவில் பதிவிறக்கிப் பயன்படுத்தவும் முடியும்.

எமது தளத்தின் ஆங்கிலம்-தமிழ் சொல் தேடு பொறி ஊடாகவும் சொற்கள் பற்றிய பாடங்களை தேடிப்பெறலாம். (இருமொழி தேடல் வசதியுண்டு)

ஆங்கிலம் கற்போர் மட்டுமன்றி, ஆங்கிலம் கற்றுச் சிறந்தோருக்கும் ஆங்கில அகராதிகள் அடிக்கடி தேவைப்படக்கூடிய ஒன்றுதான். ஆங்கில மொழியில் அனைத்து சொற்களையும் அறிந்தவர் என்று எவரும் இருக்க முடியாது. (தாய் மொழி ஆங்கிலேயரானாலும்) அந்தளவுக்கு ஆங்கில மொழியின் சொல்வளம் பெரியது. இதுவரை ஆங்கில சொற்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனையும் கடந்து செல்கின்றது. ஒரு நாளைக்கு 14.7 எனும் விகிதத்தில் புதிய சொற்களும் சேர்ந்துக்கொள்கின்றன. அதிலும் ஒரே சொல் பல வரைவிலக்கணங்களைக் கொண்டவைகளும் நிறையவே உள்ளன. எனவே ஆங்கில அகராதிகளின் உதவி எல்லோருக்கும் அத்தியாவசியமானதாகவே இருக்கும்.

குறிப்பு: ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு வழங்கப்பட்டிருக்கும் தமிழ் பொருள், வெவ்வேறு அகராதிகளில் வெவ்வேறாக வேறுப்பட்டவைகளாக இருக்கலாம். அவை அந்தந்த அகராதிகளையே சாரும்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun

Download As PDF

22 comments:

நெல்லி. மூர்த்தி said...

ஆங்கிலம் பயில விரும்பும் ஒவ்வொரு தமிழனுக்கும் அற்புதமான, மிகவும் பயனுள்ள தொகுப்பு!

கூடல் பாலா said...

மிகவும் தேவையான பதிவு .Bookmark செய்து வைத்துள்ளேன் .

HK Arun said...

-நெல்லி.மூர்த்தி

கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே!

HK Arun said...

Koodal bala

நன்றி நண்பரே!

sathees said...

உங்கள் ஆங்கிலம் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் என்பது மிக குறைவு. உங்கள் சேவை மென்மேலும் தொடர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...

என்றும் உங்கள்

சதீஸ் கண்ணன்

HK Arun said...

-சதீஸ் கண்ணன்

மிக்க நன்றி சதீஸ், உங்கள் போன்றோரின் மனம் திறந்தப் பாராட்டுக்களே தொடர்ந்து பதிவிட வைக்கின்றது. எமது பாடங்கள் தொடர்ந்து வரும்.

சின்ன கண்ணன் said...

உங்கள் ஆங்கிலம் வலைப்பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

”தமிழனை
தரணி எங்கும்
தலை
நிமிர செய்யும்
உமது பணி”.

என்றும்
அன்புடன்

சின்னகண்ணன்.

மரணத்தின் வாயிலை நோக்கி! said...

மிக்க நன்றி, உங்களின் இந்த தமிழ் விசைப் பலகைக்கு!

HK Arun said...

- chinna kannan

மனம்திறந்த உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே! பாடங்கள் தொடர்ந்து வரும்.

HK Arun said...

-SADHA
தமிழ்99 விசைப் பலகையை உங்கள் வலைத்தளத்திலும் நிறுவிக்கொள்ள முடியும்.

anandbluestar said...

உங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள் .
உங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள் .

HK Arun said...

-anandbluestar

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

sri said...

really super sir

sri said...

Really Super sir.

Chitra said...

Hi Arun,

Thank you so much for posting this. This will be very useful for all..

God Bless you !!!

Please continue your service !!!

HK Arun said...

-Sri
-Chitra

உங்கள் பின்னூட்டங்களிற்கு மிக்க நன்றி! //Please continue your service// நன்றி சித்ரா, பாடங்கள் தொடர்ந்து வரும்.

நீச்சல்காரன் said...

நல்ல தொகுப்பு. நன்றிகள்
கீழ்க்கண்ட அகராதிகளையும் இணைத்துக் கொள்ளவும்
http://agarathi.com/index.php
http://www.freelang.net/online/tamil.php
http://www.tamil.net/learn-tamil/tamildic.html

றம்போ said...

வணக்கம் நண்பரே! உங்களின் இந்த முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.

stalin said...

thangal padathittam paielkindren,payanulladaga irukindradu.

oru siru vendukol kilkanda sorkalai, ore pakathil vevarihtu(explain)veli ida vendukiren

could be
would be
to be

regards
anbu

Jaleela Kamal said...

மிகச்சிறந்த பணியை செய்து கொண்டு இருக்கிறீர்கள் .
தொடருங்க்ள் வாழ்த்துக்கள்

Leesa said...

Thanks... your information is very useful and learn Tamil is benefit language and Tamil language is classical language to read, write and speak is very simple.

nandha kumar said...

மிகச்சிறந்த பணியை செய்து கொண்டு இருக்கிறீர்கள் .
தொடருங்க்ள் வாழ்த்துக்கள் மிக்க நன்றி நண்பரே!

Post a Comment